ப்ளட் சிம்புள்[1984][18+] BLOOD SIMPLE

கோயன் பிரதர்ஸ் பரீட்சார்த்தமான பல முயற்சிகளுக்கு பெயர் போனவர்கள், இவர்களின் உலகம் தனி உலகம்,எக்காரணம் கொண்டும் இவர்கள் கமர்ஷியல் சினிமாவுக்காக தங்களை சமாதானம் செய்து கொண்டதில்லை.அப்படி ஒரு முதல் பரீட்சார்த்தமான முயற்சி தான் ப்ளட் சிம்பிள்.

ப்ளட் சிம்பிள் 1984ஆம் ஆண்டு கோயன் பிரதர்ஸ் கதை, திரைக்கதை தயாரிப்பு ,இயக்கத்தில் வந்த நியோ நாய்ர் த்ரில்லர் வகைப்படம், இது அமெரிக்கன் ஃபில்ம் இன்ஸ்டியூட்டின் ஆகச்சிறந்த 100 த்ரில்லர் படங்களில் 98 ஆம் இடத்தில் உள்ளது. மேலும் கோயன் சகோதரர்களின் முதல் படம், இயக்குனர் பார்ரி சோனன் ஃபீல்டுக்கும் ஒளிப்பதிவாளராக முதல் படம், அவர் பின்னாளில் இயக்கிய மென் இன் ப்ளாக், வைல்ட் வைட் வெஸ்ட் போன்றவை பற்றி நீங்கள் அறிவீர்கள். கார்ட்டர் பர்வெல்லின் மிரட்டல் இசை சொல்லவே வேண்டாம். கோயன் பிரதஸுடன் இணைந்து இவர் 13 படங்கள் செய்துள்ளாராம்.

ப்போதும் முதல் படத்தை கொடுக்கும் இயக்குனர்கள் தங்கள் முழுத்திறமையையும் கொட்டி படமாக்குவர். அது சில சமயம் எடுபடும், பலசமயம் எடுபடாது,அப்படி அதிகம் பேர் பெரிய திரையில் கண்டுகொள்ளாத அரிய படம், இதுவும் டிவிடியில் எண்ணிலடங்கா திரை ரசிகர்கள் கண்டுகளித்த ஒரு படைப்பே, இதில் பயன்படுத்திய பல காமிரா யுத்திகள் நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்னுக்கு சற்றும் குறைந்ததல்ல, நறுக்கு தெரிக்கும் வசனங்கள், மிரட்டும் ,படபடப்பு கூட்டும் காட்சியமைப்புகள், மெதுவாய் நகர்ந்தாலும் எதிர்பார்ப்பை தூண்டும் திருப்பங்கள், என ஒரு பெர்ஃபெக்ட் த்ரில்லர் எனலாம்.

தில் இவர்கள் வில்லனை சித்தரித்திருந்த விதம்!!!இவர்களின் படங்களில் வரும் வில்லன்கள் பயங்கர தோற்றத்துடன் இருக்கமாட்டார்கள்.நாம் அன்றாடம் பேசும் பழகும் சாமான்ய மனிதர்களை போலத் தான்  இருப்பர். ஆனால் விளைவு? இவர்களின் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரங்களை வாழ்நாளில் ஒருவர் சந்திக்காமல் இருப்பதே நல்லது என்பேன்.கோயன் பிரதர்ஸ் எப்போதும் இயக்குனர் ஸ்டான்லி க்யூப்ரிக்கின் படைப்புகளை சிலாகிப்பார்கள், இவர்களது படைப்புகளிலும் அவை நடிகர்களின் ஐ லெவல் க்ளோசப் ஷாட் காட்சிகளாக வெளிப்பட்டிருக்கும். இப்படத்திலும் வாஷ்பேசின் குழாயிலிருந்து நீர்த்துளி விழுவதைக் கூட வித்தியாசமாய் எடுத்திருப்பார்கள். இவர்களின் படத்தை கவனித்து பார்த்தால் 10 பதிவு எழுத மேட்டர் இருக்கும். எப்போதும் ஒவ்வொரு விஷயத்தையும் டீட்டெய்லாக சிந்திப்பவர்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும்  இப்படம்.

============000============

பெரும்பாலும் கோயன் பிரதர்ஸின் படங்கள் ஒரு வித அங்கலாய்பான நேரேஷனுடன் துவங்கும்.அப்படி இப்படத்தில் லாரன் விஸ்ஸர் என்னும் ப்ரைவேட் டிடெக்டிவ் பேசும்  முதல் வசனம்.

The world is full of complainers. But the fact is, nothing comes with a guarantee. I don't care if you're the Pope of Rome, President of the United States, or even Man of the Year--something can always go wrong. And go ahead, complain, tell your problems to your neighbor, ask for help--watch him fly. Now in Russia, they got it mapped out so that everyone pulls for everyone else-- that's the theory, anyway. But what I know about is Texas...And down here... you're on your own.......
============000============
படத்தின் கதை:-
டெக்ஸாசின் சிற்றூரில்,மனைவி மீது சந்தேகத்தின் உச்சத்திலிருக்கும் பார் ஓனர் கணவன் மார்ட்டி (டான் ஹெடாயா). அவனிடம் அனுதினமும் சித்திரவதைக்கு ஆளாகும் அழகிய மனைவி அப்பி (ஃப்ரான்கஸ் மெக்டார்மண்ட்-ஜோயல் கோயனின் மனைவி)   , கணவன் பாரில் வேலை செய்யும் பார் மேனேஜர் ரே (ஜான் கெட்ஸ்)உடன்  கள்ளக்காதல் வைத்துக் கொள்கிறாள்.

ந்தேக புத்தி கணவன் மார்ட்டி  வயதான ப்ரைவேட் டிடெக்டிவ் லாரன் விஸ்ஸர் (M.எம்மெட் வால்ஷ்) கொண்டு இருவரையும் துப்பறிகிறான். இது தெரியாமல் அப்பியும், ரேயும் ஊரை விட்டு ஓடி ஒரு மோட்டலில் தங்குகின்றனர். அந்த டிடெக்டிவ் இவர்கள் படுக்கையில் உல்லாசமாயிருப்பதை புகைப்படங்கள் எடுத்து மார்டியிடம் காட்டுகிறான், கொதித்த கணவன் விடியலில் மோட்டலுக்கு போன் செய்தவன் .

’’லவ்வர் பாய்’’ . என்ன சாந்தி முஹூர்த்தம் நல்லா நடந்துச்சா? எனக்கு அவளுக்கு கள்ளக்காதலன் இருப்பான என தெரியும், ஆனால் நீ என தெரியாது. உனக்கு அவள் தன் சோக கதைகளை கூறி வலையில் வீழ்த்தியிருப்பாளே?, ஆனால் அவளுக்கு உன்னைப்போல் எத்தனையோ பாய்ஃப்ரெண்ட்ஸ், உன்னையும் ஒருநாள் கழற்றி விட்டுவிடுவாள், அது அவள் இயல்பு . எப்போதும் என் பார் பக்கம் வராதே!! நான் சுட்டுவிடுவேன் என மிரட்டி போனை வைக்கிறான் .

ரேவுக்கு ஊரை விட்டு வெளியேற பணம் தேவைப்படுகிறது, மோட்டலில் தங்குவது ஆபத்தானது என தெரிந்து கொண்டவன் தன் வீட்டுக்கே அப்பியை கூட்டிப்போய் குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறான்.அங்கும் அடிக்கடி போன் செய்த மார்ட்டி அப்பி போன் எடுத்தாலும் ரே போனை எடுத்தாலும் பேசாமல் மவுனம் சாதிக்கிறான். ரேவுக்கு தன் காதலி மேல் சந்தேகம் வருகிறது, இவளுக்கு தன்னை தவிர வேறொரு காதலன் இருக்கிறான் என உறுதியாக எண்ணுகிறான்.அப்பியோ ரேவுக்கு தன்னை தவிற இன்னொரு இளம் காதலி இருப்பாள் போலும்,என குழம்புகிறாள்.

தனால் கணவனை வெறுக்கிறாய் என  அப்பி யிடம் இவன் கேட்டதற்கு, அவன் ஒரு குதப்புணர்ச்சி விரும்பி, நான் ஒரு முறை நீ ஏன் இப்படி ஆனாய் ? என கேட்டதற்கு , என்னை மனநல மருத்துவரிடம் கூட்டிப் போனான், மருத்துவர் எனக்கு ஒன்றுமில்லை என சொன்னதற்கு மருத்துவனை மாற்றிவிட்டான். என்கிறாள். ரே ஹுஹூம் என்று இதை அலட்சியமாக கேட்கிறான்.


ப்போது அப்பிக்கு பாதுகாப்புக்காக துப்பாக்கி தேவைப்பட, முன்பு கணவன் மார்ட்டி தனக்கு பரிசளித்த இத்தாலியன் லேடீஸ் பிஸ்டலை  மார்ட்டியின் வீட்டுக்குள் இருவருமாக நுழைந்து எடுத்துக்கொண்டு வருகின்றனர். அப்பி பிஸ்டலை தன் கைப்பையில் வைத்துக்கொள்கிறாள்.

இப்போது ரே , மார்ட்டியை சந்தித்து தன் சென்ற வார சம்பளத்தை வாங்க போகிறான். அங்கே மார்ட்டி இவனை கடுமையாக எச்சரிக்கிறான். பணம் கொடுக்க முடியாது என்கிறான். நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என பார்க்கிறேன் என்கிறான்.


மார்ட்டி துப்பாக்கியை தன் அறையில் தேடியவன் கோபமாகி,இவர்களின் வீட்டுக்குள் விடியலில் நுழைகிறான். அங்கே வந்த அப்பி செல்ல நாயைக் கண்டு அதை கொஞ்ச,பின்னால் இருந்து இவன் இவளை கழுத்தை நெரித்து கொல்ல எத்தனிக்கிறான், சுதாரித்த அப்பி லாவகமாக, மார்ட்டியை விதைக்கொட்டையில் உதைத்தவள், அவன் துடிக்கையிலேயே இவனின் ஆட்காட்டி விரலையும் பலமாக பிடித்து திருப்பி ஒடித்தும்  விடுகிறாள், அங்கே துப்பாக்கியோடு வந்த ரே இவனை துரத்த கறுவிக்கொண்டே காரை கிளப்புகிறான் ,மார்ட்டியின் செல்ல அல்சேஷன் நாயும் காருக்குள் லாவகமாக பாய்கிறது.(அருமையான காட்சியது)

டுவேகத்தில் காரை விரட்டியவன் எதிர்திசையில் காரை செலுத்த, அது ஒரு முட்டு சந்து, போன வேகத்தில் காரை திருப்பிக்கொண்டு வந்து இருவரையும் மீண்டும் திட்டி விட்டு அகல்கிறான். இப்போது முறிந்த விரலுக்கு ஸ்பெஷல்  ஸ்டீல் ப்ரேஸிங் போட்டுக்கொண்டு திரியும் இவனை. எல்லோரும் கேவலமாக பார்க்கின்றனர். ஒரு இளைஞன் இவனைப்பார்த்து Hey mister, how'd you break your pussyfinger? எனக்கேட்கிறான்.அமெரிக்காவில்  ஆட்காட்டி விரலை ஒடித்துக் கொண்டால் மகா கேவலம் போலும்.


வமானத்தாலும்,பொறாமையாலும் துடித்தவன். டிடெக்டிவ் லாரன் விஸ்ஸரை அணுக, அவர் அடடா!!! உன்னால் இன்னும் ஒரு மாதத்துக்கு  மலம் கூட துடைக்க முடியாதா? என லொல்லு செய்கிறார். இவன் ஆத்திரத்தின் உச்சத்தில் 10,000 டாலர் தருகிறேன்,அவர்களின் பிணம் கூட கிடைக்க கூடாது, எனக்கு வேலையை முடித்த பின்னர் ஆதாரத்தை காட்டு ,பணத்தை வாங்கு,நடையை கட்டு என்கிறான். அலிபி உருவாக்குவதற்கு ஏதுவாக மீன்பிடிக்க செல்வதாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு ஒரு வாரம் ஃபிஷ்ஷிங் கேம்ப் போகிறான்.
  1. டிடெக்டிவ் லாரன் விஸ்ஸர் கள்ளக் காதலர்களை கொன்றாரா?
  2. இவரிடம் 10,000டாலர் பணம் வாங்கினாரா?
  3. வாடகை கொலைகாரனை நியமித்துவிட்டு  மார்ட்டியால் நிம்மதியாய் இருக்க முடிந்ததா?
னிமேல் தான் படத்தில் அருமையான புதிர்களும் திருப்பங்களும் வரப்போகின்றன, அதை நான் விளக்குவதை விட நீங்களே
  டிவிடி வாடகைக்கு எடுத்து பாருங்கள்!!!!
ஒவ்வொரு காட்சியும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஒரு சோற்று பதமாக இந்த கிளை மாக்ஸ் காட்சியை சொல்லுவேன். அது படமாக்கப்பட்ட விதத்தையும் டார்க் ஹ்யூமரை என்ன அழகாக ஒவ்வொரு காட்சியிலும் இவர்கள் புதைத்து வைக்திருக்கிறார்கள் என்றும் பாருங்கள்.
============000========================000============

22 comments:

கண்ணா.. சொன்னது…

படம் பார்க்க தூண்டும் விமர்சனம்..

//சந்தேக புத்தி கணவன் மார்ட்டி//

இங்கதான் லேசா இடிக்குது. அவளுக்கு ஏற்கனவே கள்ளகாதலன் இருப்பதால் இவனை சந்தேக புத்தி கணவன்னு சொல்லலாமா.?

உதயன் [யாழ்ப்பாணம்(ஏழாலை)] சொன்னது…

விமர்சனம் சூப்பர்...

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

விமர்சனம் சூப்பர்...
சாரி இந்த வாட்டி படிக்காமலேயே பின்னுட்டம் போட்டுட்டேன்...மன்னிச்சுரு தல... ஆனா பார்மாலிட்டி டன்... :))

கனவுகளின் காதலன் சொன்னது…

நண்பரே,

படத்தின் கதையை ஆரம்பிக்குமுன் நீங்கள் வழங்கியிருக்கும் அறிமுகம் அருமை. விறுவிறுப்பான பதிவு.

மயில்ராவணன் சொன்னது…

நல்ல நடை. தூயதமிழ் வார்த்தைகள் எல்லாம் போட்டு ரொம்ப மெனக்கெடுகிறீர்கள். ரொம்ப நன்றி.

பெயரில்லா சொன்னது…

என்ன கொடுமை இது?
வேற கதையே கிடைக்கலையா?

Nundhaa சொன்னது…

No Country for Old Men is an awesome great gritty crime thriller film by the cohen brothers which I liked very much ... let me try your recommendation too

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கண்ணா
நல்ல சிறப்பான கேள்வி தான்.
இதில் மார்ட்டியின் சந்தேகபுத்தி மற்றும் மேலே சொன்ன
குதப்புணர்ச்சியால் வெறுத்த அப்பி கள்ளக்காதலை வளர்த்துக்கொள்கிறாள்.
படம் பாருங்க நண்பா மிஸ் பண்ணகூடாத படம் ,அதனால் தான் நான் முழுக்கதையை சொல்லவே இல்லை.இது அனுபவிச்சு பாக்கணும்.
பணத்தை குறுக்கு வழியில் தேடிப்போகும் எவனுக்கும்,வாடகை கொலை,கடத்தல்காரன் கிட்ட போற யாருக்கும் என்ன ஆகும்னு இவங்க படத்தை பார்த்தால் தெரியும்.முடிஞ்சா இந்த யூட்யூப் கிளைமாக்ஸ் காட்சி பாருங்க.
ஒன்னும் ஸஸ்பென்ஸ் போகாது.ஏன்னா படத்தில் இடையில் தான் முக்கிய திருப்பங்களே!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@உதயன்
நன்றி நண்பா

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பிரதாப்
நன்றி நண்பா

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கனவுகளின் காதலன்
வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@மயில்ராவணன்,
வாங்க பெரியவரே!!!
:)))
எதை தூய தமிழ் வார்த்தை என்கிறீர்கள்?
விதைக்கொட்டையையா?
ஹஹஹா:)))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கும்மியடி
என்ன பேரு?என்ன பேரு?
வருகைக்கு நன்றிங்க தம்பி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@நந்தா,
வருகைக்கு நன்றி,
நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மேன் என் ஃபேவரிட்
என் விமர்சனம்
http://geethappriyan.blogspot.com/2010/03/182007no-country-for-old-men.html

இவங்களோட 14 படமும் பார்த்துட்டேன்.
அதுல மொக்கைன்னா 3 தேறும்
ரெய்சிங் அரிசோனா
பாரீஸ் டெ ஜேம்
இண்டாலரபிள் க்ரூயல்டி

இவர்களின் மாஸ்டர் பீஸ்னா ஃபார்கோவும்
நோ கண்ட்ரீ ஃபார் ஓல்ட் மென்னும்,பார்டன் ஃபின்க், ஹட்சக்கர் ப்ராக்ஸியையும் சொல்லுவேன்.

பின்னோக்கி சொன்னது…

இந்த படம் பார்த்துருக்கேன். நல்லா இருக்கும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@பின்னோக்கி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

ஆளவந்தான் சொன்னது…

me the...100-th follower.

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஹலோ... தல.. நாந்தான் காணாம போய்ட்டேனா.. நீங்களுமா??? :)

வந்து எதுனா எழுதுங்க தல..!!

Prasanna Rajan சொன்னது…

அமைதியாக்கீது... ரொம்ப அமைதியாக்கீது... யாராச்சும் இருக்கீங்களா??

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

ஹலோ ,
எனக்கு யாரோ அட்டாக் போட்டு நிக்க வச்சா மாதி கீதுப்பா..

அட்டாக் எடுத்தா தான் பழய படி ஆட்டம்.

ILLUMINATI சொன்னது…

சீக்கிரம் ஏதாவது போஸ்ட் பண்ணுங்க தல....

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)