5 ப்ரோக்கன் கேமராஸ்[5 Broken Cameras][2011][பாலஸ்தீனம்]அருமை நண்பர்களே!!!
நலம் தானே? 5 ப்ரோக்கன் கேமராஸ் என்னும் நல்ல ஆவணம்+தத்ரூப திரைப்படம் ஒன்றைக் காண நேர்ந்தது,அதை உங்களுடன் உடனே பகிர ஆசைகொண்டேன்.

நாம் காசாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை நன்கு அறிவோம், இந்த ஆவணப்படம் ஒட்டு மொத்த பாலஸ்தீனத்தின் குரலாய் ஒலிக்கிறது,பிஞ்சுக்குழந்தைகளையும்,பெண்களையும் கூட துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கும் அகோர வெறி பிடித்த இஸ்ரேலியர்களின் முகத்திரையை கிழிக்கும் படம், உலக சினிமா வரலாற்றில் நெடுங்காலம் நடந்து வரும் ஒரு வரலாற்றுப்போருக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் அறவழிப்போராட்டத்துக்கு சாட்சியாக எடுக்கப்பட்ட ஒரு படம்,மேக்கப் இல்லை,செட் இல்லை,நடிகர்கள் இல்லை,எடிட்டிங் இல்லை,ஆனால் நெஞ்சை பதற வைக்கும் படம். இஸ்ரேலியர்கள் செய்யும் நன்மைகளை நன்மைகளாகவும் தீமைகளை தீமைகளாகவும் காட்டி நடுநிலையாக எடுக்கப்பட்டிருக்கும் படம்.

2005 ஆண்டு தன் நான்காவது மகன் ஜிப்ரீல் பிறந்ததில் இருந்து குழந்தை வளர்வதை படம் பிடிக்க எண்ணும் இமாத் பெர்னாட் வீடியோ கேமரா ஒன்றை  வாங்குகிறார், பாலஸ்தீனத்தில் மேற்கே இருக்கும் பிலின்(Bil’in) என்னும் கிராமத்தில் அப்போது மெல்ல இஸ்ரேலிய கட்டுமான ஒப்பந்ததாரர்கள் அத்துமீறி பிலின் கிராமவாசிகளின் ஆலிவ் மரங்கள் வளரும் வரண்ட  நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் துவங்குகின்றனர்,ஒட்டகம் கதை தெரியுமா?அது போல.

பிலின் கிராமவாசிகள் அந்த அடக்குமுறையை எப்படி எதிர்கொண்டனர்?, எதிர்கொண்டு வருகின்றனர்? இமாதின் குடும்பத்தார் இஸ்ரேலிய அடக்குமுறையாலும், இமாதின் ஆவண ஆக்க முயற்சிகளாலும் எவ்வாறெல்லாம் இஸ்ரேலிய அடக்குமுறைக்கும் கைது நடவடிக்கைக்கும் ஆளாகினர் என்பதை அவரின் அன்றாட வீடியோ லைவ் ஃபுட்டேஜ்கள் மற்றும் பிண்ணணியில் ஒலிக்கும் இமாதின் வாய்ஸ் ஓவரில் நாம் அறிய வருகிறோம்.படத்திற்கு பிற்சேர்க்கையாக அரபிய பிராந்திய இசை சேர்ப்பு உண்டு.அது படத்துக்கு பக்க பலம்.இமாதிற்கு இப்படத்தை தயாரித்து இயக்க உதவியது கை டேவிட்டி (Guy Davidi)என்னும் ஒரு இஸ்ரேலியர்.

இடையில் இஸ்ரேலிய ராணுவ அடக்குமுறையில் உயிர் விடும் கிராமவாசிகளின் சவ ஊர்வலங்களையும் நாம் ஃபுட்டேஜில் பார்க்கிறோம், ஆவணப்படத்தில் ஒவ்வொரு கேமராவின் பிறப்பும் இறப்பும் அத்தியாங்களாகவே வருகிறன்றன,பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களால் படுத்தப்படும் பாட்டை இப்படி அஹிம்சாவழியில் சென்று படம்பிடித்து உலகுக்கு உரைத்த இமாத்தின் நெஞ்சுரம் மெச்ச வார்த்தைகள் இல்லாதது, ஆலிவ் பழங்கள் விளையும் மரங்கள் ராவோடு ராவாக தீ வைக்கப்படுகின்றன,அந்த பூமியில் ராட்சத புல்டோசர் எந்திரங்கள் இறங்கி ப்ள்ளமும் மேடுமான பூமியை சமன்செய்து கட்டிடங்கள் முளைப்பதை நாம் கண்கொண்டு காண்கிறோம்,

பிலின் கிராமவாசிகள் நம்பிக்கையை கைவிட்டுவிடவில்லை, நாம் இந்த வீடியோ ஃபுட்டேஜில் பார்ப்பது அசலான நெஞ்சுரத்தை, ஒரு சமயம் எல்லாவற்றிலும் விரக்தியடைந்த இமாத் ஒரு ட்ரக்கை கொண்டு போய் இஸ்ரேலிய ராணுவம் எல்லை தாண்டி வந்து அமைத்த மின்வேலியை தற்கொலைப்படை போராளி போல சேதப்படுத்துகிறார்,இதில் அவருக்கு அடிபடாத இடமே இல்லை,நைந்து போன நாராகிறார் இமாத்,இருந்தும் 3மாத தீவிர சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் கேமராவை எடுக்கிறார்,

அப்படி தன் ஐந்தாம் கேமராவையும் துப்பாக்கி குண்டுக்கு தாரை வார்த்த இமாத்,ஆறாவது கேமராவை வாங்கி இப்படத்தை முடித்திருக்கிறார்,நாம் உலகில் அசகாய நெஞ்சுரத்தை காண விழைய ஆசைப்பட்டால் இதை பார்க்கவேண்டும்,சூடு சுரணையை தூண்டும் ஒரு படைப்பு.அவசியம் உலக சினிமா ஆர்வலர்கள் தேடிக்காணவேண்டிய படைப்பு,எடிட்டிங்கே இல்லாத ஒரு படம்,நம் நாட்டில் சாத்தியம் ஆகாத சித்திரம்.டோண்ட் மிஸ் இட்.
படத்தின் யூட்யூப் காணொளி:-

2 comments:

மதுரை அழகு சொன்னது…

உங்கள் பதிவைப் படிக்கும் போதே ஆர்வத்தைக் கிளப்பி விட்டது (கேமரா சார்ந்த கதை என்பதாலும் கூட). கண்டிப்பாகப் பார்த்து விடுகிறேன்!

Karthikeyan Vasudevan சொன்னது…

நன்றி மதுரை அழகு

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)