Godzilla Minus One கோட்ஸில்லா மைனஸ் ஒன் 2023

"கோட்ஸில்லா மைனஸ் ஒன்"  2023 ஆம் ஆண்டு ஜப்பானிய மொழியில் வெளியான  பிரம்மாண்டமான படைப்பு.  இயக்குனர் தகாஷி யமசாகி எழுதி இயக்கி  காட்சி அமைப்புகளையும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார். 

இது கோட்ஸில்லா வரிசையில் வெளிவந்த 37வது படமாகவும் டோஹோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 33வது படமுமாகும். 

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இக்கதை போரினால் சிதைந்த ஒரு தேசம் கோட்ஸில்லா எனும் பேராபத்தை எப்படி எதிர்கொள்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது.

உலகளவில் இத்திரைப்படம் மிகப்பெரிய மேதமையுடனான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக ஜப்பானியத் திரையுலக வரலாற்றில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரமான காட்சி அமைப்புகளைக் கொண்டிருந்ததாகப் பாராட்டப்பட்டது. 

2023 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகப் பல சர்வதேச விமர்சகர்களால் இது முன்மொழியப்பட்டது. போருக்குப் பிந்தைய ஜப்பானிய மக்களின் மன உளைச்சல் மற்றும் பிழைத்திருப்பவர்களின் குற்றவுணர்ச்சி ஆகியவற்றை மிக நுணுக்கமாக இப்படம் கையாண்டுள்ளது.

இயக்குனர் தகாஷி யமசாகி மிக நேர்த்தியான பணியைச் செய்துள்ளார். அவர் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த அசல் கோட்ஸில்லா படத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படைப்பை உருவாக்கியுள்ளார். 

அதே சமயம் நவீன காலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் அச்சுறுத்தலான ஒரு அரக்கனாக கோட்ஸில்லாவைக் காட்டியுள்ளார்.

 அரசாங்கத்தின் செயலற்ற தன்மையைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில் சாதாரண மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் தேசத்தைக் காப்பதே படத்தின் மையக்கருவாக உள்ளது.

இத்திரைப்படத்தின்  அடிநாதம்  வெறும் அரக்கனுடனான போர் மட்டுமல்ல அது தனிமனித மனசாட்சியின் மீட்சியைப் பற்றியதாகும்.

 போர்க்களத்தில் வீர மரணம் அடைவதே கௌரவம் என்று போதிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் உயிர் பிழைத்திருப்பதே ஒரு குற்றமாகப் பார்க்கப்பட்ட சமூகச் சூழலை இப்படம் நுணுக்கமாகத் தோல் உரித்து காட்டுகிறது.

 நாயகன் ஷிகிஷிமா எதிர்கொள்ளும் கோட்ஸில்லா என்பது கடலில் இருந்து வந்த அரக்கன் என்பதைத் தாண்டி அவனது உள்ளுக்குள் இருக்கும் போர்க்காலப் பயம் மற்றும் தப்பித்து வந்துவிட்டோமே என்ற குற்றவுணர்ச்சியின் உருவகமாகவே காட்சியளிக்கிறது.

 மரணத்தை எதிர்கொள்வதை விட வாழ்ந்து காட்டுவதே உண்மையான வீரம் என்பதைப் படம் மிக வலிமையாக முன்வைக்கிறது.

 அதிகாரவர்க்கத்தின் துணையின்றி சாமானிய மக்கள் தங்கள் அறிவையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி ஒரு பேரழிவைத் தடுப்பது ஜப்பானிய கூட்டு முயற்சியின் அடையாளமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. 

இது போரினால் ஏற்பட்ட வடுக்களைப் போக்கிக் கொள்ள மக்கள் தங்களுக்குள் கண்டடைந்த ஒரு கூட்டுச் சிகிச்சை முறையாகவும் அமைகிறது.

 ஜப்பானின் பூஜ்ஜிய நிலையில் இருந்து மைனஸ் நிலைக்குத் தள்ளப்பட்ட அவலத்தை அந்த மக்கள் தங்களின் சுயமரியாதை மற்றும் வாழ்வின் மீதான பற்றுதலின் மூலம் மீண்டும் எப்படிச் சீரமைக்கிறார்கள் என்பதே படத்தின் உண்மையான சாராம்சம்.

இறுதிக்காட்சியில் நாயகன் தற்கொலைத் தாக்குதலைத் தவிர்த்து உயிர் காக்கும் இருக்கையைப் பயன்படுத்தித் தப்பிப்பது ஒரு மிகப்பெரிய தத்துவ மாற்றத்தைக் குறிக்கிறது. 

இது பழைய ஜப்பானின் பலிபீடக் கலாசாரத்திலிருந்து விலகி நவீன ஜப்பானின் வாழ்வாதாரக் கொள்கையை நோக்கி நகர்வதைக் காட்டுகிறது.

 கோட்ஸில்லாவின் அழிவு  வெறும் வெற்றியாகக் கருதப்படாமல் துயரங்களில் இருந்து ஒரு சமூகம் விடுதலை பெற்றுப் புதிய விடியலை நோக்கிச் செல்வதைக் குறிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அழிவுக்குப் பின் தொடங்கும் வாழ்வின் உன்னதத்தைப் பாடும் ஒரு காவியமாகவே இத்திரைப்படம் மிளிர்கிறது.

 இத்திரைப்படம் வியக்கத்தக்க வகையில் படமாக்கப்பட்டுள்ளது. மத்திய  கிழக்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. 

கடலில் நடக்கும் போர்க்காட்சிகளுக்காகப் பிரத்யேகமாகப் படகுகள் மற்றும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. காட்சி அமைப்புகளுக்காக சுமார் 35 கலைஞர்கள் கொண்ட குழு எட்டு மாதங்கள் உழைத்து மிகத் துல்லியமான சிஜிஐ வேலைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

 குறிப்பாகக் கோட்ஸில்லாவின் உடல் அமைப்பு மற்றும் அதன் அணுக்கதிர் தாக்குதல் காட்சிகள் பார்ப்போரை உறைய வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன.

இத்திரைப்படத்தின் வெளியீடு 2023 அக்டோபரில் டோக்கியோவில் கோலாகலமாகத் தொடங்கியது. ஜப்பானில் நவம்பர் 3 ஆம் தேதி கோட்ஸில்லா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. 

பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வெளியாகி வசூல் ரீதியாகப் பெரும் சாதனை படைத்தது. சுமார் 15 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் 116 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

 இது ஜப்பானிய கோட்ஸில்லா படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக மாறியது.
நடிகர்கள் ரியுனோசுகே காமிகி முன்னாள் காமிகேஸ் விமானி கோய்ச்சி ஷிகிஷிமாவாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

தன் கடமையில் இருந்து தவறியதாகக் கருதும் ஒரு மனிதனின் வேதனையையும் பின்னர் தன் குடும்பத்தைக் காக்க அவர் எடுக்கும் துணிச்சலான முடிவையும் அவர் கண்முன் நிறுத்தியுள்ளார். 

அவருக்கு இணையாக மினாமி ஹமாபே நோரிகோ எனும் கதாபாத்திரத்தில் அமைதியான அதே சமயம் வலிமையான நடிப்பைத் தந்துள்ளார். 

இவர்களது உறவு மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தையுடனான பிணைப்பு படத்தின் உணர்ச்சிகரமான பகுதிக்கு வலுசேர்த்தது.
இசை அமைப்பாளர் நவோகி சாடோ இத்திரைப்படத்திற்கு மிகப்பிரம்மாண்டமான பின்னணி இசையை வழங்கியுள்ளார். 

பழைய கோட்ஸில்லா படங்களின் புகழ்பெற்ற இசைக்கோவைகளை ஆங்காங்கே பயன்படுத்தி ரசிகர்களுக்கு ஒருவித ஏக்கத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளார்.

 அதே சமயம் படத்தின் சோகமான மற்றும் பதற்றமான தருணங்களுக்குத் தேவையான புதிய இசைக்கோவைகளையும் அவர் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

 கோட்ஸில்லாவின் கர்ஜனை சத்தம் ஒரு பெரிய விளையாட்டு மைதானத்தில் ஒலிக்கவிடப்பட்டு அதன் எதிரொலியைப் பதிவு செய்து மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் இத்திரைப்படத்திற்குப் பெருமை சேர்த்தன. 

96வது ஆஸ்கார் விருது விழாவில் இத்திரைப்படம் சிறந்த காட்சி அமைப்புகளுக்கான விருதை வென்று வரலாறு படைத்தது.

 ஆஸ்கார் வரலாற்றில் இவ்விருதைப் பெறும் முதல் ஜப்பானியத் திரைப்படம் இதுவாகும். மேலும் ஜப்பானிய அகாடமி விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட எட்டு விருதுகளை இப்படம் அள்ளியது.

 இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கோட்ஸில்லா மைனஸ் ஸீரோ எனும் இரண்டாம் பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தின் பின்னணியில் பல வியக்கத்தக்க தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு ரகசியங்கள் ஒளிந்துள்ளன. ஹாலிவுட் திரைப்படங்கள் பல நூறு மில்லியன் டாலர்களை செலவழித்து உருவாக்கும் தரமான காட்சி அமைப்புகளை வெறும் 10 முதல் 15 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் சாத்தியமாக்கி காட்டியது உலகத் திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது.

 இப்படத்தின் காட்சி அமைப்புகளை உருவாக்கிய ஷிரோகுமி ஸ்டுடியோவின் பெயருக்கு ஜப்பானிய மொழியில் வெள்ளை குழு என்று பொருள். 

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டாலும் தரத்தில் எவ்வித சமரசமும் இன்றி இப்படம் செதுக்கப்பட்டது.

இப்படத்தில் வரும் கோட்ஸில்லாவின் கர்ஜனை ஒலியை மிகவும் தத்ரூபமாக மாற்ற ஒலிக் கலைஞர் நட்சுகோ இனோவ் ஒரு வினோதமான முயற்சியை மேற்கொண்டார். ஒரு மிகப்பெரிய திறந்தவெளி மைதானத்தில் அந்த ஒலியை ஒலிக்கச் செய்து அதன் எதிரொலியைப் பதிவு செய்ததன் மூலம் அந்த அரக்கன் நம் அருகிலேயே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினார். 

அதேபோல் படத்தில் இடம்பெறும் ஷிண்டன் ரக போர் விமானம் உலகில் ஒரே ஒரு அருங்காட்சியகத்தில் மட்டுமே எஞ்சியிருந்ததால் படப்பிடிப்பிற்காக அதன் அசல் அளவு கொண்ட மாதிரியைப் படக்குழுவினர் சொந்தமாக உருவாக்கினர். 

பின்னர் அந்த மாதிரி விமானம் ஒரு அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இப்படத்தின் இயக்குநர் தகாஷி யமசாகி ஒரு சிறந்த நாவலாசிரியரும் கூட. 

அவரே இப்படத்தின் நாவல் வடிவத்தையும் எழுதி வெளியிட்டார். அதில் படத்தில் பட்ஜெட் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் காரணமாகச் சேர்க்க முடியாத சில காட்சிகளை விரிவாக எழுதியுள்ளார். 

மேலும் இப்படம் ஆஸ்கார் வரலாற்றில் சிறந்த காட்சி அமைப்புகளுக்கான விருதைப் பெற்ற முதல் ஜப்பானியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.

 இப்படத்தின் கருப்பு வெள்ளை பதிப்பான மைனஸ் கலர் வெறும் வண்ணங்களை நீக்கி எடுக்கப்பட்டதல்ல.

 1950களின் கிளாசிக் படங்களின் உணர்வைக் கொண்டுவர ஒவ்வொரு காட்சியின் ஒளியும் நிழலும் தனித்தனியாகச் சீரமைக்கப்பட்ட ஒரு நுட்பமான படைப்பாகும்.

உலகப் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் ஆகியோர் இப்படத்தைப் பார்த்துப் பாராட்டியது இதன் உலகளாவிய வெற்றிக்குச் சான்றாகும். 

குறிப்பாக இப்படத்தில் நடித்த இரண்டு வயதுக் குழந்தை நட்சத்திரம் சா நாகதானியின் இயல்பான நடிப்பு பல ஹாலிவுட் தயாரிப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 இத்திரைப்படம் ஒரு அரக்கனைப் பற்றிய கதையாக மட்டுமல்லாமல் போருக்குப் பிந்தைய ஜப்பானிய மக்களின் மனவலிமையைப் பறைசாற்றும் ஒரு வரலாற்றுப் பதிவாகவும் மாறியுள்ளது.

 இம்மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகமான கோட்ஸில்லா மைனஸ் ஸீரோ குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கோசோ ஷிபாசாகி மற்றும் படத்தொகுப்பாளர் ரியூஜி மியாஜிமா ஆகியோர் மிகக் குறைந்த வளங்களைக் கொண்டு ஒரு உலகத்தரம் வாய்ந்த படைப்பை உருவாக்கினர். 

குறிப்பாகப் படத்தில் இடம்பெறும் ஜப்பானியக் கடற்படைக் கப்பல்களான டகாவோ யூக்கிகேஸ் மற்றும் ஹிபிகி ஆகியவற்றைத் திரையில் கொண்டு வர இயக்குநர் யமசாகி தனது ராணுவ வரலாற்று ஆர்வத்தைப் பயன்படுத்தினார். 

இந்தக் கப்பல்கள் ஜப்பானிய வரலாற்றில் மிகவும் புகழ்பெற்றவை என்பதால் அவற்றின் நுணுக்கமான விபரங்கள் சிஜிஐ மூலம் செதுக்கப்பட்டன.

திரைக்கதை உருவாக்கத்தின் போது கோட்ஸில்லாவின் கண்கள் பாதாம் வடிவில் இருக்குமாறு வடிவமைப்பாளர் கோசுகே தகுச்சி மாற்றியமைத்தார்.

 இது கோட்ஸில்லாவின் தோற்றத்தில் ஒருவித தெய்வீகத் தன்மையையும் அதே சமயம் தீவிரமான கோபத்தையும் வெளிப்படுத்த உதவியது. 

ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் தத்தாரிகாமி எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கோட்ஸில்லா பாதி அரக்கனாகவும் பாதி கடவுளாகவும் உருவகப்படுத்தப்பட்டது.

படப்பிடிப்பின் போது ஜப்பானின் நகானோ மற்றும் ஐச்சி மாகாணங்களில் உள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் தெருக்கள் பயன்படுத்தப்பட்டன. 

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் துணை நடிகர்களாகப் பங்கேற்றனர். இரண்டாம் உலகப் போர் காலத்து மனிதர்களின் தோற்றத்தைக் கொண்டு வர துணை நடிகர்களின் தலைமுடி நிறம் மற்றும் அலங்காரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

டோஹோ நிறுவனம் இந்தத் திரைப்படத்தின் தலைப்பை அறிவிக்கும் வரை இது ஒரு ரகசியத் திட்டமாகவே வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹாலிவுட்டில் வெளியான கோட்ஸில்லா மற்றும் காங் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு இப்படம் உத்வேகமாக அமைந்தது.

 ரோமில் கோட்ஸில்லா நடக்கும்போது தரை வெடிக்கும் காட்சியை இயக்குநர் ஆடம் விங்கார்ட் இப்படத்திற்கு ஒரு அஞ்சலியாகவே தனது படத்தில் சேர்த்தார்.

 ஜப்பானியப் பாப் கலாசாரத்தின் மறுமலர்ச்சிக்கு இப்படம் ஒரு முக்கியத் தூணாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் காட்சி அமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தரவுகளின் அளவு ஒரு பெட்டாபைட்டைத் தாண்டியது என்பது வியக்கத்தக்க ஒன்றாகும். குறிப்பாகக் கடலில் கோட்ஸில்லா ஏற்படுத்தும் பேரழிவுக் காட்சிகளை உருவாக்க மென்பொருள்களின் கணக்கீட்டுத் திறன் உச்சத்தை எட்டியதால் ஒவ்வொரு காட்சியையும் முடித்தவுடன் அதன் தரவுகளை அழித்துவிட்டு அடுத்த காட்சியை உருவாக்கும் நிலையில் படக்குழுவினர் இருந்தனர். 

இப்படத்தின் இசையமைப்பாளர் நாோகி சாடோ புகழ்பெற்ற ஸ்டுடியோ கிப்லி அனிமேஷன் படங்களின் உணர்வுப்பூர்வமான இசையிலிருந்து சில நுணுக்கங்களைப் பெற்று இப்படத்தின் சோகமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்தார்.

விருதுகளில் இப்படத்தின் இயக்குநர் தகாஷி யமசாகி உலகப்புகழ் பெற்ற ஸ்டான்லி குப்ரிக்கிற்குப் பிறகு தனது சொந்தப் படத்திற்குத் தானே காட்சி அமைப்புகளை வடிவமைத்து ஆஸ்கார் விருதை வென்ற இரண்டாவது இயக்குநர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றார். 

மேலும் காட்சி அமைப்புக் குழுவில் இருந்த தட்சுஜி நோஜிமா ஆஸ்கார் விருதை வென்ற மிக இளைய வயதுடையவர்களில் ஒருவராவார். 

ஜப்பானியத் திரையுலகில் பிளாக் ஸ்டுடியோஸ் எனப்படும் தொழிலாளர்களைச் சுரண்டும் முறையைத் தவிர்த்து ஷிரோகுமி நிறுவனம் தனது பணியாளர்களுக்குச் சமையலறை வசதி உள்ளிட்ட பல சலுகைகளைச் செய்து கொடுத்து ஆரோக்கியமான சூழலில் இப்படத்தை உருவாக்கியது.

இப்படம் வெளியான பிறகு தென்கொரியா போன்ற சில நாடுகளில் சில விவாதங்களைக் கிளப்பியது. குறிப்பாகக் காமிகேஸ் விமானியின் தியாகம் குறித்த சித்தரிப்பு அங்குள்ள சில பார்வையாளர்களால் மாறுபட்ட கோணங்களில் விமர்சிக்கப்பட்டது.

 அதேபோல் இப்படத்தின் வெற்றியால் ஈர்க்கப்பட்ட டிசி ஸ்டுடியோஸ் தலைவர் ஜேம்ஸ் கன் தனது புதிய சூப்பர்மேன் திரைப்படத்திற்கு இதில் உள்ள மனித உணர்வுகளின் ஆழமே ஒரு உத்வேகம் என்று தெரிவித்துள்ளார். 

 இப்படத்தின் வெற்றிக்காக ஜப்பானின் ஹமாமட்சு நகர மேயர் படப்பிடிப்பு நடந்த ஏரிப் பகுதியை ஒரு சுற்றுலாத் தலமாக அறிவித்து அந்தப் பகுதிக்கு ஒரு புதிய பொருளாதார அங்கீகாரத்தைத் தேடித்தந்துள்ளார்.

படத்தின் கதை:-

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில், கோய்ச்சி ஷிகிஷிமா (ரியூனோசுகே காமிகி) எனும் காமிகேஸ் விமானி, தனது விமானத்தில் பழுது இருப்பதாகக் கூறி ஓடோ தீவில் உள்ள ஜப்பானியத் தளத்தில் தரை இறங்குகிறார். 

அங்குள்ள தலைமை மெக்கானிக் சோசாகு தச்சிபானா (முநேடகா அயோகி), ஷிகிஷிமா தனது கடமைக்கு அஞ்சி பொய் சொல்லி தப்பி வந்திருப்பதை உணர்கிறார். 

அன்று இரவு, கோட்சிலா எனப்படும் பிரம்மாண்ட டைனோசர் போன்ற உயிரினம் அந்தத் தீவைத் தாக்குகிறது. தச்சிபானா, ஷிகிஷிமாவை விமானத்தில் உள்ள பீரங்கியால் அந்த அரக்கனைச் சுடுமாறு கூறுகிறார். 

ஆனால் ஷிகிஷிமா பயத்தால் செயலற்றுப் போகிறார். அந்தத் தாக்குதலில் தச்சிபானாவையும் ஷிகிஷிமாவையும் தவிர மற்ற அனைவரும் கொல்லப்படுகிறார்கள்.

 தச்சிபானா இந்த உயிரிழப்புகளுக்கு ஷிகிஷிமாவின் கோழைத்தனமே காரணம் என்று அவர் மீது கடும் கோபம் கொள்கிறார்.

போர் முடிந்த பிறகு டோக்கியோ திரும்பும் ஷிகிஷிமா, அங்கு தனது பெற்றோர் குண்டுவெடிப்பில் இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். உயிர் பிழைத்த குற்ற உணர்வு அவரை வாட்டுகிறது. 

அந்தச் சூழலில், குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்த நோரிகோ ஓயிஷி (மினாமி ஹாமபே) மற்றும் அவர் தத்தெடுத்த அகிகோ (சயே நகதானி) எனும் குழந்தையை பேணி ஆதரிக்கத் தொடங்குகிறார்.
 ஷிகிஷிமா கடலில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் ஆபத்தான வேலையில் சேருகிறார்.

அமெரிக்கா பிகினி அட்டோலில் நடத்திய அணுஆயுத சோதனைகளால் கோட்சிலா உருமாற்றம் அடைந்து அதீத வலிமை பெறுகிறது. அது அமெரிக்கப் போர்க்கப்பல்களை மூழ்கடித்துவிட்டு ஜப்பானை நோக்கி வருகிறது. 

1947 மே மாதம், ஷிகிஷிமா தனது குழுவினருடன் சென்று கோட்சிலாவை எதிர்கொள்கிறார். ஒரு கண்ணிவெடியை அதன் வாய்க்குள் இட்டு வெடிக்கச் செய்தாலும், கோட்சிலா உடனடியாகத் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்கிறது.

 டோக்கியோவின் கின்சா பகுதியில் கோட்சிலா புகுந்து பெரும் அழிவை ஏற்படுத்துகிறது. அங்கு வேலை செய்யும் நோரிகோ அந்தத் தாக்குதலில் சிக்கிக் கொள்கிறாள். 

ஷிகிஷிமா அவளைக் காப்பாற்ற முயலும்போது, கோட்சிலா தனது வெப்பக் கதிரால் அந்தப் பகுதியையே அழிக்கிறது. நோரிகோ, ஷிகிஷிமாவைப் பாதுகாப்பான இடத்திற்குத் தள்ளிவிட்டு தான் மட்டும் அந்த வெடிப்பில் சிக்கி மறைந்து போகிறாள்.

இந்நிலையில், முன்னாள் கடற்படை பொறியாளர் கெஞ்சி நோடா (ஹிடேடகா யோஷியோகா) ஒரு திட்டத்தைத் தீட்டுகிறார். கோட்சிலாவைச் சுற்றிலும் பிரியோன் வாயு உருளைகளைக் கட்டி, அதைத் திடீரெனக் கடலின் ஆழத்திற்குத் தள்ளி அதிக நீர் அழுத்தத்தில் நசுக்குவது அதன் ஒரு பகுதி. 

அது தோல்வியுற்றால் பலூன்கள் மூலம் அதனை மீண்டும் மேலே உயர்த்தி அழுத்த மாறுபாட்டால் அழிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. இதற்காக ஷிகிஷிமா, தச்சிபானாவைத் தேடிச் சென்று ஒரு பழைய போர் விமானத்தைச் சரிசெய்யக் கோருகிறார். 

ஷிகிஷிமா அந்த விமானத்தில் வெடிபொருட்களை ஏற்றி, கோட்சிலாவின் வாய்க்குள் மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறார்.

இறுதிப் போரில், திட்டமிட்டபடி கோட்சிலா ஆழத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் மேலே இழுக்கப்படுகிறது. அது பலத்த காயமடைந்தாலும் தனது வெப்பக் கதிரால் அனைவரையும் அழிக்கத் தயாராகிறது. 

அந்தத் தருணத்தில் ஷிகிஷிமா தனது விமானத்தால் கோட்சிலாவின் வாய்க்குள் மோதி அதன் தலையைச் சிதறடிக்கிறார். கோட்சிலாவின் உடல் அதன் சொந்த ஆற்றலாலேயே வெடித்துச் சிதறுகிறது.

 ஷிகிஷிமா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தச்சிபானா விரும்பவில்லை, எனவே அந்த விமானத்தில் ரகசியமாகத் தப்பிக்கும் வசதியைச் கழன்று கொள்ளும் இருக்கையாக செய்திருந்தார். 
அதன் மூலம் ஷிகிஷிமா பாராசூட் வழி உயிர் தப்புகிறார்.

வீடு திரும்பும் ஷிகிஷிமாவுக்கு ஒரு தந்தி கிடைக்கிறது. அதைப் படித்துவிட்டு மருத்துவமனைக்குச் செல்லும் அவர், அங்கு நோரிகோ உயிர் பிழைத்திருப்பதைக் கண்டு நெகிழ்கிறார். 

அவர்கள் மீண்டும் இணையும்போது, நோரிகோவின் கழுத்தில் ஒரு மர்மமான கருப்புத் தழும்பு ஊர்ந்து செல்வது தெரிகிறது. மறுபுறம், கடலின் ஆழத்தில் சிதறிய கோட்சிலாவின் ஒரு தசைத் துண்டு மீண்டும் வளரத் தொடங்குகையில் படம் நிறைகிறது.

இரண்டாம் உலகப் போரின் கோரமான வடுக்களை சுமந்து நிற்கும் ஒரு மனிதன் மற்றும் ஒரு தேசத்தின் மீட்சியைப் பற்றியே இக்கதை மிக ஆழமாகப் பேசுகிறது.

 போர்க்களத்தில் மரணத்தைத் தழுவுவதே வீரம் என்று போதிக்கப்பட்ட ஒரு காலத்தில், அதிலிருந்து தப்பி வந்த ஷிகிஷிமா எதிர்கொள்ளும் சமூக ஏளனமும் அவனது உள்மனப் போராட்டமும் படத்தின் மையமாக உள்ளது. 

உயிர் பிழைத்திருப்பதை ஒரு பெரும் பாவமாகக் கருதி குற்ற உணர்ச்சியில் தவிக்கும் ஒருவன், தன் முன் இருக்கும் சவால்களை எதிர்கொள்வதன் மூலம் அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து எப்படி விடுபடுகிறான் என்பதைப் படம் உணர்த்துகிறது.

அரசாங்கம் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் ஒரு பேரழிவின் போது மக்களைக் கைவிடும் வேளையில், சாதாரண மனிதர்களும் முன்னாள் வீரர்களும் தங்களின் அறிவையும் உழைப்பையும் ஒன்றிணைத்து ஒரு தீமையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது இதில் முக்கியமானது.

 தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் எதிரியை அழிப்பதை விட, எப்படியாவது உயிர் பிழைத்துத் திரும்புவதே உண்மையான வெற்றி என்பதை இந்தப் படம் உரக்கச் சொல்கிறது. 

போரினால் சிதைந்த ஒரு சமூகம், ஒரு அனாதைக் குழந்தையையும் ஒரு பெண்ணையும் அரவணைத்து ஒரு புதிய குடும்பமாக உருவெடுப்பது, மனிதநேயமே எல்லாவற்றையும் விட மேலானது என்பதை மெய்ப்பிக்கிறது.

கோட்சிலா என்பது வெறும் அரக்கன் மட்டுமல்ல, அது மனிதகுலம் உருவாக்கிய அணுஆயுதப் பேரழிவின் குறியீடாகவும், போரின் தீராத வடுக்களாகவும் நிற்கிறது.

 அந்த அரக்கனை வீழ்த்துவது என்பது அந்த தேசம் தனது இருண்ட காலத்திலிருந்து வெளியேறுவதைக் குறிக்கிறது. படத்தின் இறுதியில் நோரிகோவின் கழுத்தில் தோன்றும் தழும்பு, பேரழிவுகள் மறைந்தாலும் அதன் சுவடுகள் ஏதோ ஒரு வடிவில் மனிதகுலத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதையும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது. 

 சாவதற்கான காரணங்களைத் தேடுவதை விட, வாழ்வதற்கான நோக்கத்தைக் கண்டடைவதே ஒரு வீரனின் உண்மையான பயணம் என்பதை இக்கதை முன்வைக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (221) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) ஆஸ்கர் (53) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)