எல்லோர்க்கும் சமகல்வி என்னும் எட்டாக்கனி!!!

ருமை நண்பர்களே!!!
மச்சீர் கல்வி முறையில் அச்சடிக்கப்பட்ட பாடபுத்தகங்களில் தகுந்த வல்லுனர் குழுவைக் கொண்டு வேண்டிய மாற்றங்கள் செய்த பின் , அடுத்த கல்விஆண்டு முதல் புதுப்பொலிவுடன் புழக்கத்தில் விடப்போவதாகவும்,இந்த ஆண்டு பழைய பாடதிட்டமே தொடரும், என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இந்த முடிவு சரியா?!!!

ப்பாட புத்தகங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு சொல்லப்படும் காரணம் என்னவென்று பார்ப்போம்!!!அவை கருணாநிதியின் துதி பாடுகின்றனவாம், பாடட்டுமே!!!அதை மட்டும் கிழித்து எறிந்தாலோ கேன்சல்டு என்று சிகப்பு ரப்பர் ஸ்டாம்ப் கொண்டு ஸ்கோர் செய்தாலோ அல்லது பக்கங்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டிவிட்டாலோ போதாதா?!!! அதில் அசிங்கமாக துருத்திக்கொண்டிருக்கும் கருணாநிதியின் சகிக்கமுடியாத கவிதைகளுக்கும்,வெட்டிச்செலவு செம்மொழி மாநாட்டு கட்டுரைகளுக்கும் பதிலாக, ஜால்ரா போடாத நல்ல கல்வித்துறை வல்லுனர் குழு   பரிந்துரைக்கும், பாடங்களின் பகுதிகளை இணைத்தோ?அல்லது தனி இணைப்பாகவோ தந்து விடலாமே?!!!

ப்படி 1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஏழு கோடி புத்தகங்கள் அச்சடிக்க     80 கோடி ரூபாய் செலவிட்டு. அச்சு காகிதத்திற்கு மட்டும் 100 கோடி ரூபாய் செலவிட்டு. மேலும், பாடப் புத்தக வல்லுனர் குழுவினருக்கு சம்பளம், புத்தக வினியோகச் செலவு என பல வகைகளில் சுமார் 500 கோடி ரூபாய் செலவழித்த பின்னர்  .இன்றைய தேதியில் சுமார்  85 சதம் பாடபுத்தகங்கள் அச்சடித்த நிலையில் அவற்றை செல்லவே செல்லாது!!! ,என்று கூறி மீண்டும் பாட புத்தகம் அவசரகதியில் அச்சடிக்க டெண்டர் விட்டிருப்பது ,எதைக்காட்டுகிறது?!!!

முதல்வரின் இந்த  அறிவிப்பைக் கேட்ட மறுகனமே ஏழை மக்கள், அடடா!!! விக்கலை நிறுத்த விஷத்தைப் போய் அருந்தி விட்டோமே?!!! என்று நினைத்து வேதனைப்படத் துவங்கியிருப்பர் என்றால் மிகையில்லை, மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகளாகப் பெற்ற ஒரு முதல்வருக்கு இது அழகா?!!!, பகாசுர பணவெறி கொண்ட தனியார்  பள்ளிகளின் நிர்வாகங்களை திருப்திபடுத்த மட்டுமே மேற்கொண்ட நடவடிக்கையாக இதைப்பார்க்க துவங்கிவிட்டனர். முதல்வருக்கு எதையாவது மாற்ற வேண்டுமானால் புத்தாண்டை மீண்டும் சித்திரை 1க்கே மாற்றுங்கள், அதை யாருமே குறை சொல்லப்போவதில்லை, திமுகவின் முன்னாள் கொலைகார அமைச்சர்களின் மீதான, எல்லா வழக்குகளையும் தூசுதட்டி கடும் நடவடிக்கை எடுங்கள், அவர்களின் சொத்துக்களை சட்டத்துக்குட்பட்ட அல்லது உட்படாத வழிகளில் பறிமுதல் செய்யுங்கள், மக்கள் யாருமே அதை  குறை சொல்லப்போவதில்லை, இன்னும் போதவில்லையா?!!! கேபிள்  டிவியை நாட்டுடைமையாக்குங்கள். சில மாதங்களில் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் முதல்வர் எடுக்கும் இப்படிப்பட்ட அவசர முடிவுகள், அவருக்கே பாதகமாக அமையும் என்பது திண்ணம்.

முதல்வரின் இந்த முடிவு, யாரை பாதித்ததோ இல்லையோ?!!!! ஒரு பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளியில்  ஐந்தாம் வகுப்பு படிக்கும் கூலித்தொழிலாளியின்  மகனின், மகளின் கனவை, நிர்மூலமாக தகர்த்திருக்கிறது, அந்த ஏழை மாணவர்களின் ”எல்லா குழந்தைகளுக்கும் சமமான, ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி” என்னும் ஆர்வத்தில், நம்பிக்கை ஒளியில், மண்ணை அள்ளிப்போட்டிருக்கிறது.

சென்ற மாதம் ஐந்தாம் வகுப்பு ஆண்டுத் தேர்வை பஞ்சாயத்து ஒன்றிய துவக்கப் பள்ளியில் எழுதிய மாணவன், இவ்வருடம் ஆறாம் வகுப்பை, மாநில அரசு பள்ளியில் , ஆங்கில வழிக் கல்வியில் சேர்ந்து படித்திருந்தாலே [நானும் அப்படி படித்தவன் தான்], மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்கும் அதே பாடத்தை குறைந்த கட்டணத்தில் அவன் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் படித்திருப்பான், ஏழைப்பெற்றோருக்கு அதைவிட பெருமையே இருக்க முடியாது, இதன் மூலம் பிள்ளைகளை பள்ளியில் படிக்கவைக்க முன்வராத கூலித்தொழிலாளிகளுக்கும் அந்த ஆர்வம் வந்திருக்கும். 

எல்லோர்க்கும் சமகல்வி!!! என்ன ஒரு மாற்றத்தை உண்டாக்கக்கூடிய  மந்திரச்சொல் இது?!!! அதை மனதாற அனுபவித்தவர்களுக்கு தான் அந்த மகிழ்ச்சியும், சமமான கல்வி  உனக்கு  இல்லை என்கையில் ஏற்படும் வலியையும் ஒருங்கே உணரமுடியும், என்னால் அதை உணர முடிகிறது.  இது முதல்வர் ஜெயலலிதாவின்   அவசர முடிவே அன்றி வேறொன்றுமில்லை, பணம் இல்லாதவனுக்கு சாதாரண பண்டம் பணம் இருப்பவனுக்கு  வேறொரு தரமான பண்டம் என்றால், இது என்ன ஜனநாயக நாடு?!!!வெளியே சொன்னால் வெட்க கேடு!!!சமச்சீர் கல்வி மூலம் எல்லா மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்திருக்கவேண்டிய மாநிலம் தமிழகம்.அதை கருணாநிதிக்கு உதித்த யோசனையாயிற்றே!!! என்று புறந்தள்ளுவதா?!!!

ந்த முடிவை ஒரே வாரத்தில் இரண்டாம் தவணையாக  தரப்பட்ட கசப்பு மருந்தாகவே மக்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். முதல்வரின் மேலான மறுபரிசீலனைக்கு தமிழக ஏழை மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமமான ஏற்றத்தாழ்வில்லாத கல்வியை வெறுப்பவர்கள் பற்றி என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை,என்ன மனிதர்கள் அவர்கள்?, மொத்தத்தில் அவர்களை மனதால் ஊனமடைந்தவர்கள் என்பேன். [இவ்வார்த்தைக்கு என்னை மன்னிக்கவும்]. சமமான ஏற்றத்தாழ்வுகளில்லாத கல்வியே வலுவான வருங்கால தூண்களை உருவாக்கும்  என்பதை இங்கே ஆணித்தரமாக நான் பதிவு செய்கிறேன்.

மச்சீர் பாடத்திட்டத்தில் தப்பி பிழைத்த சிபிஎஸ்சி வழி பாடத்திட்டத்தையும் போராடி ஒருங்கிணைத்து சேர்க்க வேண்டும், மேலும் தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்கவேண்டும். அப்படி ஆக்காவிட்டால்,தமிழை எழுதவும் படிக்கவும் தெரியாத தற்குறி மாணவர்கள் உருவாக அது காரணமாகிவிடும் என்பதே   நல்ல குடிமகன்களின் கவலையாக உள்ளது.

ப்போதும் இப்போதும் பல பொறுப்பில்லாத பெற்றோர், சிபிஎஸ்சி  மற்றும் தனியார்பள்ளி பாடத்திட்டத்தில் தாய்மொழியான தமிழை மூன்றாம் மொழியாக கூட வைக்க முன் வருவதில்லை, அப்படி என்ன ஒரு தடித்தனம்?!!! இரண்டாம் மொழியாக இந்தியை தேர்வு செய்பவர்கள், மூன்றாம் மொழியாக ஃப்ரெஞ்சையோ அல்லது சமஸ்கிருதத்தியோ தேர்வு செய்கின்றனர், அப்படி அந்த இழவு இந்தியை கற்றே தீரவேண்டுமென்றால் தனியார் பள்ளிகளில் மூன்றாம் மொழி என்று ஒன்று இருக்கிறதே?!!! அதில் இந்தியை தேர்வு செய்ய என்ன கொள்ளை?!!! தாய்மொழியை எழுதவும் , படிக்கவும் தெரியாதவன் படித்தால் என்ன?!!! படிக்காவிட்டால்  தான் என்ன?!!!நான் இங்கே பிள்ளைகளை தமிழ் வழிக்கல்வியில் [தமிழ் மீடியம்] சேர்ந்து படிக்கவைக்கச் சொல்லவில்லை,என் பிள்ளையையும் நான் அப்படி செய்யவில்லை,என் குழந்தை ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் படிக்கிறாள். இதன் மூலம் ஒரு குழந்தைக்கு தாய்மொழியையும் அலுவல்மொழியையும் ஒருங்கே பயின்ற பலன் கிடைக்கும்.என் மகளின் பள்ளியில் அதே வகுப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர் ஹிந்தியையே தேர்வு செய்துள்ளனர்.அவர்களைத் தான் இங்கே வன்மையாக சாடுகிறேன்.இப்போது தெரியாது,நாளைய சமுதாயம் தாய்மொழொயில் ஒரு முக்கிய ஆவணத்தை படிக்கவோ எழுதவோ கூட துபாஷ் என்னும் மொழிபெயர்ப்பாளனை நாடவேண்டிய நிலை வரக்கூடாது என்னும் கவலைதான் அது.இப்படி ஹிந்தியை தேடிப்படிக்கிறார்களே? அதுவாவது  ஒழுங்கா என்றால் மனனம் செய்து படிக்கும் ஹிந்தி அது. அனாதை மொழியை படிக்கத்தான் இங்கே ஆவல் எழுகிறது. ஹிந்தியைப்பற்றி எழுதிவிட்டாலே பொங்கிவிடுவார்கள் பொசைகெட்டவர்கள்.

துபோன்ற பொறுப்பில்லாத பெற்றோரை தண்டிக்க ஆவண செய்யவேண்டும். அவர்கள் தான் ”நாம் தமிழர்கள் ” என்னும் இனமானமில்லாத இளைய சமுதாயம் வளர முக்கிய காரணியாக, அவமான உதாரணமாகத் திகழ்பவர்கள்.இன்றைய பல மாணவர்கள் தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதை நாகரீகமாக நினைக்க தொடங்கிவிட்டனர். என்ன ஒரு திமிர்?!!! அவர்களுக்கு எக்காலத்திலும் எந்த கல்விச்சலுகையும் வழங்கப்படக்கூடாது, அவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டம், கணக்கியல் என எந்த துறைசார் வல்லுனர் படிப்புக்கும் தகுதிபெற்றுவிட முடியாது என்னும் நிலையும் சட்டமும் வரவேண்டும், அந்த மாற்றத்தை படித்தவர்களாகிய புதிய தலைமுறையினர் முன்னின்று நடத்த வேண்டும்.அப்போது தான் அந்த கயவர்கள் திருந்துவார்கள்.இது நடக்குமா?!!  பார்ப்போம்!!!

ன்னதான் அடுத்த வருடம் முதல்  சமச்சீர் கல்வி தொடரும் என்றாலும்  ஏழைகளுக்கு சமச்சீர் கல்வி என்பது எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டது போன்றதோ? !!! என்னும் ஐயம் மனதினுள் ஆழமாக எழுகிறது.
=======0000=======

19 comments:

பாலசுந்தரம் சொன்னது…

சார் நச் கட்டுரை,ஏறவேண்டிய மண்டைல ஏறுனா சரி

செங்கோவி சொன்னது…

//விக்கலை நிறுத்த விஷத்தைப் போய் அருந்தி விட்டோமே?!!// ஹா..ஹா..நல்ல உவமை. முழுவதுமாக நிறுத்துவதாக அறிவிக்கவில்லையே..அந்த மட்டில் சந்தோசம் தான்.

பெயரில்லா சொன்னது…

மாணவர்களின் கல்வி நலன் கருதியும், பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே சீரான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும்

Lucky Limat லக்கி லிமட் சொன்னது…

/// பகாசுர பணவெறி கொண்ட தனியார் பள்ளிகளின் நிர்வாகங்களை திருப்திபடுத்த மட்டுமே மேற்கொண்ட நடவடிக்கையாக இதைப்பார்க்க துவங்கிவிட்டனர்.////

இது முற்றிலும் உண்மை.அப்படி தான் எண்ண தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

"இப்போது பல பொறுப்பில்லாத பெற்றோர், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தாய்மொழியான தமிழை மூன்றாம் மொழியாக கூட வைக்க முன்வருவதில்லை,அப்படி என்ன தடித்தனம்?!!! இரண்டாம் மொழியாக இந்தியை தேர்வு செய்பவர்கள், மூன்றாம் மொழியாக ஃப்ரெஞ்சையோ அல்லது சமஸ்கிருதத்தியோ தேர்வு செய்கின்றனர், அதுபோன்ற பொறுப்பில்லாத பெற்றோரை தண்டிக்க ஆவண செய்யவேண்டும். அவர்கள் தான் ”நாம் தமிழர்கள் ” என்னும் இனமானமில்லாத இளைய சமுதாயம் வளர முக்கிய காரணியாக, அவமான உதாரணமாகத் திகழ்பவர்கள். அவர்களுக்கு எக்காலத்திலும் கல்விச்சலுகை வழங்கப்படமாட்டாது, பொறியியல், மருத்துவம், சட்டம், கணக்கியல் என எந்த துறைசார் வல்லமை படிப்புக்கு தகுதிபெற முடியாது என்னும் நிலையும் சட்டமும் வரவேண்டும், அந்த மாற்றத்தை படித்தவர்களாகிய புதிய தலைமுறையினர் முன்னின்று நடத்த வேண்டும். நடக்குமா?!! பார்ப்போம்!!! "

Yesterday I met a young man in his early twenties & he's from down south Tamilnadu and was telling me how he's feeling left out everywhere among Indian crowd. He says that his roommates can all speak hindi, cricket club - all can speak hindi and went on and on. He said now he feels how much hindi is needed for him to communicate among his own countrymen and feels lonely all the time. It is a must to know hindi & english and other languages especially with globalization.

கருந்தேள் சொன்னது…

நண்பா.. சமச்சீர் கல்வி எல்லோருக்கும் என்ற கருத்தை நானும் ஆதரிக்கிறேன். ஆனால், இதுகுறித்து, வேறு தகவல்கள் எனக்கு இன்னமும் தெரியாது. இதுகுறித்து நிறையப்படிக்க வேண்டும். படித்தபின், மறுபடி இங்கே வருவேன்.

பெயரில்லா சொன்னது…

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் - அவர்
உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை - அவர்
எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும் - இந்தக்
கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன் - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகல் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு - அதை
எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் - இந்த
மானிடர் திருந்தப் பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார் - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ
ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

தெளிவாக விரிவாக சொல்லி இருக்கிறீர்கள் கீதப்ரியன். தனிப்பட்ட இரண்டு பேரின் ஈகோவில் பாதிக்கப் படுவது மாணவர்கள்தான். வருத்தமாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

மருத்துவம், இன்ஜினியரிங், விவசாயம், பாலிடெக்னிக் போன்ற தொழிற்கல்வி பயில அரசு கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை தங்களது முதலாவது நோக்கமாகக் கொண்டுள்ள பெற்றோர் பள்ளிப்படிப்புக்கு தங்களது கடைசி சாய்ஸ் ஆகவே அரசு பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிலை மாற அரசு பள்ளிகளும் தனியாருக்கு இணையாக செயல்பட மாணவர், பெற்றோர், ஆசிரியர், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

65 பள்ளிகளில் ஒரு பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி : தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் ஒரு மாவட்டக் கல்வி அதிகாரியும், முழு மாவட்டத்திற்கும் சேர்த்து ஒருமுதன்மை கல்வி அதிகாரியும் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 138 தனியார் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளும், 65 அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன. பள்ளி இறுதித்தேர்வு முடிவுகளில் கடந்த சில ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்திலும், தூத்துக்குடி மாவட்டம் இரண்டாமிடத்திலும் இருந்து வந்தது. இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது. அரசு பள்ளியில் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு கல்வி சம்பந்தமாக எந்த புதிய திட்டத்தைக் கொண்டு வந்தாலும் தற்போது அரசு பள்ளிகளில் தான் முதலில் அறிமுகம் செய்கின்றனர். எஸ்.எஸ்.ஏ.,என அழைக்கப்படும் அனைவருக்கும் கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தபின் அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டிடம், கம்ப்யூட்டர், கழிப்பிடவசதி என நவீனப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அனைத்து வசதிகள் இருந்தாலும் இங்கு மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். படித்த மற்றும் உயர் வருவாய் பிரிவினர்கள் தங்களது பிள்ளைகளை தனியார், மெட்ரிக் மற்றும் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

என்றைக்குமே அரசு பள்ளி கடைசி சாய்ஸ் : அதற்கு அடுத்த நிலையில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்த பள்ளிகள் எதிலும் படிக்க வைக்க இயலாதவர்கள் தங்களது கடைசித் தேர்வாக அரசுப்பள்ளியை கருதுகின்றனர். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் மிக அதிக அளவில் உள்ளன. ஆனால் வடமாவட்டங்களில் தனியார் பள்ளிகள் எண்ணிக்கையில் மிகக்குறைவாக உள்ளன. எனவே அங்கு அரசுப்பள்ளிகளில் தான் பயில வேண்டும் என கட்டாய சூழல் உள்ளது. எனவேதான் வடமாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் ஒருசிலர் சிறப்பிடம் பெறுகின்றனர்.அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவதும் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாத சூழலுக்கு ஆசிரியர் பற்றாக்குறையும், தலைமையாசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிக வருடம் பணியாற்ற இயலாமல் அடிக்கடி மாறுதல் பெற்றுச் சென்றுவிடுவதும் முக்கிய காரணம் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். அரசுப் பள்ளியைப் பொறுத்தவரையில் பிளஸ் 2 முதல் குரூப் எனப்படும் கணக்கு, இயற்பியல், வேதியியல் ஆசிரியர்களும், ஆங்கிலப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களும் எல்லா பள்ளிக்கூடத்திலும் உள்ளனர். தமிழ், உயிரியியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. எந்த பாடங்களுக்கு எல்லாம் ஆசிரியர் இல்லையோ அந்தப் பாடத்தில் மாணவர்கள் அதிகம் தோல்வியடைகின்றனர்.

பெயரில்லா சொன்னது…

ஏராளமான ஆசிரியர் காலிபணியிடங்கள் : தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடம் ஆயிரத்துக்கும் மேல் காலியாக உள்ளது. இளநிலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் வைத்துக்கூட சில பள்ளிகளில் தமிழ்பாடம் கற்றுக் கொடுக்கும் நிலை உள்ளது. இதுபற்றி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் கூறும்பொழுது, சென்றவருடம் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசியல் தலையீடு காரணமாக சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதற்கு கூறப்பட்ட காரணம் அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் பாடப்பிரிவில் ஒரு மாணவன் தோல்வியடைந்தது எனக் கூறப்பட்டது. அவர் நீதிமன்றம் சென்று டிரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் செய்து தீர்ப்பு பெற்றும் கல்வி அதிகாரிகள் ஆர்டர் வழங்காததால் இன்று அந்த ஆசிரியருக்கு ஒரு ஆண்டு சம்பளத்துடன் அதே பள்ளியில் வேலை வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஈகோ பிரச்னையால் அரசுக்கு நிதிஇழப்பு ஏற்பட்டுள்ளது. பேறுகால மருத்துவ விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளிகளில் அரசு சம்பளம் வழங்குகிறது. அதே விடுப்பு அரசுப் பள்ளியில் லீவு வேலைக்கு தற்காலிக ஆசிரியர்களை அரசு சம்பளத்தில் நியமிக்க இயலாது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து அந்த ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு கூறுகிறது. பல அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நிதிவசதி இல்லை. அரசு தற்போது பேறுகால விடுப்பு ஆறுமாதமாக உயர்த்தி உத்திரவிட்டுள்ளது. வரவேற்கத்தக்கது. அதே நேரம் அந்த பேறுகால விடுப்பு காலியிடத்திற்கு ஆசிரியர் நியமிக்காவிட்டால் ஒரு ஆண்டு முழுவதும் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளது என கூறினார். முன்பு போல் பேறுகால விடுப்புக்கு தனியார் பள்ளிகளுக்கு வழங்குவது போல் அரசு பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியருக்கு அரசு சம்பளம் வழங்க வேண்டும் எனவும் கூறினார். தற்போது தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் அதிக பள்ளிகள் உள்ளதால் திருச்செந்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கினால் நிர்வாகம் செய்ய இலகுவாக இருக்கும். மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் படி 9ம் வகுப்பு வரை தற்போது மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது. கட்டாயம் பாஸ் மார்க் போட வேண்டும் என கூறும்பொழுது படிக்கும் மாணவர் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் பொறுப்பின்மை அதிகரிக்கும். மேலும் கிராமப்புறத்திலிருந்து பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் நலிந்த பெற்றோர்களின் பிள்ளைகள் அதிகம் படிக்கும் அரசு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு வரை யாரையும் பெயிலாக்கக் கூடாது எனும் பொழுது தனது குழந்தைகளின் கல்வித்தரத்தை சராசரி பெற்றோர்களால் உணர்ந்து கொள்ள இயலாது. பல பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் தலைமையிடத்தில் இருப்பது இல்லை.

மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து வேலை பார்க்கின்றனர். தினசரி ஐம்பது முதல் 70 கி.மீ.,தூரம் சென்று வருகின்றனர். எட்டு கிலோ மீட்டருக்குள் தலைமையாசிரியர்கள் குடியிருக்க வேண்டும் என்ற விதி தற்போது தாராளமாக மீறப்படுகிறது. இதுபோல தூர இடங்களிலிருந்து வரும் ஆசிரியர்கள் விரைவில் பணி மாறுதல் பெற்றுச் சென்று விடுவதால் பள்ளிகள் கண்டிப்புடன் ஒரே சீரான நிர்வாகத்தை வழங்க இயலவில்லை.தனியார் பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூடத்திற்கு இடை யே உள்ள தொடர்புபோல் அரசு பள்ளிகளிலும் மாணவர், பெற்றோர் ஆசிரியர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் ஸ்பெஷல் கிளாஸ் என விடுமுறை நாட்களில் பாடம் நடத்தும் பொழுது மாணவர்களின் வருகை முழுமையாக இருக்கும். இல்லையென்றால் பல இடங்களில் தற்போது செல்வது போல விடுமுறை நாட்களில் கூலி வேலைகளுக்கு செல்வது தொடரத்தான் செய்யும். உயர்கல்வி மற்றும் தொழிற்கல்விகளுக்கு அரசு நிறுவனங்களில் இடம் கிடைப்பதற்குத்தான் அனைத்து தனியார் பள்ளி மாணவர்களும் விரும்புகின்றனர். அதே தரம் ஆரம்ப கல்வியிலும் வழங்கப்பட்டால் நம்பிக்கையுடன் தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்ப்பர்...

Iqbal Selvan " இக்பால் செல்வன் '' சொன்னது…

சமச்சீர் கல்வி தமிழ்நாட்டில் பூரணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது ஒரு நல்ல தொடக்கம், முளையிலேயே பயிரைக் கிள்ளுவது போல .. இந்த அரசு முட்டுக்கட்டைப் போடுவது வெறுப்பை ஏற்படுத்துகின்றன..

சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பாய் இருப்பவர்கள் கான்வெண்டில் படித்தோர் என்றக் குற்றச் சாட்டு உள்ளது - ஆனால் அதே கான்வெண்டில் படித்து மெற்ரிகுலேசன் ஒன்றும் சொர்க்க வாசல் இல்லை என்பதை உணர்ந்தவன் என்பதால் கூறுகின்றேன் .. சமச்சீர் கல்வி ஒன்றும் நரக வாசல் இல்லை ...

அதே போல தாய்மொழி வழிக் கல்வி அல்லது மாநில மொழி வழிக் கல்வி என்று சொல்வது சிறப்பு ... எந்தவொரு நாட்டிலும் அதனதன் மொழிகளிலேயே பயிற்றுவிக்கப் படும் போது நம் தமிழ் நாட்டில் மட்டும் ஆங்கில வழிக் கல்வி எதற்கு என வினவ வேண்டி உள்ளது.... மாநில மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்கி, ஆங்கில மொழிப் பாடத்தினைப் புகட்டுவோரின் புலமையை அதிகரித்தாலே ஆங்கிலத்தின் தேவை சரி செய்யப்படும் .. அதை விடுத்து அரைக் குறை ஆங்கிலத்தில் காலை முதல் மாலை உண்ணுவது முதல் கழிப்பது வரை என முட்டாள் தனமாக சிந்திப்பது வேடிக்கையாக உள்ளது ....

ஒரு மொழியாக ஆங்கிலம் படித்தாலும் ஒழுங்காக படித்தாலே ஆங்கிலத்தால் வரும் பயனைத் தாராளமாகப் பெறலாம்.. இதனை நான் சொல்லவில்லை .. அவரவர் தாய் மொழியில் படித்துவிட்டு கனடா வந்த பலரும் நம்மை விடவும் அருமையான ஆங்கிலத்தைப் பேசுகின்றார்கள் ...

reno85 சொன்னது…

சமச்சீர் கல்வி என்பது நல்லதுதான்.. ஆனால் அதே நேரத்தில் அந்த கல்வியில் உள்ள குளறுபடிகளையும் களைய வேண்டும்..

உதாரணத்திற்கு ஒருவன் நன்கு முன்னேறி கொண்டு இருக்கிறான் என்று வைத்து கொள்வோம். அவனை பிடித்து இழுத்து நிறுத்தி நீ பின்னோக்கி செல் என்று சொன்னால் யார் ஒத்து கொள்வார்கள்...

இப்போதைய சமச்சீர் கல்வி நிலைமை இதுதான். பள்ளி மாணவர்கள் இடையே கூட சமச்சீர் கல்வி வரவேற்பில்லை என்பது நீங்கள் தினசரி நாளிதழ் களை பார்த்தாலே புரியும்..

சமச்சீர் கல்வி வேண்டும் என்று காது கிழிய கத்துக்கீறிர்கள்.
ஆனால் அரசாங்க பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று யாராவது குரல் கொடுக்க இங்கே மனம் உண்டா..
இல்லை இங்கே கருத்து எழுதுபவர்களின் வீட்டில் போய் பாருங்கள்.
என்ன நிலைமை என்று. அவரவர் பிள்ளைகள் எங்கே படித்து கொண்டு இருக்கிறார்கள் என்று..

//சமமான ஏற்றத்தாழ்வுகளில்லாத கல்வியே வலுவான வருங்கால தூண்களை உருவாக்கும் //
சமச்சீர் கல்வி வந்தால் நீங்கள் சொல்லும் அதே நன்மைகள் அரசாங்க பள்ளிகளின் தரத்தை உயர்த்தினாலே போதுமே..

முதலில் அதற்காக ஒரு பதிவேனும் எழுதுங்கள்..

நடப்பதை பேசுங்கள் என்று நீங்கள் சொல்லலாம்..
ஒரு சமுதாயத்தை முன்னேற்ற அல்லது சமமான கல்வி வழங்கிட பின் தங்கி இருப்பவர்களுக்கு என்ன காரணத்தினால் என்று ஆராய்ந்து அதற்கான தேவைகளை நிறைவேற்றினாலே போதும்..
அதை விடுத்து நீ இனிமேல் முன்னேற கூடாது..
நீ இதை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முட்டாள்தனமான செயலாகும்...


தமிழ் படி , தாய் மொழி தமிழில் படி என்று சொல்வது நல்ல முயற்சி..
அதே முயற்சியை சற்று வேலை வாய்ப்பு துறைகளில் பார்க்க வேண்டும்...
உங்கள் மனசாட்சி பிறளாமல் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

சமச்சீர் கல்வியை விட அரசாங்க பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிகள் போல் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுங்கள்.
ஏன் முடியாதா என்ன ?

பெயரில்லா சொன்னது…

In cbse,they will make ur brain to work and make u better.
In matric.,they will make u to memorise and forget everything later.
In stateboard,U cant understand anything.However the syllabus remains the same for all.

பெயரில்லா சொன்னது…

சொம்படிப்பதர்க்கு ஒரு எல்லை வேண்டாமா?. ஏன் தான் ஏழைகள் மேல் சிலருக்கு எவ்வளவு வெறுப்பு?. அவர்களை போன்றோர்களால் தான் தனியார் பள்ளிகள் ஏழை பணக்காரர் என்று பேதம் பார்க்காமல் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார்கள். இங்கே கருத்துச் சொல்லியிருக்கும் சில் சிகாமனிகள் "இது அரசு பள்ளி குழந்தைகளுக்கு வேண்டுமானால் பயன் அளிக்கலாம்" என்ற ரிதியில் தானே கூறுகிறார்கள். இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது சமசீர் கல்விக் அமல் செய்யப் பட்டால், தனியார் பள்ளிகள் நிலைமை திண்டாட்டம்.தான் அதிக காசு கொடுத்து வாங்கும் அதே பண்டம் இலவசமாகவோ குறைந்த காசுக்கோ ஏழைக்கு கிடைக்கவே கூடாது என்னும் அசிங்கமான மனப்பான்மை, சே கருமம்

பெயரில்லா சொன்னது…

மெட்ரிக் பள்ளிகளோடு தொடர்பு உடையோர் இதைத்தான் சொல்வார்கள். கல்வி இன்று வியாபாரமாகி விட்டது. வசந்திதேவி, ராஜகோபாலன் போன்றோரிடம் கருத்து கேளுங்கள்.பணம் இருப்பவனுக்கு ஒரு படிப்பு பணம் இல்லாதவனுக்கு ஒரு படிப்பு. இது என்ன நியாயம். சிறந்த கல்வியை ஏழைகள் பெறக்கூடாதா? சமச்சீர் கல்வி பாடதிட்டங்கள் தரமற்றதாக இருந்தால் அதைத்தான் சரிசெய்ய வேண்டும். இன்றைய நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞர் தனது குழந்தைகள் எதை படிக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை பெற்றோர்களுக்கு உள்ளது என வாதிட்டுள்ளார். ஐயா! இங்கு உரிமை அல்ல பிரச்சனை. பணம் தான். பணக்கார குழந்தைகளுக்கு ஒரு படிப்பு ஏழைகளுக்கு ஒரு படிப்பு.இது நியாயமா? கட்டாய இலவச கல்வி சட்டம் – 2009 ன் படி ஒரு குழந்தைக்கு தரமான கல்வி பெரும் உரிமையை நமது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அதன் படி மெட்ரிக் முறை கல்வியே தரமான கல்வி என அரசு நினைத்தால் அதனை அரசு வழங்கட்டும். எப்படி இருந்தாலும் அனைத்துக் குழந்தைக்கும் ஒரே சீரான தரமான கல்வியை வழங்குவது அரசின் கடமை. அதற்கு ஒரே வழி சமச்சீர் கல்வியே. அதில் பாடத்திட்டம் மெட்ரிக் முறையாக இருந்தாலும் பரவாயில்லை.கல்வியின் பெயரால் குழந்தைகள் துண்டாட்ப்பட்டால் நாளை தேசம் துண்டாடப்படும். கல்வியில் முதலிடம் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் சாதிக்க்லவரம் தொடர்கிறது என்றால் அங்கு சாதிக்கொரு பள்ளி..... பள்ளிக்குள்ளும் சாதி

பெயரில்லா சொன்னது…

எழவு இந்தியை படிக்கதான் வேணும்னா காசுகுடுத்து படிப்பதே நல்ல முடிவு,யாரும் அதை மறுக்கலை,ஹிந்தி மட்டும் இருந்தால் இன்றைய தேதியில் ஆங்கில அறிவும் கணித அறிவியல் அறிவும் நமக்கு பீகாரி போலவோ,கொல்டி போலவோ,மலையாளி போல டப்பா இங்கிலீஷ் பேசவும் தான் முடிஞ்சிருக்கும்,ஹிந்தி தேசிய மொழி அல்ல,அதை புரிஞ்சிக்கனும்.நம் வீட்டில் அம்மா குத்துக்கல்லாட்டம் இருக்கையில் அப்பா ரெண்டாவதா கல்யாணம் பண்ணி கூட்டி வந்தால் அவளை வெட்கமே இன்றி அம்மான்னு கூப்பிடுவது போலதான் ஹிந்தியை நாம் பிடித்து உருவுவது

பெயரில்லா சொன்னது…

எதற்கெடுத்தாலும் தி.மு.க.,வுக்கு வக்காலத்து வாங்கும் தி.மு.க.,வினரே சிறிது நேரம் ஒதுக்கி இதைப் படியுங்கள். இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பொருளாதார நிபுணர் குருமூர்த்தி ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை பொதுமக்கள் நலன் கருதி சுருக்கமாக இங்கே கூற விரும்புகிறேன். "2007ம் ஆண்டு சென்னையில் உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி வீட்டிற்கு 323 தொலைபேசி இணைப்புகள் தரப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான துவக்க எண்களைக் கொண்ட இந்த தொலைபேசி இணைப்புகள் சென்னை பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் பெயரில் தரப்பட்டுள்ளன. இந்த சட்ட விரோத இணைப்புகள் மூலம் சன் டிவி., குழுமம் மற்றும் தினகரன் நாளிதழ் அலுவலகங்கள் இணைக்கப்ட்டிருந்தன. இதனால் இந்த தொலைபேசி இணைப்புகளின் சேவையை இந்த அலுவலகங்கள் இலவசமாக பெற்றிருந்தன. இந்த இணைப்புகளுக்காக சட்ட விரோதமாக சாலைகளைத் தோண்டி கேபிள்களும் அதுவும் வீடியோக்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு சக்தி வாய்ந்த கேபிள்கள் போடப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு மார்ச் மாதம் மட்டும் இந்த 323 தொலைபேசி இணைப்புகளில் ஒரு எண்ணில் இருந்து மட்டும் 48 லட்சம் யூனிட் கால்கள் பேசப் (பயன்படுத்தப்) பட்டுள்ளது. அப்படியானால் தயாநிதியுடன் தொடர்புள்ள இந் நிறுவனங்கள் 323 தொலைபேசி இணைப்புகளையும் பயன்படுத்தி எவ்வளவு பேசி ( பயன்படுத்தி) இருப்பார்கள்? 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த இணைப்புகள் இருந்துள்ளன. இந்த கால கட்டத்தில் சுமார் 630 கோடி யூனிட் கால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. ஒரு கால் யூனிட்டுக்கு 70 காசு என்று கணக்கிட்டுப் பார்த்தால், 440 கோடி ரூபாய் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதமே தயாநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.ஐ., பரிந்துரைத்திருக்கிறது. ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை." தி.மு.க., ஆதரவாளர்களே சற்று சிந்திப்பீர். இந்த பணம் உங்கள் வரிப்பணம் இல்லையா? ஒரு குடும்பம் வாழ உங்கள் உழைப்பும் வரிப்பணமும் இப்படி ‌கொள்ளையடிக்கப்படுவதை இன்னும் அனுமதிக்கப் போகிறீர்களா? தி.மு.க.,வுக்கு ஆதரவாக இனி கருத்து கூறும் முன் இதை சற்று மனதில நினைத்துப் பாருங்கள். - எஸ்.கிருஷ்ணன், மதுரை

பெயரில்லா சொன்னது…

'பிரிக்க முடியாதது எது?’ எனக் கேட்டால் 'சமச்சீர் கல்வியும் சர்ச்சையும்’ என்றுதான் பதில் வரும். சமச்சீர் கல்வி முறைக்கு கடும் எதிர்ப்பு இருந்​தாலும், கடந்த கல்வி ஆண்டிலேயே, 1 மற்றும் 6-ம் வகுப்புக்கு சமச்சீர் பாடத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. அப்போது எழுந்த சர்ச்சைகள் இன்று வரை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டு 2 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் (1, 6 நீங்கலாக) சமச்சீர் பாடப் புத்தகங்கள் அறிமுகப்​படுத்தப்பட்டன. 8, 9 மற்றும் 10-ம் வகுப்புக்கான பாடங்கள் கடந்த 5-ம் தேதியும், 5, 7-ம் வகுப்புக்கான பாடங்கள் கடந்த 9-ம் தேதியும் இணையத்தில் வெளியாகின. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு​வரப்பட்ட சமச்சீர் பாடப் புத்தகங்களில், ஏராளமான பிழைகள் இருக்கவே, மீண்டும் சர்ச்சைகள்!10-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில், பரிணாமம் என்ற வார்த்தை 'பரினாமம்’, 'பரிமானம்’ என மாறி மாறி அச்சிடப்பட்டுள்ளன. நிறக்குருடு என்ற கண் பாதிப்பைக் குறிப்பிடும் வார்த்தை 'நிறகுருகு’ என அச்சாகி உள்ளது. 'இதய வால்வு’ என்பதை 'இதய வாழ்வு’ என்றும் 'சிறுநீர் நாளம்’ என்பதற்குப் பதிலாக 'சிறுநீர் நாணம்’ என்றும், 'மேலண்ணம்’ என்பதை 'மேலன்னம்’ என்றும் தவறாகக் குறிப்பிட்டு உள்ளார்கள்.

9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், 'பெருந்தலைவர் காமராசர்’ பாடம் இடம் பெற்று உள்ளது. இதில், '1945-ல் பிரகாசம் தலைமையிலான அமைச்சரவையும் 47-ல் ஓமந்தூர் ராமசாமி தலைமையிலான அமைச்​சரவையும் 49-ல் குமாரசாமி தலைமையிலான அமைச்​சரவையும் பதவியேற்க காமராசர் காரணமாக இருந்தார். அதனால் தலைவர்களை உருவாக்குபவர் என அழைக்கப்பட்டார்’ என்று குறிப்​பிடப்பட்டு உள்ளது.

ஆனால், நேருவின் மறைவுக்குப் பிறகு, லால்பகதூர் சாஸ்திரியும், அவர் இறந்தவுடன் இந்திரா காந்தி​யும், பிரதமர் பதவி வகிக்கக் காரணமாக இருந்தவர் காமராசர் என்பதால்தான் 'கிங் மேக்கர்’ என்று அழைக்கப்பட்டார் என்பது இடம்பெறவில்லை.இது ஒருபுறம் இருக்க, செம்​மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதி இருந்த வாழ்த்து, 9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் வாழ்த்துப் பகுதியில் இடம் பெற்று உள்ளது. வழக்கமாக, செய்யுள் பகுதி​யில் வாழ்த்து அதையடுத்து திருக்குறள் இடம்பெறும். ஆனால், இந்த முறை இறை வாழ்த்துக்கும் திருக்குறளுக்கும் இடையில் செம்மொழி வாழ்த்து என்ற பெயரில் கருணாநிதியின் கவிதை செருகப்பட்டு உள்ளது.

''கருணாநிதிக்கு முன், ஏராளமான புலவர்கள் செம்​மொழித் தமிழ் பற்றி பாடல்கள் இயற்றி உள்ளனர்.

பெயரில்லா சொன்னது…

அவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு, பலருடைய கருத்துகளை இணைத்து கருணாநிதி உருவாக்கி இருக்கும் பாடலை, திருக்குறளுக்கு முன்பாக வைத்திருப்பது, அவருக்கே அசிங்கமாக இல்லையா?'' என்று பொங்குகின்றனர் தமிழ்ப் புலவர்கள்.

மேலும், அந்தப் பாடலின் ஆசிரியர் குறிப்பில், 'இவர் இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் சிறந்த திறன் பெற்றவராகத் திகழ்கிறார். 'தோன்றின் புகழொடு தோன்றுக...’ என்னும் குறட்பாவுக்குச் சான்றாக இவரைச் சுட்டலாம். பல்வேறு நூல்​களைப் படைத்து தமிழ்ப் பணி​களை ஆற்றியுள்ளார். அவற்றுள் சில, குறளோவியம், சங்கத்தமிழ், தொல்​காப்பியப் பூங்கா முதலியன’ எனக் கூறப்பட்டு உள்ளது.

இதை சுட்டிக்காட்டும் தமிழ்ப் புலமையாளர்கள், ''கருணாநிதி எழுதிய தொல்காப்பியப் பூங்காவில் எத்தனை பிழைகள் வந்துள்ளன என்பதை மட்டுமே, புலவர் ஒருவர் தனிப் புத்தகமாக வெளியிட்டார். இப்படி இருக்​கையில், அவர் தமிழ்ப் பணி ஆற்றினார் என இதை உதாரணம் காட்டலாமா?'' எனக் கோபக் குரல் எழுப்பியுள்ளனர்.

பிழைகள் ஒரு பக்கம் இருக்க, ''மொத்தப் பாடப் புத்தகங்களுமே மெட்ரிக் பள்ளி தரத்தில் இல்லை. எங்கள் மாணவர்களுக்குப் போதுமான செறிவு இந்த புத்தகங்களில் இல்லை...'' எனத் தனியார் பள்ளிகள் தரப்பில் அங்கலாய்ப்புக் குரலும் கேட்கிறது. ஆனால், இதை வன்மையாக மறுக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''தமிழகத்தில் மாணவர்களிடையே வேறுபாடான மனநிலையை உருவாக்கும் தனித்தனிக் கல்விமுறைகளை ஒழித்துவிட்டு, எல்லாருக்கும் பொதுவான, தரமான சமச்சீர் பாடத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தொடக்கத்திலேயே இதைக் கிள்ளிவிட முயன்றவர்கள், தோற்றுப்போனார்கள். ஆனாலும், அவர்கள் தங்களுடைய கல்வி வியாபாரம் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதற்காக, சமச்சீர் பாடத் திட்டத்தை தடுக்க வேண்டும் என செயல்படுகின்றனர். பிழைத் திருத்தங்களைத் தனியாக அச்சிட்டு, அதை புத்தகத்தில் சேர்த்துவிட்டால் இந்தப் பிரச்னை எளிதாக முடிந்துவிடும்!'' என்கிறார்.

அதே நேரம், அச்சாவதற்கு முன்பே இணையத்தில் பாடப் புத்தகங்களை வெளியிட்டு இருக்க வேண்டும் என்பதை அடித்துச் சொல்லும் பிரின்ஸ், ''முன்பே வெளியிடுவதற்குத்தான் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. தாமதமாக வெளியிடுகிறார்கள் என்றால், ஏதோ தவறை மறைக்கத்தான் இப்படிச் செய்துள்ளனர் என்று நினைக்கிறேன். கருணாநிதி எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலை, திருக்குறளுக்கும் முன்னதாக வைத்துள்ளதைப்பற்றி யாரும் கேட்டு விடுவார்கள் என்பதால்கூட இருக்கலாம். பிழைகள், தவறுகள் வந்தாலும் அவற்றைத் திருத்தி, சமச்சீர் பாடத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்!'' என்றார் ஆதங்கத்துடன்.

பள்ளிக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) வசுந்தரா தேவியிடம் கேட்டபோது, ''எழுத்துப் பிழைகளை நீக்கி மாணவர்கள் சரியாகப் படிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றார்.

கருத்துப் பிழைகளை என்ன செய்ய?

- இரா. தமிழ்க்கனல்

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)