ரேபிஸ்[Kalevet (2010)]என்னும் இசரேலிய நாட்டுப் ஹீப்ரூ மொழிப் படம் பார்த்தேன்.இது இசரேலிய சினிமாவின் முதல் ஹாரர் ஜானர் படமாம்.
கோவணம் போன்ற நிலப்பரப்பைக் கொண்ட இசரேலை நான் எப்போதும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறேன். அதன் நிலப்பரப்பை நன்கு புரிந்து கொண்டு,எந்த விதமான செயற்கைத்தனமான செட்டும் இல்லாமல், இசரேலிய சினிமாவில் ஒரு ஹாரர் படத்தை முயன்றிருக்கிறார்கள் ரேபிஸ் படக்குழுவினர்.
மனிதனுக்குள்ளே இருக்கும் மிருகமும்,அது சக மாந்தர்கள் மீது நல்லவர் தீயவர் எனப்பாராமல் வெளிப்படுத்தும் கொலைவெறியும் தான் படத்தின் தீம். ரேபீஸ் நோய்க் கிருமி எப்படி விரைந்து பரவுமோ அது போலவே கொலை வெறியும் சக மனிதர்களின் மீது நல்லவர் ,கெட்டவர் எனப் பாராமல் சகட்டுமேனிக்கு இப்படம் முழுக்க ஏதோ வகையில் பிரயோகிக்கப்படுகிறது. அதை இந்தப்படத்த்தில் கையாளப்பட்டதைப் போல வேறெதிலுமே நான் பார்த்ததில்லை.
கோயன் சகோதரர்களின் பெர்ஃபெக்ஷன்,க்வெண்டின் டாரண்டினோவின் டார்க் ஹ்யூமர், சிக்,கோர் காட்சியாக்கம் போன்றவற்றிற்கு ட்ரிப்யூட் செய்து உருவாக்கப்பட்ட தரமான படைப்பு இது , ஒளிப்பதிவும், பிண்ணனி இசையும், டார்க் ஹ்யூமர், ரொமாண்டிக்,ஃப்ளர்டிங் பாணி வசனங்களும் படத்துக்கு பெரிய பலம்.
படத்தில் 10 கதாபாத்திரங்கள், ஒரே நாளின் பகலில் எடுக்கப்பட்ட கதை இது , இஸரேலின் ஒரு தடைசெய்யப்பட்ட ரிசர்வ் காடு தான் இதன் கதைக்களம்.
காடு என்றால் சூரிய ஒளி உட்புகாத காடு அல்ல,மெடிட்டேரியன் பிரதேசத்துக்கே உரிய வரண்ட நிலத்தில் அமைந்த காடு அது ,பல ஆண்டுகால இஸரேல் பாலஸ்தீனப் போரில் அக்காடுகள் முழுக்க நிலக்கன்னி வெடிகளும் ,எலிப்பொறியைப் போன்றே மனிதர்களைப் பிடிக்கும் கூண்டுப் பொறிகளும் , கரடியைப் பிடிக்க பதிக்கப்பட்ட இரும்பு கண்ணிகளும் நீக்கமற நிரம்பியிருக்கும் காடு அது.
அப்பா தகாத உறவை கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடிவந்து காட்டில் தங்கும் இன்செஸ்ட் சகோதரி ,சகோதரன் ஜோடிகள் ஒரு புறம்.
இக்காட்டின் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி
அவ்வப்பொழுது பொறியில் சிக்கும் அபலைகளை குரூரமாக வதைத்துக் கொல்லும் ஒரு சைக்கோ மறுபுறம்.
அக்காட்டின் அருகே வசிக்கும் ஒரு கணவன் மனைவி,காட்டுக்குள் முயல் வேட்டையாடத் தன் அல்சேஷன் நாயுடன் செல்லும் கணவன். அவன் மனைவியும் அவனும் அன்று காலை முதலே மிகவும் களித்து திளைத்திருக்க, மனைவி ஒரு ரகசியத்தை கணவன் வேட்டைக்குச் சென்று திரும்பியதும் சொல்லலாம் என பூரித்துக் காத்திருக்கிறாள்,அவ்வப்போது கணவனுக்கு வயர்லெஸ் ரேடியோவில்
காதல் வசனங்கள் பேசி களிப்பூட்டுகிறாள் சந்தேக புத்தி கொண்ட மனைவி.
அதே சமயம் வார இறுதியை உல்லாசமாகக் கழிக்க காரில் புறப்படும் இரு ஆண்கள், இரு பெண்கள் கொண்ட டென்னிஸ் வீரர்கள் ஜோடிகள்.காரில் செல்கையில் மேப் கையில் இருந்தும் கவனம் பிசகி அக்காட்டுக்குள் வழி தவறி நுழைய நேரிடும் துர்பாக்கிய நிலை.
இப்போது ஒரு அபாயகரமான சூழலில்,இரு பெண் டென்னீஸ் வீராங்கனைகளும் உதவி கோரி உள்ளூர் போலீஸை காட்டுக்குள் வரவழைக்க ,அங்கே வந்த ஒரு முழு கெட்ட ,ஒரு நல்ல+கெட்ட குணம் கொண்ட போலீஸ்காரர்களால் அந்த ,டென்னிஸ் வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சோதனைகள்,வேதனைகள்.
அங்கே அத்தருணத்தில் காட்டுக்குள்ளே அடுக்கடுக்கான எதிர்பாராமல் நிகழும் திருப்பங்கள். ஒருவர் மிச்சமில்லாமல் கொலைகாரர்கள் ஆகும், ஆக்கும் சம்பவங்கள். அவை மிகவும் விறுவிறுப்பானவை.
எத்தனையோ ஹாரர், ஸ்லாட்டர் ஜானர் படங்கள் பார்த்திருந்தாலும். நேர்த்தியான மேக்கிங்கினால் இந்த இஸரேலிய லோ பட்ஜெட் படம் தனித்து நிற்கிறது. படம் டாரண்டில் கிடைக்கிறது, சப்டைட்டில் தனியாக தரவிறக்கிக் கொள்ளுங்கள். படம் அவசியம் பாருங்கள் நண்பர்களே.
படக்குழுவினர் விபரம் விக்கியிலிருந்து
Directed by | Aharon Keshales Navot Papushado |
---|---|
Produced by | United Channel Movies |
Written by | Aharon Keshales Navot Papushado |
Starring | Lior Ashkenazi Ania Bukstein Danny Geva Yael Grobglas |
Music by | Frank Ilfman |
Cinematography | Guy Raz |
Editing by | Aharon Keshales Navot Papushado |
Distributed by | Image Entertainment (USA) |
Release dates |
|
Running time | 90 minutes |
Country | Israel |
Language | Hebrew |
Budget | $500,000 (estimated |