வைக்கம் முகம்மது பஷீர் ,
பேப்பூர் சுல்தான் என்ற
பஷீர்க்கா போல ஒரு செக்யுலர் உலகில் பார்க்க முடியாது, அத்தனை மனிதம், அத்தனை கருணை, அத்தனை சுய எள்ளல், அத்தனை நகைச்சுவை நிரம்பிய பிரவாக எழுத்துக்காரன் .
நமக்கு கண்ணதாசன் போல,கேரளத்தில் எல்லோருக்கும் பிடித்த , எல்லோரும் இன்றும் பேசும், எல்லோரும் அவர் பற்றி விரும்பிக் கேட்கப் பிடிக்கும் ஒரு ஒப்பற்ற ஆளுமை.
இன்று பாத்துமாவின் ஆட்டின் குறும்புகளையும் பஷீரிக்கா பற்றியும் நிறைய தகவல்கள் தேடி வாசித்தேன்.2010 ஆம் ஆண்டு கோழிகோட்டில் மனன்சிறா பூங்கா சதுக்கத்தில் பாத்துமாயுடே ஆட்டுக்கு சிலை வைக்கப்பட்டது.
அதை மலையாள இலக்கிய எழுத்தாளரும் இயக்குனருமான எம்டி வாசுதேவ நாயர் அவர்கள் திறந்து வைத்தார். அந்த குறும்புக்கார ஆடு பஷீர்க்கா அன்று தான் எழுதி வைத்த கைப்பிரதிகளைக் கூட மிக உரிமையாக சமயத்தில் தின்றுவிடுமாம், பஷீர்க்கா வீட்டில் சம்பய்கா பழ மரம் இருந்தது அதன் பூ ,இலைகள், அந்த கோவில் மணி வடிவ பழங்கள் என ஒன்றையும் மிச்சம் வைக்காமல் தின்றுவிடுமாம்.
ஒரு முறை பஷீர்க்காவின் தம்பி மகன் கால் சிறாயையும் தின்றுவிட்டதாம் அந்த குறும்பாடு.அசல் இலக்கியவாதிகளை இனம் கண்டு எப்படி மெச்சுகின்றனர்? கேரளத்தில்!!!!