வாட் ஜஸ்ட் ஹேப்பண்ட்?What Just Happened?மெய்யாக நடந்தது என்ன ? (18+) 2008

2008 ஆம் ஆண்டு பேர்ரி லெவின்சன்னின் இயக்கத்தில் இதே பெயரில் ஆர்ட் லின்சன் தன் ஹாலிவுட் திரை அனுபவங்களை தொகுத்து எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டு வெளிவந்த காமெடி டிராமா வகை திரைப்படம்.

மிழ் திரையுலகில் அருமையான நடிப்பிற்க்கு  பெயர் போனவர்களின் பெயர்களை   பட்டியலிட்டால் பத்து விரல்களே அதிகம்.ஹாலிவுட் திரைப்பட உலகின் அருமையான நடிகர்களை பட்டியலிட்டால் பத்து விரல்கள் போதாது.அதில் முக்கியமான மோதிர விரலாய் இருப்பவர் ராபர்ட் டிநீரோ,மனிதர் படத்துக்கான ஸ்க்ரிப்டை கையில் வாங்கியவுடனே அந்த பாத்திரமாகவே மாறிவிடுபவர்,நடிகர் கமல் ஹாசனிடம் இவரின் பாதிப்புகள் அதிகம் பார்க்கலாம்,ஆரோக்கியமான விஷயம் தானே!

லகின் மிகச்சிறந்த 10 திரைப்பட கதாபாத்திரங்களில் இவரின் ”ரேஜிங் புல்” படத்தின் பாக்ஸர் ”ஜேக் லே மோட்டா” பாத்திரத்தை ஒன்றாகச் சொல்லலாம்,அதில் முதல் ஒரு மணி நேரம் வரும் இளம் வயது தோற்றத்துக்காக தன் எடை குறைத்து சிக்ஸ் பேக்ஸ் வைத்தவர்,அதன் பிற்பாதியில் வரும் நடப்பு கால தோற்றத்துக்காக 30 கிலோ எடையை கூட்டியிருப்பார்,சதை போடுவதென்றால் செயற்கையாக வெறும் பீர் தொப்பை மட்டும் வைப்பது அல்ல,முகத்தில் கூட சதைபோட்டு முதுமையை கொண்டுவந்திருப்பார்.இவர் நடிக்காத பாத்திரங்கள் தான்  உண்டா? எனத் தெரியவில்லை, இந்த 67 வயதிலும் மனிதர் படு பிஸி.கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்கள்.

ராபர்ட் டினீரோ இப்படத்தில் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பென் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் , அவர்  தன் புதிய படம் ஃபியர்ஸ்லியை முடித்து வெளியிடுவதற்க்குள் இரண்டு வாரங்களில் படும் அல்லல் துயரங்களை, மிகுந்த நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள் .கட்டுக்கோப்பான ஒழுங்கோடு பாடு பட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளரான இவர் ஸ்டுடியோ ஹெட்  என்னும் திட்ட நிர்வாக உயர் அதிகாரி லூவை (கேத்ரீன் கீனர்) திருப்தி படுத்த வேண்டி படத்தின் கதையை மாற்றுவது, நடிகர்களின் படத்தில் வரும் தோற்றத்தை திடீரென மாற்றுவது, கதாபாத்திரத்தை சாகடிப்பது,உயிர்பிழைக்க வைப்பது மற்றும் செலிப்ரிட்டியான அவர் அனுதினமும் வாழ்வில் சந்திக்கும் சர்ச்சைகள், பொல்லாப்புகள் என்றாலும் சொன்னவிதம் ஒரே வெடிச்சிரிப்பு தான்.

டம் பார்க்கும் நாமும் அவர் கூடவே போகுமிடமெல்லாம் பயணிக்கிறோம்.


வயிறு குலுங்க சிரிக்கிறோம். அவரின் முதல் மணவாழ்க்கை கசந்து விவாகரத்தாகி,முதல் மனைவிக்கு மிகப்பெரிய தொகையையும் வீட்டையும் அலிமனியாக(ALI MONEY) கொடுத்தும் மகளின் பாசமும் விடாமல் இவரை வாட்டுகிறது , இரண்டாம் மணவாழ்க்கையும் கசந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்து பின்னர் பேச்சுவார்த்தை என்னும் சமரச நிலைக்கு வந்து ஓயாத வேலைப் பளுவின் இடையிலும் பிரபல அட்டார்னிகளிடம் கவுன்சிலிங்கிற்கு  போய் வருகிறார்கள். இவருக்கு உள்ள நிதிநிலை இன்னொரு அலிமனி விவாகரத்துக்கு இடமளிக்கவில்லை.மனைவி கெல்லியின்  புரிதல் மற்றும்  ஒப்புதலோடு பிரிய நினைக்கிறார்


வ்வப் பொழுது நடிக்க வாய்ப்பு கேட்டு வலிய வந்து மாடல் நங்கைகள் படுக்கைக்கு விருந்தாகின்றனர்.இவரும் சோலியை முடித்து விட்டு உன்ன மைண்ட்ல வச்சுக்க்றேன் என்கிறார். இவரது இரண்டாம் மனைவி கெல்லிக்கு(ராபின் ரைட் பென்) ஸ்காட் சாலமன்(ஸ்டான்லி டஸ்ஸி) என்னும் ஒரு கதாசிரியரோடு கள்ளத் தொடர்பு இருக்கிறது. சாலமனுக்கு நடிகர் பிராட் பிட் தான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அளிக்க, இவரால் சாலமனை பகைத்துக்கொள்ளவும் முடியவில்லை,காரி துப்பவும் முடியவில்லை . இவரே ஒழுங்கில்லாததால் இவரால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் , கெல்லியை  தலை முழுகவும் முடியாமல் படும் அவஸ்தை. அடடா!

சாலமனின் ஒற்றை ஸாக்சை படுக்கைக்கு அடியில் கண்டெடுத்து அதை வைத்து துப்பறியும் காட்சிகள் எல்லாம் படு ஜோர் .மேலும்  தன் பள்ளியிறுதி படிக்கும் மூத்த மகள் தூக்கு மாட்டி இறந்த இளம் ஸ்டூடியோ ஏஜென்டிடம் தன்னை பறிகொடுத்ததை சொல்கையில் ஏற்படும் பதட்டம்,பரிதவிப்பு என அப்படி ஒரு இயற்கையான நடிப்பு. தன் புதிய படத்தில் "ஷான் பென்" என்னும் பெரிய ஹீரோவை நடிக்க வைத்து ,படமும் முடிந்து ப்ரீவியூ காட்சி பிரமுகர்களுக்கு திரையிடப்படுகிறது,
முதல் கட்ட சோதனையாக படத்தின் ப்ரிவ்யூவால் வந்த தலைவலி:-

ந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் படம் ஒரே வன்முறை,"ஷான் பென்" செத்திருக்க கூடாது, எனவும், மீதி பேர் அந்த நாயை துடிக்க துடிக்க சுட்டு கொள்வது தப்பு, ரொம்ப கொடுமை என்கின்றனர். இதை தங்களுக்கு வழங்கப்பட்ட கருத்து அட்டையிலும் திட்டி எழுதி ,திரும்ப கொடுக்க. ஸ்டூடியோ ஹெட் "லு" என்னும் பெண் உயர் அதிகாரி . இவரையும் படத்தின் இயக்குனரையும் அழைத்து , மனுஷன் சாகலாம், ஆனால் "நாய் சாகக் கூடாது." இது தான் இன்றைய ஹாலிவுட்டின் லாஜிக்,டிரென்ட் எல்லாம் .அதனால் நாயை பிழைக்க வை என்கிறார்.

வரின் பிரிட்டிஷ் இயக்குனர் ஜெரிம்மி (மைக்கெல் வின்காட்) கதையை மாற்ற முடியாது என முரண்டு பிடிக்கிறார்,நான் சொன்னபடி படம் எடுத்தால் அமெர்ரோஸ் பெர்ரோஸ் மாதிரி புகழ்ப்படும் என உறுதியாய் இருக்கிறார்,வேறு வழி தெரியாத "லு" வேறு ஒரு இயக்குனரை வைத்து அந்த காட்சியை படம் எடுக்க வைப்பேன் என மிரட்டி , மேலும் வரும் வாரம் "கேன்ஸ்" நடக்க போகிறது . அதில் இப்படம் சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெறாது எனவும் மிரட்டுகிறார்.

யக்குனர் ஜெரிம்மி அழுகிறார், புரள்கிறார். பொருட்களை தட்டிவிடுகிறார். பெரும் ஆர்பாட்டத்திற்கு பின்னர் பென் சமாதானம் செய்ய பூனைபோல பணிகிறார். "ஷான் பென்"ஐ அழைக்காமலேயே அவர் சம்மந்தப்பட்ட அந்த காட்சியை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கொண்டு எடுத்து நாயை பிழைக்க வைக்கிறார். பென்னிற்க்கோ சந்தோஷம், இயக்குனரை அப்படியே கட்டிக் கொள்கிறார். கிளைமாக்ஸ் மாற்றத்தை ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு போட்டு காட்ட, அவர் ”திஸ் பீஸ் ஐ வாண்ட்” என்று துள்ளி "கேன்ஸிற்கு இப்படத்தை பரிந்துரைக்கிறார்.லூ மிகவும் பெருமிதத்துடன் திரிகிறார்.அங்க தானே நம்ம இயக்குனர் ஜெரிம்மி வச்சார் ஆப்பு.

இரண்டாம் கட்ட சோதனையாக ப்ரூஸ் வில்லீசால் வந்த தலைவலி:-

று மாதம் முன்பு தன் வேறு ஒரு புதிய படத்திற்கு ப்ரூஸ் வில்லீசிடம் அட்வான்சு கொடுக்கும் போதே கதைப்படி அவர் காரல் மார்க்ஸ் போல அடர்ந்த தாடி,மீசை வைக்க வேண்டும். என சொன்னதன் பேரில் அவரும் ஆறு மாதம் தாடி, மீசை வளர்த்து கால்ஷீட் கொடுத்த தேதியில் ஆஜர் ஆகிறார். ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு யாரோ ஒரு பிரமுகர் "இதுவரை ப்ரூஸ் வில்லீஸ் தாடி,மீசை வைத்து நடித்ததில்லை" அப்படி நடித்தாலும் படம் ஓடுமா?ஓடாது , அதனால் வழக்கம் போல வழு வழு முகத்துடனே அவர் நடிக்கட்டும், என ஐடியா கொடுக்க.லூ வழக்கம் போல இவரை மந்திரிக்கிறார்.

யக்குனரும் ஸ்க்ரிப்டில் எளிதாக தாடி,மீசையை எடுத்துவிட்டு காட்சியை மாற்றி வைக்க , ப்ரூஸ் வில்லீசிடம் போய் தாடியை எடுக்க சொல்ல பயந்து அவரின் அதீத வயிற்றுவலி கொண்ட உதவியாளர் டிக் பெல்லிடம் சொல்லி பேச சொல்ல ,ப்ரூஸ் வில்லீஸ் டிக் பெல்லை ஆத்திரத்தில் வேலையை விட்டு தூக்கிவிடுகிறார்.பின்னர் ஆரம்பிக்கிறது விபரீதம். ப்ரூஸ் வில்லீஸ்  ஏசுகிறாரே பார்க்கணும்.?நம்மூர் கமல் ஹாசன் எல்லாம் பிச்சை வாங்கும் அளவுக்கு ஏசுகிறார். கண்டதையும் போட்டு உடைத்து என் சம்பளத்தில் பிடிச்சுக்கோங்கடா கொன்னியா என்கிறார், ஐயோ.அருகில் சென்ற எல்லோரும் எல்லாம் சகட்டு மேனிக்கு வாங்கி கட்டி கொள்கின்றனர்.பென்னிற்கோ போதாத காலம் காதெல்லாம் ரத்தம்.

பெ
ன்னிற்கோ மத்தளம் போல இரண்டு பக்கமும் அடியும் வேறு. காலில் விழாத குறையாக கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் பிடி வாதம் எல்லை மீற . ஸ்டூடியோ ஹெட் "லு "கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறார், நாளை கடைசி நாள், ப்ரூஸ் விலீஸ் தாடியை எடுத்தால் படம், இல்லை என்றால் ட்ராப் - ஊத்தி மூடலாம் என்கிறார். மறுநாள் எவ்வளவு கெஞ்சியும் மசியாத ப்ரூஸ் வில்லீஸ் காரவானின் கதவை திறந்து வெளியே வர , எல்லா யூனிட் ஆட்களுக்கும் அதிர்ச்சி.

தாடியுடன் ப்ரூஸ் வில்லீஸ் , பென் அவரை திட்ட வாயெடுக்க, ப்ரூஸ் வில்லீஸ் அப்படியே திரும்பி இன்னொரு பக்க தாடையை காட்டுகிறார். பளபளவென்ற ஷேவ் செய்த கன்னம், மனிதர் சிரித்துக் கொண்டே "MOTHERFUCKERS"என் பிளட் ப்ரெஷரை ஏற்றி விட்டீர்கள் அல்லவா? உங்களுக்கு இப்போ திருப்தியா ?என்று சொல்லி இறுதியாக ஏச மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.
மூன்றாம் கட்ட சோதனையாக "கேன்ஸ்" திருவிழாவில் வந்த தலைவலி:-
ருவழியாக எல்லா சோதனையையும் கடந்து சிகப்பு கம்பள வரவேற்ப்பை பெற்று, படத்தை இரண்டாயிரம் திரை நட்சத்திர பார்வையாளர் முன் திரையிட. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெருங்குகிறது, "பென்" இயக்குனர் ஜெரிம்மியின் முகத்தை சமாதானத்துக்காக பரிவுடன் பார்க்க, அவர் விருட்டென கூலிங் கிளாசை மாட்டிக் கொள்கிறார்.         

  
திரையில் "ஷான் பென்" பெரிய மணல் திட்டின் மேல் நிற்க அவரை துரத்தி வந்த வில்லன்கள் கூட்டம் அவரை ஆறு ரவுண்டுகள் சுடுகின்றது. அவர் பிதாவே இந்த பாவிகளை மன்னிப்பீராக, என்று அப்படி உருண்டு விழுந்து இறக்கிறார்.(படு இயற்கையான உருளல்)என்ன ஒரு நடிப்பு?. அடுத்து அவரின் செல்ல நாய் குரைத்த படி ஓடி வந்து அவரை பரிவுடன் நக்க, வில்லன் கூட்டம் அந்த நாயையும் விட்டு வைக்காமல் நான்கு ரவுண்டு,தலை வயிறு என சுட, அரங்கே ஊ.ஆ ,அவுச் ,என்று உச்சு கொட்டி மவுனிக்க ,


யாரோ ஒரு புண்ணியவான் கை தட்டலை லேசாக ஆரம்பித்து வைக்க , அரங்கே மந்தை ஆடு போல அதை தொடர்ந்து ஆரவாரம் செய்து கைதட்டி அங்கீகரிக்கிறது. அனைவரும் பாராட்ட, இயக்குனர் ஜெரிம்மி பிடிவாதம் ஜெயிக்கிறது, படம் அமோக வரவேற்பை பெறுகிறது. ஸ்டூடியோ ஹெட் லூவிற்க்கு வந்த கோபத்தில், வேண்டுமென்றே பென்னை விட்டு விட்டு தன் தனி விமானத்தை எடுத்துக் கொண்டு,மற்ற குழுவினருடன் ஹாலிவுட்டிற்கு பறக்கிறார். 

பென் வேறு விமானம் பிடித்தவர் பழைய படி தன் வழக்கமான அன்றாட  வாழ்க்கைக்கு திரும்பியவர், அடுத்த வாரமே புகழ்பெற்ற சினிமா பத்திரிக்கை ஒன்று நடத்திய புகழ்பெற்ற 30 ஹாலிவுட் த்யாரிப்பாளர்கள் பங்கு பெறும் வானிட்டி ஃபேர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அங்கும் இவருக்கு கேன்ஸில் கிடைத்த எதிர்ப்பு அலையால் க்ரூப் போட்டொவில் இவரை இடது கோடிக்கு தள்ளி போட்டொ எடுக்கின்றனர். பின்னர் பென்னின் வாய்ஸ் ஓவரில் அவர் நடத்துங்கடா , இந்த அளவுக்கு என்னை ஹாலிவுட்டிலிருந்தே துரத்தாமல் ஓரத்திலாவது இடம் கொடுத்தீர்களே என்கிறார்.

ப்போது இவரின் இரண்டாம் மனைவி கெல்லியின் கள்ளக்காதலன் சாலமன் நடிகர் ப்ராட் பிட் திடீரென தன் இயக்கத்தில் நடிக்கவிருந்த படத்தை நிராகரித்துவிட  கவலையில் குடித்து அழிகிறார்.அவரை இப்போது இவரின் இரண்டாம் மனைவி கெல்லி துரத்திவிட, அவர் பென்னின் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். பென்னுக்கு அப்பாடா என்றிருக்கிறது .ப்ரூஸ் வில்லீசின் முன்னாள் உதவியாளர் பெல் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படுகிறார்.அவருக்கு டேட்டிங் செய்ய பெண்ணே கிடைத்த பாடில்லை.

ஸ்டுடியோ ஹெட் லூவிற்கு சிறந்த படத்தை திட்டமிட்டு தயாரித்து நிர்வகித்தமைக்கான பாராட்டும் விருதும் கிடைக்க , கூசாமல் அதை வாங்கிகொள்கிறார்.

யக்குனர் ஜெரிம்மி தன் படைப்பில் வெளியான ஃபியர்ச்லி என்னும் படம் அமோக வெற்றி பெற புகழின் போதையால் கோகெய்ன் போதைக்கும் அடிமையாகி தன் சூட்கேஸில் கோகெய்னை தைரியமாய் வைத்து விமானத்தை பிடிக்க, போலீஸாரால் கைது செய்யப்பட்டு போதை மறுவாழ்வு மையத்துக்கும் அனுப்பப்படுகிறார். பென்னுக்கு இது வருத்தமளித்தாலும் மீண்டும் திறமையுள்ள ஜெரிம்மியுடன் இணைந்து படம் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.அவர் வரும் வரை காத்திருக்க முடிவெடுக்கிறார்.

தை முடிகிறது. படம் முடிந்தவுடன் ஏற்படும் வியப்பு, எப்படி இந்த மனிதரால் தான் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறமுடிகிறது என்பது மட்டுமே.

ந்த கட்டுரையில் நான் சொன்னது சொற்பமே. படம் பார்த்தீர்களென்றால் உங்களுக்கு சிரித்து சிரித்து வயிற்று வலி வந்துவிடும். சும்மாவா சொன்னார்கள் ?ஒரு படத்தை ரிலீஸ் செய்வது தலைபிரசவம் போல என்று? நாமெல்லாம் எளிதாக சொல்லிவிடுகிறோம், பட்டால் தான் தெரியும் போலிருக்கு. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா?. இந்நேரத்துக்கு ஹிந்தியில் இதை படமெடுத்திருக்கணுமே? இல்லை ஷூட்டிங்கிற்காவது கிளம்பியிருக்கனுமே?யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

டத்தின் இசை மிகப்பாந்தம்:-மார்சிலோ சார்வோஸ்,ஒளிப்பதிவு அருமையும் அழகும் :-ஸ்டீபென் ஃபோண்டைன்.
வாராந்திர விடுமுறை நாட்களில் வயது வந்தோருடன் பார்த்து ரசிக்க ஏற்ற படம்.

படத்தின் முன்னோட்ட காணொளி:-

48 comments:

ஜோதிஜி சொன்னது…

தமிழிஷ் இணைக்கவில்லை போலிருக்கு. முந்திக் கொண்டு வந்து விட்டேன் போலிருக்கு. இதற்கு எப்படியும் நீங்கள் சொன்ன 8 மணி நேரம் ஆகியிருக்கும்?

என்னுடைய இடுகை உழைப்பைப் பற்றி பேசும் போதெல்லாம் பாலா உங்கள் உழைப்பு தான் வியக்க வைக்கின்றது. தொழில் நுட்பம் நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது. உருவாக்கி தந்த நாகா கூட ஓய்வெடுக்க ஒதுங்கி விட்டார். அவருக்கும் நீங்கள் பதில் கொடுத்த மாதிரி ஏதோ ஒன்று.

நான் சிறிது வெளியில் இருக்க வேண்டிய தொழில் சூழ்நிலை இறுக்கி பிடித்துக்கொண்டுருக்கிறது.

கவலைப்படாதீர்கள் கோடம்பாக்கத்தில் கொத்து புரோட்டாவுடன் சால்னா (?) தயாராக எவரோ ஒருவர் செய்து கொண்டுருப்பது என் காதில் விழுந்து கொண்டுருக்கிறது. உங்கள் காதில்?

சொல்ல முடியாது உங்கள் இடுகையைக் கூட நோகாமல் நோம்பி கொண்டாட பிரிண்ட்அவுட் எடுத்து படிக்த்துக் கொண்டுருக்கலாம்.

அறிவுத்தேடல் என்பதை விட விக்கிப்பீடியா தேடல் என்று அழைக்கலாம் போலிருக்கு. எவருக்கோ பயன்படும் பயன்படலாம்.
உங்கள் விடாத உழைப்புக்கு நல்வாழ்த்துகள்.
மறுபடியும் வந்து ஜனநாயக கடமையை செய்கின்றேன்.

ஜோதிஜி சொன்னது…

என்னுடைய தனிப்பட்ட கருத்து இது

எழுதவேண்டும் என்ற எண்ணிய பிறகு இந்த ஓட்டு விமர்சனம், அரசியல் இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் தேவையில்லாத மன உளைச்சல் தான் வரும். இது ஒரு விதமான வடிகால்.

என்னுடைய பல இக்கட்டான சூழ்நிலையை வென்று எடுக்க இந்த எழுத்து உதவியதைப் போல உலகம் முழுக்கவும் சென்று பலருக்கும் பல புரிதல்களை உருவாக்கியதில் எத்தனையோ சம்மந்தம் இல்லாதவர்கள் கொடுத்த தனிப்பட்ட மின் அஞ்சல்களே உதாரணம்.

திருப்தியைப் போல மீண்டு வந்த வாழ்க்கையும் பலருடைய ஆத்ம திருப்தியும் கலந்து இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

நீங்கள் போக வேண்டிய தூரம் அதிகம். இடையில் உள்ள இருட்டைக் கண்டு ஒதுங்கி விடாதீர்கள்.
நல்ல புரிதல்களை உருவாக்கும் எழுத்து என்பது வரம் தவம் அல்லது அதற்கும் மேலே.

உங்கள் பாலா எழுத்துக்கள் எந்த காலத்திலும் எவருக்கும் பயன்படும்.

வினோத்கெளதம் சொன்னது…

எந்தமொழி திரைப்படமானாலும் எடுத்து முடிக்கறதுக்குள்ள டாவு தீர்ந்துடும் போல..!

இராமசாமி கண்ணண் சொன்னது…

நல்ல விமர்சனம்.

கண்ணா.. சொன்னது…

//தாடியுடன் ப்ரூஸ் வில்லீஸ் , பென் அவரை திட்ட வாயெடுக்க, ப்ரூஸ் வில்லீஸ் அப்படியே திரும்பி இன்னொரு பக்க தாடையை காட்டுகிறார். பளபளவென்ற ஷேவ் செய்த கன்னம், மனிதர் சிரித்துக் கொண்டே "MOTHERFUCKERS"என் பிளட் ப்ரெஷரை ஏற்றி விட்டீர்கள் அல்லவா? உங்களுக்கு இப்போ திருப்தியா ?என்று சொல்லி இறுதியாக ஏச மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.//


தல ...வழக்கம்போல் கலக்கல்..


இது போன்ற தகவல்களை சேகரித்து விமர்சனத்தோடு தருவதில் நீங்கதான் பாஸு கிங்கு

:))

ஹாலிவுட் பாலா சொன்னது…

நீங்க திட்டுவதை ‘கமலோடு’ எப்பவும் கம்பேர் பண்ணுறீங்க (நேரில் பார்த்த அனுபவத்தால்).

ஆனா.. நம்ம Christian Bale, டெர்மினேட்டர் 4 படத்தில் நடிக்கும் போது, ஒரு காட்சியின் குறுக்கே கேமராமேன் நடந்து போனதால் வந்த கோபத்தில் பேசினதை கேட்டுருக்கீங்களா??

http://www.tmz.com/2009/02/02/bale-went-ballistic/

இந்த லிங்கில், Play Audio -ன்னு இருக்கும் அந்த பெரிய படத்தை க்ளிக் பண்ணி, கேட்டுப் பாருங்க. :) :) :)

Freak Out -க்கு Christian Bale ஒரு சிறந்த உதாரணம். :)

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

பாஸு . . . சரக்கு ஃபுல்லா போயிக்குனு இர்க்கு . .கரெக்டா அந்த நேரத்துல இத படிச்சி வெச்சிட்டேன் . . நானு நாளைக்கி இன்னொரு தடவ படிச்சிட்டு பின்னூட்டறேன். . ஆனா வோட்ட குத்திப்புட்டேன் . . :-) ஹிக் . . ஹிக் . .

King Viswa சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோபிநாத் சொன்னது…

அண்ணே கடமையை செய்துட்டேன் ;-)

கண்டிப்பாக இந்த படத்தை பத்தி படிக்கனும்....விரைவில்..

♠புதுவை சிவா♠ சொன்னது…

Nice preview

Thanks

ஹாலிவுட் பாலா சொன்னது…

வலைப்பதிவு நிர்வாகி நீக்கும் அளவுக்கு.. நம்ம விஸ்வா என்னதை சொல்லிட்டாருங்க??? :)

என்ன விஸ்வா சும்மா இருக்க மாட்டீங்களா?? :) :) :)

--

ஃபார்மாலிடி பண்ணியாச்சி! :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

King Viswa உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"வாட் ஜஸ்ட் ஹேப்பண்ட்?What Just Happened?மெய்யாக நட...":

//தமிழ் திரையுலகில் அருமையான நடிப்பிற்க்கு பெயர் போனவர்களின் பெயர்களை பட்டியலிட்டால் பத்து விரல்களே அதிகம்.ஹாலிவுட் திரைப்பட உலகின் அருமையான நடிகர்களை பட்டியலிட்டால் பத்து விரல்கள் போதாது//

இரண்டாவது கமென்ட் ஒக்கே. ஆனால் முதல் கமென்ட் தேவையற்றது.

சரி விவாதத்திற்கு வருவோம். எங்கே நீங்கள் ஒரு பத்து பேரை முடிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம். நானும் ராபர்ட் டி நீரோ விசிறிதான். ஆனால் அவர் நடித்த மொக்கை படங்களும் பல உள்ளன. சில படங்களில் அவர் சும்மா இருப்பார். ஆகையால் இந்த தமிழ் திரையுலகை தாழ்த்தி கூறுவதை தவிர்க்கலாமே?

முடிந்தால், ஜஸ்ட் முடிந்தால் ஒரு பத்து சிறந்த ஆங்கில நடிகர்களை (ஓரிரண்டு படங்களுடன்) கூறுங்கள் பார்க்கலாம்? என்னால் (தமிழ் படங்களை பார்ப்பது மிகவும் அபூர்வம்) இருவது பேரை கூற இயலும்.

Extremely sorry for my comment.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஜோதிஜி
அருமை ஜோதிஜி
மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@வினோத்
வா குரு ஆமாம்யா படம் எடுப்பது எவ்வளவு பெரிய வேல,நம்மால அது முடியலன்னு தானே விமர்சிக்கிறோம்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@இராமசாமி கண்ணன்
வாங்க தலைவரே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கண்ணா
இந்த வாரமாவது மீட் பண்ணனும்.கலைகிட்ட சொல்லுங்க
தொடர் ஊக்கத்துக்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலிவுட் பாலா
தல நானும் கமல் ரசிகன் தான்.நான் அவரின் திட்டுக்கும் ரசிகன் தான்.
தல நீங்க குடுத்த லின்கை கேட்டேன்.அவருக்கு ட்ரெய்னிங் பத்தாது.
ஒலக நாயகர் தான் இதுல எல்லாம் டாப்பு.
இருங்க கூகில்ல தேடி உங்களுக்கு நான் லின்க் தரேன்
ஹாஹாஹா
தல உடம்பு சரியாகிவிட்டதா?
ஸீ பிஸ்கட்
த இன்ஃபார்மர்ஸ் எல்லாம் நீங்க பார்க்கவே இல்லைங்கஜி.
அப்போதான எனக்கு எல்லாம் தன்னிறைவு

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ராஜேஷ்-கருந்தேள்
நண்பா அன்புக்கு மிக்க நன்றி
;))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கோபிநாத் ஷார்ஜா
தம்பி தங்கக்கம்பி
அன்பிற்கு நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@புதுவை சிவா
வாங்க பாஸ்
நலமா,உங்க போட்டொவை எல்லா இடத்திலும் பார்ப்பென்.
இப்போ தான் வர்ரீற்ங்களா,ரைட்டு.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@ஹாலிவுட் பாலா
தல நான் கோபக்காரன் தான் ஆனால் கிறுக்கன் இல்ல,
எனக்கே கமெண்ட் விழாதபோது,விவாதமே எழாதபோது
அப்படி நண்பர் விஸ்வா போட்ட கமெண்டை அழிப்பேனா?
அவர் ஒன்றும் தவறாகவே கேட்கவில்லை.
மாற்றுக்கருத்துக்களை மதிப்பவனே மனிதன்
:):)
அவர் போட்ட கமெண்டை மெயிலில் இருந்து காப்பி பண்ணி இங்க போட்டிருக்கென்,எப்போதும் அடுத்த நாள் பின்னூட்டத்துக்கு நன்றி சொல்பவன்
சாப்பிடாமல் 11-30 ஆகுது,ஆஃபிஸிலேயே இருக்கேன்,நன்றி சொல்றேன்
விஸ்வாவின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லவே எனக்கு அரை மணி நேரம் ஆனது:)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

நண்பர் கிங் விஸ்வா
வாங்க பாஸு,நானும் கமல் ரசிகந்தான்க,அவரின் திட்டுக்கும் ரசிகன் தான்க,
ஹாலிவுட்டின் அற்புதமான நடிகர்கள்னு நான் நினைக்கிறது இவங்களைத்தான்
நீங்கள் எங்கே வேண்டுமானாலும் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.
மேலே அந்த வரியை எழுதியவன் சும்மாவா குருட்டாம்போக்கிலா எழுதுவேன் பாஸ்.உயிரோட இருக்கறவங்களை மட்டும் சேர்க்கட்டா?இல்லை செத்தவங்களையும் சேர்க்கட்டா? கீழே உள்ளவை நான் பார்த்தபடங்களிலிருந்து மட்டும் அதுவும் நேராக நினைவிலிருந்து தட்டச்சுகிறேன்.இதில் நிஜத்துக்கும் நிறைய பேர் விட்டிருக்கலாம். முடிந்தால் யாராவது சொல்லவும்.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

1.அந்தோனி ஹாப்கின்ஸ்-சைலன்ஸ் ஆஃப் த லாம்ப்ஸ்,எலிபேண்ட் மேன்,த எட்ஜ்,ரெட் ட்ராகன்,
ஃப்ராக்சர்,பாபி,ஹானிபல்
2.க்ளிண்ட் ஈஸ்ட்வுட்-ப்ரிட்ஜஸ் ஆஃப் மேடிஸன் கண்ட்ரி,அப்சல்யூட் பவர்,
3.பால் ந்யூமேன் - கூல் ஹாண்ட் லூக்
4.எம்.எம்மெட் வால்ஷ்-மேன் இன் த சேர்.
5.டாம் ஹான்க்ஸ்-ஃபாரஸ்ட் கம்ப்,காஸ்ட் அவே,த க்ரீன் மைல்,பிக்,
6.லியம் நீசன்-ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்,கேங்ஸ் ஆஃப் ந்யூயார்க்,த மிஷன்,
7.ரால்ப் பியன்ஸ்-த ரீடர்,ரெட் ட்ராகன்,இங்லிஷ் பேஷண்ட்.
8.ப்ரூஸ் வில்லீஸ்-அல்பா டாக்
9.மேட் டெமான் -பார்ன் சீரீஸ்,ஸ்டக் ஆன் யூ,குட்வில் ஹண்டிங்,டாக்மா
10.ஜான் ட்ரவால்டா-ஸ்வார்ட் ஃபிஷ்,பல்ப் ஃபிக்‌ஷன்
11.ஷான் பென் - மில்க்,21 க்ராம்ஸ்,ஐ ஆம் சாம்.டெட் மேன் வாக்கிங்
12.வுட்டி ஹாரல்சன்-செவன் பவுண்ட்ஸ்,நாசுரல் பார்ன் கில்லர்ஸ்
13.வில்ஸ்மித்-செவன் பவுண்ட்ஸ்,அலி,பெர்சூட் ஆஃப் ஹாப்பினெஸ்.
14.பில்லி பாப் தார்ண்டன்-ஸ்லிங் ப்ளேட், த மேன் ஹூ வாஸ் நாட் தேர்.
15.மிக்கி ரூர்க்கி-ரெஸ்லர்,டோமினோ
16.டிம் ராப்பின்ஸ்-ஹட்ஸ்க்கர் ப்ராக்ஸி,மிஸ்டிக் ரிவர்.
17.எட்வர்ட் நார்ட்டன்-இல்லுஷனிஸ்ட்.ஃபைட் க்ளப்
18.ஜோ பெஸ்ஸி-குட் ஃபெல்லாஸ்,
19.ஸ்டீவ் மார்ட்டின் - ஷாப் கேர்ள், ட்ரெய்ன் ப்ளேன் அண்ட் ஆட்டோமொபைல்ஸ்
20.ஸில்வஸ்டர் ஸ்டால்லோன்-ராக்கி,ராம்போ,
21.கெவின் காஸ்ட்னர்-
22.கெவின் ஸ்பேஸி-அமெரிக்கன் ப்யூட்டி,21,லைஃப் ஆஃப் டேவிட் கேல்
23.லியார்னடோ டைகார்பியோ-ப்ளட் டயமண்ட்,பாஸ்கட் பால் டயரீஸ்
24.கார்ல் வெதர்ஸ்-ராக்கி
25.கெவின் பெக்கான் - மிஸ்டிக் ரிவர், ஃப்ராஸ்ட் நிக்ஸன்.ஜேஎஃப்கே
26.டென்ஸல் வாஷிங்டன்-மால்கம் எக்ஸ்,த க்ரேட் டிபேட்டர்ஸ்,டேஜாவூ,
27.மெல் கிப்ஸன் - வீ வேர் சோல்ஜர்ஸ்,
28.ரஸ்ஸல் க்ரோவ்-ப்யூட்டிஃபுல் மைண்ட்,பாடி ஆஃப் லைஸ்,அமெரிக்கன் காங்ஸ்டர்
29.விக்கோ மார்டின்சன்-ஹிஸ்டரி ஆஃப் வயோலென்ஸ்,த ரோட்,அப்பலூசா,ஹிடால்கோ
30.அல் பேஸினோ-டூ ஃபார் த மனி,ஸ்கார் ஃபேஸ்,
31.மார்கன் ஃப்ரீமேன்-த ஷஷான்க் ரிடெம்ப்ஷன்,பக்கெட் லிஸ்ட்,செவன்,இன்விக்டஸ்
32.ராபர்ட் டிநீரோ-ரேஜிங் புல்,கேஸினோ,குட் ஃபெல்லாஸ்,த மிஷன்.
33.ஜிம்மி ஃபாக்ஸ்-ரே
34.ஜேசன் ஸ்டாத்தம்-த பேங்க் ஜாப்,ஸ்மோக்கிங் பேர்ரல்ஸ்.
35.ஸ்டீஃபன் டோர்ஃப்-ஃபெல்லான்
36.வால் கில்மர்-த சால்ட்டன் ஸீ, ஹீட்,ஃபெல்லான்,கிஸ் கிஸ் பாங் பாங்,டோம்ப்ஸ்டோன்.
37.ஜெஃப்ரி ரஷ்-க்வில்ஸ்
38.ஜானி டெப்-ப்லோ,ஸ்வீனி டாட் த டெமான் பார்பர் ஆஃப் த ஃப்லீட் ஸ்ட்ரீட்
39.ஜாக் நிக்கல்சன்-ஆஸ் குட் ஆஸ் இட் கெட்ஸ்,ஷைனிங்,குக்கூஸ் நெஸ்ட்,பக்கெட் லிஸ்ட்
40.ஜார்ஜ் க்ளூனி-மைக்கேல் க்ளேட்டன்,ஓ ப்ரதர் வேர் ஆர்ட் தோ?
41.ப்ராட் பிட்-பாபெல்,பெஞ்சமின் பட்டன்,செவன்,
42.ரயான் பிலிப்-க்ரூயல் இண்டென்ஷன்ஸ்
43.ஃபாரஸ்ட் விடேக்கர்-லாஸ்ட்கிங் ஆஃப் ஸ்காட்லாண்ட்.
44.எரிக் பனா- முனிக்
45.ரயான் ஹாஸ்லிங்-ஃப்ராக்சர்,ஸ்டே,லார்ஸ் அண்ட் த ரியல் கேர்ள்
46.ஜே ஹெர்னாண்டெஸ்.-ஹாஸ்டல்,
47.ஜேம்ஸ் மெக் எவாய்-அட்டொன்மெண்ட்,லாஸ்ட்கிங் ஆஃப் ஸ்காட்லாண்ட்.
48.க்ரிஸ்டியன் பேல்-அமெரிக்கன் சைக்கொ
49.ஜேவியர் பர்டெம்-நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்.விக்கி க்ரிஸ்டினா பார்சிலோனா
50.டாமி லீ ஜோன்ஸ்-
51.ஜோஷ் ப்ரோலின் - மில்க்,நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென்,அமெரிக்கன் காங்ஸ்டர்

இன்னும் தொடருமே தவிர குறையாதுங்க.நம்பர் போட்டது கணக்குக்காகத்தானே தவிர தரத்திற்காக அல்ல,இவங்க நீங்க மொக்கைன்னு சொல்லவே முடியாது.தமிழில் நான் உயிரோடு இருப்பவர்களை இப்படி பட்டியலிடுவேன்

1.கமல் ஹாசன்
2.விக்ரம்
3.ப்ரகாஷ் ராஜ்
4.நாசர்.
5.சிவகுமார்
6.சூர்யா
7.ஆர்யா
8.ப்ளீஸ் சொல்லுங்க
9.ப்ளீஸ் சொல்லுங்க
10.ப்ளீஸ் சொல்லிடுங்க நான் கேட்டுக்கறேன்
:):):) ஸ்மைலி போட்டுட்டேன்,சீரியஸே இல்லை.சரியா.அப்புறம் ரொம்ப நன்றிங்க
இவ்வளவு பேரை நினைக்க வச்சதுக்கு.அடிக்கடி வரனும் சொல்லிட்டேன்.

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஹோ அதுதான் மேட்டரா.....?? :)

==

தமிழில்... நம்மால் அதிகமா லிஸ்ட் போட முடியாததுக்குக் காரணம், நமக்கு அத்தனை நடிகர்கள் கிடையாதுங்க, கார்த்திக்கேயன்.

உங்க பட்டியலில் சில ப்ரிட்டிஷ் நடிகர்கள் கூட இருக்காங்க. அப்புறம்... அமெரிக்கா முழுக்க ஒரே படம் வெளியாவது மாதிரி, இந்தியா முழுக்க ஒரே படம் வெளியாவதில்லை.

இந்த கம்பேரிஷன்... ஃப்ளோரிடாவில் இருந்து 10 சிறந்த நடிகர்களை தேர்ந்தெடு-ன்னு சொல்லுவது மாதிரி இருக்கே.

விஜய் கூட நல்ல நடிகரா இருந்திருக்கலாம் (துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கொஞ்சம் முயற்சி பண்ணியிருப்பார்).

ஆனா ஹீரோ செண்ட்ரிக் தமிழ் சினிமா உலகத்தில்... இத்தனை நல்ல நடிகர்களை லிஸ்டில் கிடைத்ததே சாதனையில்லையா?? :)

உங்க கமெண்டுக்கு எந்த எதிர்ப்பு இல்லைன்னாலும், இந்திய அளவில் நல்ல நடிகர்களை பட்டியல் போட்டா.. ஹாலிவுட் நடிகர்கள் அளவுக்கு நமக்கும் நல்ல நடிகர்கள் இல்லாமலா போய்டுவாங்க??

==

(மத்த ரெண்டு பதிவையும், படிச்சிட்டேங்க தல. இன்னும் முழுசா குணமாகலை. அதான்.. ஸ்லோவா பிக்கப் பண்ணிகிட்டு இருக்கேன். இருமி இருமி.. இப்ப பேசவே முடியலை)

ஹாலிவுட் பாலா சொன்னது…

///King Viswa சொன்னது…
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார். /////

இப்படித்தான் சொல்லுது. நீங்க அழிக்கலைன்னு சொல்லுறீங்க? ஒரே குழப்பமா இருக்கே. ஒருவேளை எனக்குத்தான்.. மருந்து எஃபெக்ட்டில் எக்ஸ்ட்ரா இன்ஃபோ எல்லாம் தெரியுதா?

கோபிநாத் சொன்னது…

அண்ணே வழக்கம் போல கலக்கல்...விரைவில் வந்து எடுத்துக்கிறேன்...

\\8.ப்ளீஸ் சொல்லுங்க
9.ப்ளீஸ் சொல்லுங்க
10.ப்ளீஸ் சொல்லிடுங்க நான் கேட்டுக்கறேன்\\

;-)))))))

மயில்ராவணன் சொன்னது…

அன்பின் கார்த்தி,
நல்ல பதிவு,பின்னூட்ட பதில்களும் நன்று.

@ கிங்க் விஸ்வா
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல இப்போ நேரா அங்க உங்க சைட் வரேன்
நானே ஒரு கமெண்ட் போடுறேன்.
நானே டெலீட் பண்ண போறேன்
எப்புடி காட்டுதுண்ணு பார்ப்போம் வாங்க.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல நான் ஹாலிவுட் சினிமாக்கும் தமிழ் சினிமாக்கும் தான் கம்பேர் பண்ணேன்,ஏன்?
ஏன்னா எனக்கு தெரிஞ்சது இரண்டே மொழி.
-----------
ஹாலிவுட்ல வேற மொழில படம் எடுக்குறாங்களா? என்ன?
அது தான் ஆஸ்திரேலிய,ப்ரிடிஷ் நடிகரை இனம் பிரிக்கலை,தமிழ் சினிமா அதிகம் பார்ப்பவன்,இப்போ மிகவும் தேர்ந்தெடுத்து பார்க்கிறேன்.பல சமயம் ஏமாற்றமாயுள்ளது.நான் பிரம்மாண்டத்தை விரும்புபவன் அல்ல,நான் பார்த்து அறிமுகம் செய்யும் படத்தை பார்த்தாலே புரியும்.அழகான திரைக்கதை,நல்ல இசை,இயல்பான் நடிப்பு மட்டுமே எதிர்பார்க்கிறேன்.
அது வெறும் 30லட்சம் ரூபாயில் எடுக்கக்ப்பட்டாலும் சரியே,தல உடம்பை நல்லா கவனிச்சுக்குங்க

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@மயில் ராவணன்
அன்பு அண்ணே,:)
நலமா?அந்த விளம்பர போர்டு.ப்ளீஸ்.

தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி நண்பா

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@கோபிநாத் ஷார்ஜா
அன்புதம்பி
மறு விஸிட் வேறயா?
அடடா?கண்டிப்பா வாங்கிக்கோ

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

அடப்பாவிகளா . .இன்னிக்கி மப்பு தெளிஞ்சி வந்து பின்னூட்டம் போடலாம்னு பார்த்தா, இங்க ஒரு பெரிய கும்மாங்குத்தே ஓடிக்கினு இருக்கே . . அப்ப நானும் அதுல குடிச்சிர - அடச்சீ - குதிச்சிர வேண்டியது தான் . .

கார்த்திகேயன் - இம்மாம் பெர்ர்ர்ர்ரிய லிஸ்டு போட்டுருக்கீங்க . . பிரமாதம் . .எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் இப்புடி ஒரு லிஸ்டு போட வராது . . அட்டகாசம் !! அமர்க்களம் !!

பாலா சொன்னமேரி, இந்திய அளவுல ஒரே மொழிப்படம் வந்தா, ஒருவேளை அதுல நல்ல நடிகர்கள் தேறலாம்.. இருந்தாலும், இதோ ஹிந்தியின் நல்ல நடிகர்கள் லிஸ்ட்.. எனக்கு மனம் போனமாதிரி பேர்கள குடுத்துருக்கேன் . . வரிசைப்படுத்தல. .

1. பரேஷ் ராவல் - வோ சோக்ரி & சார் மற்றும் பல மேடை நாடகங்கள்
2. நானா படேகர் - சலாம் பாம்பே, ஹாமோஷி
3. அமிதாப் பச்சன் - பா, சுப்கே சுப்கே (காமெடி ரோலில் அசத்தியிருப்பார்), அக்ஸ், ப்ளாக்
4. நஸ்ருதீன் ஷா - எ வெட்னஸ்டே, மாஸூம்
5. கே கே மேனன் - ஹஸாரோ(ன்) க்வாயிஷே(ன்) எய்ஸி, குலால்
6. அபய் தியோல் - தேவ் டி
7. போம்மன் இரானி - பீயிங் சைரஸ், 3 இடியட்ஸ், முன்னாபாய் படங்கள் மற்றும் பல மேடை நாடகங்கள்
8. பங்கஜ் கபூர் - ரோஜா, மக்பூல், எக் டாக்டர் கி மோத் மற்றும் பல மேடை நாடகங்கள்
9. அனுபம் கெர் - மைனே காந்தி கோ நஹி(ன்) மாரா, எ வெட்னஸ்டே, சாரான்ஷ்
10. அதுல் குல்கர்னி - ஹே ராம், ரங் தே பஸந்தி, சாந்த்னி பார் மற்றும் பல மேடை நாடகங்கள்
11. மனோஜ் பாஜ்பாய் - அக்ஸ், ஷூல், ஸுபெய்தா
12. அஜய் தேவ்கன் - ஓம்காரா, ஹல்லாபோல், ரெய்ன்கோட்
13. ராஹுல் போஸ் - ஜங்கார் பீட்ஸ், ஷௌரியா
14. அர்ஷத் வார்ஸி (யெஸ்) - செஹர்

இந்தப் பேர்கள் உடனடியாக மனதுக்குத் தோன்றியவை. இன்னும் பல பேர் இருக்கிறார்கள். . உக்காந்து யோசிச்சா நிறைய போடலாம் . .

இதுல குறிப்பா பங்கஜ் கபூரும் கே கே மேனனும் எந்த ரோல் குடுத்தாலும் பிச்சி உதறிடுவாங்க. . ஃபண்டாஸ்டிக் ஆக்டர்ஸ் . .

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

//விஜய் கூட நல்ல நடிகரா இருந்திருக்கலாம் (துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் கொஞ்சம் முயற்சி பண்ணியிருப்பார்). //

பாலா - என்ன கொடும இது . . விஜய்யா . . அதுவும் துள்ளாத மனமும் துள்ளும்? காலேஜ் கேங்கா போயி, காறித்துப்பிட்டு வந்த படம் அது . . இப்புடிச் சொல்லிடீங்களே . . . . . . :-( :-(

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

நண்பா ராஜேஷ்
அமீர்கான்,அனில் கபூர்,எனக்கு மிகவும் பிடிக்கும்.அனில் கபூர் தயக்கமின்றி எந்த ரோலையும் செய்வார்.(இமேஜ் பார்க்க மாட்டார்)
-------
அற்புதம்,செம ஆக்டர்ஸ் பேர் குடுத்தீங்க.மிக்க நன்றி படங்களும் கொடுத்தற்கு,பல படங்கள் நான் இன்னும் பார்க்காதவை.இன்னும் எனக்கு ஹிந்தி படம் பார்க்க சப் டைட்டில் தேவைப்படுவதால் அதில் அதிகம் கவனம் செலுத்தாமலே இருந்து வந்தேன்,சரி பண்ணிடுவோம்.
இர்ஃபான் கான் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஷைனியும் நல்ல நடிகர் தான் ஆனால் வேலைக்காரி மேட்டரில் சிக்கி..
அப்புறம் அந்த பவன் மல்ஹோத்ரா,சித்தார்த் கூட அங்கே போய் கலக்குகிறார்.சே..ரொம்ப பொறாமையா இருக்கு,எப்படி ஈகோ இல்லாமல் வேலைபாக்குறாங்க,தமிழில் 4 பெரிய ஹீரோ ஈகோ இல்லாமல் ஒரே படத்தில் வேலைபார்க்கமுடியுமா?
எப்போ வரும் அந்தக்காலம்?

கருந்தேள் கண்ணாயிரம் சொன்னது…

நண்பா . .பார்த்தீங்களா . . எனக்கு இந்த மாதிரி நிறைய பேர எல்லாம் சொல்லத் தெரியாது.. இர்ஃபான் கான், ஷைனி அஹூஜா, அமீரு, அனிலு, பவனு, சித்தார்த்து இவங்களையெல்லாம் மறந்துட்டேன் . . (இதுல மேட்டர் என்னன்னா, இண்ணிக்கும் செம தண்ணி . .தண்ணி மேல தான் இந்தப் பின்னூட்டம் . . எதையாவது மப்புல எழுத முயற்சி பண்ணறேன் . .ஹீ ஹீ ) . .

ஹாலிவுட் பாலா சொன்னது…

ஏங்க.. அதுலயாவது நடிக்க முயற்சி பண்ணியிருப்பாருன்னுதானே சொன்னேன். அதுக்கும் ஒத்துக்க மாட்டேன்னு சொன்னா.. பாவங்க விஜய். நாக்கை பிடிங்கிட்டு சாகப் போறாரு. அதுக்கு கருந்தேள்தான் பொறுப்பு. :) :)

கார்த்திக்கேயன்.. அமெரிக்கா முழுக்க வருடத்துக்கு ஒரே மொழியில் 600 படங்கள் வரும்போது, அதில் நிறைய நல்ல நடிகர்களை பார்க்க முடியுது.

அதே மாதிரி இந்தியாவில் ஒரே மொழியில்... நம் படங்க அத்தனையும் வந்தால்.. ஹாலிவுட்டை விட அதிகமான நல்ல நடிகர்கள் கிடைப்பாங்கங்கறதுதான் என் கருத்து.

நடிகைகள்????????????????????????

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தல தப்பே இல்லை தல,
இப்போ தான் சிங்கத்தோட “எவ்ரிபடி இஸ் ஃபைன்”
பார்த்தேன்.மனதை நகர்த்திய படம்.தவமாய் தவமிருந்துவின் அமெரிக்க வெர்ஷன் தல.சொல்ல என்னிடம் வார்த்தையே இல்லை.இன்னிக்கு பூரா வியந்து கொண்டே இருப்பேன். தல நம்ம தமிழ்ல எப்போ ஹீரோக்கு கதை பண்ணுவதை நிறுத்துறோமோ அப்போதான் ஃபீல்டு உருப்படும்.

ஆர்கிடெக்சரில் ஃபார்ம் ஃபால்லோஸ் ஃபன்க்‌ஷன் என்று உண்டு:-
அதாவது தேவையை,ஃபன்க்‌ஷனை வைத்து அதற்கு புற வடிவம் கொடுப்பது.(கதைக்கு ஏற்ப கதாபாத்திரத்தை உருவாக்குவது) இது தான் முறை,இப்படிதான் செய்யனும்.

ஆனால் நிறைய இடங்களில் ஃபன்க்‌ஷன் ஃபால்லோஸ் ஃபார்ம் தான்.புற வடிவத்தை வடிவமைத்துவிட்டு அதற்குள் தேவையை ஃபன்க்‌ஷனை திணிப்பது. அதான் தல ஹீரோவுக்காக கதை செய்வது.கருமம்.கருமம்.

ஒன்னும் சொல்லுவதற்கில்லை தல.
முடிந்தால் இந்த படத்தை ஃபீல் செய்யவும்.அழுதாலும் அழுவீங்க.

மீனாட்சி சுந்தரம் சொன்னது…

நல்ல ரசிச்சு (சிரிச்சு) படம் பாத்து எழுதிருக்கிங்க, ராபர்ட் டி நீரோவையும், அல் பசிநோவையும் பார்த்தால் எனக்கு இரண்டு கமலஹாசன்கள் ஹாலிவுட்டில் வலம் வருவது போல் இருக்கும். என்னைப் பொறுத்தவரையும் டி நீரோ பத்தில் ஒன்றாக வர தகுதி உள்ளவர் தான். நீங்கள் "டாக்ஸி டிரைவர்" பார்த்திருக்கிறிர்களா? என்ன அமர்களமான நடிப்பு? அவர் பேசும் You talkin'to me? வசனம் அமெரிக்காவில் நம்ம ஊர் "வந்துடாங்கயா வந்துட்டாங்க" அளவுக்கு பிரபலம்.

அன்புடன்,
மீனாட்சிசுந்தரம்

பிரசன்னா இராசன் சொன்னது…

ஆக மொத்தம் படத்தைப் பத்தி பேசுறத விட்டுட்டு ஆள் ஆளுக்கு அநியாயத்துக்கு கும்மாங்குத்து போட்டு இருக்கீங்களே. இது உண்மையிலேயே செம கலாய் படம். திரைக்கதை அங்க அங்க கோட் அடிச்சாலும் டி நீரோ பேந்த பேந்த விழிக்கும் போது ஒரே சிர்ப்பு தான். முக்கியமாக ப்ரூஸ் வில்லிஸ் மொட்டை போட்டு வந்து நிக்கும் போது நம் ஆள் காண்டாவது உச்ச கட்டம். நல்ல பதிவு கார்த்திகேயன். சரி "தி இன்பார்மேர்ஸ்" படத்துக்கு நான் போட்ட எதிர்வினையை நீங்க ஏன் பப்ளிஷ் பண்ணலை?

பிரசன்னா இராசன் சொன்னது…

சாரி நான் சொல்ல வந்தது மிஸ் ஆகி விட்டது, அதாவது வில்லிஸ் தாடியுடன் வந்து நிற்கும் போது டி நீரோ கடுப்பவதைப் பற்றி சொல்ல வந்தேன்...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க நண்பர் மீனாட்சி சுந்தரம்
ஆமாம்ங்க,டாக்ஸி டரைவர் ஒரு கலக்கல் படம்.
யூ டாக்கின் டு மீ ஐ மிகவும் ஸ்டையாக உச்சரிக்க ஆரம்பித்துவிட்டனர்.செம டைலாக் அது,மீண்டும் அதை பார்த்தேன்.
இதே வசனத்தை கால் செண்டர் வகுப்புகளிலும் அமெரிக்க ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க உபயோக்கிறார்களாம்.:)
அல் பாஸினோ செம ஆளுங்க,அவர் நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருக்கும் படம் டூ ஃபார் த மனி.
என்ன படம் போரே அடிக்காது.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

http://www.youtube.com/watch?v=4e9CkhBb18E
Taxi Driver - You Talkin' me? லின்க்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க நண்பர் பிரசன்னா,
ஆமாம் செம காமெடிங்க,இந்த படத்தில் சிரிப்புக்கு காரணமே,ராபர்ட் நீங்கலாக எல்லோரும் அவங்க ஒரிஜினல் பேர்ல வந்தது தான்.
உங்க கமெண்ட் தான் போட்டு அதுக்கு பதிலும் சொன்னேனே?இன்னொரு கமெண்டா?ப்ரூஸ் வில்லீஸ் மதம் கொண்ட யானை போல அலைவார் இதில்,அவ்வளவு ஆத்திரம் இருக்கும் தயாரிப்பாளர் மேல்.

கோபிநாத் சொன்னது…

தல.. நீங்க பதிவு போட்ட அன்றே படிச்சுட்டேன். பின்னூட்டம் போடதான் லேட் ஆயிடுச்சு. விமர்சனம் சூப்பர். அதை விட பின்னூட்டங்களில் நடந்த விவாதங்கள், விளக்கங்கள் தான் அருமையோ அருமை.

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

வாங்க நண்பர் கோபிநாத்-அட்லாண்டா, படம் அவசியம் பாருங்கள்

Nundhaa சொன்னது…

இந்தப் படத்தைப் பார்க்கத் துவங்குமுன் ... படம் ஆரம்பித்து முதல் 20 நிமிடங்களில் சிரிப்பு வரவில்லையெனில் வேறு படத்திற்குத் தாவி விடலாம் என நினத்தேன் ... 30 நிமிடங்களுக்கு மேலாகியும் நான் சிரிக்கவில்லை ஆனால் படத்தை தொடர்ந்து பார்த்தேன் முழுவதுமாக ... காரணம் இது அப்படிப்பட்ட படம் + Robert De Niro ... படத்தின் humour subtleஆனது - it is a satirical comedy-drama - நல்ல படம் - வயிறு குலுங்கிச் சிரிக்கவில்லை ஆனால் மனதிற்குள் பல சமயங்களில் சிரித்தேன்

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

@நந்தா,
வருகைக்கு நன்றி,
ராபர்ட் நடிப்பை சொல்லவும் வேண்டுமா?
ஹ்யூமர் என்றாலும் சீரியஸ் என்றாலும் வெளுத்து வாங்குகிறார்.நான் தனியாக பார்த்ததாலோ என்னவோ மனம் விட்டு சிரிக்க முடிந்தது,இன்னொன்று பிடித்தவர் எது செய்தாலும் அழகே,வடிவேலுவை திரையில் பார்த்தாலே ஒரு காலத்தில் எனக்கு சிரிப்பு வந்தது.
குறிப்பாக இதில் அந்த சாக்ஸை வைத்து துப்பறியும் இடங்களிலும்,ப்ரூஸ் வில்லீசிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் இடங்களைலும் டாப் பெர்ஃபார்மென்ஸ்.

Jayachandran சொன்னது…

@ All
this may be Irrelevant. but you can add hollywood actor joe pesci (Good fellas/My Cousin Vinny ) in to the list . he is my fav. :)

Related Posts Plugin for WordPress, Blogger...

குறிச்சொற்கள் வைத்து தேடிப்படிக்க

உலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி? (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் ? (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)