அருமை நண்பர்களே,
நலம் தானே?பதிவுகள் எழுதியே நாளாகிறது,வழக்கமான பல்லவிதான்,படிக்கவும் பின்னூட்டவும் கூட முடியவில்லை,நல்ல படங்களை பார்த்தபின் பதிய விரும்பினாலும் நேரமில்லை,இருந்தும் மாதத்துக்கு ஒரு பதிவேனும் எழுதுவது என்று வைத்திருக்கிறேன், பார்ப்போம், ட்ஜாங்கோ அன்செயிண்ட் படம் பற்றி எழுத நினைத்தும் உடனே முடிய வில்லை,என்னளவில் பல்ப்ஃபிக்ஷனுக்கு அடுத்த க்வெண்டினின் பெஸ்ட் என்றால் ட்ஜாங்கோ தான்,மிக அற்புதமான பாத்திரப்படைப்பு, மல்டி டைமென்ஷன் கதாப்பாத்திரங்களின் கலவை, வெள்ளையரும் கருப்பரும் கலந்த நல்லவர்கள் ஜோடி ஒருபுறம் ,வெள்ளையரும் கருப்பரும் கலந்த கெட்டவர்கள் ஜோடி இன்னொரு புறம் என என்றும் மறக்க இயலாத படம் ட்ஜாங்கோ அன்செய்ண்ட்.
டார்க் ஹ்யூமரில் நான் வியக்கும் இரு இயக்குனர்கள் என்றால் கோயன் சகோதரர்களும்,பின்னே க்வெண்டினும் தான்,ஹாலிவுட்டில் நிறைய டார்க் ஹ்யூமர் ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர்கள் இருந்தாலும் தரம் என்றால் இவர்கள் தான்,இந்தப்படம் துவக்கம் முதலே அசத்தலான் டார்க் ஹ்யூமர் ப்லெண்டட் வசனங்கள்,வசனம் புரிந்தது என்றால் வெடிசிரிப்பை சிரிக்காமல் இருக்க முடியாது.
குறிப்பாக டாக்டர் ஷுல்ட்ஸின் பல் டாக்டர் வண்டியின் மேலே ஸ்ப்ரிங்கில் இணைந்து ஆடிக்கொண்டிருக்கும் ஒரு பல்லின் மாதிரி,அது ஒரு பருக்கை பதம் தான்,அது என்ன ஒரு இன்னோவேட்டிவ் கான்செப்ட் பாருங்கள்,அதே போல டாக்டர் ஷுல்ட்ஸாக வரும் க்றிஸ்டோப் வால்ட்ஸ் ஆரம்பக்காட்சி முதலே தன் அதகளத்தை ஆரம்பித்து விடுகிறார்.
டாக்டர் கிங் ஷூல்ட்ஸின் வண்டி நான் வரைந்தது |
இவரின் இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ் பிடித்ததா அல்லது ட்ஜாங்கோ பிடித்ததா என்றால் பதில் சொல்லுவது கடினம் ,அப்படி ஒரு அற்பணிப்பு,மனிதர் பின்னியிருக்கிறார், குதிரையேற்றத்தின் போது கீழே விழுந்து இடுப்பு எலும்பு நகர்ந்து விட்டபடியால் ஆரம்பக்காட்சிகள் அவரது இடுப்பெலும்பு குணமாகும் வரை அந்த பல் டாக்டர் வண்டியிலேயே அமர்ந்து பயணிப்பது போல அமைக்கப்பட்டது எனப் படித்தேன், வாவ்.இந்த மனிதர் அடிமை ட்ஜாங்கோ மீது காட்டும் வெள்ளைய கரிசனம் மிகஅருமை,மனிதர் மீது இதனாலும் கூட நம்மை அறியாமல் பிடிப்பு வந்து விடுகிறது. வழக்கொழிக்கப்பட்ட நிக்கர் என்னும் இனவெறி வார்த்தை படம் முழுக்க உச்சரிக்கப்படுகிறது,ஆனால் அது இன்றி இனவெறி படம் எடுக்க இயலாது.
ஆரம்பக்காட்சியில் கோபக்கார முட்டாள்கள் ஸ்பெக் சகோதரர்களிடமிருந்து ட்ஜாங்கோவை 120 டாலர் கொடுத்து வலுக்கட்டாயமாக வாங்கிவிட்டு,ட்ஜாங்கோவை நோக்கி நானாக இருந்தால் அந்த இறந்து போன வெள்ளையனின் குளிர்கால கோட்டையும் கபளிகரம் செய்திருப்பேன்,போய் எடுத்துக்கொள்,என்று சொல்லிவிட்டு,அதற்கு உண்டான டாலர்களை செத்துக்கொண்டிருக்கும் வெள்ளையனிடம் விட்டெறிவதும், அடிமை ட்ஜான்கோவை வாங்கிவிட்டு செத்துக்கொண்டிருக்கும் வெள்ளையனிடம் பில் ஆஃப் சேல் கொடுப்பாயா? எனக்கேட்கும் காட்சியும், ட்ஜான்கோவின் கூட இருக்கும் இதர அடிமைகளிடம் கால்விலங்குகளின் சாவியை அவர்களிடம் எறிந்துவிட்டு, 2 யோசனைகள் தருவேன்,ஒன்று, இந்த பாதி செத்தவனை கூட்டிக்கொண்டு திரும்பவும் நீங்கள் வந்த 36 மைல் நடந்து போய் அங்கே இவனை மருத்துவமனையில் சேர்ப்பது,இரண்டு இவனையும் இவன் சகோதரன் உடம்பை நன்கு ஆழக்குழிதோண்டி புதைத்துவிட்டு நீங்கள் விரும்பும் ஊருக்கு திரும்பி புது வாழ்க்கை வாழ்வது,உங்களில் அநேகமாக வானசாஸ்திர நிபுனர் யாரும் இருக்க வாய்ப்பு குறைவுதான்,பை த வே அது தான் நார்த் ஸ்டார்,டாட்டா என்று நடையை கட்டும் காட்சி டாப்.
க்றிஸ்டோப் வால்ட்ஸ் அதிலேயே நம் ரசிகர் உள்ளங்களை கொள்ளை கொண்டு விடுகிறார்,அப்படி ஒரு ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை 30 வருட நடிப்பு வாழ்க்கைக்கு பின்னர் மனிதர் பெற்று விட்டார்,ஜேவியர் பர்டமின் படம் ஏதுமில்லா டைம் லைனும்[ஸ்கை ஃபால் எனக்கு திருப்தி இல்லை] இவருக்கு யோகம் என்றாலும்,மனிதருக்கு கெபாசிட்டி மிக மிக அதிகம். எந்த வேடம் கொடுத்தாலும் மனிதர் தாங்குவார். மிக அற்புதமான ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் விட்டி கதாபாத்திரத்துடனான வில்லத்தனம் செய்வது இவருக்கு இப்படி கைவந்திருக்கிறது.
அடுத்ததாக என்னை மிகவும் கவர்ந்த காட்சியாக ட்ஜாங்கோவும் இவரும் ஒரு சிற்றூருக்குள் வந்து பாருக்குள் சென்று ட்ரிங்க் கேட்க,அங்கே ட்ஜாங்கோவை பாருக்குள் பார்த்த பார் மேனின் பதைபதைப்பு இருக்கிறதே,அதிலேயே நாம் கருப்பர்கள் எந்த அளவுக்கு வெறுக்கப்பட்டனர்,எப்படி லின்ச் என்னும் தூக்கில் ஏற்றியும் தீவைத்தும் கொள்ளப்பட்டனர் என புரிந்து கொள்கிறோம், படத்தில் அருமையான் ஒரு லின்ச் காட்சியும் உண்டு.1800 களின் பிற்பாதிகளில் துவங்கிய இந்த கு க்ளக்ஸ் கான் என்னும் அமெரிக்க நிறவெறி கும்பலின் சம்பவத்தை சரியாக படத்தில் எள்ளல்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் க்வெண்டின்.இதற்கு முன்னர் கோயன் சகோதரர்களின் ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ என்னும் படத்தில் இதே போன்ற லின்ச் காட்சி எள்ளலுடன் உண்டு. நண்பர்கள் அதையும் பார்க்க வேண்டுகிறேன். அங்கே பாரில் இருந்து விறுவிறுவென வெளியேறிய பார் மேனிடம் ,டாக்டர் ஷூல்ட்ஸ் ஷெரிஃபை கூட்டிவா, மார்ஷல் வேண்டாம் என லந்தாக சொல்லி அனுப்பும் காட்சி உண்டு அது பிரமாதமான ஒன்று,
ஷெரிஃப் வந்ததும் அதிரடித் திருப்பமாக வீரவசனம் பேசிய ஷெரிப்பை பாயிண்ட் ப்ளான்கில் வைத்து டாக்டர் போட்டுத்தள்ளுகிறார்,அந்த காட்சியிலேயே டாக்டரின் ஸ்டைல் நமக்கு க்வெண்டினால் சொல்லப்படுகிறது, அவரின் கோட் கஃப்ஃபுக்குள்ளே ஒரு டெரிங்கர் ரக சிறிய பிஸ்டல் வைத்திருக்கிறார்,கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியை இயக்கி வயிற்றில் சரியாக துளைக்கிறார் டாக்டர். இன்னும் திருப்தியில்லை டாக்டருக்கு, மண்டக்கும் ஒரு குண்டை அனுப்புகிறார். அதகளமான காட்சியது, அதே கணம் ஒரு பெண்மணியும் பொத்தென மயங்கி விழுகிறார் பாருங்கள்.ரியல்லி சூப்பர்ப்,
கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்துக்கு அடுத்தபடியாக ஸ்ட்ரீட் ரியலான வன்முறைக்காட்சிகள் என்றால் இது தான், தரத்துக்கு வேண்டி சொன்னேன். க்வெண்டின் இஸ் த பெஸ்ட் என அடிக்கடி சொல்ல வைக்கிறார் க்வெண்டின், இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் மனிதர் செய்யும் பழமையில் புதுமை, ஸ்பாகெட்டி வெஸ்டெர்ன் படத்தின் ஜானரை எடுத்துக்கொண்டு அதை சதர்ன் என மாற்றி முழங்கியது புதுமை, படத்தின் பிற்பாதியில் அறிமுகமாகும் ஃப்ரான்கோஃபைலான கால்வின் கேண்டி கதாபாத்திரம் ,தன்னை ஒரு சதர்ன், தெற்கத்தி ஆள் என்கிறது. இது வரை ஹாலிவுட் வெஸ்ட்,வெஸ்ட் என முழங்கியதை ஒரே படத்தில் சதர்ன் என மாற்றுவதில் எத்தனை பெரிய தைரியம் மனிதருக்கு?
ஏற்கனவே வந்து நீங்காப் புகழும் வெற்றியும் பெற்ற என்னியோ மாரிக்கோனியின் ஒரிஜினல் இசைசேர்ப்பையே படத்தில் பயன்படுத்தி அதற்கு மதிப்பும் மரியாதையும் செய்துள்ளார், பழமையை அதன் புராதானம் குலையாமல் பயன்படுத்தி சிலாகித்து அழகு பார்க்கும் ஒரே மனிதர் க்வெண்டின் தான் என்பேன், ஒரு சில்லை கூட சிதிலப்படுத்தமாட்டார், ஏன் எழுத்து வடிவத்தை(காமிக்கல் ஃபாண்ட்) கூட இவர் எப்படி சிறு பிராயத்தில் ரசித்தாரோ அதை அப்படியே தன் ரசிகர்க்கு வழங்குவார்,இதில் இன்ஸ்பையர் ஆனேன் அதை அப்படியே பயன்படுத்துவேன்,க்ரெடிட் கொடுப்பேன்,என்னும் இவரின் பிடிவாதமும் நேர்மையும் மெச்சத்தக்கது.
இதில் ட்ஜாங்கோ என்னும் பெயரும் கூட இன்ஸ்பிரேஷன் தான்,அதில் நடித்த 60களின் கதாநாயகனை மரியாதை செய்ய இங்கே பார் காட்சியில் கேமியோவாக தோன்றவைத்தார் எனப் படித்தேன்.மேலும் அமெரிக்கரின் ஆரம்ப வரலாறு அசிங்கம் மிக்கது,அது நாறும் என்றாலுமே துணிந்து காலால் மிதித்திருக்கிறார் இயக்குனர், கருப்பர்கள் கடந்து வந்த வரலாறும் பட்ட வேதனையும் சொல்லில் வடிக்க முடியாதது,2ஆம் உலகப்போரில் யூத இனம் பட்ட சொல்லொணாத்துயரை 100 வருடம் முன்பே அமெரிக்காவில் அனுபவித்த இனம் கருப்பர் இனம்.
அதை வேற்று நாட்டவனா படமாக எடுக்க முடியும்?,ஒரு அமெரிக்கன் தன் அமெரிக்க சினிமாவில் தானே அந்த அசிங்கத்தை காட்டி ஆவணப்படுத்த முடியும்? எனக் கேட்கிறார் இயக்குனர். இந்த அளவுக்கு எள்ளலுடன் டார்க்ஹ்யூமர் கோட்டிங்கோடு சீரியஸ்தன்மை குறையாமல் காட்டியிருப்பது மிக அற்புதம், திரைக்கதை என்றால் இப்படி இருக்க வேண்டும், குறை கண்டு பிடிக்க முடியாத படைப்பு, நட்புக்கு இலக்கணமாக முற்பாதியில் டாக்டர் ஷூல்ட்ஸையும் (ஜெர்மானிய வெள்ளையர்) ட்ஜான்கோவையும் (கருப்பர்) நாம் பார்த்தால் பிற்பாதியில் மிஸிசிப்பியில் கேண்டிலேண்டில் நாம் கேல்வின் கேண்டியையும் (ஃப்ரென்சு வெள்ளையர்) வீட்டு தலைமை அடிமை ஸ்டீவன்(கருப்பர்)ஐயும் பார்க்கிறோம், என்ன பக்காவாக ஒரு பாத்திரப்படைப்பு என அட போட்டு வியக்க வைக்கிறது. இரண்டே முக்கால் மணி நேரப்படத்தின் நீளம் முப்பது நிமிடம் போல கரைகிறது, அவ்வளவு நேர்த்தியான் எடிட்டிங்.
டாக்டர் ஷூல்ட்ஸும் ட்ஜான்கோவும் நல்ல நண்பர்களான பிறகு ட்ஜான்கோவிடம் ஒரு ஃபிட்னஸும் ஆட்டிட்யூடும் வந்திருப்பதை நாம் உணர்வோம், கதாப்பாத்திரமான உருமாறுவது என்பது இது தான், கருப்பர்களுக்கு அப்படியான ஒரு கொடிய காலக்கிரமத்தில் டாக்டர் ஷூல்ட்ஸுடன் சேர்ந்து சென்று ட்ஜான்கோ பவுண்டி ஹண்டிங் செய்யும் காட்சிகள் அதகளம்,அவை எல்லாம் நம்பும் படியாக படமாக்கப்பட்டுள்ளது, ட்ஜான்கோவாக வந்த ஜேமி ஃபாக்ஸ், மிக பண்பட்ட நடிகர்,இவர் பார்வையற்றவராக தோன்றி நெஞ்சை அள்ளிய ரே படம் எனக்கு மிகவும் பிடிக்கும், அதற்கு இவர் ஆஸ்கர் பெற்றிருந்தார், இந்தப்படத்தில் இவருக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பு வில்ஸ்மித்துக்கு போக வேண்டியது அவர் அடிமை கோளத்தில் நடிக்க விரும்ப்பாமல் தவிர்த்தார்,எனப்படித்தேன்.இவர் இப்பாத்திரத்துக்கு செய்த நீதி மிக அருமை என்பேன்.
இவரின் மனைவியாக நடித்த நடிகை கெர்ரி வாஷிங்டன் ஏற்கனவே ரே படத்திலும் இவருக்கு மனைவியாக வந்திருந்தார்.க்வெண்டினின் காஸ்ட்ங் என்றுமே சோடை போனதில்லை,இதிலும்.
பிற்பாதியில் கேண்டிலேண்டில் வரும் மாண்டிங்கோ சண்டையில் வைத்து கேல்வின் கேண்டி [லியார்னடோ டிகார்பியோ] நமக்கு அறிமுகமாவார், பார்க்க சாஃப்டான ஆனால் நிஜத்தில் டெரரான ஃப்ரான்கோஃபைல் வில்லனாக டிகாப்ரியோ, இவர் ஏற்கனவே ஒரு படத்தில் வில்லனாக பார்த்ததுண்டு,படம் பெயர் நினைவில்லை, மனிதர் துவம்சம் செய்துள்ளார், இவரை டிரக்டர்ஸ் டார்லிங் என்பார்கள், மனிதர் எந்த பாத்திரத்துக்கும் அம்சமாக பொருந்துவார். இதில் நிறவெறி கொண்ட கெட்டவன் கதாபாத்திரம், சும்மா பிரித்து மேய்ந்திருக்கிறார்,

தன் விதவைத் தங்கை லாராவிடம் இன்ஸெஸ்ட் ரிலேஷன்ஷிப் வைத்திருப்பாரோ ? என்ற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது, ஆனால் உறுதியாக தெரியவில்லை, தவிர படத்தில் இன்னொரு பெண் சிகப்பு முகமூடிக்குள் கோடாரியுடன் அந்த நாயை ஏவிவிடும் காட்சியில் பிண்ணணியில் தோன்றுவார் அவர் க்வெண்டினின் டெத்ப்ரூஃப் படத்தில் வந்த ஸோ பெல் [Zoë Bell]ஆவார்,
அவர் கடைசிக் காட்சியில் 2 குழந்தைகள் இருக்கும் புகைப்படத்தை ஸ்டீரியோப்டிகான் கருவியில் வீடியோ போலப் பார்பார்,அதில் பெரிய தூண்களுக்கு அடியில் இரு குழந்தைகள் இருப்பர்,அதில் ஒரு வெள்ளைய சிறுமியும்,ஒரு கருப்பின சிறுவனும் இருப்பர்,
என் புரிதலின் படியும் இணைய விவாதங்களின் படியும் பார்த்தால் அது அந்த சிகப்பு முகமுடி அணிந்த பெண்மணியும்,ட்ஜாங்கோவும் ஆகும்.இயக்குனர் ஒருவேளை இரண்டாம் பாகத்துக்கு குறியீடாக வைத்தாரா?அல்லது ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ளட்டும் என விட்டாரா?அல்லது அன்கட்,டிரக்டர் கட் ஒரிஜினல் டிவிடி 5 மணிநேரம் ஓடுமாம்,அதில் கட் செய்யப்பட்ட காட்சிகள் கிடைக்குமா?என குழம்பியிருக்கிறேன்.
அங்கே கடைசிக் காட்சியில் அந்த மர வீட்டுக்குள்ளே ட்ஜான்கோ அப்போது வந்து விட அங்கே குழுமி இருக்கும் அல்லக்கைகள் அத்தனை பேரும் துப்பாக்கிக்கு இரையாகின்றனர், ஆனால் அவள் ஒன்றும் செய்யப்படவில்லை. அல்லது கொல்லபட்டுவிடுகிறாள்,[அந்த காட்சியை நன்கு உன்னிப்பாக பார்த்தும் குழப்பம்] இந்த குறியீடுகளுக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருப்பவர்கள் இணையத்தில் தேடவும். இந்த சுட்டி பயனளிக்கும்.
தங்கை லாராவை கேண்டி அறிமுக காட்சியில் டயர்டான விழிகளுக்கு நான் பருகும் டானிக்கே என வர்ணிக்கிறார், பின்னர் கட்டி அணைத்து கீழ் கன்னத்தின் இரு புறமும்,பின்னர் உதட்டில் நேருக்கு நேராகவும் முத்தமிடுகிறார், இதில் தான் எனக்கு இருவரும் இன்ஸெஸ்டோ என சந்தேகம் வலுத்தது,ஏற்கனவே க்ளாடியேட்டர் படத்தில் ஜோக்குவின் பினிக்ஸுக்கும் கோனி நீல்சனுக்கும் இருக்கும் இன்ஸெஸ்ட் ரிலேஷன்ஷிப் நினைவுக்கு வந்தது.
பின்னர் நான் வியந்த ஒரு டைரக்டர் டச் என்ன என்றால்,கேண்டி டாக்டர் ஷூல்ட்சையும், ட்ஜாங்கோவையும் பிக் ஹவுஸுக்கு வரவேற்று கூட்டி வருகையில் தொகை 6500 டாலருக்கு ஒரு செக் எழுதுவது போல திரையில் காட்டப்படும்.பின்னர் கால்வின் கேண்டி என கையெழுத்தும் போடப்படும், ஆனால் கேண்டி விக்டோரிய குதிரை வண்டியில் வந்து கொண்டிருப்பார்.அங்கே கையொப்பமிடுவது ஸ்டீஃபன்,ஆம் கருப்பின வீட்டு தலைமை அடிமை ஸ்டீவனே தாம்,
நாயை ஏவிவிடும் காட்சியில் முகமூடியுடன் Zoe Bell |
அவர் கடைசிக் காட்சியில் 2 குழந்தைகள் இருக்கும் புகைப்படத்தை ஸ்டீரியோப்டிகான் கருவியில் வீடியோ போலப் பார்பார்,அதில் பெரிய தூண்களுக்கு அடியில் இரு குழந்தைகள் இருப்பர்,அதில் ஒரு வெள்ளைய சிறுமியும்,ஒரு கருப்பின சிறுவனும் இருப்பர்,
கடைசியில் Zoe Bell ஸ்டீரியோப்டிகானில் பார்க்கும் புகைப்படம் |
என் புரிதலின் படியும் இணைய விவாதங்களின் படியும் பார்த்தால் அது அந்த சிகப்பு முகமுடி அணிந்த பெண்மணியும்,ட்ஜாங்கோவும் ஆகும்.இயக்குனர் ஒருவேளை இரண்டாம் பாகத்துக்கு குறியீடாக வைத்தாரா?அல்லது ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொள்ளட்டும் என விட்டாரா?அல்லது அன்கட்,டிரக்டர் கட் ஒரிஜினல் டிவிடி 5 மணிநேரம் ஓடுமாம்,அதில் கட் செய்யப்பட்ட காட்சிகள் கிடைக்குமா?என குழம்பியிருக்கிறேன்.
அங்கே கடைசிக் காட்சியில் அந்த மர வீட்டுக்குள்ளே ட்ஜான்கோ அப்போது வந்து விட அங்கே குழுமி இருக்கும் அல்லக்கைகள் அத்தனை பேரும் துப்பாக்கிக்கு இரையாகின்றனர், ஆனால் அவள் ஒன்றும் செய்யப்படவில்லை. அல்லது கொல்லபட்டுவிடுகிறாள்,[அந்த காட்சியை நன்கு உன்னிப்பாக பார்த்தும் குழப்பம்] இந்த குறியீடுகளுக்கு அர்த்தம் தேடிக்கொண்டிருப்பவர்கள் இணையத்தில் தேடவும். இந்த சுட்டி பயனளிக்கும்.
தங்கை லாராவை கேண்டி அறிமுக காட்சியில் டயர்டான விழிகளுக்கு நான் பருகும் டானிக்கே என வர்ணிக்கிறார், பின்னர் கட்டி அணைத்து கீழ் கன்னத்தின் இரு புறமும்,பின்னர் உதட்டில் நேருக்கு நேராகவும் முத்தமிடுகிறார், இதில் தான் எனக்கு இருவரும் இன்ஸெஸ்டோ என சந்தேகம் வலுத்தது,ஏற்கனவே க்ளாடியேட்டர் படத்தில் ஜோக்குவின் பினிக்ஸுக்கும் கோனி நீல்சனுக்கும் இருக்கும் இன்ஸெஸ்ட் ரிலேஷன்ஷிப் நினைவுக்கு வந்தது.
பின்னர் நான் வியந்த ஒரு டைரக்டர் டச் என்ன என்றால்,கேண்டி டாக்டர் ஷூல்ட்சையும், ட்ஜாங்கோவையும் பிக் ஹவுஸுக்கு வரவேற்று கூட்டி வருகையில் தொகை 6500 டாலருக்கு ஒரு செக் எழுதுவது போல திரையில் காட்டப்படும்.பின்னர் கால்வின் கேண்டி என கையெழுத்தும் போடப்படும், ஆனால் கேண்டி விக்டோரிய குதிரை வண்டியில் வந்து கொண்டிருப்பார்.அங்கே கையொப்பமிடுவது ஸ்டீஃபன்,ஆம் கருப்பின வீட்டு தலைமை அடிமை ஸ்டீவனே தாம்,
சாமுவேல் ஜாக்சன்!!!!!ஐயோ என்னா அதகளம்?,மனிதர் நாராசமான இந்த கருப்பின கிழ சொம்பு வேடத்துக்கு அப்படி பொருந்திப் போகிறார்,கேண்டி லேண்டின் பிக் ஹவுசில் இவரின் ரேஞ்ச் எத்தகையது என்பதை உணர்த்தவே அந்த காசோலை வரையும் காட்சியை இயக்குனர் வைத்திருப்பார் என நினைக்கிறேன், என்னா வஞ்சம்,என்னா தெனாவட்டு,வெட்டு ஒன்று துண்டு இரண்டு என இவர் பேசும் வசனம்,சக கருப்பின ட்ஜான்கோ மீது இவர் உமிழும் வெறுப்பு என எழுத வார்த்தை இல்லை . ஸ்பீச்லெஸ்.டெரிஃபிக்கான கேரக்டர், இத்துடன் க்வெண்டினின் கூட்டணியில் இவர் 6 படம் செய்ததாகப் படித்தேன், பல்ப் ஃபிக்ஷனின் ஜூல்ஸ் வேடம் எப்படி வாழம் காலத்தில் நம்மனதுள் பதிந்ததோ இந்த ஸ்டீவன் வேடமும் அப்படித்தான்.வாவ்வி.
உணவு மேசையில் என்னை லைப்ரரியில் வந்து பார் என அதிகாரமாக கேண்டியிடம் கிசுகிசுத்துவிட்டு, உள்ளே ஒயினை மெல்ல கலக்கி ருசித்து தினவுடன் பருகிக்கொண்டே,வெளியே வந்திருப்பவர்கள் டுபாகூர்கள் என முடிச்சை அவிழ்க்கும் காட்சி ரொம்பப் பிரமாதமான ஒன்று.
ட்ஜான்கோவும் ப்ரூம் ஹில்டாவும் கணவன் மனைவி தான் என்பதை கண்டு பிடிக்க இந்த 80 வயது கிழம் ஸ்டீஃபன் ஆடும் நாடகம் அடேங்கப்பா?!!!,உணவு நேரத்தின் போது கேல்வின் கேண்டி,ப்ரூம் ஹில்டாவிடம் பிக் ஹவுசில் உணவு மேசையில் சர்வ் செய்வது உனக்கு பிடித்திருக்கிறதா?எனக் கேட்க, சொம்பு ஸ்டீஃபன் ஒரே கல்லில் 2 மாங்காய் அடிப்பது போல , உக்கும் கசக்குமா பின்னே?!!!.... இல்லாவிட்டால் இவள் மாண்டிங்கோ ஃபைட்டர்களின் காமவெறியாட்டத்துக்கு கம்ஃபர்ட் கேளாக தினம் தினம் ஈடுகொடுக்க வேண்டியிருக்குமே? ஆனால் இவள் அந்த சுகத்துக்கும் மயங்குபவள் என அவளின் நிலையை நக்கலாக அடித்துவிடும் காட்சி க்ளாஸ் என்பேன். அங்கே மேசையில் அமர்ந்து இதைக்கேட்டு மனதுள் பொருமும் ட்ஜான்கோவின் எரியும் கண்களை பார்த்து உண்மையை இவர் கண்டறியும் இடமெல்லாம் சான்சே இல்லை.மிக அற்புதம்.
மாண்டிங்கோ ஃபைட் என்பதை நான் இந்த படத்தில் தான் கேள்வியுற்றேன், இதே பெயரில் ஒரு படமும் வந்துள்ளதாம்,ஆக இதுவும் இன்ஸ்பிரேஷன் தான், இதன் மூலம் ஒரு படத்தில் ஓராயிரம் இன்ஸ்பிரேஷன்கள் இருந்தாலும் அவற்றிற்கு மரியாதை செய்யும் கலை ஒருவருக்கு கைவந்து விட்டால், அப்படைப்பு காவியமாகிவிடும் என உணர்ந்தேன். க்ரெடிட் கொடுத்து சிலாகிப்பது க்வெண்டின் பாணி, க்ரெடிட் கொடுக்காமல் சுருட்டி சொருகிக்கொள்வது ப்ளேகாரிஸ்டுகள் பாணி.இந்த படம் பார்த்த ப்ளேகாரிஸ்டுகள் உணர்ந்தால் அதுவே க்வெண்டினுக்கு கிடைத்த வெற்றி.
பதிவுக்கு சம்மந்தமில்லாத செய்தி, இயக்குனர் அனுராக் காஷ்யபின் கேங்ஸ் ஆஃப் வாசிபூர் மற்றும் தேவ் டி ஒரிஜினல் டிவிடிகளை பெற்றுக்கொண்ட மார்ட்டின் ஸ்கார்சஸி பாராட்டுக்கடிதம் ஒன்றை அனுராக்குக்கு அனுப்பி இருந்தார்,தேவ் டி பார்த்ததாகவும் அமேசிங் எனவும்.கேங்ஸ் ஆஃப் வாசிபூர் விரைவில் பார்ப்பேன்.எப்போது நியூ யார்க் வந்தாலும் அங்கே இவருக்காக காத்திருப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.மிகவும் மகிழந்த தருணம் அது,கற்றாரை கற்றாரே காமுறுவர் என்னும் கூற்றுக்கேற்ப மனமகிழ்ந்த தருணம் அது,ஒரு நிஜ படைப்பாளிக்காக நானும் கர்வம் கொள்கிறேன்,அவரை சிலாகிப்பதற்காக,அனுராக் யூ ரியல்லி ராக்ஸ்,அண்ட் டிசர்வ் இட்!!!

கடைசியாக மிகவும் ரசித்த காட்சி ஒன்று ,இங்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் போலவே இப்படமும் மிக நீண்ட வசனங்களால் நகரும் படமே, இங்கே டாக்டரிடமும் ட்ஜாங்கோவிடமும் உண்மைய வெளிக்கொணர வேண்டி கேல்வின் கேண்டி ஜோ என்னும் தன் கருப்பின வேலைக்காரனின் பின் மண்டை ஓட்டில் நடத்தும் மூன்று குழிகள் (3டிம்பிள்ஸ்) என்னும் பாடம் மிகப் பிரசித்தி பெற்றது என்பேன், அந்த தியரி உண்மையா?என எனக்குத் தெரியாது?
ஆனால்!!! அதே குழிகள் டிஜாங்கோவுக்கும் ப்ரூம் ஹில்டாவுக்கும் நான் சொல்லும் அதே இடத்தில் சத்தியமாக இருக்கும் பார்க்கிறாயா?என கேட்டு முழங்கும் இடத்தில் ஒரு கணம் நம் நெஞ்சே நின்றிருக்கும்.இது போல படம் முழுக்க வியப்பிலாழ்த்தும் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.

Auf wiedersehen என்னும் ஜெர்மானிய சொல் மீண்டும் சந்திக்கும்வரை என இதற்கு அர்த்தமாம் அதை பவுண்டி ஹண்டின்கின் போது டாக்டர் ஷுல்ட்ஸ் சொல்வது மிக மிக அழகு.இதே வசனத்தை வைத்து ஒரு வசனம் கடைசியில் உண்டு.
"I miss you like a baby misses mammy titty" என்று கருப்பின தலைமை அடிமை ஸ்டீஃபன் கேல்வின் கேண்டியை பிக் ஹவுஸின் வாசலில் வைத்து எப்படி இவரை மிஸ் செய்தேன் என்பதற்கு உதாரணமாக சொல்லுகிறார், குழந்தை இழந்த அம்மாவின் பாலூட்டும் முலைபோல என்று, அதி பயங்கரமான உருவத்துக்குள்ளே இருந்து இப்படி ஒரு லந்தை கொடுத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கப்போய்விடுகிறார் சாமுவேல் ஜாக்சன்,இப்படி ஒரு அட்டகாசமான சொம்பு பாத்திரம் நான் வாழ்வில் பார்த்ததேயில்லை.மிகவும் ரசித்த ஒன்று.
டாக்டர் ஷூல்ட்ஸ் கடைசியில் ஒருவித விரக்திக்கு ஆளாகிவிடுகிறார்,அவர் அங்கே கேண்டியிடம் ,உன் அடிமைக்கு The Three Musketeers எழுதிய அலெக்ஸாண்டர் டுமாஸின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை வைத்திருந்தாய் இல்லையா? இன்று நீ நாயை ஏவிவிட்டு ஒரு கருப்பின அடிமையை கொன்றதை பார்த்திருந்தால் டுமாஸ் என்ன செய்திருப்பார் ?என வினவ , கேண்டி, டுமாஸ்?!! மெல்லிதயம் கொண்ட ஃப்ரென்சுக்காரன் ,என பதில் சொல்ல, அதற்கு தலையை மறுப்பது போல ஆட்டி, டுமாஸ் ஒரு கருப்பர். என முற்றுப்புள்ளி வைப்பார்.அந்த காட்சி எல்லாம் எக்ஸலண்டாக இருந்தது. காட்சி எப்படி ஃப்ரேம் செய்யவேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அக்காட்சி.
இயக்குனர் அட்மோஸ்பியர் ஆர்டிஸ்டுகள் தோன்றும் காட்சிகளில் அதிகவனம் செலுத்தி செதுக்கியுள்ளார்,அந்த சிற்றூருக்குள் வரும் காட்சியில் இவர்கள் குதிரையில் ட்ஜாங்கோ அமர்ந்து வர, அதை எத்தனை விழிகள் வியந்து பார்க்கும்?அங்கே ஒரு டாக்டர் பேஷண்டுக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் சொல்லுவார். மேலே சன்னலில் ஒரு பெண் ட்ஜாஙோவை பார்த்து ஆச்சரியப்படுவாள், அங்கே டாப் ஆங்கிளில் ஒரு தூக்கு மரம் கயிற்றுடன் காட்டப்படும். ஒரு ஆடு மேய்ப்பவன் முன்னே போவான்.அதன் மூலம் அங்கே நிலவும் டெரர் காட்டப்படும்.
கேண்டிலேண்டில் ஷீபா என்னும் கருப்பின காஸ்ட்லி கம்ஃபர்ட் கேளின் ஆட்டிட்யூட் ஒருவர் பார்க்க வேண்டும் ? தனக்கு பார்பன் பாட்டிலை தனியே கொண்டு சென்று அமர்ந்து குடிப்பாள்,ட்ஜாஙோ மீது ஒரு அசூயை பார்வை விடுவாள்.அவளை கேண்டி அப்படி ஒரு செல்லம் கொஞ்சுவான்.
மற்றொரு காட்சியில் இவர்கள் பிக்டேடியின் பண்ணைக்கு பவுண்டி ஹண்டின்கிற்கு போவார்கள்.அங்கே வீட்டு வெளியே இருக்கும் ஒரு கருப்பு பணிப்பெண்ணிடம், பிக்டேடி விளக்கமாக , ட்ஜான்கோ ஒரு அடிமை இல்லை, அவனை எப்படி நடத்த வேண்டும் என புளி போட்டு விளக்கும் காட்சி கவிதை, அதற்கு அவள் அவனை வெள்ளையன் போல ட்ரீட் செய்யவா? எனக் கேட்க, அங்கே டாக்டர் ஹூல்ட்ஸ் ஆமாம் என மண்டையை ஆட்டுவார்,அதே நேரத்தில் பிக் டேடி இல்லை என மண்டையை ஆட்டுவார்.அது போல பல சிக்னேச்சர் காட்சிகள் படத்தில் உண்டு.

நண்பர்கள் தவறாமல் இந்தப் படம் பார்க்க வேண்டும்,சப்டைட்டிலோடு பார்க்கவேண்டும்,அப்போது தான் ரசமான பல வசனங்களை கேட்டு களிப்புற முடியும்,டாக்டருக்கும் ட்ஜாங்கோவுக்கும் , கேண்டிக்கும் இடையில் படத்தில் பறிமாறப்படும் வசனங்கள் மிக மிக அற்புதமானவை, முக்கியமானவை.ஆக யாரும் மிஸ் செய்யக்கூடாத ஒரு படம்.நான் இங்கே நண்பர்கள் படம் பார்த்து ஒன்றவேண்டும் என்பதற்காக கதையை சொல்லவேயில்லை.மன்னிக்கவும்.
படத்தின் முன்னோட்ட காணொளி ( நன்றி விக்கிப்பீடியா, ஐஎம்டிபி, கூகுள், யூட்யூப்)