இரண்டு கட்டிடங்களும் ஒரே கட்டிடம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம் நகரில் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கும் சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்குப் பின் சுவரொட்டி விளம்பரம் போல உள்ளது அல்லவா?இரண்டிற்குமான வித்தியாசம்.
இது விசாகப்பட்டினம் ஹவா மஹால்(காற்று மாளிகை), கடற்கரையைப் பார்த்தபடி வீற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடம், மரோசரித்ரா(1977) , ஏக்தூஜே கேலியே(1982)படங்களில் வந்த கட்டிடம் இது தான்.
இதில் தான் கண்ணாமூச்சி விளையாட்டில் கண்ணைக் கட்டிக் கொண்ட கமல்ஹாசன் மாடியில் இருந்து இடிந்து போன தரையின் திறப்பில் விழப்போகையில் ரத்தி வீல் என அலறுவார்,
இதில் தான் ரத்தி வில்லனிடம் தன்னை காத்துக்கொள்ள தரையின் திறப்பிற்குள் இடிபாடுகள் மீது தற்கொலை செய்ய விழுவார்,
இப்படி சிதிலமாக இருந்த கட்டிடத்தை அது கட்டப்பட்ட 1922 ஆம் ஆண்டில் இருந்தபடியே மாற்றுவதற்குப் பெயர் தான் conservation,
இதை B.Arch படித்து 2 வருடம் Conservation சிறப்பு முதுகலை படித்தவர்கள் சிறப்புறச் செய்வார்கள், அவர்களை conservation consultant என்பார்கள்,
இதை பழமை மாறாமல் புதுப்பித்தவர்கள் Intach தன்னார்வ நிறுவனத்தார், இந்தியா முழுக்க இவர்கள் 190 கிளைகள் பரப்பி இயங்கி வருகின்றனர் ,
இவர்கள் இந்தியா முழுக்க உள்ள புராதான கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பித்ததில் முன்னோடிகள், இது வரை அதிக கட்டிடங்கள் இவர்களின் வடிவமைப்பு மேற்பார்வையில் தான் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ஹவா மஹால் 1910-1920 வரையான காலகட்டத்தில் ஒரிஸ்ஸாவின் ஜெய்பூர் மன்னர் Ramachandra Deo அவர்களால் ராஜ குடும்பத்தின் சாலைவழி தங்கும் விடுதியாக கட்டப்பட்டது,
ஒரிஸ்ஸாவில் இருந்து மன்னர் அடிக்கடி மெட்ராஸுக்கு ஜீப்களில் கடற்கரைச் சாலை மார்க்கமாக வருகையில் மன்னர் மற்றும் குடும்பத்தார் தங்க 19 அறைகள் கட்டப்பட்டன.
ஆனால் அது சுதந்திரத்திற்குப் பின்னர் மன்னரிடமிருந்து கைப்பற்றப்பட்டு அரசு விருந்தினர் விடுதியாக செயல்பட்டது, இதில் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத் , சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற தலைவர்கள், கவிஞர் ரபீந்த்ரநாத் தாகூர், சிறுமியாக நடிகை வஹீதா ரெஹ்மான் அவரின் தந்தை சுதந்திரத்திற்கு முன் நீதிபதியாக இருக்கையில் இங்கு வந்து தங்கியுள்ளனர்,
அதன் பின்னர் நீண்ட காலம் அரசு செவிலியர் மருத்துவமனையாகவும் அரசு மகளிர் கல்லூரியாகவும் இக்கட்டிடம் மாற்றப்பட்டு மேலே படத்தில் நாம் காணும் பேய்வீடு போல மாறிவிட்டது,
இதன் விலையுயர்ந்த பர்மா தேக்கு கிராதிகள் , வார்ப்பிரும்பு அலங்கார கம்பி தடுப்புகள்,சலவைக்கல் cladding என எல்லாமே சமூக விரோதிகளால் பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்டன, தரமான மெட்ராஸ் டெரஸ் பர்மா தேக்கு கிராதிகள் உருவப்பட்டு திருடப்பட பல இடங்களில் கூரை விழுந்து விட்டது.
தங்கள் குடும்ப சொத்து இப்படி சிதிலமாவதைப் பொறுக்க முடியாத மன்னர் குடும்பத்தார் அதை மீட்க பல வருடங்கள் வழக்காடி போராடி 1992 ஆம் ஆண்டு இதை மீட்டனர் .
பத்து வருடங்கள் கழிந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு மன்னரின் பேத்தியும் Intach
விசாகப்பட்டின கிளையின் ஒருங்கிணைப்பாளருமான
Mayank Kumari Deo இக்கட்டிடத்தை கோடிக்கணக்கில் பணம் செலவழித்து 1920 களில் இருந்தது போலவே தோற்றப் பொலிவுடன் மாற்றினார்,
இக்கட்டிடத்தை தற்போது பண்பாட்டு மையமாக அவர் உயரிய நோக்கில் அற்பணித்துள்ளார்,
இந்த பெருமைக்குரிய கட்டிடத்தில் கலாச்சார விழாக்கள், கருத்தரங்குகள், ஓவியக் கண்காட்சி, நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
Intach மையம் விசாகப்பட்டினத்தில் பாதுகாத்து வரும் நினைவுச் சின்னங்கள் பற்றி இங்கே பாருங்கள்.
http://intachvizag.org/heritage_sites.php#
மேலும்
https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/hawa-mahal-where-the-movie-ek-duje-ke-liye-was-filmed/articleshow/58331575.cms
https://www.yovizag.com/hawa-mahal-visakhapatnam-heritage-building/
https://m.facebook.com/story.php?story_fbid=10158644157041340&id=750161339
https://m.facebook.com/story.php?story_fbid=10158644224431340&id=750161339
#ஹவா_மஹால்,#விசாகப்பட்டினம், #கே_பாலசந்தர்,#விசாகப்பட்டினம்,#ஏக்_தூஜே_கேலியே,#மரோசரித்ரா