ஒளிப்பதிவாளர் ராது கர்மாகரின் ஒரே புகைப்படம் |
நம் இந்திய வணிக சினிமாவின் பெருமைக்கு பின்னின்று பாடுபட்ட ஒளிப்பதிவாளர்களில் காலம் சென்ற ராது கர்மாகருக்கு மிகுந்த பங்குண்டு,Kismat Ki Dhani (1945) படத்தில் அறிமுகமானவர் அதன் பின்னர் இயக்குனர் ராஜ் கபூரூடன் இணைந்து நான்கு தலைமுறை காலம் பயணித்து,அவரின் ஆவாரா[1951] துவங்கி ராம் தேரா கங்கா மெய்லி[1985] வரை உடன் பணியாற்றியவர்.அதன் பின்னர் தன் முதுமையிலும் Param Vir Chakra (1995) படம் வரை பணியாற்றிவிட்டுத் தான் ஓய்ந்தார், அப்படங்களை உலக அரங்கின் இந்திய வணிக சினிமாவாக வியந்து பேச வைத்தவர்.
ஷ்ரீ 420 ராஜ்கபூர் |
இவரது கருப்பு வெள்ளை படங்கள் காவியங்கள் என்றால் இவரின் வண்ணப் படங்கள் இதிகாசங்கள், இவர் வைத்த ஃப்ரேம்கள் ,காம்போசிஷன்கள், இயற்கை மற்றும் செயற்கை பிரம்மாண்டத்தின் அழகியலையும் , மனிதத்தின் ஒவ்வொரு பரிணாமத்தையும் ஒருங்கே பறை சாற்றுபவை. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை சற்றும் தவற விடாமல் அற்புதமாக பதிவு செய்து,உச்சம் தொட்டவை, க்ளாஸிக் சினிமாவின் மாபெரும் சூத்திரதாரி, எங்கோ வங்காளத்தின் ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழைக் கலைஞராகவே மடிந்தவர்,குடும்ப வாரிசு இல்லாவிட்டாலும்,தொழிலுலகத்தில் மானசீக வாரிசுகள் நிரம்பியவர்.
1993 ஆம் வருடம் மறைந்த இவருக்கு 1995 ஆம் வருடம் தான் வாழ்நாள் சாதனையாளருக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தது நம் சினிமாவும்,அரசியலும்.
Radhu Karmakar: The Painter of Lights என்னும் இவரின் சுயவரலாற்றுப் புத்தகம் 2005 ஆம் ஆண்டு இவர் நினைவாக வெளியிடப்பட்டது,அதுவும் சினிமா ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்
இந்திய சினிமாவில் மாபெரும் கலைஞர்கள் மறக்கப் படுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும்,எத்தனையோ திரைப்படங்களுக்கு காவியத்தன்மை அந்தஸ்தை அளித்த இவருக்கு ஒரு உருப்படியான புகைப்படம் முழு இணையத்திலோ அல்லது இவரது விக்கி ஐஎம்டிபி பக்கங்களிலோ கிடையாது என்பது எத்தனை நகைமுரண்.
ராஜ்கபூரின் மூன்றாம் கண் என்று புகழப்பட்ட ஒளிப்பதிவாளர் ராது கர்மாகர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜாக் கார்டிஃப்ஃபிடம் சென்று ஆறு மாத காலம் தங்கி டெக்னிகலர் போட்டோக்ராப்பி பயின்றார்.
1956ஆம் ஆண்டு திரும்பி வந்து ராஜ்கபூரின் ஷ்ரீ 420 படத்துக்கு மிக அருமையாக கருப்பு வெள்ளையில் மிக தத்ரூபமான தொலைநோக்குடன் ஒளிப்பதிவு செய்து பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார்.
‘Shree 420′ படத்தில் ‘Pyar hua ikrar hua’ பாடலைப் பார்த்த சார்லி சாப்ளின் இப்பாடலை முழுக்க அவர் ஸ்டுடியோவுக்குள் படமாக்கியதை நம்பவில்லையாம், அது ஒரு நகரத்தின் சாலை என்றே நினைத்ததாகச் சொன்னாராம். இதை ராது கர்மாகரின் Radhu Karmakar: The Painter of Lights புத்தகத்தில் அவர் விரிவாய் எழுதியிருக்கிறார்.
http://en.wikipedia.org/wiki/Jack_Cardiff
ராஜ்கபூர் இறந்த பின்னரும் கூட இவர் அவர் மகன் ரந்தீர் கபூரின் ஹென்னா படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்தார். இவர் எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் கூட ராஜ்கபூரின் ஆர்.கே.பிக்சர்ஸின் கம்பெனி கேமராமேன் என்னும் அடைமொழி அளவுகோலைக் கொண்டே இவரை சினிமாவில் பார்த்தனர்.
இதே துயரம் தான் இந்திய சினிமாவின் மற்றோர் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரான வி.கே.மூர்த்திக்கும் நிகழ்ந்தது.அவரும் ஒளிப்பதிவில் எத்தனையோ சாதனைகளை செய்திருந்தாலும் கூட குருதத் கம்பெனியின் ஆஸ்தான கேமராமேன் என்னும் அடைமொழி அளவுகோலைக் கொண்டே அவரையும் சினிமாவில் பார்த்தனர். ராது கர்மாகர் சினிமாவில் கிடைக்கும் பணம் புகழுக்கெல்லாம் என்றுமே ஆசைப்பட்டதில்லை என்று அவரின் மனைவி இந்த புத்தகத்தில் சொல்கிறார்.ராது கர்மாகார் ஆசைப்பட்டதெல்லாம் இந்தியில் ஆர்சன் வெல்ஸ் இயக்கிய சிட்டிசன் கேன் படத்துக்கு ஈடான ஒரு படைப்பை தரவேண்டும் என்பது தானாம்,அவரது இயக்குனர் கனவு Jis Desh Mein Ganga Behti Hai திரைப்படம் மூலம் நனவானாலும்,இதுவே கடைசியாகவும் ஆயிற்று,அதன் பின்னர் அவர் தன்னை ஒளிப்பதிவாளராகவே முன்னிறுத்திக்கொண்டார்.
இவரின் இந்த முக்கியமான படைப்புகள்,சினிமா ஆர்வலர்கள், சினிமாத்துறையில் பயிலும் மாணவர்கள் கண்டிப்பாக காண வேண்டியவை,தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளும் உந்துசக்தியாக இப்படைப்புகள் விளங்கும் என்பது திண்ணம்.
Kismat Ki Dhani (1945) கருப்பு வெள்ளை
Jwar Bhata (1944)கருப்பு வெள்ளை
Milan (1946)கருப்பு வெள்ளை
Naukadubi (1947)கருப்பு வெள்ளை
Mashal (1950)கருப்பு வெள்ளை
Samar (1950)கருப்பு வெள்ளை
Awaara (1951)கருப்பு வெள்ளை
Jagte Raho (1956)கருப்பு வெள்ளை
Shree 420 (1955)கருப்பு வெள்ளை
Sangam (1964)வண்ணம்
Aman (1967)வண்ணம்
Sapnon Ka Saudagar (1968)வண்ணம்
Mera Naam Joker (1970)வண்ணம்
Be-Imaan (1972)வண்ணம்
Bobby (1973)வண்ணம்
Sanyasi (1975)வண்ணம்
Dhoop Chhaon (1977)வண்ணம்
Satyam Shivam Sundaram (1978)வண்ணம்
Love Story (1981)வண்ணம்
Prem Rog (1982)வண்ணம்
Ram Teri Ganga Maili (1985)வண்ணம்
Adventures of Tarzan (1985)வண்ணம்
Dance Dance (1987)வண்ணம்
Commando (1988)வண்ணம்
Henna (1991)வண்ணம்
Param Vir Chakra (1995)வண்ணம்
இவரின் விக்கி பக்கம்
http://en.wikipedia.org/wiki/Radhu_Karmakar
இவர் பற்றிய தி இந்து நினைவுக் கட்டுரை
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/memories-of-a-lifetime-through-a-lens/article1434449.ece
இவரின் Radhu Karmakar: The Painter of Lights புத்தகம் பற்றிய விமர்சனம் ,புத்தகம் 216 பக்கங்கள்,விலை 250 ரூபாய்.
http://www.dnaindia.com/lifestyle/books-and-more-a-self-effacing-genius-1195587
இவர் படத்தின் ஆவணக் காப்பு பக்கம்