எத்தனை வக்கிரம் இருந்தால் அந்தப் பெண்கள் முன்னிலையில் இதை திரும்பத் திரும்ப சொல்லுவார் ஒரு தேர்ந்த செக்ஸ் கதை சொல்லி போல, சாத்தான் வேதம் ஓதுவதும் இப்படி நாலனாவுக்கு நல்லவன் வேஷம் போடுவதும் ஒன்றே!!!
ஆனால் அந்த ரெண்டு டன் காண்டோம்னு சொன்னதை தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை,இதன் மூலம் ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஒட்டு மொத்த பெண்கள் ஈஸி கோயிங் டைப் என்கிறாரா? செப்டிக் டாங்க் அள்ளி எடை போட்டதைப் பார்த்தாரா?
இதைப் பார்க்கும் சராசரிப் பெற்றோர் தம் பெண் குழந்தைகளை ப்ரொபஃஷனல் படிப்பு படிக்க சம்மதிப்பரா?படிக்க வைத்தாலும் கேம்பஸில் நல்ல ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தாலும் , பெண்ணை அனுப்ப சம்மதிப்பரா? இவர் போலவே கண்ணோட்டம் கொண்ட மாமியார் மாமனாரை நினைத்துப் பாருங்கள், மருமகள் ஐடி ஊழியர் என்றால் என்ன நினைப்பார்? குருவி போல மூளை, சுய சாதிப் பெருமை, ஒழுக்க சீலன் முகமூடி, எத்தனை அகம்பாவம்?
இதற்கும் நிறைய பேர் இது பழைய நிகழ்ச்சி என முட்டு கொடுக்கின்றனர்.
பழசுன்னா எத்தனைப் பழசு ? ஹிட்லர் பழசு? ஹிட்லர் செய்தவை ரொம்ப பழசு தானே? ஹிட்லரை மன்னிச்சுடலாமா?கோட்சே காந்திய சுட்டது பழசாச்சே! இப்போ எதுக்கு அதை பெரிசாகப் பேசிக்கிட்டு?உள்நோக்கத்தோடே அதைப் பகிர்ந்துக்கிட்டு? என அவர்களை நான் கேட்கிறேன்.
நாட்டில் கள்ளக்காதல் கொலைகள் பெருகிவிட்டன, நம் வீட்டில் அநேகம் பேர் அதை செய்கிறோம் என்றால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இதைப் பார்க்கிறேன்.சிவகுமார் 80 சதம் ஐடி பெண்கள் என்று புள்ளி விவரம் வேறு தருகிறார்.
https://youtu.be/WuEJPone9_c
1 comments:
Your article has a very unique and reliable information..
Thanks for the article.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
கருத்துரையிடுக