மராமத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மராமத்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பழைய வெங்கல மணியை பழுது பார்த்த அனுபவம்

வீட்டில் பழைய வெங்கல  பூஜை மணி இருந்தது, பூஜையில் மணி அடிக்கையில் அதன் முத்து கம்பியுடன் கழன்று விழுந்து விட்டது,(ஒரு லட்சம் அடி மட்டும்  mileage என்று கங்கணம் கட்டி செய்திருப்பார்கள் போல ) அதை பற்ற வைக்க பல்லாவரம் மார்க்கெட் மற்றும் நிறைய வெல்டிங் கடைகளில் கேட்டு பார்த்தேன், யாரும் அத்தனை சிக்கலான குறுகிய துளைக்குள் வெல்டிங் செய்யத் துணிந்து வேலையை எடுக்கவில்லை,

கடும் அலைச்சலுக்கு  புதிய மணி 800₹ க்கு வாங்கலாம் தான், ஆனால் ஆகி வந்த பொருள் ஆயிற்றே , ஆன வரை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்ற கொள்கை உள்ளதே  என்று மணியை வண்டியின் திறந்த வெளி பெட்டியில் தலைகீழாக இட்டு அலைந்தேன்,வண்டி ஓடுகையில் கிணிகிணியென ஒரு வாரமாக சத்தம் இந்த அலுவலை நினைவூட்டியபடியே இருந்தது,(யாரும் இந்த பளபள வஸ்துவை திருடிச் செல்லவில்லை பாருங்கள்)

குரோம்பேட்டை ஆர்ச் திரும்புகையில் இந்த திறந்த வெளி வெல்டிங்கடைக்காரர் பெயர் பலகை உச்சி வெயிலில்  கண்ணில் பட, நிறுத்தி போன் செய்தேன், தான் அடுத்து கடைக்கு வரும் நேரம் சொன்னார், நேற்று பிள்ளைகளை பள்ளியில் விட்டு விட்டு பூங்காவில் ஓட்டப்பயிற்சி சென்றுவிட்டு, அவரை அழைத்து இப்போது வரலாமா எனக்கேட்டு காலை 9-10 க்கு சென்று விட்டேன்,

திறந்த வெளி கடைக்கு கோணிப்பை பிரித்து திறக்கும் முஸ்தீபுகள் மட்டும் பத்து நிமிடங்கள் ஆகின்றன, பின்னர் gas குழாய்களை ஐந்து நிமிடம் சீராக பரப்பி சுருட்டல்களை நீவி சீராக்கி நம் வேலையை துவங்கினார், சிறிய வேலை தான் ஆனால் நச்சு பிடித்த வேலை, இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகி விட்டது, அழகாக பெரிய வளையத்தை மணிக்குள் பொருத்தி வெல்ட் செய்த பின், புதிய கம்பியை வளைத்து அதில் வெங்கல முத்தை பொருத்தி இணைத்து பற்ற வைத்து தந்தார்,

டிரம் டீ காரார் சென்றால் டீ வாங்கி தரலாம் என தேடினேன், தென்படவில்லை, அருகிலும் டீ கடை இல்லை, வேலை முடித்து சூடு ஆறுகையில்  எவ்வளவு என கேட்டேன், 150₹ என தயங்கியபடி சொன்னார், கண்டிப்பாக தகும், அத்தனை சூடு மணியில், மகிழ்வுடன் வாங்கிக்கொண்டார், முதல் போணி பேரம் பேசாமல் தந்தீர்கள் சார் என்றார், அவரிடம் 250₹ சொன்னாலும் தந்திருப்பேன், காரணம் வேலை அதிகம் என்று சமாதானம் செய்து விட்டு வந்தேன்.

உங்களிடம் நச்சு பிடித்த ஏதாவது பற்ற வைக்க வேண்டிய பழைய பொருள் இருந்தால் திரு.ராஜாவை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு நேரம் குறித்துக்கொண்டு குரோம்பேட்டை லலிதா ஜுவல்லரி பக்கவாட்டு சாலையில் ஆர்ச் அருகே எடுத்து போய் கொடுங்கள்,கையோடு சுணங்காமல் பற்ற வைத்து பழையபடி செய்து தருவார்.

எனக்கு ஒருவழியாக இந்த conservation  பணி இனிதே முடிந்தது.

conservation: not allowing something to be wasted, damaged or destroyed.

புறநகரில் ஏசிக்கு ட்ரிபிள் பூஸ்டர் எத்தனை முக்கியம்?

போன வாரம் எங்கள் பகுதி transformer ல் மின் அழுத்தம் அதிகம் வந்ததால் எங்கள்  வீட்டு ஏசியின் ட்ரிபிள் பூஸ்டர் டைப்ரைட்டர் அடிப்பது போல அதீத சத்தமிடத் துவங்கியது ,

 8 வருடங்களுக்கு முன் 7500₹  க்கு வாங்கிய ட்ரிபிள் பூஸ்டர்,Everest brand,  நான் ட்ரிபிள் பூஸ்டர் வாங்கக் காரணம் பம்மலின் மின்சார வாரிய ட்ரான்ஸ்ஃபார்மர்களில் இருந்து வரும் அதி உயர் (300 v)அல்லது அதி குறைந்த மின் அழுத்தம்(90v)

90v  குறைந்த மின்அழுத்தம் வந்தாலும் ஏசி வேலை செய்யும், compressor இயங்கி அறையை குளிரூட்டும் ,இது வரையில் எங்கள் ட்ரிபிள் பூஸ்டர் ஏசியை சிறு சேதாரமுமின்றி காப்பாற்றியது என்றால் மிகையில்லை.

பழுதான ட்ரிபிள் பூஸ்டரை கழற்றிக் கொண்டு போய் குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் பக்கத்து தெருவில் உள்ள அதன் சர்வீஸ் சென்டரில் தந்தேன், இருங்கள் உடனே பார்க்கிறேன் என்று அரைமணி நேரத்தில் அதன் பழுதாகியிருந்த relay வை மாற்றி கையோடு தந்துவிட்டார் அங்கு பணிபுரியும் ஒரே தொழில்நுட்பவல்லுனர், 
இதற்கு 410₹ ஆனது.

உண்மையிலேயே சரியான வேகம், சரியான கணிப்பு, அங்கேயே தாமதமின்றி பழுது நீக்கி உடனே தந்துவிடுகிறார், அவர் ஒரு மாற்று திறனாளி, தொடர்ந்து வாடிக்கையாளர் கொண்டு வரும் ஸ்டெப்ளைசர்களை பார்த்து உடனுக்குடன் பழுது நீக்கியபடியே இருக்கிறார்,ஒரே ஒரு ரிசப்ஷனிஸ்ட் ,அவர் இன்வாய்ஸ் இட்டு தருகிறார், சரியான after sales பிஸினஸ் மாடல்,இரவு 8-00 மணி வரை பணி செய்கிறார்களாம்.

என் வீட்டில் இரண்டு everest triple booster உள்ளது, இனி வாங்கினாலும் இதே ப்ராண்ட் தான்  வாங்கலாம் என நினைக்கிறேன்.

என் வீட்டில் LED டிவிக்கு கூட ஸ்டெப்ளைசர் வைத்து 
இணைத்துள்ளேன்,காரணம் இங்கு பம்மல் பகுதியில் அனுமானிக்க முடியாத அதிஉயர் மின் அழுத்தம் அல்லது அதி குறைந்த  மின் அழுத்தம் வருவதால் தான்.

இப்போது நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குகையில் இதற்கு ஸ்டெப்ளைசர் வாங்க வேண்டாம் என்பார்கள், ஆனால் நாம் கண்டிப்பாக ஸ்டெப்ளைசர் பொருத்தவே வேண்டும், காரணம் இப்போது நிலவும் use and throw யுகத்தில் தரமான பொருட்கள் தயாராகி வருவதில்லை,first copy ,replica அச்சுருத்தல் , ஆன்லைனில் விற்கும் பெயரெடுத்த பிராண்டின் கழிசடை சாதனங்கள் என ஏகம் பிரச்சனைகள்,  எத்தனையோ நண்பர்கள் உறவினர்கள்  கடைக்காரர் சொன்னதை நம்பி ஸ்டெப்ளைசர் வைக்காமல் நேற்று மழையில் டிவி போய்விட்டது, ஃப்ரிட்ஜ் போய்விட்டது, ஏசி போய்விட்டது என வருந்தக் கேட்டுள்ளேன்.

வீட்டை கண் முன்னால் அரித்து தின்னும் கரையான்களுக்கு தீர்வு என்ன?

ஒரு பழைய வீட்டை கரையான்கள் எப்படி கண் முன்னே  அழிக்கிறது பாருங்கள்.

கட்டிடம் கட்டுகையில் மண்ணில் நேரிடையாக படும் எந்த காங்க்ரீட் அடித்தளம் footing, pedestal, plinth beam sill beam, மண்ணை நிரப்பி கூராடுகிற பேஸ்மெண்ட் உட்புற சுவர்கள் வெளிப்புற சுவர்கள் மீதும் முறையாக proffessional அமர்த்தி pest control செய்ய வேண்டும்., அப்படி செய்யாவிட்டால் தரைக்கு கீழே கரையான்கள் புற்று கட்டி டைல்களுக்கு கீழே வெற்றிடம் உருவாக்கி base concrete ற்கு கேடு விளைவித்துவிடும்,சுவர்களில் கூட மெல்ல பரவி அரிக்கத்துவங்கும்.

 உங்கள் வீட்டை மாதத்திற்கு ஒரு முறை முழுதாக சுற்றி வந்து நோட்டமிடுங்கள், அங்கு கரையான் புற்று, எறும்பு புற்று, குளவிக்கூடு இருந்தால் அங்கு கரையான் தாக்குதல் உள்ளது என உணருங்கள்,

இதை கவனிக்காமல் விட்டால் சுவரின் சிமெண்ட் பூச்சை குடைந்து , பிணைப்புக் கலவையைக் குடைந்து, செங்கல்லைக் குடைந்து கரையான்கள் உள்ளே சென்று கொண்டே இருக்கும், ஒரு மரக்கதவு,ஒரு மர ஜன்னல் ,rafter என விட்டு வைக்காமல் குடைந்து துளையிட்டு அரித்து விடும்.

இந்த கரையான் துளைகள் ஒரு சுவாச குழாய் போல ஒரு சுரங்கம் போல அமைந்திருப்பதால் பெரு மழைக்காலத்தில் இத்துளை வழியே நீர் புகுந்து சுவர்களை ஓதம் பாய்ச்சி நாசம் செய்து விடும், இதற்கு நல்ல pest control நிபுணர்களை அழைத்து வந்து உலக சுகாதார நிறுவனம் WHO அங்கீகரித்த  பூச்சி மருந்து அடித்து பாதுகாக்க வேண்டும்.

பர்மெத்ரின் டஸ்ட் (permethrin dust )என்ற பூச்சிக்கொல்லி மருந்து  உடனடி பலனை தரக்கூடியது. இது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி என்பதால், இதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு காணப்படக்கூடும். 

இது கரையானை மட்டும் அழித்திடாமல் எறும்பு, குளவி, பை புழுக்கள், தரை வண்டுகள் என பலவற்றையும் அழிக்கிறது.
இந்த கெமிக்கல், வீட்டு முதலாளிகளுக்கும், தொழில் செய்பவருக்கும் பிடித்தமான ஒரு கெமிக்கலும் கூட.

அர்செனிக் டஸ்ட் (arsenic dust  )இந்த கெமிக்கலை ஒரு கரையான் சாப்பிட, இதனால் மற்ற கரையான்களுக்கும் அது உணவாகி உயிரை விடக்கூடும்.

வெப்ப நிலை குறைவான இடத்தில் கரையான் வாழ்வது அரிது.  வெப்பநிலையானது 20 டிகிரி ஃபேரன்ஹீட்டாக இருத்தல் அவசியம். இந்த வெப்ப நிலையை பெறுவதற்கு நீர்ம நிலையில் இருக்கும் நைட்ரஜன்  (liquid nitrogen spray )கொண்டு ஸ்ப்ரே செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் மண் குழாய் தென்பட்டால் உடனே தண்ணீர் பீய்ச்சி அடித்து அந்த கரையான் புற்றைக் கலைப்பது நல்லது.

கல் உப்புக்கு கரையானை அழிக்கும் குணம் உண்டு.
ஒரு ஜாடியில், உப்பு மற்றும் சுடு நீரை சம அளவில் கலந்து வைத்துக்கொள்ளுங்கள், அந்த நீரைக் கொண்டு கரையான் புற்று காணப்படும் இடத்தில் நன்கு ஸ்ப்ரே செய்யுங்கள். இதனால், கரையான் வறண்டு வலுவிழந்து போகும். 

Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன்  படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
#கரையான்_புற்று,#குளவி_கூடு,#borer, #bug,#termite,#pest_control

பழைய கட்டிடங்களை ஏன் மராமத்து செய்ய வேண்டும்?

உங்கள் வீட்டை ஆண்டுக்கு ஒரு முறையாவது மராமத்துப் பணிகள் செய்வது நல்லது, இது போல  ஆலமரம் அரச மரம் எங்காவது சுவர்களில் ,கூரையில் உத்திரத்தில், நீர்தேக்கத் தொட்டியில்  முளைத்த வண்ணம் இருந்தால் அதன் ஆணி வேர் வரை கண்டறிந்து அழித்து விட வேண்டும், 

எங்கெல்லாம் ஈரப்பதம் உள்ளதோ அங்கெல்லாம் பறவைகள் வந்து அமரும், எச்சமிடும், அதில் விதைகள் நாளடைவில் முளைகட்டி இது போல வேர்விட்டு மரமாக வளர்ந்து விடும், கழிப்பறை கழுவும் புகை வரும் Hydrochloric acid ஆசிட் கொண்டு இந்த வேரை அழிக்க வேண்டும், 

ஒரு பெரிய மரம் மண்ணில் வளர்ந்தால் நிழல் தரும், இப்படி வீட்டிற்குள் வளர்த்தால் சுவரையும் கூரையையும் சாய்த்து விடும்.

#முறைவாசல்,#மராமத்து,#வீட்டுற்குள்_மரம்
Geethappriyan Karthikeyan Vasudevan 
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன்  படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே 
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339

சென்னை உயர்நீதிமன்றத்தின் உடைந்த குவிமாட ஊசிமுனை

பதினைந்து வருடங்களுக்கு மேல் கொண்டை ஊசி சரிசெய்யப்படாத  உயர்நீதி மன்றத்தின் குவிமாடம்.

விபரமான பழைய பதிவு

Darning | டானிங் என்ற அழிந்த கலை

எந்த பொருளையும் உபயோகிக்காமல் வைத்தால் அது நைந்து போகும், எலி அல்லது எறும்பு கடித்து வைக்கும் , நாம் வைத்த position சரியில்லை என்றால் கூட பொருள் நாசமாகும் என்பதை கண்ட நாள் இது.

இது எங்கள் திருமணத்துக்கு என் மாமனார் பரிசளித்த பட்டுப்பாய், பெயருக்கேற்ப இது நெகிழும் தன்மை கொண்டது ஆதலால், இதை பரணில் சுருட்டி வைக்கையில் அது முனை மடங்கி இந்த 18 ஆண்டு காலத்தில் முனை நைந்தும் போயிருந்தது , இன்று மனைவிக்கு வேண்டி பரணில் இருந்து tupperware products ஒவ்வொன்றாக இதுவா? இதுவா? எனக்கேட்டு இறக்கித் தருகையில் இந்த தலைதொங்கிய பட்டுப்பாயை பிரித்துப் பார்த்தால் கிழிந்து முனை நைந்து போயிருந்தது, 

செட்டிநாடு கிராமங்களின் வீடுகளில் பர்மா பாய் என்று பெரிய பாய் வைத்திருப்பார்கள் ,ரப்பர் போல அத்தனை மிருதுவாக இருக்கும்,விரித்தால் அதுவே உருண்டு ஓடி விரியும்,  அதில் அசதியானவர்கள் படுத்தால் இரண்டு நாள் கூட தூங்கலாம், முதுகில் தடம் பதியாது, அப்படி மிருதுவாக உறுதியான கோரைபுற்களை வேறெங்கும் பார்க்கவில்லை,இந்த பட்டுப்பாய் அந்த மிருதுவான தன்மையை கொண்டுள்ளது,ஆனால் உறுதியை கொண்டிருக்கவில்லை. 

நான் சிறு வயதில் என் கிழிந்து போன துணிகளை நானே லாவகமாக darning செய்யப் படித்திருந்தேன், அதை யாரும்  கற்றுத் தரவில்லை என்றாலும் என் மாமாவின் மதுரை  தையல் கடைக்கு ஒருவர் வந்து உருப்படி இருக்கிறதா? எனக் கேட்பார், என் மாமா அவரிடம் வந்து சேர்ந்திருந்த சிகரெட் பொசுக்கிய , பிக்பாக்கெட் அடிக்கையில் பர்ஸ் பறிகொடுக்கையில் கிழிந்த வாடிக்கையாளர்  உருப்படிகளை எடுத்துத் தருவார், 

அவர் அதே நிற நூலை தேர்வு செய்து  மிகச்சிறிய 14-18 நம்பர் darner ஊசி கொண்டு அத்தனை அழகாக அந்த கிழிந்த ஓட்டை விழுந்த உடைகளை புதிது போல சரி செய்வார்,அதைப் பார்க்கவே அத்தனை அழகாக இருக்கும்.

மிகவும் பொறுமை கோருகிற நேரமெடுக்கும் பணி என்பதால் இதற்கு கட்டணம் அதிகம், புதிய சட்டை தைக்கிற கட்டணம் வரும்,அன்றைய லைசன்ஸ் ராஜ் யுகத்தில் ஒவ்வொரு இஸ்திரி கடையிலும் கூட darning செய்யப்படும் என்ற பலகை வைத்திருந்தனர், இன்று அவசர யுகம் darner என்ற கைத்தொழிலே வழக்கொழிந்தும் போய்விட்டது.

முதலில் இந்த பட்டுப்பாயை darning செய்யவே நினைத்தேன், அதைவிட உடனடி தீர்வாக இந்த கைவசமிருந்த  mesh tape கொண்டு மேலும் கீழும் ஒட்டி அழகாக சுருட்டி வைத்து விட்டேன்.

கல்கத்தா ஹவ்ரா பாலம் பராமரிப்பு பணிகள்




கொல்கத்தாவையும் ஹவ்ராவையும் இணைக்கும் ஹவ்ரா எஃகு (tata tiscon steel)பாலத்தை பாதுகாப்பது கடும் செலவு பிடிக்கும் செயல், இயற்கை சீற்றத்தில் இருந்து இந்த பாலத்தை ஆண்டு முழுவதும் பாதுகாக்க வேண்டும், பறவைகள் எச்சத்தில் இருந்து இந்த பாலத்தை ஆண்டு முழுவதும் பாதுகாக்க வேண்டும்,வாகனங்கள் இந்த பாலத்தின் மீது அதிகவேகத்தில் செல்லாமல்  பாதுகாக்க வேண்டும், மனிதர்களின் சிறுநீர்,  மலம்,குட்கா மாவா கொல்கத்தா பான் பீடா எச்சத்தில் இருந்து இந்த பாலத்தின் உறுப்புகளை அரித்து துருபிடிக்காமல் காப்பாற்றுவது பிரம்மப் பிரயத்தனம் போன்றது.
இப்போது இந்த பாலத்தின் ஒவ்வொரு உறுப்பிலும் ஒரு CCTC கேமரா என 200 கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு அறை வழியே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் விதி மீறல்கள் செய்பவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டிக்கப்படுகிறார்களாம்,

 வருடா வருடம் பாலம் முழுதும் மராமத்து செய்யப்பட்டு அலுமினிய பெயிண்ட் அடிக்கப்படுகிறது, பறவையின் எச்சம் விழுந்தவுடன் அதற்க்கான சிறப்பு துப்புறவு பணியாளர்கள் மூலம் எச்சம் விழுந்து காய்ந்து போவதற்க்குள் துடைக்கப்படுகிறது, 

கணிசமான பாதசாரி பீடாவாயர்கள் புகையிலை பாக்கும், சுண்ணாம்பும் கலந்து மெல்லும் கலவையைத் (குட்கா மற்றும் பான்) துப்புவதால் பாலம் அவ்வப்பொழுது கணிசமாக சேதமடைந்துள்ளது. 

2011 இல் போர்ட் டிரஸ்ட் அதிகாரிகளின் தொழில்நுட்ப ஆய்வு, தூண்களை பாதுகாக்கும் எஃகு ஹூட்களின் thickness 2007 ஆம் ஆண்டின் சோதனைப்படி 6மில்லிமீட்டரில் இருந்து  மூன்று மில்லிமீட்டருக்கும் குறைவாக அரித்துப் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

பாலத்தின் முக்கியமான குறுக்கு கர்டர்கள் மற்றும் ஹேங்கர்களின் சந்திப்பில் நீர் கசிவதைத் தடுக்க ஹேங்கர்களுக்கு அடிவாரத்தில் அந்த ஹூட்கள் இன்றியமையாதவை,
மேலும் இந்த ஹூட்களுக்கு சேதம் ஏற்படுவது பாலத்தின் பாதுகாப்பை குலைக்கும்.  எஃகு தூண்களின் அடிப்பகுதியை fiberglass casing (கண்ணாடியிழை உறை) செய்து மூடுவதற்கு கடந்த 2011 ஆம் ஆண்டு ₹20 லட்சம் ரூபாய் செலவழித்து,எஃக்கு அடித்தளத்தில் உறுப்புகளின்  non exposed surfaces ஐ அதன் பழமை மாறாமல் , போர்த்தியதை இணைப்பு படத்தில் பாருங்கள்.

 26,500 டன் மொத்த எடை கொண்ட  கட்டமைப்பு இந்த ஹவ்ரா புதிய பாலம், 1943 ஆம் ஆண்டு கொல்கத்தா ஹவ்ரா இரு நகரங்களை இணைக்கும் ஒரு பழைய platoon பாலத்திற்கு  மாற்றாக அதன் தடத்தின் மீது  அமைக்கப்பட்டது.  
கட்டப்பட்ட காலத்தில் இது உலகின் நான்காவது நீளமான கேண்டிலீவர் தொங்கு பாலமாக இருந்தது.

 இந்த ஹவ்ரா பாலம் 2,150 அடி நீளம், அதன் அடித்தளத்திலிருந்து 280 அடி வரை உயரம்,கேட்வே டு கொல்கத்தா என்ற அடைமொழியுடன் உலகின் ஆறாவது நீளமான எஃகு பாலமாக இன்றும் புழக்கத்தில் உள்ளது ஹவ்ரா பாலம்.26,000 லிட்டர் ஈயம் இல்லாத பெயிண்ட் கொண்டு மூன்று முறை பெயிண்ட் செய்தால் 5 வருடங்களுக்கு நீடித்து உழைக்கிறது.

வாகன மாசு மற்றும் வானிலை மாற்றங்கள் போன்ற சுற்றுச்சூழல் காரணிகளாலும் இந்த பாலம் அரிப்புக்குள்ளாகிறது, அலுமினிய வர்ண பூச்சு வேலையின் முதல் பகுதியாக  துரு மற்றும் பழைய வண்ணப்பூச்சுகளை அகற்றுகின்றனர்.

பின்னர் முழுக்க சிறப்பு  ப்ரைமர் பூச்சு பூசுகின்றனர், இது அரிப்பு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.  அதைத் தொடர்ந்து இறுதி ரப்பர் அடிப்படையிலான வண்ணப்பூச்சு பயன்படுத்தப்படும்.அதன் பிறகு மூன்றாவதாக கூடுதல் பாதுகாப்பிற்கு அலுமினிய வண்ணப்பூச்சு பூசப்படுகிறது,

மாவா, பீடா, பான்மசாலா, பான்பராக் ,பீடா, தம்பாக்,கைனி, குட்கா இவை மனிதர்களுக்கு மட்டும் கேடல்ல, நம் சுற்றுச்சூழலுக்கே கேடு, என் முன்னால் யார் துப்பினாலும் துப்பாதீர்கள் என்று சொல்கிறேன் , காரணம் , அந்த மடையர்களுக்கு அது தவறு என புரிய வேண்டும், அரசு பொது இடங்களில் எப்படி புகைப்பதை தடை செய்ததோ அதே போல  துப்புவதை தடைசெய்து , அந்த சமூக விரோதிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.

#ஹவ்ரா_பாலம்,#கொல்கத்தா,#பான்,#துப்புதல்,#பீடாவாய்ர்கள்,#மாவாவாயர்கள்,#குட்கா
Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (383) தமிழ் சினிமா (261) உலக சினிமாபார்வை (254) ஆஸ்கர் (210) கமல்ஹாசன் (130) மலையாளம் (89) சென்னை (82) கட்டிடக்கலை (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) வாஸ்து (47) கே.பாலசந்தர் (46) கலை (45) இசைஞானி (44) உலக சினிமா (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) சினிமா (33) தமிழ்சினிமா (26) ஓவியம் (22) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) உலக சினிமா பார்வை (18) இலக்கியம் (17) இசை (15) சினிமா விமர்சனம் (15) மோகன்லால் (15) அஞ்சலி (13) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) அரசியல் (11) ஒளிப்பதிவு (11) கோயன் பிரதர்ஸ் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) சுஜாதா (9) இந்தியா (8) எம்ஜியார் (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) உலகசினிமா பார்வை (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) சிபி மலயில் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) மீரா நாயர் (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) நுவார் (2) பக்தி இலக்கியம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சாய்பு (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) ப.சிங்காரம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)