நடிகர் நாட்டாமை விஜயகுமார் (இயற்பெயர் பஞ்சாக்ஷரம் ரங்கசாமி பிள்ளை ) தன் ஊரான நாட்டுச்சாலையில் (பட்டுக்கோட்டை தாலுகா) உள்ள தன் வீட்டு முகப்பில் இரு மனைவிகளுடன் தான் இருக்குமாறு அமைத்துக் கொண்ட ஆளுயர சிலைகள் இவை,
இன்னும் முதல் மனைவி உயிருடன் உள்ளார்,இன்று பட்டுக்கோட்டையில் இது ஒரு முக்கியமான tourist attraction என்கின்றனர்.
ஊரில் அவர் தன் பெற்றோருக்கு வைத்த சிலையும் உண்டு, நடிகர் அருண் விஜய் படங்கள் வெளியாகையில் தாத்தா பாட்டி சிலைகள் முன்பு படம் வெற்றியடைய ஆசி வேண்டி கட்அவுட் வைக்கிறாராம்.
இதே போல இளைய தளபதி டாக்டர் விஜயின் சிலை பனையூரில் அவரது தளபதி மக்கள் இயக்கம் அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ளது,(படம் இணைப்பில்) விஜய் பிறந்தநாளின் போது அங்கே இளம் ரசிகர்கள் கூட்டத்தால் அல்லோலகல்லோலப்படும்.