எண்டோசல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனம்!!!


ருமை நண்பர்களே!!!

'எண்டோ சல்ஃபான் (Endo Sulfan)’  என்னும் அதிபயங்கரமான பூச்சிக் கொல்லி மருந்தைப்பற்றி அறிவீர்கள் தானே?!!!.இந்த பூச்சிக்கொல்லி மருந்து உலகின் 81 நாடுகளில் தடைசெய்யப்பட்டது. நார்வே நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், கடந்த மாதம் நடந்த உலக சுகாதார மாநாட்டில், 2012 மத்தியில் எண்டோ சல்ஃபானுக்கு உலக அளவில் தடை விதிக்கத் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். ஆனால் மக்கள் விரோத போக்குடைய காங்கிரஸ் அரசு இம்மருந்தை தடைசெய்ய ஆனவரை சுணக்கம் காட்டி வருவது தான் கண் கூடு. 

லகே வெறுத்து ஒதுக்கும் இம்மருந்தை  இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும்’ என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்   உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் தொடுத்து இருக்கிறார்கள்,ஆனால் தீர்ப்பும் அரசின் செயல்பாடுகளும் மக்களுக்கு சாதகமாக வருமா?!! அல்லது பூச்சி மருந்து முதலாளிகளுக்கும், அவர்களிடம்  கையூட்டு பெற்று வயிற்றை கழுவும் அரசியல்வாதிகளுக்கும் சாதகமாக வருமா?!!! என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

ண்டோ சல்ஃபான் என்னும் எமகாதக ரசாயனத்தை முந்திரி, பருத்தி, புகையிலை உள்ளிட்ட பணப் பயிர்களை தின்று அழிக்கும் சிறியவகைப் பூச்சிகளை கொல்ல அதிகம் பயன்​படுத்துகிறார்கள். 1950-ல்  அமெரிக்காவில் அறிமுகப்​படுத்தப்பட்ட இந்த பூச்சிக் கொல்லி, 1970-ல் இந்தியாவுக்கு வந்தது. இங்கு நிரந்தரமாக தங்கிவிட்ட இம்மருந்து நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலைகளையும் திறந்தது ,இங்கே ஆண்டுக்கு 8,500 டன் எண்டோ சல்ஃபான் உற்பத்தி செய்யப்பட்டு 4,000 டன் வெளிநாடுகளுக்கும் செல்கிறது, எஞ்சியது இந்தியாவுக்குள்ளேயே சந்தைப்படுத்தப்படுகிறது . கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் முந்திரிக் காடுகள் அதிகம். இங்கு ஹெலிகாப்டர் மூலம் இந்த மருந்தைத் தொடர்ந்து முந்திரிப்பண்ணை முதலாளிகள் தெளித்து வந்ததில், இதுவரை 400க்கும் பேருக்கு மேற்பட்டோர் கொடூரமாக இறந்து விட்டார்கள்.

து மனித உடலுக்குள் போய்விட்டால், முதலில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். வலிப்பு, நடை தடுமாற்றம், மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு, நினைவு இழத்தல் எனத் தொடங்கி இறுதியில் கோமா நிலைக்குக் கொண்டுபோய்விடும். கருவுற்ற தாய்மார்களுக்கு முதல் எட்டு வாரங்களிலேயே இது கருவைப் பாதிக்கும். ஹார்மோன் சுரப்பதில் சிக்கலை உண்டாக்குவதால், ஆண் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தி பெண் சுரப்பிகளை அதிகப்படுத்தும். அதனால், பிறக்கும் ஆண் குழந்தைகள்கூட அதிகப் பெண்மைத்தன்மையுடன் இருப்பார்கள்.

ந்த பகுதியில் நிறைய குழந்தைகள் விகாரமாக பூசணிக்காய் அளவு கொண்ட பருத்த தலையுடன் பிறக்கின்றன. இந்தக் குழந்தைகளுக்கு தைராய்டு ஒழுங்காக இருக்காது. இன்சுலினும் சுரக்காது. வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு விரைகள் முதிர்ச்சியடையாமல் இருக்கும். இவர்களுக்கு வயதுக்கேற்ற வளர்ச்சியும் இருக்காது. மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டு பிறவியிலேயே இவர்கள் பார்வையும் இழக்க நேரிடும். 

பெரியவர்களையே ஆட்டிப்படைக்கும் இந்த பூச்சிக்கொள்ளியின் வீரியம் பிறக்கும் குழந்தைகள் மீது தொடுக்கும் வெறியாட்டம்   சொல்லி மாளாது மேலே உள்ள படங்களே காண்போருக்கு ஆயிரம் கதைகள் சொல்லும். இதனால் எண்டோ சல்ஃபானுக்கு இந்தியாவில் தடை விதிக்கக் கோரி, ஆளும் மார்க்சிஸ்ட்களே கேரளத்தில் தொடர்ந்து போராடுகிறார்கள்.கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், சொர்க்கா என்ற கிராமத்தில்  நிறைய குழந்தைகள்  எண்டோ சல்ஃபானின் வீரியத்தால் பாதிக்கப்​பட்டு பிறக்கும்போதே குருடாகப் பிறக்கின்றனர்.

நான்கு வயதான நிறைய குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பை வயிற்றுக்கு வெளியே தொங்கியபடி இருக்கிறது. 20 வயதான நிறைய இளைஞர்கள் வலிப்பு நோயினால் பீடிக்கப்பட்டு  வாழ்கையையே தொலைத்துவிட்டு கிடக்கிறார்கள். 28 முதல் 30 வயதுகளிலுள்ள  நிறைய பேர்களுக்கு, நான்கு வயது குழந்தைக்கான மன வளர்ச்சிகூட இல்லை. மனித உடலில் கலக்கும் எண்டோ சல்ஃபான் கழிவுகள், சிறுநீரகம் மற்றும் ஈரல் மூலம் வெளியேறுவதால், அவையும் பாதிக்கப்பட்டு இதயம் பலவீனமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

பொது நல வழக்குத் தொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்'' எண்டோ சல்ஃபானுக்கு நிரந்தரத் தடை விதிப்பது குறித்து கேரள அரசு இதுவரை 11 கமிட்டிகளை நியமித்தும், இந்த பூச்சிக்கொல்லியை தடை செய்ய முடியவில்லை. எண்டோசல்ஃபான் தயாரிக்கப்படும் உற்பத்தி ஆலைக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து இருக்கிறார்கள். ஆனாலும் இம்மருந்து  நீக்கமற எல்லா ஊர்களிலுமே விற்கப்படுகிறது, கேரளாவின் தட்பவெப்ப நிலையால் இம்மருந்தின் வீர்யம் சொல்லொனாத்துயரை இதுவரை ஏற்படுத்தியிருக்கிறது. இனி பொறுப்பது ஆகாது என்னும் அயற்சியும் கோபமும் பகுதி மக்களிடையே ஒருசேர ஏற்பட்டதால் தான்  நீதிமன்றத்தை மக்கள் அணுகி இருக்கின்றனர். பதில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், பெரும்பாலான மாநிலங்களும் மத்திய அரசும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்...'' என்றார்.
எண்டோசல்ஃபானுக்கு ஒத்து ஊதும் மத்திய      சுற்றுச்சூழல் மற்றும்   வனத்துறை அமைச்சர்     ஜெய்ராம் ரமேஷ்

ண்டோ சல்ஃபான் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு  குணப்படுத்தும் மருந்துகள் இல்லவே இல்லை என்பது மற்றொரு துயரம்,திருடனாய் பார்த்து திருந்தினால் தான் திருட்டை ஒழிக்க முடியும், அது போல கறை படிந்த அரசியல் வாதிகள், இனியேனும் மக்களை சோதனைச்சாலை எலியாக மாற்றி விளையாடாமல் இருத்தல் வேண்டும்,இந்தியாவில் இன்னொரு போபால் விஷவாயு சம்பவம் போன்றதோர் பேரிடர் வேண்டுமா?!!!, பாரதத்தில் நூற்று இருபது கோடி மக்கள் இருக்கிறார்களே அதில் ஐந்து ஆயிரம் பேர் செத்தால் ஒன்றும் குடி முழுகிபோய்விடாது என்னும் மெத்தனப்போக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஆட்சியாளர்களிடையே மறையவேண்டும், மக்களாகிய நாமும் அது கேரளத்து மக்கள் தானே பாதிக்கப்பட்டுள்ளனர், தமிழகத்துக்கு கேடு வருகையில் பார்த்துக் கொள்வோம் என்று பாராமுகம் காட்டாமல், இதை கண்டித்தும் எதிர்த்தும் ஃபார்வர்டு மெயில்களும், ஃபேஸ்புக்குகளில், ட்விட்டர்கள், பஸ் போன்ற ஊடகங்களில் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்தும் வரவேண்டும்.செய்வீர்களா?!!!

=====0000=====

8 comments:

பெயரில்லா சொன்னது…

காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு 6 மாதத்துக்கு முன் பெட்ரோல் விலை 52 ருபாய், தேர்தல் வருகிறது என்பதற்காக விலையை 47 ரூபாயாக குறைத்தார்கள்.பின்பு ஆட்சிக்கு வந்தவுடன் 53 ,59 ,65 ,இப்பொழுது 71 ரூபாயாக ஏற்றிவிட்டார்கள்.மக்களை நாய்கள் என்று நினைத்து ரொட்டி துண்டு போடுவது போல் சிறிது விலையை குறைத்து ,இப்பொழுது மொத்தமாக அடிமையாக்கி விட்டார்கள், சோனியாவிற்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சில சதவித கமிசின் செல்வதே இதற்கு எல்லாம் காரணம்.அவர் இப்படியே மொத்தமாக இந்திய மக்களின் ரத்தத்தை உறிஞ்சி ,பிறகு இத்தாலியில் போய் செட்டில் ஆக போகிறார் ,வயிறு எரிந்து சொல்கிறேன் ,இங்கு இருக்கும் காங்கிரஸ் காரர்கள் மக்களிடம் அடிபட்டு ,உதைபட்டு சாகும் காலம் விரைவில் வரத்தான் போகிறது..

பெயரில்லா சொன்னது…

தமிழ்நாடு காங்கிரசை கழுவிக் கவிழ்த்துவிட்ட தில்லி காங்கிரசு

காந்தியும் காமராசரும் பெரியாரும் பங்கெடுத்த ஒரு மாபெரும் இயக்கம் பேராயக்கட்சி (காங்கிரசுக் கட்சி)! வெள்ளையருக்கு எதிரான இந்திய தேசிய இயக்கத்தில் பேராயக் கட்சியின் பங்களிப்பு, ஈகம் அளப்பரியது! ஆனால் இந்தியத் துணைக்கண்டம் விடுதலை பெற்று வெள்ளையர் வெளியேறியபோது, இந்தப் பேராயப் பேரியக்கதின் போக்கு கண்டு வெகுண்டெழுந்தவர்களும் வெளியேறியவர்களும் சகித்துக் கொண்டு காலம் தள்ளுபவர்களும் ஏராளம், ஏராளம்! காந்தியடிகளே வெந்து நொந்து சொன்னார், “காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும்” என்று! இன்றைக்கு மணிசங்கர ஐயர்வாளுக்கு செருப்படியும் கல்வீச்சும், தங்கபாலுவின் ஓராயிரம் உருவப்பொம்மைகளை மக்கள் ஆங்காங்கே எரிப்பதும், காங்கிரசுக் கொடிக் கம்பங்களை வீழ்த்துவதும் அன்றாட நடைமுறையாகி விட்டது.

காங்கிரஸ் தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. மொத்தத் தமிழர்களின் எதிர்ப்பை வகை தொகையில்லாமல் சம்பாதித்துவிட்டது.

காங்கிரசுத் தொண்டரான தியாகி இரவிச்சந்திரன் தீக்குளித்து, உயிரை ஈகம் செய்து காங்கிரசுக் கட்சி செய்யும் துரோகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார்.

தனிநபர்களின் தன்நலத்திற்காகவும் ஒரு சிலரின் பதவிப் பற்றிற்காகவும் ஈகிகள் சிந்திய ரத்தமும் வியர்வையும் அன்றிலிருந்து இன்றுவரை மதிப்பிழந்து போனதுதான் உண்மை.

வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் இந்தியா ஒரு தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்பதை மறுத்து தேசிய இனங்களின் கொட்டடியாகவே இதை மாற்றிவிட்டனர்.

காசுமீரத்தின் வரலாற்றை நாம் ஒரு முறை வாசித்துப் பார்தாலேயே இது புரியும். அவர்கள் பாக்கிசுத்தானுடனோ இந்தியாவுடனோ இணைய விரும்பாது தனியொரு நாடாகவே இருக்க விரும்பினார்கள்.

ஆனால், நேருவோ காசுமீரத்துக்காரர்! காசுமீர் போய்விட்டால் நேரு எப்படி தலைமையமைச்சராக இயலும்? நேருவிற்குப் பின் நேருவின் குடும்பத்தாரின் கொற்றமே கோலோச்சியது.. இன்றைக்கு பேராயப் பேரியக்கத்தையே எப்படி மாற்றிவிட்டார்கள் என்றால், பிரியங்காவிற்குக் குழந்தை பிறந்துவிட்டதா? என்று ஏங்கித் தவிக்கும் ஒரு மட்டமான கொத்தடிமைக் கூட்டமாகவே அதை மாற்றிவிட்டார்கள். காசுமீர விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க இன்று கோடிக்கணக்கான பணத்தை நாள்தோறும் கொட்டி நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பெரியதொரு முட்டுக்கட்டையை நாம் போட்டு வைத்துள்ளோம்! இந்திராகாந்தி!

பின்னர் இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் நாட்டின் தலைமையமைச்சர் ஆனார். அவருக்கு முன்பாக திரு. இலால் பகதூர் சாஸ்த்திரி அவர்கள் சில மாதங்கள் தலைமையமைச்சராக இருந்தார். மிக எளிமையானவர். அவருடைய மரணம் குறித்து இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இருக்கின்றன. தாஷ்கண்ட் சென்ற அவர் எப்படி மரணத்தைச் சந்தித்தார்? என்பது குறித்து இன்னும் குழப்பம் நிலவுகிறது. பின்னர் நடந்த நகர்வாலாப் படுகொலை! தேர்தல் செலவுகளுக்காக பணம் சேர்க்கும் இழிபோக்கிற்கு போட்ட பிள்ளையார் சுழி அது. திருமதி இந்திரா காந்தி அவர்களின் மரணத்தையொட்டி தில்லியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நடந்த சீக்கியர் படுகொலை, கொள்ளை, கற்பழிப்புகள் இந்தப் பேரியக்கம் எப்படி ஓர் உதிரி நிலைக்கு உருமாறியிருக்கிறது என்பதை மெய்ப்பித்தது! மத்திய அமைச்சராகயிருந்த செகதீசு டைட்லர் போன்ற காங்கிரசுத் தலைவர்கள் நடுத்தெருவில் நின்றுகொண்டு அப்பாவிச் சீக்கியர்களை கொன்றொழித்த கொடுமைகளுக்கு வழிநடத்தினார்கள் என்ற உண்மை உள்ளத்தை உலுக்குகிறது. குசராத் படுகொலைகள், ஒரிசாப் படுகொலைகள் என்று சங்கப்பரிவார அமைப்புகளின் படுபாதகச் செயல்களைக் குறித்து நாம் ஒப்பாரி வைக்கிறோம். பேராயப் பேரியக்கம் எந்த வகையிலாவது இதிலிருந்து மாறுபட்டதா? என்று சிந்தியுங்களேன்.

இந்திராகாந்தி அவர்கள் இருக்கும்போதே அவருடைய சின்ன மகன் சஞ்சய் காந்தி அவர் விருப்பம்போல நடந்துகொண்டார். கட்டாயக் குடும்பக் கட்டுப்பாடு போன்ற குதர்க்கமான செயற்பாடுகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு காட்டுத் தர்பாரே நடத்தினார். அவரும் ஐயத்திற்கிடமான விதத்தில்தான் ஒரு வானூர்தி நேர்ச்சியில் காலமானார். அதிலும் சந்திராசாமியின் தொடர்பு என்ன? என்பது அவிழ்க்க முடியாத முடிச்சாகவே இன்னும் இருக்கிறது.

இராசீவ் காந்தி

பின்னர் இராசீவ் காந்தி வந்தார். “இழுத்து வரப்பட்டார்!” என்றே வைத்துக் கொள்ளுங்கள். இத்தாலியப் பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டவர். நாட்டின் பாதுகாப்பிற்காக வாங்கப்பட்ட பீரங்கிப் பேர ஊழலில் கோடிக்கணக்கான இந்தியர்களின் வரிப்பணம் குவத்ரோச்சி என்கிற இத்தாலியரின் கைகளில் விழுந்துவிட்டதற்கும் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கும் என்ன தொடர்பு என்று ஒரு நடுநலைமைவாதியாக நின்று சிந்தியுங்களேன்.

பெயரில்லா சொன்னது…

தமிழர்களும் பேராயக்கட்சியும்

அந்தக் காலத்திலிருந்து இந்தக்காலம் வரை வடவர்களுக்குக் குற்றேவல் செய்யும் ஓர் அமைப்பாகவே தமிழகப் பேராயக்கட்சி இருந்திருக்கிறது. காமராசரைக் கிங்மேக்கர் என்று சொன்னார்களே தவிர கிங் ஆக்கவில்லை. மூப்பனாருக்கும் வாய்ப்பு வந்தது. அதுவும் தேவகவுடாவிற்கு தாரை வார்க்கப்பட்டதே தவிர தமிழர் ஒருவரை வரவிடக்கூடாது என்பதில் (கருணாநிதி உட்பட) தமிழரல்லாதவர்கள் அனைவரும் கவனமாகவே இருந்தார்கள்.

திரு. இராசீவ் காந்தி அவர்கள் இலங்கைக்கு இந்திப் படைகளை அனுப்பி அங்கு ஏறத்தாழ பத்தாயிரம் தமிழர்களைப் படுகொலை செய்ததை நாம் எந்த வகையிலாவது ஞாயப்படுத்துகிறோமா? அந்த அமைதிப் படைகள் 31 மாதங்கள் அங்கு அட்டகாசம் செய்துவிட்டுத் தலை குனிந்து இந்தியா திரும்பியபோது இன்றைய முதல்வரான கருணாநிதி அன்றைக்கும் முதல்வராக இருந்தார். படைகள் சென்னை வந்திறங்கியபோது அவர்களை வரவேற்க மறுத்துவிட்டார்! எவ்வளவுதான் நாம் மூடி மறைத்தாலும், அடக்கி அமுக்கினாலும் உண்மைகள் சாகாது என்பதற்குத் தமிழீழமும் தமிழகமும் இன்று கிளர்ந்தெழுவதிலிருந்தே தெரிகிறது.

இராசீவ் காந்தி அவர்களின் கொலையை நாம் ஞாயப்படுத்தவில்லை! ஆனால், ஓர் உண்மைக் காங்கிரசுத் தொண்டனாகச் சிந்தியுங்கள். அவரது படுகொலை குறித்து இன்னும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் இருக்கின்றன. பல ஊடகங்களும், தலைவர்களும் நாயாய் பேயாய் கத்தினாலும் அந்த உண்மைகள் குறித்து ஆய்ந்தறிய யாரும் முன்வராதது ஏன்?

அவிழாத முடிச்சுகள்!

1. கொலையில் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி, நரசிம்மராவு போன்றவர்களின் தொடர்பு என்ன?

2. ஒற்றைக்கண் சிவராசனின் தாயார் ஒரு சிங்களவர் என்பதும் கொலையில் ஈடுபட்டவர்கள் புலிகள் இயக்கத்திலிருந்து விலகியவர்கள் என்பதும் உண்மையில்லையா? ஏற்கெனவே ஒரு சிங்கள படைவீரன் துப்பாக்கியால் அடித்து இராசீவைக் கொலை செய்ய முயன்றது உங்களுக்குத் தெரியாதா? அவன் இன்று சிங்கள இனவெறிக் கட்சி ஒன்று நடத்திக் கொண்டிருக்கிறான் என்பது உண்மையில்லையா?

3. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தவறான புரிதலின் அடிப்படையில், தான் தவறான முடிவு எடுத்துவிட்டதாகவும் அதை தான் பதவியேற்றதும் சரி செய்வதாகவும் மறைந்த புலிகளின் தலைவர் கிட்டு வழியாக பிரபாகரனுக்குச் செய்தி அனுப்பிய திரு. இராசீவை புலிகள் கொலை செய்து மாபெரும் எதிர்ப்பைச் சந்தித்திருப்பார்களா?

4. சிரிபெரும்பத்தூர் நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட்டது முதல் சம்பவம் நடந்த இடத்திலிருந்து காங்கிரசுத் தலைவர்கள் விலகிக் கொண்டதும், எந்த ஒரு காங்கிரசுத் தலைவரும் அதில் சாகவில்லை போன்ற செய்திகளெல்லாம் நமக்குச் சொல்வது என்ன? அதே வேளையில் இராசீவ் கொலையாளிகள் காங்கிரசுத் தலைவர் மரகதம் சந்திரசேகர் வீட்டில் தங்கியிருந்ததும் உண்மையில்லையா?

5. இப்படி நூற்றுக் கணக்கான கேள்விகள் விடை காணமுடியாமல் தத்தளிக்கும் நேரத்தில் ஓர் அவசியமான வினாவையும் நாம் எழுப்புவது நல்லது. கொலையின் மூலம் ஆதாயம் அடைந்தது யார்? இழப்புகளை சந்தித்தது யார்? பதவியும் ஆட்சியும் யாருக்குக் கிடைத்தது? தடையும் பின்னடைவும் யாருக்கு ஏற்பட்டது? இதையெல்லாம் கணக்குப் போடாமலா காய்கள் நகர்த்தப்பட்டன?

இன்றைக்கு ஒட்டு மொத்தத் தமிழினமும் ஈழத்தில் நடக்கும் போராட்டத்திற்குப் பின்னணியில் திரண்டு நிற்கிறது. ஆனால், காங்கிரசுக் கட்சி, தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமை ஆகியனவே இன்று எதிர்ப்பாகவும் இரண்டகம் செய்து கொண்டும் குறுக்குச்சால் ஓட்டிக்கொண்டும் நிற்கின்றன. இந்த எதிர்ப்பிற்கும் இரண்டகத்திற்கும் புலிகளைக் காரணம் காட்டுகின்றனர். தன்னுடைய போராளிகளில் 25000 பேரின் உயிரை ஈகம் செய்தவர்களை வன்முறையாளர்கள் என்று அறிவித்துக் கொண்டு ஒரு இலக்கம் அப்பாவித் தமிழர்களைக் காவு கொண்ட சிங்களப்படைகளோடு இந்தியா கொஞ்சிக் குலவி நம் வரிப்பணத்தில் ஆயுதங்கள் கொடுக்கிறது. எந்த ஊர் ஞாயம் இது?

ஈழப் போராட்டம் வெறும் ஈழத் தமிழரின் போராட்டம் என்றோ அல்லது விடுதலைப் புலிகளின் போராட்டம் என்றோ குறுக்கிப் பார்த்த மடமை என்றோ ஒழிந்து விட்டது. தமிழர் என்கிற மூத்த இனத்திற்கு உலகெங்கும் அடி, உதை, புறக்கணிப்பு என்று பன்னெடுங்காலமாகவே நடந்து வருகிறது.

பர்மாவிலிருந்து விரட்டப்பட்டோம். மலேசியாவில் இன்றும் அடி உதை படுகிறோம். சிங்கப்பூரில் அடக்குமுறைகளைச் சந்திக்கிறோம், கர்நாடகத்தில் கொல்லப்பட்டோம், விரட்டப்பட்டோம், மணிப்பூரிலிருந்து விரட்டப்பட்டோம், மும்பையிலிருந்து விரட்டப்பட்டோம், தமிழகத்திற்குள்ளும் ஆட்சியிழந்து அடிமையினமாக இருக்கிறோம், ஈழத்திலும் இலங்கையிலும் கடுமையான சிகல்களை 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சந்தித்து வருகிறோம்.

பெயரில்லா சொன்னது…

சிங்களர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திய கொடுமைகளையும் கொலைகளையும் யாரும் அறயாதிருக்கமாட்டீர்கள். ஒரு லட்சம் தமிழர்களை படுபயங்கரமாக அவர்கள் கொன்றொழித்திருக்கிறார்கள், கற்பழித்திருக்கிறார்கள், கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி நாடு நகரங்களைத் தரை மட்டமாக்கியிருக்கிறார்கள். நோயாளிகளைக் கொல்கிறார்கள், குழந்தைகளைக் கொல்கிறார்கள்! மறுபுறத்தில் இராணுவத்தோடும் துரோகக் கும்பல்களோடும் மட்டுமே விடுதலைப்புலிகள் போராடுகிறார்கள். யார் வன்முறையாளர்கள்? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தந்தை செல்வா போன்றவர்கள் அறவழியில்தான் போராடினார்கள். ஆனாலும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நசுக்குதலும் கொலைகளும் இன அழிப்பும்தான் தமிழர்களுக்குப் பரிசாகக் கிடைத்தது. உலகிலுள்ள மற்ற தமிழர்கள் அடக்குமுறையைச் சந்தித்தபோது அடங்கிப் போனார்கள். ஈழத் தமிழர் மட்டும் 25 ஆண்டுகள் பொறுமை காத்த பிறகு திருப்பி அடிக்கத் தொடங்கினார்கள், தனி நாடு கேட்டார்கள். அவர்கள் பிழைக்கப் போனவர்கள் இல்லையே! வந்தாரை வாழ வைத்தார்கள்.

சிங்களர்களை வரவேற்று வாழ விட்டதும், ஆள விட்டதும் தமிழர்கள்தானே! அவர்களுக்கென்று நாடு இருந்ததே! அதை இழந்த பின்னரும் குடியாட்சியை மதித்து அமைதியாத்தானே வாழ்ந்தார்கள்! காட்டாட்சி கட்டவிழ்த்துவிடப்பட்ட பிறகே அவர்கள் போரிடத் தள்ளப்பட்டார்கள். இழந்த அவர்களுடைய சொந்த நாட்டை அவர்கள் மீட்டு எடுக்க முயல்வது தவறா? யூதர்களும் பாலத்தீனியரும் வங்காளிகளும் தத்தமது நாட்டை மீட்டெடுத்தது சரி என்றால் ஈழத் தமிழரின் தனி நாட்டுப் போராட்டம் மட்டும் எப்படித் தவறாகும்? ஏன் தில்லிக்குக் கசக்கிறது?

நாம் இந்திய நாட்டுக்குள் இருந்தாலும் பல தேசிய இனங்களாக இருக்கிறோம். காவிரிப் பிரச்சனை என்று வந்துவிட்டால் நாடு, கட்சி, சாதி என்று எதையும் பாராமல் கன்னடர்கள் கன்னடர்களாத்தானே நிற்கிறார்கள். தமிழகத்திற்குக் காவிரியின் மீது என்ன உரிமை இருந்தாலும் அவர்கள் கிஞ்சித்தும் அவைகளை நினைப்பதில்லை, மதிப்பதில்லை என்பதைப் பார்க்கிறீர்களா?

மலையாளிகளைப் பாருங்கள். தமிழ்நாட்டோடு ஒரு பிரச்சினை என்றால் கட்சித் திரைகளைக் கழற்றிவிட்டு மலையாளியாக ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

மராத்தியத்தில் அவர்களின் தேசிய உணர்வைப் பாருங்கள்! தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்கு. 1956ல் தேவிகுளம் பீர்மேட்டை நாம் கேரளாவிடம் இழந்தபோது, காமராசர்கூட, “மேடு போனால் என்ன? பள்ளம் வந்தால் என்ன? எல்லாம் இந்தியாவிற்குள்தானே இருக்கிறது” என்று விரிந்த மனதோடு பேசினார். இன்றும் காங்கிரசாரில் பலர் அப்படியே இருக்கிறார்கள். வடவர்களும் வங்காளிகளும் இதை நல்ல இளிச்சவாய்த்தனம் என்றே நினைக்கிறார்கள். தில்லியை ஆளும் பிராமணர்களுக்கு இந்தியா என்கிற கொட்டடி வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

மக்களுக்குத் தேசிய ஓர்மை வந்துவிடக்கூடாது என்று கருதுகிறார்கள். காரணம், அது நேர்ந்தால் அவர்கள் தலையில் அது இடியாய் இறங்கிவிடும். தேசியங்கள் முதன்மைப்பட்டுவிட்டால் பிராமணனைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இத் துணைக்கண்டத்தில் மண்ணுரிமை இருக்கும். அவர்களுக்கு இருக்காது. இதுதான் அவர்களை வாட்டும் நெருப்பு. இதை அறியாது இன்று பலிக்கடா ஆக்கப்பட்டிருப்பவர்கள் அப்பாவித் தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தொண்டர்கள்.

காவிரி பாயும் டெல்டா பகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு மணிசங்கர ஐயர்வாள்! 1999ல் சென்னையில் ஒரு கூட்டத்தில் காவிரி பற்றி தமிழ்நாட்டு ஞாயங்களை அழுத்தமாகப் பேசினார். உடனே, இதையே நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என்று சொன்னபோது, “நான் காங்கிரசுக்காரன், கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி நடக்கிறது. நான் எப்படி பேச முடியும்? அ.தி.மு.க.வினரைப் பேசச் சொல்லுங்கள்!” என்று சொல்லிக் கைகழுவி விட்டார். ஆக, இவர்களைப் போன்ற தலைவர்களுக்கு பதவிக்காக வாக்கு தேடும்போதுமட்டும் தமிழ்நாடு வேண்டும், தமிழர்கள் வேண்டும்! பின்னர் இந்தி தேசியப் பிறங்கடைகளாக மாறிவிடுவார்கள்.

ஆனால், கர்நாடகக் காங்கிரசோ, கேரளக் காங்கிரசோ, ஆந்திரக் காங்கிரசோ இப்படியா நடக்கிறது? தமிழ்நாடு காங்கிரசு மட்டும் அடிமைக் காங்கிரசாக ஆக்கப்பட்டு கிடக்கிறது! அடக்கித்தான் வாசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது! தமிழர்களாக இருந்தாலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவியாலா நிலைக்கு அவர்கள் குரல் நெரிக்கப்படுகிறது! வேறு வழியின்றி ஈகி இரவிச்சந்திரன் போன்றவர்கள் உயிரை மாய்க்கும் அளவிற்குப் போயிருக்கிறது!

தமிழ்நாட்டுக் காங்கிரசாரை தில்லிக் காங்கிரசார் முற்றாகக் கைகழுவி விட்டார்கள். இதை இப்போதாவது தமிழக காங்கிரசார் உணர்ந்து கொண்டு தங்கள் அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுகிறோம். காமராசர், மூப்பனார் போன்றவர்களின் காலத்தில் தமிழக காங்கிரசாரை தில்லி புறக்கணித்தது என்பது ஒரு விதம். காரணம், அப்போதும்கூட தில்லி நினைத்தது, “தமிழகத்தில் காங்கிரசு உயிர்த்தெழ ஒரு வாய்ப்பிருக்கலாம்” என்று! ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு மாற்றாக பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க., ச.ம.க., போன்ற கட்சிகள் வந்திருக்கின்றனவே தவிர காங்கிரசு துளிர்த்தெழுவதற்கான வாய்ப்பே இல்லை என்பது புலனாகிவிட்டது. அடுத்து தமிழ்நாடு காங்கிரசுக்குள் இருக்கும் பூசல்களும் பிரிவுகளும் எண்ணற்றவை. அவைகளைச் சரிக்கட்டிக் கொண்டுவருவது என்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பது போல என்றாகிவிட்டது. இவ்விரு காரணங்களும் தில்லி காங்கிரசுக்குத் தெரியாமல் இருக்குமா?

தமிழ்நாடு காங்கிரசில் இருக்கும் தமிழர்களின் உணர்வைக் குப்பையென நினைத்து தில்லிக் காங்கிரசு அதிலும் குறிப்பாக சோனியா அவர்கள் எடுத்த ஈழ நிலைப்பாட்டின் பின்னணி இதுதான். கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆட்சியேறும் வாய்ப்பு இருப்பதால் கன்னடர்களுக்கு எதிராக தில்லி ஒருக்காலமும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்காது. காவிரிப் பிரச்சனையில் எடுத்திருக்கிறதா? காவிரிக் கலவரம் பற்றி எடுத்திருக்கிறதா? ஆனால், தமிழகத்தில் நம்பிக்கையே இல்லாத நிலையில் முற்றாகக் கை கழுவி விட்டது தில்லிக் காங்கிரசு!

உலகில் வாழும் பத்தரைக் கோடித் தமிழ் மக்களும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த தமிழர்கள் மட்டும் ஏன் விலகி நிற்க வேண்டும்? உள்ளத்தில் கொதிப்பையும் குமுறலையும் அடக்கிக் கொண்டு ஏன் தமிழர்களிடமிருந்து இவர்கள் விலகி நிற்க வேண்டும்? தமிழ்நாட்டு காங்கிரசுத் தலைமைகூட தமிழர்களிடமா இருக்கிறது? ஈ.வி.கே.எசு. இளங்கோவன், தங்கபாலு, சுதர்சனம், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், ஞான தேசிகன், மணிசங்கரஐயர் போன்ற தமிழரல்லாதவர்கள் வைத்ததுதானே அங்கு சட்டமாகயிருக்கிறது! வாசன் எங்கே? குமரி அனந்தன் எங்கே? சிதம்பரம் எங்கே? பீட்டர் அல்போன்சு எங்கே? பதவிகள் சில கொடுத்து வாயடைத்து வைத்திருக்கிறார்கள். கிருஷ்ணசாமியை மொத்தமாக ஓரம் கட்டிவிட்டார்கள்.

தில்லிக் காங்கிரசு தமிழ்நாடு காங்கிரசை குப்பை என்று கருதிவிட்டால் அந்தக் குப்பைக்குள்ளும் வந்தேறிகளின் கொட்டம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.

மானமுள்ள தமிழர்கள் காங்கிரசை விட்டு இன்றே துணிவுடன் விலகுவது தமிழினத்திற்கு நீங்கள் செய்யும் மாபெரும் தொண்டாகும். தமிழர் கட்சிகள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளில் சேருங்கள். மூழ்கும் கப்பலைச் சுற்றி முன்னூறு கப்பல்கள் உங்களை வரவேற்க அணிவகுத்து நிற்க ஏனப்பா நீயும் மூழ்கித்தான் சாக வேண்டுமோ? ஏன், தெலுங்கர்கள் விலகினால்கூட விஜயகாந்து கட்சியில் சேரலாமே! நாம், நம் இனம், நம் நாடு என்று இணைவோம்!

அப்படித்தானே கன்னடரும், தெலுங்கரும், மலையாளியும் நிற்கிறார்கள்!

ஈனம் அழிப்போம்!
மானம் காப்போம்!
தமிழர்களம்
தமிழர்நாடு

பெயரில்லா சொன்னது…

தாய்ப்பாலும் விஷமாகும் விபரீதம்...

பெண்களின் எதிரி எண்டோசல்ஃபான் !

ஆர்.குமரேசன்

''ம்... இந்த மூட்டுவலி எங்கிருந்துதான் வந்துச்சோ தெரியலையே?'’

''அதென்னமோ தெரியல... பிரெஸ்ட் கேன்சர்ங்கறாங்க, கர்ப்பப்பை கேன் சர்ங்கறாங்க... எங்க காலத்துலயெல் லாம் இதைக் கேள்விப்பட்டதே இல்லை.'

''இப்பல்லாம் குழந்தை இல்லாதவங்க ளோட எண்ணிக்கை பெருகிக்கிட்டே இருக்கு. அதுக்குனே ஸ்பெஷல் ஆஸ்பத் திரிங்களும் பெருகிகிட்டே இருக்கு!’'

- நமக்கு ஏற்படும் நோய்கள் ஒவ்வொன்றையும் பற்றி, இப்படி கவலையோடு விவாதிக்கும் நாம், அவற்றுக்கெல்லாம் ஏதாவதொரு காரணத்தைக் கற்பித்துக் கொள்கிறோம். அல்லது கற்பிக்கப்படுகிறோம். கடைசியில், ''ம்... எல்லா கலிகாலம்!'' என்றபடி விஷயத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

ஆனால்... ''எல்லாம் எண்டோசல்ஃபான் காலம்'' என்று சொல்லி அதிர வைக்கிறார்கள் டாக்டர்கள் சிலர்.

''ஆம், விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் விஷம்தான் நிறைந்திருக் கிறது. அந்த விஷத்தன்மை, விளைபொருட்களில் கலந்து, அவை உணவுப்பொருளாக வடிவெடுத்து நம் உடலுக்குள் புகும்போது, விஷமும் கூடவே நுழைகிறது. அது, புதிது புதிதாக நோய்களை உற்பத்தி செய்து, மக்களை நடைபிணங்களாக்கிக் கொண்டிருக்கிறது'' என்பதுதான் அவர்கள் தரும் ஆராய்ச்சி முடிவு!

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அரசாங்க முந்திரித் தோட்டங்களில் ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது. விளைவு, அங்கே உள்ள பல கிராமங்களில் பெரும்பாலான குழந்தைகள் கை, கால் ஊனத்துடனும், உள் உறுப்புகளில் பல பிரச்னைகளுடனும் பிறக்க ஆரம்பித்தன. இதுதான்... எண்டோசல்ஃபான் பயங்கரத்துக்கான முதல் அபாய மணி!

'' 'இது எங்கோ ஒரு மூலையில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிதானே..?’ என்று இந்தப் பிரச்னை யைக் கடப்பவர்களுக்கு... குறிப்பாக, பெண் களுக்கு இதைப் பற்றிய விழிப்பு உணர்வு சென்றடைய வேண்டும். காய்கறிகள், பால், இறைச்சி, அரிசி என நம் வீட்டில் பயன்படுத்தும் ஏதாவது ஒரு உணவுப் பொருள் வாயிலாக, இந்த எண்டோசல்ஃபான் நம் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும் ஒடுக்கிக் கொண்டிருக்கலாம்'' என்று எச்சரிக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது அசீல். இவர், எண்டோசல்ஃபான் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தி, விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருபவர்.

பெயரில்லா சொன்னது…

''2002-ம் ஆண்டில் டென்மார்க், ஸ்பெயின் நாடுகளில் உள்ள பெண்களின் தாய்ப்பாலில் எண்டோசல்ஃபான் தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரணம், இறக்குமதி செய்யப்பட்ட உணவுகள்தான். இப்படி எண்டோசல்ஃபானை அதிகமாகப் பயன்படுத்தாத இந்த நாடுகளிலேயே இந்தளவுக்குப் பாதிப்பு என்றால், உலகளவில் அதன் பயன்பாட்டில் முதலிடத்தில் இருக்கும் நம் இந்திய மக்களுக்கு, என்னவெல்லாம் பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைக்கவே பதைபதைக் கிறது. இந்தியாவிலும் ஹரியானா, ஒரிஸ்ஸா மாநிலங் களில் உணவுப் பொருட்களில் எண்டோசல்ஃபான் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது'' என்று சொல்லும் அசீல்,

''இது, பெண்களுக்குத்தான் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மார்பகப் புற்று நோய், கருக்கலைதல், குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை, தோல் நோய்கள்... என பட்டியல் நீளமானது. கர்ப்பப்பையை பாதிப்பதால், கருவுற்றிருக்கும்போதே எண்டோசல்ஃபான் பாதிப்புக்கு ஆளாகிவிடுகிறது சிசு. தாய்ப்பாலிலும் கலந்துவிட்டதால், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், மூளை வளர்ச்சி இல்லாமை, சிறிய வயதிலேயே கண்ணாடி அணிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. வயதானவர்களுக்கு மூட்டுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவதோடு, ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது'' என்று சொல்லி கலங்க வைத்தார்.

உலகில் பல நாடுகளிலும் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் அரசாங்கத்தின் ஆதரவோடு அதன் பயன்பாடு அதிகரித்தபடியே இருக்கிறது. இந்நிலையில், கேரளத்தின் 'ஜனநாயக வாலிபர் சங்க' பிரதிநிதிகள், இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்ல... தற்போது, தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு இடைக்கால தடைவிதிக்கப் பட்டிருக்கிறது.

'சரி, இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா?’ என்று மதுரை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணரான டாக்டர் சௌந்திரபாண்டியனிடம் கேட்டபோது,

''காய்கறிகள், பழங்கள், கீரைகள் என எல்லாவற்றையும் தண்ணீரில் நன்கு கழுவி பயன்படுத்துவது நல்லது. அதேசமயம், இது ஓரளவுக்குத்தான் நம்மைக் காப் பாற்றும். விளைபொருட்களின் உள்ளே ஊடுருவியிருக்கும் விஷத்தன்மையை இதன் மூலம் அகற்ற முடியாதே...'' என்றவர்,

''முடிந்தவரை இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருட்களாகத் தேடிப்பிடித்து வாங்கிப் பயன்படுத்துவது நல்லது'' என்று எதார்த்த நிலையை எடுத்து வைத்தார்.

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

வளமும் நலமும் பெற 2012 வருட புத்தாண்டு வாழ்த்துகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)