டார்க் ஹ்யூமரின் உச்சம்-ஹட்சக்கர் ப்ராக்ஸி[1994]

கோயன் பிரதர்ஸ் படங்களை நாம் சிலாகிப்பதற்கு முக்கிய காரணம் அவர்களின் உலகத்தரமான டார்க் ஹ்யூமர் தான். இவர்கள் தங்கள் எல்லா படங்களிலும் காட்சிக்கு காட்சி அதை கண்ணி வெடிபோல புதைத்து வைப்பார்கள், அதை நீங்கள் உணரும் முன்னரே காட்சி நகர்ந்து விடும்.அது தான் இவர்களின் அடையாளம். ஒருவேளை அது உங்களுக்கு புரியவில்லையா? கவலையே படமாட்டார்கள். அதை உங்களுக்கு புரிய வைக்க வேண்டி இவர்கள் எந்தவிதமான காம்ப்ரமைஸும் செய்து கொள்ள மாட்டார்கள். நல்ல டார்க் ஹ்யூமருக்கு எடுத்துக்காட்டாய் ஹட்சக்கர் ப்ராக்ஸி என்னும் ஸ்க்ரூபால் காமெடி வகை படத்தில் வரும் மீட்டிங் ரூம் காட்சியை சொல்லுவேன். பாருங்கள், இதில் செல்ஃப் டிஃபென்ஸ்ட்ரேஷனால் பீடிக்கப்பட்ட கம்பெனியின் டைரக்டர் என்ன செய்கிறார் என்று ?

ன் கம்பெனி தயாரிப்புகள் அமோக விற்பனையாகின்றன,கம்பெனி பங்குகள் இரண்டு மடங்கு அதிக விலை போகின்றன,இந்த வருடம் கம்பெனியில் நல்ல லாபம் ஈட்டியது. என ஆண்டறிக்கை வாசிக்கப்பட மிகவும் உணர்ச்சி வசப்பட்ட டைரக்டர் தன் சங்கிலி கடிகாரத்துக்கு சாவி கொடுக்கிறார்.க்யூபன் சிகாரை உரிஞ்சுகிறார்.பின்னர் நாற்காலி மீது ஏறி நீண்ட மேசையில் ஓடியவர், கண்ணாடி சன்னலை உடைத்துக்கொண்டு 45ஆம் மாடியில் இருந்து ஆகாயத்தில் கலந்து அனுபவித்து கீழே குதிக்கிறார். இதற்கு 1958 ஆம் ஆண்டின் அசல் நியூயார்க் நகர , ஆர்ட் டெக்கோ,மற்றும் மாடரன்  பாணி ஸ்கைலைன் கட்டிடங்களை  மாடலாய் வடிவமைத்த கோயன் பிரதர்ஸ் ,பின்னர் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் அந்த கம்பெனி டைரக்டர் 30 நொடிகள் அந்தரத்தில் பயணித்து  மண்ணில் மோதி தலைசிதறுவது போல் வடிவமைத்திருந்தாராம்.(ஒருவர் 45மாடிகள் குதித்து கடக்க 7நொடிகள் எடுக்குமாம்) இது சற்றே நாடகத்தன்மைக்காக நேரம் கூட்டப்பட்டதாம். இது  1975ல் பான் அமெரிக்கன் கட்டிடத்தின் 44ஆம் மாடியில் இருந்து யுனைட்டட் ஃப்ரூட்ஸ் கம்பெனியின் டைரக்டர் குதித்து இறந்த உண்மைச் சம்பவத்தை  தழுவி  எடுக்கப்பட்ட காட்சியாம்.மனிதனுக்கு அதிக சந்தோஷமும் ஆபத்து தான் என்பது தான் எவ்வளவு உண்மை?

ந்த தற்கொலை சம்பவத்துக்கு பின்னர்  கம்பெனியின் போர்ட் ஆஃப் டைரக்டர் கிழங்களுக்குள் நடக்கும் விவாதத்தையும் உற்றுநோக்குங்கள். அதில் உச்ச கட்டமாக  உயிருக்கு மதிப்பளிக்காத அந்த போர்ட்  ஆஃப் டைரக்டர்களில் ஒருவரான பால் ந்யூமேன் எரிகின்ற க்யூபன் சிகாரை வீணாக்குவது முட்டாள்தனம் என அதை வீணாக்காமல் உரிஞ்சுவதும், கம்பெனியில் மொத்தம் எத்தனை தளங்கள் உள்ளன?என கேட்கப்பட, ஒரு கிழம் 45 எனவும்.இன்னொரு கிழம் இல்லை இல்லை 44 இதில் ஒன்று மெஸ்ஸனைன் ஃப்ளோர் ,அதை கணக்கில் சேர்க்கக்கூடாது என்பதும்  சரியான  கலக்கல் காட்சிகள்.இப்படத்தில் அப்பாவி பட்டதாரியாய் வரும் டிம் ராபின்ஸ் (ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்) தான் நகைச்சுவையிலும் சூரப்புலி என நிரூபித்த படம்.படம் அனுபவித்து பாருங்கள்.

உங்களுக்காக அந்த வசனங்கள் :-

Board Member 1: He could have opened the window.
Board Member 2: Waring Hudsucker never did anything the easy way.
Board Member 3: (weeping) Why? Why did he do it? Everything was going so well
Sidney J. Mussburger: What am I, a head shriker. Maybe the man was unhappy?
Board Member 3: He didn't look unhappy.
Board Member 4: He didn't look rich.
Board Member 5: Waring Hudsucker was never an easy man to figure out. He built this company with his bare hands, every step he took was a step up, except of course this last one.
Sidney J. Mussburger: Sure, sure he was a swell fella, but when the president, chairman of the board and owner of 87% of the company stock drops 44 floors...
Board Member 6: 45.
Board Member 7: Counting the mezzanine. 

ப்படம் மேலே சொன்ன  அதிமேதாவித்தனமான நகைச்சுவை காட்சிகளாலேயே  எல்லா தரப்பு மக்களையும் சென்று சேராமல்  பாக்ஸ் ஆஃபிஸில் சுருண்டதாம். இருந்தும்  எண்ணற்ற ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களின் விருப்பதேர்வாக உள்ளது இப்படம்.
=============0000==============
அந்த போர்ட் ரூம் காட்சிக்கான யூட்யூப் காணொளி:- 

=============0000==============
நன்றி:-ஐஎம்டிபி,யூட்யூப்,விக்கிபீடியா,கூகிள்

18 comments:

ஜீவன்பென்னி சொன்னது…

present.....formality panna mudiyala. Some network problem.

கனவுகளின் காதலன் சொன்னது…

நண்பரே,

விழுபவர் தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுவதும், கீழே நிற்பவர்களைப் பார்த்து ஒதுங்கிக் கொள்ளச் சைகை செய்வதும் நல்ல காமெடி. சிறப்பான தெரிவு.

ஹாலிவுட் பாலா சொன்னது…

நீங்களாவது... தொடர்ந்து கலைச்சேவை செய்ங்க. தலை மேல விழற வேலையைப் பார்த்தா.. இந்த ஜென்மத்துக்கு இந்த ஆஃபீஸை விட்டு வரமாட்டேன் போல இருக்கு. :) :)

கோபிநாத் சொன்னது…

அன்பு அண்ணனுக்கு கடமையை முடித்துவிட்டேன் ;)

☀நான் ஆதவன்☀ சொன்னது…

//கோபிநாத் சொன்னது…

அன்பு அண்ணனுக்கு கடமையை முடித்துவிட்டேன் ;)
//

ரிப்பீட்டே :) பதிவு சின்னதா இருக்கே? ஆணி அதிகமோ?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கண்ணா,
உங்கள் 2கருத்துக்களை வெளியிட்டும் பிளாக்கரின் எர்ரர் மெஸ்ஸேஜில் போய்விட்டது,என்ன கொடுமை?ஜிமெயில் இன்பாக்ஸிலும் காணவில்லை.மிகவும் வருந்துகிறேன் நண்பா.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜீவன் பென்னி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கனவுகளின் காதலன்,
நண்பரே காணொளியை ரசித்து கருத்தும் இட்டமைக்கு நன்றிகள்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலிவுட் பாலா,
தல ஓக்கே தல,டேக் கேர்.
வேலை தான் முக்கியம்,தினமும் விஸிட் அடிக்கிறோம் உங்க சைட்டுக்கு.எதாவது இடுகை இருக்குமான்னு!!!!:(

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அன்புத்தம்பி கோபி
வருகைக்கும் முக்கிய கடமைக்கும் மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

அன்பு தேவுடு
வருகைக்கும் முக்கிய கடமைக்கும் மிக்க நன்றி.வேலை சுமார் தான்.இப்படியும் எழுதலாம்னு தோன்றியதால்.இப்படி எழுதினால் தினம் ஒண்ணு எழுதலாம்ல:))))

கண்ணா.. சொன்னது…

அட.! பரவால்ல தல...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

கண்ணா மிக்க நன்றி,
எப்படியும் வீட்டில் போய் எடுத்துவிடுவேன்ல?:))

வினோத்கெளதம் சொன்னது…

voted guru..

உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…

ஆமா.. இப்படி கிறுக்காவே படம் எடுக்குறாங்களே.. எப்படி அடுத்தப் படத்துக்கெல்லாம் சான்ஸ் கிடைக்குது..? ஒரு வேளை அத்தனை படங்களும் சொந்தத் தயாரிப்பா..? சொந்தத் தயாரிப்புன்னு அனைத்து படங்களுமே லாபத்தை சம்பாதித்ததா..?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@வினோத்,
மிக்க நன்றி குரு

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@உண்மைத்தமிழன்,
என்ன அண்ணே ?இதுக்கு பேரு தான் டார்க் ஹ்யூமர்,&ஸ்க்ரூபால் காமெடி ஜெனர்,இதை ரசிக்க தெரியாவிட்டால் அது பார்ப்பவரின் தவறு,அவர்களின் தவறல்ல,இவர்களின் படங்கள் எல்லாமே மாஸ்டர் பீஸ் என்பேன்.எப்போதும் சப்டைட்டிலுடன் படம் பாருங்க,அப்போது தான் பேசும் மிக நீண்ட வசனங்களும்,நகைச்சுவையும் புரியும்.இவர்களின் படங்களை உங்களைபோல ஆட்கள் தேடிப்பார்க்க வேண்டும்.அப்போது தான் நிறைய பேரை சென்றடையும்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

டார்க் ஹுமர் எனக்கு பிடித்த வகை இல்லாவிட்டாலும் எதற்கும் "ரெயினி டே பண்ட்" ஆக வைத்துக் கொள்கிறேன். அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி நண்பா!

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)