"படிச்சவன் பாட்டைக் கெடுத்த கதை"
தினசரிகளில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வாய்க்கு வந்தபடி மொழிபெயர்க்கத் துவங்கி விட்டனர்,பள்ளிகளில் நல்ல தமிழாசிரியர்கள் இல்லாமல் போனது எத்தனை பெரிய இழப்பு எனப் புரிகிறது.
என் அறிவுக்கு எட்டியபடி இதைத் தான் வாசகம் படிப்பவருக்கு உணர்த்த வேண்டும் ,இவர்கள் எதையோ பிடித்து வைத்திருக்கின்றனர்
" எல்லா தேவைகளும் பூர்த்தியான இதிகாச வாழ்க்கை புத்திசாலித்தனத்துடன் பார்த்து இழைத்த வாழ்வியல் அனுபவங்களுடன்"
அல்லது
" முழுத் தன்னிறைவு பெற்ற காவிய வாழ்வு அறிவார்த்தமாய் செதுக்கிய வாழ்க்கை அனுபவங்களுடன்"
PS: இந்த காவிய வாழ்வுக்கு நீங்கள் தரும் விலை மிக அதிகம்.
இது பூதாகாரமாக ஊதிப் பெருக்கப்பட்ட பேராசைகரமான வஞ்சக விலை, முன்பு சென்னைவாசிகள் ஸ்பென்ஸர் ரேட் என்பார்கள் அது போன்றது,
NRI களை குறி வைத்து NRI accountல் பெரும் பணம் வைத்திருப்பவர்களை வங்கி மேனேஜர்கள் வண்டு போல துளைத்து ISD பேசி அவர்களுக்கு விமான டிக்கட் கூட பதிவு செய்து விடிகாலம் விமான நிலையம் சென்று கார் வைத்து பதிவு அலுவலகம் கொண்டு போய் வீட்டை பதிவு செய்து அவர்கள் தலையில் கட்டுவார்கள்.
அதே போன்றே IT ஊழியர்களை குறி வைத்தும் வங்கி மேனேஜர்கள், ஆடிட்டர்கள் இப்படி துளைக்கின்றனர்.
அதற்கு தான் இந்த விலை ₹7299/சதுர அடிக்கு,இந்த விலை தந்து நீங்கள் அடுக்ககம் வாங்குவதற்கு பதிலாக 20x40 = 800 சதுரடி,30x60=1200 சதுரடி,20x60 =1200 சதுரடி என மனை வாங்கி உங்கள் எண்ணம் போல நல்ல வடிவமைப்பாளரைக் கொண்டு வடிவமைத்து நல்ல கட்டுமானரைக் கொண்டு கட்ட முடியும்,
உங்களை கண்களைக் கட்டி யோசிக்காமல் சொத்துக்கள் வாங்க வைக்கும் கள நிதர்சனம் இவை தான்,
ஜோதிடர் குருபலன் இருப்பதாகச் சொன்னார் வாங்குகிறேன் என்கிறார்கள், வரி விலக்கு கிடைப்பதால் வாங்குகிறேன் என்கின்றனர்,second home வாடகை விட வாங்குகிறேன் என்குன்றனர், ஒரு கோடி மதிப்புள்ள pent house flat பத்து லட்சம் குறைவாக கிடைப்பதால் வாங்குகிறேன் என்கின்றனர், dtcp நிலத்தை எதிர்கால முதலீட்டுக்காக ,எளிதாய் கிடைக்கும் வங்கிக் கடன் வாங்கி வாங்குகிறேன் என்கின்றனர்,
யாரும் சிறிய விஷயம் யோசிப்பதில்லை, ஏற்கனவே பெரும் பணம் செலவழித்து பத்திரம் பதிந்தவன் லாபமின்றி தன்னிடம் விற்பதைப் போல தானும் விற்க நேரிடுமே என யோசிப்பதில்லை, யாருக்கான சோதனை எலிகள் நாம்? கண்ணை மறைக்கச் செய்து நாம் செய்யும் முதலீட்டால் நாளை நமக்கு கடனடைக்கையில் நிம்மதியாக தூக்கம் வருமா? என யோசிப்பதில்லை,விட்டில் பூச்சிகளாக அடுக்ககம் வாங்குகின்றனர், அதுவும் பல்லாவரம் பெரிய ஏரியை அடுத்த ராட்சத குப்பைக் கிடங்கை பார்த்து பால்கனி அமைந்த அடுக்கக வீட்டைக் கூட வாங்குகின்றனர்,சல்லிசாக கிடைக்கிறது என முக்கோண வடிவம் கொண்ட மனையைக் கூட வாங்கிப் போட்டு வைப்போமே குழந்தைகள் படிப்பிற்காகும் என வாங்குகின்றனர்.நிறைய பார்க்கிறேன், முடிந்த வரை தடுக்கிறேன்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
https://www.facebook.com/dialfordesign/
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே
https://m.facebook.com/story.php?story_fbid=10159173824656340&id=750161339
#படிச்சவன் ,#காவிய_வாழ்வு,#சென்னை_ரியல்_எஸ்டேட், #பேராசை,#காஜு
Vr Vibishanth Udaiyar