127 ஹவர்ஸ்[127 Hours][2010][அமெரிக்கா]

ருமை நண்பர்களே!!!
127 ஹவர்ஸ் திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன்.என்ன ஒரு அருமையான படம்?!!!இது போல  பாறைப்பிளவின் இடையில்
நாம் மாட்டிக்கொண்டால் என்ன ஆகியிருக்கும்?,நாம் அநேகம் பேர் பயத்திலேயே உயிரை விட்டுவிடுவோம், இப்படம் மூலம் சமாளிக்க முடியாத துயரம் என்று ஒன்றுமில்லை என்ற உத்வேகம் பிறந்திருக்கிறது. சமீபத்தில் நான் பார்த்ததில் என்னை மிகவும் பாதித்த மற்றொரு படம்  இதே போல மாட்டிக்கொள்ளும் கதை தான் .ஆனால் களம் வேறு.  சவப்பெட்டிக்குள் பணயக்கைதியாக ஒரு அமெரிக்க ட்ரக் டரைவர் மாட்டிக்கொள்ளும் பரீட்[Buried ]என்ற படம் தான் அது. இப்படம் 127 ஹவர்ஸ் உத்வேகத்தை அளிக்கும் ஆனால் பரீட் உத்வேகத்தை குலைக்கக்கூடும். அது தான் வித்தியாசம்.

மெரிக்காவின் காலராடா மாகாணத்தில் யூடாஹ்[utah] என்னும் பாலைவனத்தில் அமைந்திருக்கும் மிகக் குறுகிய ,மிக ஆழமான, பிளவுகளைக்கொண்ட மலைப் பள்ளத்தாக்கு அது. அந்தப்பள்ளத்தாக்கிற்கு அடிக்கடி வந்து போகும்
28 வயது ஆரன்  .தன் நண்பரிடம் கூட எங்கு போகிறேன் என சொல்லவில்லை,தன் அம்மாவின் வாய்ஸ்மெயில் அழைப்புகளைக்கூட எடுத்து பேசவில்லை,அவருக்கு மிகப்பிடித்தமான ப்ளூஜான் கேன்யானுக்கு [Blue John Canyon] போய் வார விடுமுறையை கழிக்க ஆவல் கொண்டவர்.நீர் பிடிக்கிறார்,கேமர,பேட்டரிகள்,கயிறு, நீர்ப்பை,தலையில் அணியும் ஃப்ளாஷ் லைட்,என எடுத்துக்கொண்டவர்,தன் ஸ்விஸ் ஹண்டர் கத்தியை தேட அது மட்டும் கிடைக்கவில்லை. இவர் கேன்யோனீயரிங் என்னும் மலையேறுதலில் கைதேர்ந்தவர்.மிகவும் ஆபத்தான இந்த சாகசம் புரியும் வெகுச்சிலரில் இவரும் ஒருவர். தன் மனைவியை இதனாலேயே ஒரு கட்டத்தில் பிரிந்தும் விட்டிருக்கிறார். தன் பெற்றோரிடமும் ஒட்டுதலில்லை. தனிமை விரும்பியாகவே  இருக்கிறார் ஆரன்.

ரியாக வெள்ளிக்கிழமை இரவில் தன்னுடைய 4x4 suv ல் இந்த யூடாஹ் கேன்யன்லாண்ட் தேசியப்பூங்கா  வந்தவர், குதூகலத்துடன் தன்னுடைய கியர் சைக்கிளில் ஓடோ மீட்டரை பொருத்திக் கொண்டு, வேகவேகமாக மிதித்து ப்ளூ ஜான் கேன்யான் நோக்கி விரைகிறார், இடையில் ஒரு பாறை தடுக்கி விழுகிறார். அதையும் புகைப்படமெடுக்கிறார். பிண்ணணி இசை ஒலிக்கிறது பாருங்கள் இசைப்புயல் தனித்து தெரிகிறார். நமக்கு அந்த ஒரு காரணத்துக்காகவே பெருமையாக இருக்கிறது. அவர் எங்காளு என கத்த தோணுகிறது.வழியில் க்ரிஸ்டி, மேகன் என்னும்  இரண்டு பெண்கள் தாங்கள் வந்த வழியை தவறவிட்டுவிட்டு தேட இவர் அவர்களுடன் நகைச்சுவையாக அறிமுகமாகி, வழிகாட்டுகிறார்.அங்கே மலையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய விரிசல் அது, மூன்று அடி அகலம் இருக்கும், அதனுள் மூவரும் இறங்குகின்றனர், ஆரன் பைய நகன்று நகன்று ஊர்ந்து, பின்னர் ஒரு துளைக்குள் குதிக்கிறார் பாருங்கள், அது 100 அடியாவது உயரமிருக்கும் அப்படி ஒரு உயரத்திலிருந்து குதித்து,குகைக்குள் இருக்கும் நீர்நிலைக்குள் குதித்து ஆட்டம் போடுகிறார். 

ன்ன அற்புதமான காட்சி அது?!!! கேமரா மேன் அந்தோனி டாட் மேண்டில் [Anthony Dod Mantle]  தனிஆவர்தனம் செய்கிறார்.சிறிய குகைக்குள்ளே இருந்து அப்படியே உயரக்கிளம்பி ஒரு நூறு அடி மேலே போய் இன்னும் விரிந்து ஃப்ரீஸ் செய்கிறார், நமக்கு உயிரே போகிறது, என்ன ஒரு வித்தை? மிக மிக ரம்மியம். நாம் அங்கே போக முடியாவிட்டாலும் நாமும் அங்கேயே இருப்பதைப்போன்ற பிரமை ஏற்பட்டது. ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படம் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை, அதில் இசைப்புயலின் இசை மிக சாதாரணம் என சொல்லி வந்திருக்கிறேன், இதில் அதை நிவர்த்தி செய்துவிட்டார். மிக மிக உயிரோட்டமான, துடிப்பான இசை. பல சமயம் நம்மை பயம் திகில் ஆட்கொள்வது  பின்னணி இசையால் தான்.

ரன், அந்த இரு பெண்களுடன் அந்த மலை இடுக்கு வழியே குதித்து கெட்ட ஆட்டம் போட்டுவிட்டு,அவர்களுக்கு விடை கொடுக்கிறார், நாளை இரவு அந்த ஒரு  பெண்ணின் வீட்டில் வார இறுதி கேளிக்கைகள் நடக்கிறபடியால் கலந்து கொள்ள பணிக்கப்பட, இவர் அதை குறித்து வைத்துக்கொள்கிறார், இவருக்கு அப்பெண்களையும்,அப்பெண்களுக்கு இவரையும் மிகவும் பிடித்து விடுகிறது. இப்போது இரண்டு மலைத் தொடர்களுக்கு இடையிலான மிகக் குறுகலான ஓர் இடைவெளியில் ஊர்ந்து சென்றுகொண்டு குதிக்கிறார் ஆரன் . ஒரு எதிர்பாராத கணத்தில் மேலே இருந்த ஒரு உருண்டு திரண்ட பாறை இவருடன் உருண்டு விழ. நொடியில் சுதாரித்த ஆரன், தலையை விலக்கி விட்டார்.ஆயினும் அப்பாறையுடன் இவரது வலது கை விரலகள் அழுத்தமாக சிக்கிக்கொண்டன. காற்று கூட புகாத இடைவெளி அது.தீர்ந்தார் மனிதர்.

தவி!!!! உதவி!!!! என இவர் எப்படி கூப்பாடு போட்டும் பயனில்லை, என்னென்னவோ கனவுகள் வருகின்றன. குரலெடுத்துக் கத்தியதில் பசிதான் எடுக்கிறது, மிச்சம் இருக்கும் சக்தியை சேமிக்கிறார். தன்னை திடப்படுத்துகிறார், இதுவும் கடந்துபோகும் என்கிறார். வலியைப் பொறுத்துக் கொண்டு பாறையிலிருந்து தன்னை விடுவிக்க திட்டம் தீட்டுகிறார் ஆரன். தன்னிடமிருக்கும் எல்லா உபகரணங்களையும் பாறை மீது பரப்புகிறார். எதெது? எப்படி உதவக்கூடும் என மதிப்பீடு செய்கிறார். தன் முனை மழுங்கிய சீனத்தயாரிப்பான பலநோக்கு பேனாக்கத்தியை நோட்டமிடுகிறார். 

ப்ளாஷ் லைட் வாங்கியதற்கு இலவசமாக கொடுக்கப்பட்டது அது, அதை எடுத்து வந்தமைக்கு மிகவும் நொந்து கொள்கிறார். அது கூட தன் அம்மா தனக்கு பரிசாய் கொடுத்தமையால் அதிகம் திட்டவில்லை. தன் மனைவியின் நினைவு, தங்கையின் நினைவு, அன்னை தந்தையின் நினைவுகள் ஒருங்கே வாட்ட, எங்கே? ஒருக்கால் குகையிலேயே இறந்துவிடுவோமோ?பூமிக்கடியில் சுமார் 65 அடி ஆழத்தில் இருக்கும் குறுகிய குகைக்குள் யாரும் தன்னை காப்பாற்றாமல் போவரோ? என அஞ்சியவர். தன் கேமராவை இயக்கி, பேசுகிறார். நண்பரே இதை யார் முதலில் கண்டு எடுக்கிறீர்களோ?!!! இந்த கேமராவை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் இந்த டேப்பை என் நினைவாக என் அம்மாவிடம் சேர்த்துவிடுங்கள் என விசும்புகிறார். பாருங்கள், நமக்கு அடிவயிறு கலக்குகிறது.

மிக மிக அருமையான காட்சியாக்கம், அந்த மூன்றடி குகைக்குள் கிடைத்ததை வைத்து தப்பிக்க பிரயத்தனம் செய்கிறார், அபாரம்.மேலே தினமும் காலை 9-00 மணி வாக்கில் வரும் 15 நிமிடமே நிலைக்கும் சூரிய ஒளியையும், மேலே பறக்கும் 8-40 வாக்கில் பறக்கும் ஒரு பெரிய பருந்தையும் சுவைபட பகிர்கிறார். கொண்டு வந்த நீரை சேமித்து கணக்கு போட்டு பருகுகிறார்.ஒரு கட்டத்தில் நீர் சிதறிவிட துடிக்கிறார்.தவிர தன் கால்சட்டையிலேயே அரைத்தூக்கத்தில் ஒன்றுக்கு இரு முறை போய்விட்டதையும் கேமராவில் பகிர்கிறார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்திக்கு பீர்,சிக்கன் எல்லாம் தூரத்தில் தெரிவது போல இவருக்கும் இவர் வேண்டாமென காரில் விட்டு வந்த ஆரஞ்சு ஜூஸ் பாட்டில் நினைக்கையிலேயே வாய் ஊறுகிறது. என்ன ஒரு இயல்பான நடிப்பு ஆரனுடையது?

ரு கட்டத்தில் தன்னுடலுடன் கயிறைக்கட்டி, தன் உடல் எடையைக் கொண்டே அந்த பாறையை மேலே இழுக்கப்பார்க்கிறார், ம்கூம். பலனில்லை. இவ்வாறே பாறை இளகும் , கையை விடுவிப்போமென  மிகப்பொறுமையாகக் காத்திருந்தார் ஆரன். நேரம் தான் கடக்கிறது, நீர் சுத்தமாக இல்லை, இப்போது தன்னுடைய சிறுநீரை தான் கொண்டுவந்த நீரசேமிக்கும் பையில் சேமித்து அதைக்கூட குடிக்கிறார். அருவருக்கிறார். அப்போது கூட அங்கே அருகே ஊரும் பல்லிகள் இவர் மலம் கழிக்காததால் தின்ன தீனி கிடைக்கவில்லை என குறைபட்டுக்கொண்டதாக சொல்கிறார். ஒரு கட்டத்தில் தன் கையில் துளையிட்டு  ரத்தத்தை கூட தாகத்துக்கு குடித்துப் பார்க்கிறார். அபாரம், இதோ முழுதாக ஐந்து நாட்கள் ஆகப்போகிறது, கேமராவில் எஞ்சியிருக்கும் பேட்டரி, தன் இப்போதைய நிலையை பதிவு செய்தவர்.சிறிதும் தாமதிக்கவில்லை,இனி கத்தவும் தெம்பில்லை, பாட்டும் கேட்டு உற்சாகம் அடைய வாக்மேனில் பேட்டரியுமில்லை, காதுக்கு அவ்வளவு சக்தியுமில்லை. கண் சொருகுகிறது. சுதாரிக்கிறார் ஆரன்.

ங்கே தன் சின்ன கத்தியை தவறவிட்டுவிடுவோமோ? என பயந்து அதற்கு  இப்போது ஸ்ட்ராப் போட்டுக் கொண்டவர். அதை எடுத்துத் தனது வலக்கையைத் தானே அறுக்கத் தொடங்குகிறார். சின்னச் சின்ன இளைப்பாறலுக்குப் பிறகு, சக்தியைத் திரட்டி கையை அறுத்துக்கொண்டே இருக்கிறார் ஆரன். நாம் தத்ரூபமான சதைக்கோளக் கிழிசலை கண்ணுருகிறோம், ரத்தமாக கொட்ட, இவருக்கு இப்போது அருவருக்கவேயில்லை. எலும்பைக் கூட மொண்ணைக் கத்தியை வைத்தே தேய்த்து தேய்த்து அறுத்து, ஒரு வழியாக பாறையின் பிடியிலிருந்து விடுபட்டவர், அந்த பதட்டத்திலும் அந்த பாறையிடுக்கில் மாட்டிக் கொண்டிருக்கும் கையை போட்டோ எடுக்கிறார் பாருங்கள். என்ன நெஞ்சுரம்? ஒற்றைக் கையைக்கொண்டு 65 அடி குகையினுள் புகுந்து குதித்து தத்தித் தத்தி ஏறுகிறார் ஆரன். மலை உச்சியை அடைந்தார். தாகம் மிகவும் வாட்ட  அதோ அங்கே தூரத்தில் பள்ளத்தாக்கினுள்ளே நீர் நிலையைப்பார்க்கிறார். 

ங்கே தன்னைப்போலவே மலையேறும் வீரர்கள் அடித்து வைத்த இரும்புக்கொக்கியை பார்த்தவருக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட,அதை முத்தமிடுகிறார். இப்போது செங்குத்தான் மலைபள்ளத்தாக்கில் சுமார் 100 அடி மெல்ல கயிறு  கட்டி இறங்குகிறார். அங்கே அழுக்கு நீர்க்குட்டையில் விழுந்தவர். முடிந்த அளவுக்கு நீரைப் பருகுகிறார், பாட்டிலில் நிரப்பிக் கொள்கிறார். நீண்ட நெடும் தூரம் நடந்தே தன் மிதிவண்டி நிறுத்தியிருந்த இடத்துக்கு விரைந்தவர். மயக்கம் வாட்ட தூரத்தே கணவன்,மனைவி அவர்களின் மகனும் செல்வதைப் பார்த்துவிட்டு கூக்குரலிட, அவர்கள் இவருக்கு நல்ல நீர் அளிக்கின்றனர். அவர்கள் இவரை ஆசுவாசப்படுத்துகின்றனர்.  இப்போது நால்வரும் பல மைல்கள் நடக்கின்றனர். அவர்களின் செல்போனில் சிக்னல் கிடைத்ததும் ஹெலிக்காப்டர் முதலுதவிக்கு தகவல் சொல்ல, அங்கே சில மணி நேர காத்திருத்தலுக்கு பின்னர் ஹெலிக்காப்டர் வருகிறது. ஆரன் அதில் ஏற்றப்பட்டு மருத்துவ உதவி பெற்று உயிர் பிழைக்கிறார்.

கையைத் துண்டித்துத் தப்பி வந்த ஆரன் ரால்ஸ்டனை அதற்குப் பிறகு தேடி வந்தது நீங்காப்புகழ். ”Between a Rock and a Hard Place” என்ற ஆரன் ரால்ஸ்டனின் வாழ்க்கை அனுபவத்தைத்தான் இயக்குனர் டேனி பாயில் 127 ஹவர்ஸாக இயக்கியும் இருக்கிறார். இதுவரை இப்படத்துக்கு கிடைத்த பாராட்டுக்களும் அங்கீகாரங்களும் எண்ணிலடங்காதவை.

ரன் வேடத்தில் நடித்த ஜேம்ஸ் ஃப்ரான்கோ மிக நல்ல நடிகர். இவரின் பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் படத்தின் சுகபோகமான கஞ்சா குடியனும், கஞ்சா வியாபாரியுமான நகைச்சுவை வேடத்தை  ரசித்துப் பார்த்திருக்கிறேன். மனிதர் இதில் ஆரனாகவே வாழ்ந்திருக்கிறார். 2003-ம் ஆண்டு தன் வலது கையை இழந்தார் ஆரன். ஆனால், அதன் பின்
2005-ம் ஆண்டில்  காலராடோ பகுதியில் இருக்கும் 14,000 அடி உயர சிகரங்கள் அனைத்திலும் ஏறிய முதல் மனிதன் என்ற சாதனையும் அவர் படைத்துவிட்டார்  என்று படம் முடிகையில் எழுத்தாக போடுகின்றனர். என்ன ஒரு உத்வேகம் படைத்த மனிதர் இவர் என்று தோன்றியது. மிக அருமையான உத்வேகம் தரும் படம்.படத்தில் கரமைதுனம் செய்வது போலவும், கடைசி காட்சியில் கையை அப்பட்டமாக சிறு மொன்னைக்கத்தி கொண்டு குத்தி அறுப்பது போலவும் வருவதால் இது சிறுவர்களுக்கான படம் அல்ல. இசைப்புயல் இப்படத்துக்கு இசையமைத்தது இந்தியன் ஒவ்வொருவருக்கும் பெருமை தான். அதற்கு வாய்ப்பளித்தமைக்காகவே  இயக்குனர் டேனி பாய்லை மிகவும் பாராட்டவேண்டும்.

டத்தின் இசையை கேட்டுவிட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நிஜ வாழ்வின் ஆரன் ரால்ஸ்டன் சிலாகித்து எழுதி அனுப்பியிருந்த பாராட்டு வரிகள் இதோ!!! மிஸ்டர் ஏ.ஆர்... நம்ப முடியாத ஆச்சர்யமூட்டும் இசை அனுபவத்தை எனது வாழ்க்கைக் கதையில் சேர்த்ததமைக்கு மிக்க நன்றிகள். உங்களுடைய ஒலிக்கோர்வை பின்னணியில் ஒலித்துக்கொண்டு இருந்திருக்குமேயானால், இன்னொரு 127 மணி நேரங்கள் நான் அந்த மலை இடுக்கில் கழித்திருக்கக்கூடும் - ஆரன் ரால்ஸ்டன்” யாருக்கு கிடைக்கும்?!!!  இப்படி ஒரு பாராட்டு பத்திரம், ஹாட்ஸ் ஆஃப் டு யூ ரஹ்மான்.

படம் தரவிறக்க சுட்டி:-

படத்தின் முன்னோட்ட காணொளி யூட்யூபிலிருந்து:-
====0000====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Danny Boyle
Produced by Christian Colson
John Smithson
Danny Boyle
Screenplay by Danny Boyle
Simon Beaufoy
Based on Between a Rock and a Hard Place by
Aron Ralston
Starring James Franco
Music by A. R. Rahman
Cinematography Anthony Dod Mantle
Enrique Chediak[1]
Editing by Jon Harris
Studio Film4 Productions
HandMade Films
Distributed by Fox Searchlight Pictures (US)
Pathé (UK/France)
Release date(s) September 4, 2010 (2010-09-04) (Telluride)
November 5, 2010 (2010-11-05) (United States)
Running time 94 minutes
Language English

21 comments:

King Viswa சொன்னது…

அப்பாடா, ரொம்ப நாள் கழித்து நான் பார்த்த ஒரு படத்தை பற்றிய விமர்சனம். சூப்பர்.


கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

எஸ்.கே சொன்னது…

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் இசை கேட்டேன் நன்றாக இருந்தது!

King Viswa சொன்னது…

நண்பரே,
இதனைப்போன்றே நடந்த பல உண்மை சங்கதிகளை டிஸ்கவரி சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். அதில் எனக்கு பிடித்த ஒன்று: ஒரு பெண் (அத்லெட்) பயிற்சிக்காக மலை மீது தனியே சென்றபோது அவரது முதுகெலும்பு உடைந்து, அவரால் நடக்கமுடியாமல் போய் விடுகிறது. அவரால் நடக்க முடியாது, தகவல் சொல்ல கைபேசியும் இல்லை. அவர் எங்கே சென்றுள்ளார் என்பதை அறிய வசதியும் இல்லாத வேளையில் அவருடைய நாய் அவரை தேடிவந்து அவருடன் இரண்டு நாட்களை கழித்து அவர் காப்பாற்றப்படுவது உண்மையிலேயே சிலிர்க்க வைத்தது.

இந்த படத்தை பார்க்கையில் பல நேரங்களில் அப்படித்தான் நேர்ந்தது.

கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

King Viswa சொன்னது…

இந்த படத்தை ஏனோ எஸ்ரா பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.


கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கிங் விஸ்வா
அருமை நண்பரே
முதலில் வந்து முத்தான கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
எஸ்ரா அப்படியா சொன்னார்?
ஆனால் இப்படம் எனக்கு பிடித்தது,பரீட் பார்த்து விட்டீர்களா?அதுவும் எனக்கு மிகவும் பிடித்தது,அந்த டிஸ்கவரி அத்லெட் பெண்ணின் ஆவணப்படம் பெயர் என்ன?சொன்னால் பார்த்துவிடுவேன்.பல தகவலுக்கு நன்றி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@எஸ்கே
நண்பா நலமா?
இதை விரைந்து பார்த்துவிடுங்கள்,இங்கே உள்ள சுட்டி ப்ளூரே ரிப்பாம்.நன்றாக இருக்கிறது தரம்.

செ.சரவணக்குமார் சொன்னது…

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா. படம் இன்னும் பார்க்கவில்லை. எஸ்.ரா படம் பற்றி எழுதியிருந்த குறிப்பு ஒன்றை வாசித்தேன். பார்க்கவேண்டும் என்று தோன்றவில்லை. உங்கள் விமர்சனம் படித்ததும் உடனே பார்க்கவேண்டிய படங்களின் லிஸ்ட்டில் இதையும் சேர்த்துவிட்டேன்.

நீங்கள் கொடுத்திருக்கும் தரவிறக்கச்சுட்டி இங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அதனால் என்ன வழக்கம்போல டி.வி.டி யை நாடவேண்டியதுதான்.

சுண்டெலி சொன்னது…

படம் பார்த்தேன் தல. ஆனா.. இன்னும் ஸ்லம்டாக் கோபம் தீரலை. அதனாலயோ என்னமோ... இந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கலை.

// தன்னுடைய 4x4 suv ல் இந்த யூடாஹ் கேன்யன்லாண்ட் தேசியப்பூங்கா வந்தவர், குதூகலத்துடன் தன்னுடைய கியர் சைக்கிளில் ஓடோ மீட்டரை பொருத்திக் கொண்டு//

இம்புட்டு டீடெய்லா?! அந்த SUV-யும் சைக்கிளும் என்ன மேக்-மாடல்ங்கறதை சொல்ல மறந்துட்டீங்களோ? ;)

டெனிம் சொன்னது…

நல்லது நண்பரே,விரிவாக எழுதி உள்ளீர்கள்,நான் மிகவும் எதிர்ப் பார்த்தப் படம்,ஆனால் எனக்கு படம் பிடிக்க வில்லை,சலிப்பையே தந்தது

யாசவி சொன்னது…

சும்மா மொக்கையாக போவது போல இருக்கும்

கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக்கொண்டு போய்விடும் படம் இது.

ரஹ்மானின் ஒரு பாட்டு மேஜிக்.

மற்ற இடங்களில் பரவாயில்லை ரகம்.

நடிகரின் நடிப்பு அபாரம்.


நல்ல விமர்சனம்

''பிங்க்'' தமிழன் சொன்னது…

Thalaiva arumayana vimarchanam.
evvalo details.naan blogla padikkum mudhal vimarchanam. itheppolavum tamilil elutha mudiyumaa.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

படமே பாக்கத்தேவை இல்ல போல உங்க எழுத்து நடை தத்ரூபமா விவரிச்சிடுச்சு.. கலக்கல் விமர்சனம் தல.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆனந்த விகடன்ல இந்தப்படத்தைப்பற்றி போட்டப்பவே பாக்கனும்னு நினைச்சேன். ஆனா படம் ரிலீஸ் ஆகல். நீங்க எங்கே பார்த்தீங்க?

ko.punniavan சொன்னது…

அருமையான விமர்சனம்.படத்தைப் பார்க்கத்தூண்டுகிறது.
கோ.புண்ணியவான், மலேசியா

உலக சினிமா ரசிகன் சொன்னது…

டிவிடியில் படம் பார்த்தேன்.பாறை இடுக்கில் மாட்டிக்கொண்டதும் டிவிடியை நிறுத்திவிட்டேன்...தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்க்காக.ஏ.ஆரின் இசை இந்தியர்கள் அனைவரும் பெருமை படத்தகுந்தது

மனோ சொன்னது…

எகிப்து, சூடான் ஆகிய நாடுகளில் தொடங்கிய இந்த மக்கள் புரட்சி அரபு நாடுகளான லிபியா, ஏமன், பஹ்ரைன், ஈரான் என தொடர்ந்து வருவதால் அரபு நாடுகள் பெரும் கலக்கமடைந்துள்ளன. அமீரகம் எப்படி இருக்கிறது?அங்கு பாதுகாப்பானதா?ஒரு கட்டுரை எழுதுங்களேன்
மனோ
லிபியா

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@செ.சரவணக்குமார்
நண்பரே,நன்றி,எஸ்ராவின் அந்த வாக்கியத்தை படித்த பின்னர் தான் எனக்கு
இந்தப்படம் பார்க்கும் ஆவலே வந்தது,முதலில் இதுபோல படம் பார்க்க தைரியம் வேண்டும்.பலருக்கு ஆழ்குழாய்க்குள் குழந்தை விழுந்து சிக்கிக்கொண்ட செய்திகளை படிக்கையிலேயே தலை தட்டாமாலை சுற்றும்,அவ்வளவு ஏன் கோவில் கூட்ட நெரிசல் வரிசை சந்தில் மூச்சுதிணர மாட்டிக்கொண்டால் கூட என்ன ஆகும் என எண்ணிக்கூட பார்க்க மாட்டார்கள்!!!, சந்தில் அகப்பட்டுக்கொள்வது,பூமிக்கடியில் புதைக்கப்படுவது எல்லாம் மிகவும் கொடுமை.அதனால் கூட பலருக்கு ஒவ்வாமை இருக்கக்கூடும்.

நான் 127 ஹவர்ஸில் அதிகம் எதிர்பார்க்காததால் நான் தேடியது எனக்கு கிடைத்தது.ஸ்லம் டாக் மில்லியனரை விட இது இசையில் பரவாயில்லை,11+3 போனஸ் ட்ராக்குமே அப்படித்தான்., ஆனால் ஹாண்டிங் ரகமல்ல, ரஹ்மானின் கட்டவிழ்த்த இசையை கேட்கவேண்டுமென்றால் http://en.wikipedia.org/wiki/Warriors_of_Heaven_and_Earth
15 ட்ராக்களை ஆங்கிலம்&ஹிந்தியில் தரவிறக்கி கேட்டுவிட்டு சொல்லுங்கள்.
இது தான் ரஹ்மானின் அப்டு டேட் ஹாண்டிங் மியூசிக் ஒர்க்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@தல ஹாலி பாலி
தல நீங்க ரொம்ப பிடிக்கலைன்னு சொன்னதே படத்துக்கு 60 மார்க்குக்கு மேல குடுத்ததுக்கு சமமே.நன்றி தல,டீடெய்லு?எல்லாம் பிரவுஸிங் தானே தல,சும்மா என் நாலெட்ஜ் அப்டேட்டுக்கு படிச்சு எழுதுறது

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@டெனிம்
நண்பரே,அடடா அப்படியா நேர்ந்தது?
ரசனைகள் ஒருவருக்கொருவர் மாறுபடுமல்லவா?
நன்றி

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@யாசவி
நண்பரே
வெறும் குகையையும் ஒத்தை ஆளையும் வைத்துக்கொண்டு பார்வையாளனை 1.30 மணிநேரம் உட்கார வைப்பது அவ்வளவு எளிதல்ல.நடிகரின் நடிப்பும்,பிண்ணணி இசையையும் குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். இது சொன்ன மெசேஜுக்காகவாவது மரியாதை கொடுக்கனுமா இல்லையா?நன்றிங்க நண்பரே

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பிங்க் தமிழன்
மிக்க நன்றி நண்பரே

@சி.பி.செந்தில்குமார்
நண்பரே
மிக்க நன்றி
நான் எப்போதுமே டாரண்டில் டிவிடி ரிப் அல்லது ப்ளூரே ரிப் டவுன்லோட் செய்து தான் படம் பார்ப்பேன்.இங்கு டிவிடி வாடகைக்கு கிடைக்கும் ஆனால் திராபையான படம் தான் கிடைக்கும்.நம் மனதுக்கு பிடித்த படத்தை அதிவேக இணையத்தில் இருந்து தரவிறக்கி பார்ப்பது, சுடச்சுட நல்ல சாராயம் நாமே காய்ச்சி குடிப்பதைபோல சுகமானது.

@கோ.புண்ணியவான்
நண்பரே
மிக்க நன்றி

@உலகசினிமா ரசிகன்
தலைவரே வெந்திரையில் மிக அருமையான அனுபவம் கிட்டும்.
மிஸ் செய்யாதீர்கள்.இசைப்புய்லுக்கு இப்போது தரப்படுவதெல்லாம் அவர் இப்போது செய்த சாதனைக்கு அல்ல,எப்போதோ செய்த சாதனைகளுக்கு.இசைஞானிக்கு விருதுகள் கொடுத்து ஒருவர் கௌரவித்துவிடவே முடியாது.அவரால் தான் விருதுக்கே பெருமை.

@மனோ
நண்பரே
லிப்யா எப்படி இருக்கிறது,என் நண்பர் நல்ல படியாக இன்று தான் ஊர் வந்து சேர்ந்தார்.நீங்கள் கிளம்பவில்லையா?

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)