சினிமாவில் ஸ்நோ க்ளோப்கள் | Depiction of Snow Globe in Films

ஸ்நோ க்ளோப் எனப்படும் கண்ணாடி அலங்கார உருண்டையை நாம் முக்கிய திரைப்படங்களில் பார்த்திருப்போம், பளிங்கு போன்ற நீரால் நிரப்பப்பட்டு,உள்ளே இயற்கைக் காட்சிகள் ,பறவைகள், விலங்குகள் அல்லது மணமக்களின்  வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

பழைய திரைப்படங்கள் துவங்கி இன்றைய திரைப்படங்கள் வரை ஸ்நோ க்ளோப்களுக்கு நீங்காத இடம் உண்டு,ஆனால் அவை பெரும்பாலும் சோகத்தையே பறைசாற்றுகின்றன.

எப்படி ஹிட்ச்காக்கின் சித்தாந்தப்படி ஒரு துப்பாக்கிக்கு க்ளோஸப் வைத்தால் அது வெடித்தே தீருகிறதோ, இந்த அழகிய ஸ்நோ க்ளோப்களும்  சினிமாவில்  அழிவின் சின்னமாகவே இருக்கின்றன.

Unfaithful [2002] படத்தில் ஆதர்சமான கணவன் [Richard Gere] மனைவியின்[Diane Lane]  12 வருட  இல்வாழ்க்கை  ஒரு அழகிய புத்திசாலி இளைஞனின் [Olivier Martinez] குறுக்கீட்டால் தடுமாறுகிறது, மனைவி தன்னைக் கட்டுப்படுத்த முயன்று தோற்று வழி தவறி விடுகிறாள்,ஒரு கட்டத்தில் தன் கணவன் தனக்கு திருமணநாளுக்குப் பரிசளித்த இந்த ஸ்நோ க்ளோபை, தன்  காதலனுக்கு பரிசளித்து விடும் அளவுக்கு பித்து முற்றுகிறது,

உளவறிந்த கணவன் காதலனைத் தேடிப்போய் பேசுகிறான்,ஆனால் அங்கே இந்த ஸ்நோ க்ளோப் இருப்பதைக் கண்டவன்,அவள் தன் பிறந்தநாளுக்கு பரிசளித்தது என காதலன் கூசியபடி சொல்ல, அந்த ஸ்நோக்ளோபை கையில் ஏந்தி கண்ணீர் விடுகிறான் கணவன்,இது நான் அவளுக்கு எங்கள் மணநாளுக்கு பரிசளித்தது என்று கூறி சுயபச்சாதாபத்தின் உச்சத்தில் கேவியவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த ஸ்நோ க்ளோபை எடுத்து அந்த இளைஞனின் மண்டையை உடைத்து விடுவான். அந்த இளைஞன்  அங்கே துடிதுடித்து குருதி வழிய மரணிப்பான், பின்னர் இந்த ஸ்நோ க்ளோப்பை சுத்தம் செய்து வீட்டுக்கு கொண்டுவந்து பழைய இடத்திலேயே வைத்து விடுவான் கணவன்.

பின்னொரு சந்தர்ப்பத்தில் மனைவி கணவன் செய்த கொலைக்காக அருவருக்க,கணவன் அவளின் முறை தவறிய உறவுக்கு அருவருப்பான்,உன்னைக் கொல்ல முடியவில்லை,அதனால் அவனைக் கொன்றேன் என்பான், மனைவியை அந்த ஸ்நோ க்ளோபை திறந்து பார்க்கச் சொல்வான்,அவள் திறந்தால் அதில் இவர்கள் மற்றும் குட்டி மகனின் புகைப்படம் இருக்க ,அதன் பின்னே Do not open until our 25 the anniversary. To my beautiful wife, the best part of everyday என்று எழுதியிருக்கும்.மிக அருமையான காட்சி அது.


ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில்   சினிமா டூப்பான ஷாரூக் கான பிரபல நடிகை தீபிகாவையை ஒருதலைக் காதல் செய்வார்,அவளை ஒரு தீவிபத்தில் காப்பாற்றவும் அவளின் உன்னதமான  நட்பு கிடைக்க,அதைக் காதல் என எண்ணுவார்,அவளுக்குப் பரிசளிக்க இந்த ஸ்நோ க்ளோபை வாங்குவார், ஆனால் நிஜத்தில் அந்த நடிகைக்கும் பிரபல தயாரிப்பாளர்  அர்ஜுன் ராம்பாலுக்கும் ரகசிய உறவு இருக்கும்.இந்த உறவால் நடிகை கருத்தரித்தும் விடுவாள்,ஊரறிய திருமணம் செய்து கொள்ள கேட்பாள்,இந்த விஷயத்தை கேட்ட தயாரிப்பாளர் தன் மண வாழ்க்கையும் சினிமா எதிர்காலமும் பாழாகிவிடும் என்று எண்ணி தன் புதிய படத்தின் செட்டுக்குள் நடிகையைப் பூட்டி வைத்து தீவைத்துக் கொல்வார்.பத்லாபூர் திரைப்படத்தில் ஆதர்ச இளம் தம்பதிகளான வருண் தாவனும் ,யாமி கௌதமும் இன்பச் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் ,இந்த ஸ்நோ க்ளோப்களை வாங்கி சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.அவளும் குட்டி மகனும் ஒரு வங்கிக் கொள்ளையில் கொல்லப்பட,ஒரே நாளில் வாழ்க்கை தடம் புரண்டுவிடும்.வருண்  15 வருடம் கழித்தும் பழிவாங்கும் வெறி அடங்காமல் இருப்பார்.அப்படி ஒரு நாள் தன் எதிரியின் வாழ்க்கைக்குள் தேடி நுழைந்தவர்,அங்கே மிக அந்த வசதியான வீட்டுக்குள் இந்த ஸ்நோ க்ளோப்கள் இருப்பதைக் கண்டவர் மிஷாவுக்கும் இதிலெல்லாம் மிகுந்த ஆர்வமிருந்தது என்பார். அதன் பின்னர் பழிவாங்கும் வெறி உச்சம் பெறும்,கணவன் மனைவி ஜோடியான விநய் பதக்கும்,ராதிகா ஆப்தேவும் அங்கே ஸ்தம்பித்துப் போவர்.சிட்டிஸன் கேன் படத்தின் துவக்கத்தில் ஃபாஸ்டர் கேன் தன் மரணப்படுக்கையில் இந்த ஸ்னோ க்ளோபைப் பார்த்து ரோஸ் பட் என்று கடைசியாக உச்சரித்து உயிர் துறப்பார்,இந்த கண்ணாடி உருளை அவர் கைகளில் இருந்து உருண்டு விழுந்து சிதறும்.அப்புள்ளியில் இருந்து படம் துவங்கும்.

கோயன் சகோதரர்களின் ஃபார்கோ க்ரைம் நுவார் திரைப்படத்தின் ஒரிஜினல் ஸ்பெஷல் எடிஷன் VHS வாங்கியவர்களுக்கு  இந்த ஸ்நோ க்ளோபை இலவசமாகத் தந்தனர். அதனுள் ஃபார்கோ திரைப்படத்தின் முக்கியமான குற்றச்செயல்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன, ரசிகர்கள் அதை பெருமையான சேமிப்பாக இன்றும் வைத்திருப்பதைப் படித்தேன்,

ஃபார்கோ படத்தில் பனிச்சூழலில் கார் ஒன்று கவிழ்ந்திருக்கும்,அருகே பெண் போலீஸ் அதிகாரி ஃப்ரான்கஸ் மெக்டார்மெண்ட் துப்பாக்கியுடன் நின்றிருப்பார்,அதைக் குலுக்க, கிளம்பும் வெந்நிற பனித்துகள்கள் ,ரத்த நிறத்தில் மாறும். மற்றொரு பயங்கர காட்சியான wood cutter காட்சியும் இந்த ஸ்நோ க்ளோப்களாக இடம் பெற்றிருந்தன.என்ன ஒரு விளம்பர யுக்தி பாருங்கள்?
Add caption

ஸ்நோ க்ளோப்களை வேறு எங்காவது திரைப்படத்தில் பார்த்திருந்தால் குறிப்பிடுங்கள் நண்பர்களே
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)