தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் இரட்டைத்தன்மை!!!:(

ருமை நண்பர்களே,சான்றோர்களே!!!! தமிழ் நாட்டின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களின் வலைத்தளங்கள் தமிழில் இல்லை, என்பதை நீங்கள் அறிவீர்களா? பல்கலைக்கழகங்கள் கல்வியை வியாபாரம் செய்கிறது என்பது சரியாகவே இருக்கிறது,


ன் நண்பர் ஒருவர் நான் தமிழ்குடிதாங்கி என்று எண்ணி, சேர் பெர்சன் மற்றும் டீன் என்னும் ஆங்கில வார்த்தைக்கு ஈடான தமிழ் வார்த்தை கேட்டார், தோ உடனே அனுப்புகிறேன்.என்று நானும் பொறுமையாக ஒவ்வொரு பல்கலைகழகத்தின் வலைத்தளமாக சென்று தேடிப்பார்த்தால் எதிலும் தமிழ் இல்லை,

சும்மா சொல்லக்கூடாது, பெரும்பான்மையான பல்கலை வலைத்தளங்களில் காண்போரை கவர்ந்திழுக்கும் தோன்றி மறையும்  மாணவர் சேர்க்கை விளம்பரங்கள் கூட ஆங்கிலத்திலேயே உள்ளன, மனோன்மணியம் சுந்தரனார் என்னும் நீண்ட தமிழ்ப்பெயரை பார்த்துவிட்டு நம்பிக்கையுடன் அந்த பல்கலைக்கழகத்தின் வலைத்தளம் சென்றால் , அது  கூட தமிழில் இல்லை, என்ன கொடுமை?!!!, இதை விடக்கூடாது என்று பொறுமையாக தேடிய பின்னர் பாரதிதாசன் பல்கலைகழகம் மட்டும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அழகாய் பொருள் கொண்டிருந்தது. அதிலும் நான் தேடிய இந்த சொற்கள் கிடைக்கவில்லை.

டைசியில் எனக்கு தெரிந்த விதத்தில் ஒரு  இலங்கை அகராதியில் பார்த்து அந்த நண்பருக்கு மொழி பெயர்த்து கொடுத்தேன்,பல்கலைக்கழகங்களுக்கு இந்த இரட்டைத்தனமை நாரப்பிழைப்பு தேவையா?இவர்களே இப்படி ஒதுக்கினால் ,மாணவர்கள் எப்படி தமிழை  விரும்பி படிப்பார்கள்?!!!
தோ அந்த மொழி பெயர்ப்பு:-[யாராவது இது தவறு என்றால் திருத்துங்கள்]

dean=பல்கலைக்கழக போதனா பீட தலைவர்

chair person=அமர்வு செயற்குழு உறுப்பினர்

ந்த பல்கலைக்கழகங்கள் தரும் சான்றிதழை பார்த்திருக்கிறீர்களா?!!! அதில்   மட்டும் யாருக்கும் புரியாதபடிக்கு இளங்கலை - கணிணிப்புலம், இளங்கலை - உயிரி அறிவியல் புலம்,  முதுகலை-கட்டிடக்கலைப்புலம் என்று .வெளிமாநில நிறுவனத்தாருக்கோ,வெளிநாட்டு நிறுவனத்துக்கோபுரிந்து கொள்ள முடியா மொழியில் கொடுப்பார்களாம், நாம் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அட்டெஸ்டேஷன் வாங்கி கற்பூரம் அடித்து அவர்கள் முன் சத்தியம் செய்ய வேண்டும் இது நான் படித்து வாங்கினேன் என்று
வாயில நல்லா வருது!!!தமிழுக்கு செம்மொழி மாநாடு நடத்தி முடிந்த கையோடு ஒரு ஆணையை எல்லா பலகலைக்கழகத்துக்கும், ஏனைய அரசு அலுவலகத்துக்கும் அனுப்பியிருந்தால் அது அழகு!!!. கோடிகளை கொட்டி செலவு செய்தவர்களுக்கு ஆயிரங்களை செலவு செய்து தமிழில் வலைத்தளம் செய்வது கடினமா?!!!!யோசிங்க ஆபீஸர்!!!
=============00000==============
நீங்களும் தமிழை இதில் தேடிப்பாருங்க.


=============00000==============
டிஸ்கி:-
இங்கே அரபு நாட்டின் ஏனைய வலைதளங்களில் அரபிக் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே வலைத்தளம் அமையப்பெற்று இருக்கும்..நான் கூட என் பதிவின் பெயரை இரண்டு மொழியில் வைத்துள்ளேன்!!!ஏன்?நான் ஆங்கில பதிவர்கள் பலருக்கும் போய் பின்னூட்டமிடுகிறேன்,அப்போது அவர்களுக்கு இது யார் ? என்ன பெயர் என்று குழப்பம் வரக்கூடாது, என்பதால் தான்.நான் ஆங்கில, தமிழ் இரண்டு மொழியிலும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளங்கள் அமைப்பதையே முன்/வழிமொழிந்து கெஞ்சி கேட்டு வரவேற்கிரேன்,நான் சத்தியமாக,மருத்துவர் ஐயா கட்சி இல்லை..மக்கள் தொலைக்காட்சியும் பார்ப்பதில்லை..

 =============00000==============

47 comments:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

Hi I don't feel nothing is wrong in this.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

ஆஹா...... பொறுமையா உக்காந்து ஒவ்வொரு பல்கலைக்கழகமா தேடித்தேடி லின்க் குடுத்த உங்களுக்கு இதோ ஒரு பாட்டு டெடிகேட் பண்ணுறேன்..

‘அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே....
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே...’

ச.செந்தில்வேலன் சொன்னது…

சரியான கேள்வி தான் கேட்டிருக்கீங்க கார்த்திக். கொஞ்சம் கொஞ்சமா மாத்துவாங்க..

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா.. ஜோக்ஸ் அபார்ட்.. எல்லாமே ஒரு விளம்பரந்தான் .. இல்லையா.. தமிழ் தமிழ்னு அடிச்சிக்குறதெல்லாம், ஒரு ஸ்டண்ட் நண்பா.. இவங்களால தமிழுக்கு, ஒரு முடியளவு கூட பிரயோஜனமே இல்ல.. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்னு ஜம்பம் அடிக்குற இந்தக் கும்பல், மொதல்ல சன் டிவியோட பேர மாத்துதா பார்ப்போம் . . ;-)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//பல்கலைக்கழக போதனா பீட தலைவர்//

இது என்னமோ பண்டையகால தமிழ் போல இருக்கு.. அந்தக் கால ஹிந்தி கைட்ல தான் இந்த ‘போதனா’ன்ற பேர பார்த்திருக்கேன் ;-)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//இந்த பல்கலைக்கழகங்கள் தரும் சான்றிதழை பார்த்திருக்கிறீர்களா?!!! அதில் மட்டும் யாருக்கும் புரியாதபடிக்கு இளங்கலை - கணிணிப்புலம், இளங்கலை - உயிரி அறிவியல் புலம், முதுகலை-கட்டிடக்கலைப்புலம் என்று .வெளிமாநில நிறுவனத்தாருக்கோ,வெளிநாட்டு நிறுவனத்துக்கோபுரிந்து கொள்ள முடியா மொழியில் கொடுப்பார்களாம், நாம் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அட்டெஸ்டேஷன் வாங்கி கற்பூரம் அடித்து அவர்கள் முன் சத்தியம் செய்ய வேண்டும் இது நான் படித்து வாங்கினேன் என்று//

இது பாயிண்ட்டு! என்னோட சட்ர்ரிஃபிகேட்லயும் இந்த மாதிரிதான் கீது... அது என்னன்னே இன்னமும் எனக்குப் புரில நைனா..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ராம்ஜி யாஹு,
நான் என்ன பனாரஸ் யுனிவர்சிட்டி,உஸ்மானியா யுனிவர்ஸிட்டி,மங்களூர் யுனிவர்சிட்டி வெப்சைட்டா தமிழ்ல இல்லன்னு பதிவிட்டுருக்கேன்?முழுசா படிச்சிட்டு பேசுங்க சார்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள் நண்பா,
இதை நான் ஏன் கேக்கனும்?
ஏன்னா மெட்ராஸ் யுனிவர்சிட்டி,மற்றும் அண்ணாமலை போன்ற யுனிவர்சிட்டிக்களின் டிகிரி சான்றிதழ்களை மொழிபெயர்ப்பு செய்யவேண்டியுள்ளது,அப்படி குடுப்பவர்கள் வெப்சைட்டை தமிழ்ல வச்சிக்கவேணாமா?ஹிந்திகாரன் ஊரில் போய் இதுல என்ன தப்பிருக்குன்னு சொல்ல முடியுமா?எப்போ செய்வாங்க,எல்லோரும்,ஏனைய வெப்சைட்டுகள் புதிதாய் துவங்கப்பட்டவையே,கொஞ்சமாவது அறிவு வேணாம் தமிழ்லயும் வெப்சைட் வைக்கோனும்னு.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செந்தில்,
நண்பா,கொஞ்சம் கொஞ்சமான்னா எப்போ அடுத்த செம்மொழி மாநாட்டுக்கா?இவனுங்க எல்லாம் ஏன் துணைவேந்தர்னு போட்டுக்கிறாய்ங்க?!!!!எல்லா பல்கலைகழக செய்தியிலும்?

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//ஏன்னா மெட்ராஸ் யுனிவர்சிட்டி,மற்றும் அண்ணாமலை போன்ற யுனிவர்சிட்டிக்களின் டிகிரி சான்றிதழ்களை மொழிபெயர்ப்பு செய்யவேண்டியுள்ளது,அப்படி குடுப்பவர்கள் வெப்சைட்டை தமிழ்ல வச்சிக்கவேணாமா?//

கண்டிப்பா வைக்கணும் தான்... சரியான கேள்விதான் கேட்டுருக்கீங்க. . ஆனா, இவங்க திருந்த மாட்டாங்கன்னு நல்லாத் தெரியுது ;-(

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//இது பாயிண்ட்டு! என்னோட சட்ர்ரிஃபிகேட்லயும் இந்த மாதிரிதான் கீது... அது என்னன்னே இன்னமும் எனக்குப் புரில நைனா..//
என்ன கொடுமைன்னா என் சிபிஎஸ்ஸி நண்பர்களுக்கு தமிழில் எழுதவோ படிக்கவோ வராது,அவர்களில் ஒருவர் என்னிடம் அதை கொடுத்து இது என்ன என கேட்டார் பாருங்கள்,?

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

இந்தப் பதிவுக்கு நீங்க குடுத்துருக்குற லேபிள் தான் டாப்பு ;-) ஹீ ஹீ

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//என்ன கொடுமைன்னா என் சிபிஎஸ்ஸி நண்பர்களுக்கு தமிழில் எழுதவோ படிக்கவோ வராது,அவர்களில் ஒருவர் என்னிடம் அதை கொடுத்து இது என்ன என கேட்டார் பாருங்கள்,?//

ஹ்ம்ம்ம்... மெல்லத் தமிழ் இனிச் சாகும் ??

பெயரில்லா சொன்னது…

namma kitta mozhi patru illai,athuthan inge ippadi velippattirukku,nalla pathivu,tamilla kandippa website irukkanum,appothan tamil medium padichavanga use panna mudiyum

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள் நண்பா,
இது ஆத்திரத்தில் போட்ட பதிவல்ல,எவ்வளவு நேரமா தேடுறேன்,ஆப்படலை,என்ன கொடுமை,ஆங்கிலம்+தமிழில் வெப்சைட் உருவாக்க என்ன நொள்ளை?எந்த பேமானி சைட் உருவாக்க காசு குடுத்தது?தமிழ்மீடியம் படித்தவர்கள் ஆங்கிலத்தில் உள்ள ஏனைய கடினமான சொற்றொடர்களை வாசிப்பார்களா?!!!அப்போ வெப்சைட் என்பது இங்ளிஷ் மீடியம் படித்தவருக்கு மட்டுமா?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள் நண்பா,
சத்தியமா சிபிஎஸ்ஸி யில் ஹிந்தியை இரண்டாம் மொழியாக எடுத்த ஏனைய மாணவர்கள் வீட்டில் ஆர்வமாய் தமிழ் படித்தாலே ஒழிய,அவர்களுக்கு தமிழ் தெரிய வாய்ப்பில்லை,உதாரணம் என் பக்கத்து சீட் ஆர்கிடெக்ட் நண்பன்,அவன் பேர் தமிழில் எழுதி கூட நான் பார்த்ததில்லை.வாசிக்கவும் தெரியாது,ஒரு வேளை காரில் போகும் போது தமிழில் மட்டும் ரூட் போட்டிருந்தால் இது போல ஆட்களின் கதி?

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல பகிர்வு. மிக முக்கியமான கேள்வி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@அனானி,
நன்றி நண்பா,பேரை போட்டிருந்தால் தமிழுக்கு பலமாக இருந்திருக்குமே,

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செ சரவணகுமார்
மிக்க நன்றி நண்பரே,மேலே ஒருவர் இதில் என்ன தவறுன்னு ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்.உங்கள் சார்புநிலை மகிழ்ச்சியளிக்கிறது.

பெயரில்லா சொன்னது…

இதை மேலே கொடுத்துள்ள எல்லா பல்கலைக்கழகத்தின் இமெயில் ஐடிக்கும் அனுப்பிவிட்டேன்,என்னால் முடிந்த ஒரு உதவி,ஆட்டோ வந்தால் நான் பொறுப்பில்லை:)))
பேர் வேணாமே.

இராமசாமி கண்ணண் சொன்னது…

மொழி முக்கியம்தான் நண்பா .. இல்லைங்கள.. ஆனா தமிழ்நாட்டுல இருக்கற பல்கலைகழகங்கள்ள படிக்க வரவங்க தமிழ்நாட்டு காரங்க மட்டும்தானா... எனக்கு தெரிஞ்சு மதுரை காமராஜ் பல்கலைகழக வளாகத்தில் ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த மாணவர்க்ள நிரய பேர பாத்திருக்கேன். இப்ப அவங்கள மாதிரி உள்ள யாரோ ஒரு வெளி நாட்டினை சேர்ந்த மாணவர்கள் அவங்களோட படிப்ப தொடர இண்டெர்நெட்ல தேடினாங்கன்னா , இப்ப நீங்க சொல்ற மாதிரி பல்கலைகழகங்களோட வலைபக்கங்கள் தமிழ்ல இருந்ததுன்னா மொழி தெரியாம அவங்க இந்த பல்கலைகழகங்கள ஸ்கிப் பண்றதுக்கு சான்ஸ் அதிகம் இல்லைங்களா. மொழிபற்று எந்த எந்த இடத்தில இருந்தா சரின்னு ஒன்னு இருக்கு இல்லிங்களா. என்ன பொருத்த மட்டில் ஆங்கிலம் ஒரு வர்த்தக மொழி.. வர்த்தக சம்பந்தபட்ட வலைப்பக்கங்கள்(நீங்க சொல்ற பல்கலைகழக வலைப்பக்கங்கள் உட்பட) ஆங்கிலத்தில் இருந்த்தல் நலம் நண்பா.

இராமசாமி கண்ணண் சொன்னது…

வேணும்னா தமிழில் படிக்க, to read in English னு ரெண்டு ஆப்ஷன் கொடுக்கலாம்.. இங்க( யூ.எஸ் ல) நீங்க எந்த கஷ்டமர் கேருக்கு கால் பண்ணினாலும் , to continue in English press 1, for Espanol press 2ன்னு ஆப்ஷன் கொடுக்கறாங்க.. நம்ம ஊருல கூட எந்த கஷ்டமர் கேருக்கு கால் பண்ணினாலும் தமிழில் பேச, ஆங்கிலத்தில் பேச அப்படின்னு ஆப்ஷன் கொடுக்கறாங்க.. அப்படி வேணா தரலாம்.. அப்படியில்லாம முழுக்க எல்லாத்தயும் தமிழுக்கு மாத்தனுன்னு சொல்றது சரிப்படாது நண்பா..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இராமசாமி கண்ணன்,
நண்பா அதேதான் நானும் கேட்கிறேன்,இருமொழியிலும் வேண்டும் என்று,நான் குறிப்பாக நீங்கள் சொன்ன பொத்தானை தேடினேன்,எங்குமே இல்லை,

இங்கே அரபு வலைதளங்களில் அரபிக் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே வலைத்தளம் இருக்கும்..

நான் கூட என் பதிவின் பெயரை இரண்டு மொழியில்
வைத்துள்ளேன்?ஏன்

நான் ஆங்கில பதிவர்கள் பலருக்கும் போய் பின்னூட்டமிடுகிறேன்,அப்போது அவர்களுக்கு இது யார் என்ன பெயர் என்று குழப்பம் வரக்கூடாது என்பதால் தான்.

நான் இரண்டு மொழியிலும் வைப்பதையே வழிமொழிந்து கெஞ்சி கேட்டு வரவேற்கிரேன்,நான் சத்தியமாக,மருத்துவர் ஐயா கட்சி இல்லை..
மக்கள் தொ,கா வும் பார்ப்பதில்லை..

எங்கே கல்பூரம்?எங்கே கல்பூரம்?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.

ஜீவன்பென்னி சொன்னது…

வெப்சைட்ட எல்லாருக்கும் புரியுற மாதிரி வடிவமைக்குறதுக்கு இன்னும் தெரியல. இதுல எங்க இவுங்கல்லாம் இரண்டு மொழியில மாத்தப்போறாங்க.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//சான்றோர்களே!!!! //

உள்ளேன் அய்யா..!!!

King Viswa சொன்னது…

//ஹாலிவுட் பாலா சொன்னது…
//சான்றோர்களே!!!! //

உள்ளேன் அய்யா..//

Me Also.

வினோத்கெளதம் சொன்னது…

Guru Vote poda mudiyula..

பின்னோக்கி சொன்னது…

இப்ப இன்ஜினியரிங் கூட தமிழ்ல படிக்கலாமாம். ஆனா வலைத்தளத்தில் தமிழ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது

ஜாக்கி சேகர் சொன்னது…

இது கொடுமைதான்...

Vetri சொன்னது…

தமிழ் இவர்களுக்கு அரசியல் வியாபாரம். இவர்களின் வீட்டு பிள்ளைகள் தமிழை மூன்றாவது மொழியாவது கூட படிப்பதில்லை.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜீவன் பென்னி
ஆமாம் நண்பா,குழப்போ குழப்பு என குழப்புகின்றனர்,சிலதில் மெனு வேலை செய்யாது,கொடுமை தான்,நன்றி

@ஹாலிபாலி சாரி பாலிபாலி

தல,என்ன நீங்க?தமிழுக்கு தடி எடுத்து[அய்யோ சார் வேற உவமை கிடைக்கலை]போராடுவீங்கன்னு பார்த்தா?!!!!:))


@கிங்விஸ்வா.
வாங்க நண்பா,நீங்களுமா?!!சூப்பரு


@வினோத்கவுதம்

சரி குரு,அப்படின்னா உன் பொன்னான கருத்தையாவது இந்த பொட்டியில் பதிவுசெய்யலாமில்ல?நன்றி

@பின்னோக்கி,
மிகச்சரியான பாய்ண்டை பிடிச்சீங்க,இந்த விடயம் எனக்கு இப்போ தான் தெரியும்,பேஷண்டே இல்லாம வைத்தியம் பார்க்கும் மூடர்கள்.நன்றி

@ஜாக்கிசேகர்,
அண்ணே,உங்க பாணில ஒரு த்தா போட்டு திட்டுனா சூப்பாராருந்திருக்கும்,
ஒருநாள் இந்த பாயிண்டை சாண்விச்ல வறுங்க.:))நன்றி

@வெற்றி.
சரியாக சொன்னீர்கள் நண்பா,வியாபாரமே தான்.மூணாவது மொழியாக கூட தமிழை தேர்வு செய்யமுடியாதவர்கள் தமிழ்குடிதாங்கிகள்.

வினோத்கெளதம் சொன்னது…

குரு சரியாக சொன்னிர்கள்..தமிழ் தமிழ் என்று ஊரை ஏமாற்ற தான் இவர்கள் எல்லாம் சரி..

ஹாலிவுட் பாலா சொன்னது…

FETNA.. FETNA.. -ன்னு... அமெரிக்காவில்.. தமிழ் வளர்த்துகிட்டு இருக்கற வெப்சைட் கூட முழுக்க ஆங்கிலத்தில் மட்டும்தாங்க இருக்கு.

3 வாரத்துக்கு முன்னாடி... இவங்க விழா நடந்தப்ப இந்த கேள்வியை கேட்கலாம்னு இருந்தேன். அப்புறம்.. பொயச்சி போவ்டும்னு விட்டாச்சி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வினோத் கவுதம்
குரு மிகச்சரியாக தமிழுக்கு குரல் குடுத்து நீயும் ஒரு குடிதாங்கி என்பதை நிரூபித்தாய்,ஹஹஹ்ஹஹ

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஹாலிபாலி,
தல,இதை முன்னமே தெரிஞ்சிருந்தா 2இன் ஒன்னா பதிவு போட்டு கிழிச்சிருப்பேனே,விடுங்க,இன்னொரு நாள் வச்சிக்கிறேன்.தகவலுக்கு நன்றி.தல ரெண்டு மொழில வைக்குறதால என்ன கேவலம்?இவங்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்,ஆங்கிலம் தான் மேட்டிமையை குறிக்குமா?சிவிலைஸ்டு லாங்வேஜா?இன்னும் 30களில் இருக்கும் cbsc படித்த என் நண்பர்களுக்கு தமிழ் படிக்க எழுத வராது,அவன் எப்படி எலக்கியம் ,சாரு,ஜெயமோகன் எல்லாம் படிப்பான்..ஹ்ஹஹாஹ,நாம அது பத்தி பேசும்போது ஸ்டைலா ஐபாட்ல போகாஸ்ட் கேப்பான்,என்ன கேப்பான்,பகவத்கீதை கேப்பான்,ஐயோ ஐயோ

Sabarinathan Arthanari சொன்னது…

நல்ல விழிப்புணர்வு கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@சபரிநாதன் அர்த்தநாரி,
வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி நண்பரே

பெயரில்லா சொன்னது…

இதுல என்ன தப்ப கண்டுட்டீங்க,ஏன் ஆங்கிலத்துல இருந்தா என்ன தப்பு?உங்கள மாதிரி ஆளால தான் தமிழ்நாட்டுல யாருக்கும் ஹிந்தி தெரியாமபோச்சி,நியூசென்ஸ்.உங்கள எல்லாம் முட்டிக்கு முட்டி தட்டனும்,இரு அதுக்கான வேலைய செய்யுறேன்.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு நண்பா,
இரண்டு மொழியும் வேண்டும் என்பதே எனது எண்ணமும்
-செல்வம்,வேளச்சேரி.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

டேய் சூடு சுரணையற்ற அனானி
நீ நரகல் தின்பவன் என்று நினைக்கிறேன்,அதனால் தான் உனக்கு தமிழ்பற்று கொஞ்சம் கூட இல்லாமல் இப்படி ஒரு வார்த்தையை சொல்லியிருக்கிறாய்,ஹிந்தி என்ன தேசிய மொழியா?எல்லோரும் அதை பேச?அது வெறும் மற்றொரு அலுவல் மொழி,அதை புரிந்து தெரிந்துகொள்,இந்த வீம்புக்கென்றே நான் ஹிந்தி கற்ற்கொள்ளப்போவதில்லை.உன்னால் முடிந்ததை பிடுங்கிக்கொள்,வலதுபக்கம் உள்ளதுதான் என் விலாச அட்டை,அது தான் என் போன் நம்பர்,நீ உண்மையிலேயே வீரன் என்றால் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடு,இல்லை என்றால் மூடிக்கிட்டு போத்திக்கிட்டு படு,உனக்கு இது எச்சரிக்கை,எச்சைப்பயலே!!!ஆனதைபார்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@நல்ல அனானி,இவன் பின்னாடியா வந்து நீங்க கமெண்ட் போடனும்
நன்றி சார்

ILLUMINATI சொன்னது…

நண்பா!நம்ம நாட்டில் உள்ள தமிழ்க் குடிதாங்கிகள் இதைப் பத்தி எல்லாம் கவலைப் பட மாட்டார்கள்.என்னைப் பொறுத்த வரை,தமிழை வளர்க்க உண்மையிலேயே சிறந்த வழி இணையம் தான்.அதை விட்டுட்டு,சும்மா பேருக்கு அலையும் இந்த வீணர்கள்,வெட்டி வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையை சொல்லப் போனால்,தமிழ் எக்காலத்திலும் மக்களால் தான் வளர்ந்தது,வளரும்.நம்மால முடிஞ்சத நாம செய்வோம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இல்யுமினாட்டி,
ஆமாம் நண்பா,
இதை தப்பேயில்லைன்னு சொல்லும் ஆட்களை என்ன செய்வது?நன்கு ப்ரொஃபெஷனல் படித்தும் ஆங்கிலத்தில் நல்ல கண்ட்ரோல் இருந்தும் இணையத்தில் தமிழில் எழுதும் உங்கள்,கருந்தேள்,பாலா போன்ற சிலஆட்கள் இருப்பதால் தான் தமிழ் இன்னும் இருக்கிறது,அதை ஆங்கிலம் தான் சிவிலைஸ்டு லாங்வேஜ் என்று மார்தட்டும் சிலர் புரிந்துகொள்ளணும்.எப்போவுமே மெஜாரிட்டி தான் ஜெயிக்கும்..நன்றி நண்பா

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

நான் தமிழுக்கு எதிரி அல்ல. அனால் இனி ஆங்கிலம் கலக்காத தமிழில் அனைவரையும் பேச வைப்பது கடினம்தான். பல ஆங்கில வார்த்தைகளை கடைநிலை மக்கள் கூட பேச்சுத்தமிழில் உபயோகிக்கிறார்கள். நல்ல தமிழில் நீங்கள் பேசினால் கூட அது அவர்களுக்குப் புரியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும் பல்கலைக்கழகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செம்மொழியை வளர்ப்பதற்கு முன்வர வேண்டும். கவலை வேண்டாம் இணையத்தின் மூலம் நல்ல தமிழ் ஒருபுறம் மிக நன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வித்யா சுப்ரமணியம்,
வருகைக்கும் நல்ல கருத்துக்கும் நன்றி அம்மா.நான் ஆங்கிலத்துக்கு எதிரி அல்ல,ஆங்கிலம் தெரிந்திருப்பதால் தான் என்னால் என் முதலாளியிடம்,ஏனைய அரபுநாட்டவரிடமும்,ஐரோப்பியரிடமும் ,என் அலுவலகத்திலேயே வேலைசெய்யும் பிற மாநில இந்தியரிடமும் பேசமுடிகிறது,அந்த நன்றி எபோதும் உண்டு,என்ன தான் அது எனக்கு வருமானம் தந்தாலௌம் அது மாற்றாந்தாய் தான்,தமிழ் தான் பெற்ற தாய்,அதனால் தான் அதிலும் இணையதளம் இருக்க விரும்புகிறேன் அம்மா,நீங்கள் சொன்னது போல இப்போது பலர் இணையதளம் மூலம் தமிழில் அருமையாக எழுதிவருகின்றனர்.

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

அடடா! என்ன கார்த்தி இது கூட தெரியாம இருக்கிங்க! தமீல் எல்லாம் நாங்க பேச மாட்டோம் எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தப்பு தப்பான ஆங்கிலம் தான். தமீல் இஸ் ஏ கண்ட்ரி லாங்குவஜ். தமிழ்நாட்டில் சுயநிதிக் கல்லூரிகள் எல்லாம் வியாபார நிறுவனங்கள், ஆனால் அரசு கல்லூரிகளும் இப்படி மெத்தனமாக இருப்பது நீங்கள் சுட்டிக் காட்டியபின் தான் எனக்குத் தெரிந்தது. இரு மொழிகளிலும் இணையதளத்தை வைத்தால் வெளிநாட்டினர் பார்க்கும் போது நம் மொழியிலும் இருப்பதை பார்த்து பெருமையாகத் தான் நினைப்பார்கள். சீன, ஜப்பானிய, ஜெர்மனிய, இத்தாலிய இப்படி பல நாட்டின் முக்கிய தளங்கள் இரு மொழிகளிலேயே அமைக்கப்பட்டிருக்கும்.

தாய் மொழி பேசினால் மட்டுமல்ல தெரியும் என்று சொன்னாலே வெக்கக்கேடு என்று நினைக்கும் கூட்டம் இது. இரண்டு வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் அதில் கூலி வேலை செய்யும் பெற்றோர் தன் மகன் சுயமாக படித்து அண்ணா பல்கலைகழகத்தில் பொறியில் பட்டம் சேர்ந்தான் என்றும் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஆங்கில வழிக் கல்விக்கு ஈடு கொடுக்க முடியாமல் தன்னை மாய்த்துக் கொண்டான் என்று கண்ணீருடன் கூறினார்கள். கல்லூரி என்ன செய்ய வேண்டும், இந்த மாதிரி வரும் மாணவர்களுக்கு அவர்கள் தன்னம்பிக்கை வளரும் வரை ஆங்கில வகுப்புகள் கூடுதலாக எடுத்திருக்கலாம். ஆங்கிலம் என்பது ஒரு மொழி என்பது போய் அது தான் அறிவு என்று போதிக்கும் அறிவிலிகள். ஆங்கிலம் தெரியாதவர்களை பகடி செய்வது இவர்கள் தொழில். நான் ஆங்கிலத்திற்கு எதிரி அல்ல, நல்ல ஆங்கிலமும் வேண்டும், நல்ல தமிழும் வேண்டும்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மீனாட்சி சுந்தரம்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

//தாய் மொழி பேசினால் மட்டுமல்ல தெரியும் என்று சொன்னாலே வெக்கக்கேடு என்று நினைக்கும் கூட்டம் இது. இரண்டு வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் அதில் கூலி வேலை செய்யும் பெற்றோர் தன் மகன் சுயமாக படித்து அண்ணா பல்கலைகழகத்தில் பொறியில் பட்டம் சேர்ந்தான் என்றும் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து ஆங்கில வழிக் கல்விக்கு ஈடு கொடுக்க முடியாமல் தன்னை மாய்த்துக் கொண்டான் என்று கண்ணீருடன் கூறினார்கள். //

வார்த்தைக்கு வார்த்தை அப்படியே வழிமொழிகிறேன் நண்பரே,நான் பணிபுரிந்த எல்லா சென்னை ஆர்கிடெக்ட் ஆஃபிஸிலுமே ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்,ஆனால் செய்வது லோக்கல் வேலை,சம்பாதிப்பது லோக்கல் காசு,ஆனால் பேசுவது மட்டும் ஆங்கிலம்,வேறு மாநிலத்தவர் பேசினாலும் பரவாயில்லை,நம் ஆட்களே அப்படித்தான்,அதிலும்,ஃபிகர்கலிடம் ஃப்லிம் காட்டவே இது என்ன தமிழா,|can't read or write in tamil yaar|எனக்கு எழுத படிக்க தெரியாது என ஸ்டைலாய் சொல்வர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)