உலக சினிமாக்களுக்கு சப்டைட்டில் சேர்த்து பார்ப்பது எப்படி?

ண்பர்களுக்கு ஆங்கிலம் மற்றும் ஜெர்மனி, ஃப்ரெஞ்சு ,ஸ்பானிஷ் ஹிந்தி சப்டைட்டில்களை நான் பார்க்கும் உலக திரைபடங்களுடன் எப்படி சேர்த்து பார்க்கிறேன் , என இந்த பதிவில் சொல்லலாம் என நினைக்கிறேன். சில நண்பர்களுக்கு இது முன்னமே தெரிந்திருக்கலாம்.அவர்கள் வேறு எதாவது எளிய வழி இருந்தால் பின்னூட்டலாம்.

1]முதலில் நீங்க சோதித்துப் பார்க்க வேண்டியது.உங்களிடம் உள்ளது என்ன வகை avi?என்று
உதாரணம்: -dvd rip, dvdrip-xvid, avi, pre dvdrip, blue ray rip, telesync. போன்றவை

2]பின் அது எத்தனை avi ஃபைல்களை கொண்டுள்ளது என்று பாருங்கள்.
உதாரணம்:-1சிடி,2சிடி,3சிடி

3] பின் அந்த டாரண்டை அளித்த அன்பர் யார் என்று பார்க்க? (அந்த படம் உள்ள ஃபோல்டரிலேயே  எழுதியிருக்கும்)
உதாரணம்:-axxo,fxg,klaxxon,vommit,

4]இப்போது www.opensubtitles.org  அல்லது www.podnopsi.net போகவும்

5]சர்ச் பாக்ஸில் படத்தின் பெயரையும், மொழியையும் எண்டர் செய்யவும். இப்போது அந்த படத்துக்கான பெரிய சப்டைட்டில் பட்டியலே வரும்.
உதாரணம்:- இங்ளோரியோஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தின் இந்த சப்டைட்டில்

5]இப்போது உங்களிடம் இருக்கும் avi பெயரை கொண்டு அந்த பட்டியலில் இருந்து பொருந்தும் அதே பெயருள்ள சப்டைட்டிலை தரவிறக்கவும்.

6]நீங்கள் தரவிறக்கிய rar சப்டைட்டில் ஃபைலை  உங்கள் avi உள்ள ஃபோல்டரிலேயே எக்ஸ்ட்ராக்ட் செய்யவும். இப்போது avi பெயரும் சப்டைட்டில் பெயரும் ஒரே பெயரில் இருப்பது போல ரீநேம் செய்யுங்கள்.ஒரு எழுத்து கூட மாறக்கூடாது

7)இப்போது படத்தை ப்ளே செய்யுங்கள்.படமும் சப்டைட்டிலும் அருமையாய் சின்க் ஆகும். இது தான் எந்த மொழியிலும் சப்டைட்டில் தறவிறக்க அருமையான சுலபமான வழி.

 குறிப்பு:-
எப்போதும் செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கு என உள்ள சப்டைடில்களையே தேர்ந்தெடுங்கள்,அதன் மூலம் பல பொது அறிவு பெறலாம்.
உதாரணம்:-பிண்ணணியில் ஒலிப்பது சிம்பொனியா?ஒலிப்பது என்ன பாடல்?,படத்தில் ஒரு கும்பல் வேறு மொழி பேசுகையில் அவர்கள் பேசுவது என்ன மொழி போன்றவை. யானை பிளிறியது என்றால்"elephant's trumpeting".என்று வரும். கழுதைப்புலி கத்தியது என்றால் ”hyenas laughing"என்று வரும். இதை வைத்தே பல ஆங்கில வார்த்தைகளை,அர்த்தங்களை அறியலாம்.
km player என்னும் பிளேயர் படம் பார்க்க சாலச் சிறந்தது,இதிலுள்ள சின்க் சப்டைட்டில் என்னும் ஒரு கருவி மூலம் தரவிறக்கிய பொருந்தாத அல்லது பிழை உள்ள சப்டைட்டிலை முன்னே பின்னே விநாடிகள் நகர்த்தலாம். இப்போதெல்லாம் படம் வெளியான ஒரே வாரத்தில் சப்டைட்டில் வந்துவிடுகின்றன.கவலையே வேண்டாம்.உங்கள் சப்டைட்டில் உங்களுக்கு தான்.
==========000==========
மேலும் சப் டைட்டிலை எடிட் செய்ய,சின்க் செய்ய நண்பர் லக்கி லிமேட் பரிந்துரைக்கும் சப் மேஜிக் என்னும் மென்பொருளையும் நிறுவி, அதைக்கொண்டு எடிட் செய்யலாம்,விவரத்திற்கு அவர் பதிவின் சுட்டி

 மேலும் சப் டைட்டிலை எடிட் செய்ய,சின்க் செய்ய தல ஹாலிவுட்பாலா பரிந்துரைக்கும் சப்ரிப் என்னும் மென்பொருளையும் நிறுவி அதை வைத்து  எடிட் செய்யலாம்,அதை தரவிறக்க சுட்டி
==========000==========
டிஸ்கி:-
அப்படி மேலே சொன்ன முறையில் உங்களுக்கு ஏதாவது சிரமம் இருந்தால் எனக்கு உங்க avi ன் முழுப்பெயரை தெளிவாக இமெயில் செய்யவும்,அதற்கு பொருத்தமான  சப்டைட்டில் தேடி இமெயில் அனுப்புகிறேன்.

42 comments:

☀நான் ஆதவன்☀ சொன்னது…

:) தெரியாதவர்களுக்கு நல்ல பயனுள்ள பதிவு தேவுடு

கோபிநாத் சொன்னது…

\\கவலையே வேண்டாம்.உங்கள் சப்டைட்டில் உங்களுக்கு தான்.\\

எப்படிண்ணே இப்படி எல்லாம் பஞ்ச் போட்டு கலக்குறிங்க ;))

ஸ்ரீநி சொன்னது…

mikka nandri

பாலாஜி சொன்னது…

மிக அவசியமான விஷயம் கார்த்திக்.. பகிர்வுக்கு நன்றி.. மிகச்சில சப்டைட்டில்கள் நம்முடன் இருக்கும் படத்தின் வேகத்திற்கு பொருந்தாமல் உள்ளது. உதாரணத்திற்கு, படம் 2 மணி 35 நிமிடம் என்றால், கிடைக்கும் எல்லா சப்டைட்டில்களும் 2 மணி 32 நிமிடத்திற்கு கிடைக்கின்றன. இதை எப்படி சரி செய்வது? அல்லது 30 நொடிகளுக்கு ஒருமுறை சப்டைட்டில் சின்க் செய்துகொண்டே இருக்க வேண்டுமா?

~~Romeo~~ சொன்னது…

உபயோகமா பதிவு தல ..

Lucky Limat லக்கி லிமட் சொன்னது…

நல்ல பதிவு நண்பரே... சப்டைட்டில் சின்க் செய்ய Submagic என்ற Softபொருள் நன்றாக உதவும். இந்த மென்பொருளை பற்றி கீழ்க்கண்ட என பதிவில் காணலாம்.

திரைப்படங்களின் Subtitle Edit செய்ய உதவும் மென்பொருள்
http://browseall.blogspot.com/2009/09/subtitle-edit.htmlஅன்புடன்,
லக்கி லிமட்

Vetrimagal சொன்னது…

Reading your blog is so informative.

Thanks for writing so well , and sharing it with us.

God bless

கனவுகளின் காதலன் சொன்னது…

நல்லதொரு பகிர்வு நண்பரே.

மைதீன் சொன்னது…

இத,இத,இதத்தான் எதிர்பார்த்தேன். ரொம்ப நன்றி தலைவா.

வினோத்கெளதம் சொன்னது…

கலக்கல் தகவல் குரு..

பகிர்வுக்கு நன்றி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே சார்?

தலைப்பே தப்பா இருக்கே?

அதென்னங்க உலக சினிமா?

அந்நிய மொழி சினிமா என்றல்லவா இருக்க வேண்டும்? அப்போ, தமிழ் படங்க எல்லாம் உலக சினிமா கிடையாதா?

மயில்ராவணன் சொன்னது…

ஏற்கனவே டுபாக்கூர் கந்த்சாமி எழுதிட்டார், ஆனால் இது சுலபமா இருக்கு..........பகிர்வுக்கு நன்றி சார்..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஆதவன்,
தேவுடு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கோபிநாத்,
தம்பி தங்க கம்பி.
குசும்பு,இதை மட்டும் கரைட்டா நோட் பண்ணு:))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஸ்ரீநி
வருகைக்கும் நன்றி நண்பா

@பாலாஜி
நண்பா,அந்த சப்டைட்டிலை அழித்துவிட்டு,மேலே சொன்ன படி
முயன்று பாருங்க,நானும் என் படத்துக்கு சப்டைட்டில் சின்க் ஆகாவிட்டால்,
அதை அழித்துவிட்டு புதிதாய் தேடி இணைப்பேன்.

@ரோமியோ,
வாங்க நண்பா,
வருகைக்கு நன்றி

@லக்கிலிமேட்,
வாங்க நண்பா,வருகைக்கு மிக்க நன்றி,
உங்க பதிவு பார்த்தேன்.நல்ல பகிர்வு நண்பா,
அதற்கு சுட்டியும் கொடுத்துவிட்டேன்.

@வெற்றிமகள்,
வாங்க,வருகைக்கும் ஊக்கத்தும் மிக்க நன்றி

@கனவுகளின் காதலன்,
வாங்க நண்பரே,வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

@மைதீன்.
எனக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே,

@வினோத்,
குரு,வருகைக்கு மிக்க நன்றி

@பகிர்வுக்கு மிக்க நன்றி
என்ன அருமையான பெயர் நண்பரே,
உலக சினிமா என்பது உலகின் எல்லா நாட்டு மக்களாலும் இனம்,மொழி,மதம் ,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவற்றி பதியும் சினிமா,உலக சினிமா கலையின் மதிப்பை பரைசாற்றும் வண்ணம் இருத்தல் வேண்டும்,தமிழிலும் அருமையான படங்கள் உலகசினிமாவாக உண்டு.
தமிழ் படம் பார்க்க நமக்கு சப்டைட்டில் தேவையில்லையே,அதனால் தான் அதை நான் குறிப்பிடவில்லை நண்பரே,வருகைக்கு மிக்க நன்றி.

@மயில் ராவணன்
வாங்க தலைவரே,
ஏதோ நம்மால முடிஞ்சது,பகிரனும்னு தோணுச்சு.
அடுத்து டாரண்டில் டவுன்லோடு செய்வது எழுதலாம்னு இருக்கேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

ஹாலிவுட் பாலா சொன்னது…

/////ஒருவேளை நீங்கள் தேடும் சப்டைட்டில் கிடைக்காத பட்சத்தில் 2சிடிக்களின் சப்டைட்டிலை தறவிறக்கி,உள்ளே இருக்கும் மேட்டரை அப்படியே காப்பி செய்து ஒரே ஃபைலாக செய்து பாருங்கள்.
///

இது வொர்க் ஆகாதுங்க கார்த்திக்கேயன். ரெண்டு சிடி ஃபைலிலும்.. டைம் 00:00:01 -ன்னுதான் ஆரம்பிக்கும்.

முதல் சிடி சப்டைட்டில் நல்லா வொர்க் ஆகும். அப்புறம்... வேலை செய்யாது. சப்டைட்டில் ஃபைல்களுக்கு.., டைமிங் மட்டும்தான் முக்கியம்.

இந்த 2சிடி சப்டைட்டில்களை இணைச்சி ஒன்னாக்க ஒரு சாஃப்ட்வேர் இருக்கு (SubRip-ன்னு நினைக்கிறேன்). அதை யூஸ் பண்ணலாம்.

அப்புறம்.. நீங்க சொன்ன.. axxo டைப் மேட்ச் கூட ஒரு குருட்டாம்போக்கில் வேலை செய்யறதுதான்.

axxo-வே.. ஒரே படத்தை, 25fps, 23fps -ன்னு ரிப் பண்ணியிருந்தா பிரச்சனை ஆகும்.

பாலாஜி கேட்ட கேள்வி அந்த டைப்தான்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

லக்கியின் பதிவை படிச்சேன். அந்த சாஃப்ட்வேரும்.. இந்த fps ப்ராப்ளத்தை... சரியான முறையில் ஹேண்டில் பண்ணலை.

நம் வீடியோவின் fps என்னன்னு தெரிஞ்சிகிட்டா.. அதுக்கு ஏத்த மாதிரி சப்டைட்டிலின் டைமை மாத்தணும். இதுக்கும் சாஃப்ட்வேர் இருக்கு (எதுன்னு கேட்காதீங்க. இப்ப எல்லாம் இதை கேட்டா.. உலக சினிமா பார்க்கற மாதிரி எஃபெக்ட் வருது).

இருந்தாலும்.. டெக்னிகல் மேட்டர் தெரியாதவங்களுக்கு இந்த சொல்யூசன் பெட்டர்.

ஆமா.. அதான் vlc player-லயே.. சப்டைட்டில் ஸ்பீடை கண்ட்ரோல் பண்ண முடியுமே. இதுக்கு எதுக்கு... இத்தனை சாஃப்ட்வேர்?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலிவுட் பாலா,
தல நலமா?செம பிஸியா?
தல நான் சில சமயம் 2சிடிக்கள் ஒன்றாக செய்து பார்த்திருக்கிறேன்.எல்லா 2சிடி சப்டைட்டில்களும்,00:00:01 இப்படி ஆரம்பிக்காது,சில சப்டைடில்கள் முதல் சப்டைட்டில் முடிந்த இடத்திலிருந்து ஆரம்பிக்கும்,அவற்றை நான் காபி பேஸ்ட் செய்திருக்கிறேன்.
======
பாலாஜி கேட்ட கேள்விக்கு எனக்கு தெரிந்த பதிலை சொல்லி விட்டேன்.
======

சப்ரிப் உடனே முயன்று பார்க்கிறேன்.
ரிசல்ட் சொல்கிறேன்.
======
ஆக்ஸோ-என்றால் நீங்கள் பெயரை மட்டும் பார்க்க கூடாது,உங்க aviல் axxo-dvdrip-xvid என இருந்தால் அதைதான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதை விடுத்து axxo-dvdrip என ஒன்று இருந்தால் அதை தேர்ந்தெடுக்ககூடாது.இதை 100சதம் பலனளித்த பின்னரே எழுதுகிறேன்.இது வரை சுமார் 600 படங்களுக்கும் மேல் இப்படித்தான் சப்டைட்டில் தேர்ந்தெடுத்துள்ளேன்.
======
விஎல்சி மீடியா பிளேயரில் படம் பார்ப்பது இப்போதெல்லாம் சிரிப்பா இருக்கு தல,அதில் தான் 3 வருடம் பார்த்தேன்.கே எம் பிளேயரில் இருக்கும் பிக்சர் ,சவுண்ட் எஃபேக்ட்,முழுஸ்க்ரீன்,கண்ட்ரோல் விஎல்சி யில் இல்லவே இல்லை.
அதை அனின்ஸ்டாலே செய்து ஒரு வருடமாகிறது.
அதானால் தான் அதை ரெகமண்ட் செய்தேன்.
வருகைக்கு நன்றி தல.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலிவுட் பாலா,
நீங்க சொன்ன் 2சிடி மேட்டரை மீண்டும் சோதித்து பார்த்தேன்,நான் அப்படி எதோ2 படங்களுக்கு செய்துள்ளேன். அந்த சப்டைட்டிலை உங்களுக்கு தேடி எடுத்து மெயில் அனுப்புகிறேன்.நீங்க சொன்னா சரியா இருக்கும் தல,எனவே அந்த 2 சிடி மேட்டரை நீக்குகிறேன்.:)
வருகைக்கும் முக்கிய கருத்துக்கும் மிக்க நன்றி தல.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஓட்டு போட்ட அத்தனை முகம் தெரிந்த தெரியாத நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

ஹாலிவுட் பாலா சொன்னது…

கார்த்திக்கேயன்...

அந்த 2சிடி மேட்டர் எப்படி சொல்லுறேன்னா...

உங்க கிட்ட ஒரு avi ஃபைல் இருக்கு. ரெண்டு சப்டைட்டில் ஃபைல் இருக்குன்னு வச்சிப்போம்.


அப்ப சப்டைட்டில் ஃபைலை ஓப்பன் பண்ணினா.. முதல் ஃபைலில்..

00:01:03 -ல் முதல் வசனம் ஆரம்பிக்குதுன்னா... இரண்டாவது சிடி ஃபைலில்.. திரும்பவும்..

00:00:06 -ன்னு மாதிரிதான் ஆரம்பிக்கும்.

அப்ப ஒரே avi ஃபைலில்... இதை காப்பி/பேஸ்ட் செய்தாலும் வொர்க் ஆகாது.

அப்புறம்.. axxo மேட்டர் திரும்பவும்...!! நீங்க சொல்லுறது சரிதான். எப்படின்னா.... axxo-வே..

23fps, 25fps -ன்னு ரெண்டு வெர்ஷனை வெளியிடுவதில்லை. அந்த விதத்தில்... இது 100% வொர்க் ஆகும்.

சில சமயம்.. அந்த பெயரில் சப்டைட்டில் கிடைக்கலைன்னா... மத்தவங்க சப்டைட்டிலை டவுன்லோட் பண்ணி வொர்க் பண்ண வைக்கலாம். அப்ப.. இந்த 23/25 பிரச்சனை வரும் வாய்ப்பிருக்கு.

அதைத்தான் சொன்னேன்.

[நான் சொன்னதை வச்சி எல்லாம் ஏன் நீக்கறீங்க தல? டெஸ்ட் பண்ணிப் பார்த்ததில்.. ரிசல்ட் எப்படி இருந்தது? ஆனா 100% வொர்க் ஆகாதுங்கறது என் கருத்து. :)]

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல எதோ ஒரு சமயம்,நான் த பியூட்ட்ஃபுல் மைண்ட் என்னும் படத்துக்கும்,டூ ஃபார் த மனி படத்துக்கும் அப்படி செய்தேன்.ஆனால் அது ஏற்கனவே யாரொ ஒரு நண்பர் ஸ்பெஷலாக சின்க் செய்து எடிட் செய்தது போலும்,அதை நிராகரிப்போம்.
தல உங்கள் இறுதி தீர்ப்பே சரியானது.
========

தல உங்க ஷட்டர் ஐலாண்ட் பதிவில் நான் இட்ட சுட்டியை கண்டீர்களா?
அதை பற்றி தொடர்ந்து படிக்க போய் 5 கான்செண்ட்ரேஷன் கேம்ப் படம் பாத்துட்டேன் தல.கொல கொலயா முந்திரிக்கா மாதிரி கொன்றுக்கானுங்க.

========

ஒவ்வொரு கேம்பிற்கும் ஒரு படம் இருக்கு,
இது தவிற டெத் மார்ச்சுக்கு தனியா படம்
பாக்ஸிங் மேட்சுக்குன்னு தனி படம்னு போய்கிட்டே இருக்கு தல.

========

தல எப்போ பதிவிடுவீங்கன்னு விஸிட் அடிக்கிறேன்.

Meshak சொன்னது…

சூப்பர் தகவல் நண்பரே.அப்படியே torrent லிருந்து போல்டரக(subtittle உடன்) டவுன்லோட் செய்த படங்களை.PS3 எப்படி பார்பது என்று ரொம்பநாளாக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்,தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்.சில சமயம் vlc பிளேயர்ல் subtittle உடன் ரெகார்ட் செய்தும் படம் மட்டுமே PS3 ல் வருகிறது,subtittle ஐ காணவில்லை

ஜோதிஜி சொன்னது…

இதுவரைக்கும் நீங்கள் கொடுத்த தகவல்கள் மொத்தத்திற்கும் இந்த இடுகை என்னைப் போன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

இயக்குநர் ஐயா தூங்கா நகரம் வேலையில் இருக்கிறாரோ?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல எதோ ஒரு சமயம்,நான் த பியூட்ட்ஃபுல் மைண்ட் என்னும் படத்துக்கும்,டூ
ஃபார் த மனி படத்துக்கும் அப்படி செய்தேன்.ஆனால் அது ஏற்கனவே யாரொ ஒரு
நண்பர் ஸ்பெஷலாக சின்க் செய்து எடிட் செய்தது போலும்,அதை நிராகரிப்போம்.
தல உங்கள் இறுதி தீர்ப்பே சரியானது.
========

தல உங்க ஷட்டர் ஐலாண்ட் பதிவில் நான் இட்ட சுட்டியை கண்டீர்களா?
அதை பற்றி தொடர்ந்து படிக்க போய் 5 கான்செண்ட்ரேஷன் கேம்ப் படம்
பாத்துட்டேன் தல.கொல கொலயா முந்திரிக்கா மாதிரி கொன்றுக்கானுங்க.

========

ஒவ்வொரு கேம்பிற்கும் ஒரு படம் இருக்கு,
இது தவிற டெத் மார்ச்சுக்கு தனியா படம்
பாக்ஸிங் மேட்சுக்குன்னு தனி படம்னு போய்கிட்டே இருக்கு தல.

========

தல எப்போ பதிவிடுவீங்கன்னு விஸிட் அடிக்கிறேன்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜோதிஜி,
வாங்க தலைவரே,
நலம் தானே?இதை பகிர்ந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே,ஐயா மிகவும் பிஸியாகவே உள்ளார் என நினைக்கிறேன்.படவேலைகள் என்றால் சும்மாவா?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@மேஷக்,
டாரண்டு டவுன்லோடு செய்தவுடன் ஃபைல் சைஸ் மினிமம் 700 எம்பி இருக்கும்,அதை அப்படியே பிஎஸ்பி யிலோ அல்லது எம்பிஃபோர் பிலேயரிலோ ஏற்ற முடியாது,பெரிய சைஸ் படமாக இருக்கும் அந்த ஏவிஐ ஐ உங்கள் பிஎஸ்பிக்கு ஏற்ப சிறிய ரெசொல்யூஷனுக்கு கன்வெர்ட் செய்யனும்.இதற்கு மினிமம் 8 மணி நேரம் எடுக்கும்,முடிந்தபின்னர் அந்த ஃபைல் சைஸ் 300 எம்பி வரும்.

========
ஃபோல்டரில் உள்ள படத்தையும் சப் டைட்டிலையும்
ஒரே பெயரில் ரீனேம் செய்யவும்.
========
AVI To PSP Converter 1 என்னும் மென்பொருளை நிறுவி,அதில் ப்ரவுஸ் கொடுக்கவும்,உங்கள் படத்தையும் ரெசொல்யூஷனையும்,விரும்பும் ஃபைல் சைஸையும் தேர்வு செய்த பின்.
கன்வ்ர்ட் கொடுத்து விட்டு காத்திருக்கவும்.
தூங்க போகவும்
========
மினிமம் 8மணி நேரம் கழித்து சோதிக்கவும்.உங்கள் படம் சிறியதாயும்,துல்லியமாயும் பிஎஸ்பியில் பிளே ஆகும்.சப்டைட்டிலும் சின்க் ஆகி ஓடும்.

நான் முன்பு பிஎஸ்பி வைத்திருந்தேன்.அப்போது இதை முயன்றிருக்கிறேன்.

ஜெயக்குமார் சொன்னது…

மிக்க நன்றி. பயனுள்ளதாய் இருந்தது.

Meshak சொன்னது…

அன்பு கார்த்திக் பதிலுக்கு நன்றி நான் torrent லிருந்து இறக்கிய BR Rip movies ஐ Playstation 3 ல் பார்க்க. PSP இல் அல்ல. அதுவுமில்லாமல் PSP இல்
பார்க்க நீங்கள் கொடுத்த தகவலுக்கு நன்றி.

ஹாலிவுட் பாலா சொன்னது…

கார்த்திக்கேயன்.. அவர் கேட்டது PS3.

இதைப்பத்தி.. போன 2009 மார்ச் மாதம் எழுதியிருக்கேன். எங்க இருக்குன்னு தெரியலை.

அவர் AVIAddXSubs சாஃப்ட்வேரை யூஸ் பண்ணலாம்.

http://www.softpedia.com/get/Multimedia/Video/Other-VIDEO-Tools/AVIAddXSubs.shtml

அந்த கான்சண்ட்ரேசன் கேம்ப் மேட்டரை படிச்சேங்க கார்த்திக்கேயன்.

Nanking பத்தி படிச்சிப்பாருங்க.

Nanking பத்தி ரெண்டு டாகுமெண்ட்ரி பார்த்தேன். கொடுமையா இருந்துச்சி.

Rape of Nanking (2007)
Nanking (2007)

இது ரெண்டும்.. Men Behind Sun (1988) படம் பார்த்த பின்னாடி பார்த்தேன்.

அதிகம் பாதிக்கப்பட்டது யூதர்களா, இவங்களான்னு பட்டிமன்றமே வைக்கலாம்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

பதிவு எழுதறது பிரச்சனையில்லைங்க கார்த்திக்கேயன். ஆனா.. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாம போனா கஷ்டமாயிருக்கும். அந்த அளவுக்கு நேரம் வரும்போது எழுதிக்கலாம்னு விட்டுட்டேன்.

ஒரு வேலையை முடிச்சா.. இன்னும் 2 வேலை க்யூல நிக்குது.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல நீங்க சொன்ன படங்களை உடனே பார்க்க ஆவல் எழுகிறது,டவுன்லோடு போட்டுவிட்டேன்.
தல ப்லாக்கர் எர்ரரில் பின்னூட்டத்தை பப்லிஷ் செய்தாலும் , இங்கே தெரியவில்லை,நான் பி எஸ் 3 ஐ பி எஸ் பி என புரிந்துகொண்டேன்,உங்க அருமையான தகவல்கள் மேஷக்கிற்கு உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்.
==========
தல பிரிசன் ஆஃப் வார்ஸ்,போஸ்ட் வார் மூவீஸும் பார்க்க வேண்டும் எதாவது தெரிந்தால் சொல்லவும்.
2 பக்க விளைவுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.மேற்கேயிருந்து அந்த ப்ரிட்டிஷ்+அமெரிக்கா போட்ட 2 தினம் நடந்த ட்ரெஸ்டன் என்னும் ஆகாய மார்க்க குண்டுவீச்சும்,
கிழக்கே இருந்து ரஷ்ய டாங்கி தாக்குதலிலும் எத்தனையோ ஜெர்மானியர்கள் நிச்சயம் பலியாகியிருக்கவேண்டும்.அதையும் பார்ப்போம்.
Jakob the Liar
Holocaust
Sophie Scholl: The final Days
The devil's arithmetic
The Grey zone
Sophie's Choice
சமீபத்தில் இவை தான் தல பார்த்தேன்.
மூடு இருக்கும் போதே இந்த சீரீஸை முடிக்கனும்.
பிஸி ஷெட்யூலிலும் பல அரிய தகவலுக்கு மிக்க நன்றி தல,

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@மேஷக்,
நண்பரே தவறாய் விளங்கிக்கொண்டேன்,ஹாலிவுட் பாலாவின் பதில் உங்களுக்கு பயனளைக்கும் என நம்புகிறேன்.:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜெயகுமார்.
வருகைக்கு நன்றி நண்பரே.

Meshak சொன்னது…

மிக்க நன்றி திரு.பாலா மற்றும் கார்த்திக் அவர்களே.

பின்னோக்கி சொன்னது…

vlc player -ல் சப்டைட்டிலுடன் படம் பார்க்க சிரமப்பட்டிருக்கிறேன். km_player இருப்பதை சொன்னதற்கு உங்களுக்கு கோடி புண்ணியம். www.subscene.com -ல் நிறைய சப்டைட்டில் கிடைக்கிறது.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@மேஷக் மீள்வருகைக்கு நன்றி

@பின்னோக்கி,
ஆமாம் விஎல்சி இன்னும் வளரவேண்டும்.
கேஎம் முயன்று பார்க்கவும்.
நான் பொதுவாக மேலே சொன்ன தளங்களில் முயல்வேன்,அதிலேயே நான் தேடுபவை கிடைத்துவிடும்,ஒருவேளை கிடைக்காவிடில் இதிலும் தேடிபார்க்கிறேன்,தகவலுக்கு நன்றி.

Palay King சொன்னது…

Thanks thala

R.Kamal சொன்னது…

this is very useful info, thanks a lot for sharing.

also, good to see a fellow Coen bros fan:)

சிவா சொன்னது…

Thanks for nice info.

Similar help about subtitle sync:

http://emagics.blogspot.com/2009/02/view-movies-with-subtitle.html

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பாலே கிங்
நன்றி நண்பா

@r.கமல்
நன்றி நண்பா

@சிவா
நன்றி நண்பா

! சிவகுமார் ! சொன்னது…

>>> தவற விடக்கூடாத தளம். தற்போதுதான் பார்க்கிறேன். இனி தொடர்ந்து வருகை புரிவேன். தகவலுக்கு மிக்க நன்றி, நண்பரே!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)