சினிமா ரசிகர்கள் இன்றைய சூழலில் இன்ஸ்பிரேஷன் என்னும் சொல்லுக்கு உண்மையான அர்த்தத்தை இனம் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.அதை தமிழ்படுத்துகையில் அகத்தூண்டுதல் என்பது சிறப்பான சொல்லாடலாக இருக்கும் என நினைக்கிறேன்.
தேவர் மகன் திரைப்படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடல், பிறந்த விதம் குறித்து கமல்ஹாசன் விளக்குவதை இங்கே பாருங்கள்,இயக்குனர் பரதன் பாடல் உருவாக்கத்துக்கு வராத சூழலில்,கதாசிரியர் கமல்ஹாசனே இசைஞானியை சென்று பாடல் உருவாக்கத்திற்கு உடன் அமருகிறார்,வழமையான ஒன்றை கட்டுடைத்து புதியதாக ஒன்றை படைக்க வேண்டும் எனத் தூண்டியவர்,பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன் இசையில் பாடகர் மொஹம்மத் ரஃபி அவர்களின் பாடிய முக்கியமான பாடலான Ishq Par Zor Nahin திரைப்படத்தில் வரும் Yeh Dil Deewana Hai என்னும் அற்புதமான பாடலை இசைஞானிக்கு மேலோட்டமாக பாடி ஆலாபனை செய்து காட்டுகிறார்.[எஸ்.டி.பர்மன் இசைஞானியி ஆதர்சம் என்றும் கமல்ஹாசன் இங்கே குறிப்பிடுவதைப் பாருங்கள்]

இது போன்ற மேதமைத்தனமும் வெளிப்படவேண்டும்,அதே சமயம் யார் வேண்டுமானாலும் முனுமுனுக்கக் கூடிய ஒரு பாமரத்தனமும் பொருந்திய ஒரு பாடலாக இந்த முதலிரவுப் பாடல் அமைய வேண்டும் என அடிகோலிவிட்டு இசைஞானியிமிருந்து மெட்டுக்காக காத்திருக்க,அடுத்த சில வினாடிகளிலேயே இஞ்சி இடுப்பழகி மெட்டு கமல்ஹாசன் எதிர்பார்த்ததற்கும் மேலாக வந்து விழுகிறது,அதை விவரிக்கும் கமல்ஹாசனின் குரலில் உள்ள முடிவுறா ஆச்சர்யத்தையும்,உற்சாகத்தையும் இந்த பேட்டியில் அவசியம் பாருங்கள்.
இப்போது இந்த சுட்டியில் சென்று Ishq Par Zor Nahin திரைப்படத்தில் வரும் Yeh Dil Deewana Hai என்னும் மகத்தான பாடலை பாருங்கள்,தேவர் மகன் வடிவம் இந்தப் படத்திலிருந்து துவக்கத்துக்கான பொறியை மட்டும் எடுத்துக்கொண்டு புதுமையாக புறப்பட்டிருப்பதை ஒப்பிட்டு உணருங்கள்.
http://www.youtube.com/watch?v=Udu4sbPqlIA
இப்போது காப்பி என்னும் சொல்லுக்கு நகல் என்னும் சொல்லே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்,அதற்கான பிரதானமான உதாரணம் தேவர்மகனின் ஹிந்தி வடிவமான விரசத்[Virasat (1997 film)] படத்தின் Payalein Chun Mun என்னும் பாடலில் காணலாம்,இந்தி வடிவத்தின் இசை அனுமாலிக்,இந்தப் பெயரிலேயே ஒருவருக்கு இப்பாடல் காப்பியா இன்ஸ்பிரேஷனா என விளங்கிவிடும், அப்படிப்பட்ட திருட்டு இசையமைப்பாளர்கள்,
மேலும் ஒரு விந்தை என்னவெனில் இப்பாடல் பாடியதற்கு பாடகி சித்ராவிற்கு தேசிய விருதும் கிடைத்தது,திருட்டு மாங்காய்க்கு உள்ள ருசியைப் பாருங்கள்.ஒருக்கால் ப்ரியதர்ஷன் மற்றும் அனுமாலிக் முறையாக மூல இசை வடிவம் என்று இசைஞானிக்கு க்ரெடிட் கொடுத்திருந்தால் அது முறையாக உரிமைவாங்கி மறுஆக்கம் செய்ததாக கணக்கில் வந்திருக்கும். அப்படிச் செய்யாமல் அப்படியே அதை நகலெடுத்ததால் அது காப்பி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தப் படத்தின் ஹிந்தி வடிவத்தை இயக்கியது ப்ரியதர்ஷன்,அவர் இசைஞானியுடன் சேர்ந்து சிறைச்சாலை போன்ற மகத்தான படங்களில் பணியாற்றியிருந்தும்,இந்த விரசத் படத்தின் டைட்டில் ஸ்க்ரோலில் இசைஞானிக்கு எந்த விதமான க்ரெடிட்டும் கொடுக்காதது எத்தனை அயோக்கியத்தனம்? ,பாருங்கள்,படத்தில் மிக முக்கியமான இரண்டு பாடல்கள், இஞ்சி இடுப்பழகி, போற்றிப்பாடடி பெண்ணே,ஆகியவை அப்படியே காப்பியடித்து பயன்படுத்தப்பட்டிருப்பதை கீழ்கண்ட வீடியோவில் பாருங்கள், கேளுங்கள். முதலில் இஞ்சி இடுப்பழகியின் காப்பியான Payalein Chunmun Chunmun பாடல் இங்கே http://www.youtube.com/watch?v=XqKC1jHnKgg

இப்போதும் ஒருவருக்கு இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்கும் இடையேயான வித்தியாசம் விளங்கிக்கொள்ள முடியவில்லையென்றால் அவர்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குபவர் என்று பொருள்,விளக்கி பலனில்லை,வீண்வாதம் செய்பரிடமிருந்து விலகிவிடுவதே சிறந்தது.நட்பாவது மிஞ்சும்.