மெகா சீரியல்கள் தரும் பொது அறிவு!!!


ப்போதெல்லாம் டிவி சீரியல்களில் அவுட் டோர் காட்சிகள் மிகவும் லைவ்வாக எடுக்கின்றனர்,கேமராவும் அத்தனை சிறியதாகவும் எடை குறைவாகவும் வந்து விட்டது,இன்னும் கொஞ்ச நாள் போனால் அதை டார்ச் போல தலையில் கட்டிக்கொண்டு எடுக்கும் அளவுக்கு சிறியதாகிவிடும் போல.

இன்று ஒரு தமிழ் சீரியலில் திருச்சூர் நகரத்தில் ஒரு ஆதர்ச அப்பாவும் மகனும் ஒற்றை ஒயின் ஷாப், கள்ளுக்கடை பாக்கியில்லாமல் சல்லடை போட்டு தம் குடிகார மாப்பிள்ளையைத் தேடினர்,

முன்பே படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கியிருப்பார்கள் போலும், நம்மூர் போல யாரும் கேமராவை வெறிக்கவில்லை,யாரும் அட்மோஸ்பியர் ஆர்டிஸ்ட் கிடையாது, பகல் நேரக்குடிகாரர்கள், முழுநேர குடிகாரர்கள், பகுதிநேர குடிகாரர்கள்,ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வாங்கிப் போகும்,ஒரு லார்ஜ் ஏற்றிக்கொண்டு போகும் குடிகாரர்கள் என எத்தனை விதம்? உபரித் தகவலாக ஒரு முழு பாட்டில் கள்ளின் விலை 40 ரூபாய், ஹாஃப் பாட்டில் கள்ளின் விலை 20 ரூபாய் என அறியத் தந்தார் இயக்குனர். தன் பங்குக்கு ரசனையாக ஷாட் கம்போஸ் செய்திருந்தார் ஒளிப்பதிவாளர்.

இதன் மூலம் கேரள ஒயின் ஷாப்புகள் நன்றாக பராமரிப்பதை உணர முடிந்தது, அவர்கள் கள்ளுக்கடை கொட்டகையில் இயங்கினாலும் கூட மிகச் சுத்தமாக இருப்பதையும் மிகக்குறைந்த விலைக்கு தரமான கள்ளை அரசே விற்பனை செய்வதையும் உணர முடிந்தது, இதைப் பார்த்தாவது டாஸ்மாக் நிர்வாகம் சுத்தத்தை பேணுமா?இந்த அயல்நாட்டு பிராந்தி விஸ்கி ஜின் ஒயின் வோட்கா வகையறாக்களுக்கு கள்ளு எத்தனையோ தேவலாம்.தமிழ்நாட்டு குடிமகன்கள்,குடிமகள்கள் அவர்கள் உரிமையை போராடிப் பெற வேண்டிய நேரம் வந்து விட்டது.

மேலும் ஒரு விஷயமும் புரிந்தது,டிவி சீரியல்களில் இருக்கும் நல்லதையும் உணர்த்தியது,அவற்றில் பெரும்பாலானவை வெளிப்புற படப்பிடிப்பு செய்வதால்,ஒரு நகரம் 2013 ஆம் வருடம் எப்படி இருந்தது,2009 ஆம் வருடம் எப்படி இருந்தது என ஒரு தெளிவு பிறக்கிறது.1970,80 களில் இந்த நிலை இல்லை,பெரு வாரியான நாடகங்கள் ஸ்டுடியோக்களில்,டிவி ஸ்டேஷன்களில் எடுத்திருப்பார்கள். தவிர அவை இணையத்தில் அவை ஆவணக்காப்பு செய்யப்பட்டதில்லை, பாலு மகேந்திராவின் தரமான கதை நேரம் போன்றவை ஒரு விதிவிலக்கு.இன்றைய டிவி சீரியல்கள் அவை ஆரம்பித்து 750 நாட்கள் ஆனாலும் அதன் 1 ஆம் நாள் எபிசோடைக் கூட இணையத்தில் பார்க்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு,உதாரணத்துக்கு 2019 ஆம் ஆண்டு ஒரு படம் எடுக்க ஆர்ட் டைரக்டர்கள் மிகவும் மெனக்கெட வேண்டாம் ,இந்த ஹெச்டி ஒளிபரப்பின் மூலத்தை வாங்கி அப்படியே வீடியோ மாண்டேஜ் செய்து விடலாம்,மெகா சிரியல்களில் எத்தனையோ கெட்டவை இருந்தாலும் தன்னகத்தே  நல்லவற்றையும் கொண்டுள்ளதை எண்ணி வியக்கிறேன்.

சம்மந்தப்பட்ட என் இன்னொரு  பதிவு:-

என்னது?இனி சன் டிவியில் சனிக்கிழமையும் சீரியலா?

1 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உடனே 'போவதற்கு' உரிமையை கண்டிப்பாக உடனே பெற வேண்டும்...

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)