வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!!

ருமை நண்பர்களே!!!
முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னின்று கட்டிய காரணித்தினாலேயே இன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  தனிப்பட்ட கோபம் ,விரோதம் பூண்டு அவரின் இடது கையால் புறக்கணிக்கப்படும்  இந்த சட்டசபைக் கட்டிடம்,  எத்தனை ஆயிரம் ? தொழிலாலர்களின், பொறியாளர்களின், கட்டிடக் கலைஞர்களின், உழைப்பை, வியர்வையை, தொழில்நுட்ப அறிவை, திட்டமிடுதலை, கட்டிட வடிவமைப்பாற்றலை, உலகத்தரமான கட்டிட விதிகளை , சிறப்பம்சங்களை,  தன்னுள் வாங்கி இறுதியாக இவ்வடிவத்தை பெற்றிருக்கிறது  என்று தெரியுமா?!!!

1200 கோடிகள் செலவழித்து இந்த நவீன சட்ட சபையை கட்டிவிட்டு அதைப் பயன்படுத்த வில்லை என்றால் யாருக்கு நட்டம்?!!! மக்களுடைய வரி பணம் தானே விழலுக்கு இறைத்த நீராகும்?!!!. கருணாநிதி ஜெயலலிதாவுக்கு  பரம விரோதி தான், ஆனால் அந்த கட்டிடம் கருணாநிதியின் பணத்தில் கட்டவில்லையே ?!!!, ஜெயலலிதா பெருந்தன்மையுடன் தன் பிடிவாதத்தை துறந்து சட்டசபையின் கூட்ட தொடரை   புதிய சட்டமன்றத்தில் கூட்ட வேண்டும் என்பதே, உழைக்கும் வர்க்கத்தின் ஒழுங்காக வருமான வரி செலுத்தும் வர்க்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

து நடக்குமா?!!! கனவிலும் நடக்கவே நடக்காது  , இதே முதல்வர் ஜெயலலிதாவின்  நிலையில் கருணாநிதியை வைத்துப் பார்ப்போம், அவர் ஒரு வேளை இத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜெயித்து வந்திருந்தால் எதிரி ஜெயலலிதாவே இதைக் கட்டியிருந்தாலும், அரசுப் பணம் தானே?! ,  என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டு  நிச்சயம் தன் அமைச்சர் பரிவாரங்களுடன் ஜம்மென்று  இதே சட்டசபையில் தன் நாற்காலியில் போய் அமர்ந்திருப்பார்.   பின்னர் அவர், அவரின் விருப்பத்திற்கேற்ப வண்ணங்களையும் உள் அலங்காரங்களையும் வேண்டுமானால் மாற்றியிருப்பார். இது போல ஒரே அடியாக சட்டசபையையே புறக்கணித்து பழைய சட்டசபையை 100 கோடி ரூபாய் கொண்டு புதுப்பிக்கும்  செயலை அவர் ஆரம்பித்திருக்கவே மாட்டார். இந்த விஷயத்தை கேள்விப்படும் வேற்று மாநிலத்தவர்   யாருமே வாயால் சிரிக்க மாட்டார்கள்!!! , கட்சிக்கொரு சட்டசபை வேண்டுமென்றால் இடத்துக்கும், பொருளுக்கும் எங்கே போவது?!!! சில நண்பர்கள் இந்த கட்டிடத்தின் அருமை பெருமைகளை சிறப்பம்சங்களை முழுக்க உணராது அது தண்ணீர் தொட்டி போல இருக்கிறது , பெட்ரோல் ரிஃபைனரியைப் போல இருக்கிறது, பாண்டிச்சேரி மாநில போலீசாரின் தொப்பியைப் போல இருக்கிறது என்று ஏளனம் செய்வது நகைப்புக்கிடமே. நல்லவை எங்கிருந்தாலும்  எடுத்துக்கொள்வது தான் நல்ல பண்பு.
சரி!,புதிய சட்டசபை கொண்டிருக்கும் சிறப்பம்சங்களை சற்று பார்ப்போமா?.
சென்ற ஆண்டு திறக்கப்பட்ட, தமிழக புதிய சட்டசபை கட்டடம், உலகிலேயே முதல் ஆட்சி மன்ற பசுமைக் கட்டடம் [க்ரீன் பில்டிங்] என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. மேலும் அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகங்களின், "தங்க தர நிர்ணயச் சான்றிதழும்' [கோல்ட்] இந்த கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் இது பசுமை விதிமுறைகளை   தீவிரமாக கடைபிடித்து 100 க்ரெடிட்டுகளுக்கும் மேலாக வருமாறு பார்த்துப்பார்த்து வடிவமைப்பு செய்து கட்டப்பட்டுள்ளது.

30 க்ரெடிட்டுகள் [பாயிண்டுகள்] வருவதற்கே லீட் கன்சல்டண்ட்களும் ஏனைய பொறியாளர்களும் மண்டையை உடைத்துக் கொள்வர், 100 பாயிண்டுகள் வாங்குவது அத்தனை சுலபமல்ல, இது க்ரீன் பில்டிங்காக அதுவும் 100 க்ரெடிட்டுகளுடன் திகழ்வதால் தான் இதை கட்ட இத்தனை செலவு பிடித்திருக்கிறது,ஆனால் அத்தனையும் இயற்கைக்கு அளிக்கப்பட்ட நன்கொடையே, 100 இயற்கைக்கு கேடு விளைவிக்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது, கார்பனை வெளியேற்றத்தை எவ்வளவு முடியுமோ  அவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டிடம் இது. அங்கே கட்டிட நிலப்பரப்பில் இருந்து  கட்டிட வேலைகளின் பொழுது அகற்றப்பட்ட மரங்கள், அதே சட்டசபை நிலப்பரப்பில் கட்டிடம் எழும்பிய பின்னர் மாற்று இடத்திலோ அல்லது தோட்டத்திலேயோ திரும்ப நடப்பட்டுள்ளன.

ட்டசபை கட்டடத்தில் 3.4 லட்சம் சதுர அடியில் பசும்புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன.  கட்டிடத்தின் கூரைகள் எல்லாவற்றிலும்  லேண்ட்ஸ்கேப்ட் கார்டன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. "ரீ-சைக்கிளிங்' முறைப்படி தண்ணீர் பாசனம் செய்யப்படுவதால் செடிக்கு பாசனக்காரர்கள்  தேவையில்லை, குறித்த நேரத்திற்கு பாசனக்கருவிகள் இயங்கி செடிகளுக்கு நீரைப் பாய்ச்சும். தினமும் 2.55 லட்சம் லிட்டர் தண்ணீர் மறு சுழற்சி மூலம் கட்டிட உபயோகத்துக்கு கிடைக்கும். 

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டமும் அருமையாக இக்கட்டிடத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. கழிவறைகளில் தண்ணீர் குறைந்த அளவே தேவைப்படும் வகையில், ஆட்டோ சென்சார் முறைகொண்டு இயங்கும் யூரினல்கள்,வாஷ்பேசின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தண்ணீர் தேவை 52 சதவீதம் குறையும்.கட்டிடத்தின் வெளிப்புற வார்ப்பு பலகைகளில் நவீன கோலங்கள் கொண்ட டிசைன் பிளேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

கோலங்களில் உள்ள சிறிய புள்ளிகள் மூலம் வெளிச்சம் உட்புகும்; வெப்பம் உள்ளே வராதவாறு அமைந்ததும் இதன் சிறப்பு. 60 சதவீத வெப்பத்தை உட்புக விடாமல் வெளியேற்றும் வகையில், கட்டிடத்தின் ஸ்ட்ரக்சுரல் க்ளேஸிங் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. கட்டிட வளாகத்தில் இயற்கையாகவே வெளிச்சம் நிறைந்திருக்கும்.பகலில் மின்சார விளக்குகளுக்கு தேவையே இருக்காது என்பதும் இன்னொரு சிறப்பு.


ந்த அறையிலுமே ஆட்கள் இல்லை என்றால் ஐந்து நிமிடத்திற்குள், விளக்குகள், மின்விசிறிகள்  தானாக செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். மின் சிக்கனத்தை மனதில் கொண்டு, இந்த நடைமுறை எல்லா பகுதிகளிலுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 சதவீத எரிபொருள் தேவை குறையும். சென்னையின் தட்ப வெப்ப நிலையை கருத்தில் கொண்டு, உள்ளூரில் உள்ள செடிகளே லேண்ட்ஸ்கேப்டு கார்டன்களில்  வைக்கப்படுகின்றன.

ச்செடிகள் இரண்டு ஆண்டுகள் வளர்ந்தபின்னர் தண்ணீர் தேவைப்படாது. கட்டுமானப் பணிக்கு பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் சென்னையைச் சுற்றி 800 கி.மீ., தூரத்திற்குள் வாங்கப்பட்டவை என்பதும் சிறப்பு. சுகாதாரம் பேணுதல், மின், குடிநீர் சிக்கன முறை கையாளுதல் என ஒவ்வொன்றுமே பசுமை விதிகளின் படியே கட்டப்பட்டுள்ளன. உலகிலேயே பசுமை விதிகளின் கீழ் கட்டப்பட்ட ஆட்சி மன்ற கட்டடம் என்ற பெருமை, இந்த வகை சிறப்பம்சங்களால் தான் தமிழக புதிய சட்டசபை கட்டடத்திற்கு கிடைத்துள்ளது. அமெரிக்க, இந்திய பசுமை கட்டட கழகத்தின் நீண்ட ஆய்வுக்கு பின்னர், "தங்க தர நிர்ணயச் சான்றிதழ்' கிடைத்துள்ளது.  தலைமைச் செயலக கட்டிடம் வளாகம், சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுளளது என்பது மற்றொரு சிறப்பம்சம். 

து தமிழகத்தின்  பிரமாண்டமான கட்டுமானப் பணி ஆகும். கட்டுமானத்துக்கான ஒப்பந்தப்புள்ளி 5.9.08 அன்று திறக்கப்பட்டது. 12.11.08 அன்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. 18 மாதங்களுக்குள், அதாவது 11.5.10-க்குள் புதிய சட்டசபையை கட்டி முடிப்பதற்காக ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.2010-11-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டினை புதிய சட்டசபையில் தாக்கல் செய்துவிடவேண்டும் என்று அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி விரும்பினார். அதைத் தொடர்ந்து, 2010-ம் ஆண்டு மார்ச் 10-ந் தேதிக்குள்ளாக சட்டமன்ற மண்டபத்தை மட்டுமாவது முழுவதுமாக கட்டிமுடித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.அதன்படியே மார்ச் 10-ம் தேதி முதல்கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. தலைமைச் செயலகம் கட்டிடத்தின் இறுதிகட்ட  பணிகளும்  துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

ப்போது புதிய சட்டசபை மற்றும் தலைமைச் செயலக வளாகம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. முதல் பகுதி ஏ பிளாக் என்று அழைக்கப்படுகிறது.  ஏ பிளாக், 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 4 பெரும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.  இது 9 லட்சம் சதுர அடிபரப்பில், ரூ.425.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்து மத கோட்பாடின் படி, கட்டிடத்தின் ஒவ்வொரு பிரிவும் வட்ட வடிவிலான கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. பொது விதிகளின் படி,  உலகின் எந்த ஒரு மாநாட்டு அரங்கம், கூட்ட அரங்கம் போன்றவை வட்ட வடிவத்தில்தான் கட்டப்படுகின்றன. அது போலவும், இந்துமத தர்மப்படி சக்கரம் என்பதை அடிப்படையாக வைத்தும், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள 4 கட்டிடங்களும் சக்கரம் போல் வட்ட வடிவத்தில் கட்டப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

கூவம் ஆற்றை ஒட்டிய சுவாமி சிவானந்தா சாலையின் (சென்னை தொலைக்காட்சி நிலைய சாலை) அருகில் முதல்-அமைச்சர் வட்டத்தில் (சி.எம். சர்க்கிள்) தொடங்கி, நூலக வட்டம் (லைப்ரரி சர்க்கிள்), சட்டப்பேரவை வட்டம் (அசம்ப்ளி சர்க்கிள்) என தொடர்ந்து, வாலாஜா சாலை அருகே பொது வளாகம் (பப்ளிக் பிளாசா) என நீள்வட்ட வடிவத்தில் இந்த ஏ பிளாக் பகுதி போய் முடிவது இதன் சிறப்பு. இரண்டாவது பகுதியான பி பிளாக்கில், தலைமைச் செயலக அலுவலகங்கள் அமைந்திருக்கின்ற். 7 மாடிகளை கொண்ட ஏழு தனித்தனி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பி பிளாக் கட்டுமானப் பணிகள் இந்த 2011 மே மாதத்தில் முடிக்கப்படவுள்ளது.

பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களும் 6 மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இதில், சட்டப்பேரவை அமையவுள்ள சட்டப்பேரவை வட்டத்தில் 100 அடி உயரம் கொண்ட 6 மாடி கட்டிடத்தின் மீது, அதே அளவு உயரம் (100 அடி) கொண்ட பிரமாண்ட மேற்கூரை (டோம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டோமின் மீது கண்ணாடி கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற அரங்கினுள் நேரடியாக சூரிய வெளிச்சம் கிடைக்கும். இந்த கூரையை சட்டமன்ற அரங்கில் தரைத்தளத்தில் அமர்ந்தபடியே பார்த்து ரசிக்கமுடியும். இது ஒரு ஆட்ரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட மேற்கூரையை, துருப்பிடிக்காத வகையில் தயாரித்துள்ளதும் மற்றொரு சிறப்பு, ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து  மற்ற பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மொத்த பணிகளும்,  இந்த மாத இறுதியில் முடிக்கப்பட்டுவிடும். 

ட்டப் பேரவை கட்டிடத்தின் தரைத்தளத்தில் சட்டசபை (285 எம்.எல்.ஏ. இருக்கைகள்), சபாநாயகர் அறை, சட்டமன்றக் கட்சி அலுவலக அறைகள் (5 அறைகள்), முதல்வரின் செயலக அறை, கொறடா அறை, சார்புச் செயலாளர் அறை, எதிர்கட்சித் தலைவர் அறை, துணை சபாநாயகர் அறை, ஒப்பனை அறை ஆகியவைஅமைந்துள்ளன.முதல் தளத்தில் கூட்ட அரங்கு, பொதுப்பணித் துறை பராமரிப்பு அலுவலகம், பிரிவு அலுவலகம், பத்திரிகையாளர் கேலரி, சார்புச் செயலாளர் பிரிவு, உணவுக் கூடம், ஒப்பனை அறை;2-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பார்வையாளர் கேலரி, ஒப்பனை அறை.3-வது தளத்தில் சார்புச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, கூடுதல் துறைச் செயலாளர் அறை, பிரிவு அலுவலகம், பார்வையாளர் அறை, வெளிநாட்டவர் பதிவு செய்யும் அறை, உணவுக் கூடம், ஒப்பனை அறையும் அமைக்கப்பட்டிருக்கிறது..

4-வது தளத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், கூட்ட அரங்கு, உணவுக் கூடம், பிரிவு அலுவலகம், சார்புச் செயலாளர் அலுவலகம், ஒப்பனை அறை.5-வது தளத்தில் துறைச் செயலாளர் அலுவலகம், கூட்ட அரங்கு, இணைச் செயலாளர் அறை, ஒப்பனை அறை. 6-வது தளத்தில் செயலாளர் அறை, இணைச் செயலாளர் அறை, முதல்-அமைச்சர் செயலக அலுவலகம், கண்காணிப்புப் பிரிவு, பொதுப்பணித் துறையின் மின்பராமரிப்புப் பிரிவு, பார்வையாளர்கள் அறை, ஒப்பனை அறை ஆகியவை அமைந்துள்ளன. இதுபோல், முதல்வர் வட்டம், நூலக வட்டம், பொது வளாகம் ஆகியவற்றிலும் பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்படும் வகையில் தனித்தனி 6 மாடி கட்டிடங்களாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி, இந்த மாபெரும் வளாகத்துக்குள் வந்துசெல்லவேண்டும் என்று முதல்வர் விரும்பியதால், வாலாஜா சாலையை ஒட்டிய பகுதியில் பொது வளாக பகுதி (பப்ளிக் பிளாசா) அமைகிறது. இதில் குறிப்பிட்ட பகுதி வரை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி வந்து செல்லலாம்.

பொதுமக்கள் இங்கே வந்து சுற்றிப்பார்த்து விட்டு உட்கார்ந்து ஓய்வெடுத்துச் செல்ல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு தோட்டங்களும்   நீர்நிலைகளும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதனை தாண்டி சட்டசபைக்குள்ளே நுழைய முடியா வகையில் உறுதியான உடையாத கண்ணாடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏ பிளாக்கில் உள்ள 4 கட்டிடங்களின் ஒவ்வொரு தளமும் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தளமும் இணையும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் உடன் கூடிய சோதனை வாசல்கள் உள்ளன.  சோதனைக்குப் பிறகே அடுத்த கட்டிடத்துக்குள்ளே செல்ல முடியும். அதிகாரிகளுக்கான நுழைவு வாயில், சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் அமைந்திருக்கிறது.இக்கட்டிடம் மிகவும் இன்றைய முக்கிய தலைவலியான, பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழாவண்ணம் பலத்த பாதுகாப்பு  நடவடிக்கைகளை  கருத்தில்  கொண்டு உள்வாங்கி வடிவமைக்கப்பட்டுள்ளன .

புதிய சட்டசபை வளாகத்துக்கு (ஏ பிளாக்) தனி துணை மின்நிலையம், தனி தொலைபேசி இணைப்பகம், தகவல் தொழில்நுட்ப வசதிகளை நிர்வகிப்பதற்காக எல்காட் பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. ஏ பிளாக்கை அமைப்பதற்கு மட்டுமே இரவு பகல் பாராமல் நாள் ஒன்றுக்கு  4 ஆயிரம் தொழிலாளர்கள் சுமார் ஒரு வருடம்   உழைத்துள்ளனர். முதல்வர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் சுவாமி சிவானந்தா சாலை-அண்ணா சாலை சந்திப்பு அருகே அமைந்திருக்கிறது. முதல்வரின் அலுவலக அறை, இந்த மாடியின் 6-வது தளத்தில் அமைந்துள்ளது. அவர் அறையின் வலது பக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு அரங்கும், இடது பக்கத்தில் அமைச்சரவை கூட்ட அரங்கும் அமைந்திருக்கிறது.

பொதுத்துறை, நிதித்துறை, உள்துறை, திட்டங்கள் துறை, சட்டத் துறை ஆகிய முக்கியத் துறையின் செயலாளர்களில் அலுவலக அறைகள் ஏ பிளாக்கில் அமைந்திருக்கிறது. சட்டசபை செயலாளரின் அலுவலக அறை சட்டசபைக்கு அருகே தரைத் தளத்தில் அமைந்திருக்கிறது. மற்ற செயலாளர்களின் அலுவலக அறை, 6-வது தளத்தில் அமைந்திருக்கிறது.முதல்வரின் அறைக்கு எதிரே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அழகிய மாடிப் பூந்தோட்டம் அமைந்திருக்கிறது. பூங்கா போல் இந்தத் தோட்டம் வடிவமைக்கப்படும். ஓய்வு எடுப்பதற்கும், காற்றோட்டமாக உரையாடுவதற்கும் இத்தோட்டத்தை முதல்வர் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பதும் சிறப்பு. இந்த தோட்டத்தைச் சுற்றி பாதுகாப்பிற்காக கண்ணாடிச் சுவரும் அமைக்கப்பட்டிருக்கிறது.

ற்றொரு ரூப் கார்டன் நூலக வட்டத்துக்கான கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. 9 ரிக்டர் ஸ்கேலில் பூகம்பம் வந்தாலும்., சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகக் கட்டிடங்கள் அனைத்தும், பூகம்பத்தை தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.தீவிபத்துக்கள் முற்றிலுல் தவிர்க்கும் வண்ணம் அபாரமான பாதுகாப்பு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் குளுகுளு வசதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பொதுப்பணித்துறை வரலாற்றில், இந்த கட்டிடம் சரித்திர முக்கியத்துவம் பெற்ற கட்டிடமாகும். இதை புறக்கணிப்பது மிகவும் நகைப்புக்குரிய செயல் அன்றி வேறில்லை.
 
 கட்டிடக்கலை வல்லுனர் Hubert Nienhoff
ருவரை,ஒருவரின் படைப்பை பற்றி குறை சொல்லும் முன்னர் அவரின் படைப்புகளை பற்றி தெரிந்துகொண்டு பேசத்துவங்குவதே சாலச்சிறந்தது.சென்னை சட்டசபை வளாகத்தை திறம்பட வடிவமைத்தவர் இந்த படத்தில் இருக்கும் பெர்லினைச் சேர்ந்த  தலைமை கட்டிடக்கலை வல்லுனர் Hubert Nienhoff  என்பவராவார். அவரது gmp- von Gerkan, Marg und Partner Architects இணையதளத்தின்  சுட்டி  இது. உள்ளே சென்று சிறிது நேரம் செலவிட்டு அவர்களின் போர்ட் ஃபோலியோவையும்,கேலரியையும் பார்வையிடுங்கள். இந்த நிறுவனத்தினர் உலகெங்கிலும் இது வரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டசபை வளாகங்களை வடிவமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது , சட்டசபை கட்டிட வடிவமைப்பில் இவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் என்றால் மிகையில்லை. முன்னாள் அமைச்சர் உரை முருகன் செய்த உருப்படியான செயல் இவர்களை வடிவமைக்க கூட்டிக் கொண்டுவந்தது தான். சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நாட்களில் இந்த வடிவமைப்பு வேலைக்கு உள்நாட்டு வல்லுனரை அழைக்காமல் இப்படி அந்நியரை கூட்டி வந்துள்ளனரே?!!! என்று எனக்கு மிகுந்த கோபம் இருந்தது. ஆனால் அதன் கண்டெம்பொரரியான,கார்பொரேட் லுக் பொருந்திய தோற்றத்தையும் ஏனைய ஒப்பில்லாத சிறப்பம்சங்களையும் எண்ணிப் பார்க்கையில் இக்கட்டிட வல்லுனர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் புரிகிறது. 

ஒரு கட்டிடத்தை இவ்வளவு துரிதமாக வடிவமைப்பதும், அதை இவ்வளவு துரிதமாக சிறப்பாக கட்டி முடிப்பதும் அத்தனை எளிதல்ல என்பதை ஆணித்தரமாக இங்கே பதிவு செய்கிறேன்!!!
=====0000=====
சட்டசபையின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!!!

View Larger Map
 

=====0000=====

தொடர்புள்ள என் மற்றொரு பதிவு:- எல்லோர்க்கும் சமகல்வி என்னும் எட்டாக்கனி!!!

23 comments:

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு. ஏற்கனவே கேள்விப் பட்ட பல தகவல்கள், நல்லதொரு நினைவு மீட்டலாய் அமைந்தது. உலகின் முதல் பசுமை சட்டமன்றமும் இது தான் என்றுக் கேள்விப் பட்டேன். பதிவுக்கு நன்றிகள். எனது பதிவில் இந்தப் பதிவுக்கான ஒரு இணைப்பைக் கொடுத்துள்ளேன் சகோ.

மீனாட்சி சுந்தரம் - Meenatchisundaram சொன்னது…

இதற்கு மேல் அற்புதமாக இந்த விசயத்தை சொல்ல முடியாது, நீங்கள் கொடுத்த details நெட்டில் எங்கும் இல்லை . அண்ணா பல்கலை கட்டடக் கலை பேராசிரியர் எழுதிய கட்டுரையை இங்கே காணவும்:
http://www.hindu.com/mag/2010/03/28/stories/2010032850010100.htm
சும்மா வெளியில் இருந்து பார்த்து விட்டு தண்ணிதொட்டி கமெண்ட் அடிப்பவர்கள் உங்கள் கட்டுரையை படித்த பின் சிந்திப்பார்கள். என் ஏக்கமெல்லாம் B.V Doshi, Charles Correa போன்ற உலகத் தரம் வாய்ந்த கட்டடக் கலைஞர்கள் இந்தியாவில் இருக்கும் பொது ஜெர்மனியிலிருந்து ஏன் வரவழைக்க வேண்டும் என்பதே. இவ்வளவு செலவு செய்து உருவாக்கி வீணடிப்பது நம்மால் மட்டும் தான் முடியும்.

...αηαη∂.... சொன்னது…

தஞ்சாவூருல இப்டி தான் 15 வருஷத்துக்கு முன்னால ஒரு பாலம் கட்ட ஆரம்பிச்சாங்க.. ஆட்சி மாறி மாறி இன்னும் முடிக்கவே இல்ல...,

பெயரில்லா சொன்னது…

பொதுமக்கள் குவிகின்றனர்: புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் பார்க்க பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. குடும்பத்துடன் வருபவர்கள் 6 மாடிக் கட்டடத்தை சுற்றிப்பார்த்து வருகின்றனர். காலி செய்யப்பட்டிருக்கும் முதலமைச்சர் அறை, தலைமைச் செயலர் அறை, துணை முதல்வர் அறை மற்றும் துறைச் செயலர்களின் அறைகளை பார்வையிட்டு வருகின்றனர். அங்கிருக்கும் கூட்ட அரங்கு, வரவேற்பறை, பார்வையாளர்கள் அறை என ஒவ்வொரு பகுதியாகச் சென்று பார்க்கின்றனர். 6வது மாடியிலிருந்து நகர்ப்பகுதியையும், போக்குவரத்தையும் ரசிக்கின்றனர். பலர் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.

பெயரில்லா சொன்னது…

நம் வீட்டு தேள் கொட்டினால் அது வலிக்காமல் இருக்காது ..பிறர் வீட்டு தென் இனிக்காமல் இருக்காது "..... இங்கு கருத்து கூறும் சிலர் துளியளவும் சிந்திக்காமல் சொல்லும் ஒரே பதில் ...இந்த புதிய கட்டிடம் சினிமா செட்டிங் மாதிரி உள்ளது .... அது பாண்டிச்சேரி போலீஸ் கேப் மாதிரி உள்ளது என்பது போன்ற நடை முறைக்கு ஒத்து வராத கருத்துக்கள் ... எனக்கு பிடித்த ஒன்று மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை வைத்து ஒரு அரசு எங்கிருந்து செயல் படும் என்றா தீர்மானிப்பது ? அறிவீனம் !! மு க ஒழிக்க பட வேண்டிய சக்தி என்றால் .. ஜெயா தன்னை தானே அழித்து கொள்ளும் ஒரு சக்தி .. இங்கு புதிய அலுவலகம் வேண்டாம் என்று சொல்லும் யாராவது பழைய அலுவலகத்திற்கு சென்று பார்த்து இருக்கிறீர்களா ? நான் சொல்வது நாமக்கல் கவிஞர் கட்டம் ( பழைய தலைமை செயலகத்தின் உள்ளே இருக்கும் கட்டிடம் )...போயிருந்தால் மீண்டும் உள்ளே செல்ல மாட்டீர்கள் அந்த அளவுக்கு மோசமான ஒரு கட்டிடம்...முழுக்க நாற்றம் அடிக்கும் ..நான் அங்கு பல முறை சென்று வந்திருக்கிறேன் . அங்கு பனி புரிந்தவர்களை கேளுங்கள் ..அவர்கள் சொல்லுவார்கள்.. முதலில் அங்கு இட பற்றாக்குறை .. மேலும் சரியான பாதுகாப்பு வசதிகள் செய்ய முடியாததால் பல ப்ரோக்கர்களும் கட்சி ஆட்களும் பல வழிகளில் உள்ளே நுழைந்து வெளியே வரலாம் ... ஏன் தீவிரவாதிகள் கூட எளிதில் தாக்க கூடிய அளவில் தான் உள்ளது ... ஜெயா ஒரு முறை கூட புதிய கட்டிடத்திற்குள் செல்லவில்லை ... சப்பை கட்டு காரணம் .. சினிமா செட்டிங் போல இருக்கு ... அப்படி சொல்பவர்கள் இந்த புதிய கட்டிடம் பிரமாண்டமாக இருப்பதை தான் ஒத்து கொள்கிறார்கள் ... ஆனால் கட்டியது மு க என்பதால் மனம் ஏற்க மறுக்கிறது ...இது தான் வெறி என்பது ... இது அறிவீனம் ... ஜெயா தனக்கு தானே புதுபுது பிரச்சனைகளை உருவாக்கி கொள்பவர் என்பது நித்தம் ... அரசு ஊழியர்கள் குறைந்தது 3000 வசதியாக பணி புரிவார்களா அல்லது ஒருவருக்கு அந்த கட்டிடத்தை பிடிக்கவில்லை என்பதற்காக இப்படியும் அப்படியும் அலைந்து கொண்டு இருப்பார்களா ? கட்சி சார்பற்று சிந்தியுங்கள் ! நான் இங்கு லண்டன் பனி புரிகிறேன் .. இங்கு உள்ள கவுன்சில் அலுவலகம் கூட அழகாக பராமரிக்க படுகிறது ... நான் அ தி மு க என்பதை விட வரிகளை ஒழுங்காக கட்டும் இந்தியா பிரஜை என்பது எனக்கு முக்கியம் ... அந்த வரியினை வீனாகுபவர்களை மக்கள் பார்த்து கொள்வார்கள் ! ஐந்து வருடம் கழித்து புலம்புவதில் பலன் இல்லை !!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

மு க ஒழிக்க பட வேண்டிய சக்தி என்றால் .. ஜெயா தன்னை தானே அழித்து கொள்ளும் ஒரு சக்தி //

:))

பசுமைக் கட்டிடங்கள் வரவேற்கப் படவேண்டிய ஒன்று. கட்டிடத்தைக் குறை கூறிப் பயனில்லை ஆனால் கட்டத் தேர்ந்தெடுத்த இடம் தவறு என்பது என் எண்ணம்.

ஐடி கம்பெனிகள் என்று ஒன்று வரவில்லை என்றால் பெருங்குடி தாண்டி செல்போன் சிக்னல் கூட ரீச் ஆகி இருக்காது. தெரு விளக்கோ சாலைகளோ வந்திருக்காது. சென்னையின் வளர்ச்சி என்பது மவுண்ட்ரோடோ பீச் ரோடோ மட்டுமல்ல. இந்தக் கட்டிடத்தை சென்னைக்கு வெளியே அமைத்திருந்தால் நல்ல சாலை வசதிகள் மின்சாரம், மக்கள் நகர்வு போன்று பல நல்ல விஷயங்கள் ஏற்பட்டிருக்கும். தொலை நோக்குப் பார்வையே தமிழக அரசியல்வாதிகளுக்குக் கிடையாது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சிறப்பான தகவல் தொகுப்பு!:)

கும்மாச்சி சொன்னது…

மிக அருமையான அதே சமயத்தில் காலத்திர்கேற்றப் பதிவு. என்ன செய்வது ஒன்று பிசாசு ஆட்சி, மற்றொன்று பேயாட்சி.

Selvakumar சொன்னது…

இதுதான் அம்மாவின் ஆட்சி. இனி தி மு க ஆட்சியில் கட்டப்பட்ட அணைத்து கட்டிடம் மற்றும் பாலங்கள் முடுவதாக செய்தி வரும். அடுத்து தி மு க ஆட்சியில் போடப்பட்ட அணைத்து சாலை களும் மூடப்படும். ஆனால் மக்கள் அரசிடம் எதிர் பார்ப்பது இதையல்ல. நல்ல ஆட்சியை கொடுங்கள். பல கோடி செலவிட்டு உருவாக்கியதை ஏன் முடக்குகிறீர்கள்.

பெயரில்லா சொன்னது…

எனக்கு ஒரு டவுட்..... முன்னாள் முதல்வர் எதற்காக புதிய சட்டசபை கட்டினார்.... அவர் நிணைத்திருந்தால் பழைய கட்டிடத்தையே புதுப்பித்திருக்கலாமே??

Prakash சொன்னது…

One more..

முந்தைய திமுக அரசு மாணவர்கள் நலன் கருதி கொண்டுவந்த சமச்சீர் கல்வி புத்தகங்களை அழிக்க அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=54208

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அருமையான் பதிவு

MSK / Saravana சொன்னது…

அருமையான பதிவு கீதப்ப்ரியன்..

வெறும் ஈகோவுக்காக இப்படி செய்கிறார்கள்..

உலக சினிமா ரசிகன் சொன்னது…

ஜெ மாறவேயில்லை.அதே பால்கனி தரிசனம்.
அதே எடுத்தேன்...கவிழ்த்தேன்.
புதிய சட்டசபை பில்டிங் பற்றிய தகவல்கள் பிரமிக்க வைத்தது.

Joe சொன்னது…

விரிவான இடுகை!
எங்கேருந்து இவ்வளவு தகவல்களைத் திரட்டுகிறீர்கள், கார்த்திக்?

பெயரில்லா சொன்னது…

கோட்டையில் புதுப்பிக்கப்படும் தமிழக சட்டசபையில், எதிர்க்கட்சி வரிசையில் ஆளுங்கட்சி அமரும் வகையில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சபாநாயகர் இருக்கையும் எதிர்புறத்துக்கு மாற்றப்படுகிறது.

தமிழக சட்டசபையில், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரே மேஜை தான் முன்னர் இருந்தது. இதனால், மிக அருகிலேயே இரு தரப்பினரும் பேசிக் கொள்ள வாய்ப்பு இருந்தது. இந்த வசதி, சில சமயங்களில் பிரச்னைகளுக்கும் காரணமானது. 1996 - 01ல் தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சி முன்வரிசையில் அமர்ந்திருந்த தாமரைக்கனி, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை மூக்கில் குத்தினார். அதேபோல, 1989ல் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஜெயலலிதா அதை தடுத்ததால், கைகலப்பு ஏற்பட்டு, ஜெயலலிதா சட்டசபையில் அவமானப்படுத்தப்பட்டார். இதன் பின், 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின்னர் நடந்த முதல் கூட்டத் தொடரில், ஆளுங்கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் காரணமாக, சட்டசபையில் இருக்கை வசதிகள் மாற்றியமைக்கப்பட்டன. ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி விடப்பட்டது. எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்கள், ஆளுங்கட்சி வரிசைக்கு வர முடியாதபடி இருக்கை வசதிகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக, சட்டசபைக்குள் அனைவருக்கும் இருக்கை அளிக்க முடியாமல், வெளியே, "லாபி' வரை இருக்கைகள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியே இருந்ததால், அவர்கள் பேசும் போது, "மைக்' ஆபரேட்டர்களுக்கு தெரியாத நிலை இருந்தது. இதற்காக, அங்கு கேமராக்கள் வைக்கப்பட்டு, அதை பார்த்து, அவர்களுக்கு "மைக்' இணைப்பு கொடுக்கப்பட்டது.

இவ்வளவு மாற்றங்களுக்கு பிறகும், புதிய சட்டசபை வளாகம் அமைக்கப்பட்டது. அதனால், இங்கிருந்த சட்டசபை செயலகம் அங்கு மாற்றப்பட்டது. கோட்டையில் இருந்த சட்டசபையில், இருக்கைகள் அகற்றப்பட்டு, தரை சமமாக்கப்பட்டு, செம்மொழி நூலகமாக மாற்றப்பட்டது. தற்போது அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தவுடன், கோட்டையில் உள்ள பழைய சட்டசபையிலேயே கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த சட்டசபையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவ்வாறு புதுப்பிக்கும் போது, 2006க்கு முன் இருந்த முறைப்படியே, இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதாவது, ஆளுங்கட்சி வரிசைக்கும், எதிர்க்கட்சி வரிசைக்கும் இடையேயான இடைவெளி பழையபடி குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மற்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. அதே நேரத்தில், சபாநாயகர் இருக்கையை, ஏற்கனவே இருந்த இடத்துக்கு எதிர்புறத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் இருக்கை வடக்கு பார்த்து முதலில் இருந்தது. அதை மாற்றி, தெற்கு பார்த்து தற்போது வைக்கப்படுகிறது. எப்போதும், சபாநாயகருக்கு வலது கை பக்கம் தான், ஆளுங்கட்சி வரிசை இருக்கும். சபாநாயகர் இருக்கைக்கு வலது பக்கம் உள்ள ஆளுங்கட்சி வரிசையின் முதல் இருக்கையில் முதல்வருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அதன்படி, தற்போது சபாநாயகர் இருக்கை எதிர்புறத்துக்கு மாற்றப்படுவதால், ஆளுங்கட்சி வரிசையும் எதிர்புறத்துக்கு மாறுகிறது. அதாவது, முன்னர் எதிர்க்கட்சியினர் அமர்ந்திருந்த வரிசை, தற்போது ஆளுங்கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த வரிசையில் முதல் இடம், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்படுகிறது. முந்தைய சட்டசபையில், ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு, தனிப் பெரும்பான்மை இல்லாததால், ஆளுங்கட்சி வரிசையில், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு 150 உறுப்பினர்கள் உள்ளதால், இவர்களில், சிலருக்கு எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்படும்.

சபாநாயகர் இருக்கையின் வரலாறு: கோட்டையில் உள்ள சபாநாயகர் இருக்கை, கடந்த 1922ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி, அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெலிங்டன் மற்றும் லேடி வெலிங்டன் ஆகியோரால் பரிசாக அளிக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் அன்று காலை 11.05 மணிக்கு நிறைவேற்றப்பட்ட போது, இருவரும் கலந்து கொண்டனர். அப்போது சபை தலைவராக ராஜாஜி இருந்தார். சபாநாயகரின் இருக்கை எட்டு அடி உயரம் கொண்டது. சிறந்த தேக்கு மரத்தால் ஆனது. கலை நுணுக்கம் மிகுந்த இந்த இருக்கையில், அமரும் தலைவர் சில ரகசிய தாள்களை வைத்துக் கொள்ளவும், எழுதிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டசபை வளாகம் அமைத்தபோது, இந்த இருக்கையை அங்கு கொண்டு செல்லாமல், அதே மாதிரியான தோற்றம் கொண்ட புதிய இருக்கை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு. உலகின் முதல் பசுமை சட்டமன்றமும் இது என்றுக் கேள்விப் பட்டேன். பதிவுக்கு நன்றிகள்.

Pl allow me to republish your Post as a record of our TN Assembly.
Please..,
Rgds
Gokul

பெயரில்லா சொன்னது…

அவசரக் கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டு, கட்டடம் முழுமைப் பெறாத நிலையில் அவசர அவசரமாக திறப்பு விழா நடத்துவதற்காக மேல் கோபுரம் அமைப்பதற்காக ரூ.3 கோடியில் செட்டிங் போட்டது மக்கள் வரி பணம் இல்லையா? இது உங்கள் அறிவுக்கு தெரியவில்லையா?

Prabhu Rajadurai சொன்னது…

தமிழ்ப்பதிவுலகு இன்று இருக்கும் சூழ்நிலையில் துணிச்சலான பதிவு...

Prabhu Rajadurai சொன்னது…

ஆனால் ஒன்று, கலைஞர் இந்த கட்டிடம் கட்டுவதில் காட்டிய அதீத ஆர்வம், அவசரம், அவரும் ஏதோ மூட நம்பிக்கையால் உந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அப்போது எழுந்தது. புதிய முதல்வரின் தற்போதய அறிக்கை, 'கட்டிடம் அவரது வாஸ்து படி மாற்றி அமைத்து தீட்டு கழிக்கப்பட்டவுடன் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

பெயரில்லா சொன்னது…

Construction of the Legislative Assembly of Tamil Nadu in Chennai

The construction of the Legislatvie Assembly Chennai, Tamil Nadu tender was grabbed by GMP, a German based Partnering construction company, which now constructs the building for Legislative assembly,Chennai, Tamilnadu. GMP is the united version of Meinhard von Ferkan and Volkwin Marg, who have erected all major buildings in Berlin, Germany and Russia and China. The GMP company that builds the Legislative assembly Chennai Tamilnadu aims at buling the Tamil Nadu Secretariat based on the culture and tradition of Tamil Nadu, says one of the officials of GMP. The contract was signed between the Govt. of Tamil Nadu and GMP, in association with the PWD of Chennai, Tamil Nadu. The building is said to have constructed in a well spaced manner and can accommodate all the Government employees and their offices, including the Assembly Hall.

Construction Geometry of the Secretariat, Chennai, Tamil Nadu

The Goemetrical structure of the Secretariat, Chennai is obtained from the traditional architects in Tamil Nadu. The Secretariat is built like a chakra with 36 isoceles triangles in its base which will be turned into offices for the Govt. officials including the Office of the Speaker. There is also a car parking lot, that can accommodate more than 500 cars, which is developed as a multi-storyed building, to the left of the complex. There are totally 4 dooms, where the Offices of the officials, Assembly, Conventional hall and the Legislative Assembly chamber are placed. The building's design was approved by the Chief Minister of Tamil Nadu, Kalaignar Karunanidhi.

Modifications in the Secretariat complex, Tamil Nadu

The first proposed 5 dooms are now changed into 4 and instead of the 5th doom, a 20 floor complex is about to rise up. With the completion of this 20 floor building, the Secretariat, Chennai will be the tallest building in Chennai City, Tamil Nadu. The building is proposed to accommodate all the Govt. offices and the officials within the complex. Special entrance for the public is provided to the complex from the car parking lot. The public may have to walk along the distance to get to the other end of the building to reach the official building and get their works done.

பெயரில்லா சொன்னது…

Don't think K.K only can do this. ( DMK wants to prove it by this building). In 201-2006 JJ period DMK stops to built new building. The real reason every one will known ( include DMK & ADMK ). If that is the DMK style means, This ADMK style. But loss and profit will be same at end of 5 years.

nidurali சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
nidurali சொன்னது…

அருமையான விளக்கப் படத்துடன் சிறப்பாக எழுதப்பட்ட கட்டுரை. நாம் திறந்த மனதுடம் மக்கள் பார்வைக்கு நிகழ்வுகளை கொண்டு செல்வது நம் கடமை . ஒரு கட்சியோடு ஒட்டிக்கொண்டவருக்கு இது பிடிக்குமோ! பிடிகாதோ ! என்பதனை பற்றி எண்ணாமல் உங்கள் கடமையினை திறம்பட செய்தமைக்கு வாழ்துக்கள்.
Please visit
http://nidurseason.wordpress.com
வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)