ஹல்லாபோல் [Hallabol][ஹிந்தி][2008] உரக்க கத்து

ந்த படம் பாலிவுட், கோலிவுட், டோலிவுட்,மோலிவுட் என எல்லா வுட்டுக்குமே பொருந்தும் என்னுமளவுக்கு அம்சமான ஒரு டெம்ப்ளேட் கொண்டது. ஏனென்றால் நாமும் இந்தியர்தானே!!!,அடுத்தவனுக்கு நடந்தால் செய்தி !நமக்கு நடந்தால் விபத்து, என நினைப்போர் தானே!! இதில் செமையாக அந்த மனநிலை மனிதர்களை  சுளுக்கெடுத்துள்ளனர்.

நான்,ரேஸ்,டஷன்,சிங் இஸ் கிங்,மிஷன் இஸ்தான்புல், ஹை ஜாக், பூத் நாத், தோஸ்தானா  போன்ற பல மரண மொக்கைகளை நண்பர்களுக்காக வெண்திரையில் பார்த்து தொலைத்ததால் இனி ஹிந்திப்படமே தியேட்டரில் பார்ப்பதில்லை, என்றிருந்தேன்,  சரி ப்ரிண்ட் நன்றாய் இருக்கே!!! என்று, இந்த  படத்தை நம்பிக்கையுடன் பார்க்க ஆரம்பித்தேன்,  சும்மா சொல்லக்கூடாது, செம வேகம்,உண்மை ஒளி காட்சிக்கு காட்சி ,வசனத்துக்கு வசனம் வீசுகிறது. அஜய் தேவ்கனுக்கு பிவோட்டலான ரோல், கரணம் தப்பினால் அவர் தான் வில்லன் என்னும்படியான பாத்திரம், இந்த மனிதரின், ஓம்காரா, பகத்சிங், யூ மீ அவ்ர் ஹம்  பார்த்திருக்கிறேன். இதிலும் நன்றாக தன் நடிப்பு முத்திரையை  அழுத்தமாய் பதித்துள்ளார். காமெடிக்கென தனி ட்ராக் வைக்காமல் அதையும் தானே அடித்து ஆடியுள்ளார், இவரின் எடுப்பாக வரும் சஞ்சய் மிஸ்ராவுடன் இணைந்து கலக்குகிறார்.

பிற்பாதியில் சிறிது நாடகத்தனமிருந்தாலும், நம்ப முடிகிறது. வசனங்கள் செம கூர்மை, நட்ராஜ் சுபரமணியனின் கதையோடு ஒன்றிய  ஒளிப்பதிவு அட்டகாசம்,சுக்விந்தர் சிங்கின்  இசையும் அருமை, அதிகம் பாடல்களில்லை,, அப்படியே  வந்தாலும் லாஜிக்கலாய் வருகிறது, இந்த படத்திலும்  இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி சாதித்திருக்கிறார்.ய ஒர்த்திவாட்ச். 

ஜய் தேவ்கனின் குருவாய் வந்த பங்கஜ் கபூருக்கு தன் கலைவாழ்வில் சொல்லிக்கொள்ளக்கூடிய வேடம் இதில், முன்னாள் சம்பல் கொள்ளைக்காரன், ராஜா அரிச்சந்திரா நாடகம் பார்த்து ஆயுதம் கீழே போட்டு, சரணடைந்து, தண்டனை அனுபவித்தவர் இந்நாள் வரை சமூகவிழிப்புணர்வு தூண்டும்  ஹல்லாபோல் என்னும் வீதிநாடகங்கள் போட்டு வருகிறார்,  வயிற்றுக்காக  மெக்கானிக் ஷாப்பும் வைத்துள்ளார். [இந்த சித்து கதாபாத்திரம் 1989 ஆம் ஆண்டு அரசியல்வியாதிகளின் அடியாட்களால் சுட்டுகொல்லப்பட்ட சஃப்தார் ஆஷ்மியின் பிரதியேயாகும்.]

படத்தின் கதை:-
மசரெட்டி கார் வைத்திருக்கும் பாலிவுட்டின் உச்ச நடிகர் சமீர்கான் ஒரு கதாநாயகன் எப்படியெல்லாம் இருக்க கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார்.
1.காசு வாங்கிக்கொண்டு கண்ட ,கண்ட விளம்பரங்களிளும் நடிக்கிறார்.தன் அஷ்ஃபக் என்னும் இயற்பெயரை சமீர்கான் என மாற்றிக்கொள்கிறார்.
2.ஷூட்டிங் நேரத்திலேயே கேரவனில்,ஆடிஷன் என்று சொல்லி வாய்ப்பு கேட்டு வலிய வந்து விருந்தாகும் இளம் பெண்களை அனுபவிக்கிறார். அவர்களையே  புதிய படத்துக்கு நாயகியாய் பரிந்துரைக்கிறார்.
3.தன் கௌரவத்துக்கு பாதகம் வருமென்று எந்த உதவியும் யாருக்கும் செயவதில்லை. முடிந்தவரை கால்ஷீட் தொதப்புகிறார்.
4.தன்னை யாரும் முந்திவிடக்கூடாது என்று .சக நடிகர் நன்கு நடித்த காட்சிகளை கூசாமல் நீக்கச் சொல்லுகிறார்.
5.பழத்த பழமான இயக்குனர் ஒருவருக்கு நடிக்க கால்ஷீட் தருவதாய் நீண்டகாலம் அலையவிட்டு ஏமாற்றுகிறார்.
6.தன் கூத்துப்பட்டறை குரு  சித்து இவரிடம் ஓர் ஏழைப்பெண் கற்பழிக்கப்பட்ட சமூகபிரச்சனைக்கு தெருக்கூத்து நடத்த இரண்டு நாள் கால்ஷீட் கேட்கிறார். இவர் பழசை மறந்து !!!நன்றிகெட்டு வர முடியாது என்று விடுகிறார்.
7.காதல் மனைவி ஸ்னேகாவுக்கு [வித்யாபாலன்] துரோகம் செய்கிறார். மகனுக்கு தந்தையாய் எந்த கடமையையும் செய்வதில்லை.என அடுக்கலாம்.
8.எல்லாவற்றுக்கும் மேலாக அழகிய பெண் எழுத்தாளர் ஒருவரை அமர்த்தி, அண்டப்புழுகுகளுடன் சூப்பர் ஸ்டார் சமீர் கான் என்னும் சுயசரிதையும் வெளியிடுகிறார்.
=========0000==========
இவர் போடுவது சூப்பர் ஹீரோ வேடம்,ஆனால் பக்கா பயந்தாங்கொள்ளி என்பதாய் ஒரு சம்பவம் நடக்கிறது, [ஜெசிக்கா லால் சம்பவத்தை இதில் அழகாய் கோர்த்துள்ளனர்]
பாலிவுட்டின்  புகழ்பெற்ற தயாரிப்பாளர் ஒருவர் பெரிய மதுபான விருந்து கொடுக்க, அங்கே மிகப்பெரிய திரைப்பிரபலங்கள், சாமியார்கள்,அரசியல்வியாதிகள்  குழுமுகின்றனர், கிளப்பில் பார் மெய்டாக  நடனமாடும்    பெண்ணிடம் பெரிய அரசியல்வியாதியின்  மகனும்,  சாராய ஆலை அதிபர் மகனும் வம்பு செய்து படுக்கைக்கு அழைக்க, அவள் மறுத்து ஒதுங்கியவள், அங்கே விருந்தில் இருந்த சமீர்கானிடம் தங்கையுடன் சென்று ஆட்டொக்ராப் வாங்குகிறாள்,

மீர்கான் அவளுக்கு ஷிம்லா காட்டன் காலேஜ் நாடகத்தில் தான் முதல் பரிசு வழங்கியதை நினைவுகூர்ந்து கனிவாய் பேச, சகோதரிகள் மகிழ்கின்றனர், தங்கை  மறுநாள் பரிட்சை என்பதால் முதலில் வீட்டுக்கு போக, சமீர் அவளை சினிமாவில் முயற்சிக்க சொல்கிறார். பின்னர் கழிவறை சென்றவர், அங்கே இருவர் கோகெய்ன் உட்கொள்வதை பார்க்கிறார், 

லை கோதி ,வெளியேறியவர், அங்கே உதவி என்று சற்றுமுன் தன்னிடம் ஆட்டோக்ராஃப் வாங்கிய பெண்,கண்ணாடி சுவரை அடித்து இவரிடம் கெஞ்ச, வியர்க்கிறார். இவருக்கு கையறுநிலை, உதவிசெய்து பிரச்சனையில் சிக்க மனமில்லை, எனக்கென்ன?!!! என இவர் இருக்க, அவள் தலையில் குண்டடி பட்டு  ஹீரோ தன்னை காப்பாற்றுவான்,  என்ற நம்பிக்கை பொய்க்க துடிதுடித்து சாகிறாள். அந்த கோகெய்ன் போதை ஆசாமிகள் கொன்ற திமிருடன் கிளப்பிலிருந்து நெஞ்சை நிமிர்த்தி வெளியேற, சாமியார் உட்பட அத்தனை பிரமுகர்களும் அதை வேடிக்கை பார்க்கின்றனர்.
=========0000==========
மறுநாள் இந்த கொலை குறித்து ஸ்டுடியோவில்,முகேஷ் திவாரி [போக்கிரி இன்ஸ்பெக்டர்] மற்றும் ஜாக்கி ஷெராப் பேசும் நீண்ட வசனம் படு யதார்த்தம்,
சுருக்கமாக சொன்னால் ஜாக்கிஷெராஃப், கொலையை ஒருவன் பார்த்திருந்தாலும் இன்றைய சாக்கடை அரசியல் சமூகத்தில் வெளியில் சொல்லாமலிருப்பதே உத்தமம்,இல்லையென்றால் சாட்சி சொன்னவன் பெயர்  கெடும், குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை,  என்கிறார். பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளை பற்றிய செய்தி என்றால் ஒப்புக்கு 2 நாள் பேசுவார்கள், அடுத்த நாளே அது கார்பெட்டுக்கு அடியில் போய்விடும், 

ல்மான்கானுக்கு சம்மன், அமீர்கானுக்கு பிடி வாரண்ட் என பிரபல நடிகர்களை தான் தொடர்ந்து உருவுவார்கள், அவர்கள் தான் ஈஸி டார்கெட் ,என்கிறார்.இதைக் கேட்டு இன்னும் குழம்பும் சமீர்கான்,

போலீஸ் விசாரணையிலும் நடிக்கிறார்,தனக்கு அந்த கொலையான பெண்ணை முன்னமே தெரியாது என்கிறார், அவளின் தங்கை வந்து அருகில் நிற்க பொய் சொல்லமுடியாமல் கண்ணாடியை அணிந்துகொள்கிறார். எத்தனையோ பேருக்கு ஆட்டோக்ராஃப் போடுவதால் தான் யாரின் முகத்தையும் பார்ப்பதில்லை, பேனா,பேப்பர், கைகளை மட்டுமே பார்ப்பேன் என்கிறார்,

செத்தவள் நொடியில் செத்தாள்,இவருக்கோ மனநிம்மதி போயிற்று,ஆறுதல் சொல்ல வீட்டில் கூட ஆளில்லை,மனைவி இவரின் பிறபெண்களுடனான உடல்தவறுகளால் நொறுங்கியவள், ஒப்புக்கு இவர் மகனுக்கு மட்டுமே அவள் தாயாய் இருக்க, இவரின் குருவை அவமதித்து துரோகமும் செய்தமையால் இவரின் அப்பா அம்மாவும் கோபித்துகொண்டு சொந்த ஊருக்கே சென்றவர்கள் இவரிடம் மட்டும் பேசுவதில்லை. அனாதையாய் விடப்படுகிறார். தான் தன் குடும்பத்தினரிடமிருந்தும் உண்மையான நண்பர்களிடமிருந்தும் எவ்வளவு அந்நியப்பட்டுவிட்டோம் என கதறுகிறார்.
காப்பாற்றாத குற்ற உணர்வு குறுகுறுக்க, இறந்த பெண்ணின் தங்கையை அழைத்து பணம் 10லட்சம் தந்து நடந்ததை மற, இதை கொண்டு நன்றாய் படி , மன அமைதி கொள், என்று அறிவுரை சொல்கிறார், அவள் பணத்தை ஏற்காமல் திருப்பிகொடுத்து உங்களால் முடிந்தால் இதைவைத்து மன அமைதி பெற பாருங்கள்.  என்கிறாள்.போனவள் தன் ஒரு கிட்னியை விற்று பணம் பெற்று பெரிய வக்கில் வைத்து,வழக்காடுகிறாள்,இருந்தும் சாட்சிகள் யாருமே இல்லை. அவர்கள் இருவர் தான் குற்றவாளி என தெரிந்தும் அவர்களை தண்டிக்கமுடியா நிலை!!!.

வரால் இப்போது நாடகத்தனமான, யதார்த்தமில்லாத, வாழ்வியலுக்கு ஒவ்வாத வசனங்களை  படப்பிடிப்பிலும், டப்பிங்கிலும் பேசமுடியவில்லை, நிறைய டேக்குகள் வாங்குகிறார். எல்லோரிடமும் எரிந்து விழுகிறார். இவருக்கு இந்த வருடமும் சிறந்த இளம் நடிகருக்கான விருது ஸ்ரீதேவி,போனிகபூரால் தரப்படுகிறது,அந்த விழாவில் இவர், தாம் பெற்ற விருது தனதல்ல, அந்த நடிகனுடையது என இவரின் பெரிய படத்தை சுட்டிக் காட்டுகிறார் . உண்மையில் தான் ஒரு போலி,சாதாரணன் என்கிறார்,கூட்டம் இதற்கும் கைதட்டுகிறது, விருதை வீட்டில் கொண்டு வைக்க வந்தவர், தான் அணிந்திருக்கும் முகமூடி மீது வெறுப்படைந்து எல்லா விருதுகளையும் கீழே தள்ளிவிட்டு கதறுகிறார்.

றுநாள் காலையில் போலீஸ் ஸ்டேஷன் சென்றவர், அந்த அரசியல்வியாதியின் மகன் மீதும், சாராய ஆலை மகனுக்கு எதிராயும்  சாட்சியம் சொல்கிறார். இவர் மீது வெளியே வருகையில் முட்டை அடிக்கப்படுகிறது, போலீசாரே இவரை சாட்சியத்தை திரும்ப பெறுமாறு வற்புறுத்துகின்றனர், அன்று இரவே இவரின் மகனின்  அறை தீவைக்கப்பட்டு மகனின் கையிலும் தீக்காயம்படுகிறது. 

ப்போது குடும்பத்தினருக்கு ஆபத்து,என்னும் பயம் ஆட்டிப்படைக்க நாளை காலை அடையாளம் காட்டபோகவேண்டும் என்ற நிலை, சாலையில் இவர் காரில்  போகையிலேயே மிரட்டல் அழைப்புவர, காரை,சிக்னல் விழுந்ததும் வீட்டுக்கு திருப்ப சொன்னவர், அங்கே சன்னல் வெளியே டூவிலரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தங்கையின் வாடியமுகத்தை பார்க்கிறார். சிக்னல் விழ, அவள் இவர் கார் முன்பே வண்டியை போட்டுக்கொண்டு சாலையிலேயே மயங்கி விழுகிறாள், அவளை மருத்துவமனையில் சேர்த்து அவள் கிட்னி தானம் செய்ததையும் அதனால் நோய்தொற்று ஆனதையும் தெரிந்து கொள்கிறார். நொறுங்கிப்போகிறார். இனி என்ன நேர்ந்தாலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித்தர வேண்டும் என முடிவு செய்தவர், போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த இரண்டு கயவர்களையும் சரியாக அடையாளம் காட்டுகிறார்.

இனி என்ன ஆகும்?!!!.
இன்னும் 1.5 மணி நேரம் படம் இருக்கிறது, இனி மேல் வரும் சுவாரஸ்யங்களுக்காக படத்தின் முழுக்கதையை சொல்லவில்லை.
1,சமீர்கான் அந்த கயவர்களுக்கு தண்டனை வாங்கித்தந்தாரா?
2,தன் குரு சித்துவிடம் மன்னிப்பு கேட்டாரா?
3.தன் மனைவி,மகன் பெற்றோருடன் சேர்ந்தாரா?
போன்றவற்றை நெகிழ்ச்சியான காட்சிகளுடன் டிவிடியில் பாருங்கள்.ஒரு சோற்றுப்பதமாக சமீர்கான் , ஒரு கொலையாளியின்  அரசியல்வாதி அப்பன் வீட்டிற்குள் சென்று, அவன் கண்முன்பே,விலைஉயர்ந்த பெர்சிய கார்பெட்டில் மூத்திரம் போகும் காட்சி, யாரும் தவறவிடக்கூடாத காட்சி அது!!!! அதை ப்ரில்லியண்டாய் எடுத்திருப்பார்கள்.[“கார்பெட் பிஸ்ஸர்” என்னும் இதே போல ஒரு யுக்தியை கோயன் பிரதர்ஸின் |த பிக் லபோவ்ஸ்கி| என்னும் படத்திலும்  உபயோகித்திருப்பர்]


நிஜவாழ்வில் அந்த கிளப்பில் வைத்து கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட ஜெசிக்கா லாலின்,கோகெய்ன் கொலையாளிகளுக்கு ஒன்பது ஆண்டுகள் வழக்கு நடந்த பின்னர் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது ,உங்களுக்கு நினைவிருக்கலாம்!!!

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
=========0000==========

=========0000==========
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Rajkumar Santoshi
Produced by Samee Siddiqui
Written by Rajkumar Santoshi
Starring Ajay Devgan
Vidya Balan
Pankaj Kapoor
Music by Sukhwinder Singh
Cinematography Nataraja Subramanian
Editing by Steven Bernard
Release date(s) 11 January 2008
Running time 150 mins
Language Hindi
Budget 210,000,000 INR
=========0000==========

59 comments:

ஜோதிஜி சொன்னது…

கார்த்திக் TED என்று யூ டியூப் போலவே ஒன்ற இருக்கிறதே. செந்தில் இடுகையில் பார்த்து இருக்கீறீர்களா? முடிந்தால் அடுத்த முறை அதில் முயற்சி செய்து பாருங்களேன். ரொம்ப நல்லாயிருக்கும்.

சரி சரி பின்னால் பாலா வருவாரு. அவருக்குப் பினனால மறுபடியும் நான் வர்றேன்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@ஜோதிஜி,
தலைவரே,நான் தேடிப்பார்த்து மாற்றுகிறேன்,வருகைக்கும் வரப்போவதுக்கும் நன்றி:)

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

இந்தப்படத்தை இன்னும் பார்க்கலை தல...பாத்திடறேன்...

King Viswa சொன்னது…

//சரி சரி பின்னால் பாலா வருவாரு//.

இது போன்ற இந்தி படங்களை எல்லாம் பாலா பார்க்க மாட்டாரு. Only english & Some spansih/French.

King Viswa சொன்னது…

இந்த படத்தை தமிழில் எடுக்க முடியுமா? சற்று யோசித்து சொல்லுங்கள்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@நாஞ்சில் பிரதாப்,
பாருங்க நண்பா

@கிங் விஸ்வா,
ஆமாம் அதானே!!!!
பாலா முச்சிங்கம் பார்த்தாலும் பார்ப்பாரே தவிர ,இதை பார்க்க மாட்டார்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

இந்து பாஸிஸ ஜோதிஜியின் கைக்கூலி இந்தி பாஸிஸ விஸ்வாவும், கார்த்திக்கேயனும் ஒழிக.. ஒழிக.

இந்தி.. ஒழிக ஒழிக..!

டமிள் வாள்க.. வாள்க..!! முச்சிங்கம் கண்ட முற்ப்போக்கு பாலா வாள்க.. வாள்க!!

ஸ்பானிஷும் வாள்க!!

கோபிநாத் சொன்னது…

அண்ணே ஓட்டு போட்டாச்சி...விரைவில் சிடி வாங்கிடுவோம் ;)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஹாஹாஹா,
தல இது பட விமர்சனம்தான்,18+ம் இல்ல,எனக்கெதாவது மிரட்டல் பாதிப்பு வருமா?!!! யெனி க்ளூ ஆர் ஆரூடம்?!!!
டமில் வாழ்க,முச்சிங்கம் புகழ் ஓங்குக,ஹிந்திக்காரன் மூஞ்சி வீங்குக,சேம் சைட் கோல் போட்டாச்சி,அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா!!!புஸ்ஸ்ஸ்ஸ்

King Viswa சொன்னது…

ஸ்பானிஷ் தோழிகளும் வால்க.

ஹாலிவுட் பாலா சொன்னது…

//நட்ராஜ் சுபரமணியனின் கதையோடு ஒன்றிய ஒளிப்பதிவு அட்டகாசம்,//

இவர் ஹீரோவா நடிச்ச தமிழ் படம் சமீபத்தில் வந்துச்சே?? பேர் மறந்துடுச்சி.

ஆனா.. இவரு இன்னொரு படத்தில் ஹீரோ ஃப்ரெண்டா வந்து செத்துப்போவாரு. அந்தப் படம் பிடிச்சிருந்துச்சி. அந்தப் பேரும் மறந்துப் போச்சி.

டமில் சினிமா ஒளிக. ஒளிக

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல புதியதகவல்,
தல ஆர் யு ஷ்யூர் ?

நீங்க உன்னைப்போல் ஒருவனில் நடிச்ச போலீஸை சொல்லலியே?க்ளிக்,கம்ப்யூட்டர்

King Viswa சொன்னது…

பாலா,
ஹிந்தி ஒழிக என்று சொல்வீங்க, ஆனா உங்க பசங்கள மட்டும் ஹிந்தி படிக்க வச்சு மத்திய மந்திரி ஆக்குவீங்களோ? (இந்த கருத்தில் அரசியல் இல்லை).

ஹாலிவுட் பாலா சொன்னது…

அடப்பாவிகளா.. எல்லாரும் ஏரியாவில்தான் இருக்கீங்களா???

ஹும்.... தோழி எங்கிருந்தாலும் வால்க...... :( :( :(

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆமாம்,ஸ்பானிய,பிலிப்பீனிய,கொலம்பிய,ப்ராசிலிய சாரி பிரேசிலிய தோழிகளும் வாழ்க

King Viswa சொன்னது…

//இவர் ஹீரோவா நடிச்ச தமிழ் படம் சமீபத்தில் வந்துச்சே//

நீங்க சொல்ற படம் நாளை. அந்த படத்துல தான் இவரு நட்டு நடராஜ் என்ற கேரக்டரில் வந்து செத்துப்போவார்.

இவருடைய லேட்டஸ்ட் படம் "மிளகா". இது தவிர இவர் வேறு இரண்டு படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

நெசமாதாங்க...

http://truetamilans.blogspot.com/2010/06/blog-post_26.html

படம் பேரு மிளகா.

===

இதுக்கு முன்னாடி.. இவரும், ஷாலினி அண்ணன் ரிச்சர்டும்(ன்னு நினைக்கிறேன்) ஒரு கேங்ஸ்டர் படம் நடிச்சிருக்காங்க.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

//பாலா,
ஹிந்தி ஒழிக என்று சொல்வீங்க, ஆனா உங்க பசங்கள மட்டும் ஹிந்தி படிக்க வச்சு மத்திய மந்திரி ஆக்குவீங்களோ? (இந்த கருத்தில் அரசியல் இல்லை).//அய்யய்யோ இப்புடி தேரை இழுத்து தெருல விடுறாய்ங்களே!!!

ஹாலிவுட் பாலா சொன்னது…

//நீங்க சொல்ற படம் நாளை//

சினிமாவின் தகவல் சுரங்கமே.. உன் பெயர்தான் விஸ்வாவோ?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல சூப்பரு,நன்றி,அதை படிச்சு உஷாரா ,பாக்கறேன்,எந்த சிங்கம்,மிளகா,தனியாவையும் தனியா பாக்கமுடியலை

ஹாலிவுட் பாலா சொன்னது…

//ஹிந்தி ஒழிக என்று சொல்வீங்க //

சொம்பு தூக்கும்.. சோழவர்மன் எங்கிருந்தாலும் வருக.. வருக!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல இப்போ நினைவு வந்துட்டு,ஆளு கொஞ்சம் பல்லு துருத்தலா இருப்பார்,கூட பிறக்காத ஹீரோயிணிக்கு அண்ணணாகூட இருப்பார்,தெரியும்

King Viswa சொன்னது…

////நட்ராஜ் சுபரமணியனின் கதையோடு ஒன்றிய ஒளிப்பதிவு அட்டகாசம்,//

இவர் ஹீரோவா நடிச்ச தமிழ் படம் சமீபத்தில் வந்துச்சே?? பேர் மறந்துடுச்சி.

ஆனா.. இவரு இன்னொரு படத்தில் ஹீரோ ஃப்ரெண்டா வந்து செத்துப்போவாரு. அந்தப் படம் பிடிச்சிருந்துச்சி. அந்தப் பேரும் மறந்துப் போச்சி.//

நீங்க சொல்ற மேட்டரு சூப்பர். அந்த "நாளை" படம் நீங்க பார்த்தீங்களோ? நான் தியேட்டரில் சென்று நண்பர்கள் குழாமுடன் பார்த்தேன். மதிய ஷோ "திமிரு" அடுத்த ஷோ "நாளை". ஒரு சனிக்கிழமை இப்படியாக கழிந்தது.

உண்மையில் அந்த நாளை படம் நன்றாகவே இருந்தது. என்ன நம்ம ஹீரோ (அஜீத்த் மச்சான்) ரிச்சர்ட் தான் நடிக்க சிரமப்பட்டு இருப்பார். இந்த நடராஜ் கேரக்டர் ஒரு காலை விந்தி, விந்தி நடப்பார். ரெண்டுப்பெருக்கும் ஒரு சாங் கூட உண்டு. திர்மிரு படத்த விட இந்த படம் எங்க நண்பர்களுக்கு பிடித்திருந்தது.

அது ஒரு காலம் தல, வாராவாரம் ஒரு சினிமாவுக்கு நண்பர்களுடன் சென்று ஜாலியாக காலாயத்துக்கிட்டு படம் பார்ப்போம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

விஸ்வாவின் ஒலக சினிமா புகழ் ஓங்குக

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

என்னுடன் ஃபேஸ்புக்கிலும் கும்மியடிக்க விரும்பு[?]பவர்கள் அந்த புகைப்பட வில்லை யை க்ளிக்கலாம்,அனுமதி இலவசம்!!!

King Viswa சொன்னது…

தல,

பதிவுக்கு சம்பந்தமில்லாமல் கும்மி அடிப்பது என்று ஆகிவிட்ட பிறகு, இதோ அடிஷனல் தகவல்களுடன்:

இந்த மிளகா படம் இந்தியில் (பாலா அவர்களுக்கு பிடிக்காத பாஷை) ரீமேக் ஆகிறது.
இயக்கம்: நடராஜ் தான்.
ஹீரோ : ஜான் ஆபிரகாம்
காதல் களம்: மதுரை இல்ல, கோவா.
ஷூட்டிங்: இந்த வருஷமே ஆரம்பம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அடடா,பதிவை விட பின்னூடத்தில் தான் அப்டேட்ஸ் நிறைய இருக்கு,!!!சுப்பரு

ஹாலிவுட் பாலா சொன்னது…

//நீங்க சொல்ற மேட்டரு சூப்பர். அந்த "நாளை" படம் நீங்க பார்த்தீங்களோ?//

2007 வரைக்கும்.. நான் பார்க்காத தமிழ்படமே கிடையாது விஸ்வா. அத்தனைப் படத்தையும் டவுன்லோட் பண்ணிடுவேன்.

இப்ப அஞ்சலின்னு ஒரு 24 மணிநேரப் படம் ஒன்னு வீட்டில், நான்ஸ்டாப்பா ஓடுது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல அப்போன்னா,
ஆட்டோ ஓரம்போ பாத்துருக்கீங்களா?ஏன்னா அதில் ஒரு முக்கிய செய்தி உள்ளது!!!

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஏன் பேசமாட்டீங்க. உங்களை மாதிரி இருந்தா... எல்லா இடத்தில் கும்மியடிக்கலாம்.

இங்க ஏற்கனவே ரெண்டு வார்னிங் கீழேயிருந்து வந்தாச்சி. அடுத்த முறை போகலைன்னா.. என் ஃபேஸை எந்த புக்கிலும் பார்க்க முடியாது.

ஸீ யு லேட்டர்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல போய்ட்டுவாஙக்,சப்பாத்திகுழவி பறந்து வருது அதோ,

ஹாலிவுட் பாலா சொன்னது…

//ஓரம்போ //

ஆர்யாவின் கலைப் பொக்கிஷமாச்சே!! எந்த மெசேஜை சொல்லுறீங்க??

இனிமே.. “ஆர்யா படத்தை பார்ப்பியா??” -ங்கற மெசேஜா??

ஹாலிவுட் பாலா சொன்னது…

நெசமாவே இந்த முறை அப்பீட்டு...!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

தல மெயில்ல அனுப்புறேன் அதை,ஆனா மூச்

King Viswa சொன்னது…

//ஆட்டோ ஓரம்போ பாத்துருக்கீங்களா?ஏன்னா அதில் ஒரு முக்கிய செய்தி உள்ளது//

இல்ல தல. அந்த படம் மிஸ்ஸிங். ஏன்னா, அதுல நண்பர் ஒருவர் நடித்திருந்தார். (ஒரு க்ளூ: அவரு ராவணன் படத்திலும் இருக்கார்). அவருடன் சென்று பார்க்கலாம் என்றே தள்ளிபோய் விட்டது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஹலோ விஸ்வா,
அதில் வரும் வில்லன் எனக்கு ரொம்ப பிடிக்கும்,செம தூள் செய்திருந்தார்.செம படம்,அது,அதிலும் அதில் வரும் சிம்பு காமெடி,கலாய்

King Viswa சொன்னது…

//ஹலோ விஸ்வா,
அதில் வரும் வில்லன் எனக்கு ரொம்ப பிடிக்கும்,செம தூள் செய்திருந்தார்.செம படம்,அது,அதிலும் அதில் வரும் சிம்பு காமெடி,கலாய்//

கேள்விப்பட்டதோடு சரிங்க. இன்னமும் பார்க்கலை. டிரை பண்றேன். நம்மகிட்ட தான் எண்மிய பல்திரவட்டு இருக்கே?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

சூப்பரு,சின்ன படம் 1.5 மணிநேரம் தான்,கற்பு,பெண்னியம்,தாலி அதெல்லாமில்ல,ரேஸ் தான்,அசால்டான படம்.

King Viswa சொன்னது…

//தல போய்ட்டுவாஙக்,சப்பாத்திகுழவி பறந்து வருது அதோ//

தினத்தந்தி-அமெரிக்கபதிவு: ஹாலிவுட், யூலை 12.

பிரபல அமெரிக்க பதிவரும், சினிமா விமர்சகருமாகிய ஹாலிவுட் பாலா அவர்கள் சமையல் கூடத்தில் நடந்த சிறு விபத்தினால் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். அவர் சாப்பிடும்போது இந்த விபத்து நடந்ததாகவும், அவரை யாரும் அடிக்கவில்லை என்றும் "அவரே" சொன்னார்.

அவரை பரிசோதித்த மருத்துவர், "இந்த அடி, விபத்தினால நடந்தது இல்ல, யாரோ இவர ஜல்லிக்கரண்டி, ஸ்டீல் பூரிக்கட்டை கொண்டு தாக்கி இருக்காங்க" என்று சொன்னார். ஆனால், அதனை வன்மையாக மறுத்தார் பாலா.

கடைசியாக கிடைத்த தகவலின்படி, பாலா தற்போது முறையாக சமையல் கற்பதாகவும், ஒழுங்காக ஹோம் டிபார்ட்மென்ட் பேச்சு கேட்டு நடப்பதாகவும் தகவல்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

அடடா,இனி கும்மி லேதா?
இதுக்கு பேருதான் ஓவர்டோஸ் ஏடாகூடமா?
ஆமா தல உங்ககிட்ட வேலிட் மெடிக்கல் பாலிசி இக்கா?தல வேணும்னா சங்கத்துல நிதி திரட்டிடலாம்,அதுக்கு மயில் ராவணன் செயலாலர்:)விஸ்வா பொருளாளர்
நான் துணை பொருளாளர்,

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

சமையலா???????????????????ரொம்ப கஷ்டமான வேலைங்க எனக்கு அது!!!

மயில்ராவணன் சொன்னது…

இங்க ஒரு பெரிய அதகளமே நடந்திருக்கிறதே!! வடை போச்சே!!

மயில்ராவணன் சொன்னது…

எங்கிருந்தாலும் கருந்தேள் உடனே மேடைக்கு பராக் பராக்!!

மயில்ராவணன் சொன்னது…

இல்லை “பேயோன்” என்ற புனைப்பெயரில் எழுதும் ஹாலிவுட் பாலா வந்தாலும் சந்தோஷமே......!!

King Viswa சொன்னது…

//இல்லை “பேயோன்” என்ற புனைப்பெயரில் எழுதும் ஹாலிவுட் பாலா வந்தாலும் சந்தோஷமே..//

இதென்னங்க புதுக்கரடி? இருந்தாலும் ஓக்கேதான்.

மயில்ராவணன் சொன்னது…

எஸ்ராதான் சொன்னாரு விஸ்வா :)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

யோவ் என்னையா நடக்குது இங்க?பேயோன்!சேயோன்னுட்டு.!!!

King Viswa சொன்னது…

//எஸ்ராதான் சொன்னாரு விஸ்வா//

அப்ப சரியாத்தான் இருக்கும். வால்க பேயோன் பாலா.

//யோவ் என்னையா நடக்குது இங்க?பேயோன்!சேயோன்னுட்டு.!!//

நம்ம ஆளுக்கு இந்த பேர் பிடிக்கலன்ன பிசாசோன் என்று கூட வைத்துக்கொள்ளலாம் பாலா.

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//அது ஒரு காலம் தல, வாராவாரம் ஒரு சினிமாவுக்கு நண்பர்களுடன் சென்று ஜாலியாக காலாயத்துக்கிட்டு படம் பார்ப்போம்.//

ஆஹா... நானும் தான்... ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இதுக்குன்னே டெடிகேட் செஞ்சி, தியேட்டர் போயிருவோம்.. எந்தப் படத்தையும் விடமாட்டோம். அதுபோல் நான் வரிசையாகப் பார்த்தது, அந்தச் சமயத்தில் வெளிவந்த எல்லா விஜயகாந்த் மற்றும் சிம்பு படங்கள் ;-)

//இப்ப அஞ்சலின்னு ஒரு 24 மணிநேரப் படம் ஒன்னு வீட்டில், நான்ஸ்டாப்பா ஓடுது//

என்னா ஒரு கவிதை ;-) இந்த வரிய வெச்சே ஐம்பது ஓட்டு வாங்கலாமே ;-) பின்னிட்டீங்க தல..

//ஆட்டோ ஓரம்போ பாத்துருக்கீங்களா?ஏன்னா அதில் ஒரு முக்கிய செய்தி உள்ளது//

ஓரம்போ எனக்குப் பிடிச்ச ஒரு படம்.. அதுல வில்லன், இந்தப் பட இயக்குநர்களான அந்தக் கபிளுடன் ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர்.. நட்பின் அடிப்படையில் வந்து நடிச்சிக்குடுத்தாரு ;-) சூப்பரா இருக்கும் ;-)

அப்பாலிக்கா, அந்த ஓரம்போ மேட்டர் எனக்கு நல்லாத் தெரியுமே ;-) ஆனா சொல்ல மாட்டேன் ;-)

//எங்கிருந்தாலும் கருந்தேள் உடனே மேடைக்கு பராக் பராக்!!//

இதோ வந்துட்டேன்.. மதராசப்பட்டினம் பாக்கப் போயிட்டேன்.. அதான் லேட்டு ;-)

//நம்ம ஆளுக்கு இந்த பேர் பிடிக்கலன்ன பிசாசோன் என்று கூட வைத்துக்கொள்ளலாம் பாலா//

இது டாப்பு!! பிசாசோன்ற பேரு பின்னுது ;-)

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@விஸ்வா,ஒரு கேள்வியை பாக்கலைங்க!!!!சாரி.
நம்ப ஊர்ல இந்த படம் எடுக்க முடியும் நண்பா,
எப்படி சொல்றேன்னா?
ஏற்கனவே ஜெய்,கமல்,ஜெய்சித்ரா வின் பட்டாம்பூச்சி நம்மூரில் எடுத்தது,அப்புறம் நீங்களும் ஹீரோதான் இங்க எடுத்ததுதான்,நிழல்கள் ரவி+வி.சேகர் கூட்டணி,அபோதைய சூழலை கிழிச்சிருப்பாங்க,

இப்போ தங்கர் இதை சூப்பரா எடுக்கலாம்,ஆனா இந்த நெகட்டிவ் ரோலை யார் செய்வா?ஆர்யா போல ஆள் செய்யலாம்,மேலும் இங்கயும் சரிகா ஷா என்பவர் ராகிங்கில் செத்திருக்காங்க,அதை வச்சிம் உள்ள கதை வைக்கலாம்,இங்கயும் கூத்து பட்டறை இருக்கு,அதை அன்பே சிவத்தில் அருமையாய் காட்டியிருப்பதால் ரூட் கிளியர்.இந்த படம் எடுக்கலாம் நண்பா.

கண்ணா.. சொன்னது…

தல ஹிந்தி படம் விமர்சனத்திற்கு வந்தாச்சா..

ரைட்டு பாத்துடுவோம்... துபாய்ல கூட இந்தி தெரியாம சமாளிச்சிட்டேன்.. இங்க பெங்களூருல முடியல தல... நானும் தொடர்ந்து இந்தி படமா பாக்குறேன்... இந்தி பாட்டா கேக்குறேன்...இந்தி ஃபிகரா சைட் அடிக்கிறேன்... ஆனாலும் இந்தி வரமாட்டிக்கே......

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கண்ணா.
அய்யோ,அங்கயும் அப்புடிதானா?நானும் சப்டைட்டில் வச்சி தான் இந்தி படம் பாக்குறேன்,ரொம்ப கொடுமைங்க,ஆபீஸ் முழுக்க ஹைதராபாதிங்க கீறாங்க,வேணும்னே அவங்ககிட்ட ஆங்கிலத்துல தான் பேசுறது!!அவனுங்க ஹிந்தி நேஷனல் லேங்வேஜுன்ற ரகம்,நான் நான் நேஷனல் லேஙுவேஜுன்னு ஒன்னு இல்லடான்னு சொல்ற ரகம்,இப்புடியே 4வருஷம் ஓடிட்டு,டாக்ஸி புடிக்கிறப்ப மட்டும் ஹிந்தி அரைகுறையா பேசுவேன்,பாகிஸ்தானி ட்ரைவர் தலைல அடிச்சிப்பான்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கருந்தேள்,
நண்பா,மதராஸ்பட்டினம் எப்படி இருந்துது?
பிடிச்சிதா?உங்க விமர்சனத்தை ஆவலுடன் எதிர்நோக்குறோம் நாங்க.

வெடிகுண்டு வெங்கட் சொன்னது…

அண்ணே,
இந்த படத்தை நான் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. நினைவு படுத்தியதற்கு நன்றி.

தமிழில் ஆர்யா நடித்தால் நன்றாக இருக்குமா என்ன?

இந்த போஸ்டரை பார்த்தீங்களா?

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@வெங்கட்,
ஏனுங்க?உங்களுக்கு ஆர்யா புடிக்காதா?ஹஹஹஹ்
சரி சூர்யாவை நடிக்க சொல்லலாம்,ஆனா நெகடிவ் ரோல் செய்வாங்களா?பட்டியலில் ஆர்யா நெகட்டிவ் ரோல் செய்திருப்பார்.நல்ல நடிகர்ங்க அவர்.உங்க பதிவுல கமெண்ட் போட்டாலும் ரிலீஸ் ஆகலையேங்க!!!

ILLUMINATI சொன்னது…

ஹிந்தி சினிமா தமிழ் சினிமாவை விட பல மடங்கு பெட்டர் தான் தல.சில மொக்கைப் படங்கள் இருந்தாலும்,சில மிக அருமையான படங்களும் இப்போது ஹிந்தியில் வரவே செய்கின்றன.தமிழ் சினிமா தான் ஹீரோ worship ஆல் நாசமாக போய்க்கொண்டு இருக்கிறது.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

ஆமாம்க,அங்கே அநேக நடிகர்கள் என்ன கதைக்காக என்ன டைப்பான நெகட்டிவ் ரோல் குடுத்தாலும் செய்வார்கள்.இங்க இதுபோல நடக்குமா?

கனவுகளின் காதலன் சொன்னது…

நண்பரே,

விறுவிறுப்பாக இருக்கிறது பதிவு. படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது. நல்லதொரு பகிர்வு.

பெயரில்லா சொன்னது…

心平氣和~祝你也快樂~~..................................................................

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)