பாகுபலி பிரம்மாண்டம் என்னும் சொல்லுக்கே காப்புரிமை பெற்றிருக்கும்
படம் என்றால் மிகையில்லை, படம் பார்ப்பவரை கண் இமைக்க மறக்க வைக்கும் படம்
சமீபத்தில் இதுவாகத் தான் இருக்கும்.
இயக்குனர் ராஜ்மவ்லி இந்திய
சினிமா ரசிகர் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டார், திரும்பத்
திரும்ப படம் பார்க்கச் செல்லும் ரிப்பீட்டட் ஆடியன்ஸே இதற்கு சாட்சி,
ஒருவரை விமர்சகர் முகமூடியை கிழித்தெறிந்து விட்டு பார்க்க வைக்கும் படம்,250 கோடி பணம் செலவிடத் தயாரிப்பாளர் தயாராக இருந்தால் மட்டும் யாராலும்
இப்படி படம் எடுத்து விட முடியாது, மிகப் பெரிய பொருப்பு இது,
இயக்குனருக்கு அபாரமான கற்பனை, அழகுணர்ச்சி, ஆளுமைத்திறன் அமைந்திருக்க
வேண்டும், இயக்குனரின் கற்பனைத் திறனை செல்லுலாய்டுக்கு மாற்ற அபாரமான
பயிற்சி வேண்டும்,
அப்பயிற்சியை இயக்குனர் ராஜ் மவ்லி தன் முந்தைய மகதீரா, நான் ஈ படங்கள் மூலமே படிப்படியாக பெற்றிருக்கிறார்,
பாகுபலியில் திரிசூல வியூகம் என்னும் போர் யுத்தியை மினியேச்சர் சிப்பாய்கள் தளவாடங்கள் கொண்டு விளக்கியும் அதை நேர்த்தியுடன் செயல்படுத்தியும் இருந்தனர்.
காலகேயர்களின் ஆஜானுபாகுவும் பயங்கரமும் பிரமிக்கும் படி இருந்தது,காலகேயர்களின் அரசனும் ,வீரர்களும்,விற்போரும் 300 படத்தில் வந்த கரிய உயரமான பெர்ஷிய நாட்டு அரசன் Xerxes,யும் அவன் போர் வீரர்களையும் நினைவூட்டினர்,ஆனால் பாகுபலியின் போர்காட்சிகள் தனித்துவமாக அமைந்திருந்தது எங்கும் அனிமேஷன் துருத்திக் கொண்டு தெரியாததும் அதன் சிறப்பு.
படத்தில் மிகச்சிறிய குறைகள் இருந்தாலும் அவை படத்தின் பிரம்மாண்டத்தின் முன் தவிடு பொடியாகிறது, படம் ஐமேக்ஸில் பார்த்து படத்துடன் ஒன்றுங்கள். படத்தைக் கழுவி ஊற்றிக் காயப்போடுபவர்கள் பாகுபலி இரண்டாம் பாகத்துக்கும் கொஞ்சம் மீதம் வைத்துக் கொள்ளுங்கள்.