மகளின் JEE mains score இன்று காலை வந்தது 100 க்கு 96.12 எடுத்துள்ளார்,பாதி கிணறு தாண்டி உள்ளார் இனி JEE advanced ஜூன் 4 ஆம் தேதி எழுத வேண்டி உள்ளது.
PS: 95+ சதம் பள்ளியில் மதிப்பெண் எடுப்பவர்கள் கூடுதலாக FiitJEE ல் துணைப்பயிற்சி எடுத்தால் IIT க்குள் நிச்சயம் செல்லலாம்,
JEE advanced தேர்வில் 95 %க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தால் IIT ஐ விட உலகத்தரம் நிரம்பிய வெளிநாட்டு பல்கலையான MIT, NUS, NTU ,TUM என சென்று இளங்கலை படிக்கலாம் , CBSE ,ICSE ,IB வழிக்கல்வியில் படித்தால் மட்டுமே வெளிநாட்டு பல்கலையில் சென்று இளங்கலை படிப்பது சாத்தியம், மெட்ரிகுலேஷன் , மாநிலக்கல்வியில் படித்தால் வெளிநாட்டில் சென்று இளங்கலை படிக்க முடியாது, காரணம் இணையவழியில் விண்ணப்பிக்கையில் அந்த கற்றல் வழியை விண்ணப்ப படிவம் காட்டாது.
JEE பயிற்சி காலமான நான்கு வருடங்களில் சினிமா கிரிக்கெட் இத்யாதி பார்க்க முடியாது,உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள முடியாது, காரணம் பயிற்சி ஏழுநாளும் இருக்கும்.JEE பயிற்சி இங்கே விரிவாக எழுதி உள்ளேன் , படிக்கவும்.