கர்நாடக இசை கச்சேரியில் தாளம் போடுவது எப்படி? !!!

ருமை நண்பர்களே!!!
இந்த வாரம் ஆனந்தவிகடனில் சாருவின் மனம்கொத்திப்பறவை-13 ஆவது அத்தியாயமாக முழுக்க கர்நாடக இசைக்காக அற்பணிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அதில் நான் மிகவும் ரசித்த பத்தி |கர்நாடக இசைக் கச்சேரியில் தொடையில் தாளம் போடுவது எப்படி ?| என்பது தான் , சாரு அதை மிக அழகாக எளிமையாக விளக்கியுள்ளார். இதை உங்களுக்கும் பகிரத்தோன்றியதால் பகிர்ந்தேன்.[நன்றி ஆனந்த விகடன்+கருந்தேள்]

சினிமா இசை தவிர்த்து, நல்ல உயர்தரமான கிளாஸிக்கல் இசையைக் கேட்டு ரசிப்பதற்கு நான் ஜெயகாந்தனுக்கே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் அப்போது எழுதிக்கொண்டு இருந்த உரத்த சிந்தனை பத்தியில்தான் கல்விச் சாலைகள் நமக்குக் கற்பிக்க மறந்துவிட்ட வாழ்வின் அற்புதங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தார். 'கறுப்பு சிவப்பு' குடும்பமான என் வீட்டினர், சினிமா பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தபோது, நான் சனிக்கிழமை இரவுகளில் ஒலிபரப்பாகும் ஆகாஷ்வாணியின் சங்கீத் சம்மேளனைக் கேட்டுக்கொண்டு இருப்பேன்.
ஆனால், ஆர்வக் கோளாறினால் சில அசம்பாவிதங்களும் நடந்தது உண்டு. 70-களின் பிற்பகுதி. சென்னை நகரம் எனக்குப் புதிது. அதுவரை வானொலியில் கேட்டு ரசித்த இசை மேதைகளை நேரில் கேட்கலாம் என்று டிசம்பர் சீஸனில் மியூஸிக் அகாடமி சென்றேன். ரசிகர்கள் எல்லோரும் தொடையில் தட்டித் தட்டிக் கேட்பதைப் பார்த்துவிட்டு, நானும் தட்ட, எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்ததும் லஜ்ஜையாகிவிட்டது. அப்புறம்தான் அதில் உள்ள தாள கதியைப்பற்றிப் படித்து அறிந்துகொண்டேன்.

தாளம் என்றால் வெறுமனே நான் தட்டியது போல் இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு. பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும். அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்ட வேண்டும். இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது. 1+3+2+2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலை களைக்கொண்டது. இது ஆதி தாளம். ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழு வகை உள்ளன. ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள். ஜாதி என்றால், வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி. இதற்கு அடுத்து ஐந்து நடைகள். ஆக, 7X5X5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும். இது தெரிந்த பிறகுதான் முடிவு செய்தேன். கர்னாடக, இந்துஸ்தானி சங்கீதத்தை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வோம், எழுதக் கூடாது என்று!

26 comments:

கொழந்த சொன்னது…

ணா..ரீடர்ல உங்க தளம் லேட்டா அப்டேட் ஆகுது போல. ஏதேச்சையாக facebook பார்த்து கமெண்டிடுறேன்.

உலகத்தின் எல்லா வகை இசையும் நா கேட்க ரொம்ப விரும்புவேன்.ஆனா எனக்கு இந்த இசை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது...பிடிக்காம..தெரியாம..அது இதைப்பற்றி மேற்கொண்டு கமெண்ட் போடுவது சரியாக இருக்காது.

கொழந்த சொன்னது…

ஆங்...இப்ப அப்டேட் ஆயிருச்சு.sorry. கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

கொழந்த
தப்பில்லை,ரசனை ஆளுக்கு ஆள் வேறுபடும்,அதாவது இதை பகிர்ந்ததன் நோக்கமே,தாளம் போடுவதற்கு பிண்ணணியில் இவ்வளவு விஷயம் ஒளிந்துள்ளதா?என்ற வியப்பால் தான்,தவிர நான் யேசுதாஸின் ஆலாபனைகளை ரசிப்பேன்.மற்றபடி கர்நாடக இசை அறிவு பூச்சியம்

கொழந்த சொன்னது…

ஆனந்த விகடன் இன்னைக்குதான் கடைக்கே வந்தது. எப்படி அதுக்குள்ள நீங்க படிக்க முடிஞ்சது..மின்நூல் சந்தாதரரா நீங்க..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நம் க்ருந்தேளார் தான் முந்தி அனுப்புனார்:))

கொழந்த சொன்னது…

அங்க தமிழ் பத்திரிக்கைகள் கிடைக்குமா..

கொழந்த சொன்னது…

அங்க தமிழ் பத்திரிக்கைகள் கிடைக்குமா..

கொழந்த சொன்னது…

அங்க தமிழ் பத்திரிக்கைகள் கிடைக்குமா..

கொழந்த சொன்னது…

sorry. முணு தடவ போட்டுட்டேன். டெலிடிருங்க. உங்கள தொந்தரவு பண்ணல நைட் முடிஞ்சா பார்ப்போம்.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

விகடன்ல சாரு எழுதுற இந்த ‘மனம் கொத்திப் பறவை’, ரொம்ப அருமையா இருக்கு... ஒவ்வொரு வாரமும் அவரு டீட்டெய்லா எழுதுறது, வாசிப்பின் இன்பம்னு சொல்ற அந்த அனுபவத்தை அருமையா கொடுக்குது நண்பா..

இந்தப் பத்தி அருமை ;-) ... இதையே இன்னும் டீட்டெய்லா அவரு ஒரு சிறுகதைல சொல்லிருப்பாரு... அது ரொம்ப காமெடியா இருக்கும் ;-)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

வெகுஜனம் எல்லாம் கிடைக்கும் என்ன ஐந்து மடங்கு அதிகம்
10ரூபாய் புத்தகம் 60 ரூபாய்[5 திர்காம்]

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்
நண்பா
அது என்ன சிறுகதை?
பேரென்ன?சொல்றது?!!!

கொழந்த சொன்னது…

ணா..போன வாரம் Feymaan's குறித்து எழுதியிருந்தார். ரொம்ப பிடித்தது. ஏன்னா physicsல Feymaan's Lecture on Physics ரொம்ப முக்கியமான அற்புதமான புத்தகம்.

@கருந்தேள்
சாரு..physics படிச்சவரா..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆமாம்ங்க
69பேட்சுன்னு நினைக்கிறேன்.
எப்போதோ கேட்டது.
அதை பலர் பாராட்டுவதற்கு மாறாக முன்பே படித்ததுதான் என்று கூசாமல் கமெண்ட் போட்டனர்,ஆவியில்

கே.ரவிஷங்கர் சொன்னது…

இங்க ஆவி(சென்னைல) நாளைக்குத்தான் வரும்.அவருக்குப் பிடிக்காத ராஜா போட்ட “காத்திருந்தேன் தனியே”(ராசா மகன்)பாட்டின் தாளத்தைச் சொல்ல சொல்லவும்.

கொழந்த சொன்னது…

ணா..
நீங்களும் ப்சிக்ஸ் படித்தவரா? அல்லது ஆர்வம உள்ளவரா?

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

@ கொழந்த - கரெக்டா புடிச்சீங்க.. அவரு ஃபிஸிக்ஸ் தான்... ;-) படிச்ச கையோட டெல்லிக்கி ஓடிட்டாரு ;-)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//ணா..
நீங்களும் ப்சிக்ஸ் படித்தவரா? அல்லது ஆர்வம உள்ளவரா?//

இது எனக்கா கார்த்திக்கா? எனக்குன்னா, எனக்கு உலகத்துலயே ரொம்பப் புடிச்ச சப்ஜெக்ட் ஃபிஸிக்ஸ் தான்... காலேஜ் படிக்கும்போது அதுல வெறியன் மாதிரி இருந்தேன்.. ஆனா இப்ப டச் கொஞ்சம் விட்ருச்சி... ;-)

கொழந்த சொன்னது…

ரெண்டு பேருக்குமே எடுத்துக்கலாம்

ப்சிக்ஸ புரிஞ்சிகிட்டா உலகத்தில ஏத வேணாலும் புரிஞ்சுக்கலாம்றது என் கருத்து

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ரவிசங்கர்
ஜி,சாரு இக்கட்டுரையில் எதிலும் தான் ஒரு விமரசகர்னு சொல்லவேயில்லை, தான் ஒரு ரசிகர் என்று தான் சொல்லியிருககார்.சாரு நல்லது எழுதும்போது யாரும் அதை பகிரமாட்டேன் என்கின்றனர்.அதனால் தான் நான் பகிர்ந்தேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ராஜாவை சாரு வெறுப்பது போல நடிக்க வேண்டுமானால் செய்யலாம்,ஒட்டுமொத்தமாக வெறுத்துவிடக்கூடிய ஆளுமையா?இசைஞானி

எஸ்.கே சொன்னது…

இதுபோல் பல விஷயங்களில் அறிவியல் ஒளிந்துள்ளது! :-)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கொழந்த+கருந்தேள்
நான் பிஸிக்ஸ் மேல் ஆர்வமிருந்தும் அதில் வரும் கடினமான சூத்திரங்களுக்காகவும் கணக்குகளுக்காகவுமே நெருங்கவில்லை,அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்கே
உண்மை நண்பா

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்
நண்பா
அது என்ன சிறுகதை?
பேரென்ன?சொல்றது?!!!

கொழந்த சொன்னது…

Sorry. An urgent work. I'm leaving

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)