நண்பர்களே!!!
மை ஆர்கிடெக்ட் என்னும் அமெரிக்க கட்டிடக்கலை வல்லுனர் லூயி.ஐ.கான் பற்றிய ஆவணப்படம் பார்த்தேன். இது அன்பின், கட்டிடக்கலையின், துரோகத்தின், மன்னிப்பின் கதையாகும், உலகே நன்கறிந்தவரும் மகனாகிய தானறிந்திராத ஓர் மனிதனைத் தெரிந்து கொள்ள, ஓர் புறக்கணிக்கப்பட்ட மகன் உலகெங்கும் மேற்கொண்ட ஐந்து வருட பயணம், அதன் பின்னான அவன் தந்தையைப் பற்றிய புரிதலுமே இப்படம்.
இந்த ஆவணப்படம் பார்த்துவிட்டு கலங்காதவர்கள் என இருந்தால் அவர்கள் மனம் கல் என்பேன், இவ்வுலகில் தகப்பன் யார்? எனத் தெரிந்தும் அதை எங்கும் சொல்லிக் கொள்ள முடியாதவனை, அங்கீகாரமில்லாப் பிள்ளையை ஆங்கிலத்தில் பாஸ்டர்ட் என்பார்கள். அதுபோல நிலை ஒருவனுக்கு வாய்ப்பது வாழ்வில் மிகவும் துயரம் . தகப்பன் பாசம் என்பதே நினைவில்லா ஒரு மகன் தன் 36 ஆம் வயதில், 25 வருடங்களுக்கு முன் இறந்துபோன தன் தந்தை உலகம் போற்றும் மகத்தான அமெரிக்க கட்டிடக்கலை வல்லுனர் லூயி கானின் ரிஷிமூலத்தை தேடிப்போகிறார்.
கடவுளே!!! என்ன ஒரு மகன் நாத்தேனியல் கான் ?!!! மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னேற்றான் கொல் எனும் சொல்; மகன் தந்தைக்கு செய்யக்கூடிய உதவியானது, இவருடைய தந்தை இவரைப்பெற என்ன தவம் செய்தாரோ? என எண்ணும் அளவுக்கு இருத்தல் வேண்டும் என்ற குறளுக்கான அர்த்தம் இவரால் கண்டேன். இவரின் தந்தை தன் கடமையை சரிவர நிறைவேற்றாவிட்டாலும்,நாத்தேனியல் தன் தந்தையை அப்படி நேசித்திருக்கிறார். புரியாத புதிரான தந்தையை பற்றி தெரிந்துகொள்ள கேமராவை தூக்கிக்கொண்டு புறப்பட்டவர்.

லூயி.ஐ.கான்[Louis I. Kahn] |
சில நாட்களில் முதல் மனைவி எஸ்தரிடம் ஆத்மார்த்தமான நாட்டமின்மை , ஓயாத கட்டிட வடிவமைப்பு வேலைகள், பின்னர் ஊரரியாமல், தன்னிடம் வேலைபார்த்த ஆர்க்கிடெக்ட் பெண் ஆன்னி டைங்கை[
] இரண்டாம் மனைவியாக்கிக் கொண்டு அவளுடனான இல்வாழ்க்கை அமைத்தது. அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதிலும் பிணக்கு வந்து இரண்டாமவளே விலகியது, பின்னர் ஊரரியா வண்ணம் மூன்றாம் மனைவியான இவரது தாய் ஹாரியட் பாட்டிசனுடனான[ இல்லற வாழ்க்கை அமைத்தது, லூயிகானின் நாடோடித்தனமான வாழ்க்கைமுறை . காலத்தை வென்ற கலை ரசனை, கட்டிடக்கலையை தெய்வீகமாக கருதி அதை செயல்முறைப்படுத்தி அவர் சந்தித்த வெற்றி தோல்விகள்.வாடிக்கையாளர்களிடம் அவர் கொண்ட மாற்று கருத்துக்கள், விவாதங்கள். அதனால் அவர் இழந்த கமிஷன்கள் [பெரிய லாபம் தரும் கட்டிட வடிவமைப்பு வேலைகள்] உலகெங்கிலும் அவருக்கு இருந்த மாணவர்கள். அவர் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மாணவர்களுக்கு எடுத்த பாடத்தின் மாதிரி அவரின் நிரந்தர நண்பர்கள், பகைவர்கள் என்று ஆதி முதல் அந்தம் வரை பயணித்து மிக அருமையான ஆவணப்படம் தயாரித்து இயக்கி வாழ்ந்து இருக்கிறார். இறுதியாக அவர் தன் தந்தை லூயி கான் தனக்காக தன் தாய்க்காக வாழாவிட்டாலும் உலகுக்காகவே வாழ்ந்து தன்னை அற்பணித்திருந்ததை புரிந்து கொண்டார். நாத்தேனியல் கான் இந்த ஆவணப்படத்திற்காக சென்ற எண்ணிலடங்காத இடங்கள்,தன் பிறப்பு சான்றிதழில் இருக்கும் லூயி கான் என்னும் தன் தந்தையின் பெயரைக் காட்டி சந்தித்த பெரிய கட்டிடக்கலை வல்லுனர்கள், லூயீ கானின் இரண்டாம் மனைவி ஆன்னி டைங், அவரின் மகள், இவரின் தாய். மூத்த மனைவி எஸ்தர் இறந்துவிட்டதால் அவரின் மகள். என இவர் எடுத்த ஒவ்வொரு பேட்டியும் மிகவும் உயிரொட்டமானது. தன் தந்தை வடிவமைத்த கட்டிடங்களில் இவர் கண்ட தந்தையின் சுவாசம், உயிர். அங்கே புழங்குபவர்களிடம் இவர் தந்தையைப்பற்றி பேசுகையில் , கேட்கையில் இவருக்கு ஏற்படும் ஆனந்தம், புளங்காகிதம் என எதைத்தான் சொல்லாமல் விடுவது? என எனக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு நெகிழ்ச்சியூட்டும் படம்.
லூயி கான் பற்றி கட்டிடக்கலை மேதைகள் இப்படி சொல்கின்றனர்.
அமெரிக்க கட்டிடக்கலை வல்லுனர் பிலிப் ஜான்சன்[Philip Johnson],
what a `nice guy' Kahn was. `All the rest of us were bastards
சீன கட்டிடக்கலை வல்லுனர் ஐ.எம். பெய்.[ I.M. Pei ],
Kahn is my superior. `It's quality, not quantity, that matters,' Kahn may only have completed a few buildings, but they are great masterpieces.
அமெரிக்க கட்டிடக்கலை வல்லுனர் ஃப்ரான்க் கெஹ்ரி [Frank Gehry ]
Kahn is my original inspiration, that without Lou Kahn, I would not be. It's plain that the most famous architectural figures of our day are all in awe of this man. A failure morally, a man who couldn't do right by the people closest to him in his life, Louis Kahn is perhaps the greatest American architect. That fact emerges as powerfully as do his personal shortcomings.
இந்திய கட்டிடக்கலை வல்லுனர் பி.வி.தோஷி[B.V.Doshi]
லூயி கான் வடிவமைத்த கட்டிடங்களை நூறு பதிவுகள் கொண்டு கூட எழுத்தில் எழுதிவிட முடியாது, அதை உள்வாங்கி ரசிப்பதற்கே பக்குவமும் முதிர்ச்சியும் வேண்டும். ஒரு கைதேர்ந்த ஓவியன் வண்ணம் தீட்டுவதைப் போல கட்டுக்கடங்காத பின்நவீனத்துவ கோட்பாடுகளுடன் அமைந்த பிரம்மாண்டம் தான் இவரது படைப்புகள், அபாரமான விகிதாச்சாரத்துடன், தேர்ந்த உள்ளடக்கம் கொண்டவை. வானுக்கு ஏது எல்லை? கடலுக்கு ஏது எல்லை? அது போலவே இவரது படைப்புக்கள் தெய்வீகமானவை, அங்கே நாம் சென்று நிற்கையிலேயே இது செயற்கையா? இது கட்டிடமா? இது கட்டப்பட்டதா? அல்லது பெயர்த்துக் கொண்டு வந்து வைத்தார்களா? இது எப்படி சாத்தியமானது என்று கேட்க வைக்கும். இன்றைய அவசர உலகில் எளிதில் நினைத்துப்பார்க்கவோ கடைபிடிக்கவோ முடியாத கட்டுமான பிரம்மாண்டம், காங்கிரீட் கவிதைகள்.
இவர் கட்டுமானப்பொருளான செங்கல், காங்க்ரீட், இரும்பு, கண்ணாடி, அலுமினியம் போன்றவற்றை அளவின்றி நேசித்தார், அதனுடன் ஒளி, நீர்நிலை, மண், காற்று, ஆகாயத்தை இரண்டரக் கலந்தார். இவரது சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டி முடித்த 10 மீட்டர் விட்டம் கொண்ட ஆஜானுபாகுவான வளைவுகள். 50 மீட்டருக்கும் அதிக நீளமுள்ள ஓங்கு தாங்கான காங்கிரீட் கூரைகள். தூண்கள். உத்திரங்கள். ஒரு மனிதனின் உயரத்தை விட 50 மடங்கு உயரமுள்ள கட்டிடத்தின் காங்க்ரீட் மேற்கூரைகள், பரந்து விரிந்த நுழைவுவாயில்கள் என மூச்சு முட்டும். இவர் எதையுமே மூடி போட்டு மறைத்ததில்லை. இயற்கையோடு ஒத்த, கட்டுப்பட்ட, பிணைந்த ஒரு இசை போல ஒரு தியானம் போலான இவரது படைப்புகள், தன் முகத்திலுள்ள விகாரமான தீக்காயம் போன்றே இவர் கட்டிடங்களில் ஒழுங்கில்லாத வடிவங்களை அதிகம் அனுமதித்தார். அனாவசியமான அலங்கார பூச்சு வேலைகளை இவர் அடியோடு வெறுத்தார். இன்னும் இவரது படைப்புகள் உலகெங்கிலும் உள்ள கட்டிடக்கலைஞர்கள் பொதுமக்களால் கொண்டாடப்படுகின்றன,.
உண்மையான கலைஞனின் சாபம் ஓட்டாண்டியாக சாவது, அதில் லூயி கானும் விதிவிலக்கல்ல, தனக்கு மூன்று இல்லறம் அமைந்தும் எங்கேயும் செல்லப்பிடிக்காமல், கடன்சுமை நெஞ்சை அழுத்த இப்போது நிச்சயம் சாகப்போகிறோம் என உணர்ந்தவர் தன் பாஸ்போர்ட்டில் இருந்த பெயர் மற்றும் விலாசப் பக்கத்தை கிழித்து எங்கோ எறிந்திருக்கிறார். அப்போது 1974ஆம் ஆண்டு. கடைசியாக அவர் வந்த சென்று வந்த இடம் பங்களாதேஷின் டாக்காவும். இந்தியாவில் இன்றைய பின்நவீனத்துவ கட்டிடக்கலைக் கலைஞர்கள் கோலோச்சிக்கொண்டிருக்கும் அஹமதாபாதும் ஆகும் . அங்கே அமைந்திருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் பி.வி.தோஷியின் வேண்டுகோளுக்கிணங்க இவர் வடிவமைத்தது தான்.
இக்கட்டிடம் தான் அஹமதாபாதில் கட்டிடக்கலை தழைத்து சிறப்பதற்கும் மதிக்கப்படுவதற்கும் பிள்ளையார் சுழி. இவரின் மகத்தான சிஷ்யர் தான் இந்தியாவே போற்றும் பாலகிருஷ்ணன்.வி.தோஷி. அவருடனான அந்த கட்டிட வளாகத்துக்கு சென்று மேற்பார்வையிட்டவர். கட்டிடம் பற்றிய நிறைய ஆலோசனைகளை அன்று வழங்கியிருக்கிறார். பின்னர் அவருடைய குடும்பத்தாருடன் மதிய உணவு உட்கொண்டவர். மறுநாள் பென்சில்வேனியா ரயில்வே ஸ்டேஷனின் கழிவறையில் இறந்தும் போயிருக்கிறார். மூன்று நாட்களாக அவர் அடையாளமே காணப்படவில்லை. இவர் யார் என்று அடையாளம் தெரிந்தபின்னர் ஒட்டுமொத்த கட்டிடக்கலைஞர்கள் கதி கலங்கிப்போய் சவ ஊர்வலத்தில் ஒன்று திரண்டனர்.
அங்கே லூயி கானின் முறையில்லா மனைவிகள் இருவரும்,அவர்கள் மூலம் பிறந்த மகனும் மகளும் கலந்துகொண்டனர். அப்போது அவரின் மகன் நாதேனியலுக்கு வயது 11. தந்தை லூயி கானின் வயது 73 , என்ன என்ன கனவு கண்டிருக்கும் அந்த குழந்தை உள்ளம்?!!! .அந்த சவ ஊர்வலத்தில் கூட இவர்கள் அங்கீகரிக்கப்படவோ, கண்டுகொள்ளப்படவோ இல்லை,அவ்வளவு ஏன்?!!!யாரிடமும் பேசவேண்டாம், நீங்களும் லூயி கானுக்கு மனைவியர் என்றோ, மகவுகள் என்றோ சொல்லவும் வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். என்ன கொடுமை பாருங்கள்.
நாத்தேனியலின் அம்மா ஹாரியட் பாட்டிசன் ஒரு லேண்ட்ஸ்கேப் ஆர்கிட்டெக்ட். [தோட்டவியல் வடிவமைப்பாளர்] லூயி கானிடம் பணியாற்றுகையில் அவரின் அயராத கட்டிடக்கலை அற்பணிப்பின் பால் ஈர்ப்பும் ஈடுபாடும் கொண்டவர் , ஒரு கட்டத்தில் தன்னையே அவரிடம் அற்பணித்திருக்கிறார். அதன் பின்னர் வார இறுதி நாட்களில் மட்டுமே லூயி கான் இவர்களின் இல்லத்துக்கு இரவுக்கு மேல் வந்து விடியும் முன்னரே கிளம்பிப்போயிருக்கிறார், நாத்தேனியல் அவரை இரவில் மட்டுமே அதிகம் பார்த்திருக்கிறார். மிக அபூர்வமாக அவருடன் சென்ற சுற்றுலாக்கள்.அவருக்கு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கிறது. சிறு உள்ளத்தில் பெரும் காயமாக லூயி கான் திடீரென இறந்தும் விட்டார். செய்தித்தாள் பார்த்தே தன் தந்தையின் இறப்பை தெரிந்து கொண்டு அங்கே விரைந்தவர்களுக்கு, அவமானம் மட்டுமே எஞ்சியிருக்கிறது.
லூயி கான் இறக்கையிலேயே அவருக்கு அரை மில்லியன் டாலர்கள் [ஐந்து லட்சம்] வங்கிக்கடன் இருந்திருக்கிறது. அவரின் வாழ்நாள் சாதனையான வங்காளதேசத்தின் நாடாளுமன்ற வளாகத்தின் பணிகள் துவங்கி நடந்து கொண்டிருந்த நிலையில் இந்திய பாகிஸ்தான் போர் வேறு குறுக்கிட, மிகவும் வாடிப்போயிருக்கிறார்.லூயிகானைப்பற்றி பங்களாதேஷின் பிரபல கட்டிடக்கலை வல்லுனர் ஷுல்யர் வாரெஸ் [Shulyar Wares] இப்படி சிலாகிக்கிறார். கண்ணீர் உகுக்கிறார். அவரிடம் நாத்தேனியல், லூயிகானின் இந்த கடைசி படைப்பு ஆவணப்படத்தில் காட்டப்படுகிறது, 10 நிமிடம் எடுக்கப்பட்ட படம் எடிட் செய்த பின்னர் 3 நிமிடங்கள் வரும் என்றது தான் தாமதம். அதற்கு அவர் இப்படி சொல்கிறார்.
உலகின் மிக ஏழை நாடு பங்களாதேஷ். அந்த நாட்டிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா?என்று அவர் கேட்டதேயில்லை, உலகின் இன்னொரு பெரிய முஸ்லீம்களின் தேசம் இது. லூயி கான் ஒரு யூதர். யூதருக்கும் முஸ்லீம்களுக்கும் ஜென்மப்பகை, ஆயினும் லூயி கான் இந்த வடிவமைப்பு வேலையை மிகவும் ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டார். ஏனைய அமெரிக்கர்கள் போல அந்த தேசத்தைப் பார்த்து எள்ளி நகையாடவில்லை. எங்கள் தேசத்தின் பெருமை இந்த கட்டிடம்,எங்களின் பொக்கிஷம் இது என்கிறார்.
தன்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது அவருக்கு, அவர் உமக்காக வாழாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்களுக்காக ஒரு நாட்டுக்காகவே வாழ்ந்திருக்கிறார், அதை நினைத்து நீங்கள் ஆயுளுக்கும் பெருமை கொள்ளலாம் என்கிறார். அவர் வடிவமைத்த இந்த கட்டிடம் 1983ல் கட்டி முடிக்கப்பட்டது, இதை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனது, தாஜ் மகாலை கட்டவும் 22 ஆண்டுகள் ஆனது நமக்கு நினைவிருக்கலாம். இக்கட்டிடம் இல்லாமல் வங்காளதேசம் அதன் அரசியல் நிர்வாகம் உருவாகியிருக்காது என்கிறார்.
நாத்தேனியலை வெளியே ஓர் அதிகாலையில் சூழ்ந்து கொண்ட உள்ளூர் மக்கள் நீர் நிலை சூழ்ந்த அக்கட்டிடத்தை தாங்கள் மிகவும் நேசிப்பதாகவும், அங்கே உலவுவதற்கே மிகவும் பெருமைப் படுவதாகவும் கூறுகின்றனர். படத்தின் ஒளிப்பதிவும் இசைசேர்ப்பும் மிக மிக அருமை, இவருக்கு இது முதல் ஆவணப்படம் தான் என்றால் யாருமே நம்பமாட்டார்கள்.அப்படி ஓர் தரம், நேர்த்தி, தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்களே!!! அது மெய்தான். இப்படத்தில் லூயிகானுக்கு டாக்ஸி ஓட்டிய டாக்ஸி ட்ரைவரைக் கூட விடாமல் பேட்டி எடுத்துள்ளார். லூயிகான் ஒரு சமயம் American Wind Symphony Orchestra. வுக்காக ஒரு மிதக்கும் ஆர்கெஸ்ட்ரா கப்பலையும் வடிவமைத்துள்ளார். அந்த கப்பலுக்கும் போய் அதன் ஃப்ரெஞ்சு உரிமையாளர் ராபர்ட் ஆஸ்டின் போர்டியோவுக்கு[Robert Austin Boudreau] இன்ப அதிர்ச்சி தருகிறார் நாத்தேனியல், அவர் இவரை உச்சி முகர்கிறார். நான் உன்னில் லூயிகானைப்பார்க்கிறேன் என்கிறார். இது போதாதா ஒரு மகனுக்கு?
லூயி.ஐ.கானைப் பற்றி ஹிஸ்டரி ஆஃப் ஆர்க்கிடெக்சர் பாடத்தில் கட்டிடக்கலை மாணவர்கள், வல்லுனர், நிபுனர்கள் நிச்சயம் படிப்பார்கள், படித்திருப்பார்கள். அவர்களும் ,உலக சினிமா ரசிகர்களும் நிச்சயம் தவறவிடக்கூடாத படைப்பு இந்தப் படம். இது தந்த உத்வேகத்தில் நான் ஃப்ரான்க் லாயிட் ரைட், லீ-கார்பூசியர், ஃப்ரான்க்.ஓ.கெஹ்ரி, லூட்விக் மீஸ் வாண்டெர் ரோஹே , ஸாஹா ஹாதித். போன்றோர்கள் பற்றிய ஆவணப்படங்களை சரசரவென தரவிறக்கி விட்டேன். அதை பார்த்துவிட்டு என்னைக்கவரும் பட்சத்தில் நிச்சயம் எழுதுவேன். இப்படத்துக்கு 2004ஆம் ஆண்டின் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடவேண்டிய ஒன்று.
மை ஆர்க்கிடெக்ட்= ஆவணப்படத்தில் ஓர் புரட்சி
====0000====
படம் தரவிறக்க சுட்டி;-
படத்தைப்பற்றிய காணொளி டெட் டாட் காமிலிருந்து:-
louis kahn was a "highly cultivated soul". , "nothingness mattered to him ... the enigma of life mattered to him". louis kahn spoke of "matter in spiritual terms", which is precisely what many of my artist friends start doing when they get together.
தந்தையும் மகனும் |

`You would try to do justice to this building in ten minutes! To its spirit, its power, the ambiguities of its spaces!' ,It's not unusual for a great artist to fall short as a man, the one failure may be necessary for the other success.
உலகின் மிக ஏழை நாடு பங்களாதேஷ். அந்த நாட்டிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா?என்று அவர் கேட்டதேயில்லை, உலகின் இன்னொரு பெரிய முஸ்லீம்களின் தேசம் இது. லூயி கான் ஒரு யூதர். யூதருக்கும் முஸ்லீம்களுக்கும் ஜென்மப்பகை, ஆயினும் லூயி கான் இந்த வடிவமைப்பு வேலையை மிகவும் ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டார். ஏனைய அமெரிக்கர்கள் போல அந்த தேசத்தைப் பார்த்து எள்ளி நகையாடவில்லை. எங்கள் தேசத்தின் பெருமை இந்த கட்டிடம்,எங்களின் பொக்கிஷம் இது என்கிறார்.
தன்னையறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது அவருக்கு, அவர் உமக்காக வாழாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்களுக்காக ஒரு நாட்டுக்காகவே வாழ்ந்திருக்கிறார், அதை நினைத்து நீங்கள் ஆயுளுக்கும் பெருமை கொள்ளலாம் என்கிறார். அவர் வடிவமைத்த இந்த கட்டிடம் 1983ல் கட்டி முடிக்கப்பட்டது, இதை கட்டி முடிக்க 22 ஆண்டுகள் ஆனது, தாஜ் மகாலை கட்டவும் 22 ஆண்டுகள் ஆனது நமக்கு நினைவிருக்கலாம். இக்கட்டிடம் இல்லாமல் வங்காளதேசம் அதன் அரசியல் நிர்வாகம் உருவாகியிருக்காது என்கிறார்.
நாத்தேனியலை வெளியே ஓர் அதிகாலையில் சூழ்ந்து கொண்ட உள்ளூர் மக்கள் நீர் நிலை சூழ்ந்த அக்கட்டிடத்தை தாங்கள் மிகவும் நேசிப்பதாகவும், அங்கே உலவுவதற்கே மிகவும் பெருமைப் படுவதாகவும் கூறுகின்றனர். படத்தின் ஒளிப்பதிவும் இசைசேர்ப்பும் மிக மிக அருமை, இவருக்கு இது முதல் ஆவணப்படம் தான் என்றால் யாருமே நம்பமாட்டார்கள்.அப்படி ஓர் தரம், நேர்த்தி, தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்பார்களே!!! அது மெய்தான். இப்படத்தில் லூயிகானுக்கு டாக்ஸி ஓட்டிய டாக்ஸி ட்ரைவரைக் கூட விடாமல் பேட்டி எடுத்துள்ளார். லூயிகான் ஒரு சமயம் American Wind Symphony Orchestra. வுக்காக ஒரு மிதக்கும் ஆர்கெஸ்ட்ரா கப்பலையும் வடிவமைத்துள்ளார். அந்த கப்பலுக்கும் போய் அதன் ஃப்ரெஞ்சு உரிமையாளர் ராபர்ட் ஆஸ்டின் போர்டியோவுக்கு[Robert Austin Boudreau] இன்ப அதிர்ச்சி தருகிறார் நாத்தேனியல், அவர் இவரை உச்சி முகர்கிறார். நான் உன்னில் லூயிகானைப்பார்க்கிறேன் என்கிறார். இது போதாதா ஒரு மகனுக்கு?
லூயி.ஐ.கானைப் பற்றி ஹிஸ்டரி ஆஃப் ஆர்க்கிடெக்சர் பாடத்தில் கட்டிடக்கலை மாணவர்கள், வல்லுனர், நிபுனர்கள் நிச்சயம் படிப்பார்கள், படித்திருப்பார்கள். அவர்களும் ,உலக சினிமா ரசிகர்களும் நிச்சயம் தவறவிடக்கூடாத படைப்பு இந்தப் படம். இது தந்த உத்வேகத்தில் நான் ஃப்ரான்க் லாயிட் ரைட், லீ-கார்பூசியர், ஃப்ரான்க்.ஓ.கெஹ்ரி, லூட்விக் மீஸ் வாண்டெர் ரோஹே , ஸாஹா ஹாதித். போன்றோர்கள் பற்றிய ஆவணப்படங்களை சரசரவென தரவிறக்கி விட்டேன். அதை பார்த்துவிட்டு என்னைக்கவரும் பட்சத்தில் நிச்சயம் எழுதுவேன். இப்படத்துக்கு 2004ஆம் ஆண்டின் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடவேண்டிய ஒன்று.
மை ஆர்க்கிடெக்ட்= ஆவணப்படத்தில் ஓர் புரட்சி
====0000====
படம் தரவிறக்க சுட்டி;-
படத்தைப்பற்றிய காணொளி டெட் டாட் காமிலிருந்து:-
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by | Nathaniel Kahn |
---|---|
Produced by | Nathaniel Kahn Susan Rose Behr |
Written by | Nathaniel Kahn |
Music by | Joseph Vitarelli |
Cinematography | Robert Richman |
Editing by | Sabine Krayenbühl |
Release date(s) | 2003 |
Running time | 110 minutes |
Language | English |