கழுதைக்கு கற்பூர வாசனை தெரியவே வேண்டாம்!!!!:(


ழுதைக்கு கற்பூர வாசனை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அது மாற்று இனத்தின் மீது இப்படி ஒர் வன்முறையை பிரயோகிக்காது. மனிதர்கள் என்று கூறிக்கொண்டு சில கொடியவர்கள் தெற்கு  ரஷ்யாவின் அசோவ் கடற்கரையில் ஒரு அப்பாவி கழுதையை பாராசூட்டில் கட்டி ஏற்றி,மோட்டார் படகில் இணைத்து , அரை மணி நேரம்  பாராக்ளைடிங் செயததையும், அதை அங்கே குழுமியிருந்த பல கொடியவர்கள் காப்பாற்றாமல் போட்டோ,வீடியோ எடுத்ததையும் நீங்களே பாருங்கள்!!!. 

யாரும் போலீசுக்கு கூட தெரிவிக்காமல் மும்முரமாக வீடியோ எடுத்துள்ளனர், கழுதை மரண பயத்தில் அலறியது ஊருக்கே கேட்டதாம்,கழுதையை இவர்களின் மோட்டார் படகு கீழே இறக்கி விடுகையில் அது  கடல் நீரில் ஏறத்தாழ  மூழ்கியே போனதாம்,பின்னர் மூச்சு திணறியபடியே அதன் கால்கள் தரதரவென உரசிய படி தரையைத் தொட்டதாம், மக்களில் சிலர் அதை கண்டு கைகொட்டி சிரிக்க, அங்கே இருந்த குழந்தைகள் மட்டும் இது தவறு என்று பெற்றோரிடம் அதை காப்பாற்ற சொல்லி அழுதது ,எனப்  படித்தேன். மனிதம் உயிரோடு இருக்கிறது என இன்னும் நம்புகிறீர்களா?!!!

கழுதையைக் கட்டி பறக்கவிடும் கொடியவர்கள்,காணொளி யூட்யூபிலிருந்து:-

32 comments:

மயில்ராவணன் சொன்னது…

அடப்பாவிகளா. இன்னும் என்னனெத்த பறக்கவிடபோறாங்களோ?

பின்னோக்கி சொன்னது…

மனித மனங்களின் வக்கிரம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது :(

பிரசன்னா சொன்னது…

நம்ம ஆட்களை என்னான்னு சொல்றது? மிருகமெல்லாம் கிண்டல் பண்ணி சிரிக்க போகுது..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மிக மோசமான இந்த செயலை கண்டிக்கிறேன்.மிருக வதை தடுப்பாளர்கள் என்ன செய்தார்களாம்?

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

ஒருவதைகயாக சாட்டிஸசம் இது... பரிணாமத்தின் உச்சகட்டம் மனித இனம் எனபது முற்றிலும் பொய்...

ஜோதிஜி சொன்னது…

மேற்கொண்டு இன்னும் கொஞ்சம் விபரங்கள் தந்து இருக்கலாம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@மயில் ராவணன்
நன்றி மக்கா

@பின்னோக்கி
நன்றி நண்பரே

@பிரசன்னா
நன்றி நண்பா

@ஆர்.கே.சதீஷ்குமார்
நன்றி நண்பரே,மிருக வதை ஆர்வலர்கள் ரஷ்யாவில் அறவே இல்லை போலும்.

@நாஞ்சில் பிரதாப்
ஆமாம் நண்பா,வேதனை தான்,இன்று கல்ஃப்நியூசில் இதை படித்தேன்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜோதிஜி,
வாங்க தலைவரே,அது ஆண் கழுதையா?இல்லை பெண் கழுதையான்னு தெரியலை?வேற என்ன தகவல் எழுதறது?இதுவே இன்னிக்கி காலை செய்திதாள் பார்த்து விபரம் சேர்த்து எழுதியது,மாலை உங்க வலைச்சரம் பக்கம் வரேன்.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

இதெல்லாம் ரொம்ப ஓவரு !! பாவம் அந்தக் கழுதை... அதப்போயி இப்புடி பறக்க உட்டுட்டானுங்களே . . அந்தக் கழுதை என்ன நினைச்சிருக்கும் ??

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

அதப் பறக்க உட்டவனுங்கள புடிச்சி, ஒரு நூறு கழுதைகளுக்கு நடுவுல உட்ரணும்.. (அந்த நூறு கழுதைல ஒண்ணு, இந்தப் பர்ட்டிக்குலர் கழுதை)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்,
வேற என்ன நினைச்சிருக்கும்.அட மனுஷப்பதருகளான்னு நினைச்சிருக்கும்,இனி அதுங்களுக்குல்ல திட்டோனும்னா,டேய் மனிதான்னு திட்டும் போல.!!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆமா நண்பா கரிட்டு,
அவனுக்கு எட்டி எட்டி உதைச்சே கொண்ணுடும்,கழுதைக்கு வேற அஞ்சுகால்:)))

ஹாலிவுட் பாலா சொன்னது…

கழுதைக்கு குரல் கொடுத்த கார்த்திக்கேயன்

வாழ்க.. வாழ்க..!!!

ஹாலிவுட் பாலா சொன்னது…

எட்டி மர்ஃபிக்கு அப்புறம்.. நீங்கதான் தல!!

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஏரியா சீரியஸ் ஆக விட்டுடுவோமா என்ன??? ;))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல வாங்க,வாங்க

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

மயில் ஒரு பதிவு போட்டிருக்கார்,மாட்ரேஷனே இல்லை

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல அந்த வீடியோவ பாருங்க,நமக்கே பறக்க எவ்வளவு பய்மிருக்கும்,பாவிங்க ஒரு பேசமுடியா ஜீவனை வதைச்சிருக்காய்ங்க

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

உங்க அஞ்சலிபாப்பாக்கு கூட கருணை ,இரக்கம் இருக்கும்,உங்க மனசு கல்லா?

கல்மனம் கொண்ட ஹாலிபாலா ஒழிக!!!இது எப்புடி?:))

ஹாலிவுட் பாலா சொன்னது…

எதுக்குங்க.. வீடியோ பார்த்தா.. டெஞ்சன் வரும். கும்மி மிஸ்ஸாகும்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//கல்மனம் கொண்ட ஹாலிபாலா ஒழிக!!//

ஒழிக.. ஒழிக...!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அடடா,?!!!!
என்ன ஒரு கல்மனம்?
தனக்கே ஒழிக போடும் ஒரு கல்மனம் கொண்ட ஹாலிவுட் பாலா ஒழிக ஒழிக

இராமசாமி கண்ணண் சொன்னது…

இத நானும் ஒரு நண்பர் சொல்ல கேள்விபட்டேன். இந்த செஞ்சவன் கிடைச்சான்னா அவன குறைஞ்சது பத்து வருசம் ஜெயில்லே போடுவாங்களாம் (:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

எனக்கு இன்னும் சிரிப்பு அடங்கவில்லை போங்க . என்ன கொடுமை இது . இதை பறக்க விட்டவர்கள் அடுத்தப் பிறவியில் படப்போகும் பாடு அதோ கதிதான் . இதை நான் சொல்லவில்லை . அந்த கழுதை சொல்ல சொன்னது .

ஜாக்கி சேகர் சொன்னது…

அந்த குழந்தைகளிடம் மனிதம் இருக்கின்றது...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@இராமசாமி கண்ணன் ,
நன்றி நண்பா,அவனுங்க முகம் தான் வீடியோவுல இருக்கே,கண்டிப்பா மாட்டுவானுங்க.

@பனித்துளி சங்கர்.
வாங்க நண்பா,எனக்கும் உங்க கமெண்டை பார்த்துவிட்டு சிரிப்பு வந்துடுச்சி,கழுதைகிட்ட வருத்தப்பட வேணாம்னு சொல்லுங்க

@ஜாக்கி சேகர்
அண்ணே,உண்மை தான்,குழந்தைகள் குழந்தைகள் தான்,நன்றி

Sabarinathan Arthanari சொன்னது…

என்ன கொடுமைங்க இது(நிகழ்வு) :(

கண்ணா.. சொன்னது…

//ஹாலிவுட் பாலா சொன்னது…

கழுதைக்கு குரல் கொடுத்த கார்த்திக்கேயன்

வாழ்க.. வாழ்க..!!!
//

ஹா ஹா கலக்கல் கமெண்ட்

சீரியஸான பதிவிலயும் சிரிக்க வைச்சு விஷயத்தை நீர்த்து போக வைக்குறாரே.... வினவுட்ட புட்ச்சு குடுத்து கோமாளி சர்ட்டிபிகேட் வாங்கி குடுத்தரலாமா????

உலக சினிமா ரசிகன் சொன்னது…

உலகிலேயே மிகக்கொடிய மிருகம் மனிதன்தான்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கண்ணா,
ஆமாம் மனுஷன் சீரியஸ் விஷயத்தை நீர்த்துபோகசெய்கிறார்.ஹஹஹ்ஹஹஹ்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@உலகசினிமா ரசிகன்
ஆமாம் தலைவரே,உண்மைதான்

Sabarinathan Arthanari சொன்னது…

இரு மொழிகளிலும் தகவல் இருக்க வேண்டுமென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. நல்ல விழிப்புணர்வு கருத்து. கலக்குங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)