Joy ஜாய் 2024

2024 ஆம் ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான "ஜாய்" திரைப்படம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

மருத்துவ உலகின் மிக முக்கியமான மைல்கல்லான   ஐவிஎஃப் (கருப்பை வெளி கருவுறுதல் ) சோதனை குழாய் சிகிச்சை முறையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பென் டெய்லர் இயக்கத்தில் ஜாக் தோர்ன் திரைக்கதை அமைத்துள்ள இப்படம் ஒரு அற்புதமான வரலாற்றுச் சாதனையைத் திரையில் கொண்டு வந்துள்ளது.

ஜாய் திரைப்படம் 1968 முதல் 1978 வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

 உலகின் முதல் சோதனைச் சாலைக் குழந்தையான லூயிஸ் பிரவுன் பிறப்பதற்குப் பின்னால் இருந்த பெரும் போராட்டங்களை இப்படம் விவரிக்கிறது. 

நர்ஸ் மற்றும் கருவியலாளர் ஜீன் பூர்டி , விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் பேட்ரிக் ஸ்டெப்டோ ஆகிய மூவரும் இணைந்து சமூகத்தின் கடும் எதிர்ப்புகளையும் மத ரீதியான தடைகளையும் கடந்து இந்தச் சாதனையை எட்டியதை இயக்குநர் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

இயக்குநர் பென் டெய்லர் வரலாற்றுப் பின்னணியை மிக நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். 
1960 மற்றும் 70களின் சூழலை அப்படியே கண்முன் நிறுத்தும் வகையில் ஒளிப்பதிவும் கலை இயக்கமும் அமைந்துள்ளன.

 மருத்துவம் சார்ந்த நுணுக்கமான விஷயங்களைச் சாதாரண ரசிகர்களுக்கும் புரியும் வகையில் திரைக்கதை நகர்கிறது. 

குறிப்பாகக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூடக் காட்சிகள் மற்றும் ஓல்ட்ஹாம் நகருக்கான நீண்ட பயணங்கள் மூலம் அந்த விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உணர்வு சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த பில் நை, தாமசின் மெக்கன்சி மற்றும் ஜேம்ஸ் நார்டன் ஆகியோர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். 

பேட்ரிக் ஸ்டெப்டோவாக நடித்த பில் நை தனது அனுபவமான நடிப்பால் முதிர்ச்சியான ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கௌரவத்தைத் தக்கவைத்துள்ளார்.
 ஜீன் பூர்டியாக நடித்த தாமசின் மெக்கன்சி உணர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 சொந்த உடல்நலப் பாதிப்பையும் மீறி மற்ற பெண்களுக்குத் தாய்மை எனும் வரத்தைக் கொடுக்க அவர் துடிக்கும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. 

ஜேம்ஸ் நார்டன் ஒரு லட்சியவாத விஞ்ஞானியின் போராட்டத்தை உயிரோட்டமாகத் தந்துள்ளார்.

ஸ்டீவன் பிரைஸ் அமைத்த இசை படத்தின் ஒவ்வொரு முக்கியத் தருணத்தையும் அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

 தேவையற்ற அதிரடிகள் இன்றி அமைதியான அதேசமயம் அழுத்தமான இசையால் காட்சிகள் மெருகேற்றப்பட்டுள்ளன.

 படத்தின் படத்தொகுப்பு விறுவிறுப்பாக அமைந்துள்ளதால் 115 நிமிடங்கள் நகர்வதே தெரியாத வகையில் ஒரு சிறந்த அனுபவம் கிடைக்கிறது.

இத்திரைப்படம் 2024 அக்டோபர் மாதம் பிஎஃப்ஐ லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர் நவம்பர் மாதம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் வெளியானது.

 விமர்சகர்களிடம் இருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ராபர்ட் எட்வர்ட்ஸிற்கு 2010 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டாலும் அவரது மறைந்த சக ஊழியர்களான ஜீன் பூர்டி மற்றும் பேட்ரிக் ஸ்டெப்டோ ஆகியோரின் உழைப்பையும் இந்தப் படம் உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது. 

மருத்துவத் துறையில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் இந்தப் படம் ஒரு பெரும் உத்வேகமாகத் திகழ்கிறது.

இத்திரைப்படத்தின் அடிநாதம்  மனித நம்பிக்கையும் அசாத்தியமான விடாமுயற்சியும் ஆகும். அறிவியல் ரீதியான ஒரு மாற்றத்தை உருவாக்க முனையும்போது எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்புகள் மற்றும் மத ரீதியான தடைகளைத் தாண்டி ஒரு உன்னத லட்சியத்திற்காகப் போராடுவதே இப்படத்தின் மையக்கருத்தாகத் திகழ்கிறது.

தாய்மை அடைய முடியாத பெண்களின் வலியை உணர்ந்து அவர்களுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்ற தணியாத தாகம் அந்த மூன்று சாதனையாளர்களையும் வழிநடத்துகிறது. 

குறிப்பாகத் தன் சொந்த உடல்நலப் பாதிப்பால் தாய்மை அடைய முடியாத சூழலிலும் மற்ற பெண்களின் கனவை நனவாக்கத் துடிக்கும் ஜீன் பூர்டியின் அர்ப்பணிப்பு இப்படத்தின் ஆன்மாவாகத் தெரிகிறது.

அறிவியலும் அறமும் கைகோர்க்கும் ஒரு நீண்ட பயணத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் முயலும் அந்த மன உறுதி படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. 

தனிப்பட்ட இழப்புகள் மற்றும் சமூகப் பழிச்சொற்களை விடவும் ஒரு புதிய உயிரை உருவாக்குவதற்கான விஞ்ஞான ரீதியான தேடல் மிகப்பெரியது என்பதை இப்படம் உணர்த்துகிறது.

 மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு சிறிய குழுவினர் காட்டிய விடாமுயற்சியும் அந்தப் போராட்டத்தின் முடிவில் விளைந்த வெற்றியும் தான் இப்படத்தின் ஆழமான அடிநாதம் ஆகும். 

இது வெறும் மருத்துவச் சாதனை மட்டுமல்லாமல் சாத்தியமற்றது என்று சொல்லப்பட்ட ஒன்றைச் சாத்தியமாக்கிய மனித ஆற்றலின் வெற்றிக் கதையாகும்.

ஜாய் திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில்  நவம்பர் மாதத்தில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியானது. ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைகள் மற்றும் தேர்வுகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும் படங்களை அடிப்படையாகக் கொண்டவை. 

இந்தப் படம் மிகச்சிறந்த விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் ஆஸ்கர் பந்தயத்தில் நுழையத் தேவையான மிகத்தீவிரமான விளம்பரங்கள் அல்லது பெரிய அளவிலான திரையரங்கு வெளியீடு இதற்கு அமையவில்லை.

 இது ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் என்பதால் ஏற்கனவே பலமுறை கையாளப்பட்ட பாணி என்ற காரணத்தினாலும் ஆஸ்கர் நடுவர் குழுவின் கவனத்தை ஈர்ப்பதில் சவால்கள் இருந்தன.

இந்தத் திரைப்படம் பெரிய அளவிலான விருது விழாக்களில் தடம் பதிப்பதற்கு முன்பே விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 2024 அக்டோபர் மாதம் நடைபெற்ற புகழ்பெற்ற லண்டன் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுத் தனித்துவமான பாராட்டுகளைப் பெற்றது.
 இது ஒரு திரைப்படத்தின் தரத்திற்கான மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. 

ராட்டன் டொமேட்டோஸ் தளத்தில் 89 சதவீத நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஒரு வரலாற்றுப் படத்தை நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் கையாண்டதற்காக இயக்குநர் பென் டெய்லருக்குச் சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பில் நை மற்றும் தாமசின் மெக்கன்சி ஆகியோரின் எதார்த்தமான நடிப்பு பல்வேறு விமர்சகர்களால் அந்த ஆண்டின் மிகச்சிறந்த நடிப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

 குறிப்பாக மருத்துவத் துறையில் மறைக்கப்பட்ட நாயகியாக இருந்த ஜீன் பூர்டியின் வரலாற்றை மீட்டெடுத்ததற்காக இப்படம் சமூக ரீதியான பெரும் விருதாகப் பார்க்கப்படுகிறது.

இப்படம் இதுவரை வென்றுள்ள மற்ற விருதுகளை விடவும் மருத்துவ வரலாற்றில் நீதிக்காகப் போராடிய மூன்று மனிதர்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதே இதன் மிகப்பெரிய வெற்றியாகும்.

 2010 ஆம் ஆண்டு ராபர்ட் எட்வர்ட்ஸ் நோபல் பரிசு பெற்றபோது அவரோடு இணைந்து உழைத்த மற்ற இருவர் உயிருடன் இல்லை. அந்த வரலாற்றுப் பிழையைச் சரிசெய்யும் வகையில் உலக மக்கள் அனைவரிடமும் இவர்களின் பெயரைக் கொண்டு சேர்த்திருப்பதே இப்படத்திற்குக் கிடைத்துள்ள உன்னதமான விருதாகும்.

 ஜாய் திரைப்படம் வணிக ரீதியான விருதுகளைக் காட்டிலும் மக்களின் மனங்களை வென்ற ஒரு உன்னத படைப்பாகத் திகழ்கிறது என்றால் மிகையாகாது.

இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய ஜாக் தோர்ன் மற்றும் அவரது மனைவி ரேச்சல் மேசன் ஆகியோருக்கு நிஜ வாழ்க்கையில் ஐவிஎஃப் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த அனுபவம் உண்டு.

 அந்தத் தனிப்பட்ட பாதிப்பும் உந்துதலுமே இக்கதையை அவர்கள் உருவாக்க முதன்மைக் காரணமாக அமைந்தது.

திரைப்படத்தில் காட்டப்படும் பாத்திரங்களுக்குப் பின்னால் உள்ள வரலாற்று உண்மைகள் மிகவும் நெகிழ்ச்சியானவை. இந்த மருத்துவப் புரட்சியில் முக்கியப் பங்காற்றிய நர்ஸ் ஜீன் பூர்டி வெறும் 39 வயதிலேயே புற்றுநோயால் காலமானார். 

அவரது மறைவுக்குப் பல ஆண்டுகள் கழித்தே 2010 ஆம் ஆண்டில் ராபர்ட் எட்வர்ட்ஸிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஸ்டீவன் பிரைஸ் இணைந்துள்ளார். 
இவர் ஏற்கனவே கிராவிட்டி போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் 2023 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டே லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

லூயிஸ் பிரவுன் எனும் உலகின் முதல் சோதனைச் சாலைக் குழந்தையின் பிறப்பைச் சுற்றி எழுந்த டாக்டர் பிராங்கண்ஸ்டைன் போன்ற விமர்சனங்கள் மற்றும் சமூகப் போராட்டங்களை இப்படம் மிகத் துல்லியமாகப் பதிவு செய்துள்ளது.

வைல்ட்கேஸ் மற்றும் பாதே ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் உலகளாவிய விநியோக உரிமையைப் பெற்று வெளியிட்டது.

திரைப்படத்தின் முடிவில் வரும் பின்னுரை தரவுகள் நிஜ மனிதர்களின் சாதனைகளையும் அவர்களுக்குக் கிடைத்த கௌரவங்களையும் சுருக்கமாக விளக்கி பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான வரலாற்றுப் பார்வையை வழங்குகிறது.

லூயிஸ் பிரவுன் எனும் அந்த முதல் குழந்தையின் பிறப்பிற்குப் பின்னால் லெஸ்லி பிரவுன் மற்றும் ஜான் பிரவுன் ஆகிய பெற்றோரின் பத்து ஆண்டுகால நீண்ட காத்திருப்பும் நம்பிக்கையும் ஒளிந்துள்ளது. 

இப்படத்தில் எலா புருக்கோலெரி மற்றும் டகி மெக்மீக்கின் ஆகியோர் அந்தப் பெற்றோர் கதாபாத்திரங்களில் மிக இயல்பாக நடித்துள்ளனர்.

மருத்துவக் குழுவினர் எதிர்கொண்ட நிதி நெருக்கடிகள் படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

1971 ஆம் ஆண்டு மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இவர்களது கோரிக்கையை நிராகரித்தபோது ஏற்பட்ட பின்னடைவு மற்றும் அதன் பிறகு அவர்கள் காட்டிய மன உறுதி ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைகிறது.

படத்தில் நுட்பமாக காட்டப்படும் ஒரு முக்கிய ஆய்வு வரலாற்று தொழில்நுட்பத் தவறு பாராஃபின் மெழுகு மாசுபட்டது ஆகும். 

1973 இல் ஏற்பட்ட இந்தச் சிறு பிழையினால் கருத்தரிப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து ஒட்டுமொத்த ஆய்வகமும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட வரலாற்றுத் துயரம் இதில் விரிவாக உள்ளது.

ஆரம்பத்தில் ஆய்வக மேலாளராகப் பணியில் சேரும் ஜீன் பூர்டி பின்னர் ஒரு தேர்ந்த கருவியலாளராகப் பரிணாமம் பெறுவதை இப்படம் அழகாகக் காட்டுகிறது. 

குறிப்பாகப் பெண்களின் இயற்கையான மாதவிடாய் சுழற்சியைப் பின்பற்றிச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அவரது தனித்துவமான யோசனையே 1978 இல் கிடைத்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

சமூகத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு இடையே டெய்லி மிரர் போன்ற ஊடகங்கள் ராபர்ட் எட்வர்ட்ஸை ஒரு விபரீத விஞ்ஞானியாகச் சித்தரித்த காலக்கட்டத்தின் பதற்றத்தை இப்படம் நேர்த்தியாகப் பிரதிபலிக்கிறது. 

அதேபோல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூடச் சூழலும் ஓல்ட்ஹாம் மாவட்டத்தின் மருத்துவமனைச் சூழலும் அக்காலத்துக்கே உரிய நிறங்களுடன் திரையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

 இந்தப் படைப்பு வெறும் மருத்துவச் சாதனையைத் தாண்டி ஒரு செவிலியர் ஒரு விஞ்ஞானி மற்றும் ஒரு மருத்துவர் ஆகிய மூவருக்கு இடையே இருந்த அபூர்வமான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.

 இவர்களின் கூட்டு முயற்சியால் இன்று உலகெங்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் பிறந்துள்ளனர், இன்று சோதனை குழாய் முறையில் பிறந்த  குழந்தைகள் இல்லாத குடும்பமே இல்லை  என்பதே இப்படத்தின் உண்மையான வெற்றிச் செய்தியாகும்.

மருத்துவ ரீதியான போராட்டங்களுக்கு இடையே சமூக மற்றும் மத ரீதியான மோதல்கள் இப்படத்தில் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

 குறிப்பாகத் தன்னார்வலராகத் தேவாலயப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஜீன் பூர்டி அங்கிருந்த பாதிரியார் பால்சனால் வழிபாடுகளில் பங்கேற்கக் கூடாது எனத் தடுக்கப்பட்ட தருணம் ஒரு பெண்ணின் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் அறிவியல் கடமைக்கும் இடையே இருந்த போராட்டத்தைப் பிரதிபலிக்கிறது.

ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் ஜீன் பூர்டி ஆகியோர் கேம்பிரிட்ஜ் நகரில் இருந்து ஓல்ட்ஹாம் நகருக்குத் தினமும் நான்கு மணி நேரம் பயணம் செய்த அந்த நீண்ட பயணங்கள் அவர்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. 

சிறிய எலிகளில் தொடங்கி மனிதக் கருமுட்டை வரை அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு கட்ட சோதனைகளும் அதில் கிடைத்த தோல்விகளும் திரையில் மிக மெல்லிய உணர்வுகளுடன் கடத்தப்பட்டுள்ளன.

படத்தில் வரும் அருண் எனும் ஆய்வக உதவியாளர் கதாபாத்திரம் மற்றும் அவரது திருமணத் திட்டம் போன்றவை அறிவியல் உலகிற்கு அப்பாற்பட்ட சாதாரண மனித உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் விவரிக்கின்றன. 

அதேபோல் மேட்ரன் முரியல் கதாபாத்திரம் பெண்களுக்குச் சிகிச்சையில் இருக்கும் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேர்வு குறித்த ஒரு முற்போக்கான பார்வையை முன்வைக்கிறது.

1970களின் இறுதியில் லெஸ்லி பிரவுன் மற்றும் ஜான் பிரவுன் ஆகிய தம்பதியினர் இந்தச் சோதனைக்கு இசைவு தெரிவித்து ஒரு புதிய வரலாற்றைத் தொடங்க முன்வந்த துணிச்சல் இப்படத்தில் ஒரு நெகிழ்ச்சியான பகுதியாகும்.

 படத்தின் இறுதியில் காட்டப்படும் உண்மையான வரலாற்றுப் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் அந்த மூன்று சாதனையாளர்களுக்கும் காலம் கடந்து கிடைத்த நீதியாக அமைகிறது.

 இவ்வாறு ஒரு பெரும் அறிவியல் புரட்சிக்கு பின்னால் இருந்த அறியப்படாத பல மனிதர்களின் முகங்களை இப்படம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

படத்தின் கதை:-

1968 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் (ஜேம்ஸ் நார்டன்) தனது ஆய்வக மேலாளராக ஜீன் பர்டி (தாமசின் மெக்கன்சி) என்பவரை நியமிப்பதில் இருந்து இந்த வரலாற்றுப் பயணம் தொடங்குகிறது.

 இவர்களுடன் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர் பேட்ரிக் ஸ்டெப்டோ (பில் நை) கைகோர்க்கிறார். 

இவர்களின் நோக்கம் நெடுங்காலம் குழந்தைபேறின்மையால் தவிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் உடலுக்கு வெளியே கருமுட்டையை உருவாக்கி மீண்டும் கருப்பையில் செலுத்தும் IVF என்ற இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் முறையைச் சாத்தியப்படுத்துவதாகும்.

ஆனால் அன்றைய காலகட்டத்தில் அரசாங்கமும் மத அமைப்புகளும் இவர்களின் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

ஜீன் மற்றும் அவரது தாயார் தீவிரமாகத் தேவாலயத்திற்குச் செல்பவர்கள் என்றாலும் இவர்களின் ஆராய்ச்சி கடவுளுக்கு எதிரானது என்று கூறி தேவாலயப் பாதிரியார் ஜீனை அங்கிருந்து விலக்கி வைக்கிறார். 

ஒருகட்டத்தில் ஜீனின் தாயாரும் அவரைப் புறக்கணிக்கிறார். 

போதிய நிதி வசதி இல்லாத சூழலிலும் ஜீன் மற்றும் ராபர்ட் தினமும் நான்கு மணி நேரம் பயணம் செய்து தங்கள் ஆய்வுகளைத் தொடர்கின்றனர். 

ஊடகங்கள் இவர்களை டாக்டர் பிராங்கண்ஸ்டைன் என்ற அரக்க மருத்துவர்  என்று ஏளனம் செய்கின்றன.

இந்த அழுத்தங்களுக்கு இடையே ஜீன் தனக்கு இருக்கும் உடல்நலப் பாதிப்பால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்கிற ரகசியத்தையும் வெளிப்படுத்துகிறார். 

இது மற்ற பெண்களுக்கு உதவ வேண்டும் என்கிற அவரது வைராக்கியத்தை இன்னும் அதிகமாக்குகிறது.

ஆராய்ச்சியில் தொடர் தோல்விகள் ஏற்பட்டு ஒருகட்டத்தில் பயன்படுத்திய பொருட்கள் மாசுபட்டிருப்பதை அறிந்து ஜீன் விரக்தியில் வேலையை விட்டு விலகிச் செல்கிறார். 

ஆனால் தனது தாயாரின் மரணத்திற்குப் பிறகு ஒரு புதிய தெளிவுபெறும் ஜீன் மீண்டும் ராபர்ட்டுடன் இணைகிறார். 

பெண்களின் இயற்கை மாதவிடாய் சுழற்சியைப் பின்பற்றி ஆய்வுகள் இனி செயல்படலாம் என்கிற ஜீனின் தனித்துவமான யோசனை இந்த ஆராய்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைகிறது. 

இதன் பயனாக 1978 ஆம் ஆண்டு உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை பிறக்கிறது. அந்தப் பெண் குழந்தைக்கு ஜாய் என்று பெயரிடப்படுகிறது. 

இந்த மகத்தான வெற்றிக்குப் பின்னால் இருந்த ஜீன் பர்டி முப்பத்தி ஒன்பதாவது வயதிலேயே புற்றுநோயால் மறைந்தாலும் 2010 ஆம் ஆண்டில் இவர்களின் உழைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது என்ற தருணத்தில் படம் நிறைகிறது.

இந்தத் திரைப்படம் வெறும் மருத்துவச் சாதனையை மட்டும் பேசாமல், அதற்குப் பின்னால் இருந்த மனித உணர்வுகளையும் போராட்டங்களையும் மிக ஆழமாகப் பதிவு செய்கிறது.

அறிவியல் என்பது வெறும் சோதனைக் குழாய்களோடும் ரசாயனங்களோடும் முடிந்துவிடுவதில்லை. அது சக மனிதர்களின் மீதான மாறாத கருணையும் அவர்களின் கண்ணீரைத் துடைக்கும் பேரார்வமும் கொண்டது என்பதை ஜீன் பர்டியின் கதாபாத்திரம் உணர்த்துகிறது. 

சமூகம், மதம் மற்றும் அரசாங்கம் என அனைத்துத் தரப்பிலிருந்தும் முட்டுக்கட்டைகள் வரும்போது, உண்மையான லட்சியம் கொண்டவர்கள் எதற்கும் அஞ்சாமல் முன்னேற வேண்டும் என்கிற துணிச்சலை இந்தப் படம் போதிக்கிறது.

குறிப்பாக, ஒரு மிகப்பெரிய வெற்றியில் திரைக்குப் பின்னால் இருக்கும் பெண்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை இது உரக்கச் சொல்கிறது. 

ராபர்ட் எட்வர்ட்ஸ் நோபல் பரிசு பெற்றிருந்தாலும், அந்த வெற்றிக்கு வித்திட்ட ஜீன் பர்டி போன்றவர்களின் அர்ப்பணிப்பு காலத்தால் மறைக்கப்படக் கூடாதது என்பதே இப்படத்தின் ஆன்மா.
தோல்விகள் என்பது முடிவல்ல, அவை அடுத்த கட்ட வெற்றிக்கான ஒரு பாடம் மட்டுமே. 

பலமுறை கருத்தரிப்பு தோல்வியடைந்த போதும், ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறால் பல வருட உழைப்பு வீணான போதும், மீண்டும் ஒரு புதிய யோசனையுடன் இயற்கை சுழற்சி முறை என்று களமிறங்கிய அந்த விடாமுயற்சிதான் உலகிற்கு முதல் 'சோதனைக் குழாய் குழந்தையை' பரிசாக அளித்தது.

 அறிவியலும் அன்பும் இணையும்போது இயற்கையின் விதிகளையே மாற்றி எழுத முடியும் என்பதே இப்படம் சொல்லும் உன்னதமான செய்தி.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (382) தமிழ் சினிமா (257) உலக சினிமாபார்வை (220) கமல்ஹாசன் (130) சென்னை (82) மலையாளம் (81) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) ஆஸ்கர் (42) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) இலக்கியம் (17) உலக சினிமா பார்வை (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (14) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)