நோ கன்ட்ரீ பார் ஓல்டு மென் (18+) 2007 (முதியவர்களுக்கு காலமில்லை )








அங்கீகரித்தமைக்கு நன்றி

:யூத்ஃபுல் விகடன்



இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக  ஹாலிவூடின் "perfection" வகை திரைப்பட பிரம்மாக்கள்.பளாக் ஹுயூமர் ராஜாக்கள்.
சகோதர இயக்குனர்கள் .கோயேன் பிரதர்ஸ்,இவர்கள் படைப்புகள் நம்மை யூகிக்க தூண்டுபவை. அப்படி இருக்குமோ?

இப்படி இருக்குமோ? என்று  நம்மை குழப்புபவை,ஆனால் பிடிப்பவை.


என்ன அழகாக செயற்கை பின்னணி இசையே இல்லாமல்,
கார்மக் மெக்கார்த்தியின் நாவலை சுவை குறையாமல் படமாக்கியுள்ளனர்?
ஷூ ஓசை,வாகன உறுமல்,நாய் உறுமல்,ரேடியடர் சத்தம், போன்றவை மட்டும் உபயோகித்து இந்த அற்புத படைப்பை தந்து 4ஆஸ்கரும் வாங்கியிருக்கிறார்கள்?
நம்மை கதை செல்லுமிடமெல்லாம் கூட்டி செல்லும் காமிரா கோணங்கள்.
அருமையான எடிட்டிங்.என்று ஒவ்வொரு பிரேம்களையும் பார்த்து பார்த்து
செதுக்கிய தரம்.

ய்வு பெற்ற முன்னாள் ஷெரீப் டாம் பெல் (Tommy Lee Jones) தாம் கண்ட மிக கொடூரமான சம்பவங்களை நமக்கு பகிர்வது போல (narration storyline)அமைந்துள்ளது.

எண்பதுகளின் மேற்கு டெக்சாஸ் மாகணத்தில் படம் துவங்குகிறது.
முன்தினம் இரவு பாரில் நடந்த கொலைக்காக சந்தேகத்தின் பேரில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட சிகர் (javier bardem)
ஒரே போலீஸ்காரர் கொண்ட போலீஸ் ஸ்டேஷனில்
போலீஸ்காரர் தன் மேலதிகாரிக்கு தொலைபேசுகையில் தன் கை விலங்கால் அவர் கழுத்தை நெரித்து கொன்று பின்னர் தன் பிரதான ஆயுதமான cattle கன்
( அமேரிக்காவில் இறைச்சிக்காக மாடுகளை அறுத்துக் கொல்வதற்கு பதில் ஒரு தீயணைப்பான் போல உள்ள இதை வைத்து மாட்டை தொட்டு க்ளிக்கினால் மாடு பரலோகம் போய்விடும்)
எடுத்துக் கொண்டு போலீஸ் காரை திருடிக் கொண்டு அகல்கிறான்.

நெடுஞ்சாலையில் முன்னே சென்ற காரை கடந்து மறித்து நிப்பாட்டி,
வயது முதிர்ந்தவரை வெளியில் வருமாறு அன்புடன் பணிக்க,
அவர் பயத்துடன் என்னயா?ஆபீசர் என்கிறார்.
இவன் அவரை அன்புடன் நெருங்கி கொஞ்சம் தலையை நிமிருங்கள்,
கொஞ்சம் என்று பணிக்க
அந்த குழாயை அவர் நெற்றியில் வைத்து அழுத்த பால்ரசு குண்டு வெளியேறி அவருக்கு நெற்றிக்கண் திறக்கிறது.

இப்போது அந்த காரில் டல்லாஸ் நோக்கி போகிறான் அந்த வித்தியாச சைக்கோ.
காட்சி மாறி:-
வறண்ட பாலைவனம்
ஓநாய் வேட்டைக்கு வந்த பிளம்பர் மாஸ்(ஜோஷ் ப்ரோளின்) தன் தொலைநோக்கியில் தூரத்தில் ஒரு
உயர்ரக வேட்டை நாய் (பிட் புல்) குண்டடியுடன் நொண்டியடிப்பதை பார்த்து,அங்கு விரைய.
நிறைய வேட்டை நாய்களும்,ஹெராயின் போதை மருந்து பரிமாற்றத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர் உடலுமாய் காட்சி தர,ஈ மொய்க்கிறது.
ஒரு ஹெராயின் பார்சல்கள் நிறைந்த பிக்கப் காரில் இருந்த டிரைவர் குற்றுயிராய் இருக்க, அவரிடம் நெருங்கி அவரின் விசை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு.
அவரிடம் பணம் எங்கே?
மற்றவர்கள் எங்கே?
என்று வினவ.
அவர் அக்வா (தண்ணீர்) என்கிறார்.இவன் விலகி,
மரத்தடியில் ஒருவன் ஒரு லெதர் சூட்கேசுடன் அமர்ந்திருப்பதை கண்டு,
நோட்டமிட்டு,நீண்ட நேரம் அசைவின்றி இருக்கவே ,அவன் இறந்திருக்க கூடும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நெருங்கி சென்று.அவனின் சில்வர் துப்பாக்கி எடுத்துக் கொண்டு அவனருகில் இருந்த லெதர் சூட்கேசை திறக்க அதில் இரண்டு மில்லியன் டாலர் புதிய நோட்டுக்கள் இருப்பதை காண்கிறான்.
(உள்ளே பணம்செல்லுமிடம் சொல்லும் டிரான்ஸ்மீட்டர் இருப்பதை உணராமல் )அதை எடுத்துக் கொண்டு போய் தன் ட்ரெயிலரில் பதுக்குகிறான்.
தன் மனைவியிடம் பணம் எப்படி வந்தது என்று சொல்லுகிறான்.மனைவி கார்லா மருள்கிறாள்.
இரவு தூங்குகையில் அந்த கார் டிரைவர் நீர் கேட்டு தான் நீர் இல்லாததால் கொடுக்க இயலாமையை நொந்துகொண்டு அவருக்கு நீரளிக்க கேன் தண்ணீருடன்
பாலைவனம் விரைய.
அங்கே டிரைவர் சுடப்பட்டு இறந்திருக்க.
இவன் சுதாரிப்பதற்குள் அங்கே மற்றொரு காரின் வெளிச்சத்திட்டு தெரிய ,அது நகர்ந்து இவனை துரத்த.
விழுந்து எழுந்து முட்டிபெயர்ந்து பல் உடைந்து தலை தெறிக்க ஒரு ஆற்றில் உருண்டு நீந்தி மறுகரை அடைந்து தன்னை கடைசிவரை பின்னால் துரத்தி வந்த வேட்டை நாயை நனைந்த துப்பாக்கியை சூடாக்கி ஊதி சுட.
அப்பா குண்டு கிளம்பி நாய் சுருள்கிறது.பொழுதும் விடிகிறது.
உடம்பை துளைத்த சிறு கற்களையும் ,முள்ளையும் எடுத்து சட்டையை கிழித்துகாயத்திற்கு கட்டி வீடு வருகிறான்.
மனைவியை மெக்சிக்கோவில் இருக்கும் அவள் அம்மா வீட்டிற்க்கு பஸ் ஏற்றிவிட்டு அகல்கிறான்.
புதையல் காத்த பூதமாகிறான்.

காட்சி மாறி

டெக்சாஸின் ஒரு பெட்ரோல் பங்கில் கல்லாவில் இருந்த முதியவர் சிகரை நோக்கி நட்புடன் உங்களை டல்லாசில் பார்த்திருக்கிறேன் என்று வாயை விட.

இவன் அவரை நெருங்கி சூரிய காந்தி விதைகளை மென்று கொண்டே
நீங்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறீர்கள்?
டல்லாசில் எவ்வளவு காலம் இருந்தீர்கள்?
எப்போது தூங்க போவீர்கள்?
எப்போது கடை அடைப்பீர்கள்?
இப்போது கடை சாத்துவோமா?
என்று மிரட்டல் தொனியில் கேட்டுவிட்டு.
இதுவரை எவ்வளவு அதிகமான தொகையை பிணையாக வைத்திருப்பீர்?
கிழவர்.நான் பிணையே வைத்ததில்லை.
சரி இப்போ வையுங்கள்.
இதில் தான் உங்கள் வாழ்வே அடங்கியுள்ளது.
பிரெண்டோ என்கிறான்.
நாணயத்தை சுண்டி போட்டு பூவா தலையா?
சொல்லுங்கள் என காசை விரல்களால் பொத்த.
(இந்த காட்சிக்கே இந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கும்.
எவ்வளவு ஆங்கில படம் பார்த்தாலும் இது போன்ற ஒரு நடிப்பு முன் நிறுத்தப்படவில்லை.ஈடு செய்ய முடியவில்லை .
என்ன தெனாவெட்டு.சிரிப்பை வெளியிடா கண்களில் குறும்பு.தாடையை மென்று கொண்டே "கால் இட்" என்று கேட்பது (ஜேவிஎர் அருமைங்க )
அந்த கிழவர் (gene jones) என்றும் யாராலும் மறக்க முடியாத "கால் இட்" காட்சி.
அந்த கிழவர் தான் வாழ்ந்த வாழ்விற்கு அர்த்தமாக இந்த ஒரு காட்சியை சொல்லிக் கொள்ளலாம்.
அப்படி ஒரு மருட்சியை கண்களில் காட்டியிருப்பார்.
இது போல சின்ன சின்ன விஷயங்களால் தான் இது படம் பார்த்த அனைவரையும் கவர்ந்தது.

முடிவில் கிழவர் தலை என்று சொல்லி உயிர் பிச்சை பெறுகிறார்.
குறும்பன் சிகர் அவரிடம் தான் தந்த காசை கல்லாவில் போடாதீர்,
என்று சொல்ல,
அவர் திகைத்து ,வேறு எங்கே போட?
இது உங்கள் உயிரை காத்த காசு.
இதை கல்லாவில் போடாதீர் என்று சொல்லி அகல்கிறான்.

இப்போது ஹெராயின் கடத்தல் முதலாளி
பணத்தை தேட
சிகரை வாடகை கூலியாக அமர்த்துகிறான்.
அவனுக்கு சம்பவ இடத்தை காட்ட சொல்லி தன் ஆள் இருவரை அனுப்ப
அங்கு விரைந்த சிகர் மாஸ் காரின் vid tag(காரை அடையாளம் காணும் பட்டை) நெம்பி எடுத்துக் கொண்டு,
பணம் இருக்கும் இடம் காட்டும் டிரான்ஸ் பாண்டரையும் பெற்றுக் கொண்டு பின்னர் நன்றி கூறி அவர்கள் இருவரையும் சுட்டு கொல்கிறான்.
பின்னர் தான் திருடிய காரை கொளுத்திவிடுகிறான்.
காட்சி மாறி
பொழுது விடிகிறது.
ஷெரீப் டாம் பெல்
தன் குதிரையில் ஏறிக்கொண்டு கூட தன் சக அதிகாரியையும் கூட்டிக் கொண்டு.
சம்பவ இடம் சென்று துப்பு துலக்குகின்றனர்.
பின்னர் மாஸின் வண்டி எண்ணை வைத்து அவனை நெருங்குகின்றனர்.

இப்போதுசிகர் மாஸ் அலுவலகம் செல்கிறான்.அங்கு எதுவும் விபரம் கிடைக்காமல் போக அங்கே அஞ்சல் பெட்டியில் அவனுக்கு வந்த கடிதங்களை பார்க்கிறான்.
பின்னர் சிகர் மாஸ் வீடு செல்கிறான்.
அங்கே டெலிபோன் பில்களை சோதனை இடுகிறான்.
பில்லில் இருந்த எண்களை வைத்து மாஸின் சொந்த ஊர் மெக்சிக்கோ என்று அறிகிறான்.அங்கிருந்து அகல்கிறான்.
பின்னர் ஊரை சல்லடை போட்டு அலசுகிறான்'

இதே நேரத்தில் ஷெரிப் மாஸின் வீடு வந்து அப்போது தான் உடைக்கப்பட்ட
கதவின் லாக்கை பார்த்து சிகர் வந்து போனதை கண்டு பிடிக்கின்றனர்.
இப்போது இருவரையும் தீவிரமாக தேடுகின்றனர்.

இப்போதுஆரம்பிக்கிறது பூனை சுண்டெலி ஆட்டம்

மாஸ் ஒரு மோட்டல் சென்று இரண்டு அறை எடுத்து ஒன்றில் தான் தங்கி,
மற்றொன்றில் பணத்தை ac ஷாப்டில் கிரில்லை கழற்றி உள்ளே தள்ளி ஒளித்து வைக்கிறான்.
கூடாரம் அடிக்கும் இரும்பு குழாய் வாங்கி வந்து அதில் யாருக்கும் சந்தேகம் வாரா வண்ணம் நவீன குழல் துப்பாக்கி தயாரிக்கிறான்.
தன்னை துரத்தி வரும் வில்லனுக்கு காத்திருக்கிறான்.

காட்சி மாறி

டெக்சாஸின் செரிப் டாம் பெல் மெக்சிக்கோவில் இருக்கும் மாஸின் மனைவியை சந்தித்து
உன் கணவனை சரணடைய சொல்
அவர்கள் மிக பொல்லாதவர்கள்.
உனக்கு நாங்கள் தான் பாதுகாப்பு.
மாஸ் எப்போது போன் செய்தாலும் எனக்கு தெரிவி.
என அட்டையை கொடுத்து விட்டு செல்கிறார்.
காட்சி மாறி
இப்போது ஹெராயின் கடத்தல் முதலாளி
பணத்தை தேட
கார்சன் வெல்ல்ஸ் (woody harrellson- செவென் பவுண்ட்ஸ் ) இடம் பொறுப்பை ஒப்படைக்க அவன் சிகரையும் மாஸையும் தேடி புறப்படுகிறான்.
அவன் போனதும் அதே பொறுப்பை மெக்சிக்கர்களான நான்கு பேர் கும்பலிடம்
விட்டு அவன் மனைவியை கண்காணி என்று சொல்லுகிறான்.

காட்சி மாறி

சிகர் இப்போது மாஸ் தங்கியுள்ள மோட்டலை கடக்க டிரான்ஸ்பாண்டர்அலற
காரை உள்ளே செலுத்தி பார்க் செய்கிறான்.
இப்போது கையில் நவீன சைலன்சர் குழல் துப்பாக்கியும் வைத்திருக்கிறான்.
பணம் இருக்கும் அறை அருகே செல்ல சத்தம் அதிகரிக்க.
ஒரு அறைக்குள் நுழைகிறான்,கட்டிலில் அமர்ந்து ஷூக்களை கழற்றி சாக்சுடன்
குளியலறை கதவை திறந்து நுழைகிறான்.
அங்கே குளியல் தொட்டியில் ஒன்றாய் இருந்த ஹோமோக்கள் இருவரிடம் பணம் எங்கே? என கேட்டு பதிலுக்கு காத்திராமல் சரமாரியாக சுடுகிறான்.
மர சுவற்றை கூட சுட்டு பிரித்து கடாசுகிறான்.
பின்னர் அங்கு பணத்தை வெறியுடன் தேட,
பக்கத்து அறையில் இருந்த மாஸ் சுதாரித்து பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு டாக்சி பிடித்து தொலைவில் உள்ள இன்னொரு ஹோட்டல் சென்று அறை பதிவு செய்து.அதிக பணம் தந்து என்னை தேடி யார் வந்தாலும் எனக்கு தெரிவி.
என்கிறான்.
பணம் வந்ததும் தூக்கம் போன கதை தான்.
கதவையே குறி வைக்கிறான்.
இப்போது சிகர் இங்கும் வந்து விடுகிறான்.
ஹோட்டல் மனேஜரை கொன்றுவிட்டு.
மெல்ல காரிடாரில் நடந்து கருவியின் உதவியுடன் ஒவ்வொரு கதவாக
மோப்பம் பிடிக்கிறான்.
இவன் அறை கதவிடுக்கில் காலடி தெரிகிறது
மாஸ் ஆயத்தமாகிறான்.
சிகர் லாவகமாக அடுத்த கதவின் அருகே சென்றுவிட,
இவன் அப்பா என்று மூச்சு விட ,
அப்போது தான் சூட்கேசில் இருக்கும் அந்த டிரான்ஸ்பாண்டர் எமனை
செயலிழக்க செய்கிறான்.
அப்போது சிகர் கதவின் லாக்கை cattle gun வைத்து பிளக்க அந்த லாக்
பறந்து இவன் மேல் விழ,
இவன் பணத்துடன் எஸ்கேப்.
அவன் துரத்த
இவன் சுதாரித்து சிகரை தொடையில் சுட,
சிகர் மாஸை தோள்பட்டையில் சுட ,
இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிக்க

மாஸ் இப்போது அருகில் சென்ற காரை மடக்கி ஏறி எல்லையில் விடுமாறு சொல்ல,சிகர் தொடர்ந்து சுட்டு கார் டிரைவரை நெற்றியில் சுட்டு கொல்கிறான்.
இப்போது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாக.
அப்போதும் மாஸ் விடாமல் லெதர் சூட்கேசை எடுத்துக் கொண்டு மெக்சிக்கோ
எல்லைக்கு சென்று சேர்கிறான்.
எதிர்பட்ட சிறுவரிடம் பத்து டாலர் தந்து அவர்கள் உட்கொண்ட பீரை வாங்கி
அருந்தி தாக சாந்தி செய்கிறான்.காயத்திற்கு கட்ட அவர்களிடம் மேலும் ௨௦ டாலர் தந்து அவர்களின் டி ஷர்ட் வாங்கி கட்டுகிறான்.

மெதுவாக பாலத்தின் தடுப்பு வேலியில் ஏறி அங்கு இருக்கும் ஆற்றங்கரையில் லெதர் சூட்கேசை அடையாளம் வைத்துக் கொண்டு வீசுகிறான்.
மெல்ல இறங்குகிறான்.

இவனருகில் ஒரு பிச்சைக்காரன் கிடார் இசைத்து பிச்சை கேட்கிறான்.
இவன் அவனுக்கு பணம் தந்து என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போ என்று.
வாந்தி எடுக்கிறான்.
எல்லையில் மயங்கி சரிகிறான்.
போலீஸ்காரர்கள் இவனை மாகாண மருத்துவமனையில் அனுமதித்து
சிகிச்சை அளிக்கின்றனர்.

காட்சி
மாறி

சிகர் இப்போது அடிப்பட்ட சிங்கமாக வலியில் துடிக்கிறான்.
எந்த மருத்துவமனைக்கும் போக முடியா சூழ்நிலை.
ஒரு மருந்துகடை முன்னே நின்ற காரின் பெட்ரோல் டாங் மூடியை
திறந்து.தன் பேன்ட் கிழிசலை கிழித்து அதை பெட்ரோல் டாங்கில் முக்கி தீ வைக்க சிறிது நொடியில் கார் வெடிக்கிறது.கூட்டம் கூடி வேடிக்கை பார்க்க

மருந்து கடை உள் சென்று மிக சரியாக பார்த்து மரத்து போகும் ஊசி,பஞ்சு,கிருமி நாசினி,ஆல்கஹால் கத்தி எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கிளீனிக்கில் நுழைந்து
நோயாளி அறையின் கழிவறையில் புகுந்து தமக்கு தாமே ஊசி போட்டுக் கொண்டு கால்களை நீட்டி அம்மணமாக அமர்ந்து கத்தியை வைத்து குண்டை கீறி, லாவகமாக நெம்பி எடுத்து
அந்த காயத்தில் கிருமி ஆல்கஹால் விட்டு கொளுத்தி பின்னர் அணைத்து
கிளினிக்கில் இருந்த பேஷன்ட் ஒருவரின் உடையை அணிந்து வீறு கொண்டு கிளம்புகிறான்.

காட்சி மாறி

கார்சன் வெல்ஸ் மாஸை சந்தித்து பணம் எங்கே?
அதை என்னிடம் தந்துவிடு,உனக்கு அதில் பங்கும் சிகரிடமிருந்து பாதுகாப்பும் தருகிறேன் என்று சொல்கிறான்.மாஸ் தன்னிடம்இருந்த பணம் அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் காணமல் போய் விட்டது.என்று சொல்லிமழுப்பி அனுப்பி விடுகிறான்.

இதை நம்பாத கார்சன் மாஸ் மயங்கி விழுந்த இடம் சென்று சோதனையிட
ஆற்றங்கரையில் புதருக்குள் ஒளிந்திருக்கும் சூட்கேசை பார்க்கிறான்.
போலீசுக்கு தெரியாமல் எப்படி? அந்த எல்லையோர வேலியை தாண்டி ஆற்றை அடைவது என யோசிக்கிறான்.தன் ஹோட்டல் அறைக்கு போகிறான்.
பின்னாலேயே சிகர் நிற்கிறான்.

மனதிற்குள் தன் கதை இன்று முடிந்தது என்று சொல்லி ரூமுக்கு நுழைகிறான்.
சிகர் அவனிடம் மாஸின் இருப்பிடம் கேட்டு அறிகிறான்.
இன்னும் இருபது நிமிடத்தில் எனக்கு அந்த பணம் என் காலடியில் வைக்கணும்.இல்லை என்றால் நான் உன் உயிரை எடுப்பேன் என்றும்
இன்னும் எத்தனை பேர் அந்த பணத்தை தேடி அலைகிறீர்கள் ?
என்று கேட்கிறான்.அவன் மெக்சிக்கோ காரர்களும் தேடுவதை சொல்கிறான்.
அப்போது போன் மணியடிக்க

சிகர் கார்சனை அவன் எதிர்பாரா நொடியில் சைலன்சர் துப்பாக்கியால் சுடுகிறான்.ரிசீவரை எடுத்து ஹலோ சொல்கிறான்.
போனில் எதிர்முனையில் மாஸ் பேச.

அவனிடம் உன் மனைவி உனக்கு உயிருடன் வேண்டும் என்றால் அந்த பணத்தை என்னிடம் கொண்டு வந்து கொடு என்று மிரட்ட.
(சிகர் போன் பேசுகையில் தன காலடியில் ரத்தம் நகர்ந்து வருவதை கண்டு தன கால்களை தூக்கி மேசை மேல் வைப்பான்,மீண்டும் பேச்சை தொடர்வான் -மிக நல்ல நடிப்பு. )
மாஸ் நான் உன்னை கொன்று பின்னர் தூக்கில் போட்டு விடுவேன் என பதில் சொல்லி போனை பலமுறை அடித்து சாத்துகிறான்.

காட்சி மாறி

சிகர் இப்போது ஹெராயின் கடத்தல் முதலாளி யை சந்தித்து
இனி அந்த பணத்தை மறந்துவிடு என மிரட்ட ,முதலாளி மறுக்க
அவனை சுட்டு கொல்கிறான்.
அங்கு இருந்த கணக்காளனிடம் துப்பாக்கி முனையில் மெக்சிக்கோ காரர்களின்
விபரம் வாங்கி அவர்களின் கதையையும் மாஸின் கதையையும் முடிக்க கிளம்புகிறான்.போகும் வழியில் கார் பழுதாகிவிட.
அங்கு உதவிக்கு வந்த ஒரு கோழி வண்டி டிரைவரை கொன்று அந்த காரில்
எல் பாசோ போகிறான்.

காட்சி மாறி

மாஸ் இப்போது மருத்துவமனையில்
மனைவி கார்லாவிடம் தொலை பேசியில் உரையாடி தாம் எல் பாசோவில் இருப்பதாகவும் அம்மாவை கூட்டிக் கொண்டு இங்கு வந்து விடு என்றும் கூறுகிறான்.தான் தங்கப்போகும் ஹோட்டல் முகவரியை கூறுகிறான்.

அவள் பக்தி சிரத்தையுடன் செரிப் டாம் பெல்லிற்கு தகவல் சொல்ல
அவர் அங்கு வர விழைகிறார்.

காட்சி மாறி

மெக்சிக்கர்களான நான்கு பேர்
கார்லாவை தொடந்து எல் பாசோ வர ,
அவர்கள் செல்லுமிடம்,ஹோட்டல் விலாசம் கேட்டு
நாங்களும் அந்த பகுதி வாசிகள் தான் என்று,அன்புடன் இவர்களை ஒரு டாக்சியில் ஏற்றி அனுப்புகின்றனர்.
இவர்களும் எல்பாசோ காரர்கள் தான் எவ்வளவு நல்லவர்கள்?
என வியக்கின்றனர்.
இவர்களுக்கு முன் அந்த ஹோட்டலுக்கு மெக்சிக்கர்கள் விரைகின்றனர்.

காட்சி மாறி

இப்போது மாஸ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஹோட்டல் அறையில் குதூகலமாய் மனைவிக்கும் அவள் அம்மாவுக்கும் காத்திருக்கிறான்.
பணத்தை ஒரு வழியாக மீட்டு கொண்டு வந்து ஹோட்டல் அறையின்
ac ஷாப்டின் உள்ளே வைத்தாகி விட்ட மகிழ்ச்சி வேறு,

மனைவியை எதிர்பார்த்து ஜாலிமூடில் இருந்தவனுக்கு பக்கத்து அறை அழகி நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே மது அருந்த கூப்பிட ,
இவன் ஜோதியில் ஐக்கியமாகையில்

அங்கு வந்த மெக்சிக்க கும்பல் அவனை அடித்து உதைத்து பணம் எங்கே ?
என கேட்டு துன்புறுத்தி ,பதில் வராததால் சுட்டும் கொன்று நீச்சல் குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.

இப்போது மனைவியும் அவள் அம்மாவும் ஹோட்டலுக்குள் நுழைய
தன் கணவன் பிணமாய் மிதக்கும் காட்சியை கண்டு வெடித்து அழுகிறாள்.

அப்போது தான் அங்கு வந்த ஷெரிப் டாம் பெல் கார்லாவை தேற்றுகிறார்.
அன்று இரவு ஒரு அனுமானத்தில் சிகர் கண்டிப்பாக மாஸின் அறையில்
பணம் தேட வருவான் என நினைத்தபடி நுழைய

அதே போல ac கிரில் கழற்றி வைக்கப்பட்டுள்ளது.
சிகர் இவரை பார்க்கிறான்.ஆனால் சுடவில்லை.
இவருக்கும் சிகர் உள்ளே தான் இருக்கிறான் என தெரியும்
ஆனால் அவனை பிடிக்கவில்லை.

இன்னும் மூன்று நாளில் ஓய்வு பெரும் தமக்கு எதற்கு? இந்த வீண் உயிர் பணயம் என கதவை மூடிவிட்டு நல்ல பிள்ளையாக ,தன் மாமா வீட்டிற்கு சென்று தாம் ஓய்வு பெறப்போகும் செய்தியை சொல்கிறார்.
அவரும் அதை அமோதித்து.

உன் அப்பா கடமையை செய்கையில் சமூக விரோதிகள் சுட்டு வீட்டு வாசலிலேயே இறந்தார்.நல்ல வேலை உனக்கு அப்படி ஏதும் ஆகவில்லை
என்று சொல்கிறார்.

காட்சி மாறி

வித்தியாச சைக்கோவான சிகர் ,
தன் தாயையும் சமீபத்தில் இழந்த வேதனையில் இருக்கும் கார்லாவை
அவள் வீட்டில் சந்திக்கிறான்.மென்மையான குரலில் அவளிடம்
உன் கணவனிடம் நான் சொன்ன படி உன்னை கொல்லப்போகிறேன்.
என்று கூறி புன்னகைத்து காசை சுண்டி போட்டு
பூவா தலையா? என கேட்கிறான்.

அவள் துக்கத்தில் மவுனித்திருக்க
அவளை சுட்டு கொல்கிறான்.
பின்னர் பதட்டத்தில் வண்டியை விரட்டிக் கொண்டு நான்கு ரோடு கூடும் சந்திப்பில் வேகமாய் செல்ல அங்கு ஒரு காரில் மோதி அந்த எதிர் வண்டி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரலோகம் போக ,இவனுக்கு முழங்கை உடைந்து எலும்பு வெளியே துருத்திக் கொண்டு வலிக்கத் தொடங்க.

அங்கு வந்த சிறுவர்களிடம் முப்பது டாலர் தந்து சிறுவன் அணிந்திருந்த
டீ ஷர்டை கிழித்து உடைந்த கைக்கு தூளி கட்டிக்கொண்டு
பணத்தை பாதுகாக்க கிளம்புகிறான் அந்த வித்தியாச சைக்கோ.

தூரத்தில் போலீஸ் சைரன் கேட்கிறது.

இப்போது நிகழ்காலத்தில்(2007) முன்னாள் ஷெரிப் டாம் பெல் தன் மனைவியுடன் நல்ல நிம்மதியான வாழ்க்கையை எதிர் கொள்வது போல் படம் முடிகிறது.


யக்குனர் பல விஷயங்களை நம் யூகத்துக்கே விட்டு விட்டார்.
நம்மையும் யோசிக்க வைத்து படத்துக்கு கதை எழுத வைத்து விட்டார்.
இது தான் ஐயா மிக நுட்பமான படைப்பு என்பது.

இந்த படம் பார்த்த அனைவரும் பபூன் போல தோற்றமளிக்கும் சிகருக்கு விசிறியாகவே ஆகிவிடுவார்கள்.என்றால் மிகை இல்லை.
என்னை கேட்டால் இந்த நூற்றாண்டின் மனம் கவர் வில்லன் என்றே சொல்லுவேன்.என்ன நண்பர்களே சரி தானே?

படத்தில் படுக்கையறை காட்சிகளே கிடையாது.
ஆனால் கலை நுட்பத்துடன் கூடிய மிகைப்படுத்தப்பட்ட ரத்தம்,வன்முறை,,சதை கிழிசல்கள்.காயங்கள் உண்டு.
ஆகவே சிறுவர்களுக்கு ஆன படம் இல்லை.

Won 4 Oscars. Another 93 wins & 44 nominations
Best Achievement in Directing
Ethan Coen
Joel Coen


Best Motion Picture of the Year
Scott Rudin
Ethan Coen
Joel Coen


Best Performance by an Actor in a Supporting Role
Javier Bardem


Best Writing, Screenplay Based on Material Previously Produced or Published
Joel Coen
Ethan Coen


Directed by
Joel Coen
Ethan Coen

Produced by
Joel Coen
Ethan Coen
Scott Rudin
Written by
Novel:
Cormac McCarthy
Screenplay:
Joel Coen
Ethan Coen
Starring
Josh Brolin
Javier Bardem
Tommy Lee Jones
Kelly Macdonald
Woody Harrelson
Music by
Carter Burwell
Cinematography
Roger Deakins
Editing by
Roderick Jaynes
Distributed by
Miramax Films (US)
Paramount Vantage (non-US)
Release date(s)
United States:
November 9, 2007
(limited)
November 21, 2007
(wide)
Australia:
December 26, 2007
United Kingdom:
January 18, 2008
Running time
122 min.
Country
United States
Language
English
Spanish
படத்தின் முன்னோட்ட காணொளி



தாழ்மையான விண்ணப்பம் :-
இங்கு முழு படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி தந்திருக்கிறேன் என்று
நினைப்பவர்கள்,நினைப்பாகவே வைத்துக் கொள்ளுங்கள்.

காரணம்:-
முன்பு நான் ஆங்கில படத்தின் உச்சரிப்பு புரியாமல் அதை முழுமையாக புரிந்து ஊன்றி பார்க்க முடியாமல் போனது.அந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்னும் சிறு முயற்சி. இதை குறை சொல்லி நான் எடுக்கும் இந்த நல்ல முயற்சியையும் கெடுக்க வேண்டாம்.எல்லாவற்றிர்க்கும் மேல் பாணி என்று ஒன்றிருக்கிறது.
இது என் பாணி.

இது எனக்கு எழுத்து பயிற்சியும் அளிக்கிறது.
imdb தளத்தில் விசிறிகள் ஒரு படத்தில் லயித்தால் அதை பற்றி "trivia" மற்றும்
faq,goofs,synopsis,plot எழுதி அந்த படத்தின் வெற்றிக்கு உதவுவதுண்டு.
அது போல ஒரு சிறு முயற்சி தான் இது.
ஒரு படத்தை விமர்சனம் படித்துவிட்டு போய் யாரும் கட்டாயம் பார்ப்பதில்லை.
நாம் லயித்ததை பிறருக்கு சொல்கிறோம் அவ்வளவே.
நன்றி



Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)