இளமை ஊஞ்சலாடுகிறது [1978]



இன்று இளமை ஊஞ்சலாடுகிறது படம் பார்த்தேன்.படம் வெளியாகி 36 வருடங்களாகிறது, படத்தின் இயக்கம் ஸ்ரீதர். ஸ்ரீதரின் இன்ன பிற  படங்களின் க்ளிஷேவான கதையாக்கம் இதிலும் உண்டு. படத்தில் சில புதுமைகளையும் கவனித்தேன்,மீனவ நண்பன் படத்தைத் தொடர்ந்து இதையும் வண்ணப்படமாகவே எடுத்தார் ஸ்ரீதர்.இதன் ஒளிப்பதிவு 16 வயதினிலே ஒளிப்பதிவாளர் நிவாஸ்.அவருக்கு உதவி ஒளிப்பதிவாளராக பி.வாசு பணியாற்றியிருப்பார். இப்படம் இந்தியில்  Dil-E-Nadaan என்றும்  தெலுங்கில் Vayasu Pilichindi என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

படத்தின் முக்கிய கருவே நட்பும் தியாகமும் தான், ஆண் நண்பர்களில் ரஜினி தன் அப்பாவின் மறைந்த நண்பரின் மகன் கமல்ஹாசனுக்கு நல்ல நண்பனாகவும் , சகோதரனாகவும், தன் நிறுவனத்தில் மட்டும் முதலாளியாகவும் விளங்குகிறார்.

அதே போன்றே பெண் தோழிகளின் நட்புக்கு உதாரணமாக கல்லூரி மாணவியாக ஸ்ரீப்ரியா கதா பாத்திரமும், ஜெயசித்ரா கதாபாத்திரமும் இருக்கும், ஸ்ரீ ப்ரியாவின் தந்தையின் நண்பர் மகளான ஜெயசித்ரா ஒரு இளம் விதவை , அவர் ரஜினியின் நிறுவனத்தில் மேனேஜராக இருக்கும் கமல்ஹாசனுக்கு காரியதரிசியாக இருக்கிறார்,

சென்னையில் ஸ்ரீப்ரியாவின் வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கியும் இருக்கிறார்.அவரின் அப்பா கிராமத்தில் வசிக்கிறார்.   ஒரு வகையில் கமல் மற்றும் ஸ்ரீப்ரியாவின் காதல் லீலைகளால் உந்தப்பட்டு சபலம் கொண்டு மருகும் கதாபாத்திரம் அவருடையது. அதனால் விளையும் திருப்பங்களும் , நண்பர்கள் செய்து கொள்ளும் தியாகங்களும்,சமரசங்களும் தான் படத்தின் கதை.

படத்தில் இயக்குனர் ஸ்ரீதர் கமல்ஹாசன் மற்றும் ரஜினி இருவருக்கும் சமமான வெயிட்டேஜில் திரைக்கதை அமைத்திருந்தாலும்,படத்தில் ரஜினிக்கு டூயட் கிடையாது, ஏன் பேத்தோஸ் பாடல் கூட கிடையாது, எல்லா அருமையான பாடல்களையும், கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா  மூவருமே தட்டிக் கொண்டு போய் பாடி ஆடிவிட்டிருக்கின்றனர். ரஜினியோ அவர்  ரசிகர்கள் கோபித்துக் கொள்ளவில்லையா?!!! எனத் தெரியவில்லை. ஆனால் படம் 25 வாரம் ஓடிவெற்றிவிழாக் கண்ட படம்.

படத்தில் காமெடி ட்ராக்கே கிடையாது,[கே.எஸ் கோபாலகிருஷ்ணன் வந்து அறுக்கும் காட்சிகள் விதிவிலக்கு ] எனவே  ரஜினிகாந்த் கதாபாத்திரம் சற்று காமெடியாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது, அவர் நகைச்சுவை நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம் போலவே இழுத்து இழுத்து வசனம் பேசி நம்மை திகைக்க வைக்கிறார், பின்னர் ஒரு கடினமான ஆங்கில டங் ட்விஸ்டரை குடி போதையில் சக நண்பருக்கு பேசிக்காட்டி திரும்ப பேசச் சொல்லுகிறார்.

இந்தப் படத்திலிருந்து தான் ரஜினி ஆங்கில வசனம் பேசுவது ஆரம்பித்தது என நினைக்கிறேன். அந்த டங் ட்விஸ்டர் இங்கே , வீடியோ யூட்யூபில் இருக்கிறது தேடிப்பாருங்கள்.
Betty Botter had some butter,
"But," she said, "this butter's bitter.
If I bake this bitter butter,
It would make my batter bitter.
But a bit of better butter,
That would make my batter better."
So she bought a bit of butter –
Better than her bitter butter –
And she baked it in her batter;
And the batter was not bitter.
So 'twas better Betty Botter
Bought a bit of better butter.



படத்தின் இசை இளையராஜா, பாடல்களை  இன்று கேட்கையிலும் அப்படி ஒரு ஃப்ரெஷ்னெஸ் இருக்கிறது, படத்தின் முக்கிய பாடல் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது என்னும் பாடல், இதை மிக அருமையாகப் பாடியவர்கள் எஸ்,பி பி மற்றும் வாணி ஜெயராம் .அது வரும் பிண்ணனி சுவையானது, கமலும், ஸ்ரீப்ரியாவும் காதலர்கள் அவர்கள் டின்னருக்கு ஆர்டர் செய்கையில் அது சென்னை வானொலியில் உங்கள் விருப்பத்தின் போது ஒலிபரப்பாகிறது, அனுபல்லவியில் அது  இருவரும் ஆடிப்பாடும் டூயட்டாக வடிவம் பெறுகிறது, படத்தின் பெயர் இளமை ஊஞ்சலாடுகிறது என்றே வானொலி வர்ணணையாளர் சொல்வார்.அது ஒரு ஆச்சரியமாக தோன்றும்.பாடலை இங்கே பாருங்கள் /கேளுங்கள் http://www.youtube.com/watch?v=th3LJyFDZzY

அடுத்த பாடலாக ஜெயசித்ரா கமலை எண்ணி விரகதாபத்தில் பாடும் கிண்ணத்தில் தேன் வடித்தால் பாடல் மிக முக்கியமான ரேர்ஜெம். தாசன்னாவும் ஜானகியும் பாடியது.பாடலை இங்கே பாருங்கள்/ கேளுங்கள்,இது முகலாய பாணி தீமில் அமைந்திருக்கும்.

அடுத்த பாடலாக நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா,இப்பாடல் மெரினா பீச்சில் கமலும் ஸ்ரீப்ரியாவும் காதல் செய்கையில் வரும் நம்பர். இப்பாடலும் ஒரு ரேர்ஜெம் தான்,இதைப் பாடியவர் வாணிஜெயராம். பாடலை இங்கே பாருங்கள்/ கேளுங்கள்,இப்பாடல் டப்பாங்குத்து பாணியில் அமைந்த நாயகி நாயகன் மீது கேலி செய்து பாடும் பாடல்.

அடுத்ததாக தண்ணி கருத்திருச்சு,தவளச்சத்தம் கேட்டிருச்சு என்னும் பாடல் இளம் விதவை ஜெயசித்ராவும், கமல்ஹாசனும் அறைக்குள்ளே உணர்ச்சி கொந்தளிப்பில் தவிக்க பிண்ணனியில் [ டான்ஸ் மாஸ்டர் சலீமும்,  விஜயலட்சுமியும் குத்தாட்டம் ஆடும் பாடல்] ,இப்பாடல் வரும் இடம் முக்கியமானது,விரகதாபம் கொண்டு மருகும் ஜெயசித்ராவிடம் வாகாக அவர் கிராமத்து வீட்டிலேயே சென்று கமல் தங்கும் படியான சூழல்,அப்போது கனமான திரைக்கதை திருப்பத்தை எளிதாக இப்பாடலை இடைச்செருகி சமாளித்துவிடுகிறார் இயக்குனர்,இப்பாடலைப் பாடியவர் மலேசியா வாசுதேவன்.

பாடலில் கமல் படிக்கும் முக்கியமான சரித்திர நிகழ்வு பற்றிய புத்தகத்தின் பெயர் 90 minutes at Entebbe ,    இது பின்னாளில் படமாகியுமுள்ளது. இதே புத்தகத்தை எழுத்தாளர் சுஜாதாவும் தன் நில்லுங்கள் ராஜாவே நாவலில் quote செய்திருப்பார், கமல்ஹாசன் உலக சரித்திரங்களை, நாவல்களை விரும்பிப் படித்து அவற்றை ரசிகர்களுக்கு தன் திரைப்படங்களில் சைக்கிள் கேப்பில் அறிமுகம் செய்து வைப்பார்,என்பது இப்பாடல் மூலம் ஒருவருக்கு விளங்கும்.

இதே போன்றே இந்தியன் படத்திலும் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்னும் படம் வந்திருக்கிறது ,என்பார்,இரண்டுமே யூத மக்களின் சரித்திரக் கதை தான்,காம்ரேட் கமல் யூத அனுதாபமும் கொண்டவர்.என்பது இதன் மூலம் விளங்குகிறது.பாடலை இங்கே பாருங்கள்/ கேளுங்கள்

படத்தில் கடைசியாக வரும் என்னடி மீனாட்சி பாடல் மிகவும் முக்கியமானது, படத்தில் தான் பணிபுரியும் நிறுவன ஆண்டுவிழாவில் கமல் பாடி ஆட மேடை ஏறியிருக்க,கீழே நண்பர்/முதலாளியுடன் தன் காதலி ஸ்ரீப்ரியாவைப் பார்த்து திகைக்கும் கமல் பாடும் பாடல்.பாடலை பாடியது எஸ் பி பி. இப்பாடல் அப்போதிருந்த டிஸ்கோ ட்ரெண்டை பிரதிபலித்து தத்துவமான வார்த்தைகளைப் போட்டு நன்கு நியாயம் பேசியிருக்கும். பாடலை இங்கே பாருங்கள்/ கேளுங்கள்,

இயக்குனர் ஸ்ரீதர் இப்படத்திலும் தீர்க்கமாக பெண்ணியம் பேசியிருக்கிறார், சந்தர்ப்பம் கிடைக்கும் வரைதான் யாரும் யோக்கியர்கள் , கற்பு நெறி, களங்கம்,பதிவிரதம் போன்றவை எப்போது வேண்டுமானாலும் எந்த சூழலிலும் மீறப்படுவது தவிர்க்க முடியாதது , புனிதம் இனிமேல் புதிதாய் கெட்டுத்தான் போகுமோ? என்றிருக்கிறார்.

 யாரோ இவரை தென்னகத்து வூடி ஆலன் என்று எழுதியதைப் படித்திருக்கிறேன்,ஸ்ரீதரின் இன்னொரு படமான ஒரு ஓடை நதியாகிறது கூட முக்கியமான படைப்பே. அதிலும் தனித்திருக்கும் பெண் ஒருத்தி அடையும் விரகதாபமும் சமுதாயத்துக்கு வேண்டி தன்னை வருத்திக் கடைபிடிக்கும் கொள்கைகளும் திறம்பட பேசப்பட்டிருக்கும்.அந்தப் படத்தில் வரும் அத்தனை பாடல்களுமே முத்தானவை,அதில் வரும் கனவு ஒன்று தோன்றுதே மார்வெல்லஸ் ஜெம்.ஜானகி பாடியது,பின்னர் தலையைக் குனியும் தாமரையேவும் , தென்றல் என்னை முத்தமிட்டதுவும் மிக அருமையான ஒரு பாடல்.

அப்போது 80,90களில் சென்னைக்கு முதன் முதலாக வந்த சூப்பர் மார்கெட் என்றால் ஃபைவ் ஸ்டார் தான்,இப்பொது அவை வழக்கொழிந்து விட்டன.ஸ்ரீதர் தன் ஏனைய படங்களில் அங்கே நாயகன் நாயகி சென்று ஏதாவது வாங்குவது போல காட்சி வைப்பார்.இதே 1978ஆம் ஆண்டு வெளியான அவள் அப்படித்தான் படத்திலும் ஃபைவ் ஸ்டார் சூப்பர் மார்க்கெட் ஒரு காட்சியில் வரும்.

கமல்ஹாசன் இந்தப்படத்தின் துவக்கத்தில் டைட்டில் ஸ்க்ரோலின் போது அவரின் சிகப்பு வண்ண மேட்ச்லெஸ் மோட்டார் சைக்கிளை பில்லியனில் ஸ்ரீப்ரியாவை வைத்து லாவகமாக ஓட்டிவருவார்,அது இன்றும் அவரது அலுவலகத்தில் நன்கு பராமரிக்கப்பட்டு கருப்பு வண்ணம் மாற்றப்பட்டு ஷோபீஸாக நிறுத்தப்பட்டிருக்கும், அந்த போட்டோ இதோ இங்கே.

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

சமூகம் (379) தமிழ் சினிமா (254) உலக சினிமாபார்வை (186) கமல்ஹாசன் (130) சென்னை (82) கட்டிடக்கலை (80) மலையாளம் (80) கட்டுமானம் (73) ஹேராம் (54) கே.பாலசந்தர் (46) வாஸ்து (46) இசைஞானி (44) கலை (43) ஆன்மீகம் (39) ஃப்ராடு (33) உலக சினிமா (33) சினிமா (33) தமிழ்சினிமா (25) விமர்சனம் (22) மனையடி சாஸ்திரம் (21) ஓவியம் (20) உலக சினிமா பார்வை (17) சினிமா விமர்சனம் (15) இசை (14) மோகன்லால் (14) இலக்கியம் (12) திரைப்படம் (12) ரஜினிகாந்த் (12) ஒளிப்பதிவு (11) அஞ்சலி (10) அரசியல் (10) பாலிவுட் (10) மோசடி (10) விருமாண்டி (10) கோயன் பிரதர்ஸ் (9) சுஜாதா (9) இந்தியா (8) சத்யஜித் ரே (8) சரிதா (8) சுகுமாரன் (8) பாலு மகேந்திரா (8) மகாநதி (8) ஸ்ரீவித்யா (8) அயல் சினிமா (7) எம்ஜியார் (7) சிவாஜி கணேசன் (7) சீன வாஸ்து (7) ஆக்கம் (6) உலகசினிமா பார்வை (6) நடிப்பு (6) நட்பு (6) நூல் அறிமுகம் (6) மதுரை (6) அமீரகம் (5) கவிஞர் கண்ணதாசன் (5) திலகன் (5) தேவர் மகன் (5) நகைச்சுவை (5) பாரதிராஜா (5) மம்மூட்டி (5) மோகன் லால் (5) மோடி (5) இனப்படுகொலை (4) இளையராஜா (4) ஐவி சஸி (4) சுஹாசினி (4) ஜெயலலிதா (4) டார்க் ஹ்யூமர் (4) தமிழ் (4) நகர வடிவமைப்பு (4) நடிகர் திலகம் (4) நடைபயிற்சி (4) நவாஸுதீன் சித்திக்கி (4) பத்மராஜன் (4) பப்பேட்டா (4) பம்மல் (4) பரதன் (4) பரத்கோபி (4) பெங்காலி சினிமா (4) லாரி பேக்கர் (4) விருட்ச சாஸ்திரம் (4) ஆரோக்கியம் (3) எழுத்தாளர் (3) எழுத்தாளர் சுஜாதா (3) கவிதாலயா (3) சரத்பாபு (3) சிபி மலயில் (3) சிவகுமார் (3) ஜெயராம் (3) தாஸேட்டா (3) திருநீர்மலை (3) திரைவிமர்சனம் (3) துபாய் (3) தெலுங்கு சினிமா (3) நாயகன் (3) நெடுமுடிவேணு (3) பாரதியார் (3) புத்தக விமர்சனம் (3) மம்முட்டி (3) மரண தண்டனை (3) மலேசியா வாசுதேவன் (3) மீரா நாயர் (3) யேசுதாஸ் (3) ராஜேஷ் கண்ணா (3) லோஹிததாஸ் (3) வாகனம் (3) ஷோபா (3) ஸ்ரீதர் (3) ஸ்ரீதேவி (3) ஃப்ரென்சு சினிமா (2) அம்மா (2) ஆஸ்திரிய சினிமா (2) இனவெறி (2) இரானிய சினிமா (2) உலகம் (2) எம் எஸ் வி (2) ஏ.பி.நாகராஜன் (2) சத்யன் அந்திக்காடு (2) சமூக சேவை (2) சிந்தனை (2) சிறுகதை (2) சேரன் (2) ஜி.நாகராஜன் (2) ஜெயசூர்யா (2) ஜெயன் (2) டார்க்ஹ்யூமர் (2) திரை விமர்சனம் (2) தெலுங்கு (2) நாகராஜ் மஞ்சுளே (2) நிலம் (2) பாலகுமாரன் (2) பிஜேபி (2) பெட்ரோல் (2) மகாகவி (2) மகேந்திரன் (2) மதுவிலக்கு (2) ராஜா ரவிவர்மா (2) ராஜ்கபூர் (2) ரித்விக் கட்டக் (2) ருத்ரையா (2) ரோமன் பொலன்ஸ்கி (2) லதா மங்கேஷ்கர் (2) லோஹி (2) விஜயகாந்த் (2) விஜய்காந்த் (2) வித்யாசாகர் (2) வைரமுத்து (2) ஷோபனா (2) ஹிந்தி (2) ஹெல்மெட் (2) ஹேமமாலினி (2) A.K.லோஹிததாஸ் (1) ஆஸ்திரேலிய சினிமா (1) இன அழிப்பு (1) இன்ஸெஸ்ட் (1) இயக்குனர் சிகரம் (1) இஸரேலிய சினிமா (1) இஸ்ரேல் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எஸ்.எஸ்.வாசன் (1) எஸ்.பி.முத்துராமன் (1) ஏ.வின்செண்ட் (1) கங்கை அமரன் (1) கட்டுமானக்கலை (1) கட்டுரை (1) கதை (1) கம்யூனிஸ்ட் (1) கலை இயக்கம் (1) கே.ஜே.ஜேசுதாஸ் (1) கௌரவக் கொலை (1) க்வெண்டின் (1) சங்கராடி (1) சசி கபூர் (1) சந்தோஷ் சிவன் (1) சரிதா தேவி (1) சஷி கபூர் (1) சாதிவெறி (1) சி.சு.செல்லப்பா (1) சிக்கனம் (1) சிரிப்பு (1) சிறுவர் சினிமா (1) சில்க் (1) சில்ஹவுட் (1) சிவாஜி (1) சீமா பிஸ்வாஸ் (1) ஜானகி (1) ஜிகிலோ (1) ஜீனத் அமன் (1) ஜூஹிசாவ்லா (1) ஜெஃப்ரி ரஷ் (1) ஜெயபாரதி (1) ஜெயப்ரதா (1) ஜேவியர் பர்டம் (1) டாக்மி 95 (1) டார்க் காமெடி (1) தஞ்சை பெரிய கோவில் (1) தண்டனை (1) துருக்கி சினிமா (1) தூக்கு தண்டனை (1) தெரு நாய் (1) நடிகர் நாசர் (1) நன்றி (1) நவீன இலக்கியம் (1) நாஜி (1) நார்வே சினிமா (1) நியோ நுவார் (1) நீதி (1) நுவார் (1) ப.சிங்காரம் (1) பக்தி இலக்கியம் (1) பஞ்சு அருணாச்சலம் (1) படுகொலை (1) பதேர் பாஞ்சாலி (1) பரதம் (1) பல்லாவரம் சந்தை (1) பான் நலின் (1) பாஸ்கர குரூப்பு (1) பாஸ்போர்ட் (1) பிசி ஸ்ரீராம் (1) பிஜு மேனன் (1) பீடோஃபீல் (1) புலமைப்பித்தன் (1) பூ அறிவோம் (1) பூஜா பட் (1) பூர்ணம் விஸ்வநாதன் (1) பூலான் தேவி (1) பெல்ஜிய சினிமா (1) பேசும்படம் (1) பேட்டி (1) பேரழிவு (1) போபால் (1) போர்வெல் மரணம் (1) போலந்து சினிமா (1) போலீஸ் (1) மக்கள் உயிர் (1) மஞ்சுளா (1) மன ஊனம் (1) மனமுறிவு (1) மரகதமணி (1) மராத்திய சினிமா (1) மருதகாசி (1) மருதம் (1) மறுமணம் (1) மிருகவதை (1) முகநூல் (1) மெயின் ஸ்ட்ரீம் சினிமா (1) மோனிகா பெலுச்சி (1) மௌசமி சேட்டர்ஜி (1) யூதர்கள் (1) ரகுவரன் (1) ரவீந்திரன் மாஷே (1) ராகுல் (1) ராகுல் போஸ் (1) ராஜாரவிவர்மா (1) ராஜீவ் (1) ராஜ்கிரண் (1) ராமச்சந்திர பாபு (1) ராவுத்தர் (1) ராஹுல் போஸ் (1) ரிச்சர்ட் அட்டன்போரோ (1) ரிதுபர்ன கோஷ் (1) ரிஷிகபூர் (1) ருமானியா (1) ரோமன் பொலஸ்கி (1) ரோமுலஸ் விட்டேகர் (1) லஞ்சம். (1) லாக்டவுன் (1) லூயி.ஐ.கான் (1) லூயிகான் (1) லைசென்ஸ்ராஜ் (1) வாணிஜெயராம் (1) வி.குமார் (1) விசாகப்பட்டினம் (1) விடுமுறை (1) விபத்து (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) வீ.ஆர்.கிருஷ்ணயர் (1) வூடி ஹாரல்சன் (1) வேணு (1) வைக்கம் முகமது பஷீர் (1) ஷாஜி கருண் (1) ஷார்ஜா (1) ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் (1) ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (1) ஸ்ரீப்ரியா (1) ஹிட்லர் (1) ஹேமா சவுத்ரி (1)