மிஸ்டிக் ரிவர் (புதிரான நதி) (அ ) (மர்மமான நதி)
பாவம் ஓரிடம் ,பழி ஓரிடம் என்பார்களே,அதை பழமொழியில் மட்டுமே அறிந்த நாம் இப்படத்தை பார்க்கையில் கண்கூடாக உணர்கிறோம்.இந்த படம் அமைதியான,அழகான ,அற்புதமான ஒரு உணர்ச்சி காவியம். போஸ்டன் நகரின் அழகிய குடியிருப்பின் விடுமுறை தின சாலை.Sean Devine, Jimmy Markum, மற்றும் Dave Boyle என்னும் மூன்று சிறுவர்கள் தெருவில் ஹாக்கி ஆடிக்கொண்டிருக்க,அருகில் அப்போது தான் போடப்பட்ட சிமெண்டு நடைபாதை பூச்சில் Jimmy ஆசையுடன் தன் பெயரை எழுத,Sean தொடர,Dave எழுதுகையில் காரில் இருந்து இறங்கிய ஒரு மப்டி உடை போலீஸ் அதிகாரி அவர்களை திட்டி விட்டு Dave ஐ மட்டும் காரில் ஏற்றி கூட்டி செல்கிறார்.
பாவம் ஓரிடம் ,பழி ஓரிடம் என்பார்களே,அதை பழமொழியில் மட்டுமே அறிந்த நாம் இப்படத்தை பார்க்கையில் கண்கூடாக உணர்கிறோம்.இந்த படம் அமைதியான,அழகான ,அற்புதமான ஒரு உணர்ச்சி காவியம். போஸ்டன் நகரின் அழகிய குடியிருப்பின் விடுமுறை தின சாலை.Sean Devine, Jimmy Markum, மற்றும் Dave Boyle என்னும் மூன்று சிறுவர்கள் தெருவில் ஹாக்கி ஆடிக்கொண்டிருக்க,அருகில் அப்போது தான் போடப்பட்ட சிமெண்டு நடைபாதை பூச்சில் Jimmy ஆசையுடன் தன் பெயரை எழுத,Sean தொடர,Dave எழுதுகையில் காரில் இருந்து இறங்கிய ஒரு மப்டி உடை போலீஸ் அதிகாரி அவர்களை திட்டி விட்டு Dave ஐ மட்டும் காரில் ஏற்றி கூட்டி செல்கிறார்.
இரு சிறுவர்களும் தங்கள் பெற்றோரிடம் சென்று நடந்ததை முறையிடுகின்றனர்.காட்சி மாறுகிறது :-இரு "pedophiles " தன்மை கொண்ட போலீஸ்காரர்களும் Dave ஐ நான்கு நாட்களாக பேஸ்மென்டில் அடைத்து,பாலியல் பலாத்காரம் செய்ய அவன் அழுது கதறி அவர்களிடமிருந்து சுதாரித்து காட்டுக்குள் ஓடி தப்பிக்கிறான்.
காட்சி மாறுகிறது :-
இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்து.போஸ்டன் நகரின் அழகிய குடியிருப்பின் விடுமுறை தின சாலை.இவர்கள் இன்னும் போஸ்டனிலேயே வசிக்க,ஜிம்மி(Sean penn) ஒரு முன்னாள் சிறை கைதி,இந்நாள் உள்ளூர் தாதா.தமக்கு பிடிக்காதவரை கொலை செய்து ஊருக்கு அருகே ஓடும் ஆற்றில் வீசிவிட்டு,இறந்தவர் குடும்பத்த்துக்கு மாதம் 500 டாலர் மணி ஆர்டர் அனுப்பும் வித்தியாசமான தாதா.பொழுதுபோக்காக சூப்பர் மார்கெட்டும் நடத்துகிறார்.
இருபத்தி ஐந்து வருடங்கள் கழித்து.போஸ்டன் நகரின் அழகிய குடியிருப்பின் விடுமுறை தின சாலை.இவர்கள் இன்னும் போஸ்டனிலேயே வசிக்க,ஜிம்மி(Sean penn) ஒரு முன்னாள் சிறை கைதி,இந்நாள் உள்ளூர் தாதா.தமக்கு பிடிக்காதவரை கொலை செய்து ஊருக்கு அருகே ஓடும் ஆற்றில் வீசிவிட்டு,இறந்தவர் குடும்பத்த்துக்கு மாதம் 500 டாலர் மணி ஆர்டர் அனுப்பும் வித்தியாசமான தாதா.பொழுதுபோக்காக சூப்பர் மார்கெட்டும் நடத்துகிறார்.
Dave (tim robbins) ஒரு பாக்டரி தொழிலாளி,சிறு வயது கொடூர நினைவலைகளால் அன்றாடம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்.ஜிம்மியும் DAVEம் அக்கா தங்கையை மணம் புரிந்திருந்தாலும் சிறு வயது நினைவுகளால் DAVE, ஜிம்மியுடன் பேசுவதில்லை.ஜிம்மியின் முதல் மனைவி கேன்சரால் இறந்து போக ,(அப்போது ஜிம்மி சிறையில் இருந்தமையால் வர முடியவில்லை)இவர் இரண்டாம் திருமணம் செய்து முதல் மனைவிக்கு பிறந்த 19 வயது கேட்டி ,இரண்டாம் காதல் மனைவிக்கு பிறந்த இரு சிறு பெண் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஊரில் எல்லோருக்கும் இவர் சிம்ம சொப்பனம் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் கேட்டி ரகசியமாக பிரெண்டன் என்னும் இளைஞனை காதலிக்கிறாள்.தன் அப்பாவுக்கு அவனையும் அவர்கள் குடும்பத்தையும் பிடிக்காது என்பதால்,அவனுடன் லாஸ் வேகாஸ் ஓடிப் போய் திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள்.கடைசி நாளை தன் தோழிகளுடன் செலவிட எண்ணி ,பாருக்கு செல்கிறாள்,குடித்து ஆட்டம் போடுகிறாள்,அவளை DAVE பார்க்கிறான்.அன்று இரவே கேட்டி கொடூரமாக சுடப்பட்டும் ஹாக்கி மட்டையால் அடித்தும் கொல்லப்படுகிறாள்.
DAVE தன் கையில் வெட்டு காயத்துடனும் சட்டை முழுக்க ரத்தக் கறையுடனும் வீடு வர,அவன் மனைவி பதறி அடித்துக் கொண்டு முதலுதவி செய்கிறாள்,அவளிடம் DAVE தான் ஒரு "pedophile" ஐ அவன் காரில் வைத்து சிறுவனை பலாத்காரம் செய்யும் போது தடுக்கையில்,ஏற்பட்ட கைகலப்பில் கொன்று விட்ட தாக கூறுகிறார்.இதை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்கிறார்.
காட்சி மாறுகிறது :-
அன்றைய ஞாயிறு பரபரப்பாக படு துயரமாக விடிகிறது,கேட்டியை பிணமாக பார்த்த ஜிம்மியும் ,அவனது அடியாட்களும் ஊரெங்கும் கொலையாளியை தேடி வெறியுடன் அலைய. மனைவியை பிரிந்த SEAN (Kevin Bacon) இப்போது மச்சசுவெட் மாகாண போலீசில் ஒரு டிடக்டிவ் அதிகாரி ,கேட்டி யின் கொலை வழக்கை தன் சக அதிகாரி லாரன்சுடன் தீவிரமாக விசாரிக்கிறார்.அவ்வப்பொழுது இவருக்கு மர்ம தொலைபேசி அழைப்புகள் வருகிறது,யாரும் பேசாமல் மவுனம் காக்க,இவர் அது தன் மனைவி என கண்டு பிடிக்கிறார்.
அவரின் மனைவி விட்டுப் பிரிகையில் நிறை மாத கர்ப்பமாக இருந்தார்,இப்போது அவருக்கு குழந்தை பிறந்திருக்க கூடும்.ஆனால் பிறந்தது ஆணா ,பெண்ணா என்று கூட இவருக்கு அவள் சொல்லவில்லை.இரு அதிகாரிகளும் திறமையாக துப்பு துலக்கி ஒவ்வொருவரையும் சந்தேகித்து நெருங்குகின்றனர்.கூடவே தாதா ஜிம்மியும் தன் சகாக்களுடன் அவருடைய பாணியில் விசாரிக்கிறார்.போலீஸ் குற்றவாளியை கண்டு பிடிப்பதற்கு முன் தான் அவனை கொல்லவேண்டும் என நினைக்கிறார்.
Sean கேட்டியை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி குண்டு 1980 ஆம் வருடம் நடந்த ஒரு பார் கொள்ளை யில் சம்மந்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்து.அதற்க்கு உரிமையாளன் "Just Ray" Harris,
அவன் பத்து வருடங்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ளான்,அவன் பெயரில் மாதம் 500 டாலர் மணிஆர்டர் அவன் வீட்டிற்கு வருவதையும் கண்டு பிடிக்கின்றனர்.அவன் மகன் தான் கேட்டி காதலித்த பிரெண்டன் என்றும் கண்டு பிடித்து அவனை நெருங்குகின்றனர்.ஜிம்மிக்கும் "Just Ray" Harris, க்கும் கொள்ளை தொழிலில் நட்பு இருந்து,பின்னர் பகையாக மாறியது,அந்த பகையால் தன் அப்பாவின் எதிரியை பழிதீர்க்க இந்த சந்தர்பத்தை பிரெண்டன் பயன் படுத்தியிருப்பான் என சந்தேகிக்கிறது.
அவனை அழைத்து விசாரிக்கிறது ,துப்பாக்கி எங்கே?என கேட்கிறது.பின்னர் விட்டு விடுகிறது,லாரன்சுக்கோ DAVE மீது சந்தேகம் வருகிறது.கேட்டியை கடைசியாக உயிருடன் பார்த்ததில் DAVE உம் ஒருவர்.DAVE ஐ விசாரிக்கையில் கையில் எப்படி காயம்பட்டது? என கேட்கையில்,குப்பை அள்ளி கொட்டும் போது காயம் பட்டது என DAVE சொன்னதால் அவரையும் சந்தேகிக்கிறது.அவரையும் கூட்டிப்போய் விசாரிக்கிறது.பின்னர் விட்டு விடுகிறது,
காட்சி மாறுகிறது :-
அன்று இரவு,DAVE தன் வீட்டில் மனைவியிடமும் மகனுடனும் வித்தியாசமாகவும்,கோபமாக நடந்து கொள்ள,வாக்குவாதம் வலுக்கிறது , சிறிது நேரம் கழித்து DAVE அடங்கி எனக்குள் ஒருவன் புகுந்து என்னென்னவோ செய்கிறான்.அவன் உங்களை கொன்றாலும் கொன்று விடுவான்,ஆகவே இன்று வெளியே ஓட்டலில் போய் தங்குங்கள். என்று அழுத படி சொல்ல. இவள் ஓட்டலில் போய் இரவை கழிக்கிறாள். மறுநாள் தன் தங்கையின் கணவர் ஜிம்மியை பார்த்து அழுதபடி இந்த விஷயத்தையும்,தன் கணவர் ரத்தக்கறையுடன் வீடு வந்ததையும் விவரித்து கேட்டியை அவர்தான் கொன்றிருப்பார்,என தனக்கு சந்தேகம் உள்ளதாக சொல்லுகிறாள்.ஜிம்மி ஆத்திரத்தில் துடிக்கிறார்.கருவுகிறார்.
காட்சி மாறுகிறது :-
பல கட்டத்தில் ,இடத்தில், நடக்கும் காட்சிகளை ஒருங்கிணைத்து கட்டுக்கோப்பும் ,புதிருடனும் இயக்குனர் அளித்திருக்கிறார்.
பல கட்டத்தில் ,இடத்தில், நடக்கும் காட்சிகளை ஒருங்கிணைத்து கட்டுக்கோப்பும் ,புதிருடனும் இயக்குனர் அளித்திருக்கிறார்.
காட்சி-1
ஜிம்மியும் அவன் நண்பர்களும் DAVE ஐ கூடிக் கொண்டு பார் சென்று குடிக்கின்றனர்.DAVE க்கு போதை தலைக்கேற காத்திருக்கின்றனர்.பாருக்கு வெளியே ஆற்றுக்கு அருகே கூட்டி வருகின்றனர்.DAVE அளவு கடந்த போதையால் வாந்தி எடுக்கிறார்.அவரிடம் தன் முன்னாள் நண்பன் "Just Ray" Harris உடன் சேர்ந்து திருடப் போன இடத்தில் இவரை சாமர்த்தியமாக போலீசில் மாட்டி விட்டதால் ,அவரை தானே சுட்டு கொலை செய்து ஆற்றில் வீசியதாகவும்,
தன் துரோகிகளை எப்போதும் அவர் அப்படித்தான் கொல்வதாகவும் சொல்கிறார்.மிரண்டு போன DAVE ஐ நோக்கி,என் மகளை நீதான் கொன்றாய் என எனக்கு தெரியும்,நீயாக ஒத்துக்கொண்டாய் என்றால் நான் உன்னை உயிரோடு விட்டு விடுவேன்,
ஜிம்மியும் அவன் நண்பர்களும் DAVE ஐ கூடிக் கொண்டு பார் சென்று குடிக்கின்றனர்.DAVE க்கு போதை தலைக்கேற காத்திருக்கின்றனர்.பாருக்கு வெளியே ஆற்றுக்கு அருகே கூட்டி வருகின்றனர்.DAVE அளவு கடந்த போதையால் வாந்தி எடுக்கிறார்.அவரிடம் தன் முன்னாள் நண்பன் "Just Ray" Harris உடன் சேர்ந்து திருடப் போன இடத்தில் இவரை சாமர்த்தியமாக போலீசில் மாட்டி விட்டதால் ,அவரை தானே சுட்டு கொலை செய்து ஆற்றில் வீசியதாகவும்,
தன் துரோகிகளை எப்போதும் அவர் அப்படித்தான் கொல்வதாகவும் சொல்கிறார்.மிரண்டு போன DAVE ஐ நோக்கி,என் மகளை நீதான் கொன்றாய் என எனக்கு தெரியும்,நீயாக ஒத்துக்கொண்டாய் என்றால் நான் உன்னை உயிரோடு விட்டு விடுவேன்,
இல்லை என்றால் உன்னையும் சுட்டு ஆற்றில் போட்டு விடுவேன்.என்று சொல்ல DAVE தான் அன்று வேறு ஓரு "pedophiles " ஐ தான் அடித்துக் கொன்றதாகவும் அவர் மகள் எப்படி இறந்தாள்?என்று தெரியாது என சொல்லி. மரண பயத்தில் மேலும் வாந்தி எடுக்கிறார்.DAVE எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவரை அடித்து துவைக்கின்றனர் அல்லக்கைகள்.மரண பயம் கொண்ட DAVE அடி தாங்காமல்.ஒருகட்டத்தில் தான் செய்யாத அவரின் மகளின் கொலையை செய்ததாக ஒத்துக் கொள்கிறார்.
ஜிம்மிக்கு வந்த கோபத்தில் அவரை வயிற்றில் கத்தியால் குத்தி குடலை உருவி,ஆத்திரம் அடங்காமல் குற்றுயிராய் கிடக்கும் அவரை மண்டையில் சுட்டு பின் ஆற்றில் தூக்கிப் போட்டு ,
பின்னர் எல்லோரும் கலைகின்றனர்.
காட்சி-2
DAVE இன் கொலை நடக்கையிலேயே , போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்த பிரெண்டன் தன் தந்தையின் அலமாரியில் பொருட்களை குடைய துப்பாக்கி கிடைக்கிறது.அவனுக்கு தன் ஊமை சகோதரன் மேலும் அவனின் துடுக்குத்தனமான நண்பன் மீதும் சந்தேகம் வர ,அவர்கள் வீட்டுக்கு வந்ததும் மடக்கி பிடித்து,கேள்வி கேட்டு அடிக்க ,அவர்கள் அடித்த அடியில் உண்மையை ஒத்துக் கொள்கின்றனர். அதற்குள் அந்த துடுக்குத்தனமான நண்பன் துப்பாக்கியை காட்டி பிரெண்டனை மிரட்டி ட்ரிக்கரை அழுத்த ,போலீஸ் காரர்கள் Sean ம் லாரன்சும் உள்ளே பாய்ந்து வந்து அவனை காலில் சுட்டு பிடிக்கின்றனர்.
(சிறுவர்கள் துப்பாக்கியை எப்படி உபயோகிப்பது ?என பரிட்சிக்க அன்று நாடு இரவு தனியாக வந்த கேட்டியை துரத்தியதாகவும்,அவளை தோளில் சுட்டும் அவள் சாகாமல் தப்பித்து ஓடியதால் துரத்திப்போய் ஹாக்கி மட்டையால் அடித்து (சைக்கோ கொன்றது போல செட்டப்)கொன்றதாகவும் சொல்ல போலீஸ் அதிர்கிறது.)பாவம் ஓரிடம் ,பழி ஓரிடம்!!!!
காட்சி மாறுகிறது :-
மறுநாள் Sean ஜிம்மியின் வீடு சென்று , கேட்டியின் கொலையாளிகளை பிடித்து விட்டதையும் ,அவர்கள் யார் என்றும் சொல்ல ஜிம்மி அதிர்கிறான்.பின்னர் இவ்வளவு சீக்கிரம் கொலையாளிகளை பிடித்ததற்கு நன்றி சொல்லுகிறான்.Sean ஜிம்மியிடம் DAVE காணமல் போன விஷயம் சொல்லி,அவன் எங்கே இருக்கிறான் ?என தெரியுமா?என்று கேட்டு மேலும் ஒரு ஊரறிந்த "pedophiles " கொலையுண்டான் என்றும் அது குறித்து DAVE ஐ சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று சொல்ல. ஜிம்மி நிலை குலைகிறான்.அப்பாவியை தண்டித்து விட்டோம் என்று குமைகிறான்.ஜிம்மி சுதாரித்து மீண்டும் தமக்கொன்றும் தெரியாது என்கிறான். பின்னர் Sean ஐ நோக்கி நீ கொஞ்சம் வேகமாக கொலையாளிகளை கண்டு பிடித்திருக்கலாம்.என்று குறிப்பால் எதையோ உணர்த்த. Sean உண்மை புரிந்து .நீ DAVE மனைவி "celesty" கும் அதே 500 டாலரை மணி ஆர்டர் அனுப்பப் போகிறாயா?என்று வெறுப்புடன் கேட்டு விலகுகிறான்.
ஜிம்மி வீட்டில் தன் மனைவியிடம் அழுது புலம்பி, பின் தற்கொலைக்கு முயல்கிறான்.மனைவி அவனை உதட்டில் முத்தமிட்டு தேற்றி ,ஜிம்மி அப்போது கோபத்தில் கொலை செய்திருந்தாலும் ,தன் பெற்ற மகளுக்காக செய்ததால் எப்போதும் குற்றஉணர்வு கொள்ள வேண்டாம்,என்று கூறி படுக்கையில் தள்ளி சல்லாபித்து அமைதி படுத்துகிறாள்.(என்ன ஓரு சண்டாள மனைவி?) ஆறுதல் கண்ட ஜிம்மி இந்த மாதமே DAVE இன் வீட்டிற்கும் 500 டாலர் மணியார்டர் அனுப்ப முடிவெடுக்கிறான்.
மறுநாள்,DAVE இன் மனைவி ஆறாத்துயருடன்,தன் கணவன் இறந்து விட்டான் ஆனால் பிரேதம் கிடைக்க வில்லையே?!!! என்று ஜிம்மியை தேடி போய் கெஞ்ச,அவன் தமக்கு தெரியாது என்கிறான்.ஊரில் உள்ள ஒவ்வொருவரையும் சென்று கெஞ்சுகிறாள்.பின்னர் DAVE இனிமேல் வீட்டுக்கு வரமாட்டான் என்று முடிவெடுக்கிறாள்.மகனுக்கு என்ன பதில் சொல்வேன்?என்று புலம்புகிறாள்.தன் மகன் அப்பா இறந்தது தெரியாமல் அவன் வயதிற்கே உரிய ஆர்வத்தில் போலீஸ் பேண்டு வண்டியில் உற்சாகமாய் போவதை பார்க்கிறாள்.கத்துகிறாள்,ஆனால் அவனுக்கு கேட்கவில்லை. பாவம் "celesti".புத்தி பேதலிக்கிறாள்.அப்போது போலீஸ் பேண்ட் அணிவகுப்பு இவர்கள் பகுதிக்குள் நுழைகிறது ,ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியில் வந்து நின்று உற்சாகப்படுத்தி வரவேற்க,Sean தன் மனைவி,மகளுடன் இப்போது ஒன்றாக சேர்ந்து விட்டான்,அவர்களுடன் பேண்டை வேடிக்கை பார்க்க.ஜிம்மி தன் மனைவி மக்களுடன் தன் வீட்டு வாசலில் வந்து நின்று வேடிக்கை பார்க்க.
Sean ஜிம்மியை நோக்கி வெறும் கையால் சுடுவது போல பாவனை செய்கிறான்.(உன்னை சாட்சியங்களுடன் பிடிப்பேன் என்பது போல்) ஜிம்மி அலட்சியமாக "முடிந்தால் பிடித்துக்கொள்" என்னும் தொனியில் தன் குளிர் கண்ணாடியை அணிந்து கொள்கிறான்.படம் இனிய பின்னணி இசையுடன் முடிகிறது.இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால்? ஹாளிவூடின் நடிகர் திலகம் என புகழ் பெற்ற க்ளின்ட் ஈஸ்ட்வூட் இந்த அருமையான படத்தில் தான் நடிக்காமல் அடுத்தவரை நடிக்க செய்து அழகு பார்த்தது தான்.என்ன பெருந்தன்மை.இப்போது தான் புரிகிறது?இவர் எப்படி நான்கு ஆஸ்கர் வென்றார்? என்று. நிறைகுடம்.
Directed by | Clint Eastwood |
---|---|
Produced by | Clint Eastwood Robert Lorenz Judie G. Hoyt |
Written by | Novel: Dennis Lehane Screenplay: Brian Helgeland |
Starring | Sean Penn Tim Robbins Kevin Bacon Laurence Fishburne Marcia Gay Harden Laura Linney |
Music by | Clint Eastwood |
Cinematography | Tom Stern |
Editing by | Joel Cox |
Studio | Village Roadshow Pictures Malpaso Productions |
Distributed by | Warner Bros. |
Release date(s) | October 15, 2003 |
Running time | 137 min. |
Country | United States |
Language | English |
Budget | $30,000,000 |
Gross revenue | $156,822,020 |
co-produced and scored by Clint Eastwood, and starring Sean Penn, Tim Robbins, Kevin Bacon, Laurence Fishburne, Marcia Gay Harden, Laura Linney and Emmy Rossum.
The film was written by Brian Helgeland,
based on the novel of the same name by Dennis Lehane.
The film opened to widespread critical acclaim.
It was nominated for six Academy Awards: Best Picture, Best Director, Best Actor, Best Adapted Screenplay, Best Supporting Actor, and Best Supporting Actress. Sean Penn won Best Actor and Tim Robbins won Best Supporting Actor.
திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி இதோ.
நன்றி விக்கிபீடியா , நன்றி யூடியூப் ,நன்றி கூகுள்