இயக்குனர் மணிரத்னத்தின் உணரு மலையாளப் படத்தில் வரும் முக்கியமான காட்சி இது,
கூலிடோக்கன்களை குலுக்கல் சீட்டு எழுதிப் போட்டு எடுக்கும் காட்சி, ஏழைப்பாவங்களின் விடியலுக்கான ஒன்று கூடல்,
இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை, கொச்சி துறைமுகத்தில் மீனவகிராம மக்கள் ஏழு பேருக்கு மட்டும் தினக்கூலி வேலைக்கான டோக்கன் தந்துள்ளனர்,
அங்கே இருப்பதோ ஐம்பது குடும்பங்கள்,ஐம்பது குடும்பத் தலைவர்கள்.அத்தனை பேரும் நெடுநாட்களாக வேலையின்றி இருப்பவர்கள்,
அத்தனை பேர் முகத்திலும் ஏக்கம், அங்கே ஒவ்வொருவர் பெயரையும் டிஜி ரவி எடுத்துப் படிக்கையில் சேவியர் என்ற குடும்பத் தலைவன் முகத்தில் கவலை ரேகைகள் மின்னலாய் ஓடுகின்றன,
தன் பெயர் அடுத்து வராதா? என்று ஸ்தோத்திரம் போட்டுக் கொண்டே இருக்கிறார்,உடன் அவர் மனைவியும்,ஒரு குலுக்கல் சீட்டை சேவியரின் மகளே எடுத்தும் கூட இவர் பெயர் வரவில்லை,
இவர்கள் இனி விஷத்தை தின்று தான் சாகவேண்டும்,அங்கே புதிய வந்தேறியான ராமு (லாலேட்டன் ) சேவியரின் முகத்தில் அவர் மனத்தைப் படித்தவர் தன் டோக்கனைக் கொண்டு சென்று அவர் வீட்டில் தருகிறார்,
அதே நேரத்தில் சேவியர் ராமுவுக்கு அந்த கிராமத்தில் தஞ்சம் தந்து அவர் பெயரைக் குலுக்கலில் சேர்த்த ரத்தீஷிடம் சென்று மல்லுக்கட்டுகிறார், அப்போது சேவியரின் மகள் வந்து அப்பாவிடம் ராமு விட்டுத் தந்த டோக்கன் பற்றிச் சொல்கிறாள்,
சேவியரின் முகம் நாணுகிறது, நாதழுதழுக்கிறது,நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் சேவியர்.
உணரு என்றால் விழித்தெழு என அர்த்தம்.இசைஞானியின் பின்னணி இசை இந்தக் காட்சிக்கு தந்த அழுத்தத்தை வர்ணிக்க வார்த்தைகளில்லை
இத்தனை முக்கியமான சேவியர் கதாபாத்திரம் செய்த பாஸ்கர குருப் என்ற ஒப்பற்ற நடிகருக்கு விக்கி IMDb என எதிலும் உணரு படத்திற்கு க்ரெடிட் இல்லை,
நடிகர் பாஸ்கர குருப் இயக்குனர் பி.பத்மராஜனின் கள்ளன் பவித்ரன் திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர், ஊரில் திடீர் பணக்காரனாகிவிட்ட பவித்ரனை எப்படியாவது வழக்கில் சிக்க வைக்க தவியாய் தவிப்பார், கடைசியில் மோந்தையையும் கிண்டியையும் கைப்பற்றி பெரும் பணக்காரனாகிவிட்ட பவித்ரனை கைது செய்வார்.
#உணரு,#மணிரத்னம்,#இசைஞானி,#மோகன்லால்,#ராமச்சந்திரபாபு,#பாஸ்கர_குருப்