பத்லாபூர் திரைப்படத்தில் எத்தனையோ காட்சிகள் பிடித்திருந்தாலும்,இந்த கடைசி காட்சி என்னை மிகவும் பாதித்த ஒன்று.
வாழ்வில் திருந்தி வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைக்கப்பெறாத லயாக் [நவாஸுதீன் சித்திக்]தன் அம்மாவிடம் சென்று காலஞ்சென்ற அப்பாவைப் பற்றி ஏதேனும் நல்லது இருந்தால் சொல்லு என்கிறான்,அவளால் எத்தனை முயன்றும் சொல்ல முடியவில்லை.
விடியலில் தீர்க்கமான முடிவுடன் கிளம்பும் லயாக், தான் செய்யாத இரட்டைக்கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு,அன்று ஓய்வு பெறும் போலீஸ் அதிகாரியிடம் தன் லாவகமான நடிப்பால் அதை நிரூபித்து சரணடைகிறான்.அவருக்கு 15 வருட வழக்கை தன் இறுதிநாளன்று முடித்த பெருமை கிடைக்கிறது,இரட்டைக் கொலைகளை கருணையின்றி செய்தவனுக்கு திருந்தி வாழ இரண்டாம் வாய்ப்பு கிடைக்கிறது.
டாக்டர்கள் கணிப்பின் படி அவன் வயிற்றில் இருக்கும் புற்றுநோய் அவனை ஒருவருடத்துக்கு மேல் வாழ விடாது. அதற்கென்று தன் நகைச்சுவையான இயல்பை அவன் விட்டுவிடவில்லை,தன் பேங்காக் கனவு தகர்ந்ததை சிறையில் தன் எதிராளிகள் கிண்டல் செய்வர் என்று அவர்கள் அருகே சென்று பேங்காக் மஜாவாக இருந்தது என்று கூலிங் க்ளாஸை போட்டுக்கொண்டு ஸ்டைலாக போஸ் தருகிறான். அவர்களை எப்போதும் போல கோட்டி செய்து கொண்டே இருக்கிறான்.
சிறையில் 7 மாதங்கள் கழிந்த நிலையில், விடுமுறை நாட்களிலும் கூட தீவிரமாக உழைக்கிறான்,தன் கீமோ தெரபி சிகிச்சையைக் கூட விட்டு விடுகிறான்,4நாட்களில் ஒரு மர நாற்காலி என்று தீவிரமாகவும் நேர்த்தியாகவும் செய்யத் துவங்கி விடுகிறான்.அது சந்தையில் 3000 ரூபாய்க்கு விலை போவதில் மகிழ்ச்சி அடைகிறான்.
தனக்கு வலி இல்லை ,ஆனால் நான் வலியால் புரண்டு துடித்தால் தான் சிறை அதிகாரிகள் இரக்கப்பட்டு கஞ்சா தருவதால் அப்படி நடிக்கிறேன் என தன்னைக் காண வந்து கீமோ சிகிச்சை எடுக்கச் சொல்லும் சமூக சேவகியிடம் [திவ்யா தத்தா] சொல்கிறான்,
அவர் இவனிடம் பேசி பலனில்லை என்றவர் , அவன் செய்யும் அழகான நாற்காலியில் தனக்கும் ஒன்று வேண்டும் அதற்கு தள்ளுபடி தருவாய் தானே என்கிறார்.அவன் தலையசைத்துவிட்டு நாற்காலியை தேய்த்து மெருகேற்றுவது போல காட்சி முடியும்,இந்திய சினிமாவில் மிகவும் ஆக்கபூர்வமான காட்சி இது.
பத்லாபூர் திரைப்படத்தின் சிறைக்காட்சிகள் நாஸிக் சிறை வளாகத்தினுள் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கப்பட்டன,ஒவ்வொரு ஃப்ரேமிலும் தத்ரூபம் கொண்டுவர மெனக்கெட்டிருப்பார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
பத்லாபூர் படம் பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள்.