பாம்பே டாக்கி[Bombay Talkie][1970][இந்தியா]

படத்தின் போஸ்டர்-ஜெனிஃபர் கெண்டெல்-சஷி கபூர்  தம்பதிகள்

பாம்பே டாக்கி என்னும் படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது,இதன் தயாரிப்பாளர்கள் மெர்சன்ட் ஐவரி நிறுவனத்தார். இவர்கள் தேசம், இனம், மொழி, கடந்து நல்ல சினிமா ,ஆவணப்படங்கள்செய்ய விழைபவர்கள், இது ஆங்கிலம் இந்தி பேசும் மல்டிலிங்குய்ஸ்ட் திரைப்படம், இது அமெரிக்க இயக்குனர் ஜேம்ஸ் ஐவரி இயக்கிய படம், இது இந்தி்ய சினிமாவின் பெருமைக்குரிய ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ராவின் வண்ணப்பட ஒளிப்பதிவை கொண்டிருக்கும் படம், 1970 களின்  பாலிவுட் திரைப்படங்கள் கொண்டிருந்த கதை அமைப்பு,க்ளிஷே,பாடல்கள்,ரொமான்ஸ்,க்ளாமர் இத்யாதி மற்றும் ஹாலிவுட் கொண்டிருந்த  உயர்ந்த ,அதி ரசனையான போஷான,லக்சுரியான தொழில்நுட்பங்களும் தன்னுள் ஒருங்கே கொண்டிருக்கும் படம். படத்தின் அற்புதமான இசை சங்கர் ஜெய்கிஷன்.

படத்தின் கதை மிகவும் எளிமையானது, பாலிவுட்டின் உச்ச மசாலா நடிகன் விக்ரம் [சஷிகபூர்], அழகிய மனைவி [அப்ர்ணா சென்] கணவனின் அன்புக்கும், கூடலுக்கு ஏங்குபவர், ஆனால் கணவனோ மாதம் 30 நாட்களுமே மசாலா திரைப்படங்களுக்கு கால்ஷீட் தந்து விட்டு,ஓய்வு ஒழிச்சலே இன்றி நடித்து வருகிறான், இது தவிர அட்வான்ஸ் வாங்கிப் போட்டுவிட்டு, கான்ட்ராக்ட் சைன் செய்து விட்டு, நிறைய கால்ஷீட் குளறுபடிகளும் செய்து வருகிறான், இதனால் விக்ரமின் மனைவியை வீட்டுக்கே வந்து மிரட்டும் ஒரு சினிமா ப்ரொட்யூசர் [உத்பல் தத்]அவளின் அழகில் மயங்கி அவளை அடையத் துடிக்கிறார், அதற்கு திட்டம் தீட்டுகிறார்.

பாலிவுட் சினிமாவைப் பற்றி உள்ளது உள்ளபடி ஆராய வரும் இங்கிலாந்து பெண் எழுத்தாளர் லூசியா [ஜெனிஃபர் கெண்டெல்] மீது சஷிகபூருக்கு, கண்டதும் காதல் வருகிறது, லூசியாவுக்கும் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதெல்லாம் மீறி காதல் வருகிறது,நேரம் ,தருணம் கிடைக்கும் போது கூடிக் குலவுகின்றனர் , சக இயக்குனர் ஹரியும் [ஸியா மொஹீதின்] லூசியா மீது ஒருதலைக்காதல் கொள்கிறார், லூசியா அவரிடம் உண்மையான நட்பை மட்டும் பேணினாலும்,ஹரி அதை காதலாக கனிய வைக்க தீவிரமாக முய்ற்சிக்கிறார் , தகுதியில்லாதவரிடம் செலுத்தும் காதல் பற்றி படம் விரிவாக பேசுகிறது, பசித்தவனுக்கு உணவு இல்லை, புசித்து வயிறு நிரம்பியவனுக்கே எல்லாம் கிடைக்கிறது, பல சமயங்களில் உணவும் காதலும் ஒன்று தான் , ஏங்குபவனுக்கு அது கிடைக்காது, இறுதியாக இவர்களின் விபரீத  உறவுகள் என்னவாகிறது? என்பதை படம் மிக அழகாக விளக்குகிறது.அப்போதைய பாலிவுட் சினிமாக்கள்  கொண்டிருந்த ஒட்டுமொத்த க்ளிஷேக்களின் ஆவண ஆக்கம் தான் இப்படத்தின் கதை.

படத்தில் வரும் டைப் ரைட்டர் மேலே கவர்ச்சிக் கன்னி ஹெலன் மற்றும் குழுவினர் ஆடும் பாடலுக்காக கலை இயக்குனர் பெரிய டைப் ரைட்டரையே செட்டாக போட்டிருந்தார். அப்பாடலை இங்கே பார்க்கலாம். காலம் சென்ற ஜெனிஃபர் கெண்டெல்-இவர் சஷிகபூரின் மனைவியுமாவார். அவரைவிட 6வயது மூத்தவர்], இதே போலவே சத்யஜித் ரேவின் மனைவி பிஜோயா தாஸும் ரேவை விட 3 வயது மூத்தவரே, இதன் மூலம் சான்றோர்கள் வயதைப் பார்ப்பதில்லை, உண்மையான காதலை,அறிவை, புத்திசாலித்தனத்தைத் தான் மனைவியாக அமையப்போகும் பெண்ணிடம் எதிபார்க்கின்றனர் என்பது விளங்குகிறது

இதன் பெயர் போடும் காட்சியைப் பாருங்கள் மும்பையின் நிஜமான நகர்ப்புறங்களை சிறிதும் பாசாங்கே இன்றி படம் பிடித்து,அதனுள்ளே நிழல் போன்ற சினிமா படத்தின் ஆயில் பெயிண்ட் கட்டவுட்டுகளை தொழிலாளர்கள் நகரில் நிறுவுவதற்கு சுமந்து செல்வதை அப்படியே படமாக்கியுள்ளார் , இந்த தீம் சத்யஜித் ரேவின் அன்க்ரெடிட் கம்போசிஷன் ஆக்கமாகும்,இதை டார்ஜிலிங் லிமிட்டட் என்னும் படத்திலும் உபயோகித்திருப்பார்கள், அவசியம் இந்த டைட்டில் ஸ்க்ரோலை பாருங்கள். பழைய படங்களில் எத்தனையோ புதுமைகள் புகுத்தப்பட்டு அவை குடத்தினுள் வைக்கப்பட்ட விளக்கு போல இருக்கின்றன, அவற்றை ஒரு சினிமா ஆர்வலர்  தேடிப் படித்து வியந்து அதை அழகாக ட்ரியூட் செய்ய வேண்டும், அதை விடுத்து மலினமாக அதை காப்பி அடிக்கக் கூடாது,
பாம்பே டாக்கி படத்தில் சத்யஜித் ரேவின் டைட்டில் தீம் கம்போசிஷன்.  ஓவியங்கள் திலக்.திரைப்பட மாணவர்கள் ,ஒரு ஸடைலிஷான மேக்கிங்கிற்காக பார்க்க வேண்டிய முக்கியமான படம் இது, 2013ஆம் ஆண்டு இதே பெயரில் ஒரு எஸ் மட்டும் சேர்த்து பாம்பே டாக்கீஸ் என்று நான்கு இந்திய உச்ச இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய கலைப்படமும் வெளியானது. நல்ல முயற்சி தான் என்றாலும், அது 1970ஆம் ஆண்டு வெளியான பாம்பே டாக்கி என்னும் படத்தை மறக்கடிக்கும் படி, கூகுளில் தேடினால் 2013 ஆம் ஆண்டு வெளியான படத்தைப் பற்றி தான் செய்திகளை அதிகம் தருகிறது. இதனால் தான் க்ளாசிக்குகளின் பெயர்களை புதிய படங்களில் பயன்படுத்தக் கூடாது என்று நான் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறேன்.

1 comments:

Subramaniam Yogarasa சொன்னது…

நல்ல பகிர்வு!இப்போதெல்லாம் எங்கே பொறுமையாக வளர்ந்து வரும் இயக்குனர்கள் இது போன்ற படங்களைப் பார்த்து இயங்குகிறார்கள்?மேலோட்டமாக மேய்ந்து விட்டு,போக்கடி போக்காக இயக்கி விட்டு, 'உலக' சினிமா என்றல்லவா பெயர் சூட்டுகிறார்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)