இப்போது பரவலாக உபயோகிக்கும் m sand உபயோகித்து பூச்சு கலவை தயாரிக்கையில் சிமெண்ட் மற்றும் m sand ன் நிற ஒற்றுமையால் கலவை சரியான விகிதத்தில் கலக்கப்பட்டதா? என்று உணரமுடிவதில்லை,
இதனால் நிறைய கட்டுமான தவறுகள் ஏற்படுகிறது, எனவே கலவை கலக்கையில் கண்டிப்பாக மேற்பார்வை அவசியம்.
கலவையை மண்வெட்டியில் நன்கு விசிறி விட்டு கலப்பது அவசியம்.
தவிர வெளிப்புற பூச்சு கனம் 20 mm
1: 4 ratioஇருத்தல் அவசியம் ,
உட்புறப் பூச்சுக்கு ratio 1: 6 , கனம் 12mm இருப்பது அவசியம்,
உட்புறம் , வெளிப்புறம் ,மேற்கூரை (ceiling 12mm thk,1: 4 ratio) பூச்சு வேலைக்கு கண்டிப்பாக p sand என்ற plastering sand மட்டும் பயன் படுத்த வேண்டும்.
காங்க்ரீட்டிற்கு கண்டிப்பாக m.sand பயன் படுத்த வேண்டும்.
எந்த பூச்சு வேலைக்கும் முதலில் சிறு டைல் துண்டுகளை 4'0" c/c வைத்து button mark செய்து புல் வைத்துக் கொண்டு பூச வேண்டும்,இதனால் கலவை வீணாகாது, அதிக கனம் பூசுவதும் ,குறைந்த கனம் பூசுவதும் தடுக்கப்படும்.
கலவை நல்ல தரமான நீரில் கலக்க வேண்டும், பூச்சு வேலையை நீராட்டுவது நல்ல நல்ல தரமான நீரில் இருக்கட்டும்,சிமெண்ட் பூச்சு வலுவாக கண்டிப்பாக 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தினம் மூன்று வேலை நீராட்ட வேண்டும்.
இப்படி முறையாக செய்தால் பூச்சுவேலையில் இது போல திட்டுகள் சுவடுகள் வராமல் தடுக்கலாம்.
முக்கியமாக சிமெண்ட் வாங்குகையில் அதன் தயாரிப்பு தேதி பார்த்து வாங்குங்கள், தயாரிக்கப்பட்ட மூன்று மாதத்துக்குள் சிமெண்டை கட்டுமானத்திற்கு பயன்படுத்தி விட வேண்டும்,நாளாக ஆக ஸ்டாக் செய்த சிமெண்ட் மூட்டைகள் பிணைப்புத் திறன் இழக்கும். அதே போல சிமெண்ட் கலவை இட்ட 2 மணி நேரத்துக்குள் கலவையை உபயோகப் படுத்திவிட வேண்டும்.
Geethappriyan Karthikeyan Vasudevan
DfD | Dial for Design | 9940255873
வீடு கட்டும் முன் பழைய ,புதிய வீட்டை வாங்கும் முன்,மனை வாங்கும் முன் மனையை பாகம் பிரிக்கும் முன் படிக்க வேண்டிய முக்கியமான பதிவுகள் இங்கே