த கவுன்சிலர் [The Counselor][2013][18+][இங்கிலாந்து]


த கவ்ன்சிலர் படம் பார்த்தேன், அசல் மெக்ஸிக்கன் ட்ரக் டீலிங், போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தில் பங்குதாரரின் ஈவு இரக்கமில்லா துரோகங்கள், முதுகை சில்லிடவைக்கும் கொலைகள் பற்றியும் ,  கார்டல் [சந்தைப் போட்டியாளர்கள்] பற்றியும்  சலிக்க சலிக்கப் பேசுகிறது படம்,  படத்தில் 3 முக்கிய கதாபாத்திரங்களின்  அதி பயங்கரமான கொலைகளை பரபரப்பான கதையோட்டத்தினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார் 76 வயது இயக்குனர் ரிட்லி ஸ்காட்.

 தவிர 2 உப கதாபாத்திரங்களின் பயங்கரமான கொலைகளும் இணைப்பாக உண்டு. இந்தப்படம் குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படமல்ல,நல்ல புரிதலுள்ள ரசனையுள்ள மனைவியுடன் பார்க்க மிகவும் ஏற்றது, அதுவும் பெனலோப்பி க்ரூஸ் தோன்றும் படுக்கையறைக் காட்சிகளை மட்டும் தான் படத்தில் நிகழும் தலையில்லா முண்டக் கொலைகளை அல்ல.

இதற்கு திரைக்கதை எழுதியது   நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென் நாவலை எழுதிய கார்மெக் மெக்கார்த்தி ஆவார். பின்னர் கேட்க வேண்டுமா?  கவித்துவமான டீட்டெய்லிங்கை? படத்தில்  கொலை செய்யும் காட்சிகளிலும்  கூட அத்தனை நுணுக்கமும் ,அழகியலும் தாண்டவமாடுகின்றன,நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்னில் எப்படி கேட்டில் கன் என்னும் கொலைக்கருவி வந்ததோ இதில் பொலிட்டோ என்னும் அதிநவீன கம்பிக்கொலை கருவி வருகிறது.

கார்மெக் மெக்கார்த்தியின் கதைகளில் பிரதானமான தீம் பேராசை, பாவம் , மரணம், அதில் அவரின் கதையின் மாந்தர்கள் ஆப்பசைத்து விட்டு அதில் அகப்பட்டுத் தவிப்பதை மிகச்சிறந்த டீடெய்களுடன் வடிப்பார், இதிலும் அப்படியே, டீடெய்ல்களுக்குப் சற்றும் பஞ்சமில்லை.

பல காட்சிகள் கோயன் சகோதர்களின் டீடெய்லிங்கை நினைவூட்டினாலும் சட்டிலான ஒரிஜினலான டார்க் ஹ்யூமர் என்றால் அது கோயன் சகோதர்கள் தான். மிகப் பெரிய வசனங்கள் தான் இப்படத்தின் பலவீனம், புரிந்தால் மட்டுமே ரசித்துக் கேட்க பார்க்க  முடியும்,


படத்தில் முக்கிய பாத்திரமாக 12 இயர்ஸ் ய ஸ்லேவ் படத்தில் எட்வின் என்னும் கொடிய அமெரிக்க ஆண்டானாக வந்த மைக்கேல் ஃபாஸ்பெண்டர் இதில் வழக்கறிஞராக வருகிறார், இவர் ஆஜர் ஆவது சமூகத்தில் மிகக் கொடிய கிரிமினல்களுக்கும் கார்டெல்களுக்கு மட்டும். சமீப காலமாக வாழ்வில் துரிதமாக செட்டில் ஆக வேண்டும் என்னும் ஆசை கூடவே சேர்ந்து கொள்ள, தன் நண்பன் ரெய்னருடன் [ஜேவியர் பர்டெம்] இணைந்து மெக்ஸிக்கோவின் இன்னொரு பிரபல கார்டல் ஒருவன் கடத்தும் மிகப் பெரிய கோகெய்ன் லாட் அது மொத்தம் 625 கிலோ எடைகொண்டது, அது  கொலம்பியாவிலிருந்து ஒரு  கழிவுநீர் அகற்றும் லாரியின் டாங்கின் உள்ளே பேரல்களில் பதுக்கி வைத்து, அதன் மேலே மலஜலம் நிரப்பி சிக்காகோவுக்கு கடத்தப்படுகிறது. அதன் மொத்த மதிப்பு   20 மில்லியன் அமெரிக்க டாலர்கள், இந்த ஆபத்தான கடத்தலில் இவர்களும் பங்குதாரர்களாகின்றனர்.

செய்யும் முதலீட்டுக்கு 4000 பங்கு வருமானம்  என்னும் கனவு இவரின் விதியை எப்படி? மாற்றி எழுதுகிறது என்பதை மிகவும் சுவையாக நான் லீனியர் யுக்தியில் சொல்லியிருக்கின்றார் இயக்குனர் ரிட்லி ஸ்காட், வந்தால் மலை போனால் உயிர் என்பதை தெரிந்திருந்தும் இறங்கி விடுகிறார் கவுன்சிலர். அது எப்படி பிள்ளையார் பிடிக்க குரங்காகிறது என்பது தான் கதை.

கவுன்சிலர் மற்றும் ரெய்னருக்கும் பொதுவான நண்பர் மற்றும் இடைத் தரகராக வெஸ்ட்ரே [ப்ராட் பிட்],இவர் நடை உடை பாவனையில் ஒரு  ஒரு கவ் பாயும் கூட, மிக ஆபத்தான ட்ரக் டீல்களை சாமர்த்தியமாக முடித்து வைத்து தன் பங்கை வாங்கிக்கொண்டு மின்னலாய் மறைவதில் கைதேர்ந்தவர் இவர். கழுவும் மீனில் நழுவும் மீனைப் போன்றவர். ரெய்னர் எதையுமே கூலாக எடுத்துக்கொள்ளும் ஒரு கேரக்டர், ஆனால் வெஸ்ட்ரே அப்படியல்ல.என்பதை நாம் ஓரிரு காட்சிகள் வசனங்கள் மூலம் புரிந்து கொள்கிறோம்,ஆனால் எத்தனைப் பெரிய எத்தனுக்கும் பலவீனம் என ஒன்று உண்டல்லவா?வெஸ்ட்ரேவுக்கு பெண் தான் பலவீனம்.

கவுன்சிலரின்  ட்ரக் ட்ராஃபிக் கார்டெல் கிங் பின் நண்பராக நம் ஒப்பற்ற வில்லன் ஜேவியர் பர்டெம், இதில் மிக அட்டகாசமாக அண்டர்ப்ளே செய்துள்ளார். இவருக்கு பப்களும், ரெஸ்டாரண்ட்களும் நிரம்ப உண்டு, நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்னில் இவர் செய்த ஆண்டன் சிகர் பாத்திரத்துக்கு எதிர்மாறான பாத்திரம்,இதில் இவர் எலக்ட்ரோ ஷாக் ஹேர்ஸ்டைலுடன் தோன்றியிருக்கிறார். நிறைய பேசும் பாத்திரம், பகலில் விருந்து கேளிக்கை, கூத்தும், இரவில்  கார்டல் கிங் பின்னாக கொஞ்சம் பயந்த சுபாவம் தோய்ந்த கதாபாத்திரம், அதை மிக அநாயசமாக செய்திருக்கிறார்,படத்தில் இவரின் சாவு மிகக் கொடூரமானது  இவர் நெற்றிப் பொட்டில் குண்டடி வாங்கி விழி வழியே உயிர் துறந்து சாகும் காட்சி இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது.இது ஸ்பாய்லர் தான் என்றாலும் ,படத்தின் ஆக்கத்தில் இருக்கும் அபாரமான நம்பிக்கையால் இதை இங்கே பகிர்கிறேன்,படம் நான் 3 முறை பார்த்து விட்டேன்,அப்படி ஒரு ரசனையுடன் எடுக்கப்பட்ட வதைக் காட்சிகள் அவை.



ஜேவியர் பர்டமின் நிஜ மனைவியான பெனலோப்பி க்ரூஸ் இதில் மைக்கேல் ஃபாஸ்பெண்டருடன் அப்படி நெருங்கி நடித்துள்ளார், அப்படி என்றால் அப்படித் தான், முதல் காட்சியே பில்லோ டாக் தான் . வாய்ப் புணர்ச்சியோடு துவங்கி , விரல் புணர்ச்சியில் தான் முடிகிறது அது , அதில் என்ன கொடுமை என்றால் ? கணவன் ஜேவியர் பர்டெமுடன் விக்கி க்ரிஸ்டினா பார்சிலோனாவுக்குப் பிறகு இப்படி இவர் இது போல நெருங்கி நடித்ததில்லை, அது என்னவோ தெரியவில்லை இவ்வருடம் வெளியான உலஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்திலும் இதிலும் பெண்ணின் யோனியை வர்ணிக்கும் கவித்துவமான ரசனையான வசனங்கள் மிகவும் தூக்கலாகவே இருக்கின்றன, அதில் ஜோர்டி கதாபாத்திரம் நயோமியின் யோனி எனக்கு ஹெராயினைப் போன்றது என்று துதி பாடினால், இதில் மைக்கேல் ஃபாஸ்பெண்டர் பாத்திரம் தன் வருங்கால மனைவி லாராவின் யோனி reigns supreme போன்றது என்கிறார்,

 ஆனால் லாரா கதாபாத்திரத்தில் தோன்றிய பெனலோப்பி க்ரூஸும்  மிக கொடூரமாகச் சாகிறார், 8 எம் எம் படத்தில் வரும் ஸ்நஃப் ஃபில்ம் நினைவிருக்கிறதா? அதே போல மிகக் கொடூரமாக தன் வருங்கால கணவன் கவுன்சிலருக்கு பதிலாக பிணையாகப் பிடித்துச் செல்லப்பட்டு மிகக் கொடூரமாக தலை துண்டாடப்பட்டு சாகிறார். இதில் என்ன ஒரு விஷேஷம் என்றால் ? படத்தின் ஒரு காட்சியில் மைக்கேல் ஃபாஸ்பெண்டரும் ப்ராட் பிட்டும் இந்த ஸ்நஃப் ஃபில்ம் பற்றி பேசுவார்கள், அது அசலில் நடக்கையில் நமக்கு  மயிர் சிலிர்க்கும்படி இருக்கும்.

கவ்ன்சிலரின் மற்றொரு நண்பரான ப்ராட் பிட்டின் சாவும்  கர்ண கொடூரமானது,நான் இந்த நிமிடம் கூட காற்றாய் என் பணத்துடன் மறைவேன்,என்று மார் தட்டும் இவரைக் கூட விட்டு வைக்காமல் சாய்த்து விடுவார்கள், இவரின் கொலைக்குத் தான் இந்த பொலிட்டோ என்னும் "Bolito" கருவியை உபயோகப்படுத்தியுள்ளனர், இதன் முன்னோடியை நம் தமிழ் சினிமாவில் ஆனந்தராஜ் மாநகர காவல் படத்தில் பல வருடங்களுக்கு முன்பே உபயோகித்து நிறைய கழுத்துகளை கம்பியால் சுருக்குப் போட்டு அறுத்து விட்டார், ஆனால் இதில் அதே போன்ற தலை அறுக்கும் கொலைக்கருவியில் ஒரு நவீன ரக அதிவேக மோட்டாரும் பொருத்தியுள்ளனர், ரிசல்ட் பிரமாதம்.

 எந்த கட்டிங் ப்ளையராலுமே துண்டாக்க முடியாத ஒரு அலாய் கம்பி  லூப்பில் நயமாக  மோட்டாரும்  இணைக்கப்பட்டிருக்க, அந்த சுருக்கை மேற்படியானவர் தலையில் நுழைத்து கழுத்தில் இறக்கி சுருக்கை விருட்டென இழுக்க, மோட்டார் இயங்க ஆரம்பித்து ஐந்து நிமிடத்தில் மேற்படியானவர் தலையையே அது துண்டாக்கிக் கொடுத்து விடுகிறது. இதில் கவுன்சிலரின்  நண்பரும் இடைத்தரகருமான வெஸ்ட்ரே [ப்ராட்பிட்] இப்படித்தான் கொல்லப்படுகிறார். இதிலும் என்ன ஒரு விஷேஷம் என்றால்? படத்தின் ஒரு காட்சியில் மைக்கேல் ஃபாஸ்பெண்டரும் ஜேவியர் பர்டெமும் இந்த பொலிட்டோ பற்றி விபரமாகப் பேசுவார்கள்,அது அசலில் நடக்கையில் நமக்கு மீண்டும் மயிர் சிலிர்க்கும்படி இருக்கும்.

மேலும் ப்ராட் பிட்டுக்கு இப்படி சாவது ஒன்றும் புதிதல்ல, ஏற்கனவே பர்ன் ஆஃப்டர் ரீடிங் என்னும் கோயன் சகோதரர்களின் படத்தில் ஹாலிவுட்டின் உச்ச நடிகராக இருந்தும்  மிகுந்த சுயஎள்ளலும் கோமாளித்தனமும் கொண்ட CHAD என்னும் கதாபாத்திரத்தில் விரும்பி நடித்ததை இங்கு நினைவு கூறுகிறேன் ,தன் உடன் பணிபுரியும் பருவம் முதிர்ந்த பெண்மணிக்கு உதவ எண்ணி விளையாட்டாய் வேவு பார்க்கச் சென்று அரசின் வருவாய்த்துறை அதிகாரியாக இருக்கும்  கார்ஜ் க்ளூனியின் வார்ட் ரோபுக்குள் போய் இவர் ஒளிவார்,

குளித்து வெளியேறி உடை மாற்ற வார்ட்ரோப் கதவைத் திறக்கும் கார்ஜ் க்ளூனி, இவரைப் பார்த்து பயந்து தான் 20 வருடங்களாக எப்போதுமே உபயோகித்திராத தன் அரசாங்கத் துப்பாக்கியை பயத்தில் இயக்க, ப்ராட் பிட்  மூளை சிதறி அங்கேயே இறந்து விடுவார், 24 கேரட் டார்க் ஹ்யூமரின் உச்சம் அது. அது போல எந்த ஸ்க்ரிப்டானாலும் ஏற்றுச்செய்யும் நல்ல நடிகனான ப்ராட் பிட் இதிலும் கௌரவம் பார்க்காமல் தோன்றி மடிகிறார்.
பர்ன் ஆஃப்டர் ரீடிங் படத்தின் மிக முக்கியமான அந்தக் காட்சி டார்க் ஹ்யூமரின் உச்சம்.கோயன் சகோதரர்களின் மேதமையின் உச்சம்

படத்தில் மிக முக்கியமான வில்லிக் கதாபாத்திரத்தில் கேம்ரூன் டயஸ் தோன்றியிருக்கிறார், கார்மெக் மெக்கார்த்தியின் ஆண்டன் சிகார் கதாபாத்திரம் போலவே இதில் மல்கினா என்னும் கதாபாத்திரம் மிகவும் தத்ரூபமாக வந்திருக்கிறது, சிறுவயதிலேயே பெற்றோரை ஹெலிகாப்டர் விபத்தில் பறிகொடுத்த மல்கினா,வயிற்றுப் பிழைப்புக்காக பாரில் நடனமாடத் துவங்கியவள் தன் தொழில் கொலைசெய்வதும், குடி கெடுப்பதுமே எனத் தெளிந்தவள்,நிரந்தரக் கொலையாளியாகிறாள்,

 ஒருகட்டத்தில் இவளுடன் பழகுபவர்கள் அடுத்தடுத்து துடி துடித்துச் சாகின்றனர். ஆடவர் அசந்தால்  முதுகில் ஐஸ் கத்தியை இறக்கிவிட்டு நகரும் விட்ச் பாத்திரம், இதில் சிறுத்தைப் புலிகள் இரண்டை வளர்க்கிறார், அவற்றின் கழுத்தை அலங்கரிக்கும் தங்கத்தில் வைரம் பதித்த நெக்லேஸ் வேறு, இவளின் பிரதான பொழுதுபொக்கே அவற்றை முயல் வேட்டைக்கு தன் காதலன் ரைனருடன் [ஜேவியர் பர்டம்] அழைத்துச் சென்று முயல்களை அவை துரத்திச் செல்வதை பைனாகுலரில் பார்ப்பதும் அதன் பின்னே குதிரைச்சவாரி செய்வதும்  தான் . படத்தில்  அந்த சிறுத்தைகள் செய்யும் டார்க்ஹ்யூமர் கூத்தும் பிரமாதமான ஒன்று.

இதில் முக்கியமாக, காமரூன் டயஸ் தன் புதிய காதலன ரெய்னரின் மஞ்சள் நிற ஃபெராரி காரின் மீது மையலுற்றவள், தன் உள்ளாடையை அவிழ்த்து ரைனரிடம் தந்து விட்டு அவனை வாயில் எச்சில் வழிய பார்க்க வைத்து விட்டு,காரின் விண்ட் ஷீல்டின் மீது ஏறி அதை ஆடவனாக நினைத்து வுமன் ஆன் டாப் பொசிஷனில், கால்களை ஜிம்னாஸ்டிக்ஸ் செய்வது போலவும், போல் டான்சர் போலவும் பல்வேறு கோணங்களில் சுயமைதுனம் செய்கிறாள், அந்தக்காட்சியும் மிக அரிதான மிக அற்புதமான மிகப் புதுமையான  காட்சியாகும்.

படத்தில் கவுன்சிலர் என்னும் பாத்திரத்தின் அசல் பெயர் எங்குமே உச்சரிக்கப்படவில்லை, படத்தில் அவர் தன் காதலிக்காக நிச்சயதார்த்த மோதிரம் வாங்கசெல்லும் ஆம்ஸ்டர்டேமில் வைர வியாபாரியாக வரும் டவுன்ஃபால் திரைப்படத்தின் ஹிட்லர் பாத்திரப் புகழ் ப்ருனோ கான்ஸ் நமக்கு, வைரத்தை எப்படி சோதித்துப்  பார்த்து அதன் தரத்தை அறிந்து வாங்க வேண்டும் என்று மிக அழகாக பாடம் எடுக்கிறார். மிக அருமையான காட்சி அது, அதே வைரத்தை ஒரு ஸ்பாவில் வைத்து பெனலூப்பி க்ரூஸின் விரலில் மோதிரமாகப் பார்க்கும் கேமரூன் டியஸ் அதன் தரத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச் சொல்லும் இடம் அருமையான காட்சி.

படத்துக்கு ஐஎம்டிபி ரேட்டிங் கருமம், ராட்டன் டொமெட்டோ கருமங்கள் எதையும் படிக்காமல் ஆராயாமல் கார்மெக் மெக்கார்த்திக்காகவும், 38 வயது ஹாட் மாமா பெனலோப்பி க்ரூஸுக்காகவும் , நம் அசகாய வில்லன் ஜேவியர் பர்டெமுக்காகவும், ப்ராட் பிட்டுக்காகவும், நம்பிக்கை நட்சத்திரம் மைக்கேல் ஃபாஸ்பெண்டருக்காகவும், இவ்வாண்டின் மிகக் குரூரமான  வில்லியான கேமரூன் டயாஸுக்காகவும் , படம் கொண்டிருக்கும் உன்னதமான இன்னபிற டீடெய்களுக்காகவும் அவசியம் பாருங்கள். உலக சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத படம்.

பொலிட்டோவைப் பற்றி ஜேவியர் பர்டெம் விவரிப்பதைப் பாருங்கள்


இது கேமரூன் டயஸ் மற்றும் பெனலோப்பி க்ரூஸ் தோன்றும் காட்சிகளின் தொகுப்பு ,18+ மட்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)