ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ? (2000) உலக சினிமாபார்வை,


அங்கீகரித்தமைக்கு நன்றி:-

O Brother, Where Art Thou? (2000)

ஹாலிவூடின் பெர்ஃபெக்ட்ஷனிஸ்ட் இயக்குனர் ப்ரம்மாக்களான கோயன் ப்ரதர்ஸின் இன்னுமொறு அற்புதமான படைப்பு.கலைத்தன்மை ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிர்கிறது.

பார்க்கும் நமக்கு பரவசமும் ஆச்சர்யமும் மட்டுமே மிஞ்சுகிற்து.உலகில் 1930 களில் ஏற்பட்ட க்ரேட் டிப்ரெஷன் பற்றி அறிந்திருப்போம்,அந்த கால கடத்தில் மிஸ்ஸீசிப்பியில் நடந்த பல சுவையான சம்பவங்களை கோர்த்த அழகிய ப்ளாக் ஹ்யூமர் கதம்பம் இது என்றால் மிகைஇல்லை.ஒடிசி என்னும்  க்ரேக்க காப்பிய இலக்கியத்தின் தாக்கமும் இந்த படத்தில் இருக்கும்.

மூன்று பேர் உடல்கள் ஒன்றாய் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சிறைகைதிகளான எவெரெட்(George Clooney), பீட் (John Turturro), மற்றும் டெல்மர்(Tim Blake Nelson) சிறையிலிருந்து தப்பிக்கின்றனர்.

எதற்காக? எவரெட் தாம் சிறைக்கு வருவதற்கு முன் ஒரு வங்கி வாகனத்தில் இருந்து கொள்ளை அடித்த 12 லட்சம் டாலர்களை தம் வீட்டருகே பதுக்கி வைத்திருப்பதாகவும்,அந்த வீடு இன்னும் நான்கே நாளில் பவர் ப்ளாண்ட் திட்டத்திற்காக ஏரி ஆக்கப்படும்,அதற்கு முன் அந்த பணத்தை மீட்டு மில்லியனர் ஆக வேண்டும் என ஆசைகாட்டி மற்ற இருவரையும் உடன் கூட்டிக்கொண்டு தப்பிக்கிறான்.

ஆனால் உண்மை நிலவரம் இவ்வாறாக இருக்கிறது.
எவரெட்டின் மனைவி பென்னி (Holly Hunter), தன் ஆறு பெண் குழந்தைகளுடன் வாழ வேறு வழி தெரியாமல் தேர்தல் பிரசார அதிகாரியை மணம் முடிக்க இருப்பதாக சிறைக்கு தமக்கு வந்த கடிதத்தை அடுத்தே எவெரட் நாடகம் ஆடி இந்த வீரசாகச பயணத்தை தொடர்கிறான்.

வழியில் மூவரும் ரயிலில் ஏற எத்தனித்து,முடியாமல்,ஒரு பார்வையற்றவர் ஓட்டிவந்த ரயில்வே ட்ரெய்லரில் பயணிக்கின்றனர்.அவர் அருள்வாக்கு போல உங்களுக்கு நல்லகாலம் பொறக்குது, அதற்கு முன்ன கொஞ்சம் சோதனை இருக்குது என்று  சொல்கிறார்.

இப்போது மூவரும் பீட்டின் அண்ணன் வீட்டுக்கு சங்கிலியை அகற்றவும் ,இரவு தங்கவும் செல்கின்றனர்.ஆனால் அவனோ போலீசிடம் இவர்களை பற்றி போட்டுக்கொடுக்க ,உடனே வந்த போலிஸ் படை இவர்களை பிடிக்க வந்து விட்டு தாங்களே தானியங்கி துப்பாக்கி ரவைகளுக்கு இரையாவது ப்ளாக் ஹ்யூமரின் உச்சம்,அதற்காகத்தானே நாம் கோயென் ப்ரதர்ஸை சிலாகிப்பது?,இதிலும் ஏமாற்றவில்லை.

இப்போது மூவரும் காரை திருடிக்கொண்டு பயணிக்க, எவரெட்டின் குத்திட்டு கொண்டு நிற்கும் தலை முடிக்கு ஹேர் நெட்டும்,ஹேர் க்ரீமும் ஒரு கடையில் வாங்குகின்றனர்.ஒரு ஊர் கோழியை அடித்து விருந்து சமைக்கின்றனர்.அப்போது அருகே இருக்கும் ஆற்றில் பாப்டிசம் நடக்க
பீட்டும், டெல்மரும் சென்று வாங்கிக்கொள்கின்றனர்.எவரெட் அவர்களிருவரையும் கிண்டல் செய்கிறான்.

கார் ஒரு நாற்சந்தி சாலையில் நின்ற கருப்பினத்தை சேர்ந்த டாமி யை எற்றிகொண்டு பயணிக்க,டாமி பக்கத்து ஊரில் உள்ள ரேடியோ ஸ்டேஷனில் சென்று கிடார் வாசித்து பணம் சம்பாதிக்க போகிறேன் என சொல்ல , இவர்களும் சென்று சோக கீதமான "Man of Constant Sorrow" என்னும் பாடலை உச்ச கலக்கல் ஸ்தாயி இல் பாடி குருட்டு ரேடியோ ஸ்டேஷன் அதிகாரியிடம் பணம் அதிகமாக கறக்கின்றனர்.தங்கள் குழுவை the Soggy Bottom Boys என அறிமுகம் செய்து கொண்டு வெளியேருகின்றனர்.


அவர் அந்த பாடலை பின்னொரு சந்தர்ப்பத்தில் ரேடியோவில் ஒலிபரப்ப,செம ஹிட்டாகிவிடுகிறது.ஆனால் இது இவர்கள் அறிந்திருக்கவில்லை.

இப்போது கைதிகள் மூவரும் சாலையில் நடக்க,அவ்வழியாய் போலீசிடம்     இருந்து தப்பி வந்த வங்கி கொள்ளையன் பேபி ஃபேஸ் ஜார்க் நெல்சன் என்பவனது கார் வர,இவர்கள் காரை நிறுத்தி அவனுக்கு வழி காட்டுவதாக சொல்லி காரில் ஏறிக் கொள்ள,மூட்டை நிறைய பணம் இருக்கிறது.இருந்தும் அவன் திருப்தி அடைய வில்லை.எதிர்ப்பட்ட போலீசாரையும்,பசுக்களையும் சுட்டுக் கொல்கிறான்.அவன் இன்னுமோர் வங்கிக்கு சென்று கொள்ளை அடிக்கிறான்,


இப்போது  நால்வரும்  ஒரு காட்டில் தீ வளர்த்து குளிர்காய,கொள்ளை அடித்த எல்லா பணத்தையும் இவர்களுக்கே தந்து விட்டு பேபி ஃபேஸ் போய் விடுகிறான்.மறு தினம் இவர்கள் காரில் பயணிக்கையில் காட்டாற்றருகே இனிய பாடல் ஓசை கேட்க,இவர்கள் அங்கு மூன்று அழகிகள் குளிப்பதை கண்டு,(இது கோயன் படம் மேட்டர் ஒன்றும் இராது)அறிமுகம் செய்து கொண்டு பேச,அவர்கள் மூவரும் இவர்களை மயக்கி மது புகட்டி மயக்கமேற்படுத்தி,பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு பீட்டை மட்டும் கூட்டிச் செல்கின்றனர்.


மயக்கம் தெளிந்த இவர்கள் பீட்டின் உடைகள் தரையில் கிடக்க,அதனுள்ளே குதித்த தவளையை பீட் என எண்ணிக் கொள்கின்றனர்.பீட்டை அந்த அழகிகள் இப்படி மாற்றிவிட்டனர் என சந்தேகித்து தவளையை பிடித்து பெட்டியில் போட்டுக்கொண்டு ஒரு உணவகம் செல்ல,அங்கு வந்த பைபிள் சேல்ஸ்மேன் ஒருவன் இவர்களை வியாபார விஷயம் பேசலாம் என கூறி கூட்டி செல்கின்றான்.ஒரு மரத்தடியில் வைத்து இவர்களை அடித்து பணத்தை பிடுங்கிக்கொண்டு அந்த தவளையையும் பிடித்து நசுக்கி கொன்றுவிடுகிறான்.மீண்டும் ஒரு விவசாயியின் வைக்கோல் வண்டியில் எவெரெட்டின் ஊருக்கு பயணம் செய்கின்றனர்.

இவர்கள் பீட் இறந்துவிட்டதாகவே நினைக்க,பீட் போலீசாரிடம் மீண்டும் மாட்டி எல்லா ரகசியங்களையும் சொல்ல,போலீஸ் எவரெட்டின் வீட்டுக்கு விரைகிறது.அங்கேயே இவர்களுக்கு சவக்குழியும் மரத்தில் தூக்கு கயிறும் கட்டி தயாராக வைக்கிறார்கள்.

இப்போது எவரெட்டும்,டெல்மரும் ஊருக்கு வர,அங்கே தேர்தல் ப்ரசாரம் விருவிருப்பாக நடக்கின்றது,எவரெட்டின் இரண்டு பெண்களும் பிரசார மேடையில் பாட்டு பாட,எவரெட் கூட்டத்தை விலக்கி அவர்களை அடைந்து
கட்டிக்கொள்ள,அவர்கள் நீங்கள் ரயிலில் அடிபட்டு இறந்ததாக அம்மா சொன்னார்கள்,என சொல்ல இவன் அதிர்கிறான்.

அவர்களிடம் அம்மா எங்கே என கேட்க,அம்மாவின் புதிய திருமணம் பற்றியும்,இன் நாள் அன்கிள், நாளைய அப்பாவான தேர்தல் பிரசார அதிகாரி
பற்றியும் சொல்ல,அவன் அவர்கள் ஷாப்பிங் செய்யும் வுல்ஸ்வொர்த் கடை சென்று அவளை சமாதானம் செய்து,திருமணத்தை நிறுத்த கேட்கிறான்,அவள் ஏழாவதாக ஒரு குழந்தை அந்த அதிகாரிக்கு பெற்றதையும் சொல்லி விலகிவிடு எங்கிறாள்.இவன் கேட்காமல் அந்த அதிகாரியை அடிக்கப்போக அவர் இவனை நன்கு அடித்து,கடையின் வெளியே தூக்கி போட்டு விடுகிறார்.

இப்போது நொந்து போன எவரெட்டும்,டெல்மரும் சினிமா பார்க்க செல்ல,அங்கே படம் நிறுத்தப்பட்டு சிறைக்கைதிகள் படம் பார்க்க அழைத்து வரப்படுகின்றனர்.அந்த கும்பலில் பீட் இருப்பதை பார்த்து இவர்கள் ஆனந்தப்படுகின்றனர்.பீட் இவர்களை மெதுவாக அழைத்து பணம் இருக்குமிடம் செல்லாதே,அதை நான் போலிசிடம் சொல்லி,அவர்கள் அங்கே வெயிட்டிங்,என சொல்ல,இவர்களுக்கு விளங்கவில்லை.

அவர்கள் முன்பு சந்தித்த பேபி ஃபேஸ் கொள்ளையனை போலீஸ் விலங்கு போட்டு ஜில்லெட்டினுக்கு அழைத்துபோவதை பார்க்கின்றனர்,பின்னாலேயே மக்களும் ஒரு பசுவும் செல்கிறது(செம காமெடி)

இவர்கள் பீட் சொன்னது  புரியாமல் அன்று இரவே,பீட் இப்போது இருக்கும் சிறைக்கு சென்று,அவன் கை விலங்குகளை உடைத்து வெளியே கூட்டி வருகின்றனர்.

பீட் இவர்களிடம் போலீசிடம் உண்மையை சொன்னதற்கு மன்னிப்பு கேட்கிறான்.இப்போது தான் பணம் பற்றிய உண்மையை எவரெட் மற்ற இருவரிடமும் சொல்ல அவர்கள் கொலைவெறி கொண்டு இவனை தாக்க,பக்கத்து காட்டில் நிறவெறி கும்பலான Ku Klux Klan மற்றும் lynch mob, ஆகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்போது அமெரிக்காவில் வழமையிலிருந்த சந்தேகத்துக்கிடமான கருப்பினத்தவரை ,யூதர்களை பிடித்து வந்து தூக்கில் ஏற்றிக் கொல்லும் செயலை செய்ய ,இவர்களின் நண்பன் டாமியை பிடித்து வைத்துள்ளதை கண்டு அதிர்கின்றனர்.


அவனை காக்க எண்ணுகின்றனர்.அங்கே எரிந்துகொண்டிருக்கும் பெரிய சிலுவையை தள்ளி விட்டு,அந்த காட்டுமிராண்டி கும்பலிடமிருந்து அவனை காக்கின்றனர்.(இந்த கும்பலை பற்றி அவசியம் சுட்டி அழுத்தி படிக்கவும்)

இப்போது நால்வரும் அங்கே தன் மனைவி பங்கேற்க்கும் தேர்தல் பிரசார விருந்துக்கு வயதான வேடம் பூண்டு சென்று அவளிடம் கெஞ்சுகிறார்கள்.
அவள் மறுக்கிறாள்.இவர்கள் வேறு வழி தெரியாமல் சோக கீதமான "Man of Constant Sorrow" என்னும் பாடலை உச்ச கலக்கல் ஸ்தாயிஇல் பாடி கலக்க,
வந்திருந்த கூட்டம் இவர்கள் தான்  the Soggy Bottom Boys என அடையாளம் கண்டுகொள்கின்றனர்.

இவன் மனைவியும் கூட்டமும் மிகவும் ஆனந்தமடைந்து,ஆரவாரம் செய்ய,தேர்தலில் நிற்கும் கவர்னரும் மேடை ஏறி மக்கள் முன்னால் நின்று தாம் எப்பொதும் நிறவெறி கொண்டதில்லை என்றும்,இவர்கள் மேலே உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்வதாக கூறி உறுதி தருகிறார்,இவர்களை அரசவை பாடகர்களாகவும் அறிவிக்கிறார்,இவர்கள் அளவில்லா உற்சாகமடைகின்றனர்.

மனைவி புதிய கணவனின் மோதிரத்தை திருப்பி கொடுத்து விட்டு,இவன் கையை பிடிக்க,இவன் நம் மோதிரம் எங்கே என கேட்க,அவள் வீட்டில் உள்ளது அது மூழகுவதற்குள் சென்று எடுத்துவா,அப்போது தான் ரொமான்ஸ் என்கிறாள்.இவர்கள் அங்கு விரைய ,ரேடியோ இல்லாத ,ரேடியோ கேட்கும் பழக்கம் இல்லாத சிறை அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்ள,இவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல்  நால்வரையும்  தூக்கில் போட போக .எவரெட் கடவுளிடம் தன் குழந்தைகளை மீண்டும் காண அருள் செய்யுமாறு கடைசி நிமிடத்தில் இரைஞ்ச, நடக்கிறது அதிசயம்.

அரசால் திருப்பி விடப்பட்ட மடை திறந்த வெள்ளம் இவர்கள் வீட்டையும்,அந்த மலை பள்ளத்தாக்கையும் மூழ்கடிக்கிறது.ஒரு வழியாக மண்ணில் இருந்து மேலே கிளம்பிய சவபெட்டியை பிடித்துக் கொண்டு தப்பிக்க,டாமி இவன் வீட்டு மேசையை பிடித்தபடி மிதக்க,இவன் மேசை இழுப்பறையில் இருந்து மோதிரத்தை எடுத்துக் கொண்டுபோய் மனைவியிடம் தர,


அவள் இது என் மோதிரமில்லை,இறந்து போன  என் ஆண்டியின் மோதிரம், நான் மோதிரத்தை மெத்தைக்கு அடியில் அல்லவா?வைத்திருந்தேன் என சொல்லி அந்த மூழ்கிய வீட்டுக்கே மீண்டும் விரட்ட.

காட்சி மாறி:-
அழகிய ரயில்வே லெவல் க்ராஸிங்கில் இவன்,இவனது மனைவி,மற்றும் ஏழு குழந்தைகளும் அழகாய் பாடியபடி கடக்க,அங்கே மீண்டும் அந்த ரயில்வே ட்ரெய்லரை ஓட்டியபடி பார்வையற்ற முதியவர் நல்லகாலம் பொறந்திடுச்சா? என ஆத்மார்த்தமாக உணர்ந்து பாடிய படி கடக்கிறார்.

------------------------------------------------------------------------------
இந்த படத்தில் ஜார்ஜ் க்ளூனி ஒரு லூசுத்தனமான காமடி வேடம் பூண்டிருந்தார்,தன் மனைவியிடம் கெஞ்சுகையில் தான் தன் நண்பனிடம்
போலி பல் டாக்டர் சர்டிபிகேட் தயாரித்து தர சொல்லியிருக்கேன்,அதை வைத்து வேறு ஊருக்கு சென்று பிழைப்பொம் என அப்பாவியாக சொல்லும் காட்சிகள்,மனிதர் சக்கைபோடு போடுகிறார்.இவர் தொடர்ந்து கோயன் ப்ரதர்ஸ் இயக்கத்தில் மூன்று படங்கள் செய்தவர்.இவர் எப்படி காமடி ,சீரியஸ் வகைப்படம் என மாறி மாறி பயணிக்கிறார் ?என ஆச்சர்யம் தோன்றும்.

John Turturro, Tim Blake Nelson, John Goodman, Holly Hunter, Charles Durning என அனைவரும் தேர்ந்த கூத்து பட்டறை நடிகர்கள்.ஆஸ்தான நடிகர்களும் கூட.

ஓவ்வொரு காட்சியும் கவிதைங்க,அந்த காமிராமேன் தான் கோயென்சுக்கு
ஆஸ்தான காமிரா மேனாம்.Roger Deakins இவர் தான் கோயெஸுக்கு வெற்றியின் முதுகெலும்பு என்றும் சொல்லிவிடலாம்.

இசை T-Bone Burnett ,யம கிங்கரர்ங்க இந்த மனிதர்,ஒவ்வொரு ஆங்கில பாடல்களும் அவ்வளவு தெள்ளத்தெளிவு.வார்த்தையை முழுங்காத ,மூழ்கடிக்காத கண்ணிய இசை.அனைவரும் ரசிப்பர்.அலுப்பே தட்டாது.

கதை இயக்கம் தயாரிப்பு Joel Coen+Ethan Coen,இவர்களை பற்றி தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே,மனிதர்கள் பெர்ஃபெக்‌ஷனிச்டுகள்.
மொத்தம் ஆறு ஆஸ்கர் சேர்ந்து வாங்கியுள்ளனர்.
அடுத்த படம் A Serious Man கண்டிப்பாக பார்த்துவிட்டு சொல்கிறேன்.
இவர்களின் மாஸ்டர்பீஸ் என ஃபார்கோ மற்றும், நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மென் ஐ சொல்லுவேன்.

உங்களுக்கு இதன்  மூலம் கண்டிப்பாக அட்வென்சர்+ப்ளாக் ஹ்யூமர் + இசை போன்றவற்றை முன் நிறுத்தும் படம் பார்க்கும் பரவசம் கிடைக்கும்.
------------------------------------------------------------------------------
படத்தின் காணொளி இதோ:-
------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------
இயக்குனரின் மொத்த திரைப்பட தொகுப்பான இந்த 
காணொளியை காண்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Directed by Joel Coen
Ethan Coen
(uncredited)
Produced by Tim Bevan
Eric Fellner
Ethan Coen
Joel Coen (uncredited)
Written by Joel Coen
Ethan Coen
Starring George Clooney
John Turturro
Tim Blake Nelson
John Goodman
Holly Hunter
Charles Durning
Music by T-Bone Burnett
Cinematography Roger Deakins
Editing by Roderick Jaynes
Tricia Cooke
Studio StudioCanal
Working Title Films
Distributed by Touchstone Pictures (USA)
Universal Studios (International)
Bac Films (France)
Momentum Pictures (UK)
Release date(s) December 22, 2000 (2000-12-22)
Running time 106 mins
Country United States
United Kingdom
France
Language English
Budget US$26,000,000 (approx.)[1]
Gross revenue US$71,868,327 (worldwide)[2]

12 comments:

சென்ஷி சொன்னது…

படம் நல்லாருக்குமோ இல்லையோ ஆனா உன்னோட விமர்சனம் அருமையா இருக்குது மாம்ஸ்..!!

கடைசிவரி வரைக்கும் படிச்சுட்டு இன்னும் கொஞ்சம் எழுதியிருக்க மாட்டியான்னு யோசிக்க வைச்சுடுச்சு.

டவுன்லோடு செஞ்சு கண்டிப்பாக பார்த்துடறேன். நன்றி!

ச.செந்தில்வேலன்(09021262991581433028) சொன்னது…

கலக்கல் திரைக்கதைச்சுருக்கம் / விமர்சனம் கார்த்திகேயன் :)

ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாக விவரித்துள்ளீர்கள். உங்கள் சேவை தொடரட்டும் :)

கோபிநாத் சொன்னது…

வர வர கலக்கலாக எழுதுறிங்க...! ! ! ;)

கலையரசன் சொன்னது…

gud post:)

வினோத்கெளதம் சொன்னது…

விவரித்த விதம் அருமை கார்த்திக்..:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பா சென்ஷி உன் மனம் திறந்த பாரட்டுக்கு நன்றி,இன்னும் நன்கு எழுத முயல்வேன்
வருகைக்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் செந்தில்வேலன் பாரட்டுக்கும்,வருகைக்கும் நன்றி,

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் கோபி நாத் பாரட்டுக்கும்,வருகைக்கும் நன்றி,

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை கலை மாப்பி பாரட்டுக்கும்,வருகைக்கும் நன்றி,உன் வீட்டு லோகேஷன் வரைபடம் கிடைத்தது, நாங்க நாலு பேரு வர எண்ணி உள்ளோம்,வசதிகள் செய்து விடவும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அருமை நண்பர் வினோத் கவ்தம் பாரட்டுக்கும்,வருகைக்கும் நன்றி,
சீக்கிரமா ஃபீலிங்ஸ் ஆப் இந்தியாவிலிருந்து வெளிய வந்து கலக்கல் பதிவிடுங்க பாஸு

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

இந்த பிரதர்ஸ் படமே இப்படித்தான் இருக்குமா? தலையைச் சுத்துது..!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க உ.த அண்ணாச்சி,உடம்பு நன்கு குணமாகிவிட்டதா?
முதல் வருகைக்கு ரொம்ப நன்றிங்க பிரதர்.
கோயன் ப்ரதர்ஸ் படம் என்றாலே வக்கிரம்,குரூர நகைசுவை தான்.அவர்கள் அதிலே டாப்பு.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)