மலையாளம் சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலையாளம் சினிமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அண்ணாநகர் விஸ்வேஸ்வரையா டவர் வடிவமைத்த யஹ்யா மெர்சண்ட் மற்றும் நாடோடிக்காற்று திரைப்படம்

அமீரகத்தில வேலை பார்க்கையில் வேலைமீது ஓவர் பில்டப் தரும் நபர்களை மலையாளிகள் பாவனாயி என்று கிண்டல் செய்வதை கவனித்துள்ளேன்,தமிழில்
 "கதாநாயகன்" பார்த்தவர்கள் ஒருமுறை மூல வடிவமான நாடோடிக்காற்று (1987) பாருங்கள்,ஒரு க்ளாஸிக் என்பதன் அர்த்தம் அறியலாம் .

நாடோடிக்காற்றில் சிரிப்பு ஓவர்பில்டப் வில்லன் பாவனாயி  கதாபாத்திரம் உலகெங்கும் மலையாளிகளிடம் அப்படி புகழ்பெற்றது, 

அது போலவே சிரிப்பு ஃப்ராடு கஃபூர் இக்கா (மாமுக்கோயா) கதாபாத்திரம் உலகெங்கும் மலையாளிகளிடம் அப்படி புகழ்பெற்றது.

கள்ளத்தோணியில் கொச்சினில் இருந்து துபாயில் செல்ல முயன்று மெட்ராஸில் இறக்கிவிடப்பட்ட மோகன்லாலும் சீனிவாசனும் வில்லன் திலகனின் கடத்தல் தொழிலுக்கு தங்களையும் அறியாமல் அத்தனை குழப்பமும் நஷ்டமும் விளைவிப்பர், அந்த இரு வேலையில்லா பட்டதாரிகளை கொல்ல பம்பாயின் புகழ்பெற்ற பெய்ட் கில்லரான பாவனாயியை (இயற்பெயர் பி.வி.நாராயணன் ) (கேப்டன்ராஜ்) பெரும்பணம் தந்து தருவிப்பார் திலகன், பாவனாயி பெட்டியில் வில் அம்பு, மலபார் கத்தி, RDX பாம்ப், டேப்ரிக்கார்டர் பாம்ப், துப்பாக்கி என அனைத்தும் profesional ஆக வைத்திருப்பார், இவரும் திலகனும் கொலைசதிக்கு திட்டம் தீட்டுகையில் சிரிப்பு சரவெடியாக இருக்கும்.

மோகன்லால் காய்கறி விற்கும் தள்ளு வண்டியில் RDX பாம்ப் வைப்பார் பாவனாயி, அதில் தப்புவார் மோகன்லால்.

இரண்டு நாள் தான் கான்ட்ராக்ட் தந்த  அபாயின்மெண்ட் என்பதால் அடுத்து சீனிவாசனை கொல்ல விழைவார் பாவனாயி ,இசை அமைப்பாளர் சங்கர் கணேஷுக்கு ஒருவர்  டேப்ரிக்கார்டரில் குண்டு வைத்து தபாலில்  அனுப்பி அவர் இயக்கியதும் வெடித்ததே அதே டெக்னிக்கில் சதி செய்வர் , இங்கே சாலையில் அனாதையாக இருந்த டேப்ரிக்கார்டரை பார்த்ததும் அதை ஆன் செய்யாமல் கொண்டு போய் அடகு வைக்க மார்வாடி கடைக்கு செல்வார் சீனிவாசன், பாவனாயிக்கு மார்வாடி கடையில் வெடித்தால் விபரீதம் என்பதால் கடைவாசலில் வைத்து தன் கையாளை வைத்து பெரும் பணம் தந்து டேப்ரிக்கார்டரை திரும்ப வாங்கி வருவார்.

இறுதியாக இருவரை சர்கிள் இன்ஸ்பெக்டர் அழைத்ததாக ஆள்விட்டு அண்ணாநகர் விஸ்வேஸ்வரையா டவருக்கு வரசொல்லி, பெட்டியை திறந்து காட்டியவர் எப்படி சாக ஆசைப்படுகிறீர்கள் என்பார், 

அங்கே 12 ஆவது மாடியில் சண்டை நடக்கையில் இவர்கள் மீது பாய்கிறேன் என்று கைப்பிடி கம்பியில் பாய்கையில் குறிதவறி தரையில் விழுந்து இறப்பார் பாவனாயி .

1987 ஆம் ஆண்டு அண்ணாநகர் விஸ்வேஸ்வரையா டவரின் படங்களைப் பாருங்கள், அந்த கல்வெட்டு மீது கூட நம் ஆட்கள் எப்படி கைவரிசை காட்டி உள்ளனர் பாருங்கள், இந்த கோபுரத்தை வடிவமைப்பதற்கு முன் அகில இந்திய அளவில் வடிவமைப்பு போட்டி நடத்தப்பட்டது, அதில் வென்றவர் இந்தியாவின் பழம்பெரும் கட்டிடக்கலைஞரான காலஞ்சென்ற திரு. யஹ்யா மெர்சண்ட் (Yahya Merchant) (1903-1990)ஆவார், மும்பையின் சர்JJ காலேஜ் ஆஃப் ஆர்கிடெக்சர் என்ற பெருமைமிகு கல்லூரியில் பயின்றவர். அவரது பெருமைமிகு தனித்துவமான படைப்புகள்,  பொதுகட்டிடங்கள்  இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நவீன இந்திய கட்டிடக்கலைக்கு பெருமை சேர்ப்பவை, 

இந்த விஸ்வேஸ்வரையா கோபுர வடிவம், துபாயின் புர்ஜ் அல் அராப் கட்டிட வடிவத்தின் முன்னோடி எனலாம், காரணம் புர்ஜ் அல் அராப் கட்டிடத்தின் படத்தை முதலில் 2000 ஆம் ஆண்டு ஒரு காலண்டரில் பார்க்கையில் நம் விஸ்வேஸ்வரையா டவர் தான் நினைவுக்கு வந்தது, வளைவான structural spines நிறுவி  மொத்த தளங்களை தாங்கிப்பிடிப்பது இரண்டு கட்டிடங்களும் கொண்ட ஒற்றுமை, anna nagar tower ல் ஐந்து  structural spine இருக்கிறது , burj al arab ல் நான்கு  structural spine இருக்கிறது . Quaid-e-Azam Mausoleum நினைவுச் சின்னத்தை வடிவமைத்தவர் யஹ்யா மெர்சண்ட்.

1968 ஆம் ஆண்டு மக்கள் உபயோகத்துக்கு 60 லட்சம் ரூபாய் செலவில் திறக்கப்பட்ட தொலைநோக்கான கட்டிடக்கலையைக் கொண்ட நூறடி உயர கோபுரம், எப்படி சுவற்றில் பெயர்களை எழுதி கிறுக்கி வைத்திருக்கின்றனர் பாருங்கள் நம் மக்கள், கல்வெட்டில் ஆர்கிடெக்ட் பெயரைக் கூட அவரின் மேன்மை அறியாமல் மார்க்கரால் மெழுகி தன்பெயரை எழுதி வைத்திருந்தனர் என்று இணைப்பு படம் ஒவ்வொன்றாக பாருங்கள், நான் முதலில் 1998 ஆம் ஆண்டு செல்கையில் இன்னும் கோரமான வசைகள் சுவர்களில்  எழுதி இருந்தது, இன்று பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முழுக்க கிரில்களால் மூடி சுவர்களில் கலை வேலைபாடுகள் செய்து புதிய தரை வேய்ந்து சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் திறந்துள்ளனர், இனியாவது மக்கள் கிறுக்க கொண்டுவரும் கரிக்கட்டிகள் பென்சில்கள் கைப்பற்றப்பட வேண்டும்.இனி ஒரு மாமாங்கம் இந்த கோபுரத்தை பூட்டி வைக்கும் அவலம் நேர வேண்டாம்.

உணரு | இயக்குனர் மணிரத்னம்


இயக்குனர் மணிரத்னத்தின் உணரு மலையாளப் படத்தில் வரும் முக்கியமான காட்சி இது,

 கூலிடோக்கன்களை குலுக்கல் சீட்டு எழுதிப் போட்டு எடுக்கும் காட்சி, ஏழைப்பாவங்களின் விடியலுக்கான ஒன்று கூடல்,

இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை, கொச்சி துறைமுகத்தில் மீனவகிராம மக்கள் ஏழு பேருக்கு மட்டும் தினக்கூலி வேலைக்கான டோக்கன் தந்துள்ளனர்,
 
அங்கே இருப்பதோ  ஐம்பது குடும்பங்கள்,ஐம்பது குடும்பத் தலைவர்கள்.அத்தனை பேரும் நெடுநாட்களாக வேலையின்றி இருப்பவர்கள்,

அத்தனை பேர் முகத்திலும் ஏக்கம், அங்கே ஒவ்வொருவர் பெயரையும் டிஜி ரவி எடுத்துப் படிக்கையில் சேவியர் என்ற குடும்பத் தலைவன் முகத்தில் கவலை ரேகைகள் மின்னலாய் ஓடுகின்றன,

தன் பெயர் அடுத்து வராதா? என்று ஸ்தோத்திரம் போட்டுக் கொண்டே இருக்கிறார்,உடன் அவர் மனைவியும்,ஒரு குலுக்கல் சீட்டை சேவியரின் மகளே எடுத்தும் கூட இவர் பெயர் வரவில்லை,

இவர்கள் இனி விஷத்தை தின்று தான் சாகவேண்டும்,அங்கே புதிய வந்தேறியான ராமு (லாலேட்டன் ) சேவியரின் முகத்தில் அவர் மனத்தைப் படித்தவர் தன் டோக்கனைக் கொண்டு சென்று அவர் வீட்டில் தருகிறார், 

அதே நேரத்தில் சேவியர் ராமுவுக்கு அந்த கிராமத்தில் தஞ்சம் தந்து அவர் பெயரைக் குலுக்கலில் சேர்த்த ரத்தீஷிடம் சென்று மல்லுக்கட்டுகிறார், அப்போது சேவியரின் மகள் வந்து அப்பாவிடம் ராமு விட்டுத் தந்த டோக்கன் பற்றிச் சொல்கிறாள், 

சேவியரின் முகம் நாணுகிறது, நாதழுதழுக்கிறது,நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் சேவியர்.

உணரு என்றால் விழித்தெழு என அர்த்தம்.இசைஞானியின் பின்னணி இசை இந்தக் காட்சிக்கு தந்த அழுத்தத்தை வர்ணிக்க வார்த்தைகளில்லை

இத்தனை முக்கியமான சேவியர் கதாபாத்திரம் செய்த பாஸ்கர குருப் என்ற ஒப்பற்ற நடிகருக்கு விக்கி IMDb என எதிலும் உணரு படத்திற்கு க்ரெடிட் இல்லை,

நடிகர் பாஸ்கர குருப் இயக்குனர் பி.பத்மராஜனின் கள்ளன் பவித்ரன் திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர், ஊரில் திடீர் பணக்காரனாகிவிட்ட பவித்ரனை எப்படியாவது வழக்கில் சிக்க வைக்க  தவியாய் தவிப்பார், கடைசியில் மோந்தையையும் கிண்டியையும் கைப்பற்றி பெரும் பணக்காரனாகிவிட்ட பவித்ரனை கைது செய்வார்.

#உணரு,#மணிரத்னம்,#இசைஞானி,#மோகன்லால்,#ராமச்சந்திரபாபு,#பாஸ்கர_குருப்

ஸ்ரீ கிருஷ்ண பருந்து | மலையாள திரைப்படம் | 1984

ஸ்ரீ கிருஷ்ண பருந்து மலையாள திரைப்படம் 1984 ஆம் ஆண்டு வெளியானது , மலையாள   எழுத்தாளர்  P.V. தம்பி அவர்கள் எழுதிய மாய யதார்த்த கதை இது,மலையாள மண்ணில் யட்சிணி பற்றிய நாட்டார் கதைகளுக்கு பஞ்சமில்லை,மலையாள சினிமாவில் யட்சிணி பற்றி நிறைய படங்கள் வந்ததுண்டு, இப்படம் அதற்கெல்லாம் முன்னோடி. இக்கதையை தமிழ் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான A.வின்சென்ட் அவர்கள் ஒரு gothic horror thriller ஆக தரமாக  இயக்கியிருக்கிறார் , படத்தின் ஆதாரசுருதியான மிரட்டி மனம் மயக்கும் இசையை k.ராகவன் மாஸ்டர் தந்திருக்கிறார், 

A.வின்சென்ட் மாஸ்டர் அவர்களின்  மகன் அஜயன் வின்சென்ட் எளிமையின் அழகியலாக ஒளிப்பதிவு செய்துள்ளார்,
எனவே  படைப்பு பிரம்மாண்டம் என்று களமிறங்கி எங்கும் பல்லிளிக்கவில்லை,
மூக்குடைபடவில்லை, அழகியலே பிரம்மாண்டம், நல்ல கதையே அதற்கு காட்சிகளை வரித்துக் கொள்ளும் என்று படம் உணர்த்துகிறது.

இரண்டரை மணி நேரம் படத்தை கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது.
இந்தப்படத்தில் மாயாஜாலம் நிரம்பியிருந்தாலும் கூட , நாயகனின் பாலியல் வேட்கை  படத்தின் துவக்கம் முதல் கதையூடே இழையோடி முடிவு வரை நீளுவதால் இப்படம் வயது வந்தோருக்கு மட்டுமானது.

இப்படத்தில் தமிழ் நடிகர் G.சீனிவாசன் (புதிய வார்ப்புகள் வில்லன்) சூரக்காற்று பட்டாத்ரி என்ற அசகாய மந்திரவாதியாக தோன்றியுள்ளார், தமிழ் நடிகை காஞ்சனா நாயகனின் அம்மா குன்யிக்குட்டியாக தோன்றியுள்ளார், 

இப்படத்தின் கதை:-

மன்னர்கால கேரளத்தில் புத்தூர் இல்லம் ஒரு பாரம்பரிய தரவாட்டுக் குடும்பம், இது தாய்மாமனிடமிருந்து மருமகனுக்கு வழி வழியாக குடும்ப மாந்த்ரீக வித்தை பயிற்றுவிக்கப்பட்டு, ஊர் நலத்துக்கு வேண்டி மட்டுமே இக்குடும்பம் வாழ்கிறது, எந்த பாம்பு தீண்டினாலும் தெய்வ சங்கல்பத்தால் உடனே தாந்த்ரிக்கு ஞான திருஷ்டியில் தெரிகிறது, அவர் கடித்த பாம்புக்கேற்ற மருந்தை முறிவாக தந்து பாம்புக்கடி பட்டவரை பிழைக்க வைத்து விடுகிறார்.
இவர்களின் குலதெய்வம்  கருட பகவானின் ஆசீர்வாதத்தின் கீழ், நேர்மறை தாந்த்ரீக மந்திரங்களை மட்டுமே இக்குடும்பம் முன்னெடுக்கிறது , 

இவ்வீட்டைக் காக்கும் இக்கழுகு  ஸ்ரீ விஷ்ணுவின் வாகனமான கிருஷ்ணப் பருந்தாகும், இவ்வீட்டின் தாந்த்ரி கருடனை வழிபட்டு புனித நீரைப் பயன்படுத்தி விஷ பாம்பு கடித்ததால் உயிருக்கு போராடுபவர்களை  உயிர்ப்பிக்கும் வல்லமைக்காக உள்ளூர் வெளியூர் என பேதமின்றி பரவலாக மதிக்கப்படுகிறார். 

குடும்பத்தின் தற்போதைய தாந்த்ரீக மந்திரவாதியான பப்பு (ஜகந்நாத வர்மா), அவரது மரணத்தை முன்கூட்டியே கணித்தவர், அவருடைய எல்லா தாந்ரீக அறிவையும் அவரது மருமகன் குமாரன் தம்பிக்கு (மோகன்லால்) மாற்ற முடிவு செய்கிறார். 
இந்த தாந்த்ரீக வித்தைக்காரர் தீவிர பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்து விரதம் இருக்க வேண்டும் என்பதால், மது , மாது , கஞ்சா போதையில் மட்டும் சதா நேரம் செலவிடும்  குமாரன் தம்பி , இந்த தாந்த்ரீகன் என்ற  மிகப்பெரிய பொறுப்பை  தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறார்.
பப்பு தன் தாந்த்ரீக அறிவு முழுவதையும் குமரனுக்கு மாற்றிவிட்டு இறந்து விடுகிறார். 

இதன் மூலம் பெயரெடுத்த பெண்கோந்தனான  குமாரன் பாம்புக் கடியை குணப்படுத்துவதற்கும் தீய சக்திகளை அண்டாமல் விரட்டுவதற்கும் பிரபலமான உள்ளூர் மந்திரவாதியாக விரைவில் மாறுகிறான்.
தாய்மாமனின் கட்டளைப்படி அவன் இறந்த 41 ஆம் நாள் இரவு குமரன் பாரம்பரிய மந்திரம் பற்றிய கையெழுத்து ஓலைச்சுவடிப் பிரதிகளை படிப்பதற்கு எடுத்து வர தன் மூதாதையரின் பாழடைந்த அரண்மனைக்குச் செல்கிறான். 

ஓலைச்சுவடிகளை எடுத்துக்கொண்டு  திரும்பி வரும்போது, ​​குமாரனைக் கவர முயலும் லட்சுமிக்குட்டி யட்சிணியை எதிர்கொள்கிறான் குமாரன்.  
சில வருடங்களுக்கு  முன் குமாரனுடன் தரவாட்டு வீட்டில் பரணில் வைத்து உடலுறவில் ஈடுபட்டு வெளியேறுகையில், பணிப்பெண் லட்சுமிக்குட்டி அவ்வீட்டின் தாந்த்ரியுடைய பிரம்மச்சர்யத்தை காக்கும் ஐந்து தலை பாம்பு கடித்து உயிரிழந்திருக்கிறாள்.
அவளுக்கு குமாரன் மீதான அளவு கடந்த ஆசையால் அவள் குமாரனை விட்டுப் பிரியாமல் அவன் போகிற இடங்களுக்கு எல்லாம் பின் தொடர்ந்து யட்சிணியாக சென்று சல்லியம் செய்கிறாள்.
குமாரன் தனது புதிய மந்திர சக்தியை பிரயோகித்து  லட்சுமிகுட்டி யட்சிணியை கட்டுக்குள் வைத்து ஒரு தனி அறைக்குள் பூட்டி பந்தனம் செய்து விடுகிறான், 

லட்சுமிக்குட்டி யட்சிணி குமாரனிடம் தீவிர பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கும் வரை அவனைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து அந்த அறைக்குள் தானே சென்று அடைந்து கொள்கிறாள். 

பக்கத்து ஊரின் காளி உபாசகன் , அதர்வன மந்திரவாதியான சூரக்காட்டு பட்டாத்திரி துர்மந்திரவாதி , 
அவன் குமாரனின் மந்திர சக்திகளை அழித்து அவன் புகழை அழித்து தானே மிகப்பெரியவன் என்று  தன் ஆதிக்கத்தை அவ்ஊரில்  நிறுவ விரும்புகிறான்,

அவன் தூமா என்ற அரக்கனுடன் ஆலமரத்தில் வசிக்கும் வட-யக்ஷியை வணங்குபவன்.  
குமாரனை அழிப்பதற்கு பேய்கள் முதல் பெண்கள் வரை தீவிரமாக ஏவி விட்டு பிரயோகிக்கிறான், 
குமாரனின் பிரம்மச்சர்யத்தை கலைத்து விரதம் நிலைகுலைக்க எல்லாவற்றையும் முயற்சிக்கிறான், ஆனால் குமாரன் தனது குடும்ப தெய்வங்கள் கருடன், ஹனுமன்  துணையால் லாவகமாக அதிலிருந்து தப்பிக்கிறான்.  

இதற்கிடையில், குமாரனிடம் பேய் ஓட்டுவதற்கு  அழகிய இளம்பெண் பானுமதி (பவித்ரா) அழைத்து வரப்படுகிறாள்.  முதல் பார்வையிலேயே குமாரன் பானுமதியால் ஈர்க்கப்படுகிறான் ,பேய் விரட்டும் போது பானுமதி மேல் ஆடைக்கு போர்த்தியிருந்த மேல் முண்டை வெறியுடன் அவிழ்த்து எறிய, அவளின் திமிரிய அங்கங்களை கண்டு விக்கித்து கடைவாயில் எச்சில் வழிய  உறைந்து போகிறான் குமாரன், அவள் தரையில்  மயங்கிச் சரிய, பானுமதியின் அம்மா அவள் மார்பகங்களை  துண்டை வைத்துப் போர்த்துகிறாள்.
அதுமுதல் குமாரனது கனவில் தோன்றி அவனை  தொந்தரவு செய்யத் தொடங்குகிறாள் பானுமதி. 
விரைவில் குமரன் தனது உணர்ச்சிகளின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விடுகிறான்,

லட்சுமிக்குட்டி யட்சிணியின் அழகிய தங்கையான நாணிக்குட்டியை (அருணா) பல முறை சுகித்த தைரியத்தில் நடுநிசியில் அவள் வீட்டுக்குப் போய் கதவைத் தட்டி அவள் கையைப் பிடித்து உறவுக்கு அழைக்கிறான் குமாரன், அவள் ஐந்து தலை நாகத்துக்கு பயந்தவள்,தன் அக்காவின் சாவுக்கு குமாரன் காரணம் என அறிந்தவள் ஆதலால்,  ஊரரிய எனக்கு ஒரு புடவை கொடு, ஊரறிய எனக்கு தாலி கொடு, நீ சொன்ன படி கேட்கிறேன் என கறாராக சொல்லி கதவை சாத்துகிறாள்.

வேறு வழியின்றி உள்ளூர் விபச்சாரியான மீனாட்சியை (பிரமீளா) தேடிப்போன  குமாரன், அவள் எத்தனை பயந்து மறுத்தும் விடவில்லை, தனக்கு மூன்றாம் நாள் என்று சொல்லியும் கேட்காமல்  முரட்டு வல்லுறவு கொள்வதன் மூலம் தனது பிரம்மச்சரியத்தை முறித்துக் கொள்கிறான்.

உறவு முடிந்தவுடன் கருடனை கைகூப்பி என்னை மன்னித்துவிடு என்கிறான், மீனாட்சி என் முதுகை உடைத்துவிட்டு கருடனிடம் மன்னிப்பு கேட்கிறாயா? என அலுத்துக் கொள்கிறாள்.  

குமாரனின் மாயாஜால சக்திகளின் சிதைவு இங்கே தொடங்குகிறது.
குமரன் தனது பிரம்மச்சரியத்தை மீறியதால், லக்ஷ்மிக்குட்டி யட்சிணி அவன் வீட்டிற்குள் சுதந்திரமாக சுற்றி அலையத் துவங்குகிறது.  
அம்படக் கள்ளனான குமாரன் மீண்டும் தனது மாயாஜால சக்தியைப் பிரயோகித்து, அவளை சமாதானப்படுத்தி தேற்றி,  தனது வீட்டின் மர அறைக்குள்  அடைத்து பூட்டி பந்தனங்கள் செய்து வைக்கிறான்.  

குமாரன்  தனது பிரம்மச்சரியத்தை மீறியதால், அவனால் இனி கருடனை அழைக்க முடியாத நிலை,  அவனது மந்திர சக்திகளை இழந்து விடுகிறான், எந்த பாம்புக்கடிக்கும் அவன் மருந்து பலிப்பதில்லை, எந்த பேயையும் அவனால் ஓட்ட முடிவமில்லை.  
பேரழகி பானுமதியை மணம் முடிக்கலாம் என்று அவள் தந்தையிடம் சென்று பெண் கேட்க, அவர் இனி  நீ மாந்த்ரீகத்துக்கு பெரும் பணம் பொருள் வாங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்,அது குடும்பத்தார் கொள்கைக்கு எதிரானது என்றாலும் சம்மதிக்கிறான் குமாரன்.

இழந்த புகழை மீட்கவும்  பணம் நிறைய  சம்பாதிப்பதற்காகவும் தன் குடும்பத்தார் படிக்கவே கூடாது என தடை செய்யப்பட்ட அதர்வன வேதங்களை தாய் மாமனின் ஓலைச் சுவடிகளை படித்து கற்றறிந்து வாராஹியை வேண்டி சூனியம் பலவும் செய்யத் தொடங்குகிறான் குமாரன், இது புகழ் பணத்துடன்  தன்வினையையும் உடன் கொண்டு வருகிறது.
குமாரன் பானுமதி திருமணத்திற்கு முந்தைய நாளில், குமாரன் லட்சுமிக்குட்டியின் ஆவி உருமாறிய யட்சிணி போன்ற தோற்றத்தால் ஒரு ஷணம் கவரப்பட்டு அவளுடன் உடலுறவில் ஈடுபட்டுவிடுகிறான், முடிவில் தனக்கும் பானுமதிக்கும் திருமணம் நடக்கப்போவதை பகிர்ந்து இனி என்னை சல்லியம் செய்யாமல் விலகிவிடு , நான் உன்னை இப்போதே விடுதலை செய்து விடுகிறேன் எனக் கெஞ்சுகிறான் குமாரன், லட்சுமிக்குட்டி யட்சிணியோ மிகுந்த அசூயை கொண்டவள் குமாரனை வேறு எந்தப் பெண்களுடனும்   உறவாட ஆண்மையற்றுப்  போவாய் என்று சபிக்கிறாள்.  
இதனால் மனமுடைந்த குமாரன் தாயிடம் சென்று திருமணத்தை நிறுத்த கேட்கிறான், அவள் முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு? ஏன் இப்போது விசனம் எனத் தேற்றுகிறாள்.

இப்போது குமாரனின் தாய், சகோதரி (சுகுமாரி ) சகோதரியின் சிறு வயது மகன்,சிறு வயது மகள் என  அனைவரையும் கொல்ல சூரக்காட்டு பட்டாத்திரி வட யக்ஷி மற்றும் தூமா அரக்கனை ஏவிவிடுகிறான். 
குமாரனின் குலதெய்வபக்தி மிக்க தாயை வாத யக்ஷியிடம் இருந்து கருடன் காப்பாற்றி விடுகிறது,
 குமரனின் சிறு வயது மருமகளை  தூமா அரக்கன் துரத்தி எரித்தும் விடுகிறான்.
சிறுவயது மருமகன் இடுப்பில் மந்திர தாயத்து அணிந்திருந்ததால் காப்பாற்றப்படுகிறான்.
குமாரன் பானுமதியை திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வரும் போதே அக்கா மகள் இறந்த துக்க செய்தியை எதிர் கொள்கிறான் குமாரன், 
குழந்தையின் மரணம் குமாரனின் தாயை தரவாட்டு வீட்டை விட்டே வெளியேற வைக்கிறது. 

லட்சுமிக்குட்டியின் சாபம் காரணமாக, குமாரன் பானுமதியுடன் உடலுறவைத் தவிர்க்க முயற்சிக்கிறான், 
இது பானுமதிக்கு குமாரன் மீது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.குமாரனுக்கும் லட்சுமிக்குட்டி யட்சிணிக்கும் உள்ள உறவை அவள் நேராக காண நேர்கிறது.  

இரவு, லட்சுமிக்குட்டியை சாதாரணப் பெண் என்று தவறாக நினைத்துக்கொண்டு, மாயாஜால பந்தன தடைகள் செய்த பூட்டை  தகர்த்து வெளிக்கொட்டாரத்திற்குள் நுழைகிறாள் பானுமதி. 

அந்த நொடிக்கு காத்திருந்த   லட்சுமிக்குட்டி யட்சிணி  பானுமதியின் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து விடுகிறது.

அது முதல் குமாரனை தொந்தரவு செய்யத் தொடங்குகிறது, யட்சிணியை அழிக்க குமாரன் செய்த மந்திர முயற்சியால்  பானுமதி கிணற்றில் விருந்து தற்கொலை செய்து இறக்கிறாள்.

விரக்தியடைந்த குமாரன் கருடன் மற்றும் குலதெய்வத்தை வணங்குவதை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்கிறான், தாய்மாமனின் ஓலைச்சுவடிகளை சிகப்புத் துணியில் சுற்றி பாழடைந்த அரண்மனையில் கொண்டு போய் வீசியும் விடுகிறான் , தனது தூரத்து உறவினரான துர்மந்திரவாதி குஞ்சாம்புவின் (பாலன் கே. நாயர்) சீடராகிறான், 
குமாரன் அது முதல் பன்றியின் தலை கொண்ட வாராஹி தேவியின் எதிர்மறையான ஆவி வார்தாலியை வணங்கத் தொடங்குகிறான். 
குஞ்சாம்பு தன் மரணத்தை ஞான திருஷ்டியில் கணித்தவன் தனது வித்தைகள் மொத்தத்தையும் குமாரனுக்கு தத்தம் செய்து தந்துவிட்டு உயிர் விடுகிறான், அவனை எரியூட்டுகிறான் குமாரன்.

அடுத்தடுத்து சூனிய சக்திகளின் உதவியுடன், குமாரன் தனது எதிரிகளை அழிப்பதில் வெற்றி பெறுகிறான், லட்சுமிக்குட்டி யட்சிணியை கல்லாக சமைத்து மரத்தடியில் பிரதிஷ்டை செய்கிறான்,   அதே போல் சூரக்காற்று பட்டாத்திரியை வாராஹியை வரவழைத்து ஏவி விட, வாராஹி அவனைக் கொல்ல எத்தனிக்கையில், அவனை கொல்லாதே தாயே,பைத்தியம் ஆக்கு போதும் என்கிறான் குமாரன், அது முதல் சூரக்காற்று பட்டாத்ரி ஊரறிந்த பைத்தியமாக வலம் வருகிறான்.

குமாரன் தனது மூதாதையரின் அரண்மனையில் தான் எறிந்து விட்டு வத்த  கையெழுத்துப் ஓலைச்சுவடிப் பிரதிகளை கைப்பற்றி பாதுகாக்க அவனது பங்காளி சேகரன் தம்பி (எம்ஜி சோமன்) மற்றும் தன் தாய் உள்ளிட்ட உறவுகள் திட்டமிட்டுள்ளதை அறிகிறான்.  
இது நடக்கக் கூடாது, குல வித்தை தன்னோடு போகட்டும் என  பேராசை கொண்ட குமாரன்,
தனக்கு படிப்பித்த துர்மந்திரவாதி குஞ்யாம்பு  இறக்கும் முன் தந்த எச்சரிக்கையை மறந்து அரண்மனைக்கு விரைகிறான், 

குமாரன் இப்போது  வர்த்தாலியின் உபாசகனாக இருப்பதால் , கருடன் , அனுமன் ,வாராஹி உட்பட மற்ற அனைத்து தெய்வங்களையும் வணங்கும் உரிமையையும் அவர்களின் பூரண அனுக்கிரஹத்தையும் இழந்து விடுகிறான்.  
குமாரன் அந்த பாழடைந்த அரண்மனைக்குள் நுழைந்தது தான் தாமதம்,சினம் மிகுந்த  கிருஷ்ண பருந்து அந்தரத்தில் தோன்றி குமாரனைத் கண்களில் கொத்தி  தாக்கி குருடாக்குகிறது. 

குமாரன் அந்த கையெழுத்துப் ஓலைச்சுவடிப் பிரதிகளை எடுக்க முயற்சிக்கும்போது, ​​​​காக்கும் தேவி அவன் முன்பாக தோன்றி தடுக்கிறாள். அவளை வர்தாலியின் உதவியுடன் எதிர்க்க முயற்சிக்கிறான் குமாரன், ஆனால் அனைத்து சக்திவாய்ந்த காக்கும் தெய்வத்தின் முன், வார்தாலி புறமுதுகிட்டு மறைந்து விடுகிறாள். 
காக்கும் தேவி குமாரனை சபித்தவள், அரண்மனைக்குத் தீ வைக்கிறாள். 

அங்கே கிருஷ்ணப்பருந்தின்  கடுமையான கண்கொத்தி தாக்குதலால் கண்களிழந்து தீக்காயங்களால் உடல் வெந்து கீழே விழுந்த குமாரனை வீட்டார் மன்னித்து விடுகின்றனர்,தீ யாரையும் நெருங்க விடுவதில்லை,  குமாரனின் சகோதரி மகன் பனிரெண்டு வயதுச் சிறுவன் தீக்குள் இறங்கி துணிந்து தாய்மாமனை தூக்கி எழுப்பி தோள் தந்து வெளியே இழுத்து வந்து மரணப்படுக்கையில் கிடத்துகிறான்.

மனம் திருந்தி லேசான குமாரன் குலமரபுப்படி தனது தாந்த்ரீக அறிவை மருமகனுக்கு மடைமாற்றித் தர மந்திரங்கள் கற்றுத் தர , ஆர்வமிகு  மருமகன்  சொன்ன வண்ணமே செய்ய ,குமாரன் ஓங்கி இறுதி மூச்சு விடுவதற்கும் மேலே அந்தரத்தில் மருமகன் மந்திரப் பிரயோகத்திற்கு ஸ்ரீ  கிருஷ்ண பருந்து வருகையில் படம் நிறைகிறது.

நம் நடிகர் கமல்ஹாசன் போலவே மோகன்லால் எல்லா பரீட்சார்த்தங்களையும் இளம் வயதிலேயே நிகழ்த்திவிட்டவர்,தன்  24 வயதில் இந்த ஸ்த்ரீலோல துர்மந்திரவாதி கதாபாத்திரத்தை தத்ரூபமாக மிக அற்புதமாக செய்திருந்தார், ராஸலீலா (கன்னிவேட்டை) திரைப்படத்தில்  கமல்ஹாசன் செய்தது ஒரு 100 வயது துர் மந்திரவாதி கதாபாத்திரம், அதே போன்ற பரீட்சார்த்த முயற்சியில் தோன்றி பிரமிக்க வைத்து விட்டார் மோகன்லால், எந்த நடிப்புப் பள்ளியும் செல்லாமல் கைகூடிய இத்தனை வகைதொகையான நடிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தி கட்டிப்போடுகிறது.

கவிஞர் பி.பாஸ்கரனின் வரிகளில் கே.ராகவன் மாஸ்டர் இசையமைத்த மூன்று அபாரமான பாடல்கள் மறக்க முடியாதவை.

"நிலாவிண்டே பூங்காவில்" என்ற அற்புதமான திகில் கலந்த மெல்லிசை பாடலை பாடகி லத்திகா பாடியுள்ளார்.

"மோதிரக்கை விரலுகள்" என்ற அற்புதமான பாடலை ஜானகியம்மா பாடியுள்ளார்.

"தாரகங்கள் கேள்குண்ணு " என்ற அற்புதமான பாடலை வாணியம்மா பாடியுள்ளார்.

இப்படத்தின் சப்டைட்டில் இல்லாத நல்ல பிரதி யூட்யூபில் காணக்கிடைக்கிறது.

சுழி | 1973 | நடிகை சாவித்ரி | மலையாளம் | மதுவிலக்கு பிரசார திரைப்படம்

1973ஆம் ஆண்டு  வெளியான மலையாள கருப்பு வெள்ளை திரைப்படம் சுழி,  மகா நடிகை , நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த ஒரே மலையாளத் திரைப்படம் இது . 

1950கள் 1960களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை ஆண்ட நடிகையர் திலகம் இழப்பதற்கு எதுவுமில்லை எதனிடத்தும் பயமில்லை என்ற கட்டத்தை மது அடிமையினால் எட்டுகையில் நடித்த திரைப்படம் இது,

சோதனைச்சாலை எலி போல இறந்த பின் மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம் செய்வது போல நினைத்து உயிர் இருக்கையிலேயே தன்னை நடிகை சாவித்திரி ஒப்பு தந்து நடித்த திரைப்படம் இது என்றால் மிகையில்லை, காரணம் அவர் அதுவரை அப்படி நடித்ததில்லை என்னும்படியாக இந்த எல்ஸி என்ற தேயிலை எஸ்டேட் விதவை முதலாளி  கதாபாத்திரம் அமைந்திருந்தது, இதில் sleeve less lingerie அணிந்து நடித்துள்ளார், அவர் குடியின் கோரப்பிடியில் இருந்த நாட்களில் கதையை சரியாக கேட்காமல் ஒப்புக் கொண்டாரோ என்ற கலக்கமும் நமக்கு எழாமல் இல்லை, ஆனால் படத்தின் டைட்டில் கார்ட் இது குடியால் அழிந்தவர்களைப் பற்றிய கதை என முதலில் கட்டியம் கூறியதால் சமாதானம் அடைகிறோம் . 

‘நவதாரா’ என்ற புதிய பேனரில் ஹுசைன் மற்றும் சலாம் இணைந்து தயாரித்த இப்படத்தை திரிப்பிரயார் சுகுமாரன் இயக்கியுள்ளார். 
இதில் பேபி என்ற குடிகேடி இளைஞன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான சலாமே நடித்தும் இருந்தார்.

சென்னையில் நியூட்டன் மற்றும் சியாமளா ஸ்டுடியோவில் உட்புற காட்சிகளும் , வெளிப்புற காட்சிகள் வயநாட்டில் உள்ள கல்பற்றா தேயிலை தோட்டங்களிலும் படமாக்கப்பட்டது.  

எஸ்.ஜி.பாஸ்கர் எழுதிய கதையின் அடிப்படையில் என்.பி.முகமது உருவாக்கிய திரைக்கதையை அடிப்படையாகக் கொண்டு சலாம் காரச்சேரி இதற்கு வசனம் எழுதினார், மூர்த்தியின் ஒளிப்பதிவு மற்றும் ரவியின் படத்தொகுப்புடன், இது தென்னிந்திய மொழிகளில் திரைப்பட தணிக்கை வாரியத்தால் 'A' சான்றிதழ் (பெரியவர்களுக்கு மட்டுமே அனுமதி) வழங்கப்பட்ட ஆரம்ப கால திரைபடங்களில் முன்னோடி என்ற பெயரையும் தக்க வைத்துள்ளது.

நடிகை சாவித்திரி தவிர, சுஜாதா, கொட்டாரக்கார ஸ்ரீதரன் நாயர், கோவிந்தன்குட்டி, பஹத், நிலம்பூர் பாலன் மற்றும் பலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
இசை எம்.எஸ்.பாபுராஜ்.

‘குடிப்பழக்கத்தால் சிதைந்த குடும்பத்தின் கதை’ என்ற வரிகளுடன் படம் துவங்குகிறது. ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்ற பைபிள் வரிகளுடன் படம் நிறைகிறது, இந்த இரண்டு புள்ளிகளை  இணைத்து கதை நகர்கிறது.

படத்தின் கதை :

பிரம்மாண்டமான தேயிலை தோட்ட முதலாளி வர்கீஸ், அவருக்கு சொந்தமான பங்களாவில்  தனது மனைவி எலிசபெத் (சாவித்திரி) மற்றும் மகள் பீனாவுடன் (சுஜாதா) வசித்து வருகிறார்.  அவரது மகனின் அகால மரணத்தைத் தொடர்ந்து, வர்கீஸ் தனது மன அழுத்தத்தில் குடிக்கத் தொடங்குகிறார், தேயிலை தோட்ட நிர்வாகம் நசியத்துவங்குகிறது,
கேட்பாரில்லாததால்  இவர்களின் தேயிலை தோட்டத்தை சமூக விரோதிகள் அத்துமீறி பிரவேசித்து ஆக்கிரமிக்கின்றனர்.

முதலாளி வர்கீஸ் குடித்து நசிந்தது  போதாமல் அவரது மனைவி எலிஸியையும்  குடிக்கு பழக்கி உள்ளிழுக்கிறார்,நாளடைவில் எலிஸி கணவரை விடவும்  மதுவுக்கு அதீத அடிமையாகிறார், கணவர் போதும் என்றாலும் அவர் விடுவதில்லை, ஊற்றித் தந்த படியும் ஊற்றி பருகியபடியும் இருக்கிறார், எலிஸிக்கு மதுமோகத்தால் உடற்பசி எடுக்க ஆங்கில softporn இதழ்கள் வாங்கி வாசிக்கிறார், கணவரிடம் இவருக்கு வடிகால் கிடைக்காமல் போக அதற்கும் சேர்த்து நிறைய குடிக்கிறார், பெரிய ஜம்போ ப்ரிட்ஜ் நிறைய மதுபுட்டிகள் நிரப்பி அதற்கு அருகே இருக்கையை இட்டு அமர்ந்து கொள்கிறார், யார் நல்ல புத்திமதி சொன்னாலும் காதில் ஏறுவதில்லை.

முதலாளி வர்கீஸ் நெஞ்சு வலியிலும் கல்லீரல் பழுதாகியும் இறந்துவிடுகிறார், எலிசபெத் தனது விசுவாசமான வேலைக்காரன் ஆண்டனியின் மகனான முன்கோபி, முரடன் , சந்தர்ப்பவாதின பேபியை தேயிலை தோட்டத்தின்  மேலாளராக மிகவும் நம்பி நியமிக்கிறார். 

பேபியும் பீனாவும் (சுஜாதா) வகுப்புத் தோழர்கள்.  பேபி இயல்பிலேயே தறிகெட்டுப்போனவன், ஆனால் அவனைப் போய் காதலிக்கிறாள்  பீனா,  அவனை நல்லவனாக மாற்றி நல்வழிப்படுத்துவதில் பெரிதும் நம்பிக்கையுடன் இருக்கிறாள் அவள், குள்ளநரிக்கு திராட்சை தோட்டம் கிட்டியது போல தன்னையே அவனுக்கு தந்து அவன் தகிதிக்கு மீறி காதல் மழை பொழிகிறாள்.

புதிய மேலாளர் பேபி தினம் தினம் புதிய உயர்தர்ஸ்காட்ச் வகைகளை முதலாளி எலிஸிக்கு  வாங்கி வந்து அறிமுகப்படுத்துகிறான்.
 எலிசபெத் குடியால் மேலும் மோசமடைகிறார்,உடன் பேபியும் அமர்ந்து குடிக்கிறான், பிணம் போலவே படுக்கையில் விழுந்து கிடக்கும் எலிஸி படிக்கும் tit bits புத்தகங்களில் மதுமயக்கத்தில்  நிர்வாணப் படங்களைப் பார்த்த பேபி உடலுறவு கொண்டு விடுகிறான், இதனால் முதலாளி அம்மா எலிஸி கருத்தரிக்கிறார்.

பீனா தாய் கருத்தரித்ததை பணிப்பெண் மூலம் அறிகிறாள்,அவமானம் அடைகிறாள், எலிஸிக்கு மகளை கண்கொண்டு பார்க்க முடியவில்லை, பேபி எலிஸியை ஒரு வாரம் தன்னுடன் வெளியூர் வந்து கருக்கலைப்பு செய்து கொள்ள அழைக்கிறான்,ஆனால் எலிஸி நம்பிக்கை துரோகம் செய்த அவனை வெறுக்கிறார், தன் இழி நிலைக்காக வேதனைபடுகிறார், பேபியின்  வீட்டாரும் கூட அவனை வெறுத்து ஒதுக்குகின்றனர்.

தன்னையும் சுகித்து ஏமாற்றி தாயையும் சுகித்து கர்ப்பமாக்கிய பேபியை பீனாவும் வெறுக்கிறாள் , அவமானம் மற்றும் மன அழுத்தத்தால் எலிஸி ஐம்பதுக்கும் மேற்பட்ட தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலை செய்து இறந்து போகிறார்.  

பீனா பேபியை தன் அப்பாவின் ரிவால்வரை எடுத்துப் போய் சுட எத்தனிக்கிறாள், ஆனால் அவள் சுடுவதற்கு  முன்பே பேபி தற்கொலை செய்து இறந்து போகிறான். 

பீனா ஏற்கனவே பணம் சொத்து எஸ்டேட் தொழிற்சாலை இவற்றை வெறுத்தவள்,  இப்போது கன்னியாஸ்திரியாவதுடன் படம் நிறைகிறது.

இப்படத்தில் நடித்த அடுத்த மாதமே நடிகை சாவித்ரி அவர்களுக்கு மஞ்சள் காமாலை வந்து உடல் துரும்பாக இளைத்துப் போயுள்ளார்,
அடி மேல் அடியாக அவருக்கு flu ஜுரமும் வர, அவரின் கம்பீரமான பூசிய தேகம் திரும்பவேயில்லை, அப்படியும் குடியை விட்டொழிக்க முடியவேயில்லை,  அந்தரங்கம் திரைப்படத்தில் நடிக்கையில் அடையாளம் தெரியாத அளவு உருமாறியிருந்தார்,அந்தரங்கம் திரைப்படம் வெற்றி பெற்றாலும்  அவசரநிலை காலத்தில் வெளியானதால் அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை, மனைவி அமைவதெல்லாம் என்ற மேடை நாடகத்தில் நடிக்க போகும் அளவுக்கு வறுமை, கடன் பிரச்சனைகள் அவரை துரத்தி வாட்டியபடி இருந்து மரணப்படுக்கையில் தள்ளியுள்ளன.

இப்படத்தில் வெகுளி பணக்கார வீட்டுப் பெண் பீனாவாக நடித்த நடிகை சுஜாதா 1974 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் மூலம் புகழின் உச்சிக்குப் போய் விட்டார்,இலங்கையில் பிறந்த மலையாளப் பெண் இவர் , அவள் ஒரு தொடர்கதை வெளியாகும் முன்னர் மளையாளத்தில் 36 திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1974 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நாயகி முக்கியத்துவ கதாபாத்திரங்கள்  கொண்ட திரைப்படங்களில் கோலோச்சுவோம்  என்று சுழி நடிக்கையில் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

பூவிழி வாசலிலே | பூவினு புதிய பூந்தென்னல் | பசிவடி பிராணம் | இயக்குனர் ஃபாஸில் | ஒப்பீடுகள்

பூவிழி வாசலிலே (1987) திரைப்படம் நம்மால் மறக்கமுடியாத த்ரில்லர் திரைப்படம், 

அதன் மூலப் படைப்பான "பூவின்னு புதிய பூந்தென்னல் " (1986) திரைப்படம் தோல்வியாக அமைந்தது, 

இயக்குனர் ஃபாஸில் தோல்வியை கண்டு துவளாமல் அந்த படைப்பை மெருகேற்றி மாற்றி பிற மொழிகளில் வெற்றி பெறுவதில் வித்தகர்,இப்படி என்னென்னும் கண்ணேட்டன்டெ படத்தை வருஷம் 16 என இயக்கியது வரலாறு.

தமிழில்  சத்யராஜ் நடித்த வேடத்தில் மலையாளத்தில் மம்மூட்டியும், ரகுவரன் வேடத்தில் சுரேஷ்கோபியும், கார்த்திகா வேடத்தில் நதியாவும் T.S.ராகவேந்தர்  நடித்த வேடத்தில் திலகனும் நடித்தனர், மம்மூட்டியின் ஆவனாழி திரைப்படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைப்படமாக எடுக்கையில் சத்யராஜ் எப்படி இன்ஸ்பெக்டர் "கரடி "பலராமாக மனதில் நின்று விட்டாரோ , அது போல பூவிழி வாசலிலே திரைப்படத்தில் ஜீவாவாக  மம்மூட்டி செய்த கிரண் என்ற அந்த குடிகார ஓவியர் வேடத்தில் சத்யராஜ் பிரமாதப்படுத்திவிட்டார், 

சுஜீதா எனக்கு மிகவும் பிடித்த நடிகை, அத்தனை அழகாக இந்த  செவிப்புலன், பேச்சுபுலனற்ற மூன்று வயது சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார்,இவரே மலையாளம்,தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்திருந்தார்.

அதே போலவே நடிகர் பாப் ஆன்டனி வில்லனின் கையாள்  கதாபாத்திரத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார், வில்லனுக்கு இவர் கதாபாத்திரத்தால் பலமா? இவர் கதாபாத்திரத்தால் வில்லனுக்கு பலமா? என்று வியப்பான வில்லன் கையாள் கதாபாத்திரம், காலஞ்சென்ற ஒளிப்பதிவாளர் ஆனந்தகுட்டன் இவருக்கு வைத்த backlighting, frames எல்லாம் அலாதியானவை, உலகத்தரமானவை, anton chigurh  போல இருக்கும் , பயத்தில் குடலை கலக்கி விடும் , பாப் ஆண்டனி வில்லன் கையாளாக  மலையாளம்,தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தியில் நடித்திருந்தார்.

மலையாள வடிவம் பூவின்னு புதிய பூத்தென்னல் இறுதிக்காட்சி பார்க்கையில் நமக்கு  கண்கள் குளமாகிவிடும், இதில் நீர் தான் theme, பகல் வெளிச்சம், கொச்சின் துறைமுகத்தில் நீர்மேல் அமைந்த சரக்கு ரயிலடி தண்டவாளத்தில் இந்த இறுதிக் காட்சியை படமாக்கியிருந்தனர், மம்மூட்டி இறுதியில்  குழந்தையை காப்பாற்ற  நடந்த சண்டையில் குழந்தையை கல்லைக் கட்டி நீரில் எரிய முனையும் பாப் ஆண்டனியை  leg kick செய்து கத்தியை திருப்பி இறக்கி கொன்றுவிடுவார், சுரேஷ் கோபி மம்முட்டியை நெஞ்சில் சுடுவார், அடுத்து குழந்தைக்கு குறி வைக்கையில் மம்முட்டி கைகளால் தடுத்து கெஞ்சியபடியே குழந்தையை மறைத்தபடி முன்னேறுவார், அப்போது மூன்று முறை அடுத்தடுத்து சுரேஷ் கோபியால் சுடப்படுவார், இருந்தும் சுரேஷ்கோபியின் குரல்வளையை பற்றி நெறித்து தூக்கி கொன்று தண்டவாளத்தில் வீசி தானும் விழுந்து இறப்பார், குழந்தை பென்னி வந்து அவருக்கு முத்தமிட்டு எழுப்பி தோற்பான், நதியா வந்து குழந்தையை அணைப்பதுடன் படம் முடியும், இந்த நாயகன் சாகும் சோக முடிவு படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது, அந்த ஓணத்திற்கு ஆறுபடங்கள் வெளியானதில்  ஆவனாழி மற்றும் நன்னி வீண்டும் வருக மட்டுமே வெற்றி பெற்றன, இது தயாரிப்பாளர் ஸ்வர்கசித்ரா அப்பச்சனின் முதல் திரைப்படம்  கூட,ஆனால் இட்ட முதலைக் கூட வசூலிக்கவில்லை.
ஆனால் தமிழ் வடிவமான பூவிழி வாசலிலே 1987 ஆம் ஆண்டு வெளியாகி அவ்வருடத்தின் வசூல் சாதனை திரைப்படமாக அமைந்தது.

இந்த ஐந்து இந்திய மொழி வடிவங்களில் இசைஞானி தமிழுக்கு  மட்டும் இசையமைத்தார், நடிகர் ரகுவரன் இந்த ஆனந்த் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனித்துவமான உடல்மொழியுடன் செய்தார், தனக்கு துரோகம் செய்து தன் மேனேஜருடன் EMA உறவில் இருந்த மனைவியைக் கொன்று, மேனேஜர் வேணுவைக் கொன்று, அந்த கொலையை பார்த்த விதவைத் தாயைக் கொன்று அந்த குழந்தையையும் கொல்லத் தேடுகிற சைக்கோ வில்லன் பிஸினஸ்மேன் கதாபாத்திரம், ஆப்பசைத்த குரங்கு போன்ற அவலத்தை அத்தனை தனித்துவமாக செய்திருந்தார் நடிகர் ரகுவரன், இந்தியில் இவர் வேடத்தில் அனுபம் கெர் நடித்தார்.

அதே போலவே இந்த குழந்தையை காப்பாற்றும் நாயகனின் பின்னணியும் சுவாரசியமானது,அத்தனை அழுத்தமான பாத்திர படைப்பு, அர்த்தமிக்கது,  சத்யராஜ் மனைவி சுசீலா அவரது முறைப்பெண், பால்யத்தில் இருந்தே சிறிய மனப்பிசகு உண்டு, வீட்டார் மருத்துவ  உதவி  தராமல்  மணமுடித்தால் சரியாகும் என்று  முறைமாப்பிள்ளை இவருக்கு மணமுடிந்து வைக்க மனைவி கருவுற்று குழந்தை பெற்றும் மனநிலை சரியாகாமல் மேலும் முற்றி, குழந்தையின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்று தானும் தூக்கு மாட்டி இறக்கிறார், சத்யராஜ் அது முதல் மொடா குடிகாரனாகிறார் , நாயகனின் முன்கதையை வசனங்கள் மூலமே நிறுவுகிறார் இயக்குனர் ,அதே போல வில்லனின் தரப்பு நியாயத்தை வசனங்கள் மூலமே நிறுவுகிறார் இயக்குனர்.

நாயகர்கள் சத்யராஜ் துவங்கி அனைவரும்  standard நிறுவனத்தின் Gazel என்ற மாப்பிள்ளை அழைப்பு கார் வைத்திருந்தனர், அதன் சக்கரத்தின் hub cover அடிக்கடி கழன்று விடும், அதை அடிக்கடி முடுக்கி தட்டி மூடவேண்டும், இல்லை என்றால் கார் ignition இயங்காது, பாதுகாப்பு அம்சமாக இந்த அவல feature standard நிறுவனத்தின் gazel கார்களில் இருந்ததா ? அல்லது திரைக்கதையில் detail ற்கு வேண்டி சேர்த்ததா? என தெரியவில்லை, அதே போல தமிழில் சவ ஊர்வலம் போகையில் தலையில் தோல் தொப்பி,தோல் கவச உடை, தோல் காலணி அணிந்து ஒருவர் கொள்ளிச் சட்டியுடன் நடந்து போவதை காட்டி அன்று கூடுதலாக திகில் கூட்டியிருப்பார்கள், அப்படி இந்தியாவில் எந்த ஊரில் சவ ஊர்வலம் நடக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை, இணைப்பு படம் பார்க்க.

மலையாளத்தில் சுரேஷ் கோபியிடம் இல்லாத அந்த வில்லத்தனம் ரகுவரனிடம் காணலாம், இரு உயரமான வில்லன்கள் என்பதால் தனக்கு clutches வைத்து சற்றே விந்தி நடந்து விழிகளாலேயே உடல்மொழியாலே வசனங்களாலேயே அப்படி மிரட்டுவார், இவர் போல யாரும்  பில்லியர்ட்ஸ் மேஜையில் நளினமாக தோன்றவில்லை,ரகுவரன் தெலுங்கு வடிவமான பசிவடி பிராணம் படத்திலும் தோன்றினார்.

பசிவடி பிராணம் (குழந்தையின் உயிர் ) திரைப்படம்  ஏழு மொழிகளிலும் வெளியான இந்த படைப்பின் உச்ச சாதனையை செய்த படைப்பாகும், பசிவடி பிராணம் திரைப்படம்  1987 ஆம் ஆண்டு வெளியானது, வெளியான   திரையரங்குகளில் ₹5 கோடிக்கு மேல் வசூலித்தது.

பசிவடி பிராணம் நடிகர்  சிரஞ்சீவியின் முதல் வெள்ளி விழா வெற்றிப் படமாக அமைந்தது.  திருப்பதியில் தினம் ஐந்து தினசரி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது,  இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை,பிரதாப் தியேட்டரில் 175 நாட்கள் ஓடியது.  அந்நாட்களில், 

ஆந்திர மாநில அரசு ஸ்லாப் முறையை அறிமுகப்படுத்தியதால், ஒரு தெலுங்கு திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் நான்கு தினசரி காட்சிகளுடன் ஓடுவது மிகவும் கடினமாக இருந்தது.  

ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய திரைப்படம் பசிவடி பிராணம்.  ரஷ்யாவில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தது, ரஷ்யாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, "ராஜ்கபூரின் திரைப்படங்கள்" மற்றும் மிதுன் சக்ரவர்த்தியின் "டிஸ்கோ டான்சர் (1982)" ஆகியவற்றிற்குப் பிறகு, ரஷ்யாவில் வெற்றி பெற்ற இந்தியத் திரைப்படம் பசிவடி பிராணம்.

"பூவின்னு புதிய பூத்தென்னல் " திரைப்படம் தவிர்த்து அத்தனை படைப்புகளிலும் நாயகன் இறுதியில்  மடிவதில்லை, 

இப்படம் வங்கதேசத்தில் Khotipuron என்றும், சிங்களத்தில் Veda Barinam Vedak Nehe 1991 என்றும் ஆறு வெவ்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் மலையாளத் திரைப்படமாகவும்,மலையாளத்தில் இருந்து ரஷ்ய மொழிக்கு  மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

தமிழில் பாடகர் மனோ அறிமுகமான படம் இது , அண்ணே அண்ணே பாடல் பாடியவர் என அடைப்புகுறி அடைமொழி இருந்தது, நிழல்கள் ரவிக்கு நிழல்கல் ரவி என டைட்டில் எழுதியிருந்தனர்.

தமிழ் வடிவத்தின் இறுதி சண்டைக்காட்சியை இரவில் அமைத்திருந்தார் ஃபாஸில், இதற்கு நெருப்பு theme, ரகுவரன் நெருப்பில் விழுந்து இறப்பார், சத்யராஜ் சாக்லெட் பட்டை தின்றபடியே பாப் ஆன்டனியை துப்பாக்கி இருந்தும் சுடாமல் கத்தியில் மார்பில் குத்தி கொல்வார், குழந்தை ராஜா அதை சாக்கோ பார் தின்றபடி மகிழ்ந்து பார்ப்பது போல தமிழ் பார்வையாளர்களுக்கு வேண்டி ரஸமாக அமைத்திருந்தார்.

இதில் குழந்தையின் இறந்த அப்பாவாக நடிகர் ஸ்ரீநாத் (உச்சக்கட்டம்) சில montages ல் மட்டும் வந்து போனார்,அம்மாவாக ராஜலட்சுமி நடித்தார், 

மலையாள டைட்டில் கார்டில் வரைகலை வரைந்து குழந்தையின் வீடு விடும் புறப்பாட்டை சொல்லியிருந்தனர்.

இப்படைப்புகளில் இசை என்றால் இசைஞானி இசையே சிறந்தது இரண்டாவது கண்ணூர் ராஜனுடையது, மலையாளத்தில் சித்ரா பாடிய பீலி ஏழும் வீஷிவா என்ற மெலடிக்கு மாற்றாக ஆட்டமெங்கே என்ற பார் பாடல் அமைந்தது, அத்தனை அழகிய மெலடி அது அதில் மம்முட்டி பாடி ஆடவும் செய்வார்.

பூவிழி வாசலிலே திரைப்படத்தில்  மலையாளம் மூத்த நடிகர் அடூர் பாஸி பள்ளியில் அச்சனாக நடித்தார், மணியம்பிள்ளராஜு சத்யராஜின் நண்பராக நடித்தார்.

இப்படைப்புகளில் மிகச்சிறந்த நாயகர் என்றால் மம்மூட்டி மற்றும் சத்யராஜ், மிகச்சிறந்த நாயகி என்றால் கார்த்திகா என்பேன்.

இயக்குனர் ஃபாஸிலின் சாதனை இந்திய சினிமாவில் முக்கியமானது என்றால் மிகையில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)