தாயகம் சென்று வந்தேன்

சமீபத்திய தாயக விஜயம் பற்றி எழுத நினைத்தபோதெல்லாம் எழுத நேரம் கிடைக்காமல் போய் ஒரு வழியாக எழுத அமர்ந்தேன் ,இந்தியாவில் இருந்தது பதினைந்து தினங்கள் தான்.ஆனால்,இன்னும் ஆறு மாதத்திற்கு தேவையான தெம்பை ஏற்றிக்கொண்டு தான் வந்தேன்.

 முக்கிய நண்பர்களை இந்த முறையும் சந்திக்க முடியாமல் ஒரு பாட்டம் அழுது மன்னிப்பு கேட்டேன்.(ஊருக்கு கிளம்பும் தருவாயில்)புதிய மடிக்கணினி வாங்க எண்ணினேன்.அதிசயமாக பழைய மடிக்கனினியையே வெறும் இரண்டாயிரம் ரூபாயில் சரி செய்து கொண்டேன். 
 
மடிக்கணினி விலைகள் துபாயை விடவும் சென்னையில் பத்து முதல் இருபத்து சதம் விலை குறைவாக இருந்தது,நான் விலை பட்டியல் எல்லாம் வாங்கி மண்டையை பிய்துக்கொண்டும் கடைசியில் வாங்காமலே திரும்பினேன்.(ஆச்சர்யம் நம் ஊரில் உணவு பண்டங்கள் தவிர மற்ற அனைத்தும் விலை குறைவே.)நண்பர்கள் கேட்டால் மேலதிக விபரங்கள் தருகிறேன்.என்ன ஆச்சர்யம் என்றால் நம் ஊரில் சேவை வரி.மற்றும் வாட் வரியும் உண்டு.இருந்தும் விலை மலிவாகவே தெரிகிறது.(தற்போது ஒரு திர்காம் =13.50 ருபாய் ஆக உள்ளது இது முன்பை விட 1.50 ருபாய் அதிகம்,எனவே 
 
தாயகத்தில் பொருட்கள் மலிவாக இருப்பது போல தோன்றுகிறது.எப்போதுமே எலெக்ட்ரானிக் பொருட்கள் அமெரிக்காவில் நாற்பது சதம் குறைவு.சிங்கப்பூர்,மலேசியாவில் முப்பது முதல் இருபது சதம் குறைவு.அதற்கடுத்தபடியாக துபாயில்.(ஆனால் நண்பர்கள் இதை புரிந்து கொள்ளாமல் எனக்கு அது வாங்கி வாடா,இங்கு காசு தருகிறேன்.என்று சொல்லிவிட்டு வாங்கி வந்தவுடன் விலை அதிகம் என்பது வாடிக்கை.இந்த முறை அப்படி நிகழவில்லை.
 
தாயகம் வந்து இறங்கியவுடனே ஒரு உற்சாகம் வந்துவிடும்.பம்மல் செல்ல (மூன்றே கிமீ)ஆட்டோவிற்கு ரூ நானூறு கேட்டார்கள்.பேரம் பேசி இருநூறம்பதிற்கு வந்தான்.(ஆட்டோ ஓடுவது தான் உலகில் நாய் பிழைப்பு என்றும் அவர்களை பயணிகள் வஞ்சிப்பது போன்றும் பேசிக்கொண்டே போனான்,நான் எங்கே அதை எல்லாம் கவனித்தேன்.வழக்கம் போல நான் சொன்ன இடம் வேறு ஆட்டோ போகும் இடம் வேறு.நீங்கள் பார்த்து போட்டு கொடுங்கள் என்று கேட்டான்.நான் அவனிடம் எதுவும் பேசாமல் போய் வீட்டில் இறங்கி ரூபாய் நோட்டில் எச்சில் துப்பாத குறை தான்.வயிற்று எரிச்சலுடன் பணம் தந்தேன்.அவன் எதற்கும் அசரவில்லை.(இது எல்லாம் டாஸ்மாக்கில் தான் போய் செலவாகும்)
 
உண்மையிலேயே துபாய் டாக்ஸி பரவாயில்லை ,கொள்ளை அடித்தாலும் நான்கு பேர் ஏசியில் சொகுசாக பயணிக்கலாம்.பாதி போலீஸ் காரர்கள் ஆட்டோவை வாடகைக்கு (தினம் 250) விடுகின்றனர்.எல்லா கவுன்சிலரும் 20 முதல் 30 ஆட்டோ வைத்துள்ளனர்.ஆகவே யாரும் ஆட்டோ கொள்ளையை கண்டு கொள்வதே இல்லை.நேர்மையான ஆட்டோக்கரர்களும் இருக்கிறார்கள் என்று சொல்பவர்கள் அவர்களின் அலைபேசி என்னை என் போன்ற நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள்.கோடி புண்ணியம் உண்டு.(யாரும் தயவு செய்து மீட்டர் போட்டு மட்டும் சென்னையில் பயணிக்காதீர்கள்.அவன் கேட்பதை விட இரு மடங்கு வரக்கூடும்.(ஹீ,ஹீ)
 
அப்புறம் டாஸ்மாக் பாரில் நடக்கும் கொள்ளை மிக மோசம்.வழக்கமாக வந்து போகும் (தினம் ஐந்நூறு ரூபாய்க்கு ஏனும் குடிக்கும் வாடிக்கையாளருக்கு தான் சில பார்களில் உள்ளே செல்லவே அனுமதி(மீனம்பாக்கம் பார் ) கேட்கும் பீர் கிடைக்காது,கேட்ட எந்த சரக்கும் கிடைக்காது.குடிமக்கள் கவலைப்படாமல் கிடைத்ததை குடிக்கிறார்கள்.குளிர்ந்த மது புதியவர்களுக்கு கொடுப்பதே இல்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டு வியாபாரம் செய்கிறார்கள்.

எல்லா சரக்கும் ஐந்து முதல் பத்து ருபாய் அதிகம் வைத்தே விற்கிறார்கள்,அனாலும் எல்லோரும் வாய் பொத்தி வாங்கி செல்கிறார்கள்.ஒரு மணி நேரம் மதிய நேரத்தில் பாரில் தினம் சென்று குடிக்கும் என் வேண்டிய மற்றும்,வேண்டாத நண்பருடன் சென்று அமர்ந்து பார்த்ததில் கொஞ்சமும் சுத்தம் இல்லாத இடம் டாஸ்மாக் பார் என கண்டேன்.
கொத்தனார்கள் மதிய நேர இடைவெளியில் வந்து 90 முதல் குவாட்டேர் வரை சாப்பிட,விற்பனை பிரதிநிதிகள் பீர் சாப்பிட்டு சென்றனர்.மாணவர் நால்வர் (விடுமுறை அல்லவா?)ஒரு ஆப் பிராந்தி வாங்கி (சுத்த விரும்பிகள்)நான்கு பிளாஸ்டிக் தம்ப்ளர்களையும் தண்ணீர் பாக்கெட் கொண்டு பீய்ச்சி கழுவினர்(கொடிய வியாதிகளில் இருந்து தப்பிக்க வாயிருக்கும்)பின்னர் கண்ணை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் குடித்து விட்டு,மிகவும் பெருமிதத்துடன் ஓத்தா என்றனர்.
 
அடுத்து வந்தது மீனம்பாக்கம் கார்கோ ஊழியர்கள் ,மூன்று வேலையும் குடிப்பார்களாம்,கணக்கு கூட உண்டாம்,தற்காலிக ஊழியர் ,நிரந்தர ஊழியர் என அனைவரும் ஆஜர்,(தற்காளிகர்கள் நிரந்தர ஊழியரை ஐயா என்றோ அண்ணன் என்றோ அழைக்கிறார்கள்.அவர்கள் முன் அமர்ந்து மது அருந்தினாலும் புகை மட்டும் பிடிப்பதில்லை,(மரியாதை)ஒருவர் தலா 1 பீர் ,1 க்வாட்டேர் ,அதில் மிக்ஸ் செய்ய செவென் அப்,சிக்கன் 65 என குறைந்தது 300 க்கு குடிக்கின்றனர்,2 மணி நேரம் மதியம் உணவு இடை வேலையின் போது ரசித்து குடிக்கின்றனர்.(நான் கூட ஏன்டா ?இங்கு வந்து சேரவில்லை என்று ஆதங்கப்பட்டேன்,

ஆனால் என்னால் எல்லாம் சேரமுடியாது.(ஒரு நாளைக்கு 900 ரூபாய்க்கு குடிக்கும் இவர்களுக்கு எவ்வளவு வருமானம் இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.(ஆனால் மனிதர்கள் ரொம்ப நல்லவர்கள் ,ஓசிக்குடி குடிப்பதில்லை,தனி பில் தான்,ரியல் எஸ்டேட் போன்ற தன்நிகரற்ற தொழில்களும் உண்டு,நான் எல்லார் வாயையும் பார்த்தேன்,ரொம்ப பொறாமையாக இருந்தது.அனாலும் நினைத்துப்ப் பார்க்க வெட்கமாக இருந்தது,நேர்மையான வழியில் சம்பாதிக்காத காசு ஒரு காச என்று?
தாயக அனுபவங்கள் தொடரும் -

3 comments:

ஷண்முகப்ரியன் சொன்னது…

சென்னை வந்த போது நாம் சந்தித்திருக்கலாமே, கார்த்திகேயன்? நீங்கள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டுப் போயிருக்கிறீர்களே?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

Dear Sir,
I apologise,i could n't able to attend anything,i came for my mom's divasam,i spent most time with my daughter and my family,and visited thiruvannamalai and thirupathi,and spared little time for friends,next time i will come and meet you sir.by any chance you come to uae,please let me know,(in vote list my name was not there)i could n't vote too.
thanks for the words sir.
karthikeyan

ஷண்முகப்ரியன் சொன்னது…

You are always welcome,Karthikeyan.Thank You.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)