சிந்து பைரவி படத்தில் நடிகை மணிமாலா |
சிந்துபைரவி [1985] படத்தில் இயக்குனர் பாலசந்தர் யாரையும் புதிதாக அறிமுகம் செய்யவில்லை,ஆனால் தமிழ் சினிமாவில் 60களில் கலைக்கோயில், போலீஸ்காரன் மகள், கவரிமான், நிலவே நீ சாட்சி, எதிரிகள் ஜாக்கிரதை, பெரிய இடத்துப் பெண், ஜஸடிஸ் விஸ்வநாத், பணக்கார குடும்பம், வல்லவனுக்கு வல்லவன் போன்ற படங்கள் நடித்த பின் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியை மணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்ட நடிகை மணிமாலா, அவரைஅன்புள்ள ரஜினிகாந்த் [1984] படத்தில் கன்னியாஸ்திரி கதாபாத்திரத்தில் பார்த்தவர் அவருக்கு அர்த்தமுள்ள கதாபாத்திரம் தரவேண்டும் என எண்ணி சிந்துபைரவி படத்தில் மீள் அறிமுகம் செய்தார்.
படத்தில் மணிமாலா சுஹாசினியின் அம்மா கதாபாத்திரம் செய்தார். அதன் பின்னர் பாலசந்தர் சிந்துபைரவி வெளியாகி 19 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் தொடர்ச்சியாக சின்னத்திரையில் இயக்கிய ‘சஹானா’ தொடரிலும் இவர் நடித்தார். சிந்துபைரவி படத்தில் மணிமாலாவுக்கும் சுஹாசினிக்கும் தாய்,மகளுக்கான உருவ ஒற்றுமை அத்தனை பாந்தமாக அமைந்திருக்கும்,
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மணிமாலா |
படத்தில் மணிமாலா சுஹாசினியின் அம்மா கதாபாத்திரம் செய்தார். அதன் பின்னர் பாலசந்தர் சிந்துபைரவி வெளியாகி 19 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் தொடர்ச்சியாக சின்னத்திரையில் இயக்கிய ‘சஹானா’ தொடரிலும் இவர் நடித்தார். சிந்துபைரவி படத்தில் மணிமாலாவுக்கும் சுஹாசினிக்கும் தாய்,மகளுக்கான உருவ ஒற்றுமை அத்தனை பாந்தமாக அமைந்திருக்கும்,
நடிகை மணிமாலா / வெண்ணிற ஆடை மூர்த்தி குடும்பத்தார் |
நானொரு சிந்து பாடலில் இவர்கள் இருவருக்குமான டீட்டெய்ல்கள் ஜம்ப் கட்களிலும்,ஸூம்களிலும் அப்படி கொண்டுவந்திருப்பார் ஒளிக்கவிஞர் அமரர்.பி.எஸ்.லோகநாத்தின் சீடரான ரகுநாதரெட்டி
இவர்கள் இருவரும் பாலசந்தரின் 50க்கும் மேற்பட்ட படைப்புகளில் பக்க பலமாய் உடன் நின்றவர்கள், குறிப்பாக மணிமாலாவின் நிழல் சுவற்றில் விழ சுஹாசினி அதை ஏக்கத்துடன் பிடிக்கச் செல்வார், அப்போது பின்னனியில் பெண்கன்று பசுதேடிப் பார்க்கின்ற வேளை என்று இசைஞானியின் இசையில் வைரமுத்துவின் வரிகள் ஒலிக்கும்.
இவர் 70களுக்குப் பின்னர் இல்லத்தரசியாக மாறி சினிமாவில் தடமே இன்றிப் போனாலும்,நானொரு சிந்து பாடலுக்குப் பிறகு ஒவ்வொருவர் வீட்டின் வரவேற்பறையிலும் சின்னத்திரை வழியே அனுதினம் வந்து வந்து போனார் மணிமாலா.

டி.எஸ்.ராகவேந்தர் சிந்து பைரவி படத்தில் |
படத்தில் மணிமாலாவின் கணவர் இசைஞானம் நிரம்ப கொண்ட ஒரு மாவட்ட நீதிபதியும் கூட, எனவே அக்கதாபாத்திரத்தை இசைஞானம் கொண்ட யாரேனும் செய்தால் தான் சிறப்பாக இருக்கும் என நினைத்த பாலசந்தர், வைதேகி காத்திருந்தாள் [1984] படத்தில் அறிமுகமாகி ரேவதியின் அப்பாவாக நட்டுவாங்க கலைஞர் கதாபாத்திரம் செய்து மக்கள் மனதில் நின்ற டி.எஸ்.ராகவேந்தரையே சிந்து பைரவி படத்தில் நடிக்க வைத்தார்.
விஜயரமணி என்கிற ரமணியாக 80களில் யாகசாலை உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் டி.எஸ்.ராகவேந்தர், பாலசந்தரின் பொய்க்கால் குதிரை படத்தில் வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப்போகும் என்னும் டைட்டில் பாடலில் இவர் பாடியும் இருக்கிறார்.
அதன் பின்பு இவர் குறிப்பிடத்தக்க நிறைய படங்களில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தார்,அவற்றில் விக்ரம்,அண்ணாநகர் முதல்தெரு,சொல்லத் துடிக்குது மனசு,கற்பூரமுல்லை,எண்ட சூர்யபுத்ரிக்கு போன்றவை குறிப்பிடத்தக்கவை.இவரின் பக்கத்து வீட்டு அங்கிள் போன்ற தோற்றம் இவரின் முகத்தை ரசிகர் மனதில் நன்கு பதிய வைத்தது.

டி.எஸ்.ராகவேந்தர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் |
சிந்து பைரவி படத்தில் இவரின் கார் ட்ரைவர் கவிதாலயா கிருஷ்ணன், அவரும் இசைஞானம் கொண்டவர், டி.எஸ்.ராகவேந்தர் ஆரபி ராகம் என்று தேவகாந்தாரி ராகத்தை ஆலாபனை
செய்தவரை, தன் முதலாளி என்றும் பாராமல் தர்க்கம் செய்வார், அதற்கு ஜேகேபி மத்யஸ்தம் செய்து டி.எஸ்.ராகவேந்திரா அதில் தோற்றதாக முடிவானதால் அவர் தன் அம்பாசடர் காரின் பின் சீட்டில் டிரைவர் கவிதாலயா கிருஷ்ணனை அமர வைத்து காரின் டிரைவர் சீட்டில் அவர் அமர்ந்து ஓட்டிச் செல்லும் அற்புதமான கதாபாத்திரம்.அதை மிக அருமையாக செய்திருப்பார்.
நானொரு சிந்து பாடல் இங்கே
நானொரு சிந்து பாடல் இங்கே