"உண்மையைப் பேசுகிறவனுக்கு ஞாபகசக்தி இருக்க வேண்டிய அவசியமில்லை"_ மகாத்மா காந்தி
ஹேராம் படத்தில் கொல்கத்தா வீதிகளில் வலம் வரும் ட்ராம் இது, இந்த 29 ஆம் எண் வழித்தட ட்ராம் Tollygunge - Esplanade மார்க்கத்தில் இன்றும் ஓடுகிறது, எத்தனை நம்பகத்தன்மை பாருங்கள்? ஏன் இத்தனை நம்பகத் தன்மைக்கு மெனக்கெட வேண்டும் ஒரு இயக்குனர்?
அப்போது தான் அந்தப் படைப்பு காலத்துக்கும் நிற்கும், இப்படத்தின் மூலம் நாட்டுக்கொரு செய்தியெல்லாம் சொல்லவில்லை இயக்குனர்,படம் முழுக்க அவரவர் கோணம் , அவரவர் பார்வை தான்
இன்றைய ட்ராமின் இணைப்பு படம் பார்க்கவும், இயக்குனர் கமல்ஹாசன் தயாரிப்பு இயக்குனரான (Production Director )சாபு சிரிலுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் தந்திருக்க வேண்டும்? எந்த அளவுக்கு அவரை நம்பியிருக்க வேண்டும்? எந்த அளவுக்கு அவரின் homework மற்றும் Executionற்கு பணத்தை தண்ணீராக ( ஆமாம்) செலவு செய்திருக்க வேண்டும்? பைசா பெறாத இந்துத்வா மதவாத படமாக இதை எடுப்பதற்கா? இத்தனை பாடு?
இதே 29 ட்ராம் வழித்தட மார்க்கத்தில் தான் 1954 ஆம் ஆண்டில் "ஆகாஷே ஜ்யோத்ஸ்னா " வங்கக் கவிதை எழுதிய கவிஞர் ஜிபானந்ததாஸ் இரண்டு கைகளிலும் இளநீரை ஏந்தியபடி வேகமாகச் சென்றவர் ட்ராம் மோதி கவலைக்கிடமாகி இறந்துள்ளார் ,(தற்கொலை என்றும் வாதிடுகின்றனர் )
இந்த ட்ராம் செட் செய்த பின்னர் அது நிஜமாக இயங்க பழைய அம்பாசடர் காரின் டீசல் இஞ்சின் புதுப்பேட்டையில் இருந்து வாங்கி வந்து இதற்குள் வைத்துப் பொருத்தி அதை ஓட விட்டுள்ளனர்,
அது 10 கிமீ வேகத்தில் ட்ராம் நிறைய ஆட்களை ஏற்றிய பின்னர் வளைவாக அமைக்கப்பட்ட இருப்புப் பாதை மீது ஓடியிருக்கிறது, படப்பிடிப்பு முடிந்த பின் இந்த ட்ராம் மற்றும் இருப்புப் பாதையை கழற்றவே மனமில்லை குழுவுக்கு, கடந்த கால சரித்திரத்தை கால எந்திரத்தில் பயணித்து திரும்பிச் சென்று பார்த்தது போலவே அனைவரும் உணர்ந்தனராம்.
ஹேராம் படம் பற்றி இன்று பிறந்த குழந்தை கூட இன்னும் இருபது வருடங்கள் கழித்து நல்லதாகவோ, கெட்டதாகவோ எழுதக்கூடும்.
#ஹேராம், #சாகேத்ராம்,#கொல்கத்தா,#ட்ராம், #சாபுசிரில்,#esplanade,#tollygunge