[Gabhricha Paus] காப்ரிஸ்சா பாவூஸ் [மோசக்கார மழை][இந்தியா][2008]

=====0000===== 
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.


(குறள் எண் : 1033)

விளக்கம் : உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
 

=====0000===== 
ருமை நண்பர்களே,

மீபத்தில் தான் மராத்தி மொழியில் வந்த பேரலல் சினிமாக்கள் பார்க்கத்துவங்கினேன், அந்த அயராத்தேடலில் எனக்கு கிடைத்த முத்து தான் இந்த காப்ரிச்சா பாஸ். பாலிவுட் என்னும் பகல்கொள்ளைக்காரர்களால் உலக அரங்கில் எப்பேற்ப்பட்ட இந்திய கலைப்படைப்புகளை காணாமல் போகின்றன என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம்.  

ராத்திய சினிமாவின் நம்பிக்கை ஒளிப்பட்டியலிலும் சிறந்த இந்திய  இயக்குனர் பட்டியலிலும் இந்த இளம் இயக்குனர் சதிஷ் மன்வாருக்கும் ஒரு தனி இடம் காத்திருக்கிறது.  எல்லா நல்ல படங்களுக்கும் ஏற்படுமே மோசமான  தலைவிதி!!!அது  இந்தப்படத்துக்கும் வாய்த்திருக்கிறது,அது  என்னவா? படம் முடிந்தபின்னர் அதை விளம்பரம் செய்ய காசில்லாமல்,எத்தனையோ பேருக்கு படம் பிடித்தும் வாங்க முன்வராததால் நஷ்டத்துக்கு விற்க வேண்டியதாகிவிட்டது. 

இயக்குனர் சதிஷ் மன்வார்
னம் தளராத இந்த குழு இதை எல்லா  இந்திய சினிமா விழாக்களிலும் தொடர்ந்து திரையிட எல்லோரின் ஏகோபித்த பாராட்டுக்களையும் விருதுகளையும் அள்ளிவந்திருக்கிறது. பீப்லி லைவ் படம் பார்த்திருப்பீர்கள், அதில் எவ்வளவு பெரிய ஒரு சீரியஸான விவகாரத்தை நையாண்டி மேளமாக வாசித்துள்ளனர் என புரிந்தது,  ஆமாம்!!!! அப்போது தானே மக்களுக்கு விஷயம் சென்று சேர்கிறது, அப்போது தானே?!!! மன்மோகன் சிங் கூட நேரம் ஒதுக்கி அந்த படத்தை பார்த்த்து ரசித்து சிரித்தார். என்று என்னால் நெஞ்சு ஆற இயலவில்லை,

து மிகவும் சீரியஸான் விஷயம். நான் படம் பார்த்து அடைந்த, உணர்ந்த அந்த பாதிப்பை என்னால் எழுத்தில் கொண்டுவரமுடியாது. நான் கூட விவசாயக் கடன்கள் என்பதே வீண். அவை பணக்கார நிலச்சுவாந்தாரர்களால் நிரந்தர மோசடியும், விவசாய மானியங்கள் சலுகைகள்  என்பதே அவர்கள் கபளிகரம் செய்வதற்கே என்று எண்ணி கொதித்தும் வந்திருக்கிறேன்.அப்படி கொதித்து இது எல்லாம் யார் வீட்டுக்காசு?எவன் கட்டும் வரிப்பணத்தில் இந்த சலுகைகள் என்று என் முந்தைய பதிவில்  சாடியுமிருந்தேன்,அதையும் தாண்டி சிறு விவசாயிகள் மண்ணுக்கும் தங்களுக்குமான பாசபிணைப்பாக விவசாயத்தை கருதுவதை இந்தப்படத்தில் கண்ணாறக் கண்டேன்.உள்ளம் தெளிந்தேன்.

ன் நீண்டநாள் கேள்விகளுக்கான பதில்கள் இந்த படத்திலேயே இருக்கிறது, அரசாங்கம் விவசாயிக்கு வழங்கும் சலுகைகள் விவசாயிடமிருந்தே மறைமுகமாக பிடுங்கி எடுக்கப்படுகிறது என்னும் சுடும் உண்மையையும் உணரவைக்கிறது படம்.  இவ்வளவு சீரான,நேர்த்தியான, ஒழுங்கான , கலைக்கு மரியாதை செய்து சொல்ல வந்த விஷயத்தை சீர்தூக்கிப்பார்த்து, ஆழமாக கையாளப்பட்ட படங்கள் வருவது மிக அபூர்வம். அந்த வகையில் இந்த படம் சாதித்துவிட்டது  உலகசினிமா தேடல் கொண்ட நண்பர்கள் அவசியம் இந்த படம் பார்த்து  பதிவாக எழுதி நிறைய பேர் தேடிக் காண வழிவகை செய்யவேண்டும்.

ந்த 1.5 மணி நேரப் படத்தின் பிரதான பலமே கதையும் திரைக்கதையும் என்பேன். படத்தின் கதையோடு ஒத்துழைக்கும், அபாரமான இயல்பான நடிப்பும்.  சமாதானமே செய்துகொள்ளாத ஒளிப்பதிவும், பிண்ணணி இசையும், திணித்தலில்லாத 2பாடல்களும் அபார அற்பணிப்பை பறைசாற்றும். இந்த படம் பார்த்துவிட்டு புதிய இளம் இயக்குனர்கள் மீது அபார நம்பிக்கை வந்துவிட்டது. தேசிய விருது தேர்வுக்குழுவில் இருக்கும் கிழடான, தட்டையான சிந்தனை கொண்ட  மேதாவிகள், தயவுசெய்து விருப்ப ஓய்வு பெற்றுவிடுங்கள்.அல்லது தகுதியானவர்களுக்கு பதவியை விட்டுக்கொடுங்கள்.


ந்த படங்கள் பார்த்து விட்டு அதிமேதாவி இயக்குனரின் பெயரை எழுத,ஏன் நினைக்கவே கூசுகிறது என்றால் பாருங்கள். படத்தில் பங்காற்றிய நடிகர்களான கிரிஷ் குல்கர்னி,சோனாலி குல்கர்னி, போன்றோர்களின் கால்தூசி பெறமாட்டார்கள் ஒலகநாயகர்களும் , தளபேதிகளும்!!! ,நடிப்பு என்றால் நடித்துக்கொட்டுவது என்றிருக்கும் ஆட்கள் முதலில் இப்படம் பார்க்க வேண்டும். நான் இங்கே இவ்வளவு ஆதங்கப்படுவதன் காரணம் புரியும். நல்ல படைப்பு காண்போரற்று போவது என்பது தான் உலகில் மிகப்பெரிய சோகம் என்பேன்.நான் கண்ட சில நல்ல மராத்திய சினிமாக்களின் பெயர்களைப் பகிர்கிறேன். உங்களுக்கும் நல்ல  மாற்று சினிமாக்களில் ஆர்வமிருப்பின் இவற்றை தயங்காமல் தரவிறக்கிப் பார்க்கலாம். அத்தனையும் மிகத்தரமான படங்கள்.
 ஹரிஸ்சந்த்ராஸ்சி ஃபேக்டரி [Harish Chandra Chi Factory] , போக்யா சத்பந்தே [Bokya Satbande], ஸெண்டா [Zenda], நிஷானி டவ அங்கதா [Nishani Dava Angatha], கோஷ்தா சோட்டி டொங்ரேவதி [Goshta Choti Dongraevadhi], கல்லித் கொந்தல் தில்லித் முஜ்ரா [Gallit Gondhal Dillit Mujra], மீ ஷிவாஜி ராஜே போஷ்லே போல்டாய்  [Mee Shivaji Raje Bhosle Boltoy], உலதால்[Uladhaal],  ஏக் தவ் தோபி பச்சாத்[Ek Dav Dhobi Pachad], மும்பைச்சா டப்பாவாலா [Mumbaicha Dabbewala] ஆபா ஸிந்தாபாத் [Aaba Zindabad], தத்கஸ் [Dhudgus], ஜிங் சிக் ஜிங் [Jhing chik jhing], வலு[Valu], விஹிர்[Vihir] , கந்த் [Gandh] ,கோ மலா அஸ்லா ஹவா[Gho mala asla hava] ,நட்ரங் [Natrang], தோஸ்ஸார்[Dhossar], ஆரம்ப்[Aarambh], ஜோக்வா [Jogwa], ஹுப்பா ஹுய்யா [Hupa Huiyya]


ஒரு ஏழை விவசாயி விவசாயத்தை துறக்க காரணிகள் யாவை?

த்திய மாநில அரசுகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் 100 நாட்கள் கட்டாய  வேலை விவசாயம் செய்வதற்கு ஆட்களே இல்லாத ஒரு நிலையை உண்டாக்கிவிட்டது என்றால் மிகையில்லை. தொடர்ந்து வேலை செய்பவர்கள் நிரந்தர வேலை பெறுவார்கள் என்ற காட்டுத்தீ போன்ற வதந்திகள் சிறு விவசாயிகளை கூட 100 நாள் வேலைக்கு செல்ல தூண்டிவிட்டதும் ஓர் மறுக்கமுடியா உண்மை.

துவும் ,அங்கே நாள் ஒன்றுக்கு மிகக்குறைந்த வேலை செய்தலும் போதுமானது, அதனாலேயே யாரும் கடினமான உடல் உழைப்பு கொண்ட விவசாய வேலை செய்ய வருவதேயில்லை. ஈசிமனி செய்ய ஆளாய் பறக்கும் ,

பகாசுரத்தனமான பேராசைகொண்ட இடைத்தரகர்கள், செய்யும் ஸ்பெகு‌லேட்டிவ் மார்க்கெட்டிங்கும் ஒருபுறம் விலையை கடுமையாக ஏற்றுகிறது. கிடைக்க வேண்டிய நேரத்தில் விவசாயக்கடன்கள் உண்மையான விவசாயிக்கு கிடைப்பதில்லை, மிக அபாயகரமான  கந்து வட்டியும் ஒரு பிரதானமான காரணம்.

த்திய மாநில அரசுகளின் கடன் தள்ளுபடிகள் கடுமையாக வேலை செய்யும் அநேகம் விவசாயிகளையும்  கடும் சோம்பேரிகள் ஆக்கிவிட்டது. அதற்கும் மேலாக இலவச திட்டங்களோ? விவசாய வேலை செய்யும் தேவையையே போக்கிவிட்டது , சிறு விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதும் ஒரு முக்கிய காரணம். ஒரு இளநீர் 5 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து  வாங்குகிறார்கள். அதில் அதில் விவசாயிக்கு கூலியாய் கிடைப்பது ஒரு ரூபாய் தான்.

னால் நமக்கு 20 முதல் 25  ரூபாய்க்கு விற்கிறார்கள். எங்கே போகிறது? 20 ரூபாய்? இது ஆரம்பம் மட்டுமே. மாநில, மத்திய அரசுகள் ஒரு மிகப்பெரும் அழிவை நாம் வாழும் சமுதாயத்தில் ஏற்படுத்திவருவது கவலைக்குரியது. இரவு பகலாக வேலை செய்யும் விவசாயிக்கு கட்டிய கோவணம் கூட மிஞ்சுவதில்லை என்பதே உண்மை, ஏழை விவசாயி கடனை மட்டுமே சேர்த்து வைக்கிறான். சேர்த்து வைத்த கடனுக்கான கந்து வட்டிக்காக நிலத்தையே இழந்து நிர்கதியாக நிற்கின்றான்.

லர் வாழ்வில் நம்பிக்கையின்றி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இதில் வரும் நாயகன் க்ரிஸ்ணா போல மண்ணுக்கும் மனிதனுக்கும் உண்டான பாசப்பிணைப்பாக விவசாயத்தை எண்ணும் ஒரு சிலரால் தான் நாம்  இன்று வயிறாற உண்ண முடிகிறது. மொத்தத்தில் விவசாயம் இல்லாத எதிர்காலம் சூனியம் என்னும் பயம் வயிற்றை கலக்கச்செய்கிறது. யார் கண்டார்?அப்போது நாம் பணத்தாள்களை தின்னப்பழகியிருப்போமோ என்னவோ?!!.


நான் மேலே ஆதங்கப்பட்ட விடயங்கள் படத்தில் தீர்க்கமாக அலசப்பட்டிருக்கின்றன.  நண்பர்கள் முழுக்க படத்தை அனுபவிக்க வேண்டும் என்பதால்  படத்தின் கதையை சொல்லாமல் விடுகிறேன். கீழ்கண்டவை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்களா?!!! அது குறித்து யோசித்தாவது இருக்கிறீர்களா? எப்படியோ? படம் பார்த்த பின்னர் நீங்கள் விவசாயியை பார்க்கும் பார்வையே மிக உயர்வாயிருக்கும்.

1. ஏழை விவசாயி ஏன் தற்கொலை செய்து கொள்கிறான்? அவன் இறந்தால் அவன் குடும்பம் படும் இன்னல்கள் என்ன?
2.ஒரு ஏழை விவசாயிக்கு அரசு எத்தனை சதவிகித வட்டிக்கு விவசாயக்கடன் தருகிறது?
3.ஏழை விவசாயி தற்கொலை செய்து இறந்தால் அரசு எவ்வளவு இழப்பீடு தொகை தருகிறது?
3.ஏழை விவசாயி தன் வறண்ட கிணற்றுக்குள் போர்வெல் அமைக்க ஆகும் செலவு எவ்வளவு?
4.ஒரு ஏழை விவசாயி 7ஏக்கர் நிலம் வைத்திருப்பின்,தன் சக்திக்கு ஏற்ப,4 ஏக்கரில் பருத்தி பயிரிட நினைக்கிறான் என்று வையுங்கள்.
வன் விதை வாங்க ஆகும் செலவு என்ன?
வன் 4 ஏக்கர்  நிலத்தை உழ மாடுகள் வாடகைக்கு வாங்கினால் ஆகும் செலவு என்ன?
ப்படி மாடு கிடைக்காவிடில் 4 ஏக்கர் நிலத்தை உழ ட்ராக்டர் வாடகைக்கு எடுத்தால் ஆகும் செலவு என்ன?
5.ரு ஏக்கருக்கு பூச்சிமருந்து அடிக்க ஆகும் செலவு என்ன? 
6. ரு ஏக்கருக்கு நாற்றுநட,களை எடுக்க ஆகும் செலவு என்ன?
7.விளைச்சலை அறுவடை செய்து ஏற்றிச்செல்ல வண்டிக்கூலி என்ன?
8.ஒரு ஏக்கருக்கு எத்தனை குவிண்டால் பருத்தி கிடைக்கும்?
9.ஒரு குவிண்டால் பஞ்சின் சந்தை விலை என்ன?
10.இப்படி பார்த்துப்பார்த்து விதை விதைத்தும்,மழை பொய்த்தால் அல்லது பேய் மழை பெய்தால் விவசாயி என்ன செய்வான்?அவன் ஏன் தொடர்ந்து விவசாயம் பார்க்கிறான்?[இது தாய்க்கும் சேய்க்கும் உண்டான ஒரு பாசப்பிணைப்பு என இப்படம் உணர்த்துகிறது,அது யாருமே தவறவிடக்கூடாத ஒன்று]
11.மழை ஏன் பொய்க்கக்கூடாது? சரி மழை பொய்த்தால் தான் என்ன? போர்வெல் இருக்கிறதே,அதில் நீரிரைத்து பாசனம் செய்யலாமே?அதில் என்ன சிக்கல்?ஒரு யூனிட் மின்சாரத்திற்கு அரசு விவசாயியிடம் எத்தனை ரூபாய் வாங்குகிறது?
12.இலவச மின்சாரம் என்கிறார்களே!!!அது உண்மையிலேயே ஏழை விவசாயிக்கு  தரப்படுகிறதா?
13.ஆபத்தான சூதாட்டம் போன்றதா விவசாயம்?
14.மின்சாரம் ஒரு விவசாயியால் எந்த சூழ்நிலையில் திருடப்படுகிறது? 
போன்ற கேள்விகளுக்குண்டான பதிலகளை அறியுங்கள், நம் நாட்டில் விவசாயி ஒருவன் படும் அவலம் இந்த அளவுக்கு பட்டவர்த்தனமாய் சொல்லப்படேதேயில்லை எனலாம். இனி என்னளவில் உண்மையான ஏழை விவசாயிக்கு மானியம், கடன் தள்ளுபடி ,சலுகைகள் நிச்சயம் தேவை என அழுந்த உரைப்பேன்.
=====0000=====
காப்ரிஸ்சா பாவூஸ்=பொய்த்த மழை, ஆனால் பொய்காத படம்
 =====0000=====
படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-
Directed by Satish Manwar
Produced by Prashant Pethe
Written by Satish Manwar
Starring Sonali Kulkarni, Girish Kulkarni, Jyoti Subash, Veena Jamkar, Aman Attar
Cinematography Sudheer Palsane
Editing by Suchitra Sathe
Release date(s) 2009
Country India
Language Marathi
 =====0000=====
காப்ரிஸ்சா பாவூஸ் திரைப்படம் யூட்யூபிலிருந்து:-

 =====0000=====

19 comments:

உலக சினிமா ரசிகன் சொன்னது…

நண்பரே இப்படம் எங்கு கிடைக்கும்?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

நண்பரே முழுப்படமுமே யூட்யூபில் கிடைக்கிறது,

http://www.monova.org/details/3254259/GABHRICHA%20PAUS%20H264%201CD%20DVDRIP%20%5BMARATHI%5D.html

இது டாரண்டில் தரவிறக்க டிவிடி ரிப்பின் சுட்டி.இதில் சப்டைட்டில் எம்பெட்டடாகவே கிடைக்கிறது.
நீங்கள் ஏழை விவசாயிக்கு மானியம் கொடுக்கவேண்டியது அவசியம் என சொன்னது இப்போது புரிகிறது,நன்றி

Cable Sankar சொன்னது…

ார்க்க தூண்டும் விமர்சனம்..

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@கேபிள்சங்கர்
நன்றி தலைவரே

பிரசன்னா சொன்னது…

சிறப்பான அறிமுகம்.. கண்டிப்பாக உடனே பார்க்க வேண்டும்

எஸ்.கே சொன்னது…

மிக நல்ல அறிமுகம்! பார்க்கிறேன்! நன்றி!

சு.மோகன் சொன்னது…

நண்பரே, உங்களை இவ்வளவு Impress பண்ணிய படத்தை பார்க்காமல் இருப்பேனா? சுட்டிக்கு நன்றி....

இராமசாமி கண்ணண் சொன்னது…

பார்த்துருவோம்ணே

சிவா சொன்னது…

விமர்சனத்திற்கும் சுட்டிக்கும் நன்றி!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பிரசன்னா
நன்றி நண்பா

@எஸ்கே
நன்றி நண்பா,மராத்தியில் படு பயங்கர மொக்கைகளும் வருகின்றன,தேடிப்ப்டித்து பார்த்தால் 10க்கு 1 தேறும்

@சு.மோகன்
நண்பா,அவசியம் பாருங்க நன்றி

@இராமசாமி
நன்றி நண்பரே,அவசியம் பாருங்க

@சிவா
மிக்க நன்றீ நண்பரே, அவசியம்பாருங்க

பின்னோக்கி சொன்னது…

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஹிந்தி/மராத்தி என்பதால் எஸ்கேப்.

மரா சொன்னது…

அன்பின் கார்த்து,

ரொம்ப அருமையான எழுத்து. ’நண்பேண்டா’ன்னு சொல்லிக்க பெருமைப்படுகிறேன்.நிற்க.
* ஆரம்ப காலகட்டங்களில் எல்லா படங்களையும் பார்த்து எழுதினீர்கள்.
* பின் சில காலம் 18+ 20+ ஆ பார்த்து எழுதினீர்கள்.
* பின் சில காலம் த்ரில்லரா ஒடுனிச்சு.
* இப்போ நல்ல நல்ல பேரலல் சினிமாக்கள்.
* மெய்யாலுமே நல்லதொரு வளர்ச்சி.நல்லதொரு தேடல்.
* ‘அஸ்வின்குமார்’ போலவே ‘சதீஷ் மன்வார்’ போன்ற ஆட்களை வேறு அறிமுகப்படுத்துகிறீர்கள்.
* ஓட்டுப்பட்டையும் தூக்கிட்டீங்க.
* உங்க உழைப்பு போற்றப்பட வேண்டியது.
* தொடர்க....வாழ்க வளமுடன்.
* ஒரு விண்ணப்பம் - போன மாசம் பார்த்த ‘தடை செய்யப்பட்ட படங்கள்’
விமர்சனம் போட்டீங்கன்னா தன்யனாவோம்.நன்னி.நன்னி.

ILLUMINATI சொன்னது…

நன்றி நண்பரே!சீக்கிரமே பார்க்கிறேன். :)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா... மராத்திய பேரலல் சினிமாக்கள் அறிமுகம் சூப்பரு.. மரா சொன்னாரே.. அது என்ன தடை செய்யப்பட்ட படம்? எதாவது கில்மாவா இருந்தா, உடனே போடுங்கள் பதிவு :-)

பாரதிக்குமார் சொன்னது…

மிக அருமையான படத்தை அறிமுகம் செய்தீர்கள் கூடவே நம் மண்ணின் அடித்தளமான உழைப்பாளிகள் பற்றி கொஞ்சமும் கவலையின்றி கனவுகளை காசாக்கும் திரையுலகம் பற்றிய ஆதங்கம் என்னையும் பதற வைத்தது எப்போது நம் மக்களுக்கான சினிமாவாக நம் திரைப்படங்கள் மாறப்போகின்றன ? அற்புதமான பதிவு சிந்திக்க வைக்கும் கேள்விகள் அவசியம் பார்க்கிறேன் மிக்க நன்றி சார்

|கீதப்ப்ரியன்|Geethappriyan| சொன்னது…

@பின்னோக்கி
நன்றி நண்பரே
படம் நான் இரண்டு முறை பார்த்தேன்.நல்ல படம்.
உலக சினிமாவுக்கு மொழி தேவையில்லை,சப்டட்டில் தான் தேவை நண்பரே.:)

@மரா
அன்பின் மரா
நன்றி நண்பா
நீ எனக்கு இத்தனை பாராட்டுவதை விட ஒரு முறை படத்தை பார்த்துவிட்டு உன் தளத்தில் எழுதுவதையே நான் விரும்புகிறேன்.

@இல்மியுனாட்டி
நண்பா,அவசியம் படம் பார்த்துவிட்டு எழுதுங்க

@கருந்தேள்
நண்பா,உலகின் எல்லா நாடுகளிலுமே தடை செய்யப்பட்ட படம் நிறைய இருக்கு,அது அரசின் இறையான்மைக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும்.

@பாரதிகுமார்
நண்பரே,
மராத்தி சினிமாக்களை விரும்பி பார்க்க ஆரம்பித்ததே நீங்கள்
விம்ரசனம் எழுதிய அதுல்குல்கர்னி நடித்த நட்ரங் பார்த்த பின் தான்.நீங்கள் அவசியம் பார்த்துவிட்டு எழுதவேண்டும்.

பெயரில்லா சொன்னது…

விவசாயி சாகாமல் என்ன செய்வான்?

துடிக்கும் நம்மாழ்வார்!
அந்தப் புள்ளிவிவரத்தைப் படித்த போது மனசு பகீரென்றது!'1997 முதல் 2009 வரை தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,16,500. இதில் 2009-ல் மட்டும் 17,368 விவசாயிகள். தமிழகத் தில், 2008-ல் 512 என்று இருந்த விவசாயிகள் தற்கொலை 2009-ல் 1,060 என்று உயர்ந்து இருக்கிறது. இந்த எண்ணிக்கை எல்லாம் தேசியக் குற்றப் பதிவேடுகள் மையம் தருகிற தகவல்கள்’ என்ற செய்திதான் அது. ''ஊருக்கெல்லாம் உணவு தந்த விவசாயி, தான் உண்ண வழி இல்லாமல் தற்கொலை செய்யும் அவலம் ஏன்?'' என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரிடம் கேட்டபோது மனிதர் கொட்டினார்...
''தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதற்கு விவசாயி காரணம் அல்ல! நாடாளுமன்றத்தை நடத்துபவர்கள்தான் முழுக்காரணம். இந்த அரசு விவசாயிகளுக்கு உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

தமிழ்நாட்டை விடவும் அதிகமாகத் தற்கொலைகள் நடப்பது பஞ்சாப் மாநிலத்தில். மகாராஷ்டிராவில் 60 சதவிகிதப் பயிர்கள் மழையை நம்பி இருக்கின்றன. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகளை அழித்து, மழை பெய்வதற்கான ஆதாரத்தை ஒழித்து விட்டார்கள். பூச்சிக்கொல்லிகள், உரங்கள் என விவசாயத்தைச் செலவுமிக்கதாக மாற்றினார்கள். விளைவு... கொத்துக் கொத்தாக விவசாயிகள் விதர்பாவில் செத்து மடிந்தனர். இறந்தவர்களின் உடலைத் தூக்கிச் செல்ல ஆளில்லாமல் நரிகளும், நாய்களும் தின்னும் கொடுமையான காட்சியை மறந்துவிட முடியுமா?

2005-ல் பிரதமர், மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் செல்கிறார். தற்கொலைகளின் பின்னணியைத் தெரிந்து கொள்ள பிரதமர் சென்ற அந்த நாளில் மட்டுமே 11 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 'பிரதமர் வரும் தினத்தில் இறந்து போனால் ஒரு லட்சம் கிடைக்கும்!’ என்பதற்காக விவசாயிகள் தங்கள் உயிரைக் காவு கொடுத்ததாகக் கிடைத்த தகவல் இந்தியாவுக்கு பெருமையானதா?

இதற்கெல்லாம் தீர்வு இல்லையா? என்று கேட்டால் இருக்கிறது!

நம் நாட்டில் விவசாயம், இனி இயற்கையை நோக்கி நகர வேண்டும். ஊருக்குள்ளேயே அனைத்து வசதிகளும் இயற்கையாகக் கிடைக்கின்றன. அவற்றை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மண்புழு உரம் அவசியம். அது ஆலைகளில் தயாரிக்கப்படும் உரத்தைவிட ஆரோக்கியமானது. அதனால் ஆலைகளை மூடி, இயற்கைக்கு அரசாங்கம் ஆதரவு தர வேண்டும்.

விவசாய நிலங்களை எல்லாம் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக அபகரித்து விட்டு, ஒரு கிலோ அரிசி கொடுத்தால் தீர்வாகிவிடுமா? அதனால்தான் தற்கொலை நடக்கிறது. 2008-ல் நடந்ததைப்போல இரு மடங்கு தற்கொலைகள் 2009-ல் நடந்திருக்கிறது. இது தொடர்ந்தால் அந்த இரு மடங்கு, நான்காகும். நான்கு எட்டாகும். இப்படியே... இனி ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவிடுமோ என அச்சம் வருகிறது.

'63 ஆண்டுகளாக அரசின் வேளாண்மைக் கொள்கை சரியானதாக இல்லை. அதனால் விவசாயத்துக்கு அதிகம் செலவாகிறது. கால் நடைப் பராமரிப்புக் கொள்கையையும் அரசு சரிவரக் கையாளவில்லை. விவசாயக் கூட்டுறவுக் கடன் நான்கில் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கிறது. விவசாயப் பொருட்களுக்குச் சரியான விலை கிடைப் பதில்லை’ என 'பசுமைப் புரட்சி’ நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதனால் சொல்லப்பட்டது. இதையும் அரசு காதில் போட்டுக் கொள்ள வில்லை.

'வீணாகும் உணவு தானியங்களை ஏழை களுக்கு இலவசமாகத் தர வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசு அதைச் செயல்படுத்தவில்லை. காரணம், அதனால் அரசுக்கு என்ன லாபம்? உணவு தானியங்களை இலவசமாகக் கொடுத்தால் யார் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வருவார்கள்? அப்புறம் எப்படி பன்னாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்க முடியும்? அந்த நிறுவனங்கள் தரும் கமிஷன் தொகையை எப்படிப் பெற முடியும்? ஆகவே மக்களை எப்போதும் பசியிலேயே வைத்திருக்க விரும்புகிறது அரசு. பன்னாட்டு நிறுவனங்களில் நம் நாட்டு அமைச்சர்களும் பங்காளிகள்!

சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இரண்டு லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கிவிட்டன. இதில், பன்னாட்டு நிறுவனங்கள் கொடுத்த நெல்லில் விளைந்தவை நீரில் மூழ்கி இருக்கின்றன. ஆனால், பாரம்பரிய முறையில் விளைவிக்கப்பட்ட நெற்கதிர்கள், வெள்ள நீரைத் தாண்டி ஓங்கித் தழைத்து நிற்கின்றன. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இந்தக் காட்சியை பார்க்க முடிகிறது.

ஒரு நெல்லை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். ஒரு பாகம் மண்ணுக்கு. ஒரு பாகம் மாட்டுக்கு. ஒரு பாகம் மனிதனுக்கு. இதில் மண்ணையும், மாட்டையும் மனதில் இருத்தி இயற்கை வழியில் விவசாயத்தை மேற்கொண்டாலே போதும்... மானுடம் செழிக்க ஆரம்பிக்கும்!'' என்று முடித்தார்.

தற்கொலைகளைத் தடுக்க நம்மாழ்வார் சொல்வதே நல்வழியாக இருக்கிறது!

பெயரில்லா சொன்னது…

மரபீனி மாற்றப்பட்ட பயிர்களால் இந்தியாவுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்பட்டுவிடாது, களஆய்வுகளை நிறுத்த வேண்டியதில்லை' என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தை மறுதலித்து, இந்தப் பிரச்னை தொடர்பான முடிவுகளில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கருத்துக்கும் இடம் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பிரதமரிடம் வலியுறுத்தியிருப்பது, மாறிவிட்ட அரசியல் சூழலில் ஆறுதல் அளிக்கிறது. அரசியலுக்கும், பதவி சுகத்துக்கும் அப்பாற்பட்டு, தேசப்பற்றும், நாட்டின் வருங்காலத்தின்மீது அக்கறையும் உள்ள அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

உலகம் முழுவதும் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிர்ப்பு இருக்கிறது. இவை சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்று கூறப்படும் ஆய்வு முடிவுகளில் அறிவியல் ஆய்வாளர்களே மாறுபட்டு நிற்கிறார்கள்.

மேலும், வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, "மரபீனி மாற்றப்பட்ட பயிர் சாகுபடியின் வளமும், தாக்கமும்' என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இந்த அறிக்கையின் முடிவு - இந்தியாவுக்கு மரபீனி மாற்றுப்பயிர்கள் தேவையில்லை; இந்த களஆய்வுகளை அனுமதிக்காமல், அனுமதிக்கப்பட்டவற்றையும் நிறுத்திவிடலாம் என்பதுதான்.

இந்த நிலைக்குழுவின் தலைவர் வாசுதேவ் ஆச்சார்யா கூறுகையில், "1950-களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி வெறும் 50 மில்லியன் டன். ஆனால், இப்போது இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 250 மில்லியன் டன். இந்த சாதனையை நிகழ்த்த முடிந்த நமக்கு, அதிக உற்பத்தியைத் தரும் என்று கூறப்படும் மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் தேவையே இல்லை. இந்த மரபீனி மாற்று விதைகளால் மான்சாண்டோ போன்ற நிறுவனங்கள் லாபம் அடையுமே தவிர அதனால் விவசாயிகளுக்கு என்ன லாபம்?. சொல்லப்போனால், நமது விளைநிலங்கள் பாழாவதுதான் மிச்சம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த நிலைக்குழு தனது அறிக்கையில், "இத்தகைய மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் நல்லவைதானா, நச்சுத்தன்மை கொண்டவையா என்பதை அறிவியல்பூர்வமாக அறிந்துகொள்ள நவீன ஆய்வுக்கூடங்கள், ஆய்வுமுறைகள்கூட இந்தியாவில் இல்லாத நிலையில், இதை எப்படி அனுமதிப்பது? மேலும், இந்திய உயிரி-தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாத நிலையில், இத்தகைய மரபீனி மாற்றப்பட்ட விதைகளை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் எந்தத் துறைக்கும் இல்லை' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயரில்லா சொன்னது…

இவ்வளவுக்குப் பிறகும் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், மரபீனி மாற்றப்பட்ட பயிர்களுக்கு ஆதரவான குரல் கொடுக்கக் காரணம் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமல்ல. மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு காரணம் மான்சாண்டோவுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காவின் நெருக்குதல்தான்.

மரபீனி மாற்றப்பட்ட பயிர்கள் இந்திய விவசாயிகளிடம் சென்று சேரும்போது என்ன நிலைமை ஏற்படும் என்பதற்கு நாம் ஏற்கெனவே பி.ட்டி. பருத்தி விவகாரத்தில் பார்த்தாகிவிட்டது. இந்தியாவில் விதர்பாவில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் - கடன். கடனுக்கு காரணம் என்ன? காலங்காலமாக அங்கே பயிர்செய்துவந்த விவசாயிகளுக்கு திடீரென்று கடன் ஏற்படவும், தற்கொலை செய்துகொள்ளவும் காரணம் என்ன? மான்சாண்டோ விதைகள்தான்.

பி.ட்டி. பருத்தி விதைகளை இந்த நிறுவனத்திடம் வாங்கி விதைக்கப் பழகிவிட்ட பிறகு இந்த விவசாயிகளிடம் பாரம்பரிய பருத்தி விதைகள் இல்லாமல் போனது. ஒவ்வொரு சாகுபடியிலும் விதைகள் எடுத்து வைக்கும் வழக்கும் மறைந்தே போனது. மான்சாண்டோ ஆண்டுதோறும் விதைகளின் விலையை உயர்த்தியது. ஆனால் விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்லை. நட்டத்தின் காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. ஆகவேதான் இந்த தற்கொலைகள் நடந்தன.

450 கிராம் கொண்ட பி.ட்டி பருத்தி விதைகள் மான்சான்டோ நிறுவனத்தால் ரூ.750க்கு விற்பனை செய்யப்படும்போது, இதில் ரூ.250 அந்த நிறுவனத்துக்கு உரிமத் தொகையாக (ராயல்டி) சென்றது. பாரம்பரிய பருத்தி விதைகளே இல்லாமல் ஆகும் நிலையில், இவர்கள் விலையை உயர்த்திக்கொண்டே போவார்கள். மரபீனி மாற்றப்பட்ட பயிர்களில் கிடைக்கும் விதைகள் முளைப்புத்தன்மை இல்லாத மலட்டு விதைகளாக இருக்கும். ஆகவே விவசாயி இவர்களைத்தான் நம்பி வாழ வேண்டும். உணவுப் பாதுகாப்பு ஒருபக்கம் இருக்கட்டும். உணவு தானிய உற்பத்திக்கே பாதுகாப்பு இருக்காது.

மரபீனி மாற்றுப்பயிர்கள் மற்றும் களஆய்வுகள் இந்திய சுற்றுச்சூழலுக்கு மட்டும் கேடு விளைவிப்பவை அல்ல. இந்தியப் பொருளாதாரம், சுகாதாரம் அனைத்துக்கும் கேடுவிளைவிப்பவை.

தற்போது இந்தியாவுக்கு நிறைய பழங்கள், ஆப்பிள்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு, சங்கிலித்தொடர் நிறுவனங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை மரபீனி மாற்றப்பட்ட பயிர்களா என்பதை குறிப்பிடும் லேபிள் ஒட்டப்பட வேண்டும் என்ற நிபந்தனை இந்தியாவில் அமலில் இல்லை. மரபீனி மாற்றப்பட்ட தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்களா என்பதும் அச்சிடப்படுவதே இல்லை.

இறக்குமதியாகும் அனைத்து காய்கறி, பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தி அனுமதிப்பதிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கருத்தை கேட்க வேண்டும் என்பதையும் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வலியுறுத்த வேண்டும்.

தாத்தா பெரியவர் பக்தவத்சலத்தின் வாரிசு என்பதை நிரூபித்திருக்கிறார் அவர். மூத்த அமைச்சரின் கருத்து என்று பயந்து ஒதுங்காமல், துணிந்து தேசநலனில் அக்கறையுடன் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கும் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)