அபூர்வ ராகங்கள் ( 1975 )படத்தில் ஸ்ரீவித்யா மற்றும் கமல்ஹாசன் இடையே வரும் பலப்பரீட்சை காட்சி அழகாக இந்த Sharkoferral என்ற சத்து மருந்து விளம்பரத்தில் இருந்து pan செய்து துவங்கியிருப்பார் இயக்குனர் கே.பாலசந்தர் .
கமல்ஹாசன் கையில் சுளுக்கு ப்ளாஸ்டர் (belladonna plaster) போட்டிருப்பார் பாருங்கள்,
1976 ஆம் ஆண்டு தாசரி நாராயணராவ் இயக்கத்தில் வந்த ரீமேக்கான Thoorpu Padamara படத்தில் பைரவி இடது பக்கம் அமர, நடிகர் நரசிம்ம ராஜு இந்த பிரசன்னா கதாபாத்திரம் செய்தார், இவரை ஆந்திர கமல்ஹாசன் என்றே சொல்கின்றனர்,
கமல்ஹாசன் புதுமையாக செய்த கதாபாத்திரங்களை இவர் தெலுங்கு சினிமாவில் முயன்று பார்த்திருக்கிறார், இந்த பிரசன்னா கதாபாத்திரத்தை உள்வாங்கிச் செய்ய முயன்றிருந்தார்.
அடுத்து இயக்குனர் கே.பாலசந்தர் இந்தியில் ரீமேக் செய்கையில் பைரவியாக ஹேமமாலினி, பிரசன்னாவாக கமல்ஹாசன், இதிலும் கமல்ஹாசன் கையில் சுளுக்கு ப்ளாஸ்டர் போட்டிருப்பார் , இதில் இந்த சத்து மருந்து விளம்பரம் எல்லாம் கிடையாது , நேராக பலப்பரீட்சை தான்.
இது போல தன் படைப்புகளில் ஏதாவது consumer brand ஐ இடையில் அழகாக கதையினூடே நுழைத்து காட்சியை அழகூட்டுவார் இயக்குனர்,அபூர்வ ராகங்கள் படத்தில் மெடிமிக்ஸ் சோப்புகள் மற்றும் 555 சிகரட்களை வைத்து காட்சிகள் அழகாக வரும்.
இப்படி தப்புத் தாளங்கள் படத்தில் ஒரு அழகிய காட்சி வரும்,
பெட்டிகேஸ் ரவுடி ரஜினி தியேட்டரில் இடைவேளையில் Glycodyn இருமல் விளம்பரத்தைப் பார்க்கையில் விலை மங்கை சரிதாவின் தொடர் இருமல் நினைவுக்கு வரும், அவருக்கு வேண்டி Glycodyn வாங்கி இடுப்பில் திணித்து கொண்டு போய் தருவார்.
இது போல corporate , consumer brand விளம்பரங்களை படத்தினூடே அழகாக காட்டியவர் வங்காள இயக்குனர் சத்யஜித்ரே.
#அபூர்வ_ராகங்கள்,#கமல்ஹாசன்,#ஸ்ரீவித்யா,#கே_பாலசந்தர்,#Thoorpu_Padamara,#நரசிம்ம_ராஜு,#சத்யஜித்_ரே,#ரஜினிகாந்த்,#sharkoferral,#glycodyn,#தப்புத்தாளங்கள்