நடிகர் மயில்சாமி அவர்களுக்கு இதய அஞ்சலி, சார்ந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விளம்பரமில்லாத ஈகை குணம் கொண்டவர், அன்னதானம், ஆலயத்தொண்டு, உழவாரப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டு உழைத்தவர், இவர் பற்றி நடிகர் விவேக் மேடையில் பகிர்ந்த ஒரு சம்பவம் மிகவும் நெகிழ்ச்சியானது, 2004 சுனாமி பேரிடர் காலத்தில் கடலூரில் நிவாரணப் பணிகளை இவர் முன்னெடுக்கையில் பக்கத்து ஊரில் பாலிவுட் நடிகர் விவேக் ஒபிராய் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதை அறிகிறார், விடியலில் அவர் தங்கியிருந்த வீட்டு கதவை தட்டியவர், அவர் அசதியில் கதவைத் திறந்ததும் ,உடைந்த ஆங்கிலத்தில் யு விவேக் ஓபிராய், யு ஹெல்ப், ஐநோ, ஐ ஆல்சோ வாண்டு ஹெல்ப் என்று சொல்லி தன் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் எம்ஜியார் பதக்கம் வைத்த சங்கிலியை அணிவித்துவிட்டு திரும்பிப்பாராமல் வந்துவிட்டாராம், நிச்சயம் கடைசி கைப்பொருளையும் தானம் செய்யும் குணம் அபூர்வமானது.