புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எழுத்தாளர் இயற்கை அவர்களின் படைப்பில் வெளியான ‘தொண்டாங் கவுறு’ கவிதைத் தொகுதி

எழுத்தாளர் இயற்கை  அவர்களின் படைப்பில் வெளியான ‘தொண்டாங் கவுறு’ கவிதைத் தொகுதி, மண்ணின் வாசனையையும் மனித வாழ்க்கையின் யதார்த்தத்தையும் வட்டார வழக்கு மொழியில் மிக அழகாகப் பதிவு செய்யும் ஒரு அரிய கவிதைத் தொகுப்பு.

 செயற்கையான புனைவுகள் ஏதுமின்றி, கிராமத்து மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் இழையோடும் உணர்ச்சிகளையும், இயல்பான வாழ்வியலையும் கவிதைகளாக வடித்துள்ள பாங்கு இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் எளிய மக்களின் மனித உறவுகள், காதல், வலி, மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்களை நேரடியாகவும் நயம்படவும் வெளிப்படுத்துகின்றன. 

‘ஒளி விலகல்’ போன்ற கவிதைகளில் சிறார்களுக்கேயான குறும்புத்தனமும், எளிய விளையாட்டுகளுக்குள் ஒளிந்திருக்கும் ஏக்கமும் வெளிப்படும் அதே வேளையில்,

 ‘தூவானம்’ மற்றும் ‘பழைய ஈரம்’ போன்ற கவிதைகளில் கிராமத்து வீடுகளின் சூழலும், மழையோடு பிணைந்த மனித மனங்களின் உணர்வுகளும் மிக நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, ‘இதுமாதிரிப் பேசனதில்ல’ மற்றும் ‘ஊங்கோட்டாத நாட்கள்’ போன்ற படைப்புகள் மனிதர்களுக்கிடையேயான பிணக்குகள், ஊடல், மனக்கசப்புகள் மற்றும் அன்பின் பரிமாணங்களை வட்டார மொழியின் தன்மை மாறாமல் எடுத்துரைக்கின்றன. 

தலைப்புக் கவிதையான ‘தொண்டாங் கவுறு’ விவசாய நிலங்கள், காவல் நிலங்கள், வளர்ச்சி என்ற பெயரில் எளிய மக்களின் வாழ்விடங்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவர்களின் வேதனையை மிக ஆழமாகப் பதிவு செய்கிறது.

 ‘தொண்டாங் கவுறு’ கவிதைத் தொகுதி வாசகனைத் தன் சொந்தக் கிராமத்துத் தெருக்களுக்கும் எளிய மனிதர்களின் நினைவுகளுக்கும் அழைத்துச் செல்லும் ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகத் திகழ்கிறது.

 வட்டார வழக்குக் கவிதைகளின் வழியே கிராமத்து வாழ்வியலின் ஆன்மாவை உயிர்ப்புடன் நிலைநிறுத்தியுள்ள எழுத்தாளர் இயற்கை அவர்களின் இமுயற்சி தமிழ் கவிதை உலகிற்கு ஒரு நல்வரவாகும்.

இக்கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 50 கவிதைகளின் விவரம் :
 * சிங்கார் சாந்து
 * சற்றுத் தூக்கலாய் எரியும் ராந்தல்
 * மானமுள்ள மழை
 * அகலிகை
 * இன்னொரு அம்மாக்கள்
 * ரங்க ராட்னம்
 * அவுத்துப் பாத்தா
 * லேசாகக் கசிவது
 * ஒரு கொடம் தண்ணி ஊத்தி
 * கராரான வியாபாரம்
 * வதல பாக்கு வாங்கனும் ரண்ருபா குடு
 * அப்பா கதைகள்
 * பொண்ணுன்னா நான் தான தாய்த் தெய்வத் தாண்டவம்
 * தொண்டாங் கவுறு
 * நடவு
 * இதுமாதிரிப் பேசனதில்ல
 * நிலாக் கும்பல்
 * ஊங்கொட்டாத நாட்கள்
 * வாடிப் போடி பழக்கம்
 * நாயகி
 * ன்னாமே சோறு போடவா
 * பால் பல்
 * சர்க்கரை மீனா
 * ஊன்றுக் கோல்
 * அப்பந் தான்
 * ஒளி விலகல்
 * பழய ஈரம்
 * ஐஸ்பாய் விளையாடும்போது தொலஞ்சிப் போன அன்பரசி
 * தூவானம்
 * ஒருத் தாய்ப் பிள்ளைகள்
 * காமாட்சி பெரியம்மா எம்.பி.பி.எஸ்
 * நல்லாயிருந்தப் பூக்கள்
 * பேஞ்சிக் கெடுக்குது
 * கதை மாந்தர்கள்
 * நேர்க் கணக்கு
 * கப்பல் காரர் ஏழுமலை
 * கதவு அம்மா
 * சாமிக் கண்ணு
 * தம்பிக்காரன்
 * மெகா பிக்சல்
 * சொர்க்க வாசல்
 * வெற்றிலை
 * சண்டக் கத்
 * தெய்வ சாப்பாடு
 * தூள் வெயில்
 * கல்லாகும் சாபம்
 * எது ஏர்வ
 * கைமாத்து
 * பொம்மைகள்
 * தாந் தச ஆடும்

என தலைப்பு ஒவ்வொன்றிலும் மண்வாசம், கவிஞருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

சமூகவியல் ஆசிரியர், விவசாயி, புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்ட கவிஞர் இயற்கை அவர்களின் ஆளுமையே இக்கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு வரிகளிலும் பிரதிபலிக்கிறது.

 ஒரு சமூகவியல் ஆசிரியராக மனித உறவுகளையும் சமுதாய மாற்றங்களையும் கூர்ந்து கவனிக்கும் அவரது பார்வை, இக்கவிதைகளில் உள்ள எளிய மனிதர்களின் கதைகளாகவும் போராட்டங்களாகவும் பரிணமித்துள்ளது. 

நிலத்தோடு இணைந்த விவசாயியாக அவர் பெற்ற அனுபவங்கள், மண் வாசனை மாறாத சொற்களாகவும், பயிர்களையும் மழையையும் நேசிக்கும் இயற்கை சார்ந்த கவிதைகளாகவும் மிளிர்கின்றன.

அவரது புகைப்படக் கலைஞருக்கான கூர்மையான பார்வை, கவிதைகளில் காட்சிகளைத் தத்ரூபமாக வாசகர்களின் கண்முன்னே நிறுத்துகிறது. 

ஒரு எழுத்தாளராகவும் இலக்கிய இதழாசிரியராகவும் மொழி மீதும் வட்டார வழக்கின் மீதும் அவர் கொண்டுள்ள ஆழமான புலமை, இத் தொகுப்பிற்குப் பெருமை சேர்க்கிறது. 

இவ்வாறு தம் பல்வகை வாழ்வியல் அனுபவங்களை ஒன்றிணைத்து, தமிழ் இலக்கிய உலகிற்கு 'தொண்டாங் கவுறு' என்னும் உன்னதமான படைப்பை அளித்த கவிஞர் இயற்கை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

சினிமா எனும் பூதம்

எழுத்தாளர் Rajanayahem R.p.  அவர்களின் சினிமா எனும் பூதம் புத்தகம் அமேசானில் வாங்கக் கிடைக்கிறது.
விலை ₹369.
 தமிழ் சினிமா முன்னாள்  நட்சத்திரங்கள் பற்றிய பூரண தொகுப்புகள்  கொண்ட தரமான புத்தகம் இது, 

இதில் நமது அபிமான நட்சத்திரங்கள் பற்றிய எழுத்து  வெறும் தகவல் களஞ்சியமாக மட்டும் இல்லாமல் இலக்கியத் தரத்தில் தனித் தனி கட்டுரைகளாக உள்ளது,

ஒவ்வொரு கட்டுரையுமே தனித்துவம் வாய்ந்தது, நிபுணத்துவமான எழுத்து ,எழுத்தாளர் மனதின் நினைவடுக்குகளில் இருந்து ஒவ்வொன்றுக்கும் reference தந்து எழுதியவை ,நம்மை திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கிறது எழுத்தின் வசீகரம்.

இதில் எல்லா கட்டுரையுமே பொக்கிஷம் தான் , உதாரணத்திற்கு நடிகை பத்மினி அவர்களின் அத்தியாயத்தில் எழுத்தாளர் மேற்கோள் காட்டும் "போட்டியாளர்கள்" என்ற சிறுகதை காலஞ்சென்ற எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய ரேர்ஜெம் சிறுகதை,

வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் சவுண்ட் அஸிஸ்டண்டாக  பணிபுரிகையில்  எழுத்தாளருக்கு கிடைத்த அந்தரங்க அனுபங்களின் புனைவு, 

தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு உச்ச பட்ச வெற்றி பெற்ற திரைப்படம், இன்றும் கொண்டாடப்படும் இசை, பாடல், நடனம், நடிப்பு,  அதில் போட்டி போட்டு நடித்த இரு புகழ்பெற்ற நடிகைகளின் ego, வர்ஜனம்,அந்த போட்டிப்  பாடல் உருவான  விதம் ,ஒரு டான்ஸ் ரிகர்சலில் சவுண்ட் அஸிஸ்டண்டின் பணி, 

ஒரு சக சவுண்ட் அஸிஸ்டண்ட் pervert ஆல் அந்த புகழ்பெற்ற நடிகைக்கு நடன ஒத்திகையில் நடந்த அவமானம், அந்த பெரிய நடிகைக்குள் இருந்த குழந்தைத்தனம்,சமாதான குணம்,தன் மீது ஒரு டெக்னீஷியன் கூட கோபம் கொண்டிருக்கக் கூடாது என்ற நற்குணம், அந்த ரிகர்சல் சம்பவம் முடிந்து படம் வெளியான பின்னான நடிகையின் திடீர் திருமணம் எல்லாம் எல்லாம் மிகச்சிறப்பாக வெளிப்பட்ட சிறுகதை, 

அந்த "போட்டியாளர்கள்" சிறுகதையை சினிமா எனும் பூதத்தில் எத்தனை கச்சிதமாக மேற்கோள் காட்டுகிறார் எழுத்தாளர், mesmerizing, இது போல பல பல பின் இணைப்பு நுன்னிய தகவல்களால் இயல்பான நடையில் இழைக்கப்பட்ட கட்டுரைகள் சினிமா ஆர்வலர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டியவை.

அனைவரும் hard copy வாங்கிப் படியுங்கள், அதுவே எழுத்தாளரை சரியாக  கௌரவிக்கும் முறை, மென்மேலும் நிறைய பதிப்புகள் காண வேண்டிய புத்தகம் சினிமா எனும் பூதம்.

நடிகை பத்மினி அத்தியாயம் படிக்க 
போட்டியாளர்கள் சிறுகதை

#சினிமா_எனும்_பூதம்,#எழுத்தாளர்_RP_ராஜநாயஹம்,#எழுத்தாளர்_அசோகமித்திரன்
#பத்மினி,#போட்டியாளர்கள்,#வஞ்சிக்_கோட்டை_வாலிபன்

மதுரை மதிச்சியம் ஷெனாய் நகர் மற்றும் சென்னை அமைந்தகரை ஷெனாய் நகர் வரலாறு

மதுரையின் மதிச்சியம் என்ற கிராமத்தை சுற்றி அமைந்துள்ள ஷெனாய் நகர் பகுதி முறையாக நகர வடிவமைப்பு செய்யப்பட்ட பகுதி, Town planning in Madras என்ற மின்புத்தகம் படிக்கையில்  1918 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த  நகர வடிவமைப்பாளர் H.V.Lanchester FRIBA,MTPI அந்த பகுதிக்கு வரைந்த வரைபடத்தைப்  பார்த்தேன், இப்புத்தகத்தில்  இது போன்ற A1அளவு கொண்ட அபூர்வமான நகர வடிவமைப்பு வரைபடங்கள் சுமார் 22 எண்ணிக்கையில் உள்ளது, கட்டிடக்கலை முதுகலை M.Arch ல் Master of town planning படிக்கும் மாணவர்கள் வரலாற்று ஆர்வலர்கள அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

அன்று அவர் இட்ட layout இன்று 105 ஆண்டுகளில் செயல் வடிவம் பெற்றுவிட்டன ,இன்றைய Google map பாருங்கள், 

cutchery என்பது தாலுக்கா  அலுவலகத்தை குறிக்கும்,தமுக்கம் மைதானத்தை TUMKM ground என்று குறித்ததைப் பாருங்கள், அமெரிக்கன் கல்லூரி மதுரையில் 1881 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது , இன்று மதுரை ஷெனாய் நகர் விஐபி வாழும் பகுதியாகும்.

படத்தில் இருப்பவர் காலஞ்சென்ற திரு.J.P. ஷெனாய் என்ற Joseph Patrick Lasrado Shenoy அவர்கள்,இவர் மங்களூரில் பிறந்தவர், கத்தோலிக்க கிருத்துவர், இன்று தமிழ்நாட்டில் நாம் காணும் LIG housing என்ற Low income group என்ற வருவாய் குறைந்த மக்களுக்கான தரமான குடியிருப்புகள், மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளைப் பற்றி தன் ஆட்சிப்பணிக்காலத்தில் அன்றே தீவிரமாக சிந்தித்தவர்,  திட்டப்பணிகள் மேற்கொண்டவர், 1930 களில் மதுரையின் ஆட்சியராக பணியாற்றினார், அன்றைய மதுரை மற்றும் சென்னை மண்ணின் பூர்வகுடிகளுக்கான  நகர அபிவிருத்தி திட்டங்களை தொலைநோக்காக சிந்தித்தவர்,ஆட்சியர்களில்  செயல் வீரர், அதுவரை 51.6 சதுர கிமீ பரப்பளவு மட்டுமிருந்த சென்னையை 128.8 சதுர கீமீ பரப்பளவுக்கு விஸ்தரித்து சுமார் 110000 மக்கள் குடியேறவும் புதிதாக 14500 வீடுகள் கட்டவும் காரணமாக இருந்தவர்.
1940 களில் இவர் சென்னையில் ஆட்சியராக பணியாற்றி 1944 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார், இவரின் உதவியாளர் திரு.C.நரசிம்மன் இவரது பணிகளை பின்பற்றி தொடர்ந்தார்,  இவரது பெயரை முத்தாய்ப்பாக இந்த மதுரை மற்றும் சென்னை புதிய குடியிருப்பு பகுதிகளுக்கு சூட்டினார் ,இவர் 1937 ஆம் ஆண்டு  "Madura the temple city " என்ற மதுரை மற்றும்  மீனாட்சி அம்மன் கோயில்  பற்றிய புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

இரு மின்புத்தகங்களும் இலவசமாக தரவிறக்க லிங்க் கமெண்ட்ஸில் உள்ளது.
Town planning in madras
Madura the temple city
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (254) ஆஸ்கர் (210) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (18) இலக்கியம் (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)