|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்|இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
சர்வதேச அரங்கில் நாம் தன்னிறைவு பெற்று முன்னேறுகிறோம் என்பதற்கு சான்றாக, இதோ நம் நாட்டு பணமான ரூபாயின் புதிய குறியீட்டுக்கு இன்று யூனியன் கேபினட் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது,எத்தனை பெருமை?!!!ப்ரிடிஷ் பவுண்ட்,அமெரிக்க டாலர், ஜப்பானிய யென் மற்றும் யூரோவுக்கு மட்டுமே இதுவரை சர்வதேச சந்தையில் குறியீடுகள் உண்டு,
இப்போது அது நம் தாய் திருநாட்டிற்கும் கிடைக்கப்பெற்றுள்ளது, இனி வெகு விரைவில் இந்த குறியீட்டை கணிணி கீபோர்டுகளிலும், மென்பொருள்களிலும் காணலாம், இனி நம் ரூபாயையும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோநேசியா, நேபால் , ஸ்ரீலங்கா போன்ற மிக குறைந்த மாற்று-மதிப்பு கொண்ட நாடுகளின் ரூபாயையும் ஒப்பிட மாட்டார்கள்.நாம் அவர்களிடமிருந்து வேறுபட்டு தெரிவோம்!!!.
இந்த குறியீட்டை திறம்பட வடிவமைத்திருப்பது IIT ல் பணி செய்து வரும் 32 வயது D.உதயகுமார். என்னும் சென்னைத் தமிழர், இவர் B.Arch. அண்ணா யுனிவர்சிட்டியில் முடித்துவிட்டு ,M.des, IIT மும்பையில் முடித்து , அங்கேயே PHD யும் முடித்துள்ளார்.
அகில இந்திய அளவில் 3000 போட்டியாளர்கள் வடிவமைத்த குறியீடுகளில் இருந்து 5 குறியூடுகள் இறுதிகட்டத்துக்கு முன்னேறி இவரின் குறியீடு அனைவராலும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பரிசுத்தொகையாக 2,50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது . இதன் மூலம் இவர் ஏனைய மாநில டிசைனர்களை , தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார், இன்னும் 500 வருடமானாலும் இதை யாராலும் மாற்றமுடியாது!!!
இவர் மென்மேலும் வெற்றி பெற இத்தருணத்தில் நாமும் வாழ்த்துவோம்., பெருமைப்படுவோம். இந்த குறியீட்டை அவர் தேவநகரி எழுத்தான |ரா| வில் இருந்து வடிவமைத்தாராம். கிட்டத்தட்ட பலரும் இதே போல டிசைன் அனுப்பியிருந்தனர். ஆனால், ரோமானிய எழுத்தான "ஆர்' என்பதின் மேல்பகுதியில் படுக்கைக் கோடு போல அமைக்கப்பட்டிருப்பது, இந்திய நாட்டின் தேசியக் கொடி பறந்து கவுரவம் தருவது போன்ற தோற்றம், நாட்டின் பெருமையை உயர்த்தும் என்ற நோக்கில் வடிவமைத்திருக்கிறேன். அதோடு, தேவநாகரி எழுத்தும் இதில் இருப்பது சிறப்பு. இரு படுக்கைக் கோடுகள் கொண்ட அமைப்பு தேசியக் கொடியை நினைவுபடுத்தும்.இவ்வாறு உதயகுமார் பேட்டியில் கூறினார்.

இது குறித்த யூட்யூப் காணொளி:-
========0000=========