போன மாதம் 15ஆம் தேதி 15 நாள் விடுப்பில் சென்னை சென்றேன்,என் நண்பரின் பழிவாங்கும் நடவடிக்கை தெரியாமல் அவர் ஆலோசனையின் பேரில் ஜெட் ஏர்வேஸில் முதல் முறையாக ரிசர்வ் செய்து பயணித்தேன்,டிக்கட் எமிரேட்ஸ் விமான சேவையை விட வெறும் 100 திர்காம்கள்(1250ரூபாய்) குறைவு, ஜெட் ஏர்வேஸின் உள்ளூர் விமான சேவை எப்படி என அறியேன், ஆனால் "துபாய் டு சென்னை" சர்வதேச விமான சேவை மிகவும் மட்டம் என இந்த பதிவு மூலம் எல்லோருக்கும் சொல்ல விழைகிறேன்..
ஏன் இது போன்ற விமான சேவையில் பயணம் செய்யக்கூடாது?
1.பயணம் செய்யும் நாற்காலிக்கடியிலேயே பயணிகள் பெட்டியை,பையை,வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியிருக்கும். ஆம், முதலில் வருபவர்கள் அப்பா!!!! மேலே பெட்டியை வைத்தாகிவிட்டது என பொருளை அடுக்கியிருக்க, பின்னே வருபவர்கள் பை, பெட்டிகள், விமான பணிப்பெண்களால் அசுரத்தனமாக உங்கள் பொருட்கள் மீது திணித்து அமுக்கப்படும்,அதில் உங்கள் லேப்டாப் ஸ்க்ரீன், நண்பர்களுக்கு வாங்கி செல்லும் ஃபாரின் சரக்கு,சாக்லேட்கள்,ஏனைய உடையும் பொருட்கள் சேதாரமாகக்கூடும், நீங்கள் பணிப்பெண்களை, (அ) பணிஆண்களை ஆட்சேபிக்கும் பட்சத்தில் உங்கள் உடைமை தரைக்கு வந்துவிடும், உங்கள் காலுக்கடியில் வைத்துக்கொண்டு ஹாய்யாக முடிந்தால் பயணிக்கலாம், என்ன? பாத்ரூம் போக வெளியே வர முடியாது, விமானத்துக்கு ஆபத்து என்றால் வெளியேற முடியாது. தலைவேதனை, பார்க்க படம், இது அங்கே நிதர்சனமாம்.

3.ஏசியால் குளிரெடுத்து நீங்கள் போர்வை கேட்டால் அது கொடுத்து தீர்ந்து போயிருக்கும் (மொத்தமே 20 தான் இருக்கக்கூடும்), அவர்கள் அசடு வழிந்தபடி டோண்ட் ஒர்ரி ஸ்ஸார், “ஐ ராக் டவ்ன் த ஏஸி” என்பார்கள், இரண்டாம் முறை தண்ணீர் கேட்டால் ஊருக்கு போய் குடித்துக்கொள்ளலாம், அவ்வளவு லேட்டாய் வரும். சரக்கு முதலில் கேட்கும் கனவானுக்கு மிகவும் அளந்து கொடுக்கப்படும் (தீர்ந்துடுமாம்), இரண்டாம் முறை கேட்டால் தட் இஸ் யெ எம்ப்டி பாட்டில் ஸ்ஸார், என அறிவுறுத்தப்படும்,விடாக்கண்டர்கள் எனக்கு பீராவது கொடு என குடிக்கலாம், இவர்கள் அதிலேயே 2 ப்ராண்ட்களை தருகிறார்கள்.
4.வெஜிடேரியன் உணவோ, நான் வெஜிட்டேரியன் உணவோ அகால வேளை அதாவது 1 மணிக்கு மேல் தான் கிடைக்கும், நீங்கள் முன்பே சாப்பிட்டிருக்க வில்லை என்றால் உங்கள் பாடு திண்டாட்டம் தான். கவலையில்லை நீங்கள் சீட்டுக்கடியிலிருந்து எடுத்து சாப்பிடலாம், வாங்கிப்போன சரக்கையும் குடிக்கலாம்.யாரும் அலட்டிக்கொள்ளமாட்டர்கள்.


7.ஈரமான தரைகொண்ட , கைகழுவ சோப் திரவமில்லாத ,துடைக்க காகிதம் இல்லாத, கழிப்பறைகள். பிஸினஸ் கிளாஸ் இருக்கிறதா என அறியேன்.எனக்கு நினைவில்லை.
என்னடா இவன் குறைகளையே அடுக்குகிறானே,நிறையே இல்லையா?என்றால் இருக்கிறது.

2. சாப்பாட்டில் கேரட் தூவிய தயிர் சாதம்,எலுமிச்சை ஊறுகாயும்,சக்கரை பொங்கலும் தருகின்றனர்.
3.இரவு 12-30 க்கு விமானம் புறப்பட்டாலும், தனியார் டவுன் பஸ் போல அடி அடியென அடித்து கொண்டு போய் 5-15க்கு சரியாக போய் விடுகின்றனர்.
4.சிறிய விமானமாதலால் 100 பேரின் லக்கேஜ் மட்டும் தான் கன்வேயரில் சுற்றும்,ஆகவே உங்கள் லக்கேஜ் சீக்கிரம் வந்திருக்கும்,எடுத்துக்கொண்டு கிளம்பலாம்.
டிஸ்கி:-
நான் விமானத்தில் இமிக்ரேஷன் விண்ணப்பம் பூர்த்தி செய்த பொழுது எந்த உள்குத்தும் இல்லாமல் பச்சை மையில் பூர்த்தி செய்து கையொப்பமும் இட்டுள்ளேன்,சரியாக கவுண்டரில் இருந்த கலர் பிளைண்ட்னெஸ் இல்லாத ஆஃபிஸர்,”ஏன் சார் நீங்க என்ன கெஸட்டட் ஆபிசரா?பச்சை மையில் கையெழுத்து போட்டிருக்கீங்க!!! என்று சொல்லி அதை அடித்து நீல மை பேனாவை தள்ளினார்.அதில் கையெழுத்து போட்டபின் முகத்தை திருப்பிக்கொண்டார்.அதுவும் மாறாது,நாமும் மாறமாட்டோம், என்று சிரித்தபடியே தாய்மண்ணில் கால் வைத்தேன். இனி ஆபீஸர் முன்னாடி யாரும் பச்ச மை யூஸ் பண்ணாதீங்கப்பா!!!!
வரும் போதும் ஜெட் ஏர்வேஸ் தான்,அதே விமானம்,ஸ்வாகத் என ஹிந்தியில் எழுதிய போர்டுகள்,என்ன தயிர் சாதத்துக்கு பதில் வெஜிட்டபிள் பிரியாணி.மாலை 6-30 மணிக்கு சரியாக புறப்பட்ட விமானம் 10-30 மணி உள்ளூர் நேரத்துக்கு துபாயில் சென்று சேர்ந்தது.இது முழுக்க முழுக்க என் அனுபவமே,விதிவிலக்குகள் இருக்கலாம்.
===============00000================
மிக முக்கிய அறிவிப்பு:-
காசு 100 திர்காம் கூட போனாலும்,எமிரேட்ஸ் போன்ற விமான சேவையில் செல்லுங்கள், அது ஸ்டார் ட்ரக்ஸில் தரக்கட்டுப்பாடு சான்றிதழில் 5க்கு 4 ஸ்டார் வாங்கி இருக்கிறது, அங்கே குழந்தையுடன் செல்லும் பெற்றோருக்கு ராஜமரியாதை தான்.நிறைய பலன்கள் உண்டு.
மேலும் போகிப் பண்டிகை/அதற்கு முன்நாள் இரவு அன்று விமான பயணம் செய்வதை தவிருங்கள், மூளை கெட்ட கயவர்களால் எல்லாவிதமான குப்பைகளும் கொளுத்தப்பட்டு, வான் மண்டலமே கரு மேக மூட்டமாய் இருப்பதால் ,விமானம் குறைந்தது 6 மணிநேரமாவது தாமதமாகும்,பொங்கல் பண்டிகைக்கு தன் சென்னை வீட்டிற்கு செல்பவர்கள்,கடுப்பாகி பெங்களூரில் உறவினர் வீட்டில் இறங்கிய சம்பவங்கள் நிறைய உண்டு.அது கொடுமையான அனுபவம்,பசிக்கும் வயிறுக்கு காலையில் சாப்பிட எதுவும் கிடைக்காமல் என் நண்பர்களும் அவர் குடும்பத்தாரும் பட்ட அவஸ்தைகளை ஒரு படமாகவே எடுக்கலாம். :)
===============00000================
மிக முக்கிய அறிவிப்பு:-
காசு 100 திர்காம் கூட போனாலும்,எமிரேட்ஸ் போன்ற விமான சேவையில் செல்லுங்கள், அது ஸ்டார் ட்ரக்ஸில் தரக்கட்டுப்பாடு சான்றிதழில் 5க்கு 4 ஸ்டார் வாங்கி இருக்கிறது, அங்கே குழந்தையுடன் செல்லும் பெற்றோருக்கு ராஜமரியாதை தான்.நிறைய பலன்கள் உண்டு.
மேலும் போகிப் பண்டிகை/அதற்கு முன்நாள் இரவு அன்று விமான பயணம் செய்வதை தவிருங்கள், மூளை கெட்ட கயவர்களால் எல்லாவிதமான குப்பைகளும் கொளுத்தப்பட்டு, வான் மண்டலமே கரு மேக மூட்டமாய் இருப்பதால் ,விமானம் குறைந்தது 6 மணிநேரமாவது தாமதமாகும்,பொங்கல் பண்டிகைக்கு தன் சென்னை வீட்டிற்கு செல்பவர்கள்,கடுப்பாகி பெங்களூரில் உறவினர் வீட்டில் இறங்கிய சம்பவங்கள் நிறைய உண்டு.அது கொடுமையான அனுபவம்,பசிக்கும் வயிறுக்கு காலையில் சாப்பிட எதுவும் கிடைக்காமல் என் நண்பர்களும் அவர் குடும்பத்தாரும் பட்ட அவஸ்தைகளை ஒரு படமாகவே எடுக்கலாம். :)
===============00000================