ஒரு நொள்ளை மாணவன் ( தொடர் பதிவு )


ன் பள்ளிபருவத்தை பற்றி எழுத அழைத்த வினோத் கவ்தமிற்க்கு நன்றி.

1982 ஆம் வருடம் நான் பொழிச்சலூரில் இருக்கும் (இப்போ இருக்குமா?)வெங்கடேஸ்வரா வித்யாலயாவில் எல்கேஜி சேர்ந்தேன்.

அலுமினியம் பெட்டியும் சிகப்பு ட்ரவுசர் மற்றும் வெள்ளை சட்டை ,சிகப்பு டை என குதிரை வண்டியில் போய் வந்த நினைவுகள்,
முதல் முதலாக கழுதை பார்த்தது.
முதல் முதலாக எங்கள் சாலிடர் டிவி வாங்கி ஊரே வந்து நிகழ்ச்சி பார்க்க நான் அவர்களை முறைக்க,என் அம்மா என்னை அடிக்க

அந்த கால மழை நாள் பொழிச்சலூர் முக்கால் வாசி மூழ்கி விடும்,
அந்த தவளை சத்தம்,பாம்பு சட்டை உரித்த வாசத்தை உருளை கிழங்கு சமைத்துள்ளார்கள் என எண்ணியது.
ரப்பர் பந்தை கழிவறை கோப்பையில் போட்டு எடுக்க முயன்றது.
என் அக்காவுடனும் பக்கத்து வீட்டு சிறுவருடன் ரிங்கா ரிங்கா ரோசெஸ் ஆடியது
பூப்பறிக்க வருகிறோம் ஆடியது

அப்படியே காட்சி மாறி

1983 கோம்பை,ஏதோ பேர் நினைவில்லா பெரிய ஹாஸ்டல்
வீட்டில் பெரும் பிரச்சனை வந்து
யுகேஜி படிக்கிறேன்,என் அக்கா ஒன்றாம் வகுப்பு.
ஹாஸ்டலில் எங்கள் ட்ரங்கு பெட்டியை ஆறாம் வகுப்பு பசங்கள் நெம்பி திறந்து நெளித்து வைக்க ஆற்றாமல் அழுதது.

கன் மேன்(gun man) டி ஷர்ட் ,பெல் பாட்டம் பேன்ட் போட்டது.
முதல் முதலாக படிப்பில் முதல் ரேங்க் வாங்கியது.
முதல் முதலில் அசைவ உணவு வாசனையை முகர்ந்தது.
தினமும் முட்டையும் , நீல அலுமினிய லோட்டாவில் பாலும் குடித்தது.
இரவு எங்கோ கத்தும் கழுதை புலிக்கு பயந்தது.
பெருசாளியிடம் இரவு கடி வாங்கியது

எல்லோருக்கும் லீவு விட்டதும் ஹாஸ்டலே காலியாகிவிட எங்களை கூட்டிப் போக ஆள் வருவார்களா? என ஏங்கியது.
செம்பருத்தி பூ மொக்கை தின்றது .
வாரா வாரம் பேன் மருந்து தலைக்கு தேய்த்தது.
முதல் முதலில் திரை அரங்கம் சென்று திருட்டு ராஜாக்கள் என்னும் படம் வரிசையாக வாழ்க்கை (மெல்ல மெல்ல பாடல் ) ,வெள்ளை ரோஜா,தங்கைக்கோர் கீதம் பார்த்தது.
என்னை எப்படி சினிமா பைத்தியம் ஆக்கி இருக்கின்றனர்?

வீட்டில் இப்போது பிரச்சனை பூதாகாரமாக
1984
மதுரைக்கு பாட்டி வீட்டிற்கு அம்மா தங்கை அக்கா சகிதம் வந்தது
டவுன் ஹால் ரோடு சந்தில் இருக்கும் ரோசரி சர்ச் ஸ்கூலில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தேன்.தமிழ் மீடியம்,
எவ்வளவு முயன்றும் எழுத மட்டும் வரவில்லை.
அம்மாவிடம் மரண அடி வாங்கி தமிழ் கற்றேன்.

இப்போது தான் நண்பன் இபுராகீம் கிடைத்தான் (எங்கேப்பா இருக்கே?)
அந்த டவுன் ஹால் ரோடு காசெட்டு கடைகள் ராஜாவின் அப்போதைய ஹிட்டுகள் மூன்றாம் பிறை தொடங்கி குங்குமச்சிமிழ்,தென்றலே என்னை தொடு ,விக்ரம்,படிக்காதவன் ,மிஸ்டர் பாரத் வரை
மதுரை பள்ளி வாசம்.

படிப்பில் நான் மூன்றாம் ரேங்க் எடுத்துக் கொண்டிருந்தேன்.
என் சகோதரிகள் அருமையாக படித்தனர்.
நான் பள்ளி விட்டதும் இபுராகீமின் அப்பாவின் பெட்டிக்கடை சென்று அங்கிருந்து அவன் வீட்டு மாடிக்கு சென்று பெட்டிக்கடையில் அவன் திருடிய பீடியை பற்றவைக்க நான் நீண்ட தயக்கத்துக்கு பின் இழுக்க.(வில்லன் என்ட்ரி) நான் தான்ப்பா.

மூன்றாவது படிக்கும்போதே புகைத்தவன் என்ற பெருமையை யாராவது முறியடிக்க வருகிறீர்களா? (விளையாட்டுக்கு)

மதுரையில் எனக்கிருந்த பெரும் அசவுகரியங்களில் ஒன்று
அப்போதைய ஓவர் டு டெல்லி ஹிந்தி ஒலிபரப்பு.
தமிழ் நிகழ்ச்சிகளே தெரியாது.
நாங்கள் பக்கத்து வீட்டில் எகிறி குதித்து டிவி பார்ப்போம்.
அப்போது விக்ரம் வேதாளம்,சனிக்கிழமை போடப்படும்
கண்ணாடி போட்ட அசோக் குமார் நடித்த படங்கள்,
புற்று நோயால் மாண்ட சஞ்சீவ் குமார் நடித்த படங்கள்.
புதன்கிழமை போடப்படும் சித்ரஹார்.
வாரா வாரம் நியூ சினிமா ,சென்ட்ரல் தியேட்டர் பட ரிலீசு பேண்டு வண்டிகள்,கோகோ மிட்டாய்,ராஜாபார்லீ சூச்பரி,நேவி பேனா,ஈகா ஐஸ்கிரீம்,
சேட்டு கல்யாண ஊர்வல கூட்டத்தில் கொடுக்கப்படும் ரஸ்னா ,

சித்திரை திருவிழா கொண்டாட்டம்,அழகர் ஆற்றில் இறங்குகையில் தொலைந்து போய் மீண்டும் கிடைத்தது.
கோச்சடையில் வைகையில் குளித்தது.
வளையல் கார தெருவில் கண்ணாடி கல் பொறுக்கியது.
ஆடி வீதியில் ஓடி விளையாடியது.
கோவில் மியூசியத்தில் டிக்கெட் எடுக்காமல் டபாய்த்து உள்ளே சுற்றியது.
சித்திரை பொருட் காட்சி.
மாடர்ன் ரெஸ்டாரண்டு சாம்பார் வாசம்.

நேதாஜி ரோடு அரசியல் மீட்டிங்
விபூதி குங்குமமிட்ட காபிக்கடை வெண்கல பாய்லர் .
இரவு மொட்டைமாடியில் கேட்கும் தியேட்டர் வசனங்கள்.
காலையில் எழுப்பிவிடும் அடிபம்பு சத்தம்
மீனாட்சியம்மன் கோவில் கடையில் மோட்டார் போட் வேடிக்கை பார்த்தது.மதுரையின் மண் வாசம்,செருப்பு போடா மனிதர்கள்.

ஐம்பது டெயிலர் கடைகள் கொண்ட பாட்டி வீட்டு தெரு
(யார் தைக்க கொடுப்பார்?)
ஈழதமிழர் படுகொலை ஓவியங்கள் சுண்ணாம்பு கார தெருவில் பார்த்து அரண்டது.
அதை பற்றி யாரிடம் கேட்டும் பதில் கிடைக்காமல் போனது.

ராஜாவின் இசையுடன் கூடிய சிறு பருவம்
என் உயிர் போனாலும் என் நினைவை விட்டு நீங்கா என் மதுரை டவுன்.
இன்னும் கூட நீளும்,
நீளம் கருதி...

வீட்டுக்கு வந்த யாரோ ஒரு சொந்தக்காரர் என் ஸ்லேட்டில் யானை வரைய,
அதன் மேல் நான் வரைந்து பழக ஒரு கட்டத்தில் விடுதலை பட ரஜினியையே வரைந்திருந்தேன்.

1986 சென்னைக்கு மீண்டும் பஞ்சம் பிழைக்க வந்தோம்.
சானடோரியத்தில் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில் அதே மூன்றாவது (மூணாப்பு என்றவனை பார்த்து வகுப்பே கொல்லென்று சிரித்தது,)
இங்கே தான் என் வாழ்வில் நான் நினைவில் கொள்ள தகுதியுள்ள ரோசலின் டீச்சரை பார்த்தேன்.

எனக்கு இங்கு முதல் ரேங்க் போட்டு பிழைக்க வைத்தார்.
என் நினைவில் இன்னும் அந்த ஒளியும் ஒலியும் ,அம்லு, நாயகன்,
புன்னகை மன்னன் படங்கள்.

அங்கிட்டு போ,இங்கிட்டு வா என்றால் சிரிப்பவர்கள்.
இட்டுகினு வா என்று பேசியதும்,
இசு (இழு) என்றதும்
புதிய கெட்ட வார்த்தைகளான (ஆண் குறி) (பிட்டம்)
போன்றவற்றின் அறிமுகமும்.
ஆட்டு மந்தையை கிட்டத்தில் பார்த்தது,ஆடு குட்டி போடுவதை பார்த்தது,
மரத்தில் போய் மாடு பிடித்தது.
கல்லா மண்ணா ,பம்பரம்,ஐஸ் பாய்,
பாண்டி ,காத்தாடி,கோலி,
வாயிலேயே பைக்,ஒட்டி பள்ளி சென்றது,பார்க் செய்தது.
கீரி பிள்ளை பார்த்தது.பெரிய கிணற்றை எட்டிப் பார்த்தது.
கிணற்றில் குதித்து இறந்த பெண்ணின் பிரேதத்தை அருகில் பார்த்தது.
போலீசை வெகு அருகில் பார்த்தது.

வண்ண தொலைக்காட்சியை பார்த்தது.
வைக்கோல் போருக்கு தீ வைத்தது.
அதை அக்கம்பக்கத்தார் அணைத்து .வேலைக்கு போய் திரும்பிய அம்மா வந்ததும் சொல்லித்தர அம்மா என் கையை உடைத்தது.

காட்சி மாறி

பல்லாவரம்

பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளி.
நான்காம் வகுப்பு, பவானி டீச்சர்.
பேரை சொல்லும் போதே எனக்கு ஒன்னுக்கு வருது (சாரி)
பேர்தான் பவானி
ஆனால் கிருஸ்துவர்
நல்ல பசங்களை மட்டும் தேடிபோய் அடிக்கும் ஒரு வித கிராக்கு,
வெள்ளையாய் இருப்பவன் உண்மை சொல்லமாட்டான்
என்பது இவரின் வாதம்.
புதுபேட்டை கேப்ஷன் "survival of the fittest" இந்த பள்ளிக்கு தான் பொருந்தும்
அரக்கத்தனமான மாணவர்கள்.
ரவுடிகளின் பிள்ளைகளோ என எண்ணக்கூடிய சூழல்.
அங்கு தான் ரௌதிரம் பழகினேன்.
இங்கு ஐந்தாம் வகுப்பு முடிக்கையில் எனக்கு தெரியாத கெட்ட வார்த்தைகளே இல்லை.

இங்கு தான் என் உயிர் நண்பன் சீனுவை பார்த்தேன்.
முதலில் கடுமையான சண்டை ,அவன் முகத்தை நான் பூரிய தடங்கள்,இன்னும் நினைவிருக்கிறது,
ராஸ்கல் இப்போ கூட கேட்டால் ஒத்துக் கொள்ள மாட்டான்.
அவன் தான் ஜெயித்தேன் என்பான்.
இருவரும் காசு கிடைத்தால் வாடகை சைக்கிள் எடுப்பது.
சிகரெட் குடிப்பது,சுருட்டு புகைக்க முயல்வது.
பாட்டு புத்தகம் வாங்கி படிப்பது.
பிராந்தி பாட்டில்,பீர் பாட்டில்,துண்டு கம்பி பொறுக்குவது.
காயலான் கடை சென்று போட்டு காசாக்குவது.
இப்போது தான் நான் மாமிசம் உண்ண கற்றேன்.
அவன் வீட்டில் தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டேன்.

என் அம்மா வேலைக்கு சென்ற காரணத்தால் என்னை ஒழுங்காக கண்காணிக்க முடியவில்லை.
என் சகோதரிகள் பாட்டி வீட்டில் படித்தனர்.
யாரும் கேட்க முடியாத சூழல்.
அதில் ஒரு அதிசயம் இன்னும் நானே முதல் ரேங்க் வாங்கியது.

1990
ஆறாம் வகுப்பு ,அடுத்த காம்பவுண்டு.

மறைமலை அடிகள் அரசினர் உயர்நிலை பள்ளி.
எந்த விதத்திலும் முன்னுக்கு சற்றும் மோசமில்லாத பள்ளி.
நுழைவு தேர்வில் வென்று இப்போது ஆங்கில மீடியத்தில்.

ஒரே கனவுதான் போங்கள்.அஷ்...பிஷ்.... என இங்கிலீஷ் பேசபோறோம் என்று.
விட்டனரா பாவிகள்?.
முதல் நாளே
அழகிய டீச்சரை எதிர்பார்த்து போன எனக்கு
ஆனந்த விகடனில் வந்த அப்புசாமியும் கார்டூன் பாத்திரத்தின் மனைவி போன்றே தோற்றமளிக்கும் மரகதம் டீச்சர்.
கடவுளே,அந்த கிழவிக்கு என் மேல் எந்த ஜென்ம பகையோ?
முதல் நாள் வருகை பதிவேட்டில் பெயர் படிக்கிறது.
எல்லோரும் "ப்ரெசென்ட் டீச்சர்" என்கின்றனர்.
என் நாக்கில் சனியன் புகுந்து "வணக்கம் டீச்சர்" என்றதே பார்க்கணும்?
என் மேல் நிலை பள்ளி வாழ்க்கை அன்றே ஆட்டம் கண்டது.
எந்த ஸ்கூல்?
சொன்னேன்..
ஏன் இங்கிலீஷ் மீடியம்?
சொன்னேன்.
அம்மாவை வரச் சொல்..
நிலைமையை சொன்னேன்.
முகத்திலேயே நெருப்பை கொண்டு வந்தது அந்த கிழ டயனோசார்.
அன்று முதல் பின்னேர்றமே.
பாடமும் புரியாது.
மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒரு பீமபுஷ்டி அல்வாவை போன்ற ஒரு நிலை.
ஒரு வழியாக 35 ஆம் ரேங்க் வந்து அதுவும் நின்றே போனது.

ஏழாம் வகுப்பு

எனக்கு ஏழாம் உலகம் தான் நினைவுக்கு வருகின்றது.
coed கிலாஸ் ஆதலால் மாணவிகள் தாவணி போட்டு வர ஆரம்பிக்க,
அப்போது தான் உதித்த இதெல்லாம் தவறில்லையாம்பா ரக பெண்களை பற்றிய சிந்தனைகள்,வர்ணனைகள் (இப்போது என் குடும்பம் ஸ்மூத் ஆக செல்வதால் இங்கு தடங்கலுக்கு வருந்துகிறேன் போடுகிறேன்.)
விடாத சினிமா பைத்தியம்,போக்கிரித்தனம் என்னை படிக்க
விடாமலே செய்தது.

வகுப்பை கட்டடித்து விட்டு பல்லாவரம் மலைக்கு தினமும் போய் ஷூட்டிங் பார்ப்பது,மிலிடரி கிணற்றில் போய் நீச்சல் பழகுவது
(இன்னும் பழகவில்லை)
எனக்கென ஏற்கனவே காத்திருந்த நண்பர்கள் கூட்டம்,
பெயிலாகி மீண்டும் படிக்க வந்த மாணவ நண்பர்கள் என என்னை பொறுக்கியாகவே மாறியது
என் சகோதரிகள் அருமையாக படித்தனர்.

நான் பள்ளியில் படிக்கும் போது செய்த ஒரே சாதனை

தீபாவளி நேரத்தில் பள்ளி இயங்குவதை கண்டித்து
எரியும் ஊதுபத்தியில் அடியில் பெரிய ஐந்து ருபாய் அணுகுண்டு வைத்து பிணைத்து,அதை 1964 முதல் மூத்திரம் ஊறிய கழிவறை சுவற்றில் வைத்து அந்த குண்டு பத்து நிமிடம் கழித்து வெடிக்க அந்த சுவர் சாய்ந்தது. ,சக நண்பர்கள் ராஜகோபால்,ராஜேஷ்,ராமசேஷன்,பிலிப், ஸடாலின்,ஜோதீஷ்
ஜெயகுமார் எனக்கு ஊக்கமும் பக்கபலமுமாக இருந்தனர்.
நாய்மகனே என மாணவர்களை கூப்பிடும் ஒரு வாத்தியை முறைத்து.
நாங்கள் எல்லோரும் "தாய் மகன் "என்றது.
சங்கரலிங்கம் என்னும் கேடுகெட்ட வாத்தியானுக்கு சப்போர்ட் செய்து காளிதாஸ் என்னும் உயர்நிலை வாத்தியாரை கும்பலாக முறைத்தது.
செருப்பு தூக்கி அடித்தது.

எதிரில் இருந்த போலீசு ஸ்டேஷனில் வாசலில் நடக்கும் திருடர் கொலைகாரர் போட்டோ செஷனை அடிக்கடிபோய் வேடிக்கை பார்த்தது.
பொங்கல் வாழ்த்து கரும்பு பானை அடுப்பு ,மற்றும் தீபாவளி நேர புசு வானத்தை ஒவ்வொரு வகுப்பு கரும்பலகையிலும் போய் வரைந்தது.
எச்சை பொறுக்கி கணக்கு வாத்தியாருக்கு எச்சில் துப்பி காபி கைகாசு போட்டு வாங்கி தந்தது.பீர் குடித்து விட்டு வகுப்புக்கு பெருமையாக போனது.
பான்பராக் மானிக் சந்த் மென்று திரிந்தது.

எலெக்ட்ரிக் ட்ரைனில் வித்தவுட் டிக்கட்டில் நினைத்த இடமெல்லாம் போனது.
அப்போது பார்த்த alexandra,two moon junction,point of seduction,cave girl island,emma,
போன்ற கருத்தாழமிக்க ஆங்கில படங்கள்.

மருதம்,பருவகாலம்,முதல் டிபோநேர்,பாண்டசி,வரை மறைத்து படித்தது ,ஒரே நாளில் பிள்ளையார் படம் கேட்போருக்கு பிள்ளையார் படமும்
நிர்வாண படங்கள் கேட்போருக்கு நிர்வாண படமும் என்று வரைந்து தந்தது.

அடி அடியென அடிக்கும் பால்ராஜ் வாத்தியாரிடம் ட்யூஷன் சேர்ந்து பரீட்சை நேரத்தில் மட்டும் படித்து ,பிட் அடித்து பாஸ் செய்தது.

தளபதி,குணா பார்த்து யார் பெரியவர்? என அடித்துக்கொண்டது.

1994

கடவுளின் பரிபூரண ஆசியினால் பொது தேர்வில் 55 சதம் எடுத்து பாஸ் பண்ணியது.
(என் சகோதரிகள் இருவருமே மாவட்டத்திலேயே முதலாக வந்தவர்கள்.)

அந்த பள்ளியில் படிக்காமல் டிசி வாங்கிக்கொண்டு
கண்டிப்பில் சீர்திருத்த பள்ளியையும் மிஞ்சும்
ஜெயின் தொழிற்பயிற்சிகூடத்தில் போய் இரண்டு வருடம் draftsman civil படித்தது.

1996

பதினேழு வயதில் draftsman வேலைக்கு போனது.
2001
பார்ட் டைம் டிப்ளோமா சேர்ந்து படித்தது,என ..
2009
இப்போது நினைக்கையில் வலிக்கிறது

Professional degree முடிக்காததால்.

அன்று மட்டும் நன்றாய் படித்திருந்தால்?
என மூச்சு வாங்க முடிக்கிறேன்.

இந்த வருடங்களில் எங்கள் இசைஞானியை இடையிடையே மறந்தும் போனேன்.

நண்பர்களே மிக நீண்ட நடை ஆகவே என்னை மன்னித்துக் கொண்டே படிக்கவும்.
நான் கேள்விப்பட்டவரையில் எல்லோருமே இந்த தொடர்பதிவை எழுதிவிட்டமையால் யாரை கூப்பிடுவது? என தெரியாமல்,
இப்போதைக்கு ஆறப் போடுகிறேன்.
இது ஒரே மூச்சில் எழுதியபடியால் அவசர நடையில், படிக்க முடியாமல்
போகக் கூடிய வாய்ப்பு உண்டு.
இருந்தும் நண்பனுக்காக படியுங்கள்.

23 comments:

கலையரசன் சொன்னது…

அருமையான பள்ளி நினைவுகளை ஒரே மூச்சில்
சொல்லிவிட்டீர்கள் கார்த்தி! சில பேர் எழுத
பயம் கொள்ளும் அனுபவத்தை கூட, போகிற
போக்கில் சொல்லிவிட்டீர்கள்!

உங்கள் பதிவு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது,
பாயின்ட் பை பாயின்டாக உங்களின் பள்ளி அனுபவத்தை
எழுதியிருந்தீர்கள்!!

வினோத்கெளதம் சொன்னது…

கார்த்தி,

ரொம்ப அப்பட்டமா அப்படியே உள்ளது உள்ளப்படியே எழுதி இருக்கீங்க..
என்ன சொல்லுறது அப்படியே எதோ ஒரு அதிர்வலையை ஏற்ப்படுதின மாதிரி இருக்கு..நல்லா படிச்சும் நிறையா பேர் வாழ்கையில ஜெய்க்க முடியமா போய் இருக்காங்க..ஆனா நீங்க ஜெய்ச்சு இருக்கீங்க.(கொஞ்சம் விக்ரமன் படம் டயலாக்
மாதிரி தான் இருக்கு என்ன பண்ணுறது)

//அுமினியம் பெட்டியும் சிகப்பு ட்ரவுசர் மற்றும் வெள்ளை சட்டை ,சிகப்பு டை என குதிரை வண்டியில் போய் வந்த நினைவுகள்,//

//முதல் முதலாக எங்கள் சாலிடர் டிவி வாங்கி ஊரே வந்து நிகழ்ச்சி பார்க்க நான் அவர்களை முறைக்க,//

//ரப்பர் பந்தை கழிவறை கோப்பையில் போட்டு எடுக்க முயன்றது.//

இதே மாதிரி சில விஷயங்கள் நானும் கடந்து வந்து இருக்கேன்.

அபடியே உங்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

கலை கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி.
இது தான் சில அரசு பள்ளிகளின் நிதர்சனம். படிப்பை போதிக்கா விட்டாலும் பண்பையாவது போதிக்கலாம்.எங்கே?
வாத்தியாரே ஒகுங்கு இல்லை.(உட்பூசல்)(மாணவிகளிடம் சில்மிஷம்)
என இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.எத்தனை பேருக்கு எனக்கு கிடைத்த மாதிரி கிளைமாக்சில் நல்ல பாதை கிடைத்திருக்கும்.(என் பழைய நண்பர்களை பற்றி எழுதவே மிகவும் வருத்தமாக இருக்கிறது)
ரிசர்வாயர் டாகிற்கான பெயர்காரணம் அருமை,அதை கொஞ்சம் கருத்திலும் இட்டால் அப்படியே சேர்த்துவிடுவேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

வினோத்
கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி,
இதில் சொல்லாமல் விட்டது தான் இன்னும் அதிகம்.
ஒரு பதினைந்து வருடம் பற்றி சொல்லவில்லை.
அதெற்கென்ன
யாராவது ஒரு கல்லூரி வாழ்க்கைக்கு பின் என்று
ஒரு தொடர்பதிவு போட்டால் போச்சு.
என்ன சரியா?
நீங்களே யாரேனும் பதிவர்களை தொடர்பதிவுக்கு
அழைக்க காட்டி விட்டால் நலம்.

தனசேகரும் சென்னை மாநகரமும் சொன்னது…

நீ

"என்னை போல் ஒருவன்"

உன்னை நீனைத்தால் பாரதியார் கவிதை தான் நீனைவுக்கு வருகிறது.

"தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ"

உன்னால் முடியும் என்று நம்புவன் நீ,என்னகு தெரியும்.

என்னகு தெரியும்

"என்னை போல் ஒருவன்"

நீ

நாகா சொன்னது…

வாழ்த்த வார்த்தைகளில்லை கார்த்தி..!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

முதல் வருகை,
நண்பர் நாகா ,வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.அடிக்கடி வாங்க.

நாகா சொன்னது…

//அப்போது பார்த்த alexandra,two moon junction,//

மறக்க முடியாத காவியங்கள் :) Divine Lovers என்றொரு படமும் அப்போது எங்கள் ஊரில் சக்கை போடு போட்டது..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நாகா,
கண்டிப்பா Divine Lovers
என்ன படம் அது.?
அப்புறம் a surrogate woman , two to tango ,oh babylon, இன்னும் பல எனக்கு கொஞ்சம் யோசிச்சா ஒவ்வொரு ஞாயிறும் 9-30 ஸ்பெஷல் ஷோ பார்த்தவை பசுமையா நினைவிருக்கு.
மற்றும் மலையாள டைரக்டர் "jai te van"(ஜெய தேவனாமா) அந்த ஆல் எடுத்த படம்.
அதுல அந்த வெற்றியும்,இன்னொரு வில்லன் கிழமும் கண்டிப்பா இருக்கும்.

☀நான் ஆதவன்☀ சொன்னது…

கார்த்திகேயன் படிக்கிற எனக்கே மூச்சு வாங்குது போங்க...

பயங்கர டெரரா இருக்கே உங்க நினைவுகள் :)

எங்களுக்கும் ஒரு சிறிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கு.

சென்ஷி சொன்னது…

வணக்கம்ண்ணே.. தொலைபேசியில தொடர்பு கொள்கிறேன் :)

jackiesekar சொன்னது…

நல்ல பகிர்வு... கொசுவத்தி சுத்தறப்ப என்னா சொகம்???

கோபிநாத் சொன்னது…

தல

நீ கடந்து வந்த பாதையில் உன் பின்னால் வந்தவன் (நீங்க சென்னைக்கு வந்த பிறகு) இதுதான் நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை...கொஞ்சம் மிஸ் பண்ணிட்டோம் அம்புட்டு தான்...எப்படியும் நாம மேல வந்துடுவோம் தல ;))

அருமையான எழுத்து நடை உங்களுடையது ஆனா என்ன அதை எப்படி போட வேண்டும் என்பது தான் பிரச்சனை. அப்படியே போடமால் கொஞ்சம் நடுவுல நடுவுல இந்த enter கீயை அழுத்தி போட்டுயிருந்தா கலக்கலாக இருக்கும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

தலை...கோபி ஒன்னும் பீல் பண்ணாதீங்க ....

இசைஞானி பற்றி ஒரு பதிவு பாத்தேன் நீங்களும் பாருங்க...நம்ம
தல கானா பிரபா கிட்டையும் சொல்லுங்க http://www.envazhi.com/?p=9701

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் சென்ஷி
முதல் வருகைக்கு நன்றி...
உங்க படைப்புக்கள் எல்லாம் ரொம்ப அருமை...
என் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள்..
நாங்களும் யூத்துதான்
நீங்க நம்பர் குடுங்க நான் போன் பண்ணறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் ஆதவன்
கருத்துக்களுக்கு நன்றி ...
உங்க படைப்புக்கள் படிக்கிறேன்...
கருத்து போடுகிறேன்..
நம் எல்லோருக்கும் "same blood" பள்ளி விஷயத்தில்...
btw நீங்க இந்த பதிவு எழுதிட்டீங்களா?
உங்களை கூப்பிட்டுக்கட்டுமா?
போன்ல சொல்லுங்க...என்ன

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

வாங்க குரு ஜாக்கி சேகர்..
ரொம்ப சுகமான சுமைங்க அது...
நீங்க பாண்டி இல்லையா?
தாக்கம் அதிகமாவே இருக்கும்..
தொடர் ஆதரவுக்கு நன்றிங்க..

அது ஒரு கனாக் காலம் சொன்னது…

கார்த்தி ( இப்படி அழைக்கலாமா ), என்னமா எழுதிருக்கீங்க ... உண்மை தெரிகிறது, அனுபவம் எப்போதுமே கை குடுத்து தூக்கி விடும், ...அது நிதர்சனமாக தெரிகிறது... சந்திப்போம் கூடிய சீக்ரம்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

வாங்க ...வணக்கம் சுந்தர் சார்.ரொம்ப நன்றி சார் உங்கள் ஊக்கத்துக்கு

நீங்க என்னை பேரு சொல்லி என்ன?..
நீ,வா. போ,ன்னே கூப்பிடலாம்.
சண்டே பாப்போம் சார்.

Joe சொன்னது…

இடைவெளியே இல்லாமே இப்படி எழுதித் தள்ளிருக்கீங்களே?

பத்திகளுக்கு நடுவே இடைவெளி விட்டு எழுதவும்,

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

நண்பர் joe ,உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்.
பழக்க தோஷம்,
விட்டு விட முயற்சிக்கிறேன்..

ச.செந்தில்வேலன் சொன்னது…

அருமையான பதிவு கார்த்திக்..

உங்களது இளமைக்காலத்தை அப்படியே படம் போட்டுக் காட்டுயுள்ளீர்கள். மிகவும் பட்டறிவுள்ள ஒருவரின் (உங்களின்) நட்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

அருமையான பதிவு கார்த்திக்..

உங்களது இளமைக்காலத்தை அப்படியே படம் போட்டுக் காட்டுயுள்ளீர்கள். மிகவும் பட்டறிவுள்ள ஒருவரின் (உங்களின்) நட்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே!!//
நண்பர் செந்தில்வேலன்
என்ன சொல்லுவது ?
அது என் பாக்கியம்
ரொம்ப நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)